Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என் கதை சொல்லும் நேரமிது..! (இசையும் கதையும்) சின்னத் தொடர்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ரெலிபோன் மணி அடித்தது.. அவளாகத் தான் இருக்கும்.. என்ற நினைப்பில் போனைத் எடுத்தேன்.. தொட்டேன்..  அமுக்கினேன்.. ஏதோ அவளை நேரில்.. தொடுவது போல எல்லாம்..மெதுவாக.... நிதானமாக நடந்தது. ஆம் அது அவளே தான்...
 
 
ஹலோ... என்றேன்.. பவுத்திரமாக. மறுமுனையில்...
 
 
எப்படி இருக்கீங்க.. என்றவள் என்னிடம் இருந்து.. பதிலை எதிர்பார்க்க முதலே...நீங்க விரும்பியது போல.. இன்றைக்கு சந்திக்கலாம்... இன்றைக்கு ஏமாற்றமாட்டன். சொல்லிற இடத்த வாங்க... என்றாள் அவசரப்பட்டவளாக. அதனைக் கேட்டு.. அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சியில்.. திகைத்துப் போய் நான் போனோடு நிற்க.. சிந்திக்க கால அவகாசம் தராமல்.... நவிக்கேற்றறை மூளையில் பதித்தவள் போல.. சந்திக்கும் இடத்திற்கும் வழியும் சொல்லிக் கொண்டே போனால்..... கெதியா வாங்க... என்று கட்டளையும் இட்டுக்கொண்டாள்...!
 
ஆமாங்க. வந்திடுறேங்க. அவள் அழைத்த இடத்திற்கு போகத் தேவையான நேரத்தை கணப் பொழுதில்.. கணக்குப் பண்ணிச் சொல்லி அமைதியாக.. அனுமதியும் பெற்றேன். இறுதியில்.. வாங்க சந்திப்பம்.. என்று சொல்லி.. மகிழ்ச்சியாகவே போனையும் கட் செய்தாள்.
 
இப்படி நேரிடையாக.. முன்பின் காணாத ஒருத்தியை..  தேடிச் செல்வது.. முதல் அனுபவமாகினும்.. சேதி கேட்ட..அடுத்த வினாடி.. என் உடல் எப்படி உடைகள் மாற்றியது என்று தெரியவில்லை. கைகள் எப்படி வீட்டுச் சாவியை எடுத்தது என்று தெரியவில்லை. எல்லாம்.. தோழியை நேரிடையாகக் காணும்.. நினைப்பில்.. தானா நடந்து முடிந்திருந்தது. கால்கள் நடையை கட்ட... மூளை சிந்தனை இன்றியே வழிகாட்டியது. வழமையாக காக்க வைக்கும் பேரூந்துத் தடம் அது. ஆனால்.. அன்றென்று போக வேண்டிய பேரூந்தும் எனக்காக காத்திருப்பது போல காத்திருந்தது. தொத்தி ஏறி அவள் இடம் சேர்ந்தேன்.
 
அழகான புதிய கட்டட்டத்தில்.. பல நூறு பேர் கூடி இருந்த அந்த மண்டபத்தில்... அவள் சொன்ன 
இடத்தில்.அவளைத் தேடியது கண். இணையம் வழி அவள் காட்டிய படத்தில் பார்த்த முகம் மட்டுமே ஞாபகத்தில். அதனை வைச்சு ஆள் அடையாளம் தேடியது.. ஆனால் கால்கள் திசைமாறவில்லை. நேரடியாக போய் அவள் முன் நின்றது.
 
 
ஹலோ என்றேன்.. அவளும் பரீட்சயமானவள் போல.. பதிலுக்கு.. ஹலோ சொல்லி இருக்கச் சொன்னாள். அவளின் முன்னாள் கதிரையில் இருந்த என்னை.. உற்றுப் பார்த்ததும்.. தலையை குனிந்து தனக்குள் சிரித்தும் கொண்டாள். "என்ர பேச்சை நம்பி வந்திருக்கிறான்.. என்ன பாடுபடப் போறானோ என்று  நினைச்சாளோ என்னவோ".. தனக்குள் பலமாகவே புன்னகைத்துக் கொண்டாள். படத்திலும் பார்க்க நேரில் அழகாக.. சிலிம்மாக.. எப்படி அவள் இருக்க வேண்டும் என்று எண்ணி இருந்தேனோ அப்படியே இருந்தாள். புதிய தங்க ஆபரணம் போல.. அந்த மண்டப மின்விளக்குகளின் ஒளி பட்டு.. ஜொலித்தாள். கண்கள் அவளை உச்சி முதல்.. இடை வரை..ஸ்கான் செய்தது. அதற்குக் கீழ் காண முடியவில்லை.. ஏனென்றால் அவள் உட்கார்ந்திருந்தாள். மேசை மறைப்பிட்டிருந்தது.
 
அவளோ.. அப்புறம்.. சொல்லுங்க... என்றாள். நானோ மெளனம் சாதித்துக் கொண்டு கண்களால் அவளைக் கைது செய்து கொண்டிருந்தேன். அந்த மெளனத்தின் வேளையில்.... நான் அவளை ரசிக்க அவளோ.."சந்திக்க ஆசைப்பட்டீங்கல்ல..சந்திட்டீங்கல்ல. அப்ப நடையை கட்டுங்க என்றாள்.. சிரித்த வாறே". 
 
அவள் அப்படிச் சொன்னதும்.. முதல் அனுபவம் என்பதால்.. உண்மையாகத்தான் சொல்லுறாளா.. என்று ஒரு கணம் கலக்கம் எழுந்தாலும்.... இருக்காது என்று மனதுக்குள் தேற்றிக் கொண்டு.. ஆமா.. இந்த வேளைக்காக எத்தனை மாதங்கள் காத்திருந்திருப்பேன். எத்தனை ஆசைகள்.. ஏக்கங்கள்.. 
ஏமாற்றங்கள் கடந்து வந்திருப்பேன். சந்தித்ததும் நடையைகட்டுவேன்னா நினைக்கிறீங்க.. என்று மனசுக்குள் எண்ணிக் கொண்டு.. அவள் அனுமதி பெற்று அருகில் இருந்த காப்பிக் கடைக்குச் சென்று காப்பி ஓடர் செய்தேன்.
 
காப்பி மட்டுமன்றி.. பிற சிற்றுண்டி..உணவு வகைகளையும்.. தெரிவு செய்ய.. அதனை அவதானித்தவள் தானாக.. எழுந்து வந்து அருகில் நின்று.. தெரிந்தும்.. என்ன வாங்கிறீங்க என்றாள். காப்பி என்றேன்.  ஆனால் என் மூளை அவள் கேள்வியை கவனிக்கவில்லை. மாறாக.. அவளின் அருகாமையை ரசித்தது. அவளின் உயரம் பார்த்தது. அவளை என்னோடு பொருத்திப் பார்த்தது. அது தன்பாட்டிற்கு என்னென்னவோ எல்லாம் சிந்தனை செய்தது. ஆனால் தப்பா மட்டும் சிந்திக்கல்ல. சிந்திக்கவும் தோனேல்ல.
 
அப்ப சரி.. எனக்கு ஒரு ஓசி காப்பி வரும் என்றீங்க. மிகவும் இயல்பாக சிரித்தபடி சொன்னாள். வெளியில் இருந்து வந்த காற்றில் பறந்த அவளின் ஆடையின் ஒரு பகுதி என் கைகளில் தொட.. உள்ளூர மின்சாரப் 
பொறியாக உணர்வு ஓடியது. அது என்னவள் ஆடை என்ற உணர்வோடு அந்த ஆடையின் சுத்தம் சுகாதாரம் எதுவும் பார்க்காமல்.. மனசு.. சொந்தம் கொண்டாடியது...
 
 
மிகுதி அப்புறம்....
 
(பகுதி கற்பனை.)  :lol:  :) 

 

Edited by nedukkalapoovan

  • Replies 62
  • Views 6.5k
  • Created
  • Last Reply

நெடுக்ஸ் அண்ணா மாட்டியாச்சா? :lol:

 

உங்களை கவர்ந்த அந்த கள்ளி பற்றி மேலும் அறிய ஆவல்.. :) தொடருங்கள். :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கதையை முற்றிலுமா படிச்சிட்டு.. தான் கேள்வி கேட்கனும். ஆரம்பத்திலேயே கேட்டா பதில் சொல்வது கடினம். ஏன்னா.. கதை அப்படி.  :)  :lol:

இப்ப சொல்வது எல்லாம் நிஜமா அண்ணே :D

 

அருமை தொடருங்கோ . :)

 

அந்த ஆடையின் சுத்தம் சுகாதாரம் எதுவும் பார்க்காமல்.. மனசு.. சொந்தம் கொண்டாடியது...

 

 

நெடுக்ஸா இப்படி அனுபவித்தாற்போல் எழுதியது என்ற சந்தேகத்தை, நெடுக்ஸ்தான் எழுதியது எனத் தீர்த்தது மேற்படி வசனம்.  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் அண்ணா மாட்டியாச்சா? :lol:

இவரா மாட்டிக்கிட்டார் :unsure: அவுங்க தாங்களாவே வந்து மாட்டிக்கிட்டாங்க!!! :D :D

 

 

உங்களை கவர்ந்த அந்த கள்ளி பற்றி மேலும் அறிய ஆவல்..  :) தொடருங்கள். :)

ஏன் மேடம் அவுங்களை கள்ளீங்கிறீங்க, இவரு உள்ளங்கவர் கள்வனாகக் கூட இருக்கலாம் இல்லீங்களா மேடம்? :D

Edited by யாழ்வாலி

இவரா மாட்டிக்கிட்டார் :unsure: அவுங்க தாங்களாவே வந்து மாட்டிக்கிட்டாங்க!!! :D :D

 

ஏன் மேடம் அவுங்களை கள்ளீங்கிறீங்க, இவரு உள்ளங்கவர் கள்வனாகக் கூட இருக்கலாம் இல்லீங்களா மேடம்? :D

 

அட இவர் யாழில் இருந்ததால் இவரை மட்டும் சொன்னேன். மற்றபடி மாட்டினது 2 பேரும் தான். :) இவர் உள்ளங்கவர்ந்த கள்வனா இருக்கலாம். இல்லைன்னு சொல்லலையே... :)  but இவர் மனதை கவர்ந்ததால் அந்த பெண் (மனம் கவர்ந்த) கள்ளி தானே. :D

நாம இப்பிடி நினைக்க நெடுக்ஸ் அண்ணா கிளைமாக்ஸை மாத்திட போறார். :lol:

 

கதையை முற்றிலுமா படிச்சிட்டு.. தான் கேள்வி கேட்கனும். ஆரம்பத்திலேயே கேட்டா பதில் சொல்வது கடினம். ஏன்னா.. கதை அப்படி.  :)  :lol:

 

நாம சும்மா பகிடிக்கு கதைக்கிறம். பிறகு உண்மையாவே அந்த பொண்ணை பிடிச்சிருந்தாலும் நாங்கள் நக்கலடிப்பம் என நினைச்சு கதையை இடையில் மாத்தி எழுதிறேல்லை. சொல்லிட்டன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஐயஹோ! நெடுக்கரிட யாழ் அக்கவுண்டை யாரோ 'ஹக்" பண்ணி  போட்டாங்கள்! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இறைவா !

 

உன் மாளிகையில் எத்தனையோ மணிவிளக்கு,!

 

ஆனால்,

 

இந்த யாழ்களத்தின் நம்பிக்கையின் ஒளிவிளக்கு !

 

உள்ளமதில் உள்ளவரை, அள்ளித் தரும் நல்லவரை,

 

மெல்ல, மெல்ல விட்டு விட்டு,

 

மேகங்ளுள் புதைந்து விடு! :D

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
ஓடர் கொடுத்த காப்பியும் உணவும் வந்து சேர.. நானும் ஒப்பீடுகளில் இருந்து விலகி..நிஜத்திற்குத் திரும்பி.. முன்னர் இருந்த மேசையை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். ஆனால் அவள் குறுக்கிட்டு.. வாங்க வெளில போய் அந்த பெஞ்சில இருப்பம் என்றாள்.
 
அந்த பெஞ்ச்.. பிரதான விமான நிலையம் ஒன்றின்.. ஓடுதளத்திற்கு அந்தப்புறமாக.. அமைதியாக ஓடிக்கொண்டிருந்த கிளையாற்றின் பக்கம் இருந்தது. இயந்திரப் பறவைகள்.. அடிக்கடி வந்து இறகுவதும்.. ஏறுவதுமாக இருந்தன. அவை மேகக் கூட்டங்களிடையே மறைந்து வந்து தாழ்வதும்.. உயரப் பறந்து மேகக் கூட்டங்களை உரசி மறைவதும்.. அவற்றிற்கு போட்டியாக காவலாக.. இயற்கை அன்னையின் பறவையினங்கள் வானில் வட்டமிட்டு வட்டமிட்டுப் பறப்பதும்.. அருமையான ரசிப்புக்குரிய.. அம்சங்களாக இருந்தன. காதைப் பிளக்கும்..இரைச்சல் ஒன்று அங்கிருந்தது கூட அவளின் அருகிருப்பிலான அந்த ரசிப்பில் தெரியவில்லை.
 
நானும் அவளும்.. வந்து அந்த பெஞ்சில் அமர்ந்தோம். நான் எதிர்பார்க்காத வகையில்.. அவள் சற்று எட்ட அமர்ந்திருந்தாலும்.. தூரமில்லை... அருகில் தான் இருந்தாள். முதல் சந்திப்பிலேயே அவள் தன் நெருக்கத்தைக் காட்ட தயங்கவில்லை. நெருக்கம் ஒரு எல்லைக்குள் என்றதையும் அவள் செயலால் சொல்லிக் கொண்டே இருந்தால். அவளை விட நான்.. காதலோ.. அன்போ.. ஒழுக்கத்துக்கு அப்புறம் என்ற கொள்கையில்.. அதனையே காத்தேன். அவளிடமும் அது இருந்திருக்க வேண்டும். 
 
 
மீண்டும்.. ஒரு மிடர் காப்பியை குடித்துவிட்டு வாய்கொட்டிச் சிரித்தாள். என்னாச்சு என்றேன்...??! எவ்வளவு துணிச்சல் எங்கள் இருவருக்கும். யாருக்குமே தெரியாத ஒரு சந்திப்பு. வீட்டில் நண்பியை சந்திக்கப் போறன் என்று சொல்லிட்டு வந்தன். வந்ததும் இல்லாமல்.. சோடியாக குந்தி வேற இருக்கிறம். இதனை யாரேனும் கண்டு வீட்டில் சொன்னால்...??! என்று கேள்வியைத் தொடுத்தவள்.. "சொல்லட்டுமேன்.. அப்புறம் பார்த்துக்கலாம்".. என்று அவளே பதிலும் தந்து தெம்பூட்டினாள். ஆனால்.. எனக்கு அந்தப் பயம் எதுவுமில்லை. காரணம்.. அவளுடனான நட்புப் பற்றி.. ஏலவே வீட்டுக்கு சாடைமாடையாகச் சொல்லி இருந்தேன். நான் அவளை சந்தித்ததில்லை என்பதும் அவர்களுக்குத் தெரியும். அவள் வேணாம் என்ற போதும்.. அவளின் படத்தை வீட்டுக்கு காட்டும் சூழல் ஒன்று எழுந்த போது காட்டி இருக்கிறேன். அவளுக்கும் அதைச் சொல்லி இருந்தேன். அந்த துணிவு என்னுள். ஆனால்.. அவளிடம் அது இருக்கவில்லை. அவளிடம் வீடு பற்றிய பயம் இருந்தது. அதனால் அவளின் ரசிப்புக்கு காலம் கட்டுப்பாடு போட்டிருந்தது. ஆனால்.. எனக்கோ அது இல்லை. 
 
அங்கு எமக்கிடையே.. நீண்ட பேச்சு இருக்கவில்லை. நீல வெளியில்.. அழகான முகில் கோலங்களை அவதானித்தபடி காப்பியை சுவைப்பதில் தான் கூடிய கவனமாக.. இருந்தோம். அவள் மெல்ல எழுந்து இன்னும்.. கிட்ட வந்து அமர்ந்து கொண்டாள். ஆடைகள் என்னில் தொட்டுப் பேசும் அளவிற்கு அந்த நெருக்கம். அந்த நெருக்கத்தின் மத்தியில்.. அவளுக்கே உரித்தான.. அந்த வாசம் மூக்கைத் துளைத்தது. சட்டென்று திரும்பி அவள் கண்களைப் பார்த்தேன். கருமணிகள்.. இடதும் வலதுமாக..சிறுகச் சிறுக ஆடி.. கதை பேசின. அவளின் கண்கள் பிரகாசமாக இருந்தன. முகம் மலர்ச்சியில் ஜொலித்தது. அவளின் ரோஜாப்பூப் போன்ற கன்னங்கள் சிவப்பாகி இரத்த ஓட்டத்தை அதிகம் வாங்கி இருந்தன. அவளின் மனதில் மகிழ்ச்சி ஒன்றிருப்பதை அது காட்டியது. நான் இந்த ரசிப்பில் இருக்க.. அவள் கண்களை நீல வானத்தின் மீது ஓட விட்டாள். மேகக் கூட்டங்களில் ஒன்றைக் காட்டி அதில் என்ன உருவம் இருக்கு என்று சொல்லுங்க என்றாள்... என் கவனத்தை அவள் கண்களில் இருந்து திருப்ப. நானும் பதில் சொல்ல.. அதே.. தான் என்று.. ஒத்திசைந்தாள். இப்படி ரசிப்புகளின் எல்லை.. சுற்றுச் சூழலை ஒட்டி இருந்தது. ஒருவரை ஒருவர் அதிகம்.. ரசிக்கும் எண்ணம் இல்லாத முதிர்ச்சி இருவரிடத்தும் ஏதோ எழுந்திருந்து. அதற்குக் காரணமும் உண்டு. அவளை சந்திக்க முதல்.. அவளோடு இணையத்தில் கடலை போட்டது.. கொஞ்ச நெஞ்சம் அல்ல. கிட்டத்தட்ட மனதின் ஆசைகளை எல்லாம் இருவரும் பகிர்ந்து கொண்டதும் அல்லாமல்.. ஒலி வடிவிலும் கலந்துரையாடி இருக்கிறோம். எப்போதும் வார்த்தை அளவில் கூட.. எல்லை மீறாத அவள்... என்னிடத்திலும் கேட்டுப் பெறாத அந்த ஒழுக்கம் இருந்ததை.. அதிகம் விரும்பி இருந்தாள். அதனால் தான் அவளுக்கு என் மீது.. அப்படி ஒரு நம்பிக்கை. 
 
 
மணித்துளிகள்.. ஓடி மறைந்தன. இரண்டு மணி நேரம்... கடந்ததே தெரியவில்லை. வாங்க போவம்.. என்றாள். எங்கே என்றேன். வீட்ட தான்... என்று இழுத்தாள். உங்க கூட இருப்பது சந்தோசம் ஆனாலும் வீட்ட போகனுமே தேடப் போகினம் என்றாள். அவளின் ஒளிவுமறைவற்ற.. அந்த நேர்த்தி எனக்குப் பிடித்திருந்தது. சரி போவம் என்று எழுந்து நடக்க ஆரம்பித்தேன். நடக்கும் போது.. அவள் மிக அருகில் நடந்தாள். ஆனால் அது அப்போது சாதாரணமாகி இருந்தது. பல முறை பார்த்துப் பழகின உணர்வு போல.. சகஜமாகி இருந்தது. அவளும் எட்ட நட என்று சொல்லவில்லை. ஆனாலும் நான் அதிகம் நெருக்கம் காண்பிக்கவில்லை. பிரதான வீதியை அடைந்ததும்.. திடீர் என்று.. நின்றாள். டிஸ்ரன்ஸ் என்றாள். விட்டா நல்லா ஒட்டுவீங்க போல இருக்கு என்றாள்... ஆனாலும் முகத்தில் சிரிப்பு. எதுக்கு பொல்லாப்பு என்றுவிட்டு நான் தொடர்ந்து கொஞ்சம் டிஸ்ரன்ஸ்.. வைச்சுக் கொண்டேன்.
 
 
நாங்கள் இருவரும் போக வேண்டிய வழித்தடங்கள் வெவ்வேறானவை. இருந்தாலும்.. அவள் எனது வழித்தடத்தில் வரப் போவதாகச் சொன்னாள். அதிக நேரம் காத்திருக்கவில்லை. சரியான நாளிகைக்கு பேரூந்தும் வந்து சேர நான் போய் தனி ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டேன். ஏற்கனவே டிஸ்ரன்ஸ்.. என்று அவள் சுட்டிக்காட்டியது.. மனதில் இருந்தது. அவளும் இன்னொரு இருக்கையில் அமர்ந்து கொண்டால். இருந்தாலும்.. அதிக நேரமில்லை. நான் அவளைப் பார்த்தேன். சிரித்துக் கொண்டு எழுந்து வந்து அருகில் இருந்தாள். கண்ணாடிப் பக்கம் இருக்கப் போறன்.. இடம் விடுங்கோ என்றாள்.. தனக்கே உரிய அதிகாரத்தோடு. எழுந்து இடம்விட்டேன். வந்து இருங்க என்று தன் அருகைக் காட்டினாள். நான் எதுக்கும் முட்டாமல் இருப்பம் என்று முயல.. சிரித்துக் கொண்டே..முட்டலாம். பிரச்சனை இல்லை என்றாள். கொஞ்ச நேர அமைதி. எனக்கு அது புது அனுபவம் வேற. கொஞ்சம் பதட்டமும்... கூட. 
 
திடீர் என்று தோளில் சாயட்டா என்றாள். நான் அதனை சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஆம் என்றேன்... எந்த உள்நோக்கமும் இன்றி. என்னவள் பாவம்.. தானே என்ற ஒரு எண்ணம் மட்டுமே மனதெங்கும் இருந்தது. ஆனால் அந்தக் கணத்தில்.. நான் அவளுக்கு காப்பரணாகி இருக்கிறேன் என்ற ஒரு இறுமாப்பு மனதில். கொஞ்சம் சாய்ந்தாள். சரி பறுவாயில்லை.. பிறகு ஒரு நாளைக்கு சாய்வம்.. என்று தனக்குள் ஏதோ நினைத்துக் கொண்டவளாய் தன்னை சுதாகரித்துக் கொண்டு.. தலையை நிமிர்த்தி என்னை பார்த்துச் சிரித்தாள். என்னால் அந்தச் சிரிப்பினைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அதேவேளை எதையும் குறையாகவும் உணர முடியவில்லை..! அவளை நான் புரிய முடியாத பல தருணங்களில்.. அதுவும் ஒன்றாகி நின்றது....!
 
 
மிகுதி அப்புறம்..
 
(பகுதி கற்பனை.) :)  :lol:

Edited by nedukkalapoovan

சும்மா வீம்புக்கு பெண்களுக்கெதிராக எழுதினாலும் பெண் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என நீங்கள் கற்பனை பண்ணி வைத்திருக்கும் பெண் பற்றி முன்னர் யாழில் எழுதியிருந்தீர்கள். அப்பொழுதே உங்கள் ரசனையை புரிந்து கொண்டோம். :) அத்துடன் இயற்கை மேலுள்ள உங்கள் காதலை யாரும் சொல்லி தெரியவேண்டியதில்லை. :) இரண்டும் கலந்து எழுதப்படும் வர்ணனையுடன் கூடிய கதை மிக அழகு. தொடருங்கள். :)

கதைகள், கவிதைகள் வாசிக்கும் பொறுமை இல்லாததால் அண்மைக்காலமாக பெரிதாக எதையும் வாசித்ததில்லை. நீங்கள் எழுதுகிறீர்கள் என்றதும் அப்படி என்ன தான் எழுதுகிறீர்கள் என்று பார்க்க உள்நுழைந்தேன். :D நன்றாக செல்கிறது. முடிவு எதுவாக இருந்தாலும் இப்படியே அழகாக தொடருங்கள். :)

 

உங்கள் வீம்பு பிடிவாதத்தை இறுதியில் காட்டப்போய் பெண்களை கேவலப்படுத்தி எழுதி கதையையும் கேவலப்படுத்தி விடாதீர்கள் என்பது முன்கூட்டியே எனது வேண்டுகோள். :wub::rolleyes::)

கதை நன்றாக உள்ளது. தொடருங்கள்!!

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் முத்திரையை அழித்து விடாதீர்கள் நெடுக்ஸ்! :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் முத்திரையை அழித்து விடாதீர்கள் நெடுக்ஸ்! :)

 

கவலைப்படாதீங்க சுவி அண்ணா. கதையின் நாயகன் "நான்" இப்பவும் கன்னிப் பையன் தான்.  :lol:

மேலும் கருத்துச் சொன்ன.. ஊக்கம் தந்த.. உறவுகளான..  துளசி.. அஞ்சரன்.. சோழியான் அண்ணா..வாலி.. புங்கையூரன் அண்ணா..ஜஸ்ரின் அண்ணா... சுவி அண்ணா.. எல்லோருக்கும் நன்றி. :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் வீம்பு பிடிவாதத்தை இறுதியில் காட்டப்போய் பெண்களை கேவலப்படுத்தி எழுதி கதையையும் கேவலப்படுத்தி விடாதீர்கள் என்பது முன்கூட்டியே எனது வேண்டுகோள். :wub::rolleyes::)

நன்றி துளசி... தங்களின் கருத்துக்கு. "நான்" நானாகவே இருப்பான். அவனுக்கு என்று கொள்கை இருக்குது. அதன் வழி போய்க்கிட்டே இருப்பான். போற வழியில.. சந்திக்கிற நிகழ்வுகளுக்காக எல்லாம் அவன் தன்னை மாற்றிக் கொள்பவனாக இருந்தால்... அவனுக்கு நாயகன் தகுதி வழங்க முடியாது எல்லோ.  :)  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

//

"டமா...ர்ர்ர்ர்...."

பாத்திரம் உருளும் சத்தம் கேட்டது. தொப்பலாக நனைந்திருந்தேன்.. கண்களைக் கசக்கிவிட்டுப் பார்த்தால் அருகில் நண்பன் ஈ குருவி..

"ஏய் தடியா.. காலங்கார்த்தாலை என்ன கனவு வேண்டிக்கிடக்கு??!!" :(

//

கதை நல்லாயிருக்கு நெடுக்ஸ்.. :D அது இருக்கட்டும்.. முன்னம் கண்களால் கயல் மீனை கைது செய்தீங்களே.. பிறகு என்னாச்சு? Live release பண்ணிட்டீங்களா? :blink::D

நன்றி துளசி... தங்களின் கருத்துக்கு. "நான்" நானாகவே இருப்பான். அவனுக்கு என்று கொள்கை இருக்குது. அதன் வழி போய்க்கிட்டே இருப்பான். போற வழியில.. சந்திக்கிற நிகழ்வுகளுக்காக எல்லாம் அவன் தன்னை மாற்றிக் கொள்பவனாக இருந்தால்... அவனுக்கு நாயகன் தகுதி வழங்க முடியாது எல்லோ.  :)  :lol:

 

உங்களை மாற சொல்லி சொல்லேல்லை. :) ஆனால் கதையில் வீம்புக்கு பொண்ணுங்களுக்கு எதிரான கருத்துக்களை வலிந்து திணிக்க வேண்டாம் என்பதே என் வேண்டுகோள். :) சரி, சரி. எழுதி முடியுங்கோ. பிறகு பாப்பம். :)

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
முதற் சந்திப்பின் நினைவுகளோடு.. மீண்டும் அன்று இரவு.. இணையத்தில் சந்தித்தோம். அன்று.. இணையத் தூதில் அவள் கேட்ட முதல் கேள்வி.. "என்னைப் பிடிச்சிருக்கா" என்பது தான். நான் எந்தத் தயக்குமும் இன்றி நேரிடையாக.. நல்லா இருக்கீங்க என்றேன். பதிலுக்கு அவளும் "உங்களைப் பிடிச்சிருக்கு" என்றாள். அத்தோடு இணையத் தூதின் வழி செல்லக் குட்டும் தந்தாள். அவளிடம் செல்லக் குட்டுக்கள் நிறைய வாங்கி இருக்கிறேன். அதில் ஒரு தனி சுகமே இருக்கும்.
 
 
அடுத்த நாள்.. மீண்டும் சந்திப்பு. ஆனால் அது நான் எதிர்பாராதது. அவள் என்னை எனது யுனிக்கே வர அழைத்திருந்தாள். நானும் விழுந்தடித்து அங்கு சென்ற போதுதான் சங்கதி தெரிந்தது. அவள் தனக்குக் கிடைத்த யுனியின் அனுமதியை மாற்றி எடுத்துக் கொண்டு.. எனது யுனிக்கு மாறி வந்திருப்பது. அன்று.. அங்கு தன்னை மாணவியாகப் பதிவு செய்ய வந்திருந்தாள். உங்களுக்காகத் தான் இஞ்ச வந்திருக்கிறன். "காலைல விடிய வெள்ளனவா எழும்பி.. இந்தக் குளிருக்க.. எப்படி வரப் போறனோ தெரியல்ல. இவ்வளவு தூரத்துக்கு யுனியை எடுத்திட்டன். எல்லாம் உங்களுக்காகத்தான்".. என்றாள் மீண்டும் அழுத்தமாக. இதனைக் கேட்ட எனக்கு.. அவள் மீது அன்பும்.. பரிவுமே அதிகம் ஏற்பட்டது. "அதுதான் வந்திட்டீங்கல்ல.. நான் உங்களுக்கு உதவியா இருப்பேன்" என்றேன். "வேண்டாம் ராசா.. உங்க உதவி. இஞ்ச நான் மட்டும் வரல்ல.. எங்கட உறவுக்கார ஆக்களும் படிக்கினம். பார்த்து நடந்துக்கனும்" என்றாள் எச்சரிக்கையோடு. 
 
அவள் தன்னை எங்கள் யுனியில் பதிவு செய்து கொண்டதும்.. தனது பாடத்துறையின் அறிமுக வகுப்புக்குப் போகப் பாவதாகச் சொன்னாள். நான் கூட வரப் போவதாகச் சொல்ல... சரி வாங்கோ என்று கூட்டிக் கொண்டு போனாள். போதானாவறையில்.. தனக்கு அருகில் என்னை அமர வைத்தாள். அவளின் பாடத்துறை வேறு. எனது பாடத்துறை வேறு. இருந்தாலும்.. எனக்காக என் யுனி தேடி வந்தவளுக்கு நன்றிக்கடனாக.. அவளுக்காக அங்கு போய் இருந்தேன். அறிமுக நிகழ்வுக்காக வந்திருந்த பேராசிரியர் மாணவர்களை சுயஅறிமுகம் செய்யச் சொல்லிக் கேட்க.. எனக்கு பிடிபட்டிட்டுவமோ என்ற பயம் உள்ளூர ஆக்கிரமித்திருந்தாலும்.. அதனை வெளிக்காட்டாமல்.. நானும் அங்கிருந்த மற்றவர்களைப் போலவே.. என்னை அறிமுகம் செய்து கொண்டேன். அவளுக்கோ சிரிப்பு தாங்க முடியவில்லை. "அப்பவே சொன்னனான்.. என்னை வாசலில விட்டிட்டுப் போங்கோ என்று. கேட்டீங்களா".. என்றாள்.. காதுக்குள்.
 
சுயஅறிமுகம்.. அதனைத் தொடர்ந்தான..பாட அறிமுகத்தின் பின் பேராசிரியர் பாடப்பரப்புச் சம்பந்தமாகக் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார். மாணவர்களின் நிலையை அறிந்து கொள்வதற்காக. எனக்கோ.. சம்பந்தப்பட்ட பாடப்பரப்பு பற்றி அதிக அறிவில்லை. ஆனாலும் என்னிடம் கேட்ட கேள்விக்கு சரியான பதில் அளித்தேன். பேராசிரியரை விட அவளே அதனால் அதிகம் மகிழ்ச்சியை வெளிக்காட்டியிருந்தாள். அவளின் முகத்தில் மலர்ந்திருந்த புன்னகையில் இருந்து அந்த மகிழ்ச்சியை என்னால் உணர முடிந்தது. அந்த மகழ்ச்சியில் அவள் முகம் பிரகாசமாக ஒளித்தது. அந்தக் கூட்டத்தில் அவள் எனக்கு ஒளிரும்.. நட்சத்திரமாக பிரகாசித்தாள். 
 
அறிமுக வகுப்பு முடிந்து இருவரும் யுனி சிற்றுண்டிச் சாலைக்கு வந்தோம். அத்தோடு அன்றைய யுனி நிகழ்வுகளும் முடிந்திருந்தன. அதனால் சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு கிளம்பும் நோக்கில்.. சிற்றுண்டிச் சாலையில்... உணவும் மென்பானமும் எடுத்துக் கொள்ள வரிசையில் நின்றோம். அப்போது அந்தக் கன்ரீனில் இருந்த கறுப்பினப் பெண்மணி.. நாங்கள் இருவரும் பொருட்களோடு காசு கொடுக்க வர.. நல்ல அழகான ஜோடி என்று சொன்னதும் இல்லாமல்.. நீ கொடுத்து வைத்தவள்.. அவன் உனக்காக இத்தனை உணவுகளைத் தெரிவு செய்வதைப் பார்த்தேன் என்றாள். அதுமட்டுமல்ல.. அவன் உன்னை கூப்பிட்டு உனக்கு விரும்பியதை எடுக்கச் சொன்னத்தையும் கண்டேன் என்றாள். இவ்வாறு.. அந்தக் கறுப்பின பெண்மணி என்னைப் புகழ்ந்து கொண்டே போனாள். இதனைக் கேட்டவள்.... ரகசியமாக என்ன "கறுப்பிக்கும் உங்க மேல லவ் போல" என்றாள் நக்கலாக.... புன்னகைத்தபடி. 
 
அன்றைய அந்த சிற்றுண்டிச்சாலை அனுபவம்.. அவளுக்கும் புதிசு எனக்கும் புதிசு.. இருவரும் ஒருவருக்கு ஒருவர் உணவு பரிமாறிக்கொள்ளும் தொடக்கத்தின் முதல் நாள் மட்டுமன்றி.. சிறந்த ஜோடியாக.. மூன்றாமவரால்.. நாங்கள் வாழ்த்தப்பட்ட முதல் நாளும் அது தான். அந்த நாள்.. அதுவாக இருந்துவிட்ட மகிழ்ச்சியில்..  இருவரும் நிறைந்த மனதோடு.. பல எதிர்பார்ப்புக்கள் மனங்களில் குவிய.. வீடு நோக்கிப் புறப்பட ஆயத்தமானோம். 
 
 
 
மிகுதி அப்புறம்..
 
(பகுதி கற்பனை)  :lol:  :) 

Edited by nedukkalapoovan

 

அறிமுக நிகழ்வுக்காக வந்திருந்த பேராசிரியர் மாணவர்களை சுயஅறிமுகம் செய்யச் சொல்லிக் கேட்க.. எனக்கு பிடிபட்டிட்டுவமோ என்ற பயம் உள்ளூர ஆக்கிரமித்திருந்தாலும்.. அதனை வெளிக்காட்டாமல்.. நானும் அங்கிருந்த மற்றவர்களைப் போலவே.. என்னை அறிமுகம் செய்து கொண்டேன். அவளுக்கோ சிரிப்பு தாங்க முடியவில்லை. "அப்பவே சொன்னனான்.. என்னை வாசலில விட்டிட்டுப் போங்கோ என்று. கேட்டீங்களா".. என்றாள்.. காதுக்குள்.

 
சுயஅறிமுகம்.. அதனைத் தொடர்ந்தான..பாட அறிமுகத்தின் பின் பேராசிரியர் பாடப்பரப்புச் சம்பந்தமாகக் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார். மாணவர்களின் நிலையை அறிந்து கொள்வதற்காக. எனக்கோ.. சம்பந்தப்பட்ட பாடப்பரப்பு பற்றி அதிக அறிவில்லை. ஆனாலும் என்னிடம் கேட்ட கேள்விக்கு சரியான பதில் அளித்தேன். 

 

:lol: :lol:

 

நல்லவேளை, அந்த பேராசிரியர் அந்த பாடத்துறையை சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கையும் அன்றையதினம் வந்திருந்தோரின் எண்ணிக்கையும் சரியா என எண்ணிப்பார்க்கவில்லை. :D

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:lol: :lol:

 

நல்லவேளை, அந்த பேராசிரியர் அந்த பாடத்துறையை சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கையும் அன்றையதினம் வந்திருந்தோரின் எண்ணிக்கையும் சரியா என எண்ணிப்பார்க்கவில்லை. :D

 

 

Induction day இல்.. சும்மா வாற எல்லாரட்டையும்.. கையொப்பம் வாங்கிறது மட்டும் தான். பெரிசா.. ஒன்றும் செய்யமாட்டார்கள். ஆனால் நாளாந்த lecture என்றால் தெரியவரும். ஏனெனில்.. module register பண்ணின எண்ணிக்கையை attendant register எண்ணிக்கையையோடு ஒப்பிட்டு கண்டுபிடித்திடுவார்கள். ஆனாலும்.. அது ஒரு திரில்லான நிகழ்வு தான்..!  :)  :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
யுனி கன்ரீனில் இருந்து இருவரும்.. வீடு நோக்கிப் புறப்படத் தயாரான வேளையில்.. ஆ.. மறந்து போனன். தங்கச்சி புதுவருசத்துக்கு சேல் போகுதாம்.. உடுப்பு வாங்கிவரச் சொல்லிவிட்டவள். சொப்பிங் போகனும்.. வாறீங்களா என்றாள். சொப்பிங்.. அதுவும் எனக்கென்று மனதால் உணரப்பட்டவளோடு முதன்முதலில்..சொப்பிங் போகக் கசக்குமா என்ன..?! இருந்தாலும்.. அவளோட சொப்பிங் போறது என்பதை இட்டு..உள்ளூர மகிழ்ச்சியில் மிதந்த மனசு அந்த மகிழ்ச்சியை வெளிப்படையாக காட்ட விரும்பவில்லை. கையில் இருந்த.. கடிகாரத்தை பார்த்தேன்.. நேரம் இருக்கு... இப்போதைக்கு வீட்ட தேடமாட்டினம். ஓகே.. போகலேமே என்றேன்.. சற்றுத் தாமதமாக. இருந்தாலும்.. உங்களுக்கு சொப்பிங் வாறதை விட என்னோட பேரூந்தில வாறது தான் ரெம்பப் பிடிக்கும் போல.. என்றாள் என் மனதைப் படித்தவளாய்.
 
சொப்பிங் போறதில இரண்டு நன்மை. ஒன்று அவளோடு சேர்ந்து சொப்பிங் செய்வது. இரண்டாவது சொப்பிங் செனரருக்கு போகும் வழித்தடத்தில் மீண்டும் பேரூந்தில் இருவரும் செல்ல வசதி. திட்டமிட்ட படி.. சொப்பிங் சென்ரர் போக பேரூந்துக்காகக் காத்திருக்க.. பேரூந்தும் வந்தது. அவளை முன்னே விட்டு நான் பின்னே ஏறிக் கொண்டேன். அவள் ஒரு இருக்கையை பிடித்து.. தனக்கு அருகில் எனக்கும் இடம் பிடித்து வைச்சுக் கொண்டு.. தன்னருகில் என்னை இருத்திக் கொண்டாள்.
 
 
நான்.. அவளருகில்.. அவள் மூச்சுக் காற்றை உள்ளிளுக்கக் கூடிய நெருக்கத்தில்... கொஞ்ச நேரம் மெளனமாக இருந்துவிட்டு அவள் முகத்தை உற்று நோக்கினேன். இதனை அவதானித்தவள்.. என்ன வடிவாப் பார்க்கிறீங்க என்றாள். இல்ல உங்க தோடும்.. முகமும் சமனாக பளிச்சிடுகின்றன அதுதான் பார்த்தேன்... என்றேன் சுதாகரித்தபடி.! நல்லாத்தான்.. ஆள் பார்க்கிறீங்க.. அதோட புளுகுறீங்க.. என்றாள். இல்லை.. இல்லை உண்மையைத் தான் சொல்கிறேன் என்று சொல்ல.. ஆஆ.. சொல்ல மறந்திட்டன். உங்கட பிளார்க் பார்த்தேங்க. நல்ல கவிதை எல்லாம் எழுதிப் போட்டிருக்கீங்க. அவற்றை ஏன் தொகுக்கப்படாது என்றால்.. ஆர்வத்தோடு.
 
அது எல்லாம் கவிதையாங்க. சும்மா வெறும் கிறுக்கல் என்றேன் நான் பதிலுக்கு. எல்லாம் இல்லைங்க.. சிலது நல்ல கவிதை.. வேணுன்னா நான் தொகுத்துத் தரட்டா என்றாள் அக்கறையோடு. விரும்பினாச் செய்யுங்க என்றேன். "சொல்லிட்டீங்கல்ல.. அந்தப் பொறுப்பை என்னட்ட விடுங்க.. அப்புறம் பாருங்க" என்றாள்.. நம்பிக்கையோடும்..துணிவோடும். 
 
 
இப்படியே இருவரும்.. கதை பேசிக் கொண்டிருக்க.. இறங்க வேண்டிய இடமும் வந்து சேர்ந்தது. இருவரும் சேர்ந்து சொப்பிங் சென்ரருக்குள் நுழைந்தோம். அவள் விழிகளைச் சுழற்றி ஒரு நோட்டமிட்டுக் கொண்டே.. இருந்தாள். "என்ன அலேட்டாத்தான் இருக்கீங்க போல" என்றேன். பின்ன யாரும் கண்டு வீட்ட போட்டுக் கொடுத்தா.. உங்களுக்கு என்ன.. நானெல்லோ மாட்டுப்பட்டு.... உங்களையும் பார்க்க முடியாமல்.. அவையிட்ட பேச்சும் வாங்கிக்கிட்டு இருக்கனும். இப்ப வீடு இருக்கிற நிலைமையில..  உது எனக்கு அவசியமாங்க... என்றாள் யதார்த்தத்துடன். இதனைக் கேட்ட எனக்கு அவள் மீது நம்பிக்கையும் பரிவும் இருமடங்கானது. 
 
அதே மனதோடு.. அவளோடு சேர்ந்து அவளுக்காக உடுப்புகளை தெரிவு செய்தேன். உங்க தெரிவுகள் எல்லாம்.. நல்லாத்தான் இருக்கு. என்ன.. அப்படியே  பில்லையும் கட்டிட்டீங்கன்னா.. நல்லா இருக்கும் என்றாள்.. சிரித்தபடி. சரி தாங்க நான் பில் கட்டிறேன் என்றேன். ஆனாலும் என்னிடத்தில் அந்தளவுக்கு வங்கி அட்டையில் பணம் இருக்கவில்லை. இருந்தாலும்.. அவள் அதனை உணர்ந்தவளாய்.. நீங்களே படிக்கிறதுக்கு கஸ்டப்படுறீங்க.. இதில எனக்கு பில் கட்டப் போறாராம்.. ஆளைப் பாரு. சும்மா பகிடிக்கு கேட்டேங்க என்றாள்.. எல்லாவற்றையும் புரிந்து கொண்டவளாய்.

மிகுதி அப்புறம்..
 
(பகுதி கற்பனை) :lol:  :) 

Edited by nedukkalapoovan

ம்ம்..... நல்லாய் தான் கதை போகுது தொடருங்கள், வாசிக்க ஆவல்!!

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் தனது மன ஆதங்கங்களையெல்லாம் கொ....ட்ட்ட்டி.. எழுதிற கதை நல்லாத்தானே இருக்கும்??!! :D வாழ்த்துக்கள் நெடுக்ஸ்.. :wub::D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதுக்கும் எட்டத்தை நிண்டு என்ன நடக்குது எண்டு பாப்பம்..... :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.