Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமாகாண தலைநகராக மாங்குளம் - டெலோ தீர்மானம்

Featured Replies

140301152115_mankulam_304x171_bbc_nocred

 

இலங்கையின் வடமாகாணத்தின் தலைநகராக மாங்குளத்தை அறிவிக்க வேண்டும் என்று டெலோ அமைப்பு தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்ட அந்த அமைப்பின் மாகாண சபை அங்கத்தவரும், மூத்த உறுப்பினருமான சிவாஜிலிங்கம் அவர்கள், மக்களின் நலன் கருதியே இந்த முடிவை தமது அமைப்பு எடுத்துள்ளதாகக் கூறினார்.

வடமாகாணத்தின் 5 மாவட்டங்களான, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகியவற்றின் மையமாக மாங்குளம் அமைந்துள்ளதாலேயே தாம் இந்த முடிவுக்கு வந்ததாக அவர் கூறினார்.

தமது கட்சியின் இந்த முடிவுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினதும், வடமாகாண முதல்வரினதும் ஆதரவைத் தேடப் போவதாகவும் தெரிவித்த அவர், இப்படியான ஒரு விருப்பத்தை மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் அவர்களும் ஏற்கனவே வெளியிட்டுள்ளதாகவும் கூறினார்.

இலங்கை அரசாங்கமும் இப்படியான ஒரு முடிவை ஏற்கனவே அறிவித்திருந்தாலும், அது பின்னர் அதனைக் கைவிட்டு விட்டது என்றும் சிவாஜிலிங்கம் குறிப்பிட்டார்.

 

 

மாங்குளமும் ஒன்றுதான் கிளிநொச்சியும் ஒன்றுதான்.

 

ஏற்கனவே ஒரு சொந்த அரசை கண்ட  பிரதேசங்கள்.

 

நிழல் அரசின் தலைநகராக கிளிநொச்சி  பெரும்  வரவேற்பை பெற்றது

  • கருத்துக்கள உறவுகள்

தலை நகருக்கு அண்மையில் விமான நிலையமும், துறை முகமும் இருப்பது வர்த்தக துறைக்கு நல்லது..

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட சிவாஜி அண்ணே மாங்குளத்திலே நிலம் வாங்கிப்போட்டார் போல. :lol:  

 

வடமாகாண சபை இயங்கவே காணல. தமிழனுக்கு ஒரு மாகாண சபை கிடைச்சு ஆறு மாசம் ஆக போகுது. என்னத்தை வெட்டி கிழிச்சான்கள். கட்டட திறப்ப்பு விழாவும், விளையாட்டு போட்டியில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டதையும் தவிர. :lol:  :icon_idea:

 

அதுக்குள்ளே தலைநகரம் ஒன்று தான் குறை. முதல்ல மக்களுக்கு நல்லதை செயுங்கோ. சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கோ . அதுக்கொரு தீர்மானம் போடுங்கோ. பிறகு தலைநகரை கைலாயத்தில் விகிர்தா காக்கை தீவிலே விகிர்தா என்று தீர்மானிப்போம் அண்ணே :icon_idea:  என்ன நான் சொல்லுறது. 

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம் கேள்விப்பட்டால் மாங்குளத்தில புத்தர் கோயில் கட்டினாலும் கட்டுவார்கள்.

மாங்குளத்தில் விமான நிலயம் கட்டலாம் .

 

வட பகுதியின் தலைநகராக மாங்குளம் இருப்பது சிறப்பே(தமிழ் ஈழ விடுதலை புலிகள் கால வரை படத்தில் வடக்கின் நிர்வாக  தலைநகராக மாங்குளம் பதியப் பட்டிருக்குறது . ஆகவே இந்த முடிவு சாலவே பொருந்தும் .

 

சிங்களம் கேள்விப்பட்டால் மாங்குளத்தில புத்தர் கோயில் கட்டினாலும் கட்டுவார்கள்.

 

இதையும் வடமாகாணா சபையில் தீர்மாணமாக நிறைவேற்றினால் விரைவில் புத்தர் சிலை வரும்.

  • கருத்துக்கள உறவுகள்

தறிகெட்ட தமிழ் அரசியல் கட்சிகள் எடுக்கும் தீர்மானங்களில் தொலை நோக்கு இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அனுராதபுரம்  என்று முடிவு  எடுத்திருந்தால்

நன்றாக  இருந்திருக்கும்........... :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.