Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் வீட்டில் பிறந்த ஏசம்மா

Featured Replies

1378289_370373549760114_1271737339_n.jpg

 

அதிசயம் யேசு மாட்டு கொட்டகையில் பிறந்தது மட்டுமல்ல அப்படி ஒன்று எங்கள் வீட்டிலும் நடந்தது.அது நடந்ததுக்கு தடங்கள் இல்லை இப்ப என்ற மாதிரி,எங்கள் வீட்டு அதிசயத்துக்கான தடங்களும் இப்ப இல்லை .என்றாலும் இன்று போல அந்த நாள் அது நடந்த நேரம் இப்பவும் என் முன் திரைபடம் போல ஓடி கொண்டிருக்கிறது ..வேறு ஒன்றுமில்லை எனக்கு அதிசயமாக இருந்தது .உங்களுக்கு எப்படி இருக்கும் என்று தெரியாது . நத்தார் பிறக்கும் இரவு ஒரு பதினொரு பன்னிரண்டு மணிக்கும் இடையில் தான் அது நடந்தது என்று நினைக்கிறன் .கொட்டும் மழை வேறை அன்றைய காலையிலிருந்து. அடியென்றால் அந்த மாதிரி விடாமால் ஓரே அடி .அந்த மழை எல்லாரையும் வெளிக்கிட விடாமால் வீட்டுக்குள்ளை அன்று முழுவதும் கட்டி போட்டது போதாதுக்கு அன்று இரவும் நித்திரை கொள்ள முனைகின்றவர்களை கண் மூடாமால் பண்ணி கொண்டிருந்தது.இவ்வளவு காலம் இரவில் வந்த இருட்டுகளையெல்லாம் சேர்த்து தடித்து வந்த இருட்டு மாதிரி அப்படி ஒரு கும்மிருட்டு அன்று .

 அத்துடன் விதம் விதம் இசை கருவிகள் எல்லாம் சேர்த்து வாசித்த மாதிரியான சத்தங்கள் இடைக்கிடை வந்து வந்து போகும் .பெரிசுகளுக்கு இது தொல்லையாக இருந்தாலும் எங்களுக்கு குதூகாலம். ஆனால் ஒரேயொரு பயம் . இந்த பயங்கரமாக வீசும் காற்றில் எங்கள் வீட்டுக்கு பக்கத்து காணிக்குள் இருக்கும் பனைகள் ஆடும் நாட்டியத்தை பார்க்கும் பெரிசுகளின் பயம் எங்களை தொற்றி விட்டிருக்கும் .அதில் ஒரு நெட்டிய பனை ஒன்று வீட்டு முகட்டை முத்தமிட வருவதும் விருப்பமில்லாமால் திரும்பி போவது மாதிரி இருக்கும் ,இப்படி வந்து பல காலம் ஏமாற்றியதால் விழாது என்ற நம்பிக்கை பெரிசுகளுக்கு எங்களுக்கு அப்படியே.மின் விளக்குகள் என்பது ஆஸ்பத்திரியிலும் புகையிரத நிலையத்திலும் கண்டால் சரி .கலியாணவீடு நல்ல நாள் பெருநாளுக்கு கூட பெற்றோல் மாக்ஸ் தான்..மின் விளக்குகள் வீடுகளுக்கு எப்ப வரும் என்று தெரியாத காலம் .லாம்பு விளக்கு தான் பிரதான இடத்தில் பிரதான பாத்திரம் வகிக்கும் ,கை விளக்குகள் என்ற குப்பி விளக்குகள் வீசு காற்றில் தப்பி உயிர் வாழ்ந்து கொண்டு இருட்டை கிழித்து கொண்டு அங்கங்கு அசைந்து நடமாடி தெரியும் .இப்ப அடை மழை வேறயெல்லோ ...கிணத்தடி போறவையோ அல்லது வேற தேவைக்கு போறவை கொண்டு செல்ல முடியாது இப்ப அதன் அசைவு கூட மட்டுபடுத்த பட்டிருக்கும். 

வீட்டு பின் பக்கத்தில் இருந்து ஒரு நூறு யார் தூரம் இருக்கும் மாட்டு கொட்டில் இருந்த இடம். வாயில்லாத ஜீவனை கஸ்டபடுத்த கூடாது என்று சொல்லி கொண்டு கொஞ்சம் வசதியாக அமைத்து இருந்தா எங்கள் அப்பம்மா. இதில் அப்பம்மாவை தவிர வீட்டில் இருக்கும் ஒருவருக்கு விருப்பமில்லை முக்கியமாக அம்மாவுக்கு இவங்களை வளர்க்கிறதுக்கே இந்த கூப்பன் காலத்தில் படாத பட வேண்டி இருக்கு இது வேறயாக்கும் என்று சலித்து கொள்ளுவா.இந்த மழை காற்று இடி மின்னல் ,பூச்சி புழு ஈசல் தவளை சத்தம் ,கும்மிருட்டு .குளிர் கூதல் இவை எல்லாத்தையும் மற்ற்வைகளை அனுபவித்து கொண்டிருக்க இதையும் விட முக்கியமான ஒன்றை பற்றி அப்பம்மா கவலை பட்டு கொண்டிருந்தா என்று தெரியும். காலையிலிருந்து தன் பாட்டில் புலம்பி கொண்டிருக்கிறா...அவ வளர்க்கும் பசு மாட்டின் அழுகை, உடல் அசைவுகள் எல்லாம் ஏதோ உணர்த்தியிருக்கவேணும் .இந்த நேரத்தில் மழை இருட்டை கிழித்து வந்த அந்த வந்த அவலக்குரல் கேட்டு வெளியில் போகோணும் என்று முயற்சி செய்யும் அப்பம்மாவை ஏதாவது முறையில் தடை செய்யும் அந்த இயற்கையின் கூத்துக்கள்.வெளியில் நூறுயார் தூரத்தில் இருக்கும் மாட்டு கொட்டகைக்கு போகா முடியாமால் வீட்டுக்குள்ளேயே அங்கும் இங்குமாக மைல் கணக்கில் நடந்து இருப்பா.அவவே பிரசவ வலியால் துடிப்பது போல் துடித்து கொண்டிருந்தா அந்த கன்றை ஈன முனையும் பசுவை போல.

 அவவுக்கு தெரியாத பிரவச வலியா என்ன? அதுவும் அவவுடைய காலத்தில் பிரவசம் செத்து உயிர்ப்பது மாதிரி ..வாழ்வே நிச்சயமில்லாத மாதிரி....ஏன் எங்கள் காலத்தில் கூட ஆஸ்பத்திரி கொண்டு போகமால் தண்ணீர் குடம் உடைந்து வீட்டிலோ வழியிலோ நடப்பது சில தருணத்தில் அபத்தமாக முடிந்து விடுவதுண்டு.தங்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப பிரவசத்துக்கு ஏற்பாடுகளை முன் கூட்டி செய்வதண்டு .சிலர் பக்கத்திலுள்ள பட்டினசபையோ நகரசபையோ நடத்தும் தாதி ஆஸ்பத்திரிகளே கதியாக இருப்பார்கள் .சிலர் கொஞ்ச தூரம் என்றாலும் பரவாயில்லை அரச ஆஸ்பத்திரகளுக்கு என்று போவார்கள் தங்கள் பண தகுதிக்கு மீறி பிரசவ்ம இனிதே நடந்தாக வேணும் என்ற நோக்கில் தனியார் மருத்துவனைகளுக்கு போவார்ளும் உண்டு. வடமராட்சி பகுதிகளில் இருந்து கூட மூளாய் தெல்லிபழை இணுவில் என்று செல்வோர் உண்டு . 

 இயற்கையின் கூத்துகள் யாவற்றுக்கும் எதிர்வினையாற்றி கொண்டு நனைந்து வடிந்து கொண்டிருந்த சாக்கை முக்காடிட்டு கொண்டு நூர்ந்த கை விளக்குயுடன் மாட்டு கொட்டு கொட்டகை அடைந்த பொழுது எல்லாம் நடந்து முடிந்து விட்ட அறிகுறி தென்பட்டது. அங்கு வெள்ளம் உட்புகுந்த நிலமை வேறை .நனைந்த நெருப்பட்டியுடன் போரடி ஒருவாறு வீசும் காற்றை எதிர்த்து கைவிளக்கு ஒளிர்ந்த பொழுது அந்த பசு அந்த கன்றை தன்னால் ஏலமட்டும் காப்பாற்றி கொண்டிருந்தது அவவுக்கு தெரிந்தது.

  அடுத்த நாள் அப்பம்மாவுக்கு சொன்னோம் யேசு பிறந்த நேரத்தில் பிறந்தமையால் யேசும்மா வையணை என்று கூறினோம் .ஏனோ விருப்பமில்லமால் ஓம் என்று தலையாட்டினா..அவ்வுக்கு யேசும்மா என்றது வாயில் வரமால் கொஞ்ச காலம் ஏசம்மா என்று அழைத்தா ...தடாலடியா தான் வைக்கிறது பெயர் என்று பொன்னி என்று மாற்றி விட்டா ..அதுவும் அப்படி கூப்பிட்டால் தான் எதிர் வினையாற்றும் திரும்பி பார்க்கும் . அதுவும் அப்பம்மாவின் கனிவிலும் பராமரிப்பிலும் விரைவில் தள தளவன வளர்ந்து விட்டது.

 ஒருநாள் தான் இப்படிதான் அது அழுது கொண்டிருந்தது. இப்பவும் அப்பம்மாவின் முகத்தில் பரபரப்பு தெரிந்தது. என்னத்துக்கு அழுகுது ஏதும் வருத்தமேணை என்று கேட்க 

 சும்மா போடா ...அதுக்கு அழுகுதடா ..தூ வுக்கு விடணும் ..உனக்கு விளங்கதாடா என்றா 

 எங்களுக்கு விளங்கும் ..நாங்கள் .சொன்னால் ..அழுதால் ..ஏதும் நடக்குமே

 மாட்டுக்கு ஒரு நீதி... மனிசனுக்கு ஒரு நீதியே ,

,என்ன மாதிரியான அமைப்பில் வாழ்ந்து இருக்கிறோம்

 

http://sinnakuddy.blogspot.co.uk/2013/12/blog-post.html

Edited by sinnakuddy

  • கருத்துக்கள உறவுகள்

கதை, யாழ்ப்பாணத்தில் ஆடு, மாடு, நாய் போன்ற வளர்ப்புப் பிராணிகளை, வாடா, போடா என்று உரிமையாக அழைப்பதை நினைவூட்டுகின்றது!

 

அவர்களுக்கும் அந்த வளர்ப்புப் பிராணிகளுக்கும் இடையிலிருந்த புரிந்துணர்வு மிகவும் நெருக்கமானது!

 

மற்றது சின்னக்குட்டியர், நீங்கள் உங்கட பிரச்சனைகளைச் சொல்லி அழுத 'இடம்' பிழை!

 

பாஷையூர் அந்தோனியார் கோவில், துர்க்கையம்மன் கோவில் போன்ற இடங்களில், அழுது பார்த்திருக்கலாம்! :lol:

 

யாழில் உங்கள் கதைகளைக் காண்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றது! :icon_idea:

  • தொடங்கியவர்

வணக்கம் புங்கை ...நன்றி கருத்து கூறியமைக்கு

 

அந்தோனியோர் கோயிலை பற்றி தெரியாது ...அந்த காலம் துர்க்கை அம்மன் கோவிலுக்கு அதிகமாக ஒன்லி கேர்ல்ள்ஸ் மட்டும் அனுமதி என்று நினைக்கிறன் ..மற்றவை போனால் கேலி பண்ணுவினம்

 

இந்த ஜெனரசனுக்கு புலம் பெயர்ந்த நாட்டில் இருக்கும் ஒரு கோயில் திருவிழாவுக்கு போனால் ஸ்பொட்டிலேயே உடனடி நிவாரணம் கிடக்கும் என்று சொல்லுறாங்கள் உண்மையே ..

 

சிறுகதை அது இது என்று சீரியசாக எழுதுறதென்றால்  நல்லாய் இருக்கோணும்  நிறைவாக இருக்கோணும் சரியாக இருக்கோணும் என்று பயந்து பயந்து எழுதோணும் ..அதாலை எழதிறதை கூட ஒத்தி போடுவம்  அல்லது எழுதாமாலே விட்டு விடுவம்

 

இப்படியான பத்தி எழுத்துக்கள் ...மனதில் தோன்றுதை ஒரு பயமில்லாமால் உடனடியாக எழுதுலாம் ..அது தான் ஒரு மனதுக்கு நிறைவாகவும் சுகமாகவும் இருக்கிறது ...இனிமேல் இப்படியான பத்தி எழுத்துக்கள் தான் எழதோணும் என்று யோசித்து இருக்கிறன் ..இதனால்  அடிக்கடி எழுதுவன் என்று நினைக்கிறன்  ...நன்றி புங்கை 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தக் கதையை தங்கள் முகப்புத்தகத்திலும் படித்தேன் அண்ணா.

நன்று, வாழ்த்துக்கள் அண்ணா, தொடர்ந்திருங்கள் .. :)

  • தொடங்கியவர்

நன்றி ஜீவா

 

  • கருத்துக்கள உறவுகள்

அதுக்கு அழுகுதடா ..தூ வுக்கு விடணும் ..உனக்கு விளங்கதாடா என்றா 

 எங்களுக்கு விளங்கும் ..நாங்கள் .சொன்னால் ..அழுதால் ..ஏதும் நடக்குமே

 மாட்டுக்கு ஒரு நீதி... மனிசனுக்கு ஒரு நீதியே ,

,என்ன மாதிரியான அமைப்பில் வாழ்ந்து இருக்கிறோம்

 

 

வணக்கம் சின்னக்குட்டியர்

கனகாலத்துக்கு  பின்னர்???

 

கதை படித்தேன்

அருமை

சில  நினைவுகளை  மீட்டிச்சென்றுவிட்டது.....

 

எனக்கு 21 வயதிருக்கும் போது

மாமாவீட்டுக்கு  இடைக்கிடை போவேன்.

ஒரு நாள் அம்மா  சொன்னார்

அப்பா   சொன்னவர்

என்ன  மாமா  வீட்டுக்கு அடிக்கடி போறார்

கண்டித்து வை  என்று.

திருப்பி  அம்மாவை  ஒரு கேள்வி  கேட்டேன்

அப்பா உன்னைக்கட்டும்   போது  அவருக்கு எத்தனை  வயதண என்று

அவர் சொன்னார்  21  என்று

உடனே  நான் சொன்னேன்

இப்ப  எனக்கும் 21 தானெண என.

அதன் பின்னர் இருவரும் அதைப்பற்றி  ஒன்றும் கேட்பதில்லை. :D

  • தொடங்கியவர்

வணக்கம் விசுகு ...இந்த பதிவை ஒட்டி உங்கள் கதையையும் கூறி மெருகூட்டினதுக்கு நன்றிகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

மாட்டைக் கட்டிப் போட்ட மாதிரி சின்னக்குட்டியரையும் கட்டிப் போட்டிருந்தார்களா! அவிட்டு விட்ட மாடு மாதிரி வேலிப் பொட்டுக்குள்ளால பாய்ந்திருக்கவேண்டாம்?! :icon_mrgreen: 

ஆடு மாடு வளர்த்ததால் அவையின்ரை அருமை பெருமை ஓரளவு எனக்கும் தெரியும். இந்த வருடம் ஊருக்குப் போனபோது ஆடு, மாடுகளை வளர்ப்பதையே பலர் கைவிட்டதைக் காணக்கூடியதாக இருந்தது. :(

  • தொடங்கியவர்

ச்சாய் கிருபன் ...வேலி பொட்டுக்களாலே போய்  எல்லாம் பழக்கமில்லை ..வேணும் என்றால் வேலி பாய்ந்த கதை சொல்லலாம். :lol: .. 

 

சின்னகுட்டியர்   உயரம் பாய்தல் விளையாட்டு போட்டி மூட்டம் வேலி பாய்ச்சல் முறையில் தான் செய்யறவராக்கும். :)

 

(பி.கு ; உயரம் பாய்தல் பல முறைகளில் செய்யலாம்)

 

 

எங்களுக்கு விளங்கும் ..நாங்கள் .சொன்னால் ..அழுதால் ..ஏதும் நடக்குமே


 மாட்டுக்கு ஒரு நீதி... மனிசனுக்கு ஒரு நீதியே ,


,என்ன மாதிரியான அமைப்பில் வாழ்ந்து இருக்கிறோம்  ///  நீண்ட காலத்தின் பின்பு ஏசம்மாவின் பிறப்பு மூலம் சமூக நீதியை தொட்டிருக்கின்றீர்கள் . ஆனாலும் எமது சமூகம் நாம்பனை ஒரு பார்வையிலும் , பசுவை ஒரு பார்வையிலும் இன்றும் தான் வைத்திருக்கின்றது . அதுவும் புலம்பெயெர்ந்த நாம்பனுகள் சொல்லி வேலையில்லை . படைப்புக்குப் பாராட்டுக்கள் .   உங்களை அடிக்கடி பார்க்கவேண்டும் என்பதே எனது விருப்பம் சின்னக்குட்டியர் .

  • தொடங்கியவர்

பதிவை பார்த்து கருத்து கூறியதுக்கு கோமகனுக்கு நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் உங்கள் படைப்புக்களை யாழில் தந்தமைக்கு நன்றிகள்.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன சின்னக்குட்டியர் கனகாலத்துக்குப்பிறகு!!!!......கண்டதில் சந்தோசம்....நல்ல கதையோடை திரும்பி வந்திருக்கிறியள்.. :)

  • தொடங்கியவர்

புத்தன், குமாராசாமியர்  நன்றியுங்கோ :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.