Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

13வது திருத்தத்தை இந்தியா திணிக்கவில்லை;அதனை மறுபரீசீலனை செய்யும் உரிமை இலங்கைக்கு உள்ளது! - சல்மான் குர்ஷித்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

13வது திருத்தத்தை இந்தியா திணிக்கவில்லை;அதனை மறுபரீசீலனை செய்யும் உரிமை இலங்கைக்கு உள்ளது! - சல்மான் குர்ஷித் 

[Thursday, 2014-02-13 08:06:09]
salman-130214-150.jpg

13ஆவது திருத்தத்தை இலங்கை மீது இந்தியா ஒருபோதும் திணிக்கவில்லை என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித், தெரிவித்தார். இலங்கை ஊடகவியலாளர்கள் 20 பேர் அடங்கிய குழு, இந்திய அரசின் அழைப்பின் பேரில் புதுடில்லியை சென்றுள்ளது. இவர்களை இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் நேற்றுமாலை சந்தித்துப் பேசினார். அப்போது அவர், 13ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் இந்தியா ஆரம்பத்தில் உறுதியாக இருந்தது. இச்சட்டத்திருத்தம் என்பது ஓர் ஆரோக்கியமான ஆலோசனைதானே தவிர, இது திணிக்கப்பட்ட விடயமல்ல. அன்றைய காலத்தில் இருநாட்டு அரசாங்கமும் இணங்கியதாலேயே இச்சட்டம் பற்றி விவாதிக்கப்பட்டது.

  

ஆக, இணக்கமில்லாமல் அதனை நாங்கள் இலங்கை அரசிடம் திணிக்கவில்லை. நாங்கள் எதனைச் செய்தாலும் அது இருநாட்டு உறவினையும் பாதிக்காமலே செய்வோம்.1987களில் இந்திய அமைதி காக்கும் படையினரை இலங்கை அரசு கோரியது. நாங்கள் வழங்கினோம். மறுபடியும் அமைதி காக்கும் படையினரை திருப்பி அழைக்குமாறு பணித்தார்கள். எந்தவித மறுப்புமின்றி நாங்கள் அதனைச் செய்தோம். எமது இழப்புகளை காரணம்காட்டி, தீர்வொன்று காணும்வரை அமைதிகாக்கும் படை இலங்கையில்தான் இருக்குமென நாங்கள் அடம்பிடிக்கவில்லை. அவர்கள் விருப்பத்திற்கு நாங்கள் வரவேற்பளித்தோம்.

அதேபோல், இப்போது வீட்டுத் திட்டம் போன்றனவும் அப்படித்தான். ஆகையினால் 13ஆவது திருத்தச்சட்டம் பற்றி எம்மீது பழிபோடக் கூடாது. அச்சட்டமூலத்தினை ஆராய்ந்து பார்க்கும் உரிமை இலங்கை அரசுக்கு இருக்கிறது. ஆனாலும் சிலர் 13 பிளஸ், 13 மைனஸ் என்று பலவிதமாக பேசிவருகிறார்கள். நடைமுறை சாத்தியங்களுக்கு இணங்க, எந்தவொரு அரசாங்கமும் தமது சட்டமூலத்தை மாற்றியமைக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு. ஆகையினால், 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் இலங்கை அரசுக்கு பரிசீலிக்கும் உரிமை இருக்கிறது.

13ஆவது திருத்தம் மற்றும் அரசியல் தீர்வுபற்றி நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் ஆலோசித்து முடிவெடுக்கப்பட வேண்டும் என இலங்கை அரசு கூறுகிறது. இது நல்ல விடயம்தான். ஆனாலும், சிலர் அக்குழுவில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று கூறிவருகிறார்கள். எம்மைப் பொறுத்தவரையில், நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இணைந்து, அனைவரது ஒத்துழைப்புடனும் சிறந்த தீர்வொன்றை அடையமுனைவதே சிறந்தவழி எனத் தோன்றுகிறது.

இலங்கைக்கு எதிராக மனித உரிமை பேரவையில் கொண்டு வரவுள்ளதாகக் கூறப்படும் பிரேரணையை ஆதரிப்பதா இல்லையா என்பது பற்றி நாம் இன்னும் தீர்மானிக்கவில்லை. மனிதஉரிமை பேரவை என்பது தனியொரு நாட்டுக்குரியதல்ல. இதில் பல நாடுகள் இருக்கின்றன. ஆகையினால் அனைத்து நாடுகளின் இராஜதந்திர நகர்வுகளைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். உயிரிழப்பு, மனிதஉரிமை மீறல்கள் என்பன சாதாரண விடயமல்ல. இதனை தாங்கிக்கொள்ளும் சக்தி எல்லோருக்கும் இருக்காது. ஆகையினால், அதற்குரிய நடைமுறைகள் இருப்பது அவசியம் தான். ஆனாலும், ஒரு நாட்டின் இறைமைக்கு பாதகம் இல்லாமல் அந்த நகர்வு இருக்க வேண்டும். இலங்கைக்குள் குழப்பம் நீடிப்பதை இந்தியா ஒருபோதும் விரும்பாது என்றார்.

btn-back.gif   lg-share-en.gif

http://www.seithy.com/breifNews.php?newsID=103527&category=TamilNews&language=tamil

இப்பிடி சொல்வதிலும் பார்க்க ராசபக்சவின் கோ.$&@$) தை நக்கலாம்.

"மறுபடியும் அமைதி காக்கும் படையினரை திருப்பி அழைக்குமாறு பணித்தார்கள்."

பிடரில கால் பட தெறித்து ஓடியவன் எல்லாம் பீலா காட்டுறான்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த குர்சித்து எமது விடயத்தில் முன் பின் யோசியாமல் நாக்கூசமல் பதில் சொல்வான்....இவன் இலங்கைக்கு போவதே......நக்கத்தான்..

 

  • கருத்துக்கள உறவுகள்

அட இன்னுமாடா உலகம் நம்மளை நம்பிக்கிட்டு இருக்கு ??!!!!!

Edited by ragunathan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
சம்பந்தன்:- என்னப்பா 13க்கு மேலையும் தல்லாம் எண்டு மேடைக்கு மேடை சொல்லிப்போட்டு...இப்ப 13க்கு கீழையும் தர மாட்டம் எண்டுறியள்?
 
மகிந்தன்:- சம்பந்த நீங்க மேடயில பேசின எல்லாதயும் தெமிலவுக்கு செய்தனிங்கலா...அத மொதல்ல சொல்லுங்க.....?

"மறுபடியும் அமைதி காக்கும் படையினரை திருப்பி அழைக்குமாறு பணித்தார்கள்."

பிடரில கால் பட தெறித்து ஓடியவன் எல்லாம் பீலா காட்டுறான்.

 

பிடரில கால் பட பிரேமதாச வீட்டுக்கு தான் ஓடினவர்கள்...இந்தியர்கள் (10000+ out) :)

 

சாத்திரி எடுத்து விடப்பா

Edited by naanthaan

எங்கே இருந்து தான் பொய்ச் செய்திகளைச் சேகரிக்கிறார்களோ !! ??
 
 
The 13th Amendment to the Sri Lankan Constitution is a product of the agreement between the leadership of two countries – Sri Lanka and India. It is an agreement that is based on forward looking aspirations, Indian External Affairs Minister, Salman Khurshid, told Sri Lankan journalists in New Delhi yesterday.
 
 
He told the visiting journalists' delegation that India remained committed to the 13th Amendment and had been advocating for 13 plus as a way forward.
 
 

நன்றிகள் ஈசன், எங்கட அரகுறை தமிழ் செய்தியை நம்பி எங்கட செல்லத்தை திட்டிப்போட்டன்.

பிடரில கால் பட பிரேமதாச வீட்டுக்கு தான் ஓடினவர்கள்...இந்தியர்கள் (10000+ out) :)

சாத்திரி எடுத்து விடப்பா

இல்லை. நான் இவை நேரடியா பிடரில கால் பட தெறித்து ஓடியதை பார்த்திருக்கிறேன்.

நீங்கள் இந்திய இராணுவத்தின் கீழ் வாழவில்லை போல?

மற்றும் சாத்திரியார் சாட்சியத்தோடு எடுத்துவிடுவாரோ?

எங்களுக்கும் தெரியும் தம்பி.:)

இச்செய்தியில் யார் ஓடியது என்ற விடயம் முக்கியமில்லை. இந்தியா ஒரு ஏமாற்று பேர்வழி என்பதே நிரூபணமாகியுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.