Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கூரையை பிச்சுக்கொண்டு கொட்டுமா???

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர்கள்  இருவர்

 

ஒருவர் ஒரு கட்டிடத்தின் வேலைகள் முழுவதையும்  ஒப்பந்த அடிப்படையில்  எடுத்து  அதற்கமைய  வேலைக்கு ஆட்களை  அமர்த்தி சொந்த தொழில் செய்பவர்.

வீடு வாகனம் விரும்பியபடி சுற்றுலா என்று கொஞ்சம் வசதியாக  வாழ்பவர்......

இவர் பெயர்  அகமெட்..

 

மற்றவர்

வேலையை  இழந்து

வீட்டு  வாடகை  கூட  செலுத்தாது

பலவாறும் கடன் தொல்லையில்  உலைபவர்

சாப்பாட்டுக்கே  கடினமான நிலை......

எந்த நேரமும் வீதிக்கு வரலாம்........

இவர் பெயர் முகமெட்.....

 

அகமெட்டுக்கு  தனது நண்பரது நிலை கவலை தருவதால்

வேலை  கொடுக்க விருப்பம்

ஆனால் நட்புக்கெட்டுவிடக்கூடாது என்றும் யோசிப்பவர்.

அதனால் வேலை என்று இல்லாது

தன்னுடன் உதவிக்கென்று கூட்டிச்சென்று 

அவருடன் சேர்ந்து தானும் உணவருந்தி

அதற்கும் பணம் கொடுத்து

கொஞ்ச  பணத்தை  அவரது சட்டைக்குள்ளும் வைத்துவிடுவார்

ஆனால் முகமெட் அதை ஏற்கமாட்டார்

நட்புக்காக  வந்தேன் என்பார்

சிலநேர  கெடுபிடிக்குப்பின் முகமெட்  பணத்துடன்  வீடு செல்வார்

இது   மாதத்தில் எப்போதாவது நடப்பது........

 

 

அன்றும் இப்படித்தான்

ஆறாம் மாடிக்கு ஒரு பொருளை படிகளால் தூக்கிச்செல்லவேண்டும்

இருவரும்  சேர்ந்து   தூக்கிச்சென்றபின்

இருவரும் சென்று ஒரு பாரில் உணவருந்திவிட்டு

50  ஈரோக்களை அவரது சட்டைக்குள் வைக்கின்றார்

வழமைப்படி முகமெட் மறுக்கின்றார்

இல்லை  வைச்சுக்கோ என அகமெட் உறுத்த

பணத்தை எடுத்துக்கொண்டவர் 

பாரில் முன் பக்கம் சென்று ஒரு பக்கற் சிகரெட்டும்

3 உரசிப்பார்க்கும் லாட்டரி சீட்டும் எடுத்து வருகிறார்

23   ஈரோக்கள் செலவு.

அகமெட்டுக்கு கோபம் வருகிறது

இப்படி செலவளிக்கலாமா எனப்புத்திசொல்கிறார்

 

கதைத்தபடியே

முகமெட்  லாட்டறி  சீட்டை  உரசுகிறார்

அவரது முகத்தில் மாறுதல்கள் தெரிகின்றன

அவரது கைகள் நடுங்குவதையும் உடல் வேர்ப்பதையும் அகமெட் கவனிக்கின்றார்

அகமெட்டிடம் வந்து  இதைப்பார்  என  உறுதிப்படத்தச்சொல்லி  கேட்கிறார்

அகமெட் ரிக்கற்றினைப்பார்க்கின்றார்

ஆம்  இலக்கங்கள் சரியாக  இருக்கின்றன

இவரது முகத்திலும் சந்தோசம் பரவுகின்றது....

 

முகமெட்

அந்த ரிக்கற்றை  மட்டும் எடுத்துக்கொண்டு

மற்றைய  ரிக்கற்றுக்கள் கைத்தொலைபேசி மற்றும்

சிகரெட் பைக்கற்றை  எல்லாவற்றையும் விட்டு விட்டு வெளிில் ஓடுகின்றார்

அகமெட்  பின்னால் கூப்பிட்டபோதும் அவர் ஓடி மறைந்து விடுகிறார்.........

 

2  நாட்கள் முடிந்து விட்டன

முகமெட் எந்த வகையிலும் அகப்படவில்லை

அகமெட் வந்து  என்னிடம் இதைச்சொல்கிறார்

நான் கேட்டேன் ஏன் நீ  ஏதாவது எதிர்பார்க்கின்றாயா என.

இல்லையப்பா

அவனது சுகம் அறிய  ஆவல்

அவன் போன  வேகத்தில் அவனுக்கு ஏதும் நடந்துவிட்டதோ என கவலையாக இருக்கு.......

 

அடுத்த கிழமை முடியும்......

(எவ்வளவு விழுந்திருக்கும்)....... :icon_idea:

 

எச்சரிக்கை : லொத்தரும் உங்களையும் உங்கள்  வாழ்வையும் அழித்துவிடும். :(

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

காக்க வைத்து விட்டீர்களே.... விசுகு.
என்ன நடந்திருக்கும்... என்று அறிய ஆவலாக உள்ளது. :)

தலைப்பைப் பார்த்தால் ஒண்டும் கொட்டாதுபோல இருக்கே... 

ஆனால் எல்லா இலக்கங்களும் சரியா இருந்தால் கொட்டத்தானே வேணும்?!  :D

 

 

  • கருத்துக்கள உறவுகள்

எப்ப தொடக்கம் இந்தக் கெட்ட பழக்கம்?   :o  

 

சவர்க்காரத்தைப் போட்ட 'அரைவாசியில' வாட்டர் பம்பை நிப்பாட்டி விட்டிட்டு ஓடிப்போய் ஒழிச்ச மாதிரி?  :D

 

கெதியாப் பம்பைத் திறந்து விடுங்கப்பா..! :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காக்க வைத்து விட்டீர்களே.... விசுகு.

என்ன நடந்திருக்கும்... என்று அறிய ஆவலாக உள்ளது. :)

 

காதில்  விழுந்ததை அப்படியே  போட்டுவிட்டால்.......?

எனக்கே  விடை  வர  ஒரு கிழமை எடுத்தது

அதை நீங்களும் அனுபவியுங்கோ. :lol:  :D

 

அது சரி  என் கேள்விக்கு என்ன  பதில்???

எவ்வளவு............? :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பைப் பார்த்தால் ஒண்டும் கொட்டாதுபோல இருக்கே... 

ஆனால் எல்லா இலக்கங்களும் சரியா இருந்தால் கொட்டத்தானே வேணும்?!  :D

 

சரி

தொகையைச்சொல்லுங்கோ.... :D -

 

இது சுரண்டும் துண்டில் விழுந்தது என்பது ஞாபகமிருக்கட்டும் :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"அற்பனுக்கு பவிசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடைபிடிப்பான்" எண்ட மாதிரித்தான் கதை முடியும் போலை கிடக்கு ............ :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எப்ப தொடக்கம் இந்தக் கெட்ட பழக்கம்?   :o  

 

சவர்க்காரத்தைப் போட்ட 'அரைவாசியில' வாட்டர் பம்பை நிப்பாட்டி விட்டிட்டு ஓடிப்போய் ஒழிச்ச மாதிரி?  :D

 

கெதியாப் பம்பைத் திறந்து விடுங்கப்பா..! :icon_idea:

 

 

ஊரில் சொல்வார்கள்

எல்லாத்திலேயும்  ரொம்ப  நல்லவனா  இருக்கப்படாது என்று....

 

நண்பர் ஒருவரது அனுபவம்

கொஞ்சம் வித்தியாசமாகவும்

நான் அறிந்தவரை

முதன் முதலாக

தேவைப்படுபவருக்கு  கிடைத்தது  போலிருந்தது

அது தான் தலைப்பு

 

நன்றியண்ணா

விரைவில் தண்ணி  வரும்... :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த களத்தில புங்கை அண்ணாவின் உவமான உவ மேயங்கள யாராலும் அடிச்சிக்க முடியா.... முடியல்ல.....:D

விசு அண்ணா சீக்கிரம் ....

  • கருத்துக்கள உறவுகள்

விசுகர் . காத்திருக்க  முடியாது  தொடரட்டும்  தொடர் .............. :D

  • கருத்துக்கள உறவுகள்

காதில்  விழுந்ததை அப்படியே  போட்டுவிட்டால்.......?

எனக்கே  விடை  வர  ஒரு கிழமை எடுத்தது

அதை நீங்களும் அனுபவியுங்கோ. :lol:  :D

 

அது சரி  என் கேள்விக்கு என்ன  பதில்???

எவ்வளவு............? :icon_idea:

 

//மற்றவர்

வேலையை  இழந்து

வீட்டு  வாடகை  கூட  செலுத்தாது

பலவாறும் கடன் தொல்லையில்  உலைபவர்

சாப்பாட்டுக்கே  கடினமான நிலை......

எந்த நேரமும் வீதிக்கு வரலாம்........//

 

இந்த நிலைமையில்.. இருப்பவருக்கு, வேலை செய்ய பஞ்சி.

இப்படியான நிலையில்...  சூதாட்டத்திலும், ஈடுபடுவதால்....

5,000 ஐரோ... விழுந்தாலே, பெரிய தொகை.

அதுதான்... ஆபத்தில் உதவிய நண்பனையும் மறந்து, இந்த ஓட்டம் ஓடியிருக்கிறார்.

காசு முடிய... மொகமட் திரும்பவும் அகமட் இடம் வருவார்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு 10,000   யுரோ க்கு  கிட்ட விழுந்து இருக்கும். :D

  • கருத்துக்கள உறவுகள்

பத்தாயிரத்துக்கெல்லாம்  ஓடியிருக்க மாட்டார், ஒரு 1000 மாய் இருக்கும். :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சரி

சரி

 

எல்லோரும் அவசரப்படுகின்றீர்கள்

சொல்கின்றேன்...

-

-

-

-

-

-

-

-

-

-

-

-

 

-

பொறுங்களப்பா.....

சொன்னால் சொன்னது தான்

வாற  கிழமை தான் ...... :lol:  :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக சுரண்டல் ரிக்கற்றில் ஐம்பதாயிரம்,ஒரு லட்சம் அப்படித் தானே இருக்கும்..கெதியா சொல்லுங்கோ எவ்வளவு..??? :)
   ஏன் ஐம்பது ஈரோ குடுத்தவர் கவலைப்படுகிறார்............பாவம் கஸ்ரப்பட்டவர் என்றால்  நல்லா இருக்கட்டுமே..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக சுரண்டல் ரிக்கற்றில் ஐம்பதாயிரம்,ஒரு லட்சம் அப்படித் தானே இருக்கும்..கெதியா சொல்லுங்கோ எவ்வளவு..??? :)

   ஏன் ஐம்பது ஈரோ குடுத்தவர் கவலைப்படுகிறார்............பாவம் கஸ்ரப்பட்டவர் என்றால்  நல்லா இருக்கட்டுமே..

 

இதற்குள் தான் நிற்கின்றேன்

இன்று எழுதி  விடுவேன்

  • கருத்துக்கள உறவுகள்

இதற்குள் தான் நிற்கின்றேன்

இன்று எழுதி  விடுவேன்

 

பேச்சு பேச்சாய் இருக்கணும், விசுகு.

நாங்க படுக்க ஆயத்தப் படுத்திறம், கெதியா... பதிலை சொல்லுங்க. :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

2  நாட்கள் முடிந்து விட்டன

முகமெட் எந்த வகையிலும் அகப்படவில்லை

அகமெட் வந்து  என்னிடம் இதைச்சொல்கிறார்

நான் கேட்டேன் ஏன் நீ  ஏதாவது எதிர்பார்க்கின்றாயா என.

இல்லையப்பா

அவனது சுகம் அறிய  ஆவல்

அவன் போன  வேகத்தில் அவனுக்கு ஏதும் நடந்துவிட்டதோ என கவலையாக இருக்கு.......

 

அடுத்த கிழமை முடியும்......

(எவ்வளவு விழுந்திருக்கும்)....... :icon_idea:

 

எச்சரிக்கை : லொத்தரும் உங்களையும் உங்கள்  வாழ்வையும் அழித்துவிடும். :(

 

பணம் விழுந்த துண்டுடன் ஓடத்தொடங்கியவனுக்கு 

எங்கு போவது?

எவருடன் பேசுவது?

யாரை  நம்புவது?

என்ன  செய்வது என்று ஒன்றுமே புரியவில்லை.

 

ஓடிக்கொண்டிருந்தவனுக்கு சொந்த தங்கையின் ஞாபகம்வர

அவரது வீட்டுக்கு   போகின்றான்

போய் ரூமில் பூட்டிவிட்டு

யோசிக்கின்றான்.

தங்கையிடமும் சொல்ல  மனம் வரவில்லை.

பங்குப்பிரச்சினைகளோ

பாசச்சிக்கல்களோ

இதற்குள் வரக்கூடாது.

இது வரை  தனியே  நான் துன்பப்பட்டபோது எவரும் காப்பாற்றவில்லையே.

எனவே 

தான் மட்டுமே இதைக்கையாளணும் என்ற  முடிவுக்கு வருகின்றான்.

 

துண்டை  போட்டோ  எடுத்தும்

பிரதி  எடுத்தும் ஒழித்து வைத்துக்கொண்டு

அடுத்த கட்ட நடவடிக்கைகளில் இறங்குகின்றான்.

 

பணம் வங்கிக்கு வருகிறது

எல்லாக்கடனையும் கொடுக்கின்றான்

3/5 யை முதலீடாக  வங்கியில் இடுகின்றான்

 

தனக்கு  உதவிய  அந்த நண்பன் அகமெட்டை  மறக்காமல் அவரது வங்கிக்கு 5 ஆயிரம் ஈரோக்களை  அனுப்புகின்றான் (முதலில் அவர் வங்கி  மூலம் உதவி  செய்ததால் அவரது வங்கி இலக்கம் இவனது வங்கியில் இருந்தது.)

 

மிகுதியில் தனக்கு ஒரு சிறு வீடு வாங்க முற்பணம் கட்டி 

அதன் ஒழுங்குகளையும் செய்து முடிக்கின்றான்.

தனது சொந்த நாட்டுக்கு (மறோக்கா)  3 மாதம் சுற்றுலா  போக விமான ரிக்கற்  எடுத்துவைத்துவிட்டு

அகமெட்டைத்தேடி  வருகின்றான்.

 

அகமெட்டுக்கும் வங்கியிருந்து குறும் செய்தி  வருகிறது

தனது வங்கியில் தனது கணக்கில் 5 ஆயிரம் ஈரோக்கள் அதிகரித்திருப்பது தெரிகிறது

ஆனால் வந்தவழி தெரியவில்லை.

இவனது செயலாக  இருக்கலாமோ என  சிந்தித்துக்கொண்டிருந்தவன்

முகமெட்  தன்னை  நோக்கி  வருவதைக்காண்கின்றான்.

 

ஓடிச்சென்று இருவரும்  கட்டித்தழுவிக்கொள்கின்றனர்

இருவரது கண்களிலும் கண்ணீர்.

சுகசெய்திகள்

மற்றும் பின்னர் நடந்தவை  அனைத்தையும் இருவரும்பேசி  முடிந்ததும்

தனக்கு வந்த 5 ஆயிரம் ஈரோக்கள் பற்றி  அகமெட்  கேட்கின்றான்

நான் தான் அனுப்பினேன் என்கின்றான் முகமெட்

கடவுள் கிருபையால் நான் நன்றாக இருக்கின்றேன்  எனக்கு எதற்கு அனுப்பினாய் என அகமெட் சொல்ல

உன் நல்ல மனதுக்காக  என முகமெட் கூற

அதை நீ  உனது  நல்ல மனதால் முறியடித்துவிட்டாய்  என அகமெட் செல்லமாக கோபித்துக்கொள்ள

இருவரும் ஆரத்தழுவி நிற்க

முகமெட் சொல்கின்றான்

நாளை  நான் ஊருக்கு போறேன்

இன்று  பாரில் இருவரும் குடிக்கலாம்

முதன் முறையாக நான் தான் காசு கொடுப்பேன்

அதை நீ  அனுமதிக்கணும் என்றபோது

அதை அகமெட் மறுக்காது புன்சிரிப்போடு இருவரும் பாருக்குள் நுளைகின்றனர்..

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு தொகை சொல்லவில்லியே....?3/5 முதலீடு  பிளேன் டிக்கெட்  வீடு முற்பணம் ..நண்பனுக்கு 5 ஆயிரம் ஈரோ .... :D

 

உங்களுக்கும் தெரியாதா .....?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு தொகை சொல்லவில்லியே....?3/5 முதலீடு  பிளேன் டிக்கெட்  வீடு முற்பணம் ..நண்பனுக்கு 5 ஆயிரம் ஈரோ .... :D

 

உங்களுக்கும் தெரியாதா .....?

அவசரக்குடுக்கைப்பாட்டி

சொல்லுவன் தானே.... :lol:  :D  :D

இந்த அகமெட்..முகமெட் இருவரையும் காரில் ஏற்றி மிஷெல் கார் ஓடி போவதை பார்த்தேன் ஒருவேளை நீங்கள் சொல்லும் ஆக்களோ தெரில்லை விசு அண்ணே ..

 

(கார் ஓடி போவது பிரஞ்சு போலிஸ் ..பின்னாடி இருப்பவர்கள் அவர்கள் இருவரும் :D :D )

  • கருத்துக்கள உறவுகள்

ம் இன்றுதான் இது என் கண்ணில் பட்டது. நன்றாக இருக்கு அண்ணா.

  • கருத்துக்கள உறவுகள்

வீடு வாங்கியுள்ளார்,
3/5 சேமிப்பு,
நண்பனுக்கு 5,000 €.
மறோக்கோ சுற்றுலா...

எப்படியும்.... 500,000 € (அரை மில்லியன்) விழுந்திருக்க வேணும்.
யாயினி கேட்ட மாதிரி.... சுரண்டல் லொத்தரில், இவ்வளவு பரிசு கொடுப்பார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

அவசரக்குடுக்கைப்பாட்டி

சொல்லுவன் தானே.... :lol:  :D  :D

 

சொல்லிட்டால் இந்தப் பக்கம் வந்து தொந்தரவு செய்ய மாட்டம் தானே..கெதியா சொல்லுங்க..எனக்கு இதுக்கையே நிற்க ஏலாது,நிறைய வேலை இருக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விசுகர்! என்ன மாதிரி?????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.