Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிட்ணி 2012/2013 !!!!!!!!!! யாழ் கள உறவுகளின் கலக்கல் விருது வழங்கும் விழா!!!!!!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒளிச்சுடர் கிருபனுக்கு வாழ்த்துக்கள்.!!
 
ஒளிச்சுடரை ஆவலுடன் பார்க்கும் கேள்வியின் நாயகி ரதிக்கு, சூரியதேவன் குந்திதேவிக்கு வரமளித்ததுபோல்.! வரம் அளித்து விடாதீர்கள்...!!  
 

  • Replies 286
  • Views 20.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியில் நடைபெற்ற யாழ்கள உறவுகளின் கலக்கல் விழாவிற்கு சிட்னியில் வசிக்கும் மூத்த உறுப்பினரான என்னை அழைக்காததை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

 

="கந்தப்பு" data-cid=" உந்த நொட்டைக்கு தான் கூப்பிடவில்லையாம் சும்மா எல்லாதிலயும் நொட்டை பிடிச்சுக்கொண்டிருந்தால் யாரும் கூப்பிடுவினமே.....:D..

 

சிட்னியா சிட்ணியா

 

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியா சிட்ணியா

சிட்னியா? சிட்ணியா? என்பதைக் கண்டுபிடிக்க, கவுண்டமணி செந்தில் கருத்துப்படி கிட்ணியைப் பாவிக்க வேண்டும்.!!! :D:o 

  • தொடங்கியவர்

வணக்கம் ரசிகப் பெருமக்களே !! கோவின் ஒரு கலக்கல் குலுக்கல் நடனம் உங்களுக்காக :lol: :lol: :D :D .

 

 

  • கருத்துக்கள உறவுகள்

வேறொண்டுமில்லை  கொஸ்பிட்டலில கொடுத்த மிட்டாய் கலர் தண்ணியை குலுக்காமல் குடிச்சுட்டார் ... அதான்..! :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் ரசிகப் பெருமக்களே !! கோவின் ஒரு கலக்கல் குலுக்கல் நடனம் உங்களுக்காக :lol: :lol: :D :D .

 

 

 

கவனம் ராசா!!!! மெதுவாய் மெள்ளமாய் ஆடுராசா....... பெருங்குடல் சிறுகுடலோடை கொழுவுப்படப்போகுது... :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ரசிகப் பெருமக்களே !! கோவின் ஒரு கலக்கல் குலுக்கல் நடனம் உங்களுக்காக :lol: :lol: :D :D .

 

 

 

Top less Dance

 

வயதுவந்தவர்களுக்கு மட்டும் என்ற அறிவுறுத்தல் இன்றி வெளியிட்டதால் நாங்கள் சிறுவர்கள் கெட்டுப்போய் விட்டோம்.!! இதனை வெளியிட்ட கோமகனை, எந்தச் சட்ட வரையறையின் கீழ்? எந்தக் கோட்டில் நிறுத்தலாம்?? பண்பாட்டு நலன் காப்போரை வேண்டி நிற்கிறோம். <_< <_<

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் திரியைக் கனநாட்களாகக் கவனிக்கவில்லை. விருதுவிழா தொடர அயராது உழைப்பவர்களுக்கு நன்றிகள். ரதியின் கையால் விருதை வாங்கக் கொடுத்து வைக்கவேண்டும் :wub: . தரும்போது ஒளிச்சுடர் என்றால் என்னவென்று சிறு குறிப்பையும் தந்தால் நல்லது :lol:

  • கருத்துக்கள உறவுகள்

'ஒளிச்சுடர்' கிருபனுக்கு வாழ்த்துக்கள்!

  • தொடங்கியவர்

Top less Dance

 

வயதுவந்தவர்களுக்கு மட்டும் என்ற அறிவுறுத்தல் இன்றி வெளியிட்டதால் நாங்கள் சிறுவர்கள் கெட்டுப்போய் விட்டோம்.!! இதனை வெளியிட்ட கோமகனை, எந்தச் சட்ட வரையறையின் கீழ்? எந்தக் கோட்டில் நிறுத்தலாம்?? பண்பாட்டு நலன் காப்போரை வேண்டி நிற்கிறோம். <_< <_<

 

 

இது சின்ன கோவின் கலக்கல் நடனம் :lol: :lol: . பாஞ் ஏன் இதில் பதட்டமடைவான் :D :D ??

  • கருத்துக்கள உறவுகள்

இது சின்ன கோவின் கலக்கல் நடனம் :lol: :lol: . பாஞ் ஏன் இதில் பதட்டமடைவான் :D :D ??

சின்னக் கோ என்றால் கோமணம் எதற்கு???  அதனால்தான் நான் பெரிய கோ என்று நினைத்துவிட்டேன்..!!!. வழக்கு, கோட்டுக்குப் போகாது! அமைதி கொண்டேன்!!  :):D

  • தொடங்கியவர்

வணக்கம் !!!!!!!!!!!வணக்கம்!!!!!!!! சிட்ணி ஒப்பேரா மண்டபத்தில் அழகான மாலைப் பொழுதில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்சியடைகின்றோம் :D . சுண்டு , வண்டு ,  நண்டு மேற்பார்வையில் நடைபெற்ருவரும் இந்த கோலாகல விருது வழங்கும் நிகழ்விலே பல்வேறுபட்ட பல்சுவை நிகழ்வுகளைக் கண்டு கழித்தீர்கள் :) . இந்த விருது வழங்கும் நிகழ்வு ஏறத்தாழ இறுதிக்கட்டத்தை நெருங்கிவருவதாகவே நான் நினைக்கின்றேன் . இந்தமுறை நாங்கள் வழங்க இருக்கும் விருதின் சொந்தக்காரர் உண்மையிலேயே விந்தையானவர்  . அத்தி பூத்தால் போல் வருவார் . வரும் பொழுது மந்திரக் கயிற்ருடனேயே வருவார் தனது ஆக்கங்களாலும் கருத்துக்களாலும் வாசகர்களைக் கட்டிபோடும் இவருக்கு " விஞ்ஞானி மெஞ்ஞானி "  [39.22%]  என்ற விருதை மக்கள் தெரிவு செய்து அழகு பார்திருக்கின்றாகள் :D . ஆம் ...........ரசிகப் பெருமக்களே!!!!!!!!!! எங்கள் அன்புக்குரிய இன்னுமொருவனை மேடைக்கு அழைக்கின்றேன் . இவருக்கு  தான் தான் விருதைக் கொடுக்க வேண்டும் என்று அடம்பிடித்தபடி என்னருகில் லைக் ராசம்மா வழிமேல் விழி வைத்தபடி பாத்துக்கொண்டிருக்கின்றார் :lol: :lol: :icon_idea: .

  • கருத்துக்கள உறவுகள்

லைக் ராசம்மாவை லைக் பண்ணுவாரா இன்னுமொருவன்?? :D வாழ்த்துக்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் இன்னுமொருவன் ..!

மேடையில் அமர்ந்திருக்கும் அனைவருக்கும் என் அன்பு வணக்கங்கள். இந்த பரிசளிப்புவிழா திறமையாக நடைபெற அயராது உழைத்த உழைத்துக்கொண்டிருக்கும் அனைவருக்கும் என் வாழ்த்துகள். அத்துடன் இதர ஆக்கங்கள் மூலம் பரிசில்களையும் வாழ்த்துகளையும் பெற்றவர்களுக்கும் எனது வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன். இப்போது யாழ் சக உறவான இன்னுமொருவனுக்கு விஞ்ஞானிமெய்ஞானி எனும் விருதை யாழ் உறவுகள் சார்பாக வழங்குவதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன். அத்துடன் இன்னுமொருவனின் எழுத்தாற்றலையும் ஆக்கங்களையும் பாராட்டுவதோடு அவருக்கு இனி வரும் நாட்களில் பத்துதரம் லைக் பண்ணுவேன் என்பதை மனமகிழ்வோடு அறியத்தருகின்றேன், அத்தோடு இந்த வாய்ப்பைதந்த கோமகனுக்கும் அவரது குழுவினருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொண்டு விடைபெறுகின்றேன் நன்றி வணக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

விஞ்ஞானி மெஞ்ஞானி இன்னுமொருவனுக்கு வாழ்த்துக்கள்!!
 

லைக் ராசம்மாவை லைக் பண்ணுவாரா இன்னுமொருவன்?? :D வாழ்த்துக்கள்..!

 

லைக் ராசம்மா இன்னுமொருவனை லைக் பண்ண மாட்டா. அவ அத்தானை மட்டுமே லைக் பண்ணுவா.

ஆனால் விஞ்ஞானி மெஞ்ஞானி இன்னுமொருவனை, லைக் ராசம்மா லைக் பண்ணுவா! ஏனெனில், ராசம்மா ரீச்சரின் மாணவன் இன்னுமொருவன் என்பது, இன்னுமொருவனின் பயம்கொண்ட பணிவிலிருந்து தெரிகிறதே!.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் இன்னுமொருவன்!

வணக்கம் ..வந்தனம் ..நமஸ்தே ..நமஸ்கார் ..இனிய உறவுகளுக்கு மீண்டும் கனிவான வணக்கம் கூறி நிகழ்ச்சிக்கு போகலாம் .. :)

 

சிறப்பா இவ்விழாவை ஒருங்கிணைத்து எம்முடன் தோளோடு தோள் நிக்கும் சுண்டல் அவர்களுக்கு நன்றிகள் பல ..

மிக அருமையான இந்த இதமான பொழுதில் மற்றும் ஒரு விருதை அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம் உறவுகளே நீங்கள் ஆவலுடன் பார்த்து இருக்கும் அந்த விருதின் முடிவு இதோ ...

 

அட்டில் அரசன்(சி ) : தமிழரசு , அலைமகள் ( இருவருக்கும் பகிர்ந்து அழிக்கப்படுகின்றது ) (15 votes [27.78%].

 

இவ்விருது இருவருக்கு பகிர்த்து அளிக்கபடுகிறது அரசன்..அரசி என்னும் தன்மை உடையதால்

இவ்விருதினை  பெறும் இருவரும் மேடைக்கு வரவும் இவர்களுக்கான விருதை வழங்க இருப்பவர் ..

(குறுக்கிட்டு கோமகன் )

பொறுமை பொறுமை அஞ்சு அதற்க்கு முன் இருவர் பற்றியும் ஒரு சில வரிகள் பேச கள உறவு ஒருவரை மேடைக்கு அழைக்கலாம் என்று எண்ணுகிறேன் ...

 

சரி கோமகன் அவர்களே தாரளமாக ........ :rolleyes: :rolleyes:

 

  • தொடங்கியவர்

வணக்கம்!!!! வணக்கம்!!!! ரசிகப் பெருமக்களே .............  சிலு சிலு தென்றல் வீசும் பொன்மாலைப் பொழுதொன்றில் சிட்ணி ஒபேரா மண்டபத்தில் இருந்து அரங்கம் நிறைந்த மக்களுடன் சந்திக்கின்றோம்  :D .  நாங்கள் ஏறத்தாழ இந்த விழாவின் இறுதிக்கட்டதிற்கு வந்து விட்டோம்  :) . யாழைப் பெண் என்றும் , ஓர் இசைக்கருவி என்றும் பலர் இங்கு வர்ணித்தார்கள் . இந்த யாழ் என்ற இசைக்கருவியை மீட்டுவதற்கு ஆதார சுருதியாக " நாதம் "  என்ற ஒலி தேவைப்படுகின்றது . 2012/13 இல் அப்படி ஆதார சுருதியாக இயங்கி யாழ் என்ற இசைக்கருவியை மீட்டிய கள உறவுகளுக்கு " யாழ் நாதம் " என்ற  விருதுத் தலைப்பு கள உறவுகளால்  பரிந்துரை செயப்பட்டது . அதனடிப்படையில் நடைபெற்ற தேர்தல் முடிவுகளும் விநோதமாகவே வந்திருந்தன  . ஆம்........ ரசிகப் பெருமக்களே!!  யாழ் நாதம் விருதை இரு கள உறவுகள் 34.62% வீத  வாக்கு அடிப்படையில் தட்டிக்கொண்டார்கள் :D . நாங்கள் மக்களின் ஜனநாயகப் பண்புகளை மதித்து இந்த விருதை  " விசுகு " அவர்களுக்கும் யாழ் இணையத்தின் இளைய இசையமைப்பாளருமான " தமிழ் சூரியனுக்கும் " பகிர்ந்து அளிக்கின்றோம் :) . எங்கே விருதுகளைப் பெற விசுகு அவர்களையும் தமிழ் சூரியனையும் மேடைக்கு அழைக்கின்றேன் . இவர்களுக்கு பரிசுகளை வழங்க அர்ஜுன் , சோழியான் இங்கே என்னருகில் ஆவலுடன் காத்திருக்கின்றார்கள் :lol::D .

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் விசுகு , தமிழ்சூரியன்...! :D

  • கருத்துக்கள உறவுகள்

என் தாயே

தமிழே
உனக்கு என் முதல் வணக்கம்
 
தமிழ் உணர்வோடு  நாம் உலாவிட
தமிழ் மைதானம் தந்து
கொட்டுவதையெல்லாம்  பொறுக்கி  பெருக்கி செதுக்கி 
செந்தமிழாக்கி
எமக்கெல்லாம் எழுத்தாளர் எனும் வாசனை  பூசி
அதை உலகெலாம் பரவச்செய்து
பொறுமையுடன் வீற்றிருக்கும் பிரம்மர்  மோகன் அண்ணா
அவரது காவல் தெய்வங்களாக நிற்கும் தம்பிகளாம் நிழலி இணையவன் நுணா  மற்றும் எமது நியானி (அந்தப்பயம் இருக்கணும்)
இவர்களை இங்கு அனுமதிக்கும் குடும்பத்தினர் இவர்களை  முதலில் வாழ்த்தி  வணக்கம் சொல்லி........
 
இந்த விழா
இதை அமைக்கணும் நடாத்தணும் என்ற  முயற்சியில்  முதலில் இறங்கிய  கோ
அவருக்கு உதவியாக இறங்கிய  எமது தம்பி  சுண்டல்
மற்றும் அண்ணல் குமாரசாமியண்ணை
அவருக்கு உதவியாக எம் புங்கை......
இவர்கள் அனைவரது நேரத்திற்கும் என் தலை  சாய்த்து......
 
இங்கு வந்திருக்கும்
எனது உயிருக்கும் மேலான
ஐயாமாரே
அம்மாமாரே
அண்ணன்மாரே
அக்காமாரே
சகோதரர்களே
சகோதரிகளே
நண்பர்களே
நண்பிகளே
தம்பிமாரே
தங்கைகளே
மற்றும் இளவல்களே.... 
உங்கள் அனைவருக்கும் என் வந்தனங்கள்.
 
இந்த  யாழ் எனக்கு அரும்பெரும்  உறவுகளைத்தந்திருக்கிறது
அவர்களுடனான  இந்த தொடர்புகள்
நாம் பகிந்து கொண்ட கருத்துக்கள்
ஆலோசனைகள்
வாழ்த்துக்கள்
பிரார்த்தனைகள்
வம்புகள் 
வழக்குகள்
பிரடி அடிகள்
கட்டையில் போகும்வரை கூட வரும்...
கூட்டுக்குடும்பமாக  வாழும் இந்த யாழ் என்றும் எம்மை ஞாபகப்படுத்தும்.
எந்தவேளையிலும் நான் இதைவிட்டு ஒதுங்கலாம்
ஆனால் அது என்றும் என்னுடன் பயணிக்கும் என்பதை மட்டும் சொல்லிக்கொள்ள  ஆசைப்படுகின்றேன்.
 
இந்த விருதை எனக்கு தெரிவு செய்ய  வாக்களித்து
எனை  மேடையேற்றிய  கள  உறவுகளுக்கு நன்றி  கூறி..
அதை எனக்குத்தர அர்யூன் அண்ணரைத்தெரிவு செய்த உங்கள் அரசியலைப்புரிந்து கொண்டு.... :D
 
இத்துடன்
எனது விருதை
என்னுடன் சேர்த்து எனதருமைத்தம்பி இசைச்சூரியன் தமிழ்ச்சூரியனுக்கும் அளித்து
அவரை எப்பொழுதும் எனக்கு பக்கத்தில் உட்காரவைத்த
இந்த அன்புக்காணிக்கைக்கு தலைவணங்கி.......
 
தமிழரின் தாகம் தமிழீழ  தாகம்  என உறுதியெடுத்துக்கொண்டு..
நிகழ்வு முடிவுறும் நேரம்
நம்புங்கள் தமிழீழம் நாளை  பிறக்கும் பாடலை கேட்போம் என்றுரைத்து அமர்கின்றேன். :icon_idea:
நன்றி
வணக்கம்
  • கருத்துக்கள உறவுகள்

அட்டில் அரசி அலைமகள் அவர்கட்கும், அட்டில் அரசன் தமிழரசு அவர்கட்கும் உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள்...!  :D  உங்கள் இருவர் பற்றியும் ஒரு சில வரிகள் பேசவந்த கள உறவின் காலை வாரிவிட்டவர் யார்..??? :blink:

  • தொடங்கியவர்

அட்டில் அரசி அலைமகள் அவர்கட்கும், அட்டில் அரசன் தமிழரசு அவர்கட்கும் உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள்...!  :D  உங்கள் இருவர் பற்றியும் ஒரு சில வரிகள் பேசவந்த கள உறவின் காலை வாரிவிட்டவர் யார்..??? :blink:

 

பொறுங்கோ ராசா அவசரப்படக்கூடாது :lol::D . அட்டில் அரசன் அரசியப் பத்திக் கதைக்க சுண்டு சிட்ணியிலை ரூம் போட்டு யோசிக்கிறார் ,என்ன சொல்லுறார் எண்டுதான் பாப்பம் :D .

 

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் நாதங்கள் விசுகு அண்ணாவுக்கும், தமிழ்சூரியனுக்கும் நல்வாழ்த்துக்கள்..! :D

  • கருத்துக்கள உறவுகள்

அட்டில் அரசனுக்கும், அட்டில் அரசிக்கும், யாழ் நாதங்களுக்கும் நல் வாழ்த்துக்கள்! :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.