Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ்ப்பாணத்திற்கான ஆறு -

Featured Replies



இலங்கை எந்திரிமார் சங்கத்தின் ஞாபகார்த்த வெளியீட்டில் கௌரவிக்கப்பட்ட மிகச் சிலரில் ஒருவரானவரும் முன்னாள் பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளராக கடமையாற்றிய எந்திரி.எஸ் ஆறுமுகத்தின் தூரநோக்கை விளங்குவதற்கு அடிப்படையாக 1954 இல் முதன் முறையாக வெளியிடப்பட்ட இக் கட்டுரை மீள்பிரசுரம் செய்யப்படுகின்றது.


தமிழாக்கம்
ஏந்திரி.ஏ.ரகுநாதன், இளைப்பாறிய நீர்ப்பாசனப் பணிப்பாளர்,
ஏற்பாட்டுக்குழு
எந்திரி.எஸ்.ஆறுமுகம் நினைவுப் பேருரை
யாழ்ப்பாணம் 11.01.2012


யாழ்ப்பாணத்திற்கான ஆறு


யாழ் குடாநாடானது மிகவும் குறைந்தளவான 30' மழைவீழ்ச்சியினை பெறுகின்ற அதே வேளை வட மாகாணத்தின் ஏனைய பிரதேசங்களில் 60' இற்கு மேற்பட்ட மழைவீழ்ச்சியைப் பெறுகின்றது.


குடாநாட்டின் வேளாண்மையை அபிவிருத்தி செய்வதற்கு ஏனைய பகுதிகளில் பெறப்படும் செல்வமாகிய மேலதிக மழை நீரை இப்பகுதிக்கு பயன்படுத்த வேண்டும் என்பது ஒரு நியாய éர்வமான விருப்பமாகும்.


1930ம்; தசாப்த ஆரம்பத்தில் குடாநாட்டில் பரந்திருந்த உவர் நீர் ஏரிகளை பயன்படுத்துமுகமாக அவற்றை நன்னீராக்க வேண்டும் என்ற கருத்தை காலஞ் சென்ற சட்டவாக்க சபை உறுப்பினரான மு.பாலசிங்கம் அவர்கள் தனது மனதில் உருவாக்கினார். மாமன்னர் பராக்கிரமபாகுவின் சிந்தனையின் ரூபமான மிகவும் பரவலாக பேசப்பட்ட கருத்தானது 'வானத்திலிருந்து விழும் ஒரு மழைத்துளியும் மண்ணுக்கு பயன்படாமல் கடலை சென்றடைய விடக்கூடாது' என்ற சித்தாந்தமே மதிப்புக்குரிய மு.பாலசிங்கம் அவர்களது கருத்தாகும்.


இந்தச் சிந்தனையே வட மாகாணத்தின் முக்கிய ஆதாரமான கனகராயன் ஆற்றின் வெள்ள நீரை முற்று முழுதாக பயன்படுத்துவது என்ற எண்ணக்கரு உருவாக வழி கோலியது. இந்த ஆறு வவுனியாவில் உருவாகி புளியங்குளம் மாங்குளம் ஊடாக இரணைமடுக் குளத்தை நிரப்புகின்றது.


இதன் மேலதிக நீர் ஆனையிறவு ஏரியை அடைகின்றது. இது ஆனையிறவு பாலத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள கடலுடன் இம் மேலதிக நீரானது வீணாக இப் பாலத்தினுடாக பெருங்கடலை சென்றடைகிறது.


1949 மாசியில் ஓர் நாளில் இத் தெரு ஊடாக சுற்றுலாவிற்கு சென்ற குடும்பத்தினர் ஆனையிறவு பாலத்தின் அண்மையில் நண்பகல் உணவிற்காக இளைப்பாறினர். அவரின் சிறிய மகன் இவ் ஏரியில் கை கழுவும் பொழுது ஏரியின் மேற்குப்பகுதி கடலுடன் தெடர்புடையதாக இருந்தாலும் கிழக்குப் பகுதியில் நன்னீர் இருப்பது எவ்வாறு? என்று கேட்ட வினாவிற்கு அன்பான தந்தை அதன் காரணத்தை விளக்கினார்.


அந்தச் சிறுவன் உடனடியாக 'நாங்கள் கொஞ்ச மண்ணை காரில் கொண்டுவந்து இந்தப் பாலத்தை நிரப்புவோம், இதனால் நன்னீர் ஏரி உருவாகும் என்று பதிலளித்தான்.


அந்த வருடம் கனகராயன் ஆற்றில் வெள்ளம் பாய்ந்தது. இரணைமடுக் குளம் நிரம்பி வான் பாய்ந்தது. மேலதிக நீர் தெருவின் கிழக்கில் உள்ள ஆனையிறவு ஏரியை நிரப்பியது. இரணைமடுக் குளம் தை மாதத்தில் வான் பாயவிடப்பட்டாலும் மாசி மாதத்தில் கூட கிழக்கு ஏரி நன்னீராகவே காணப்பட்டது. எனினும் இப்பாலத்தினை மண் கொண்டுவந்து நிரப்பினாலொழிய இந்நீர் பாலத்தினூடாக கலக்கும் கடல்நீரால் விரைவாக உவர்நீராக மாறிவிடும்.


தற்போது நடைமுறைப்படுத்தும் ஆனையிறவு ஏரியை நன்னீராக்கும் திட்டத்தின் அடிப்படையானது கிழக்கு ஏரி வருடம் முழுவதும் நன்னீராகவே இருக்க வேண்டும்.


ஆனையிறவு ஏரி ஆனையிறவு தொடக்கம் சுண்டிக்குளம் வரையுள்ள சுமார் 11,400 ஏக்கர் பரப்பை கொண்டது. இவ் ஏரி கனகராயன் ஆறு, நெத்தலி ஆறு, பிரமந்தலாறு, தேராவில் ஆறு மற்றும் சிற்றாறுகளிலிருந்து வரும் நீரை பெறுகின்றது.
இதன் வடக்கே வானைக் குளமும் தெற்கே கரைச்சி காணிகளையும் கொண்டுள்ளது. பாலத்திற்கு அருகில் ஓர் தடுப்பை ஏற்படுத்தி சுண்டிக்குளத்திற்கு அண்மையில் பொருத்தமான வான்கட்டை அமைப்பதனுடாக இவ் ஏரிக்குள் உட்புகும் நன்னீரானது ஆனையிறவு நன்னீர் தேக்கமாக உருவாகும். முள்ளியான் பகுதிêடாக வடக்கில் அமைந்த வாய்க்கால்கள் இந்நீர் தேக்கத்தை யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள ஏரியாகிய வடமராட்சியைத் தொடும்.


நீண்ட நீர்ப்பரப்பை உடைய வடமராட்சி ஏரியானது பச்சிலைப்பள்ளியில் அமைந்த முள்ளியானில் இருந்து செம்பியன்பற்று. எழுதுமட்டுவாள், வரணி, கரவெட்டி, வல்லைவெளி, ஊடாக பரந்து சென்று வல்வெட்டித்துறைக்கு அண்மையில் உள்ள தொண்டமானாற்றினூடாக கடலுடன் தொடுக்கிறது. இதன் கிளையானது சரசாலையில் தொடங்கி யாழ்ப்பாணப் பட்டினம் நோக்கி பரந்து செம்மணிக்கு அண்மையில் உள்ள அரியாலைக் கடலை அடைகின்றது.


இது கிட்டத்தட்ட ஒரு மைல் அகலமாக குடாநாட்டில் இருதயப் பகுதியில் கூடுதலாகவோ குறைவாகவோ முழுமையாக பரந்து காணப்படுகின்றது. இது குடாநாட்டின்; வாழ்க்கையிலே தாக்கத்தை செலுத்தும் முழுமையான வைப்பகமாக இருக்கிறது. தொண்டமானாற்றில் éர்த்தியாக்கப்பட்ட 600 அடி நீளமான தடுப்பணை ஊடாக கடல் நீர் உட்புகுவது தடுக்கப்பட்டுள்;ளது. ஆனையிறவில் செய்யப்பட வேண்டிய வேலைத்திட்டம் மூன்று பகுதிகளை உள்ளடக்கியுள்ளது.


ஆனையிறவு பாலத்திற்கு அருகிலே உள்ள தடுப்பணை கனகராயன் ஆற்றிலிருந்து வரும் வெள்ள நீரை சேமித்து பாதுகாத்து மேற்குப் பகுதியில் உள்ள கடல் நீர் ஊடுருவாமல் தடுக்கும். இதன் கிழக்கு எல்லையில் சுண்டிக்குளத்தில் அமைந்த ஒன்றேகால் (1.25) மைல் நீளமான பாதையோடு இணைத்து கட்டப்பட்ட தடுப்பணையும், வானும் மேலதிக வெள்ள நீரை பாதுகாப்பாக கடலுக்குள் செலுத்துவதற்கும், கடல் நீர் கிழக்கிலுள்ள ஏரியினுள் உட்புகாலும் உறுதிப்படுத்தும், இவ்வாறு கிழக்கிலும் மேற்கிலும் அமைக்கப்பட்ட கட்டமைப்புக்கள் மேலதிக வெள்ள நீரை பெற்று பாதுகாப்பாக சேமித்து வைக்கும் அதே நேரத்தில் இதன் மூன்றாவது அங்கமான இணைப்புக் கால்வாய் தேங்கிய நீரை யாழ்ப்பாண குடாநாட்டின் இருதயப்பகுதிக்கு கொண்டு செல்லும், இவ் வேலைத்திட்டத்தின் முடிவில் கனகராயன் ஆற்றின் வெள்ள நீர் ஆனையிறவு ஏரி மற்றும் வடமராட்சி ஏரிகளின் உவர் நீர் தன்மையை படிப்படியாக நீக்குவதற்கு பயன்படும்.


வண்டல் படுக்கை அமைந்த இரண்டாம் நிலை தேக்கத்திலும் பார்க்க உவர் நீர் வெளியேறி களிமண் படுக்கையுள்ள முதன்மை நீர்த்தேக்கம் அமைவதற்கு விரைவுபடுத்தும். குறுகிய காலத்தில் உவர்த்தன்மை குறைப்பானது உடனடியாக முடிவுக்கு கொன்டுவரப்பட முடியாத போதிலும் இதனால் ஏற்படும் நன்மைகளைப் பெறுவதற்கு அதிக காலம் காத்திருக்கத் தேவையில்லை.


இதன் பயன்கள் உடனடியாக வந்தடையாமல் ஒவ்வொரு மழைக்காலத்தின் பின்பும் மேலும் மேலும் விருத்தியடையும். மேலும் பகுதியான உவர் நீரானது பயன்படுத்த முடியாவிட்டாலும் வேளாண்மைக்கு உகந்ததாக காணப்படும் அதேவேளை இந்நிலை குடா நாட்டின் கரையோரப் பகுதிகளில் உள்ள பல கிணறுகள் மூலமாக செய்யப்படும் வேளாண்மையினால் இது புலப்படும்.


நாட்கள் செல்லச் செல்ல மாசி பங்குனி சித்திரை மாதங்களில் உள்ள கூடிய வெப்பத்தினால் குறிப்பிடத்தக்க ஆவியாதல் நிகழும் இரண்டாம் நிலை நீர்த்தேக்கத்தின் கூடிய அளவான நீர் இழப்பை ஆனையிறவு நீர் தேக்கத்திலிருந்து நீரை கால்வாயினுடாக செலுத்தி இரண்டாம் நிலை தேக்கத்தை தொடர்ந்தும் நிரம்பல் நிலையில் வைத்திருக்கலாம்.


இவ்வாறான நிரப்பு நிலையானது தென்மேற்கு பருவப்பெயர்ச்சிக் காலமான ஆனி, ஆடி மாதங்களில் ஏற்படும் பாரியளவு ஆவியாதலின் விளைவாக இச் செயற்பாடு சாத்தியமற்றதாக இருக்கும்.


இதன் விளைவாக யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள ஏரி அமையும் பாரிய நன்னீPரேரியைக் கொண்டிருப்பதன் விளைவாக யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள நிலங்கள் விருத்தியடைந்து பன்மடங்கு நன்மையடையும்.


இதன் மூலம் நிலக்கீழ் நீர் தாராளமாக அமைவதோடு நீர் மட்டமும் உயர்வடையும் வருடங்கள் செல்லச் செல்ல கிணற்று நீர் மட்டமும் உயர்வடையும்.


இந்நிலத்தின் கீழுள்ள மண்ணின் ஈரப்பதன் அதிகரிக்கும். தாவர வளர்ச்சி பல்கிப் பெருகும். தென்னைகளுக்கும் ஏனைய மரங்களுக்கும் கோடையில் ஏற்படும் உற்பத்தி வீழ்ச்சி நிலைமை இல்லாமல் போகும். இத் திட்டம் அமைந்துள்ள ஏரியின் அண்மையில் உள்ள 15,000 ஏக்கரிலும் மேலான காணிகள் வேளாண்மை விருத்திக்கு உதவும். மேலும் வவுனியா மாவட்டத்தில் உற்பத்தியாகும் கனகராயன் ஆற்றின் நீரை யாழ்ப்பாண மாவட்டத்திற்கு கொண்டுவந்து தொண்டமானாறு மற்றும் யாழ்ப்பாணப் பட்டிணத்தின் எல்லையில் அமைந்துள்ள அரியாலையில் உள்ள வானூடாக பாயச் செய்யும். இதுவே யாழ்ப்பாணத்துக்கான நீர்த் தேவையை பூர்த்தி செய்ய சரியான தீர்வு

 

.http://www.globaltamilnews.net/

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இக்கட்டுரையை இங்கு இணைத்ததுக்கு நன்றி ஹரி,

 

தற்போது யாழ் நகரை அண்டிய பகுதிகளில் குடிநீராக இல்லாது சாதாரணமாக அன்றாட தேவைகளுக்குப் பாவிக்கும் கிணத்துநீரே மிகவும் மோசமான நிலையிலுள்ளது. காரணம் சரியான சூழல் பாதுகாப்பு தொடர்பான அறிவூட்டல் இல்லாமையே.

 

தவிர, யாழ் நகருக்கு மிகவும் அண்மித்த பகுதியாக இருக்கும் பண்ணைக்கடற்கரையும் இதன் தீவகத்தோடு இணைக்கும் பாலமுமே குடாநாட்டின் நிலத்தடி நீரின் தன்மையை எதிர்காலத்தில் பாவனைக்குகந்ததாக மாற்றுவதற்கு போதியதாகும் அதாவது இப்போது இரண்டாக பிளக்கப்பட்டிருக்கும் பண்ணைப்பாலத்தையண்டிய கடற்கரையையும், கொழும்புத்துறைக்கும் மண்டைதீவுக்கும் இடையிலான கடலை பண்ணைப் பாலவீதியைப்போலவே பிரிப்பதனூடாக மிகப்பெரிய தண்ணீர்த் தொட்டிபோன்ற அமைப்பை யாழ்நகருக்கு அண்மையில் உருவாக்கலாம். இதன்மூல மாரிகாலங்களில் குடாநாட்டின் பல பகுதிகளில்லிருந்து தெற்கே பாயும் மழைநீரை இத்தொட்டி வடிவமான பிரதேசத்தில் தேங்கச்செய்வதன்மூலம் படிப்படியாக அதன் உப்பின் தன்மையை காலக்கிரமத்தில் இல்லாதொழிக்கலாம்.

 

வெள்ளநீர் வடிகாலாகிய வழுக்கியாற்றுப் பிரதேசம் மற்ரும் யாழ் நகரை அண்டிய பகுதிகளின் வெள்ளநீர் வடிகால்களது முடிவான செல்லிடம் அனைத்துமே பண்ணைக்கடலைச் சார்ந்த பிரதேசத்திலேயாகும். இவகளைக் காலக்கிரமத்தில் இத்தொட்டிவடிவ நீர்த்தெக்கத்திற்குத் திருப்பிவிடுவதன்மூலமாக, கூடிய விரைவிலேயே யாழ்குடாவுக்கு ஒரு நல்ல குடிநீர் ஏரியை உண்டாக்கலாம், தவிர மண்டைதீவுக்கு கரையூருக்கும் கொழும்புத்துறைக்கும் இடைப்பட்ட பிரதேசத்திலிருந்து ஆரம்பித்து தடுப்பணை ஏற்படுத்துவதால் யாழ்நகரை அண்டிய மிக அண்மித்த பகுதியான மண்டைதீவினை யாழ் மாநகரசபையின் ஆட்சி எல்லைக்குள் கொண்டுவந்துவிடலாம்.

 

இதன்மூல யாழ்நகரது குடியிருப்பு மற்ரும் உள்ளகக் கட்டமைப்பு ஆகியவற்றிற்கான நிலத்தட்டுப்பாட்டை சரிசெய்யலாம் தவிர தற்போது உள்ள யாழ் பொதுசன வைத்திய சாலையை கொழும்புத்துறையை அண்டிய மணியன் தோட்டப் பகுதிக்கு இடம்மாற்றி தற்போதுள்ள கட்டிடத்தை வெளிநோயாளர் பிரிவுக்கு மட்டுமே பாவிப்பதமூலம் இடநெருக்கடியை இல்லாதொழிக்கலாம்,

 

பொருளாதார அளவில் பெருமெடுப்பிலான செலவினைத்தவிர்க்கும் இத்திட்டம் மதிப்பீடு மற்ரும் இந்த யோசனையது நூறுவீத வெற்ரியளுப்புக்கான துறைசார் வல்லுனர்களது மதிப்பீடு மற்ரும் இதுபற்றிய ஆராய்தல்களின் பின்பு திட்டத்தைச் செயற்படுத்தினால் ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி, மற்ரும் புலம்பெயர் தமிழர்களது பன்களிப்பு ஆகியவற்ருடன் நிறைவேறும்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
யாழ்ப்பாணத்தில் திருத்த,புனரமைக்க இத்தனை வேலைகள் உள்ள நிலையில்
இரணைமடுக்குளத்தண்ணீரை யாழ்ப்பாணத்துக்கு கொண்டுசெல்ல அரசு  எடுக்கும் தீர்மானம் 
திட்டமிட்ட சதிதானே...?
இந்த தெளிவை மக்களுக்கு எடுத்துக்கூறி விளங்க வைக்கப்போகின்றவர்கள் யார்?
வன்னி,யாழ்ப்பாணம் என தமிழ்மக்களை
பிரிக்க நினைப்பவர்களிடமிருந்து தமிழ்மக்களை காப்பாற்றப்போகின்றவர்கள் யார்?
  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரையாளரின் கருத்தை எதிர்ப்பது நோக்கமல்ல.

 

எமது நாட்டின் தேசிய வளங்களை அடைளம்காணுதல் பயன்படுத்துதல் தொடர்பாக விவாதங்களற்ற ஒரு சூழல் ஆரோக்கியமானதல்ல. ஈழத்தின் சூழலுக்கு குந்தகம்ம் விழைவிக்காமலும் முன்னுரிமை மற்றும் உத்தம பயன்பாடு என்கிற அடிப்படையில் தேர்வு செய்யாமலும் ஈழத்தின் வளங்கள் பற்றிய தீர்மானங்கள் எடுக்கப் படுவது ஆரோக்கியமான போக்கல்ல.

இதுபற்றி நேரமுள்ளபோது நீண்ட கட்டுரை எழுதுவேன்.

 

1970பதுகலின் பிற்பகுதியில் யாழ்பல்கலைக் களகத்தில் ஒரு தனிப்பட்ட சம்பாசனையின்போது மறவன்புலவு சச்சிதானந்தம் (அப்போது ஐ.நா மீன் வள அபிவிருத்தி நிபுணராக பணியாற்றிவிட்டு திரும்பியிருந்தார்) நேரடிப்பேச்சில்  யாழ்ப்பாண ஏரி அப்படியே ஒரு பெரிய வளம் என்று சொன்னார்.  ஒரு கண பேச்சு என்றாலும் என் சிந்தனையில் பொறிபவிழுத்திய கருத்து அது.

 

நன்னீர் ஆக்கும் வெள்ளை யானை திட்டமா எரியை மாசில்லாமல் மேம்படுத்தி நிர்வாகிக்கும் பொறிமுறையா எது உத்தமம் என்பது நீண்ட விவாததுக்குரியது.

யாழ்ப்பாண ஏரி நீரின் உவர் நீக்கம் கோட்பாட்டு அடிப்படையில் சாத்தியமானாலும் அது மிக மிக நீன்டகாலமெடுக்கும் செயல்பாடாகும்.. அந்த நீண்ட காலத்தில் யாழ்குடாநாட்டின் சுற்றுச் சூழலுக்கும் நிலத்தடி நீருக்கும் நிச்சயம் பாதிப்பு ஏற்படும். யாழ் ஏரி நன்னீர் ஆவது ( நீரின் உவர்ப்பில் ஏற்படும் மாற்றம்) ஹைட்ரோலிக் அடிப்படையில் நிலதடி நீரை உயர்த்தும் என்பதுபற்ற்யும் சந்தேகமுள்ளது, யாழ் கடல் ஏரியின் உப்புநீர் மாறும்போது ஏற்படக்கூடிய நீரின் அடர்த்தி மாறுபாடு உவர்நீரில் மிதக்கும் நன்னீர் வில்லையை சிதைத்துவிடலாம் என அஞ்சுகிறேன். எனினும் இதுபற்றி சம்மூக விஞானிகள் தீர்மானிக்க முடியாது. இது துறை சார்ந்த விஞானிகளின்  ஆய்வுக்குரியது. பின்னர் விரிவாக எழுதுவேன்

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

தொண்டை நனைக்குமா தொண்டைமான் ஆறு?

 

-மா.மோகனகிருஷ்ணன்-

யாழ்ப்பாணக் குடாநாடு இந்த வருடம் என்றும் இல்லாதவாறு கடும் வரட்சியைச் சந்தித்திருக்கிறது. வற்றாவே வற்றாது என்றிருந்த பல கிணறுகளில் தண்ணீர் பட்டைக் கிடங்குகளில் மட்டுமே மிஞ்சிக் கிடக்கிறது. சதுப்பு நிலங்கள் வரண்டு பாளங்களாக வெடித்துப்போய் உள்ளன. குளங்களில் தண்ணீர் இருந்த சுவடே தெரியவில்லை.புழுதி பறந்துகொண்டிருக்கிறது. தாகத்தால் தவித்தலைந்த கால்நடைகள் கடைசியில் கடல் நீரேரிகளில் ஒதுங்கி உப்பு நீரைக் குடிக்கவும் முடியாமல் துப்பவும் முடியாமல் பரிதாபமாக இறந்துபோன சம்பவங்களும் பதிவாகியுள்ளன. சுட்டெரித்த கோடையும் பொய்த்துப்போன மழையும் யாழ்ப்பாணத்தின் நீர் நிலைகளைக் காயச் செய்த காட்சிகள், வருங்காலத்தில் யாழ்ப்பாணம் எதிர்கொள்ளவுள்ள பெரும் நீரியல் அவலங்களுக்கான முன்னோட்டமோ எனப் பலரையும் அச்சப்படவைத்துள்ளது.

மனித குல வரலாற்றில், அவனது நாகரிகம் வேர் கொண்டு விழுதெறிந்த பிரதேசங்களாக நீர் நிலைகளை அண்டிய பிரதேசங்களே விளங்கியுள்ளன. ஆனால், யாழ்ப்பாணத்தில் பேராறுகளோ பெருங்குளங்களோ இல்லை. பெய்து கொட்டுகின்ற அடை மழையும் குறைவு. அப்படி இருந்தும் இங்கு தொன்றுதொட்டுத் தமிழ்வாழ்வு இருந்திருக்கிறதெனில், அதற்குக் காரணம் நிலத்தடி நீர்தான். அந்த நிலத்தடிச் செல்வம் ஏற்கெனவே உவரேறியும் வேளாண் இரசாயனங்களால் நஞ்சேறியும் தரம் தாழ்ந்து கொண்டிருக்கையில், இப்போது பற்றாக்குறைவால் அளவிலும் தாழ்ந்து கொண்டிருக்கின்றது.

யாழ்ப்பாணக் குடாநாட்டின் அடித்தளம் சுண்ணாம்புக் கற்பாறைகளைக் கொண்டது. இந்தியத் தமிழகத்தின் நீட்சியாக இருந்த நிலப்பரப்பின் தாழ்வான பகுதியைக் கடல் கபளீரகம் செய்ததாலேயே இலங்கை தனித்தீவாக உருவானது. அப்போது, யாழ்ப்பாணக் குடா நாடு நெடுங்காலம் ஆழமற்ற கடற்பரப்பால் மூடுண்டு இருந்தது. இந்தக் கடலில் வாழ்ந்து இறந்த பெருந்தொகையான உயிரினங்களின் வன்கூடுகளே இறுதிக் குடாநாட்டின் அடித்தளம் தோற்றம் பெற்றது. இதற்கான ஆதாரமாக, கிணறுகள் தோண்டும்போது பாறைகளில் சிப்பிகள், சங்குகள் போன்றவற்றின் சுவடுகள் பதிந்திருப்பதை இப்போதும் காணலாம். கல்சியம் காபனேற்றால் ஆன அந்தப் பாறைகளையே சுண்ணாம்புப் பாறைகள் எனவும், அவை தோற்றம் பெற்ற காலப்பகுதி புவிச்சரித வரலாற்றின் மயோசின் (Miocene) காலம் என்பதால் மயோசின் பாறைகள் எனவும் அழைக்கப்படுகின்றன.

IMG_0194-300x199.jpg

மயோசின் பாறைகள் இயல்பாகவே மூட்டுகளையும் உடைவுகளையும் கொண்டிருப்பதால் மழை நீரை உட்புகவிடக் கூடியவை. இவ்வாறு புகுந்து, பாறைகளின் உள்ளேயுள்ள வெடிப்புகளிலும் பள்ளங்களிலும் தேங்குகின்ற நீரையே நிலத்தடி நீர் என்கிறோம். இந்நிலக்கீழ் நீர் அதற்குக் கீழே, குடாநாட்டைச் சூழவுள்ள கடலில் இருந்து ஊடுருவியிருக்கும் உவர்நீரின் மேல் ஒரு வில்லைபோல மிதந்துகொண்டிருக்கிறது. மழை காலத்தில் தரைக்குக் கீழே சேமிக்கப்படும் மழைநீரின் அளவுக்கு ஏற்ப இந்த நன்னீர் வில்லைகள் விரிவடைந்தும் கோடைகாலத்தில் சுருங்கியும் கொள்கிறது. இவ்வில்லைகளில் உள்ள நீரே, நாம் கிணறுகளைத் தோண்டும்போது பாறைகளினூடாக ஊறிவந்து கிணற்றில் சேருகிறது.

யாழ்;ப்பாணக் குடாநாட்டில் சனத்தொகை குறைவாக இருந்தவரைக்கும் கடுங்கோடையிலும் நிலத்தடி நீருக்கு ஒருபோதும் பஞ்சம் ஏற்பட்டதில்லை. ஆனால், குடாநாடு இப்போது தாங்கும் மக்கள் சுமை அதிகம். 1995ம் ஆண்டு இடப்பெயர்வுக்கு முன்னர் எட்டு இலட்சம் பேர் வரையில் செறிந்து வாழ்ந்த யாழ்ப்பாணத்தில், இப்போதும் ஆறு இலட்சம் பேர்வரையில் குழுமியுள்ளனர். இவர்களது அன்றாடத் தேவைகளுக்கெனவும் செறிவு வேளாண்மைக்கெனவும் அனுதினமும் சுமார் 80,000 கிணறுகளும், 15,000 குழாய்க் கிணறுகளும் தண்ணீரை வெளியே இறைத்துக்கொண்டிருக்கின்றன. ஆனால், வெளியேறிய நீரைச் சமன் செய்யுமளவுக்கு நிலக்கீழ் நீர் மீளவும் சேமிக்கப்படுவதில்லை.

நம் முன்னோர் குளங்களை வெறுமனே தமது நீர்ப்பாசனத் தேவைகள் கருதி மாத்திரம் அமைத்துச் செல்லவில்லை. நிலமடந்தைக்கு மழைநீரைப் பருகக் கொடுக்கும் வாய்களுமாகவே அவற்றைக் கருதிப் பராமரித்தார்கள். ஆனால், நாம் தயவுதாட்சணியம் இன்றி ஏராளமான குளவாய்களை மூடி அடைத்துவிட்டோம். ஸ்ரான்லி வீதியும் கஸ்தூரியார் வீதியும் சந்திக்கும் இடத்தில் சில வருடங்களுக்கு முன்புவரை இருந்த வண்ணான்குளம் இப்போது இல்லை. அந்தக் குளத்தை இன்று கட்டிடத் தொகுதிகளால் நிரப்பி வைத்திருக்கிறோம். நம் கண்ணெதிரிலேயே காணாமற்போன குளங்களுக்கு இது ஒரு உதாரணம்தான். அத்தோடு, போதிய மழை வீழ்ச்சியும் கிடைக்கப் பெறாததால் நன்னீர் வில்லைகள் சுருங்கிக் கிணறுகளில் நீர் மட்டம் கீழிறங்கத் தொடங்கியுள்ளது. நன்னீர் வில்லை இருந்த இடத்தில் கடல்நீர் புக, சில கிணறுகளில் உப்புக்கரிக்கவும் தொடங்கியிருக்கிறது.

யாழ்ப்பாணக் குடாநாட்டின் தாகத்தைத் தணிவிப்பதற்கு, கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைமடுக் குளத்தில் இருந்து தண்ணீரை எடுத்துவரும் திட்டமொன்றின் பூர்வாங்க வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆனால், கடந்து சென்ற கோடை இரணைமடுக் குளத்தையும் விட்டுவைக்கவில்லை. கிளிநொச்சியின் மிகப்பெரும் குளமான அதனையே குட்டைபோலச் சுருங்க வைத்துவிட்டது. இருந்த நம்பிக்கைகள் தளர்ந்துவிட்ட நிலையில், யாழ்ப்பாணவாசிகள் தொண்டைமான் ஆறு தன்னும் தொண்டை நனைக்காதா என்று அங்கலாய்க்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

யாழ்ப்பாணக் குடாநாட்டின் உள்ளே உப்பாறு என்றும், தொண்டைமான் ஆறு என்றும் இரண்டு கடல் நீரேரிகள் உள்ளன. மாரி காலங்களில் மழைநீரைச் சுமந்துகொண்டு கடலுக்கு விரையும் இவை, கடற்பெருக்கின்போது கடல் நீரைக்குடித்து உப்பேறுகின்றன. இதனாலேயே இவற்றுக்குக் கடல் நீரேரிகள் அல்லது உவர் நீரேரிகள் (Salt water lagoons) என்று பெயர். மாரியில் சலசலத்தாலும் கோடையில், குடல் வற்றிய பாம்புகள் போலவே இந்தக் கடல் நீரேரிகள் அசைவற்றுப் படுத்திருக்கின்றன. இவற்றில் உப்பாறு ஏரி கப்பூதுவில் ஆரம்பித்து அரியாலையில் கடல் நீருடன் இணைகிறது. தொண்டைமான் ஆறு பச்சிலைப் பள்ளியில் இருந்து ஆரம்பித்து தென்மராட்சியினதும், வடமராட்சியினதும் பல ஊர்களைக் கடந்து வந்து, கடைசியில் தொண்டைமானாறு கிராமத்தின் வழியாக வங்கக் கடலில் சங்கமிக்கிறது.

தொண்டைமான் ஆற்றுக்கு அந்தப் பெயர் நிலைக்க, தமிழகத்தை ஆண்ட முதலாம் குலோத்துங்க சோழனின் படைத்தளபதியாக விளங்கிய கருணாகரத் தொண்டைமான் என்பவரே காரணம் ஆவார். சோழ மன்னன் கட்டளையேற்று, கருணாகரத் தொண்டைமான் யாழ்ப்பாணம் மீது படையெடுத்துத் தொண்டைமான் ஆற்றின் அருகே படைத்தளங்களை அமைத்ததாகவும், ஆற்றை அண்டி விளைந்த உப்பை மரக்கலங்களில் ஏற்றித் தமிழகத்துக்கு அனுப்பிவைத்ததாகவும், போக்குவரத்துக்கு வசதியாக ஆற்றை ஆழப்படுத்தியதாகவும் வரலாறு பகிர்கிறது. தொண்டைமான் படையெடுத்த காலப்பகுதியில் ஆறு உவராக மாறி விட்டிருந்தாலும், கனகராயன் ஆற்று வடிநிலத்தினூடாக வடிந்து வரும் மழைநீரைத் தேக்கி முன்னர் நன்னீரேரியாக விளங்கியதாகவும் அறியமுடிகிறது. இதற்கு, தொண்டைமான் ஆற்றை அண்டி நன்னீர்ச் சூழலில் மட்டுமே வளரக்கூடிய மருது மரங்கள் சில இப்போதும் இருப்பதை ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.

குடாநாட்டின் இரண்டு கடல் நீரேரிகளில் தொண்டைமான் ஆறே பெரியது. ஏறத்தாழ 43 கிலோ மீற்றர்களுக்கு மேலாக நீண்டு செல்லும் தொண்டைமான் ஆறு 77 சதுர கிலோ மீற்றர்கள் பரப்பளவைக் கொண்டிருக்கிறது. உப்பாற்றின் பரப்பளவு 26 ச.கி.மீ. இரண்டு கடல் நீரேரிகளும் சேர்ந்து குடாநாட்டின் 10 விழுக்காடு பரப்பளவில் வியாபித்திருக்கின்றன. இதனால், குடாநாட்டில் பெய்கின்ற குறைந்த பட்ச மழைநீரையேனும் கடல் நீரேரிகளில் சேமிப்பதன் மூலம் குடாநாட்டின் நீர்வளத்தைக் கணிசமான அளவு மீட்புச் செய்துவிடமுடியும் என்று நீரியலாளர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

யாழ்ப்பாணக் குடாநாட்டின் கடல் நீரேரிகளை மழைநீரால் அலசி நன்னீர் ஏரிகளாக மாற்றுவது பற்றிக் காலனித்துவ காலத்திலேயே சிந்திக்கப்பட்டது. 1879ஆம் ஆண்டில், அப்போது யாழ்ப்பாண மாகாணத்தின் ஆளுநராக இருந்த ருவைனம் (Twyneham) உவர்த் தடுப்பணைகள் அமைப்பது தொடர்பாகத் திட்டமிட்டார். ஆனால், அக்காலப் பகுதியில் இந்தோனேசியாவில் ஏற்பட்ட பாரிய கடற்கோளின் தாக்கம் காரணமாக யாழ்ப்பாணம் கடும் சூறாவளியையும் வெள்ளப் பெருக்கையும் சந்திக்க நேர்ந்தது. தடுப்பு அணைகளைக் கட்டியிருந்தால், மழை வெள்ளம் கடலுக்குள் பாயமுடியாமல் குடாநாட்டையே மூழ்கடித்து விட்டிருக்கும் என்று அஞ்சிய ஆளுநர் அதன் பின்னர் அதனைச் செயற்படுத்த முன்வரவில்லை.

வெள்ளப்பெருக்குக் காலத்தில் திறந்து மூடக்கூடிய மடைக்கதவுகளைக் கொண்ட தடுப்பணைகள் அமைக்கும் திட்டத்தை 1947 இல் பிராந்திய நீர்ப்பாசனப் பொறியியலாளராக இருந்த வெப் (webb) என்பவர் வடிவமைத்தார். இதன்படி, தொண்டைமான் ஆறு வங்கக் கடலுக்குள் பிரவேசிக்கும் இடத்துக்குக் குறுக்காக அணை கட்டும் பணி 1949 இல் ஆரம்பமாகி, 1953 இல் நிறைவடைந்தது. செயற்பாட்டுக்கு வந்து ஒரு தசாப்தத்துக்குள்ளாகவே பயனை உணரமுடிந்தது. தொண்டைமான் ஆறு படிப்படியாக உவரை இழந்ததோடு, ஆற்றை ஒட்டிய உவர்தரைகளில் சில விளைநிலங்களாகவும் மாற்றம் கண்டன. தொண்டைமானாறு வெளிக்கள நிலையம் யாழ் மத்திய கல்லூரி மாணவர்களைப் பயன்படுத்தி மேற்கொண்ட களஆய்வில் இது தெரியவந்திருக்கிறது. ஆனால், தொடர்ச்சியாக அணைக் கதவுகளைப் பழுது பார்த்துப் பராமரிக்கும் பணிகளை மேற்கொள்ளுவதற்குப் போதிய நிதி ஒதுக்கப்படாமையினாலும், உள்ள+ர்வாசிகள் மீன் பிடிப்பதற்கு வசதியாக மடைக் கதவுகளை விருப்பத்திற்கேற்பத் திறந்து மூடியமையினாலும் 1977 ஆம் ஆண்டுடன் அணை அடியோடு செயலிழந்தது.

IMG_0266.jpg

முப்பதாண்டுகள் கால இடைவெளியின் பின்னர் இப்போது தடுப்பணை புனரமைக்கப்பட்டு மீண்டும் கடலை மறித்தவாறு கம்பீரமாகக் காட்சி தருகிறது. இருந்தும், அப்போதுபோலவே சில சவால்களையும் எதிர்கொள்ள வேண்டித்தான் உள்ளது. அச்சுவேலி, ஆவரங்கால் பகுதிகளில் தாழ்வான குடியிருப்புகள் மாரியல் வெள்ளக்காடாகும்போது, உரிய காலத்துக்கு முன்பாகவே மடைக்கதவுகளைத் திறக்குமாறு வற்புறுத்துகின்றார்கள். ஆற்றில் அணையை அண்டி மீன்பிடி முற்றாகவே தடை செய்யப்பட்டிருந்தபோதும், மடைக்கதவுகளுக்கு அருகிலேயே கற்களைப் பிரட்டி மீன்களைத் தேடுவது மும்முரமாக இடம்பெற்றவாறுதான் உள்ளது. மீன்பிடியாளர்கள் உவர்நீர் நன்னீராக மாறினால் மீன்கள் அருகிப் போகும் என்று அதிருப்திகொள்ள, சூழலியலாளர்களோ கண்டற் காடுகளும் பறவைகளும் காணாமல் போய்விடுமோ எனக் கவலை கொள்கின்றனர்.

இவ்வளவு சவால்களையும் தாண்டித் தொண்டைமான் ஆறு குடாநாட்டின் தொண்டையை நனைக்குமா என்பதற்குக் காலம்தான் பதில் சொல்ல வேண்டும். ஆனால், அது வரை காத்திராமல் வரப்போகும் மாரியில் மழை நீரைத் தெருவுக்குள் விரட்டிவிடாது நமது வீட்டு வளவுகளில் தேங்க அனுமதித்தாலே கிணறுகள் தானாகத் தண்ணீர் குடிக்கத் தொடங்கிவிடும்.

http://www.imainet.org/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE/

  • கருத்துக்கள உறவுகள்

இது 50 களில் வெளிவந்த கட்டுரை ஆதலால் இது இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ற முறையில் உரிய தொலில் நுட்ப விற்பன்னர்களால் மீழாய்வு செய்யப்படுதல் அவசியம். அத்துடன் இன்று உவர் நீர் ஏரியாக உள்ள பல கால்வாய்களும் நீர் நிலைகளும் உடனடியாக நன் நீராக மாறும் தறுவாயில் உவர் நீரில் வாழும் மீன் போன்ற உயிரினங்கள் அழியும் ஆபத்தும் உண்டு. அதை அண்டிய பிரதேசங்களில் தென்னை பனை போன்ற பயிர் செய்கையில் ஏற்படும் மாற்றங்களை கண்டறிதல் வேண்டும். உவர் நீரை வாழ்வாதரமாக கொண்ட பலர் தொழில் வாய்ப்பை இழக்க நேரிடும். உதாரணத்துக்கு உப்பு விளைச்சல் தொழிலை குறிப்பிடலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விவாதம் சமூக பொருளாதார ரீதியாகவும் விஞான ரீதியாகவும் முழுமை பெறவேன்டுமானால் யாழ் கடல் ஏரிகளை நன்னீராக்கும் திட்டத்துக்கு மாற்று திட்டங்களையும் நாம் இங்கு விவாதிக்கவேண்டும்.

 

யாழ்குடாநாட்டுக்கு ராட்சத குளாய்கள்மூலம் நீர்வளங்கும் அணைக்கட்டு தொகுதிகளை அமைத்து கடலேரியிலும் கடலேரிக்கு அண்மையில் கடலிலும்  கலக்கும் ஆறுகளின்  நீரை அறுவடை செய்தல் போன்ற திட்டங்களையும் நாம் ஆராயலாம்.

 

இத்தகைய திட்டங்கள் குறைந்த சூழலியல் தாக்கத்தையும் குறைந்த செலவினங்களையும் குறைந்த நிறைவேற்றும் காலத்தையும்  கொண்டதாக இருக்கலாம் 

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் ஏரி நன்னீர் ஆவது ( நீரின் உவர்ப்பில் ஏற்படும் உவர்ப்பு மற்றும் அடர்த்தி மாற்றம்) ஹைட்ரோலிக் அடிப்படையில் நிலதடி நீரை உயர்த்தும் என்ற கூற்றுமீதும் எனக்குச் சந்தேகமுள்ளது,

யாழ்குடாநாட்டின் நன்னீர் வளம் உவர்  நீரின்மீது ஒரு வில்லையாக மிதப்பதாக அறியப்பட்டுள்ளது. யாழ் கடல் ஏரி நீரின் உப்பு தன்மை குறையும்போது  ஏற்படக்கூடிய நீரின் அடர்த்தி மாறுபாடு உவர்நீரில் மிதக்கும் நன்னீர் வில்லையை சிதைத்துவிடலாம் எனவும் அஞ்சுகிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்னீர் வீணாவதை தடுத்து அதன் மூலம் பயனடையக்கூடியவர்கள் பயன் பயன்பெற வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.