Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முஸ்லிம்களை அடக்கி ஆள கூட்டமைப்பு நினைக்கவில்லை: ஞா.கிருஸ்ணபிள்ளை

Featured Replies

vellimalai-copy.jpg

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் முஸ்லிம் மக்களை அடக்கி ஆழ நினைக்கவும் இல்லை நினைக்கப் போவதும் இல்லை. தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பாரம்பரியமாக இருந்த உறவினையும், தற்போது இருந்துவரும் உறவினையும் அறியாமல் அதனை கொச்சப்படுத்தும் வகையில் அரசியல்வாதிகள் நடந்துகொள்ளக் கூடாது' என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஞானமுத்து கிருஸ்ணபிள்ளை (வெள்ளிமலை) தெரிவித்தார்.

'கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையளராக தமிழர் ஒருவரை நியமிக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரியமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் முஸ்லிம் மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறுக்கினால' வெளியிடப்பட்டுள்ள கருத்திற்கு பதிலளிக்கும் வகையில் ஞானமுத்து கிருஸ்ணபிள்ளை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலையே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்வாறு வெளியிடப்பட்டுள்ள அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'முற்பட்ட கால வரலாறு தொடக்கம் இன்று வரை முஸ்லிம் - தமிழ் மக்களின் உறவு சரிவர தெரியாமல் இருப்பதனால்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம் மக்கள்மீது வைத்திருக்கும் கரிசனையும் பேரன்பினையும் கபட நாடகம் என உதாசீனம் செய்கின்றனர். 

இந்த நாட்டில் பிரித்தானியரின் ஆட்சி காலத்திலே கண்டியில் சிங்கள - முஸ்லிம் கலவரம் எழுந்தபோது அந்த காலப் பகுதியில் தமிழ் தலைவர்களாக இருந்த சேர் பொன் இராமநாதன் போன்றோர் முஸ்லிம் மக்களுக்காக குரல் கொடுத்தனர். மன்னார், புத்தளம், காலி, தீகாவாபி போன்ற இடங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளுக்கு எதிராக தமிழ் தலைவர்கள் குரல் கொடுத்தனர்.

2002ஆம் ஆண்டு தமிழீழ விடுதலை புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் நடந்த ஒப்பத்தத்தின் போது முஸ்லிம்களுடன் இணைந்து வடக்கு கிழக்கில் சுயாட்சிக்கு தமிழ் தலைவர்கள் சம்மதித்தனர். இதுபோன்ற இன்னும் பல விடயங்களைப் பற்றி அறிந்திருந்தால் தமிழ் மக்கள் முஸ்லிம்களுடன் வைத்திருக்கும் உறவினை கொச்சைப்படுத்தி கபட நாடகம் என்று கூறியிருக்கமாட்டார்கள் என நான் நினைக்கின்றேன்.

அவ்வாறான உறவுகள் நீடித்த காலகட்டத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகளின் செயற்பாடு தனித்து பக்கச் சார்பாகவே அமைந்து சென்றுள்ளது என்பதனையும் இவ்விடத்தில் கூறவேண்டிய தேவையுள்ளது. தமிழ் மக்களுடன் சார்ந்து இருப்பதனை விரும்பாமல் மட்டக்களப்பு நிலத் தொடர்பற்ற கல்வி வலயம் ஒன்றினை உருவாக்கினார்கள். வாழைச்சேனை மத்திய பிரதேச செயலகம் உருவாக்கினார்கள். மட்டக்களப்பில் பேரூந்து சாலை இருக்கத்தக்கதாக ஏறாவூர், காத்தான்குடி போன்ற இடங்களில் தனியான பேருந்து சாலைகள் அமைத்திருந்தனர். மற்றும் ஆதிகாலந் தொட்டு ஆரையம்பதியில் பொதுவான வைத்தியசாலை உள்ள போது காத்தான்குடியில் பிரமாண்டமான வைத்தியசாலை அமைத்தார்கள் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

கல்முனையில் காலங்காலமாக வைத்தியசாலை இருக்கும் போது மடுவத்தையில் அஸ்ரப் வைத்தியசாலை அமைத்தனர். இவற்றுக்கெல்லாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமிழ் தேசிய கூட்டமைப்போ அல்லது எந்தவொரு தமிழ் மகனோ எதிர்பு தெரிவிக்கவில்லை என்பதனை அறிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு ஒற்றுமைக்காக மௌனம் காத்து வருபவர்கள் நாங்கள். இந்நிலையில் மிக அண்மையில் முஸ்லிம் அரசியல்வாதிகள் நாடாளுமன்ற கட்டடத்தில் நடந்த கூட்டத்தில் கல்முனை தமிழ்ப் பிரிவை தரமுயர்த்தக் கூடாது என்பதனை பகிரங்கமாக கூறியதினை இவ்வேளையில் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.

இவ்வாறான பல சம்பவங்கள் இருக்கும் போது தமிழர் இருந்த பதவிக்கு தமிழர் ஒருவரை மீண்டும் நியமிக்க கோரியமை எந்த வகையில் பிழையெனக் கூறலாம், எங்கள் சமூகத்தினை முன்னேற்ற வேண்டிய பொறுப்பு எங்களுக்கும் உள்ளது. நீங்கள் உங்களது இனத்திற்காக குரல் கொடுத்தால் நீதி. நாங்கள் எங்களது இனத்துக்காக குரல் கொடுத்தால் அது அநீதியா?

பல ஆண்டுகளுக்கு முன்பு கல்முனையில் நடத்தப்பட்ட தமிழரசுக் கட்சி மகாநாட்டிலே மசூர் மௌலானவை தலைமைதாங்க வைத்தோம். வடமாகாண சபை தேர்தலில் கிடைக்கப்பெற்ற தேசிய பட்டியல் ஆசனத்தினை முஸ்லிம் சார்ந்த ஒருவருக்கு கொடுத்திருந்தோம். இவ்வாறு  பதவிகொடுத்த வரலாறே எமக்கு  உண்டு. கிழக்கு மாகாண சபையில் பிரிவினை காட்ட வேண்டிய அவசியம் எமக்கில்லை. அண்மையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், முஸ்லிம்களின் பிரச்சினையை ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதி நவநீதம்பிள்ளையிடம் எடுத்துக் கூறி உலகறியச் செய்தார்.

அனைத்தினையும் பிரிவினைக் கண்ணுடன் பார்ப்பவருக்கு அனைத்தும் பிழையாகத்தான் இருக்கும். உலகத்தில் மிகவும் கொடிய ஆயுதம் நாக்கு. அதனை நாம் சரியாக உபயோகிக்க வேண்டும். பல்லுக்கு வெளியே சொல் போனால் அதனை திரும்பிப் பெற முடியாது. எனவேதான் இனிவருகின்ற காலங்களிலாவது புரிந்துணர்வடன் செயற்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்' என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

கூட்டமைப்பு முஸ்லிம் சமூகத்தினை அடக்கி ஆள நினைக்கக்கூடாது : சிப்லி பாறூக்

 

பெரும்பான்மை சமூகத்திடம் இருந்து அரசியல் அதிகாரம் கிடைக்க வேண்டும். சுயாட்சி கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம் சமூகத்தினை அடக்கி ஆள நினைக்கக்கூடாது. கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக முஸ்லிம் சமூகத்தினைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பதை கண்டிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கை முஸ்லிம் சமூகத்தை வேதனைப்பட வைத்துள்ளது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.Shibly.jpg
 
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் 11 பேர் கையொப்பமிட்டு கிழக்கு மாகாண ஆளுநருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளதாக ஊடகங்களில் பார்த்து வேதனையும் அடைகின்றேன். முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த ஒருவர் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் 11 பேர் கையொப்பமிட்டு தங்களது எதிர்ப்பினை ஆளுநருக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளனர்.
 
இதனை நோக்குகின்றபோது இந்நாட்டின் சிறுபான்மையினராகவும் கிழக்கு மாகாணத்தில் இரண்டாவது சிறுபான்மையினராகவும் மொத்த சனத்தொகையில் 35 வீதத்திற்கு மேல் வாழ்கின்ற முஸ்லிம் சமூகத்தின் மீது நாட்டின் இன்னுமோர் சிறுபான்மை இனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொண்டிருக்கின்ற இனத்துவேசத்தையும் முஸ்லிம்கள் தமிழர்களால் அடக்கி ஆளப்பட வேண்டும் என்கின்ற கருத்துக்கு தூபமிடுவதைப் போன்ற ஓர் செயலாகவே இதனைப்பார்க்க முடிகின்றது.
 
 
சமூகங்களை பிரித்தாளுவதன் மூலம் அரசியல் இலாபம் தேடுகின்ற ஈனச் செயலாகவே இதனைப் பார்க்க முடிகின்றது. முஸ்லிம்கள் இதை திரும்பிப் பார்க்கின்ற போது மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உதவி அரசாங்க அதிபர் என்பது முஸ்லிம்களுக்குரிய ஓர் ஆசனமாக இருக்கையில் 21 வருடங்களுக்கு முன்பு புலிப்பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட முன்னாள் உதவி அரசாங்க அதிபர் வை.அஹமட்டுக்கு பின்பு இதுவரை முஸ்லிம்களுக்குரிய அந்த ஆசனம் தமிழர்களால் தான் நிரப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
 
ஆனால் மேலதிக அரசாங்க அதிபர் ஒருவரை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு நியமியுங்கள் என எந்த ஒரு முஸ்லிம் அரசியல் வாதியும் கோரவில்லை.
 
சமத்துவம், விட்டுக்கொடுப்பு, இன ஒற்றுமை பற்றி பேசுகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதனுடைய சுயரூபத்தை வெளிக்காட்டுகின்ற இந்த ஈனச்செயலை கிழக்கு வாழ் முஸ்லிம்கள் வன்மையாகக் கண்டிக்கின்றனர்.

 

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறவுகள்

"ஆழ" என்பது சரியல்ல. "ஆள" என்பதே சரி.. தலைப்பைத் திருத்திவிடுங்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

எம்மவர்கள் எல்லோருக்கும் பயந்து பயந்து அரசியல் செய்வதால் தான் எல்லாரும் எம்மை மிதிக்கிறார்கள். நாம் வேண்டுவதை உதாசீனம் செய்கிறார்கள். தாங்கள் நினைச்சதை எங்கள் மீது திணிக்கிறார்கள். இதனை தாண்ட.. நரேந்திர மோடி மாதிரி.. ஒரு தலைவர் எமக்கு இப்போ அவசியம். :rolleyes::(:icon_idea:

கிழக்கு வாழ் இசுலாமியர் தம்மை ராஜபக்சே அடக்கி ஆள்வதையே விரும்புகிறார்கள்.

மேர்வின் டி சில்வா போன்ற மென்தலைவர் இசுலாமியரை தோளில் தூக்கிவைத்து காவடி ஆடுவார். மிட்டாய் வாங்கி தருவார்.

எம்மவர்கள் எல்லோருக்கும் பயந்து பயந்து அரசியல் செய்வதால் தான் எல்லாரும் எம்மை மிதிக்கிறார்கள். நாம் வேண்டுவதை உதாசீனம் செய்கிறார்கள். தாங்கள் நினைச்சதை எங்கள் மீது திணிக்கிறார்கள். இதனை தாண்ட.. நரேந்திர மோடி மாதிரி.. ஒரு தலைவர் எமக்கு இப்போ அவசியம். :rolleyes::(:icon_idea:

 

அது சரி நெடுக்கு, தமிழரை முஸ்லீம்களுக்கு அடிமைப்பட வைக்க திட்டமிட்ட மூலைச் சலவை நடக்குது உதாரணமாக இங்கே வந்து சிலர் முஸ்லீம்கள் சிங்களவனுக்கு எதிராக நடத்தப் போகும் போராட்டத்தில் இணைந்து தான் தமது உரிமைகளை பெற வேண்டும் என்று கதை அளப்பதிலிருந்து நாம் இவர்கள்து தூர நோக்க குரூர சிந்தனையை நாம் உணர முடியும்

நினைத்தாலும் அது கனவிலும் நடவாது. ஏற்கனவே நினைப்பு பிழைப்பைக்கெடுத்த வரலாறு உண்டு.

அரசு பிரித்தாள இப்படி தமிழரை எடுத்து முஸ்லீம்களாகாக நியமித்துவிட்டு நயீப் மயீத் மாதிரி அடிமைகளை போட சில அடிவருடிகள் அவரை கூட்டமைப்பு ஆதரிக்க வேண்டும் என்றுகொண்டுவர....... புலிகளை காட்டிகொடுக்க என்றே புலநாய்வு திணைக்களத்தை நிறைத்துவிட்டு, பின்னர் ஒருவர் புலிகளால் முஸ்லீம்களை அரசு துன்புறுத்துகிறது என்று எழுத..... அதுக்கை ஒருத்தர் தான் இறுக்கி இறுக்கி ஆபிறுக்கி வெல்வத்தாக நினத்துக்கொண்டு  "நினைத்தாலும் அது கனவிலும் நடவாது. ஏற்கனவே நினைப்பு பிழைப்பைக்கெடுத்த வரலாறு உண்டு." பிரிவினையை தூபமிட.....

 

உதாவாத சந்திர சிறியை நியமித்தால் கூட்டமைப்பு மாற்றச்சொல்லிக்கேட்கும். உதவாத ரிசாட் பதுயுதின்கள், கக்கீம்கள், நயீப் மயீதுக்கள் வந்தால் அவர்களை போக்காட்ட வேண்டும்.

 

 

 

 

அரசு பிரித்தாள இப்படி தமிழரை எடுத்து முஸ்லீம்களாகாக நியமித்துவிட்டு நயீப் மயீத் மாதிரி அடிமைகளை போட சில அடிவருடிகள் அவரை கூட்டமைப்பு ஆதரிக்க வேண்டும் என்றுகொண்டுவர....... புலிகளை காட்டிகொடுக்க என்றே புலநாய்வு திணைக்களத்தை நிறைத்துவிட்டு, பின்னர் ஒருவர் புலிகளால் முஸ்லீம்களை அரசு துன்புறுத்துகிறது என்று எழுத..... அதுக்கை ஒருத்தர் தான் இறுக்கி இறுக்கி ஆபிறுக்கி வெல்வத்தாக நினத்துக்கொண்டு  "நினைத்தாலும் அது கனவிலும் நடவாது. ஏற்கனவே நினைப்பு பிழைப்பைக்கெடுத்த வரலாறு உண்டு." பிரிவினையை தூபமிட.....

 

உதாவாத சந்திர சிறியை நியமித்தால் கூட்டமைப்பு மாற்றச்சொல்லிக்கேட்கும். உதவாத ரிசாட் பதுயுதின்கள், கக்கீம்கள், நயீப் மயீதுக்கள் வந்தால் அவர்களை போக்காட்ட வேண்டும்.

 

மல்லையூர்காரர்களுக்கு,

 

முஸ்லீம்களை அடக்கி ஆள கூட்டமைப்பு நினைக்கவில்லை என்ற இந்துவான ஞா. கிருஸ்ணபிள்ளை அவர்களின் கருத்துக்கே எனது பதில். அவர் எந்தப் புலநாய்வு எந்த பிரிவினை என்பதை கற்பனை செய்துகொண்டிருக்கவேண்டிய அவசியம் எனக்கில்லை.

மல்லையூர்காரர்களுக்கு,

 

முஸ்லீம்களை அடக்கி ஆள கூட்டமைப்பு நினைக்கவில்லை என்ற இந்துவான ஞா. கிருஸ்ணபிள்ளை அவர்களின் கருத்துக்கே எனது பதில். அவர் எந்தப் புலநாய்வு எந்த பிரிவினை என்பதை கற்பனை செய்துகொண்டிருக்கவேண்டிய அவசியம் எனக்கில்லை.

சிப்பிலி பருக்கின் பேச்சுக்கு பதில் வரவே மாடெங்கிறது. கிருஸ்ணபிள்ளை வாய்திறக்க முதல் அவரின் பேச்சின் கருத்துக்கு எதிர் வளத்தில் பதில் விட்டது. அதைத்தான் நான் சொல்ல வந்தேன்.

பிரிவினை ஆப்பின் வழம் மட்டும்தான் தெரிகிறது.

 

இதில் எழத்தாக பிரிவினை தன்மைகளை கிருஸ்னபிள்ளை தன்மையாக தணித்து ஏமாற்றப்பார்க்கிறார். அதை கண்டு ஏமாறாமல் உங்கள் வீரத்தை காட்டுங்கள் என்றதுதான் அந்த வசனத்தில் பொருள் என்றுதான் எனக்குப் படுகிறது.

 

கிருஸ்ண பிள்ளை சொன்ன வசனம் குறையே இல்லாத வசனம். அதில் குறை காண்பது துவேசம்.

Edited by மல்லையூரான்

முஸ்லீம் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட தமிழ் மக்கள் குறித்தும் கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம் பயங்கரவாதிகளால் அடித்து விரட்டபட்ட தமிழ் மக்கள் குறித்தும்  சிப்லி பாறூக் பேசமாட்டார். அவருக்கு வக்காலத்து வாங்கும் தமழர்களும் எதுவும் மூச்சு கூட விடமாட்டார்கள்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=134465

 

முஸ்லீம்களுக்கு ஆதரவாக நடக்கும் சுமந்திரன் கக்கீமின் இந்த நாத்தல் வேலைகளால்தான் கக்கீம் பதவி விலகவேண்டும் என்றுபாராளுமறத்தில் வைத்து கக்கீமை கேட்டவர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.