Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீரிழிவை இயற்கை முறையில் கட்டுப்படுத்த உதவும் வெண்டைக்காய்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

2.jpg

நீரிழிவு நோய் தற்போது அனைவரின் உடலிலும் வந்துவிடுகிறது. இத்தகைய நீரிழிவு உடலில் வந்துவிட்டால், அதனை முற்றிலும் சரிசெய்ய முடியாது. ஆனால் அவற்றை கட்டுப்படுத்தி, ஆரோக்கியமாக வாழ முடியும். அதற்கு இன்சுலின் ஊசி தான் ஒரே வழி என்று நினைக்க வேண்டாம். அத்தகைய நீரிழிவை இயற்கை முறையிலும் கட்டுப்படுத்தலாம். அதிலும் காய்கறிகளில் வெண்டைக்காயை சாப்பிட்டால், நீரிழிவு கட்டுப்படும்.

நீரிழிவை கட்டுப்படுத்த எப்படி வெண்டைக்காயை பயன்படுத்த வேண்டும்?

* இரண்டு வெண்டைக்காய் துண்டுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதன் இரு முனைகளையும் நீக்கிவிட வேண்டும்.

* முனைகளை நறுக்கியப்பின் அதிலிருந்து வெள்ளை நிறத்தில் ஒரு திரவம் வரும். அப்போது அதனை கழுவிடாமல், ஒரு டம்ளர் நீரில் அந்த துண்டுகளை போட்டு, இரவில் படுக்கும் முன்பு ஊற வைத்து, மறக்காமல் மூடிவிட வேண்டும்.

* பின் காலையில் எழுந்து, அந்த துண்டுகளை நீக்கி, அந்த நீரை குடிக்க வேண்டும்.

* இதனை தினமும் காலையில் குடித்து வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்துவிடும்.

* சொல்லப்போனால் வெண்டைக்காயை வேக வைத்து சாப்பிடுவதை விட, இவ்வாறு சாப்பிடுவது தான், சிறந்த பலனைத் தரும்.

ஆகவே வெண்டைக்காயை குழம்பு, பொரியல் என்று சாப்பிடுவதை தவிர்த்து, மேற்கூறியவாறு சாப்பிட்டால், நீரிழிவைக் கட்டுப்படுத்தலாம்.

வெண்டைக்காய் எப்படி நீரிழிவைக் கட்டுப்படுத்தும்?

* வெண்டைக்காயில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளது. ஆகவே இதனை அதிகம் சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படுவதோடு, வயிறும் நிறைந்துவிடும். இதை ஸ்நாக்ஸ் போன்றும் சாப்பிடலாம்.

* நீரிழிவில் டைப்-2 நீரிழிவு என்று ஒன்று உள்ளது. இது சிறுநீரகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் இந்த வகையான நீரிழிவு இருந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதோடு, சிறுநீரகத்திற்கும் பாதிப்பை உண்டாக்கும். ஆகவே வெண்டைக்காயை சாப்பிட்டால், சிறுநீரகத்தில் எந்த ஒரு நோயும் வராமல் தடுக்கலாம்.

* எளிதில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ள உணவுகள் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. ஏனெனில் இந்த சத்து உடலில் இருக்கும் கார்போஹைட்ரேட்டின் செரிமான நேரத்தை குறைத்து, அவை இரத்தத்தில் கலக்காமல் தடுக்கிறது. இத்தகைய சத்து வெண்டைக்காயில் அதிகம் உள்ளது.

எனவே, வெண்டைக்காயை உணவில் அதிகம் சேர்த்து, நீரிழிவைக் கட்டுப்படுத்துங்கள்.

http://anonymouse.org/cgi-bin/anon-www.cgi/http://raone1news.blogspot.com/search?updated-min=2014-01-31T10:30:00-08:00&updated-max=2014-02-22T19:31:00%2B05:30&max-results=50&start=89&by-date=false

நீரிழிவு நோய் குணபடுத்த கூடிய வியாதி.

Fork over Knife என்ற விவரண படத்தை கட்டாயம் பாருங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படியான அரை குறை ஆதாரமில்லாத தகவல்களே மருத்துவத்தின் முதல் எதிரி ...முதல் பலிஆடு தமிழில் மருத்துவம் படிக்கும் அப்பாவி மனிதர்கள் ....நீரிழிவு ஒரு பல உறுப்புகளை பாதிக்கும் வியாதி அது வந்தால் அதை முறையாக ஒரு வைத்தியர் துணையுடன் கட்டுப்பட்தில் வைத்திருக்க வேண்டும்

இப்படியான அரை குறை ஆதாரமில்லாத தகவல்களே மருத்துவத்தின் முதல் எதிரி ...முதல் பலிஆடு தமிழில் மருத்துவம் படிக்கும் அப்பாவி மனிதர்கள் ....நீரிழிவு ஒரு பல உறுப்புகளை பாதிக்கும் வியாதி அது வந்தால் அதை முறையாக ஒரு வைத்தியர் துணையுடன் கட்டுப்பட்தில் வைத்திருக்க வேண்டும்

எனக்கு இந்த முறையான வெள்ளை கோட்டு மருத்துவர்களை நன்றாக தெரியும்.

என் 1 நாள் வயது குழந்தை இவர்கள் விட்ட பிழையால் உள் காயப்பட்டு மூன்று நாள் பால் குடிக்காமல் அழுது கொண்டிருந்தது. மூன்றாவது நாள் குழந்தை சக்தி இல்லாமல் விம்பி கொண்டிருந்தது. அந்த மருத்துவ மனையில் இருந்த ஒரு முறையான மருத்துவரும் கண்டு பிடிக்கவில்லை.

மருத்துவர்கள் என் மனைவிக்கு பால் கொடுக்க தெரியாது என்று "கண்டுபிடித்தார்கள்".

எங்களுக்கு தெய்வமாக ஒரு நல்ல குழந்தை தாதி வேறு ஒரு குழந்தை மருத்துவ மனையில் இருந்து வந்திருந்தார். அவர் குழந்தையின் வயிற்றை பார்த்தவுடனேயே கண்டுபிடித்துவிட்டார்.

பின் அதியுயர் குழந்தை(Neonatal children's hospital) மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்று வயிற்றை பிழந்து துருவி பார்த்தால் மூலத்தில் சூட்டை எடுக்கும்போது தெர்மொமீடரால் ஓட்டை வைத்தது தெரிந்தது.

பின் மூல ஓட்டை தையல் ஆறுமட்டும் குழந்தை நான்கு மாதமா வயிற்றில் இருந்த குடல் ஓட்டையால் பைக்குள் மலம் கழித்து.

சத்திர சிகிச்சை மருந்துகளால் நிரந்தர செகிடானார்.

நான்கு மாதத்தின் பின் அதியுயர் குழந்தை மருத்துவமனையில் குடலை மூலத்துடன் இணைக்கும் சத்திர சிகிச்சை நடந்தது.

சிகிச்சையாளர் மூலத்தால் வரும் மலத்தை வெந்நீரால் கழுவி மென்மையாக துடைக்கவேண்டும் கூறினார். குழந்தையும் மயக்கம் தெளியாமல் ஐ.சி.யு அறையில் இருந்தது. நானும் துணைவியும் மட்டும் அங்கு.

அந்த வார்டின் முறையான அதியுயர் குழந்தை மருத்துவர் வந்தார், எங்களை ஒன்றும் கேட்காமல் குழந்தையின் டயப்பரை கழட்டினார் ஒரு பெரிய குழுசையை எடுத்தார் அதை மூலத்தை நோக்கி கொண்டு சென்றார்.

நாங்கள் பாய்ந்து தடுத்து என்ன செய்கிறாய்? இப்போது தான் மூலத்தில் சிகிச்சை நடந்தது. சிகிச்சையாளர் மூலத்தை தொடக்கூடாது என்று சொன்னாரே? என்றோம்.

"அப்படியா? இந்த குழந்தை எகிப்தில் பிறக்கவில்லையா?" என்று கேட்டு ஒரு அதிர்ச்சி குண்டை போட்டார்.

நாங்கள் அங்கு நிற்கவில்லை என்றால் என் குழந்தை "முறையான" மருத்துவரின் தவறால் இரண்டாம் தடவை கொல்லப்பட்டிருப்பார்.

கனடாவில் வருடத்திற்கு மருத்துவமனை தவறுகளால் 15,000 இறக்கிறார்கள்.

எனது உற்ற நண்பரின் தாயார் முழங்கால் சிகிச்சைக்கு சென்று அவர் இரத்த அழுத்த குழுசை எடுப்பதை கவனிக்காமல் முறையான மருத்துவர் குழுசை மாறிகொடுத்து கோமாவிற்குள் போய் இறந்தார்.

Edited by விவசாயி விக்

மற்றும் இங்கு முறையான மருத்துவர்களுக்கு உணவு ஒரு பாடமாக இல்லை. எனது குடும்பத்தில் இருக்கும் மருத்துவர்கள், மருத்துவ நண்பர்களை சோதித்து பார்த்தேன். எல்லோரும் பெயில்.

என் கேள்வி, இரத்த அழுத்தகாரர் பால் குடிக்கலாமா?

எல்லோரும் ஓம் தாராளமாக என்று கூறி என்னிடம் முட்டை வாங்கினார்கள்.

எம் வயிற்றில் இருக்கும் நுண்ணுயிர்கள் தான் உணவை உடைத்து உடலுக்கு வேண்டிய சத்துகளை, தாதுக்களை உடைத்து கொடுக்கும்.

அதில் ரெனின்(renin)என்னும் நுண்ணுயிர் எமக்கு முக்கியம். அதன் தொழில் பாலை தயிராக்கி உடைத்து கொடுப்பது. மற்றும் இரத்த அழுத்தத்தை, கொலஸ்துரோளை சீரமைப்பது.

ஆறு வயது வரை ரெனின் நிறைய சுரக்கும் பின் தாய்பால் கிடைக்காது என்றபடியால் கொஞ்சமாக சுரக்கும்.

நாம் பாலென்று நம்பி குடிக்கும் வெள்ளை திரவத்தை கண்டவுடன் ரெனின் நுண்ணுயிர்கள் தயிர் கடைய ஓடிவிடும்.

பின் பிரசர் ஏறிட்டுது, கொலஸ்டிரால் கூடிடுது என்று பரிசோதனை கூடம்,மருந்தகம்,எக்ஸ்ரே வைத்திருக்கும் முறையான மருத்துவரிடம் ஓடுவோம்.

நாற்பது வயதிலும் எம் தாயிடம் பால் அருந்துகிறோமா? நான்பன் மாடு தாயிடம் பால் குடிக்கிறதா?

ஏன் நாம் குடிக்கிறோம் என்று ஒரு முறையான மருத்துவரும் இன்னும் கேட்கவில்லை.

நீரிழிவு நோய் எமது உணவு தராதரத்தின் பிரச்சினை. உலக போர் இரண்டின் முன் பெரிதாக இருக்கவில்லை.

Edited by விவசாயி விக்

இப்படியான அரை குறை ஆதாரமில்லாத தகவல்களே மருத்துவத்தின் முதல் எதிரி ...முதல் பலிஆடு தமிழில் மருத்துவம் படிக்கும் அப்பாவி மனிதர்கள் ....நீரிழிவு ஒரு பல உறுப்புகளை பாதிக்கும் வியாதி அது வந்தால் அதை முறையாக ஒரு வைத்தியர் துணையுடன் கட்டுப்பட்தில் வைத்திருக்க வேண்டும்

இதை பற்றி ஒரு இங்கிலீசு வெள்ளை கோட்டு பீட்டரும் சொல்லி தரவில்லை. கோவணம் கட்டிய தமிழ் விவசாயி நம்மாழ்வார் தான் சொல்லி தந்தவர்.

உலக போர் இரண்டின் முன் தமிழரும் பெரிதாக பால் குடிக்கவில்லை. நாம் தயிராகவும், நெய்யாகவும் உண்டோம். பின் பால் துறை அசுர வளர்ச்சி அடைந்து அதை விற்க தொடங்கியது.

மற்றும் இப்போது நாம் கறக்கும் ஜெர்சி, ஹோல்ச்டீன் வகை மாடுகள், சுத்த பசுக்கள் அல்ல. பால் உற்பத்தியை கூட்ட இந்திய பசுவை ஆப்பிரிக்க சீபோவுடன் சேர்த்து உருவாக்கிய இரு இனங்கள்.

இவற்றை இரத்தம் வரும் வரை கறந்த பாலில் முதல் பெறுமதி மிக்க கொழுப்பை எடுப்பார்கள், புரோட்டீன் whey யை எடுப்பார்கள். பின் எஞ்சியுள்ள வெள்ளை தண்ணியை லிட்டர் ஒரு டொலருக்கு விற்பார்கள்.

நாம் உண்ணும் உணவு தான் நாம். நாம் போடும் ஓப்பிய, கொகைன் குழுசைகள் அல்ல.

மற்றும் வடஅமெரிக்க குழந்தை நீரிழிவு நோயின் பின் கோர்ன் ஸ்வீட்னர் இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

விக்கியர், எனது தாய் வழிப்பாட்டனாருடன், அவரது இறுதிக்காலங்களில் நெருங்கிப்பழகும் சந்தர்ப்பங்கள் எனக்குக் கிடைத்தது, எனது வழிப்படுத்தலில் மிகவும் முக்கியமான காலகட்டம் எனக் கருதுகின்றேன்!

 

அவர் ஒரு முறை கூறினார். 

 

தாங்கள் சிறுவர்களாக இருந்தபோது, எல்லோருக்கும் முதல்நாள் சமைக்கப்பட்ட குத்தரிசிச் சோற்றுக்குள் விடப்பட்ட தண்ணீர் தான் காலையில், காலையுணவுக்கு முன்னர் தரப்படுமாம்.

 

பின்னர் 'லிப்டன்' வண்டிகள் ( தற்காலத்தில் கரம் சுண்டல் விற்கும் வண்டிகளைப் போல) ஒவ்வொருநாளும் காலையில் வந்து சந்திகளில் நின்று, போவோர் வருவோரையெல்லாம் வலிந்த கூப்பிட்டு, இலவசமாகத் தேநீர் கொடுப்பார்களாம்!

 

அப்போது தான் தான் 'சீனி' உபயோகிக்கத் தொடங்கியதாகவும் அதற்கு முன்னர், வெறும் பனங்கட்டி மட்டுமே தாங்கள் உபயோகித்ததாகவும் கூறினார்!

 

இவ்வாறு தான் 'தேநீர்' அருந்தும் பழக்கம் எம்மிடையே, மெது மெதுவாக அறிமுகப்படுத்தப் பட்டது!

 

இதன் பின்னர் நான் 'சீனி' போட்டுத் தேநீரோ, கோப்பியோ அருந்துவதை முழுவதுமாக நிறுத்திவிட்டேன்!

 

இப்போதெல்லாம், மிக நெருங்கிய உறவினர்கள் அல்லாத வீடுகளுக்குப் போகும்போது, அவர்கள் முகம் கோணக்கூடாது என்பதற்காக, அவர்கள் தரும் சீனி போட்ட தேநீரை அருந்துவதுண்டு!

எனினும், குறைந்தது இரண்டு மணி நேரமாவது அந்த இனிப்பு நாக்கிலிருந்து, ஒரு அருவருப்பான சுவையைத் தந்து கொண்டிருக்கும்! யாழ்ப்பாணத்தில் தேநீர் குடித்தால், மூன்று மணி நேரம் என்று வைத்துக்கொள்ளுங்கள்!

 

இதே போலத் தான் பசுவின் பாலும்! சீனா, மற்றும் இந்தியா போன்ற, தினமும் பாலருந்த வசதி இல்லாத மக்களுக்குப் 'மார்புப் புற்றுநோய், மற்றும் சாதாரண புற்று நோய்' வருவது மிகவும் குறைவாகவுள்ளது என்று அண்மையில் எங்கோ வாசித்த ஞாபகம்!

 

பசுவின் பால், பசுவின் கன்றுக்காக வடிவமைக்கப் பட்டதேயன்றி, மனிதனுக்காக அல்ல என்றே நினைக்கிறேன்! :D  

உண்மை புங்கையார். பழஞ்சோத்து தண்ணியை எனது பாட்டனாருடன் வெங்காயம் கடித்து தோட்டத்தில் குடித்த பசுமையான நினைவுகள் உண்டு.

உடலை முறித்து வேலை செய்யும் தொழிலாளிகள் காலையில் ஒரு பிளா உடன் கள்ளு காலை உணவாக அருந்துவார்கள்.

எனது பூட்டியாரும் தேநீர் காலையும் மாலையும் இலவசமாக கொடுத்ததாக சொன்னார்.

பசு மாட்டு பால் ஒன்று தான் குழந்தைகளுக்கு கொடுக்க கூடியது. அதனால் தான் நாம் தெய்வமாக வழிபட்டோம். மற்றும் மனிதருக்கும் மாட்டுக்கும் மரபணு தொடர்பு நிறைய உண்டு.

பால் குழந்தைகளுக்கானது. பெரியோர்களுக்கு இல்லை . அப்படியிருந்தால் இயற்கை தாய்களை அறுபது வயது வரை பால் சுரக்க வைக்கும் .

சுகர் என்ற வார்த்தையே தமிழ் என்று எங்கள் கறுப்பு சேக்ஸ்பியர்களுக்கு தெரியவில்லை.

நானும் 2002 இன் பின் தேநீர், கோப்பி அருந்துவதில்லை. உறவினர் தரும் தேநீரில் 3 கரண்டி சீனி இருக்கும். குடிக்கும் போதே எனக்கு தலை கிருகிறுத்துவிடும்.

இங்கு நீரிழிவு நோயாளர் சீனி பாவிப்பதை நிறுத்தினால் தாம் சீனி பாவிக்கவில்லை என்று பேதையாக நம்புகின்றனர்.

சராசரி வடஅமெரிக்க பிரசைகள் மற்ற உணவுகள் ஊடாக 10 கரண்டி சீனியை உட்கொள்கின்றனர்.

கெட்சப்,பாண், தயாரித்த உணவுகள் எல்லாவற்றிலும் சீனி உண்டு .

ஏன் நாம் வாங்கும் ஒரு டொலர் உப்பு பெட்டியை திருப்பி பார்த்தால் அதிலும் சீனி!

மக்டொனால்டில் பிரெஞ்ச் பிரைஸ் தவிர மற்றைய எல்லா உணவிலும் சீனி உண்டு.

வெள்ளை கோட்டு பீட்டருகளுக்கு இது தெரிந்துக்குமோ தெரியாது.

குழுசைய போட்டுவிட்டு தராதரம் இல்லாத உணவை உண்டு இன்னும் நோய்வாய் படுகிறார்கள்.

Edited by விவசாயி விக்

SUGAR, BY THE NUMBERS

26 teaspoons: the amount of sugar Canadians consume daily, on average. This includes sugar found naturally in things like fruit and milk, and sugar added to beverages and food.

35 per cent: the amount of added sugars that account for the total daily sugar intake of Canadians. That percentage peaks at 46 per cent for teen boys.

41 teaspoons: the amount of sugar boys age 14-18 consume daily, the highest amount of any age group.

14.3 per cent: the amount that soft drinks account for in terms of the total daily sugar intake of Canadians.

A 591-millilitre serving of Coca-Cola has 70 grams of sugar, or nearly 18 teaspoons.

A 450-millilitre serving of Minute Maid orange juice has 45 grams of sugar, or nearly 12 teaspoons.

A half-cup of Ragu Old World Style Original pasta sauce has eight grams, or two teaspoons.

A 100-gram serving of Activia blueberry yogurt has 11 grams, or nearly three teaspoons, of sugar.

Source: StatsCan

http://www.yarl.com/forum3/index.php?showtopic=137231#entry992075

மேலுள்ள குப்பை உணவுகளை உண்டு என்ன முறையான வைத்தியம் பார்த்தாலும் பிரச்சினை தான்.

பெட்ரோல் காருக்கு டீசலை போட்டுவிட்டு பிரச்சினை என்று மெக்கானிக்கிடம் தொடர்ந்து போவது போல்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதலில் உங்கள் குடும்பத்த்தில் நிகழ்ந்த நிகழ்விட்கு வருந்துகிறேன் .

 

இதில் நீங்கள் சொல்லுவது அதிகமானவை , மருத்துவ உலகில் நிகழும் தவறுகள் .., மருத்து உலகில் நிகழும் தவறுகளால் உலகம் முழுவதும் மிக அதிக அளவிலான மக்கள் பாதிக்கபடுகிறார்கள் . உண்மையான இலக்கங்கள் மாறுபடலாம் , ஆனால் எனது ஆசிரியர் ஒருவர் சொன்னார் , அமெரிக்காவில் நடக்கும் தவிர்க்க கூடிய தவறுக்கால் இறப்பவர்களின் எண்ணிக்கை , ஒவ்வொரு நாளும் இரண்டு போயிங் விமானங்கள் வானில் நேருக்கு நேரே மோதினால் இறப்பவர்களின் எண்ணிக்கையை விட கூட என்று ..உங்களுக்கு மருத்த்துவமனைக்கு போக வேண்டி வந்தால் , தவறு நடப்பதார்க்கான சந்தர்ப்பம் , வீதியில் விபத்த்துக்குள்ளவர்த்தை விட கூடியது ...

 

இதை தவிர்க்க வழி இருக்கிறதா ...அதுதான் 1008 ஆராச்சிகள் செய்கிறார்கள் , முடிவுகள் வர வர திருத்துகிறார்கள்/திருந்துகிறார்கள் , ஆனால் இருப்பதில் நல்லதை செய்கிறார்கள் ;

 

அதற்காக மருத்துவத்தை தவிர்ப்பது , குளத்த்தோடு கோவித்த்து கொண்டு .....ஏதோ செய்வது போல இருக்கும் ...

 

இங்கே இருக்கிற தேவை, பணம் , காழ்ப்புணர்ச்சிகள் காரணமாக , ஒவ்வொரு நாளும் குறைதான் ...சில குறைகள் உண்மையானவை , தேவையானவை , சில/பல , எதுவித அடிப்பதையும் அறிவியலும் இல்லாதது ..

 

இதை ஒரு பொதுவான கருத்தாத்த்தான் எழுதுகிறேன் ..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"Now comes a study in the current issue of the Journal of Patient Safety that says the numbers may be much higher — between 210,000 and 440,000 patients each year who go to the hospital for care suffer some type of preventable harm that contributes to their death, the study says."

 

சும்மா கூகல் இல் தட்ட வந்தது 210000/365 = 575

 

இந்தமுறை மலேசியாவில் காணாமல் போன விமானத்த்தில் இருந்தவர்கள் 239??

முதலில் உங்கள் குடும்பத்த்தில் நிகழ்ந்த நிகழ்விட்கு வருந்துகிறேன் .

இதில் நீங்கள் சொல்லுவது அதிகமானவை , மருத்துவ உலகில் நிகழும் தவறுகள் .., மருத்து உலகில் நிகழும் தவறுகளால் உலகம் முழுவதும் மிக அதிக அளவிலான மக்கள் பாதிக்கபடுகிறார்கள் . உண்மையான இலக்கங்கள் மாறுபடலாம் , ஆனால் எனது ஆசிரியர் ஒருவர் சொன்னார் , அமெரிக்காவில் நடக்கும் தவிர்க்க கூடிய தவறுக்கால் இறப்பவர்களின் எண்ணிக்கை , ஒவ்வொரு நாளும் இரண்டு போயிங் விமானங்கள் வானில் நேருக்கு நேரே மோதினால் இறப்பவர்களின் எண்ணிக்கையை விட கூட என்று ..உங்களுக்கு மருத்த்துவமனைக்கு போக வேண்டி வந்தால் , தவறு நடப்பதார்க்கான சந்தர்ப்பம் , வீதியில் விபத்த்துக்குள்ளவர்த்தை விட கூடியது ...

இதை தவிர்க்க வழி இருக்கிறதா ...அதுதான் 1008 ஆராச்சிகள் செய்கிறார்கள் , முடிவுகள் வர வர திருத்துகிறார்கள்/திருந்துகிறார்கள் , ஆனால் இருப்பதில் நல்லதை செய்கிறார்கள் ;

அதற்காக மருத்துவத்தை தவிர்ப்பது , குளத்த்தோடு கோவித்த்து கொண்டு .....ஏதோ செய்வது போல இருக்கும் ...

இங்கே இருக்கிற தேவை, பணம் , காழ்ப்புணர்ச்சிகள் காரணமாக , ஒவ்வொரு நாளும் குறைதான் ...சில குறைகள் உண்மையானவை , தேவையானவை , சில/பல , எதுவித அடிப்பதையும் அறிவியலும் இல்லாதது ..

இதை ஒரு பொதுவான கருத்தாத்த்தான் எழுதுகிறேன் ..

கனடாவில் இரு தமிழ் ஆண் தாதிகள் இந்த பிரச்சினையை தீர்க்க ஒவ்வொரு வருடமும் பெரிய கருத்தாடல் அரங்கத்தை நிகழ்த்துகிறார்கள்.

இங்கு நான் மருத்துவரிடம் போக வேண்டாம், மருந்தெடுக்கவேண்டாம் என்று கூறவில்லை.

நல்ல உண்மையான இயற்கை உணவுகளை உண்டு வருமுன் காக்கவும், வந்தபின் தடுக்கவும் தான் கூறுகிறேன்.

இங்குள்ள உணவு தராதர குறைவால் தான் நிறைய பிரச்சினை.

நான் ஒன்றும் மருத்துவமனை மேல் வழக்கு போடவில்லை.

ஒவ்வொருவருடமும் குழந்தையின் பிறந்த நாள் அன்று காசு சேர்த்து மருத்துவமனைகளுக்கு நன்கொடையாக கொடுக்கிறேன்.

என் குடும்பத்திற்கு விவசாயம் செய்து நல்ல உணவை கொடுக்க முயற்சிக்கிறேன்.

எனது இரத்தங்களும் நல்லா இருக்கோணும் என்று அவா. :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல உண்மையான இயற்கை உணவுகளை உண்டு வருமுன் காக்கவும், வந்தபின் தடுக்கவும் தான் கூறுகிறேன்.

இங்குள்ள உணவு தராதர குறைவால் தான் நிறைய பிரச்சினை.

 

 

உங்கள் கருத்துக்கு நன்றி...

இந்த தகவல்களை சரி பார்த்து சொல்லுங்கள்..எங்காவது ஒரு விஞ்ஞான சாஞ்சிகையில் இருந்து எடுத்து வாருங்கள். விவாதிப்போம் ...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

.இன்றைய காலகட்டத்தில் இயற்கையான உண்வு என்பதே இல்லை.  அந்த இயற்கையான உணவுகளுக்கான விதை, உரங்களில்கூட இரசாயனம் கலந்துதான் இருக்கிறது.  இய்கையான உணவு என்பதும் வியாபாரத்தின் புதியதொரு உத்தியே அல்லாமல் உண்மையிலேயே இயற்கையான உணவு கிடையாது.

வெளி நாடுகளில் டாக்குத்தர்மார் சரியில்லாததற்கும் காரணங்கள் இருக்குப் பாருங்கோ. பிள்ளை டாக்குத்தராய் வரவேணும் எண்டு கரிபியன், அங்கு, இங்கு எண்டு அனுப்பி டாக்குத்தர் ஆக்கிப் போடுவினம். டாக்குத்தராய் வந்த பிறகு அந்தப் பிள்ளைக்கு என்ன தெரியும் வைத்தியம் செய்ய??. எங்களில் பழகும். எங்களுக்கு லக்கிருந்தால் சரி. இல்லாட்டி .......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெளி நாடுகளில் டாக்குத்தர்மார் சரியில்லாததற்கும் காரணங்கள் இருக்குப் பாருங்கோ. பிள்ளை டாக்குத்தராய் வரவேணும் எண்டு கரிபியன், அங்கு, இங்கு எண்டு அனுப்பி டாக்குத்தர் ஆக்கிப் போடுவினம். டாக்குத்தராய் வந்த பிறகு அந்தப் பிள்ளைக்கு என்ன தெரியும் வைத்தியம் செய்ய??. எங்களில் பழகும். எங்களுக்கு லக்கிருந்தால் சரி. இல்லாட்டி .......

 

இது ஒரு அடிப்படையும் இல்லாத தவறான தகவல் ..முற்றுமுழுதாக காழ்ப்புனர்ச்சியால் வருகின்ற கதை ...இந்தியாவியால் இருந்து, இலங்கையில் இருந்து வைத்தியர்கள் வரலாம் என்றால் ஏன் கரிபியன் தீவுகளில் இருந்து வர முடியாது ...

இப்படியான உலகில் தான் நாங்கள் இருக்கிறோம் என்பதுதான் கவலை ..எனக்கு தனிப்பட்த வகையில் பலரை தெரியும், அவர்கள் மிகவும் திறமையானவர்கள் ...உணமையில் சாதாரண கனேடிய , USA வைத்தியர்களை விட சிறந்தவர்கள் ...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கரிபியன் தீவுகளில் , யாரையும் சும்மா பாஸ் பண்ணி விடுவதில்லை ...அவர்கள் பாவிக்கிற சொல் "weedsl" கிட்த்தட்டத 1/3 -2/3 பகுதியான ஆக்கள் fail விடுவார்கள் ...மிகுதி ஆக்களே வைத்தியர் ஆக வருகிறார்கள் அவர்கள் எல்லோருக்குமே ரெசிடென்சி கிடைப்பதில்லை ..அவர்கள் மிகுந்த கடினாத்த்துக்கு இடையில் படிக்கிறார்கள் ....மிகவும் பாரதூரமான குற்றம் ...அவர்கள் பாவம் ...அப்படி நினைக்கவே வேண்டாம்

உங்கள் கருத்துக்கு நன்றி...

இந்த தகவல்களை சரி பார்த்து சொல்லுங்கள்..எங்காவது ஒரு விஞ்ஞான சாஞ்சிகையில் இருந்து எடுத்து வாருங்கள். விவாதிப்போம் ...

தாரளமாக விவாதிக்கலாம்.

முதலில் இப்போதுள்ள ஜி.எம்.ஒ சோளம், கோதுமை, சோய் போன்றவை மனிதருக்கு நல்லது என்று தனியாரால்(Independent research) 10 வருடங்களுக்கு செய்த ஆராய்ச்சி ஒன்றை உங்களால் பதிய முடியுமா?

இந்த ஜி எம் ஒ உணவு எங்களுக்கு நல்லதென்றால் ஏன் அவற்றை தயாரிக்கும் நிறுவனங்கள் லேபல் பண்ண மறுக்கின்றன?

ஏன் ராஜபக்சே ரவுண்ட் அப்பை தடை செய்தார்?

இங்கே ஒரு சிறி லங்கா ஆராய்ச்சி கட்டுரை. இதில் மருத்துவர்களுக்கு தெரியாத வருத்தம் என்று குறிப்பிடுகிறார்கள். அதாவது விஞ்ச்ஞானதிற்கே இன்னும் தெரியாது. உணவு உற்பத்தியில் பாவிக்கப்படும் இரசாயனங்களே மூலம்.

எங்கட வடக்கு மாகாணம் படு மோசம்.

https://www.documentcloud.org/documents/1084784-jayasumana-glyphosate-study.html

Official studies in Sri Lanka have found heavy metals and pesticides including glyphosate in the environment of affected areas and in urine samples of kidney patients. One study published last August by Sri Lankan health officials in partnership with the World Health Organization found that urine samples of sick patients had elevated levels of cadmium, and that 65% of patients’ urine samples also had traces of glyphosate.

El Salvador has also identified traces of heavy metals in a small number of affected communities, and glyphosate is used widely in the country. Dr. Carlos Orantes, the director of El Salvador’s national research program into the epidemic, said his team is working on developing a map of areas with hard water within El Salvador’s borders.

“Our primary principal is to protect human lives,” said Orantes, a proponent of banning pesticides including glyphosate in El Salvador.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=137443

இங்கே ஒரு சிறி லங்கா ஆராய்ச்சி கட்டுரை. இதில் மருத்துவர்களுக்கு தெரியாத வருத்தம் என்று குறிப்பிடுகிறார்கள். அதாவது விஞ்ச்ஞானதிற்கே இன்னும் தெரியாது. உணவு உற்பத்தியில் பாவிக்கப்படும் இரசாயனங்களே மூலம்.

எங்கட வடக்கு மாகாணம் படு மோசம்.

https://www.documentcloud.org/documents/1084784-jayasumana-glyphosate-study.html

Official studies in Sri Lanka have found heavy metals and pesticides including glyphosate in the environment of affected areas and in urine samples of kidney patients. One study published last August by Sri Lankan health officials in partnership with the World Health Organization found that urine samples of sick patients had elevated levels of cadmium, and that 65% of patients’ urine samples also had traces of glyphosate.

El Salvador has also identified traces of heavy metals in a small number of affected communities, and glyphosate is used widely in the country. Dr. Carlos Orantes, the director of El Salvador’s national research program into the epidemic, said his team is working on developing a map of areas with hard water within El Salvador’s borders.

“Our primary principal is to protect human lives,” said Orantes, a proponent of banning pesticides including glyphosate in El Salvador.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=137443

 

 

 

 

என்னுடைய தனிப்பட்ட கருத்து. சரி பிழை தெரியாது.
 
அனுராதபுரத்தில் விவசாயத்திற்கு குளங்களில் இருந்து தண்ணீர் வருகிறது. குளங்களிற்கு காடுகளில் இருந்து தண்ணீர் சேர்கிறது. இப்படி சேரும் தண்ணீரில் பாரமான மூலகங்கள் செறிவடையலாம்.
 
When the storm water washes the jungle floor and get collected in the tanks, there is possibility heavy metal concentration can increase significantly. This can happen due to two reasons:   
 
 
1. This water collection cycles has been occurring for the last many many years. It is plausible the tank water is already having high concentration of cadmium which was collected repeatedly many times from the jungle floor.
 
2. During hot weather conditions water vaporization increases the the density
 
3. Workers drink tank water without any treatment. May be they boil it. But boiling wont remove heavy metals. 
    
 
சிறுநீரக நோய்க்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். me thinks !

நன்றி ஈசன்.

நான் பதிவு செய்த ஆராய்ச்சி கட்டுரையிலும் நேரடி நீர் உதாரணங்களை சோதிக்கவில்லை.

அதனால் எல்லா கருத்தும் இங்கு அலசவேண்டியது.

உங்கள் வாதங்கள் மிகவும் அருமையானவை.

நீங்கள் கூறுவது இயற்கையாக பல்லாயிரகணக்கான வருடங்களாக நடக்கும் நிகழ்வு.

ஆயிரம் ஆண்டுகள் கமம் இயற்கையாக செய்த பகுதியில் இப்படி ஒரு வருத்தம் முன்பு ஏற்பட்டதாக இல்லை. அதனால் வேறு காரணிகள் இருக்கவேண்டும்.

இணைத்தமைக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

1009827_10201804990304222_262213438_n.jp

 

இன்சுலின் மரணங்களும் மறைக்கப்படும் உண்மைகளும்!
ம.செந்தமிழன்

அலோபதியின் அறிவியல் மிக வினோதமானது. நோய்வாய்ப்பட்ட மக்களிடம் அம்முறை ஒரே ஒரு கேள்வியைத்தான் மறைமுகமாகக் கேட்கிறது. ‘நீ தற்கொலை செய்துகொள்ள விரும்புகிறாயா அல்லது கொலை செய்யப்பட விரும்புகிறாயா?’ என்பதே அக்கேள்வி.

’நாங்கள் வாழவே விரும்புகிறோம்’ என மக்கள் கதறினால், ‘உனக்கு வந்த நோயிலிருந்து மீண்டு உன்னால் வாழவே முடியாது. ஒன்று நோயுடன் கிடந்து நீயே செத்துப் போ. அல்லது எனது மருந்துகளால் நான் உன்னைக் கொலை செய்கிறேன்’ என்பதே அதன் மறைமுகமான பதில். எல்லா அலோபதி மருந்துகளுமே எதிர்விளைவு கொண்டவைதான். அதாவது, எந்த நோய்க்காக மருந்து கொடுக்கப்படுகிறதோ அந்த நோயையும் குணப்படுத்தாமல், சம்பந்தமே இல்லாத வேறு பல நோய்களையும் உருவாக்குபவைதான் அலோபதி மருந்துகள். 

சர்க்கரை நோய் அலோபதியின் வணிகச் சந்தையை மிக விரிவானதாக மாற்றிவிட்டிருக்கிறது. பல ஆயிரம் கோடிகள் இந்தச் சந்தையில் புழங்குகின்றன. மரபுவழி மருத்துவ முறைகளால், சர்க்கரை நோயைக் குணப்படுத்த முடியும் என்று நாம் கூறினால், தமது சந்தைக்குப் பெரும் ஆபத்து வந்து சேரும் என்ற பதட்டம் அவர்களில் சிலரை ஆட்கொள்கின்றது.
இப்போதும் சில அலோபதி மருத்துவர்கள், அவரவர் இணையப் பக்கங்களில், என்னை ‘சமூக விரோதி’ என்றே குறிப்பிட்டு எழுதிக் கொண்டுள்ளனர். ஒரு மருத்துவர் ஒருபடி மேலே சென்று தமது இயலாமையையும் ஆற்றாமையையும் வெளிப்படுத்திவிட்டார்.

’அலோபதிக்கு எதிராக எழுதப்படும் கட்டுரைகளுக்கு விருப்பம் தெரிவிக்கும் (like) நபர்களை நாங்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறோம். அந்த நபர்கள் எங்களிடம் மருத்துவத்துக்கு வரும்போது ‘கவனித்து’ அனுப்புவோம்’ என்று எழுதியுள்ளார் அந்த ‘மருத்துவர்’.

ஒருவேளை விஷ ஊசி போட்டுக் கொன்றுவிடுவாரோ!
சரி, அப்படியே கொலை செய்தாலும் நாம் அவர்கள் மீது வழக்கு கூட தொடுக்க இயலாது. நாம்தான் அவர்கள் நீட்டும் படிவங்களில் எல்லாம் என்ன இருக்கிறது எனக் கூடப் படிக்காமல் கையொப்பம் இட்டுத்தருகிறோமே. 

ஆனால், உண்மையின் வலிமைக்கு முன், உலகின் எந்தச் சக்தியும் நிற்கவும் நிலைக்கவும் முடியாது. எந்த ஊசி போட்டும் உண்மையின் குரலை ஒடுக்கிவிட முடியாது. உலகில் உண்மை பேசுவோர், அறிவையும், ஆயுதங்களையும் நம்பி அல்ல, மனசாட்சியையும் இயற்கையின் பேராற்றலின் ஆசியையும் நம்பிப் பேசுகின்றனர். ஆகவே, இந்த மிரட்டல்கள் பரிதாபத்துகுரியவையே தவிர, பயப்படத் தகுந்தவை அல்ல.

உண்மை பேசுவோர் எல்லாத் துறைகளிலும் இருக்கத்தான் செய்கின்றனர். அலோபதித்துறை எண்ணற்ற நல் மனதுக்காரர்களைக் கொண்ட துறைதான். அவர்களில் இருவரை உங்களுக்கு அறிமுக செய்ய விழைகிறேன்.

அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் இரு அலோபதி மருத்துவர்கள் அவர்கள். ஒருவர், என்ரிகோ பொர்டியூஸ், MPH உதவி ஆய்வாளர். மற்றவர், பேராசிரியர். ட்ரிவர் ஆர்சர்ட், MD. இருவரும் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தின் தொற்றுநோயியல் துறையைச் சேர்ந்தவர்கள். இன்சுலின் பயன்படுத்தும் சர்க்கரை நோயாளிகளின் ஆயுட்காலம் பற்றிய விரிவான ஆய்வு ஒன்றினை இவர்கள் மேற்கொண்டனர்.

இன்சுலின் சிகிச்சை அறிமுகமான 1920களில் என்ன விதமான மாற்றங்கள் நடந்தன என்று அவர்கள் அறிவித்துள்ளார்கள். ’இன்சுலின் சார்ந்த சர்க்கரைநோயின் மரணங்கள்’ என்பது அவர்களது ஆய்வுநூலின் மையக் கருத்து. ஆய்வின் தொகுப்புரையை அவர்கள் பின்வருமாறு தொடங்கியுள்ளனர்:

’1920களில் இன்சுலின் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், இன்சுலின் சார்ந்த சர்க்கரை நோயாளிகள் மரணம் அடையும் விதத்தில் அதிர்ச்சியளிக்கத்தக்க மாற்றம் ஏற்பட்டது. இன்சுலினுக்கு முன்பு, சர்க்கரை நோயாளிகள் கோமா நிலைக்குச் சென்று மரணமடைந்தனர். இன்சுலிக்குப் பின்னர், அதைப் பயன்படுத்திய மக்கள், சிறுநீரகச் செயலிழப்பு மற்றும் இதய நோய் ஏற்பட்டு மரணமடைவது அதிகரித்துவிட்டது.

இன்சுலின் பயன்படுத்தும் நோயாளிகளின் மரண எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. குழந்தைப் பருவ இன்சுலின் நோயாளிகளைப் பொறுத்தவரை, தற்போது இன்சுலின் பயன்படுத்துவோரில் 15 சதவீதத்துக்கு அதிகமானவர்கள் அவர்களது 40வது வயதிலேயே மரணமடைவார்கள். அந்த நேரத்தில், நாட்டின் இறப்பு விகிதம் இப்போது உள்ளதைக்காட்டிலும் 20 மடங்குகள் அதிகமாக இருக்கும்’ 
மிக நீண்ட ஆய்வறிக்கையின் தொகுப்புரை (summery) இவ்வாறு துவங்கிறது.

தொடர் இன்சுலின் பயன்பாடு மனித உடலைச் சீரழிக்கும் என்பதை அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளின் அரசு சுகாதாரத் துறைகளே வெளிப்படையாக அறிவித்துக்கொண்டுதான் இருக்கின்றன. மேற்கண்ட ஆய்வறிக்கையைக்கூட அமெரிக்காவின் ’அமெரிக்க உடல் நல மற்றும் மனிதச் சேவைத் துறை’தான் வெளியிட்டுள்ளது.

பல ஆண்டுகளாக இன்சுலின் குத்திக்கொள்ளும் நம் சமூகத்தவர் சிறுநீரகச் செயலிழப்புக்கு ஆளாகி, டயாலிசிஸ் எனும் செயற்கை இரத்தச் சுத்திகரிப்புக்கு ஆட்பட்டு, சில காலத்தில் மரணமடைவதை நாம் நேரடியாகப் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்.

மரணமடையாத மக்கள் கூட, விரும்பிய இடங்களுக்குப் போக இயலாமல் விரும்பிய உணவுகளைக்கூட உண்ண இயலாமல் நடைபிணங்களாக அலைவதையும் பார்க்கிறோம்தானே. இவை எல்லாம், சர்க்கரை நோயால் வந்தவையா? அல்லது அந்த நோய்க்கு வழங்கப்பட்ட இன்சுலினால் வந்தவையா என இந்த நாட்டின் 120 கோடி மக்களில் எவருமே கேட்கக் கூடாதா?
அப்படி எழுப்பப்படும் கேள்விகளுக்கு இதுவரை எந்த அலோபதி மருத்துவராவது நேர்மையாக பதில் கூறியுள்ளாரா? 

இந்த இன்சுலின் சர்க்கரை நோயை குணப்படுத்தவும் இல்லை; நோயாளியின் உயிருக்கு உத்தரவாதம் தரவும் இல்லை. மாறாக, அந்த நோயாளி சற்றும் எதிபாராத பல உயிர் ஆபத்து நோய்களை உருவாக்குகிறது. பின்னர் எதற்கு இப்படி ஒரு ‘சிகிச்சை’ என்று மக்கள் கேட்க வேண்டும்.

மாடுகளைத் தார்க்குச்சியால் குத்தினால் கூட, குத்தியவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க விலங்கு நல வாரியம் இருக்கிறது. மனிதர்களுக்குக் கொடுக்கப்படும் மருந்துகளால் ஏற்படும் மரணங்களைக் கேட்கத்தான் முறையான சட்ட அமைப்புகள் இல்லை.

பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தங்கள் அறிக்கையில் கூறியுள்ள வேறு சில தகவல்களையும் பார்ப்போம்.

’ஆயுள் காப்பீடு செய்துகொண்ட மக்களின் மரணம் குறித்து நடத்தப்பட்ட ஆய்வு முடிவு இது. 1935-63 ஆண்டுகாலத்தில், இன்சுலின் எடுத்துக் கொண்ட 30 வயதுக்குக் குறைவான மக்களின் மரண எண்ணிக்கை எதிர்பார்க்கப்பட்டதைக்காட்டிலும் 6 மடங்குகள் அதிகமாக இருந்தது’

ஆயுள் காப்பீடு எடுத்துக் கொள்ளும்போது,காப்பீட்டு நிறுவனங்களுக்கு மக்களின் ஆயுள்காலம் குறித்த ஒரு கணக்கு இருக்கும் அல்லவா, அந்தக் கணக்கைக் காட்டிலும் 6 மடங்குகள் அதிகமாக மரணங்கள் இன்சுலின் நோயாளிகளுக்கு ஏற்பட்டது. 

‘இந்த மரணங்கள் அனைத்திலும், இதய நோய், கழுத்துப்பட்டை நரம்பு நோய்கள் மிக அதிகளவில் இருந்தன. ஜோஸ்லின் க்ளினிக் மற்றும் வேறு சில குழுக்களில் நடத்தப்பட்ட ஆய்வுகள், அமெரிக்க மக்கள் தொகையில் ஏற்படும் பொதுவான மரண எண்ணிக்கைக்கும் இன்சுலின் நோயாளிகளின் மரணங்களின் எண்ணிக்கைக்கும் இடையிலான வேறுபாடு குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக இருந்ததைக் காட்டுகிறது. 1931-59 காலத்தில் ஜோஸ்லின் க்ளினிக் நோயாளிகளின் மரண ஒப்பீட்டு ஆய்வு மசாசூசெட்ஸில் இருந்த பொதுமக்களின் வயது, பாலினம் (ஆண்/பெண்) ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்டது. 

அதாவது, இந்த க்ளினிக்கில் இருந்த இன்சுலின் நோயாளிகள் மற்றும் மசாசூசெட்ஸ் நகரின் மக்கள் தொகையில் ஏற்பட்ட மரணங்கள் ஆகிய இரண்டையும் ஒப்பிட்டு நடத்தப்பட்டது இந்த ஆய்வு.

சர்க்கரை நோயாளிகளின் மரணம் எல்லா வயதுகளிலும் அதிகமாகவே காணப்பட்டது. 0-9 வயதில் இருந்த ஆண் குழந்தைகளில் மட்டும் இந்த எண்ணிக்கை குறைவாக இருந்தது. ஆண்களைப் பொறுத்தவரை, எதிர்பார்க்கப்பட்ட மரண விகிதத்தைவிட, 3.75 மடங்குகள் அதிகமானோர் இறந்துபோனார்கள்.’

அதாவது ’10 பேர் இறந்துபோவார்கள் எனக் கணக்கிட்டால், ஏறத்தாழ 38 பேர் இறந்தார்கள்’ என்கின்றனர் அமெரிக்க மருத்துவ ஆய்வாளர்களான என்ரிகோ பொர்டியூஸ் மற்றும் ட்ரிவர் ஆர்சர்ட் ஆகியோர்.

சர்க்கரை நோய் என்ற காரணத்திற்காக அலோபதி மருத்துவரை அணுகும் மக்களுக்கு, இரண்டு வழிகள் காட்டப்படுகின்றன. ஒன்று, அலோபதி மருந்துகளை உட்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக செத்தொழிய வேண்டும். அல்லது, நோயினால் செத்தொழிய வேண்டும். ஆகக் கடைசியில், அவர் நோயைக் குணப்படுத்தும் இல்லை, எதிர்விளைவே இல்லாத மருந்துகளையும் பரிந்துரைப்பதும் இல்லை. 

சர்க்கரை நோயை ‘அமைதியான கொலைகாரன் (silent killer)’ என்கிறது அலோபதி மருத்துவம். உண்மையில் ‘அமைதியாக கொலை’ செய்வது சர்க்கரை நோயா? அலோபதி மருந்துகளா? என்பதைக் கூட புரிந்துகொள்ள முடியாமல் போனால், நமக்கு வழங்கப்பட்ட வாழ்க்கையை நாம் வீணடிக்கிறோம் எனப் பொருள்.

 

https://www.youtube.com/watch?v=YUFUNfLkTck

 

https://play.google.com/store/books/details/Senthamizhan_Maniarasan_Inippu_இன_ப_ப?id=84zbAgAAQBAJ&hl=en

https://www.amazon.in/dp/B00IITSJ8U

பிள்ளைக்கு பாம்பு கடித்தால் உங்களை வேப்பிலை அடிக்க சொல்லுவாங்க . :icon_mrgreen:

தங்கட பிள்ளையை கோட்டு போட்டவரிடம் கொண்டுபோய்விடுவார்கள் . :lol:

 

முன்னோர் எமக்கு விட்டு சென்ற இயற்கை மூலிகைளும் உணவு பழக்கவழக்கங்களும் அருமருந்துகள் தான் ஆனால் விஞ்ஞானம் இவ்வளவு வளர்ந்து எவ்வளவு ஆராய்சிகளின் பின் கண்டு பிடித்த மருந்துகளை குறை சொல்வதை   எக்காலமும் ஏற்கமுடியாது .

 

அலை ,கரிபியனின் போய் வைத்தியர் தொழில் படித்துவிட்டு வருவது ஒன்றும் இலகு இல்லை .எல்லாம் அமெரிக்க பல்கலைக்கழகங்கள் படிப்பு முடிய கனேடிய லைசென்ஸ்(அது பெரிய பாடு ) வேறு எடுக்கவேண்டும் .கனடாவில் வைத்தியராவதை விட கஷ்டம் ஏதுமில்லை என்று படித்தவர்கள் புலம்புகின்றார்கள் :D

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளைக்கு பாம்பு கடித்தால் உங்களை வேப்பிலை அடிக்க சொல்லுவாங்க . :icon_mrgreen:

தங்கட பிள்ளையை கோட்டு போட்டவரிடம் கொண்டுபோய்விடுவார்கள் . :lol:

 

முன்னோர் எமக்கு விட்டு சென்ற இயற்கை மூலிகைளும் உணவு பழக்கவழக்கங்களும் அருமருந்துகள் தான் ஆனால் விஞ்ஞானம் இவ்வளவு வளர்ந்து எவ்வளவு ஆராய்சிகளின் பின் கண்டு பிடித்த மருந்துகளை குறை சொல்வதை   எக்காலமும் ஏற்கமுடியாது .

 

அலை ,கரிபியனின் போய் வைத்தியர் தொழில் படித்துவிட்டு வருவது ஒன்றும் இலகு இல்லை .எல்லாம் அமெரிக்க பல்கலைக்கழகங்கள் படிப்பு முடிய கனேடிய லைசென்ஸ்(அது பெரிய பாடு ) வேறு எடுக்கவேண்டும் .கனடாவில் வைத்தியராவதை விட கஷ்டம் ஏதுமில்லை என்று படித்தவர்கள் புலம்புகின்றார்கள் :D

 

இங்கு யாரும் விஞ்ஞான மருத்துவம் வேண்டாம் அல்லது அது நல்லதல்ல என்று பொத்தாம் பொதுவாக பேசவில்லை. 

 

சக்கரை நோயிலிருந்து விடுதலை என்பது மிகவும் அரிதாகவே உள்ளது. அதனை இயற்கை முறையில் குணப்படுத்தலாம் என்பதையே சுற்றிக்காட்டுகிறார்கள். விஞ்ஞான ரீதியாக முடியாததை இயற்கை குணப்படுத்துகின்றபோது அதனை வேண்டாம் என்று சொல்கின்றீர்களா? 

 

பாம்பு கடித்தால் மருத்துவரிடம் தான் போகின்றோம். காரணம் அதற்கான இயற்கை மூலிகைகள் எங்கும் அருகில் இருப்பதில்லை. நவீனமருத்துவத்தால் பாம்புகடியிலிருந்து குணமடைய வைக்க முடியும் என்பதை அனைவரும் ஏற்றுக்கொண்டதனால். 

 

சக்கரை நோயை விஞ்ஞான மருத்துவம் கட்டுப்படுத்தி வைத்திருக்கும் (குணப்படுத்தாது) என்பதை விட அதனால் ஏற்படும் பக்கவிளைவுகளே எதிர்வினைகளே அதிகம். 

 

இது எனது நெருங்கிய உறவினரின் அனுபவம்:

  • எனது உறவினர்க்கு இந்த வருத்தம் எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து இருக்கின்றது. இதில் பல வகை இருக்கின்றது பின்னர் தான் அறிந்து கொண்டேன். எனது உறவினர்க்கு வந்திருப்பது எந்த வகை என்பது எனக்கு தெரியாது. தெரிந்துகொள்ளவும் விரும்பவில்லை.

    பதினைந்து வருடங்களிற்கு மேலாக அவர் இரத்தப்பரிசோதைனை செய்துவருகின்றார். குணமடைவதாக தெரியவில்லை. ஆரம்பத்தில் மாற்றிவிடலாம் என நம்பிக்கை இருந்தது. காலம் செல்ல செல்ல அந்த நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது. இதனை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கமுடியுமே தவிர முழுவதுமாக (மேலத்தேய வைத்தியமுறையின் படி) குணமாக்கமுடியும் என்ற நம்பிக்கை ஒருவருக்கும் இல்லை. எனது உறவினரும் அந்த நம்பிக்கையை கைவிட்டுவிட்டார். இந்தியா சென்று குணப்படுத்தலாம் என்பது பற்றியும் ஆராய்ந்துள்ளோம். இனி குணமடைந்தால் என்ன இல்லாட்டில் என்ன என்றே அவரும் வாழ்ந்துவருகின்றார். அறுபது வயதை அன்மித்துக்கொண்டிருக்கும் அவர் உணவிலும் தற்பொழுது கட்டுப்பாடு குறைத்துவிட்டார். விரும்பியதை சாப்பிடுகிறார். இனி குணமடையாது எனவே இருக்கும் வரை விரும்பியதை சாப்பிட்டு வாழலாம் என்பதே அவரின் தற்போதைய மனநிலை. ஊசியும் இரத்தப்பரிசோதனையும் என்றே வாழ்ந்து வருகின்றார்.

    இந்த மனநிலை எனது உறவினர்க்கு மட்டுமல்ல இங்கே வெளிநாடுகளில் வாழ்கின்ற (தமிழர்கள்) பலரிற்கு உள்ளது.

     

    இது ஒரு நோய் அல்ல. உடலில் ஏற்படும் ஒரு தற்காலிக நிலையே. இந்த தற்காலிக நேரத்தில், அலோபதி மருத்துவத்தின் பார்வையில் படும் மக்கள் நிரந்தர நோயாளிகள் ஆக்கப்படுகின்றனர். அலோபதி மருந்துகள் உடலின் இயற்கையான இன்சுலின் சுரப்பைக் கட்டுப்படுத்தி வைக்கின்றன. ஆகவே, உடல் தனது இயல்பான நிலைக்குத் திரும்பவே இயலாமல் கடும் துன்பத்துக்குள் தள்ளப்படுகிறது. மருந்துகளின் நச்சுக் கழிவுகளால், சிறுநீரகம் கடுமையாக பாதிக்கப்படுகிறது.

    அது மட்டுமல்ல. இந்த நோயினால் பல ஆண்டுகள் ஊசி மூலம் இரத்தப்பரிசோதனை செய்பவர்களிடம் நீங்கள் ஒன்றை கவனிக்கலாம். இது அனைவருக்கும் பொருந்துமா என தெரியவில்லை. நான் பார்த்தவகையில் பல முதியவர்களிற்கு இதனை அவதானித்திருக்கின்றேன். அவர்களின் உள்வாங்கும் திறன் குறைந்துகொண்டு செல்லும். ஒரு விடயத்தை புரிந்துகொள்வதற்கு தாமதமாகும். இது பொதுவாக வயதுவந்தவர்களிற்கு உள்ளது என்று நீங்கள் நினைக்கலாம். இது ஞாபகமறதியோ அல்லது அறிவாற்றல் குறைவதாலோ வருவதாக நான் பார்க்கவில்லை.

    இங்கே இந்த ஆண்டு அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட ஒரு புள்ளிவிபரத்தை இணைக்கின்றேன். இது தமிழர்களிற்கும் பொருந்தும். தமிழர்களிலும் இந்த எண்ணிக்கை அதிகரித்துகொண்டே செல்கின்றது. இதற்கு புள்ளிவிபரங்கள் இல்லையென்றாலும் நாளாந்தம் கேட்டும் பார்த்தும் வந்த தகவல்கள் இதனையே சொல்லி நிற்கின்றன.

    1419964_407795372680957_1070535073_n.jpg

    மாறிவரும் உணவு நடைமுறையே முக்கிய காரணமாக உள்ளது.

     

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.