Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வன்னியினில் தொடங்கியது பெண்பிடிப்பு!

Featured Replies

வன்னியினில் வீட்டுக்கு ஒருவரை இராணுவத்தில் இணைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு படையினருக்கு விடுத்துள்ள அறிவுறுத்தலையடுத்து முழுவீச்சினில் வீடுவீடாக படையினர் பிரச்சாரங்களை மேற்கொண்டுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.பொதுமக்களது வீடுகளுக்குச்செல்கின்ற படையினர் அவர்கள் வசமிருக்கும் குடும்பப்பதிவு அட்டைகளை பரிசோதிப்பதுடன் பெண் பிள்ளைகள் பற்றிய தகவல்களை சேகரித்து செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

தமிழ்பெண்களை மட்டும் இராணுவத்தில் இணையுமாறு கோரும் துண்டுப்பிரசுரங்களை, முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை, தண்ணீரூற்று, பூதன்வயல், குமுளமுனை, கூழாமுறிப்பு, கேப்பாப்புலவு, முத்தையன்கட்டு, புதுக்குடியிருப்பு, உடையார்கட்டு, மூங்கிலாறு, விசுவமடு, றெட்பானா, மாணிக்கபுரம் பகுதிகளில் பரவலாக படையினர் விநியோகித்துள்ளனர்.

இராணுவத்தில் இணைத்துக்கொள்ளும் இறுதி நாள் இம்மாதம் 31ம் தினதி என்று குறிப்பிடப்பட்டிருப்பதால், மாவட்டத்தின் பல இடங்களிலும்இராணுவத்தினர் வீடு வீடாகச் சென்று துண்டுப்பிரசுரங்களை விநியோகிப்பதாகவும் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்புக்கள் விடுக்கப்பட்டுவருவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை முள்ளியவளை பிரதேசத்திலுள்ள பிரிகேடியர் தர படை அதிகாரியொருவர் சிவில் சமுக அமைப்புகளின் பிரதிநிதிகள் சிலரை சந்தித்து, அவர்கள் ஒவ்வொருவரிடமும் தலா ஐந்து பேர் வீதம் தமிழ் பெண்களை இராணுவத்துக்கு இணைத்துத் தருமாறு அழுத்தம் கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
notice-001.jpg

notice-002.jpg

notice-003.jpg

 

http://www.jvpnews.com/srilanka/62027.html

  • கருத்துக்கள உறவுகள்

அதிர்ச்சியான... செய்தி.
தமிழரை காக்க... இனி யாரை நம்புவது என்று தெரியவில்லை. :huh:

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே எமது ஒட்டுக்குழு.. தேனீக்களும்.. நெருப்புகளும்.. படுத்துவிட்டனவோ..???!

 

போர்காலத்தில்.. தென்னிலங்கையில் சிங்கள இளைஞர்கள் யுவதிகளை கட்டாயா ஆட்சேர்ப்பில் ஈடுபடுத்திய போதும்.. இவர்கள் படுத்து விட்டார்கள்.

 

போருக்குப் பின் பல்கலைக்கழக மாணவர்களுக்கு கட்டாய இராணுவப் பயிற்சி என்று சிங்களம் கொண்டு வந்த போதும் படுத்து விட்டார்கள்.

 

இப்போ.. போரின் பின்.. புலிகள் அழிந்த பின்.. கட்டாய ஆட்சேர்ப்பில் தமிழ் பெண்களை சிங்களம்.. தனது படைவீரர்களின் இச்சைக்கு பலியிட பிள்ளை பிடிக்கும் போதும் தூங்கிவிட்டார்கள்.

 

இவர்களின் கண்ணுக்குத் தெரிந்தது.. தெரிவது.. புலிகள் அமைப்பில்.. சிறுவர்கள் போராளிகளாக இருந்ததும்.. புலிகள் அமைப்பு சிங்கள ஆக்கிரமிப்பை தடுக்க வீட்டுக்கொருவர் வா என்று கேட்டதும் தான்..!

 

இந்தக் கட்டாய ஆட்சேர்ப்பை.. ஈழத்தில் அறிமுகப்படுத்தியது.. ஒட்டுக்குழுக்களும்.. இந்தியப்படைகளும் என்பது முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயமாகும்..! இடையில் புலிகளை இழுத்துவிட்டு குளிர்காய்ந்தார்கள்.

 

இப்போ இவர்கள் எல்லாம் எங்கே..??! எங்கே போனது சிங்கள அரச பாசிசம் என்ற இவர்களின் உச்சரிப்பு..????! எம் இனத்தின் அவலத்தை மறைக்கத் துணை போகும்.. இவர்களை கூலிகள்.. துரோகிகள் என்று சொல்வதில் என்ன தப்பு..??! :rolleyes::(:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இதை ஜெனிவாவில் ஆதாரத்துடன் சொல்ல யாரும் இல்லையா..??

எங்கே எங்கள் தமிழ் அமைப்புகள், எங்கே எங்கள் கூட்டமைப்பு, எங்கே நாங்கள் தெரிவு செய்த மாகாண அரசும் அதன் முதலமைச்சரும்...??

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கெல்லாம் முடிவு அழிவு ஒன்றுதான்! நாங்கள் எல்லோரும் உட்பட அனைத்துமே அழியவேண்டும்!!.

 

அதிலும் முதலில் அழிய வேண்டியது சிறீலங்காவா...? இந்தியாவா...? என்று வரும்போது!

 

என் மனது முன்னுரிமை கொடுப்பது இந்தியாவே !!!! 

  • கருத்துக்கள உறவுகள்

இதனைத் தடுக்க வடக்குக் கிழக்கு சிவில்.. கல்வி.. வர்த்தக சமூகங்கள் கூட்டாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இளைஞர் யுவதிகளை சிங்களப் படையில் சேர்ப்பதற்குப் பதிலாக அவர்களுக்கு தொழில்சார் கல்விகளை கற்கவும்.. பயிற்சிகளை.. வேலை வாய்ப்பை அளிக்கவும் முன்வர வேண்டும்.

 

சிங்களப் படைகளை விட்டு போரின் பின் 60,000 சிங்களவர்களே ஓடியுள்ள நிலையில்.. சிங்களப் படைகள் மத்தியில் உள்ள உண்மையான காட்டுமிராண்டித்தனமான.. கடும்போக்கை இளைஞர்.. யுவதிகளுக்கு விளக்குவதோடு.. எமது நிலம்.. இன தனித்துவம் இழக்க சிங்களப் படையில் சேர்வது துணை போகும் என்றும் விளக்க வேண்டும்.

 

புலம்பெயர் சமூகம்.. தாயக இளைஞர் யுவதிகளின் மேம்பாட்டுத் திட்டங்களில் முதலீடுகளைச் செய்ய வடக்குக் கிழக்கு சிவில்.. கல்வி.. வர்த்தக சமூகங்களுடன் ஒரு கூட்டமைப்பை உருவாக்கி செயற்படுதலே இன்றைய அவசியமாகும்.

 

மாறாக.. புலிகள் வருவார்கள்.. யுத்தம் வரணும் என்று எதிர்கூறல்களைச் செய்து எதிரிக்கு இன்னும் இன்னும் தமிழ் மக்களை சூறையாட இடமளித்துக் கொண்டிருப்பதில்... நியாயம் இல்லை.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் அதிர்ச்சியான செய்தி!!!!இது கட்டாய இனக்கலப்புக்கு வழிவககுக்கும்.இதுவும் ஒரு திட்டமிட்ட இனவழிப்பாகும்.

  • கருத்துக்கள உறவுகள்
மிகவும் அதிர்ச்சியான செய்தி!!!!
 
இதுதான் இன அழிப்பின் உச்சக்கட்டம். இதனை தடுப்பதற்கு மக்கள் போராட்டங்களை நடத்தவேண்டும் அத்தோடு வெளிநாட்டு தூதுவரலயங்களுக்கும் தெரியப்படுத்தவேண்டும். 
  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பைப்போல இங்கு யாரும் தமிழ் மக்களுக்கு என்று மீட்பர்கள் இல்லை...

 

 

 

தமிழ் பெண்களை இராணுவ சேவைக்குள் ஈர்க்கும் சிறீலங்கா அரசின் நடவடிக்கை தொடர்பில், தெரிந்தே காரியம் சாதிக்கும் கூட்டமைப்பின் வடமாகாணசபையும், நாடாளுமன்ற உறுப்பினர்களும்!

(அவர்களுடனான உரையாடல்களிலிருந்து… ஒரு பதிவு)

தமிழ் பெண்களை இராணுவ சேவையில் இணைக்கும் நேர்முகத்தேர்வு கடந்த 03.03.2014 அன்று கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்திலும், 04.03.2014 அன்று ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திலும், 05.03.2014 அன்று (நேற்று) புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திலும் நடைபெற்றுள்ளன.
இதில் நேற்று மட்டும் 77 பெண்கள் இராணுவ சேவையில் இணைந்துள்ளனர் என்பது, கடந்த இரு நேர்முகத்தேர்வுகளை விடவும் மிகப்பெரிய தொகையாகும்.

இது தொடர்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வடமாகாணசபை அமைச்சர்கள், உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பேச்சு கொடுத்தபோது…
01. “இராணுவத்தில சேர வேண்டாம் என்று தடுப்பதற்கு எவருக்கும் ரைட்ஸ் இல்ல. ஒரு நாட்டுக்குள்ள இராணுவத்துக்கு ஆட்கள சேர்க்கும் உரிமை அரசுக்கு உண்டு. காலத்துக்கு காலம் ஆளணிகளை உள்ளீர்ப்பதும், குறைப்பதும் எல்லா நாடுகளிலும் நடைமுறையில இருக்கு. இத தடுத்தா லீகல் பிரச்சினையா போயிடும். பிறகு தேச துரோக வழக்கு அது இது எண்டு சொல்லி பெரிய தலையிடியாய் போயிடும்.”
02. “சனம் வேலை வெட்டி இல்லாமல் இருக்கு. சரியான கஸ்டம் வேற. சோத்துக்குக்கூட வழியில்லாமல் இருக்குதுகள். இதில வேற நான் இத தடுத்தன் எண்டால், நாளைக்கு என்னட்ட இருபதாயிரம் முப்பதாயிரத்துக்கு வேலை தரச்சொல்லி வந்து நிற்குங்கள். நான் என்ன செய்ய முடியும்.”
03. “இப்ப இத நாங்க தடுத்தா, நாளைக்கு நாங்க செய்யிற ஒவ்வொரு புரோக்கிராமுக்கும் பெரிய இடைஞ்சலா அவங்கள் நிற்பாங்கள். பிறகு எங்களால ஒரு வேலைத்திட்டமும் செய்ய முடியாமல் போயிடும்.” 
04. “இராணுவத்தில சேருறதும், சேராமல் விடுறதும் அவர் அவர் விருப்பம். அதப்பத்தி நாங்கள் கதைக்க முடியாது.” 
05. “இத ஆதரிக்கவும் முடியாமல், ஆட்சேபிக்கவும் முடியாமல் இருக்கிறம். எனக்கு என்ன செய்யிறது எண்டே தெரியேல்ல.”
06. இதில எந்த ரகசியமும் இல்ல. வெளிப்படையாவே கச்சேரி, ஏஜீஏ ஒப்பிஸ் எண்டு எல்லா இடத்திலயும் போஸ்டர் ஒட்டியிருக்கு. இதில ஏதாவது சூழ்ச்சி இருக்கும் எண்டு நான் நினைக்கேல்ல.” 
07. “இதப்பத்தி யாராவது கதைச்சா நானும் கதைப்பம் எண்டு தான் இருந்தன். ஆனா யாரும் வாய் திறக்கேல்ல. இப்ப இதப்பத்தி நான் மட்டும் கதைச்சி இங்க ஒண்டும் நடக்கப்போறதில்ல.”

இப்படியாக அவர்கள் ஒவ்வொருவரது வியாக்கியானங்களும் நீண்டு கொண்டே போயின. இந்த வியாக்கியானங்களிலிருந்து பல உண்மைகள் தொனிக்கின்றன. தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பைப்போல இங்கு யாரும் தமிழ் மக்களுக்கு என்று மீட்பர்கள் இல்லை. அதேபோல அவர்களைப்போல இதய சுத்தியோடு தமிழ் மக்களுக்காக உழைக்கவும் இங்கு எவரும் தயாராக இல்லை. கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் தமது தேவையையும், எதிர்கால அரசியல் செயல்பாடுகளையும் முன்னிறுத்தியே ஒவ்வொரு விசயத்திலும் வலுக்கவனமாக வேலை செய்கிறார்கள் என்பதற்கு இந்த உரையாடல்கள் மிகச்சிறந்த எடுகோள்கள்!

காடு கரம்பை, கோவில் குளம் எண்டு காடாத்தி ஊடகங்களுக்கு படம் எடுத்து அனுப்புபவர்களும், ஊடகங்கள் ஒரு சின்ன இடம் கொடுத்தாலே போதும், பக்கம் பக்கமாக உணர்ச்சி பெருக்கமாக அறிக்கை விடுபவர்களும், எங்காவது மூலை முடுக்கில் ஒரு சின்ன விசயம் ஏதேச்சையாக நடந்து விட்டது என்றால், (ஈழத்தில் இதை பேச்சு வழக்கில் பாம்புக்கும் நோகாமல் தடிக்கும் நோகாமல் அடித்தல் அல்லது வலிக்காத பிரச்சினைகளை கையில் எடுத்தல் எண்டு சொல்வார்கள்.) அங்கு ஆளாளுக்கு முந்தியடித்துக்கொண்டு ஓடிப்போய் ஊடகங்களுக்கு போஸ் கொடுப்பவர்களும், அங்கு தாம் நின்று ஏதோ வெட்டி முறிந்ததாக சொல்பவர்களும், மக்கள் சில விசயங்களை தம்மிடம் வந்து சொல்லி கண்ணீர் விட்டழுததாக படம் காட்டியவர்களும் “தமிழ் பெண்களை இராணுவ சேவைக்குள் ஈர்க்கும் சிறீலங்கா அரசின் நடவடிக்கை தொடர்பில்” வாய் திறக்கவே இல்லை.

கட்டாய ஆள்சேர்ப்பு, இராணுவத்தினர் வீடுகளுக்கு வந்து அழுத்தம் கொடுப்பது தொடர்பில் மக்கள், இவர்கள் பலரிடமும் பலமுறை முறையிட்டும், தெரிந்தே (திட்டமிட்டே) மௌனம் காத்து காரியம் சாதிக்கிறார்கள். மறைமுகமாக இந்த நிகழ்ச்சி நிரலை ஆதரிக்கிறார்கள். 
அத்தோடு மாகாணசபை அமைச்சர் ஒருவர் சொன்னார், “கிளிநொச்சியில சேர்ந்த பெண்களுக்கு என்ன நடந்தது எண்டு தெரியும் தானே. அதப்பார்த்தாவது முடிவெடுத்தா சரி. கூடவே நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறினார், “சேருற எந்த பிள்ளையும் பாலியல் இம்சைகள், குற்றங்கள், குறைகள் இல்லாமல் வாரது கஸ்டம்.”

இந்த அறிவுரையைச்சொன்ன இவர்களிடம், இந்த குற்றங்கள் குறைகளை தடுப்பதற்கு எந்தவித திட்டங்களும் இல்லை என்பது தான் வெட்கம், கேடு, அவமானம், சாபம்!

 

http://www.sankathi24.com/news/39170/64//d,fullart.aspx

 

விளம்பரத்தில் கட்டாயம் வரசொல்லியா இருக்கு?

மற்ற நாடுகளில் நடக்கும் normal recruitment தான்....வீட்டோக்கு ஒருத்தர் என்று எங்கே இருக்கு?

 

நாங்களாவே கதைகளை கிளப்புவது...பிறகு ஒப்பாரி வைப்பது...

 

ஓநாய்..ஓநாய் என்ரூ கதறி தான்..கடைசியில் உண்மையாக ஓநாய் வந்த போதும் காப்பற்ற ஒருத்தரும் வரவில்லை......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.