Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி டில்லி ஐந்து நட்சத்திர ஹோட்டல் அறையில் சடலமாக மீட்பு -

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய மனித வளத்துறை அமைச்சர் சசி தரூரின் மனைவியான சுனந்தா புஷ்கர் ஐந்து நட்சத்திர ஹோட்டல் அறையொன்றில்  சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

டில்லியிலுள்ள லீலா ஹோட்டலின் அறையொன்றில் சுனந்தா புஷ்கர் சடலமாக காணப்பட்டதாக டில்லி  பொலிஸாருக்கு வெள்ளிக்கிழமை இரவு தகவல் தெரிவிக்கப்பட்டது.

 

பாகிஸ்தானைச் சேர்ந்த   பெண் ஊடகவியலாளர் ஒருவருக்கும் அமைச்சர் சசி தரூருக்கும் முறையற்ற தொடர்பிருப்பதாக தகவல் வெளியான இரு தினங்களில் சசி தரூரின் மனைவி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

 

 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.நா. பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்ட சசி  தரூர்,  தென்கொரியாவின் பான் கீ மூனிடம் தோல்வியுற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. (படம்: எ.எவ்.பி)

 
 
- See more at: http://www.metronews.lk/article.php?category=world&news=3838#sthash.fCWsgFYn.dpuf

3838sashi1.jpg

சசி தரூர்- பாக். பத்திரிக்கையாளர் புதிய காதல்: ட்விட்டரில் அம்பலப்படுத்திய மனைவி சுனந்தா!
 
டெல்லி: மத்திய அமைச்சர் சசி தரூரின் ட்விட்டர் கணக்கு மூலம் அவரது மனைவி சுனந்தா தனது கணவருக்கும், பாகிஸ்தான் பெண் பத்திரிக்கையாளருக்கும் இடையேயான உறவை அம்பலப்படுத்தியுள்ளார். மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் சசி தரூர் தனது அன்றாட நடவடிக்கைகள் குறித்து ட்விட்டரில் மக்களுக்கு தெரிவித்துக் கொண்டிருப்பார். இந்நிலையில் அவரது ட்விட்டர் கணக்கில் சில காதல் தகவல்கள் போஸ்ட் செய்யப்பட்டன. இதை பார்த்த அவரது பாலோயர்கள் குழப்பம் அடைந்தனர். இந்நிலையில் தனது ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாகவும், அதனால் அதை தற்காலிகமாக செயல் இழக்கச் செய்வதாகவும் தரூர் தெரிவித்தார்.


சசி தரூரின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்படவில்லை என்றும், அவரது கணக்கில் இருந்து தான் தான் அந்த தகவல்களை வெளியிட்டதாகவும் தரூரின் மனைவி சுனந்தா புஷ்கார் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

 

தரூருக்கு பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் மெஹர் தரார் அனுப்பிய காதல் செய்திகளை ட்விட்டரில் போட்டு அந்த பெண் எப்படி தனது கணவரை பின் தொடர்கிறார் என்பதை உலகிற்கு தெரிவிக்கவே இவ்வாறு செய்ததாக சுனந்தா தெரிவித்துள்ளார்
 

எங்களின் ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்படவில்லை. நான் தான் அந்த ட்வீட்களை போஸ்ட் செய்தேன். இது என்னால் சகித்துக் கொள்ள முடியாது. இந்த பாகித்ஸான் பெண் ஒரு ஐஎஸ்ஐ ஏஜென்ட். அவர் என் கணவரை பின் தொடர்கிறார். ஆண்கள் எப்படி என்று உங்களுக்கு தெரியும் என்று சுனந்தா ட்வீட் செய்துள்ளார்.

 

16-1389849736-mehrtarar-twitter3-600.jpg

இந்நிலையில் லாகூரைச் சேர்ந்த மெஹர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, ஓகே, என்ன நடக்கிறது? யார் எனக்கு ட்வீட் செய்வது?. எனக்கும் சசி தரூருக்கும் இடையே உறவு இருந்தது. அவர் எனக்கு ட்வீட் செய்கிறார்?? எனக்கு சசி தரூரை தெரியும். நான் அவரை மதிக்கிறேன். அது குறித்து வெளிப்படையாக எழுதினேன் என்றார்.

 

16-1389849916-sashi-twitter42-600.jpg

 

"ஐ லவ் யூ, சசி தரூர். நான் உங்களை காதலிக்கையிலேயே செல்கிறேன். நிரந்தரமாக. ஆனால் எப்பொழுதும் நான் உங்கள் மெஹர்." "மெஹர் எனக்கும் உனக்கும் இடையிலான கள்ளத்தொடர்பு குறித்து என் மனைவி கண்டுபிடித்துவிட்டார்."

 

 

 

Edited by பகலவன்


சசிதரூர் மனைவி மரணம்; தற்கொலை என சந்தேகம்

 

 

 

இந்தியாவின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் வெள்ளியன்று இறந்து காணப்பட்டதாக இந்திய காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

கடந்த சில தினங்களாக சஷி தரூர் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, அரசியல் அரங்கிலும் அது தொடர்பான பரபரப்பு விவாதங்கள் நடந்துவந்தன.

 

சுனந்தாவின் சடலம் டில்லியில் இருக்கும் ஓட்டலில் வெள்ளியன்று மாலை கண்டெடுக்கப் பட்டதாக கூறப்படுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சஷி தரூரின் டுவிட்டர் கணக்கிலிருந்து வெளியான பரபரப்பான தகவல்கள் அவருடைய திருமணத்திற்கு வெளியிலான தொடர்புகளை அம்பலப்படுத்தியதாக கூறப்பட்டது. இது பெரும் சர்ச்சையை தோற்றுவித்தது.

அதேசமயம், தாங்கள் இருவரும் மகிழ்ச்சியாக மனமொப்பி வாழ்வதாக தெரிவித்திருந்த சசிதரூரும் அவரது மனைவியும் சசி தரூரின் டுவிட்டர் கணக்கிலிருந்து வெளியான அதிகாரப்பூர்வமற்ற டூவிட்டுகளே தங்கள் தொடர்பான தேவையற்ற சர்ச்சைக்கு காரணம் என்று குற்றம் சாட்டியிருந்தார்கள்.

இந்தியாவின் ஐநாவுக்கான துணைச் செயலாளார்களில் ஒருவராக பல ஆண்டுகள் பணிபுரிந்த சஷி தரூர், துபாயைச் சேர்ந்த வர்த்தகரான சுனந்தா புஷ்கரை 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

இந்த திருமணத்திற்கு முன்னதாக, அதே ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் ஒரு குறிப்பிட்ட அணிக்கு சாதகமாக செயற்பட்டார் என்கிற குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து சஷி தரூர் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

சஷி தரூருக்கு தொடர்புடையதாக கூறப்பட்ட அந்த குறிப்பிட்ட ஐபிஎல் கிரிக்கெட் அணியில், அன்றைய காலகட்டத்தில் சஷி தரூரின் நெருங்கிய சிநேகிதியாக இருந்த சுனந்தா புஷ்கருக்கு இலவசமாக பங்குகள் அளிக்கப்பட்டிருந்ததைத் தொடர்ந்து, அந்த குறிப்பிட்ட ஐபிஎல் கிரிக்கெட் அணிக்கு சாதகமாக சஷி தரூர் தனது அமைச்சர் பதவியை துஷ்பிரயோகம் செய்ததாக அவர் மீது புகார் கூறப்பட்டது. அந்த குற்றச்சாட்டுக்களை சஷி தரூர் அப்போது மறுத்தார் என்றாலும் அவர் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

 

பிறகு சிறிதுகாலம் கழித்து தனது சிநேகிதியாக இருந்த சுனந்தாவை சஷி தரூர் முறைப்படி திருமணம் செய்து மனைவியாக்கிக்கொண்டார்.

இருவருமே ஏற்கெனவே இரண்டு முறை விவாகரத்து பெற்றிருந்தவர்கள் என்பதால் இது இவர்கள் இருவருக்கும் மூன்றாவது திருமணம்.

2010 ஆம் ஆண்டு அமைச்சர் பதவியிலிருந்து சர்ச்சைக்குரிய முறையில் விலகிய சஷி தரூர் மீண்டும் 2012 ஆம் ஆண்டு மத்திய அமைச்சராக பதவியேற்றார்.

 

http://www.bbc.co.uk/tamil/india/2014/01/140117_sasitharoorwifedead.shtml

  • கருத்துக்கள உறவுகள்

இதில் முக்கியமான செய்தி.. 2007 இலேயே ஐநா பொதுச்செயலாளர் பதவிக்கு குறி வைத்திருந்துள்ளார்கள்..

அந்த மனிசிக்கு உரத்த அண்ணன் தம்பி இல்லா விட்டால் எல்லோரையும் பொன்னையன்கள் ஆக்கி இன்னொரு தேவயானி வழக்கு நடத்தி முடித்துவிடுவார்கள் காங்கிரஸ்காரர்.

  • கருத்துக்கள உறவுகள்

இதில் முக்கியமான செய்தி.. 2007 இலேயே ஐநா பொதுச்செயலாளர் பதவிக்கு குறி வைத்திருந்துள்ளார்கள்..

 

அந்த மனிசிக்கு உரத்த அண்ணன் தம்பி இல்லா விட்டால் எல்லோரையும் பொன்னையன்கள் ஆக்கி இன்னொரு தேவயானி வழக்கு நடத்தி முடித்துவிடுவார்கள் காங்கிரஸ்காரர்.

 

 

உதுகள் எல்லாத்துக்கும்... கடவுள் கொடுத்த தண்டனை.

அனுபவிங்கடா.....

இதில் முக்கியமான செய்தி.. 2007 இலேயே ஐநா பொதுச்செயலாளர் பதவிக்கு குறி வைத்திருந்துள்ளார்கள்..

கடவுள் நின்று கொல்லும். எங்களில் ஒன்றரை இலட்சம் பேரை கொல்ல வழி கோலியவர்.

மற்றும் ராகுலின் பிரதமர் கனவிற்கு பெரிய ஆப்பா வைத்திட்டார்.

சுனந்தாவின் மர்ம மரணம் திட்டமிட்ட படுகொலை: சுப்ரமணிய சுவாமி குற்றச்சாட்டு

டெல்லி: மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தாவின் மர்ம மரணம் முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை என குற்றஞ்சாட்டியுள்ளார் பாரதீய ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமி. பாகிஸ்தான் பத்திரிக்கையாளருடன் தனது கணவரும், மத்திய அமைச்சருமான சசிதரூருக்கு தொடர்பு உள்ளது என டுவிட்டர் மூலம் தனது குற்றச்சாட்டைத் தெரிவித்திருந்தார் அவரது மனைவி சுனந்தா. தொடர்ந்து இது குறித்து முரண்பட்ட தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்த வேளையில், நேற்று முன்தினம், தான் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் மர்மமான முறையில் மரணமடைந்தார் சுனந்தா.

 

நேற்று நடைபெற்ற அவரது பிரேத பரிசோதனையில் சுனந்தாவின் மரணம் இயற்கையானது அல்ல என மருத்துவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். ஆனால், அதிகாரப்பூர்வமான மருத்துவ அறிக்கை வெளிவர இரண்டு தினங்கள் ஆகும் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்நிலையில், சுனந்தாவின் மரணம் முன்கூட்டியே திட்டமிடப் பட்ட படுகொலை என பாஜக குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து அக்கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமி தலைவர் கூறியிருப்பதாவது :- 'அவரது உடலில் உள்ள காயங்கள், இந்த வழக்கு போகும் பாதை ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது இது திட்டமிட்ட கொலையாகவேத் தெரிகிறது. என்ன உண்மை என்பதை நாம் அறிய வேண்டும். யார் அவரைப் பாதித்தது, காயப்படுத்தியது, யாரால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டது என்பது கண்டறியப்பட வேண்டும் ' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Read more at: http://tamil.oneindia.in/news/india/sunanda-s-death-pre-planned-murder-says-subramanian-swamy-191621.html

நன்றி சு சா! இவற்றில் தன்னும் எங்களுக்கு கை கொடுக்க நீங்கள் ஒருவர் இருக்கிறீர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=VFgVxJMP7lE

 

இந்திய அமைச்சர் சசி தரூருக்கு, சுனந்தாவுடன் இது மூன்றாவது திருமணம்.
அதே... போல் சுனந்தாவும் மூன்றாவது முறையாக இவரை திருமணம் செய்துள்ளார். ஏற்கெனவே.. சுனந்தாவுக்கு ஒரு ஆண்மகன் உள்ளார்.

சு.சுவாமி நல்லவரா கெட்டவரா . :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

சசி தரூர்: இவர் மலையாளி பெற்றோருக்கு லண்டனில் பிறந்தவர். கொச்சின் கோச்கேர்ஸ் அணியில் இடம்பெற்ற ஊழலில் பலரின் அழுத்தங்கள் காரணமாக தனது அமைச்சர் பதவியை துறந்தார். இப்படிபட்ட மனிதர் ஐ நா பொது செயலாளராக வராதது, தமிழரை அந்த கடவுள் தான் காப்பற்றி இருக்க வேண்டும். நம்பியாருடன் சேர்ந்து இவரும் இருந்திருந்தால், நினைத்து பார்க்க முடிய வில்லை.

இந்த பெண்ணின் சாவுக்கு நீதி கிடைக்க வேண்டும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.