Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விமானம் விபத்துக்குளாகவில்லை-ஏர்லைன்ஸ்

Featured Replies

கோலாலம்பூர்: கோலாலம்பூரில் இருந்து பீஜிங் சென்ற விமானம் மாயமாகி உள்ளது. இந்த விமானம் விபத்தில் சிக்கி, கடலில் விழுந்துவிட்டதாக வியட்நாம் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதையடுத்து, 40 கப்பல்கள், 22 விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் வியட்நாம் கடல் பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், விமானத்தில் சென்ற நால்வர் போலி பாஸ்போர்ட் எடுத்துள்ளதும், இருவர் விமானத்தில் பயணிக்கவில்லை என்றும் தெரிய வந்தது. இதையடுத்து, விமானம் மாயமானதற்கு பயங்கரவாத பின்னணி காரணமாக இருக்கலாம் என்று கருதி, அது குறித்த விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையில், தங்கள் விமானம் விபத்தில் சிக்கவில்லை என்று மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் உறுதிபட தெரிவித்துள்ளது.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=929829

  • கருத்துக்கள உறவுகள்

விமானம் காணாமல் போய்... 24 மணித்தியாலத்திற்கு மேல் ஆகின்றது.
தீவிரவாதிகள் கடத்தியிருந்தால்... ஏதாவது கோரிக்கையையும், இது வரை வைக்கவில்லை.
என்ன... நடந்திருக்கும்? ஒரே... குளப்பமாக இருக்குது.

  • கருத்துக்கள உறவுகள்

...விமானத்தில் சென்ற நால்வர் போலி பாஸ்போர்ட் எடுத்துள்ளதும், இருவர் விமானத்தில் பயணிக்கவில்லை என்றும் தெரிய வந்தது. இதையடுத்து, விமானம் மாயமானதற்கு பயங்கரவாத பின்னணி காரணமாக இருக்கலாம் என்று கருதி, அது குறித்த விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையில், தங்கள் விமானம் விபத்தில் சிக்கவில்லை என்று மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் உறுதிபட தெரிவித்துள்ளது.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=929829

 

எல்லா விமானத்திலும் மிக அவசர, ஆபத்தான சூழ்நிலைகளில் அருகிலிருக்கும் விமான கட்டுப்பாட்டு அறைக்கு அபாய எச்சரிக்கை சமிஞ்சை செய்தியை(Distress call) உடனே அனுப்பும் பொத்தான்கள் விமான ஓட்டியின் அருகிலேயே இருக்குமே? ஏதேனும் என்ஞ்சின் பழுதோ அல்லது விமான ஓட்டியின் உடல்நிலை சரியில்லையெனில் ஒரே நொடியில் அப்பொத்தானை அமுக்கியிருக்கலாமே?

 

ஏதேனும் கணப்பொழுதில் ஆபத்து நிகழ்ந்திருக்க வேண்டும், அல்லது விமான ஓட்டி, ஆபத்து செய்தியை அனுப்பமுடியாமல்/விருப்பமில்லாமல் சடுதியில் நிகழ்ந்த ஆபத்தாக இருக்கக்கூடும்.

  • கருத்துக்கள உறவுகள்

What may have caused the Malaysian Airlines plane to disappear

 

The most dangerous parts of a flight are takeoff and landing. Incidents rarely happen when midflight. The disappearance of a Malaysia Airlines jet well into its flight has led experts to assume that whatever happened was quick and left the pilots no time to make a distress call.

 

It initially appears there was either a sudden breakup of the plane or something that led it into a quick, steep dive. Some experts even suggested an act of terrorism.

 

Possible causes for a crash include:

 

Catastrophic structural failure This could have damaged the airframe or engines. Given the plane's impressive safety record, experts suggest this is unlikely.

 

Bad weather Planes are designed to fly though most severe storms, but poor weather has caused crashes in the past. However, the skies were clear in this case. 

 

Pilot disorientation The pilots could have taken the plane off autopilot and somehow gone course.

 

Failure of both engines In January 2008, a British Airways 777 crashed about 1,000 feet short of the runway at London's Heathrow Airport. There were no fatalities. Such a scenario is possible, but the plane could glide for up to 20 minutes, giving pilots plenty of time to make an emergency call. 

 

A bomb Several planes have been brought down by bombs. If the debris field is large it will indicate the plane broke apart high up.

 

Hijacking A traditional hijacking seems unlikely given that a plane's captors typically land at an airport and have some type of demand. But a 9/11-like hijacking is possible, with terrorists forcing the plane into the ocean.

Pilot suicide There were two large jet crashes in the late 1990s that investigators suspected were caused by pilots deliberately crashing.

Accidental shoot-down There have been two previous cases of passenger jets being brought down accidentally by the military.

Edited by ராசவன்னியன்

எங்களில் இலட்சம் பேர் இறந்து டிஸ்ரெஸ் சிக்னல் அனுப்பவும் எங்களுக்கு எதிராக சிறி லண்கனுக்கு உதவினார்கள்.

எங்களுக்கு நடந்த கொடுமையை விவரண படமாக காட்டவும் தடைவிதித்தார்கள். பல காட்டிகொடுப்புகளும் செய்தார்கள்.

கருமவினை விடாது.

  • கருத்துக்கள உறவுகள்

எங்களில் இலட்சம் பேர் இறந்து டிஸ்ரெஸ் சிக்னல் அனுப்பவும் எங்களுக்கு எதிராக சிறி லண்கனுக்கு உதவினார்கள்.

எங்களுக்கு நடந்த கொடுமையை விவரண படமாக காட்டவும் தடைவிதித்தார்கள். பல காட்டிகொடுப்புகளும் செய்தார்கள்.

கருமவினை விடாது.

 

மலேசியா... கே.பி. அண்ணரை, சிறிலங்கா கைது செய்ய உதவியதையும் உங்கள் பட்டியலில் சேருங்கோ... விவசாயி.smiley_cheer.gif

  • கருத்துக்கள உறவுகள்

மலேசியா... கே.பி. அண்ணரை, சிறிலங்கா கைது செய்ய உதவியதையும் உங்கள் பட்டியலில் சேருங்கோ... விவசாயி.smiley_cheer.gif

 

கேயண்ணா பியண்ணா நல்லவரா? கெட்டவரா..?  :o:huh:

 

  • கருத்துக்கள உறவுகள்

கேயண்ணா பியண்ணா நல்லவரா? கெட்டவரா..?  :o:huh:

 

2008 வரை நல்லவர், அதன் பின் தானாக பிடிபட்டு கெட்டுப் போனார். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

எங்களில் இலட்சம் பேர் இறந்து டிஸ்ரெஸ் சிக்னல் அனுப்பவும் எங்களுக்கு எதிராக சிறி லண்கனுக்கு உதவினார்கள்.

எங்களுக்கு நடந்த கொடுமையை விவரண படமாக காட்டவும் தடைவிதித்தார்கள். பல காட்டிகொடுப்புகளும் செய்தார்கள்.

கருமவினை விடாது.

 

 

இந்த விபத்தில் இறந்தவர்களுக்கு நான் அஞ்சலி  செலுத்தவில்லை

 

காரணம் மனம் வரவில்லை

விபத்து தவிர்க்க முடியாதது

ஆனால் எம்மை வேண்டுமென்றே  கொன்றார்கள்

கொன்றதற்கு இந்தப்பகுதி  நாடுகள் துணை  நின்றார்கள்

இன்றுவரை தமிழருக்கு நீதி  கிடைக்க இவர்கள் தடை போடுகிறார்கள்

அந்த வலி நேற்றும் கூட அமெரிக்க தீர்மானத்தின் தடுமாற்றத்தால் என்னை  வருத்தியது

அதைவிட இது ஒன்றும் பெரிய அழிவல்ல......

நாங்கள் ஒவ்வொரு நாளும் செத்து செத்து பிழைக்கின்றோம்..........

 

மீண்டும்

விபத்தை தவிர்க்க முடியாது

ஆனால் எம்மை........................... :(  :(  :(

பிளென் திரும்பி வந்திருக்கு. விமானமோ ஓட்டி யாருக்கும் அறிக்கவில்லை. பின்னர் கடலுக்குள் வீழ்ந்திருக்கு. பயணிகள் யாரும் உறவினரை அழைக்கவில்லை. பயணிகளுக்கு பிளேன் திரும்புவது தெரிந்திருக்கவில்லை. விமானத்தில் அவலம் ஏதையாவதை அவர்கள் யாருக்கும் சொல்லவில்லை. 25% பயங்கரவாதமாகலாம். அது நடந்து விமானம் ஓட்டி யாரையும் அழைகாமல் இருந்திருக்க முடியாது. யாராவது பயணி இரகசியமாக உறவினரை கூப்பிட முயன்றிருப்பார். 75% விமானம் ஓட்டியின் மீது விரல் நீளூம் சந்தர்ப்பம் இது

Edited by மல்லையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விபத்தில் இறந்தவர்களுக்கு நான் அஞ்சலி  செலுத்தவில்லை

 

காரணம் மனம் வரவில்லை

விபத்து தவிர்க்க முடியாதது

ஆனால் எம்மை வேண்டுமென்றே  கொன்றார்கள்

கொன்றதற்கு இந்தப்பகுதி  நாடுகள் துணை  நின்றார்கள்

இன்றுவரை தமிழருக்கு நீதி  கிடைக்க இவர்கள் தடை போடுகிறார்கள்

அந்த வலி நேற்றும் கூட அமெரிக்க தீர்மானத்தின் தடுமாற்றத்தால் என்னை  வருத்தியது

அதைவிட இது ஒன்றும் பெரிய அழிவல்ல......

நாங்கள் ஒவ்வொரு நாளும் செத்து செத்து பிழைக்கின்றோம்..........

 

மீண்டும்

விபத்தை தவிர்க்க முடியாது

ஆனால் எம்மை........................... :(  :(  :(

அண்ணா நீங்கள் சொல்லுவது தவறு. நாங்கள் அரசாங்கத்தையும் அரசியல் வாதிகளையும் குற்றம் சொல்லலாம்.

ஆனால் இந்த விபத்தில் கொல்லபட்டது சாதரான பொதுமக்கள். எங்கள் போரில் கொல்லப்பட்டது போன்றே சாதாரண பொதுமக்கள்.

அவர்களுக்கு அனுதாபம் தெரிவிக்க மறுப்பதில் எந்த அரசிய உண்மைகளையும், நாகரீகத்தையும் என்னால் காண முடியவில்லை. :( 

மன்னிக்கவும்.

Edited by முதல்வன்

முதலும் ஒரு நாட்டில் (எகிப்து) விமானி தற்கொலை செய்வதற்காக தனது விமானத்தை விழுத்தியதும் நடந்திருகிறது.....

 

நானும் டிசம்பரில் இதேவழியாக வேலைக்காக பறக்க வேண்டியிருந்தது....கட்டாயம் மலேசியன் எயர்லைன்ஸ் தான் எடுத்திருப்பேன்...

 

அந்த வேலை தொடர்ந்திருந்தால்  .......கடவுளே   :icon_idea: 


அண்ணா நீங்கள் சொல்லுவது தவறு. நாங்கள் அரசாங்கத்தையும் அரசியல் வாதிகளையும் குற்றம் சொல்லலாம்.

ஆனால் இந்த விபத்தில் கொல்லபட்டது சாதரான பொதுமக்கள். எங்கள் போரில் கொல்லப்பட்டது போன்றே சாதாரண பொதுமக்கள்.

அவர்களுக்கு அனுதாபம் தெரிவிக்க மறுப்பதில் எந்த அரசிய உண்மைகளையும், நாகரீகத்தையும் என்னால் காண முடியவில்லை. :( 

மன்னிக்கவும்.

 

விசுக்கு போன்றவர்களுக்கு இவர்கள் செத்தது பொருட்டு இல்லை என்றால்...மற்றவர்களுக்கும் நாங்கள் செத்தது பொருட்டு இல்லை.... <_<
 

முதலும் ஒரு நாட்டில் (எகிப்து) விமானி தற்கொலை செய்வதற்காக தனது விமானத்தை விழுத்தியதும் நடந்திருகிறது.....                                                                                     

 

ஆனாலும் அந்த விமானம் விழுந்ததமை  Boeing ன் தவறு என்று எகிப்திய கோடு தீர்ப்பளித்தது :icon_mrgreen:

Edited by மல்லையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

இந்நிலையில் காணாமல் போன விமானத்தில் பயணம் செய்த ஒரு சீன பயணியின் செல்போன் இன்னும் பயன்பாட்டில் உள்ளதாக அவரது உறவினர்கள் புதிய தகவலை வெளியிட்டுள்ளனர்.

அவரது செல்போன் நம்பரை தொடர்பு கொண்டபோது, மணி ஒலித்துக்கொண்டே இருப்பதாகவும், யாரும் அதை எடுத்து பேசவில்லை என்றும் தெரிவித்தனர்.

எனவே செல்போன் சிக்னலை பயன்படுத்தி விமானத்தை கண்டுபிடிக்குமாறு பயணியின் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சில தளங்கள் சுண்டல் சொல்வது போல குழப்பம் ஏற்படுத்துகின்றன. Boeing 777 ராடரை விட்டு விலகாது என்கிறார்கள். விலக வைக்க வேண்டுமாயின் பாரிய குண்டுத்தாக்குதல் ராடரை இணைத்து நடத்திருந்தால் மட்டும்தான் சாத்தியம் என்கிறார்கள். மேலும் அப்படி ஒரு பாரிய வெடிப்பு நிகழ்ந்திருந்தால் மிதக்கும் பொருள்கள் எங்க்கும் சிதறியிருக்க வேண்டும் என்றும் இதுவரையில் அவை கட்டாயம் காணக்கூடியதாக இருந்திருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.   ராடர் தொடர்பு கருவிகள் முழுவதாக சிதைந்தாலும் அதில் இன்னொரு துணைக்கருவி இருக்கு என்றும் அதை வைத்து விமானத்தை தேடலாம் என்கிறார்கள். ஆனால் அது நடுக்கடல் போன்ற இடங்களுக்கு வலுவில்லாததாக இருக்குமாம். 

 

இருந்தும் விமானி முதலாவது கருவியை தனது விருப்பத்தின் பேரில் செயல் இழக்க வைக்க முடியும். அதன் பின்னர் இரண்டாவது கருவி தன்னை அடையாளம் காட்டாத இடத்துக்கு விமானத்தை திருப்பி சென்றி கடலில் தாழ்க முடியும். விமானம் முழுமையாக இருந்த போது கடலுக்குள் சென்றிருந்தால் அதை இனிக்கண்டி பிடிப்பது கடினமாகலாம். GPS நீருக்கடியில் வேலை செய்யாது. 

 

பத்திரிகைகள் எகிப்திய விமானத்தை இன்னமும் தொடர்ந்த்து நினைவூட்டுகின்றன. 

 

ஆனால் இன்னமும் மலேசிய திரும்பிய விமானம் எங்கே போனது என்றும் தேடுகிறார்கள்.

 

In the 1999 crash of EgyptAir Flight 990, authorities believe co-pilot Gamil El Batouty directed the plane into the Atlantic Ocean off Nantucket, Mass., while the pilot desperately tried to regain control.

Experts say that theoretically could have happened with the Malaysia Airlines flight — although there is no evidence to suggest it did.

Bringing an intact plane straight down into the water would explain the lack of a sprawling wreckage field. If there were a struggle in the cockpit, that might be a reason no distress call was made.

 

http://www.nbcnews.com/storyline/missing-jet/puzzle-no-pieces-what-happened-malaysia-plane-n49121

 

 

  • கருத்துக்கள உறவுகள்

பிரமிட் முக்கோணம் என்ற பகுதியினூடாகப் பயணிக்கும் கப்பல்கள் மாயமாவது போல, மலேசியன் விமானமும் எங்கையாவது மாயமாகிவிட்டதா?. அல்லது வேற்றுக்கிரகவாசிகளினால் கடத்தப்பட்டார்களா?. எங்களுக்கு இது செய்தி. ஆனால் சம்பந்தப்பட்ட குடும்பத்தினர்களின் வேதனை தாங்கமுடியாது. இப்படித்தான் சிங்கள தேசத்து சிறைகளில் தங்கடபிள்ளைகள் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்று பரிதவிக்கும் பெற்றோர்கள் கவலைப்படுவார்கள்.

இது மலேசியாவுக்கு அண்மையிலேயே காணாமல் போயிருக்கு...விமானத்தில் நிறைய எரிபொருளும் இருந்திருக்கும்...கடலில் அப்படி நிறைய எரிபொருள் மிதப்பதாகவும் தெரியவில்லை....பிழையான இடத்தில தேடுகிறார்களோ தெரியாது..எங்காவது ஆள் அரவம் இல்லாத காடுகளிலும் விழுந்திருக்கலாம்....

 

 

சீனாவில் தூவப்படும் இசுலாமிய எதிர்ப்பை இது இன்னும் வலுபடுத்த போகிறது.

உலக போர் ஒன்று தொடங்கி இது தான் நூற்றாண்டு விழா.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீனாவில் தூவப்படும் இசுலாமிய எதிர்ப்பை இது இன்னும் வலுபடுத்த போகிறது.

உலக போர் ஒன்று தொடங்கி இது தான் நூற்றாண்டு விழா.

 

உதைத்தான் இஞ்சையும் சாடமாடையாய் கதைக்கினம்.

உதைத்தான் இஞ்சையும் சாடமாடையாய் கதைக்கினம்.

வெள்ளை மாளிகையும், பகிங்காம் பலசும் கடைசியாக விக்டரி கார்டன்(வெற்றி தோட்டம்)

வைத்திருந்தது உலக போர் ஒன்றின், இரண்டின் போது. இப்ப மிசல் ஒபாமா வைத்திருக்கிறார். இராணியும் வைத்திருக்கிறார் .

என்னிடம் அந்த அரிய தோட்ட கை நூல்கள் இருக்கின்றன.

உலக மயமாக்கலுக்கு இசுலாம் பெரிய இடைஞ்சல். பாரசீகருக்கும் 35 வருடமா திட்டம் கூரா தீட்டியாச்சு.

300 புது படம் கட்டாயம் பாருங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவில் தூவப்படும் இசுலாமிய எதிர்ப்பை இது இன்னும் வலுபடுத்த போகிறது.

உலக போர் ஒன்று தொடங்கி இது தான் நூற்றாண்டு விழா.

 

ரஷ்சியாவில் போர் வரும் என்று எதிர் பார்த்து.... சப்பெண்டு போச்சுது.

இதையாவது... சட்டுப், புட்டுன்னு சீனா ஆரம்பிக்க வேணும். :D

 

 

  • கருத்துக்கள உறவுகள்

Just read the postings in this forum thread (Professional Pilots Rumours Network)..bit informative.

 

 

http://www.pprune.org/rumours-news/535538-malaysian-airlines-mh370-contact-lost.html

ரஷ்சியாவில் போர் வரும் என்று எதிர் பார்த்து.... சப்பெண்டு போச்சுது.

இதையாவது... சட்டுப், புட்டுன்னு சீனா ஆரம்பிக்க வேணும். :D

ஆசியாவில் பெரிய சனத்தொகை. இப்போதோ தொழில் நுட்பமும் வளர்ந்துவிட்டது. என்னத்திற்கு இத்தனை பேர்? ;)

உலக பொருளாதாரம் சரிந்துவிழும்படி கட்டுபடுகிறது.

Google: Quantitative Easing or QE

புது செய்தி: கள்ள கடவு சீட்டு வைத்திருந்தவர் பாரசீகர்(இரானியன்) :D

  • கருத்துக்கள உறவுகள்

புது செய்தி: கள்ள கடவு சீட்டு வைத்திருந்தவர் பாரசீகர்(இரானியன்) :D

 

 ஈரானியர் என்பதற்காக 19  வயதுடைய ஒருவர்

ஒரு விமானத்தையே  கடத்துவார் என  நம்பம் உலகம்....?? :(  :(  :(

நாய் எங்குடி அடிபட்டாலும் காலைத்தான் தூக்குமாம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.