Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பூரை தாம் கைப்பற்றியுள்ளதாக சிறீலங்கா இராணுவம் தெரிவித்து

Featured Replies

சந்திரிக்கா மாங்குளத்தைப் பிடிச்சிட்டு..பொன்வாள் கொடுத்து ரத்வத்தை அங்கிளைக் கெளரவிக்கைல்லையோ..சந்திரிக்க

  • Replies 131
  • Views 17.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனி பலாலிக்கு அச்சுறுத்தல் என்று..ஆனையிறவைப் பிடிக்கப் போயினம்

பலாலிக்கு அச்சுறுத்தல் புநகரி தான். ஆகவே அதனைத் தான் கைப்பற்ற முயற்சிப்பார்கள்.

ஆனையிறவில்லாமல் பூநகரியைப் பிடிக்கிறது இராணுவரீதியில் அனுகூடமா இருக்காது. அதுதான் ஆனையிறவைப் பாதுகாக்க என்றே பூநகரியை விட்டுப் போனவை..இல்ல இருந்திருப்பினம்..! :idea:

அப்பிடி சண்டைதான் வேணும் எண்டு இங்கை அடம்பிடிக்கிறவை வீட்டில மனிசிமாரோடையும்... பொம்பிளையள் மனுசன் மாரோடையும் பிடியுங்கோ....!

கல்யாணம் கட்டாதவை ஏதாவது GANG ல சேருறது நல்லம்...!

எங்கை சண்டை பிடிக்கவேணும் எதில அடிக்க வேணும் எண்டது 30 வருடமாக சண்டை பிடிக்கிற புலிகளுக்கு தெரியும்....! தலைவர் பல ஜெனரல்களை கண்டவர் அவர்களுக்கு சண்டையை பழகினவர் எண்டு சொன்னால் பொய்யும் இல்லை...! இடங்களை எல்லாம் அவசரப்பட்டு பிடிச்சுப்போட்டு முளத்துக்கு ஒரு செண்றி போட்டு அதுக்காக இருக்கிற வளங்களை எல்லாம் செலவளிக்க தலவர் ஒண்டும் சதாம் குஸைன் இல்லை...! யாழ்ப்பாணத்தை விட்டபிறகுதான் மட்டக்களப்பின் படுவான் கரையையும், வெருகலையும் மூதூரையும், முல்லைத்தீவையும், பூநகரியையும், கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தவர்...! வேணும் எண்டால் இன்னும் ஒருதகவலாய் ஆனையிறவையும் சொல்லலாம்...! ஏனெண்டால் யாழ்ப்பாணம் விடமுன்னம் ஆனையிறவுகான பயிற்ச்சிகள் படையணிகளுக்கு வளங்கப்பட்டு, முல்லைத்தீவு தாக்குதல் முக்கியமானதாக கொள்ளப்பட்டு தாக்குதல் திட்டம் பிற்போடப்பட்டது...!

இலவசமான ஆலோசனைக்கள் புலிகளுக்கு தேவை இல்லை...!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்களும் அதை தானே சொல்லுறம்.. புலிகள் மட்டும் செய்திகளை வெளியிடட்டும்.. அதாவது யுத்த செய்திகளை.. அது தான் உண்மையான கள நிலவரம் என்ன எண்டு சனத்துக்கு தெரிய வைக்கும்.. எதுக்கு நீங்களாவே கதையை கட்டுறியள்.. சம்புரில ஆயுதத்தை ஏத்திக்கொண்டு புலியள் பருத்தி துறைக்கு போனவை எண்டு..

அது எந்த பிளேட்டப் போடுறது என்று தெரியாமல் மாறிப்போட்டிருப்பினம் காவடி..! இப்ப எல்லோரும் நல்லா பிளேட்ட மாத்திறாங்க...அரசும் தான்...தமிழ் ஊடகங்களும்..தான்..! :idea:

அருமை அருமை அருமை......

நான் நினைத்ததை..நீங்கள் சொல்லிவிட்டீர்கள்....

ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள்...

ஒன்பது பிள்ளை பெற்றவளக்கு ஒருபிள்ளை பெற்றவள் முக்கிக் காட்டுவாளாம்...

இங்க என்னாடான்னா...

வயசுக்கு வராமலே....

:D:lol::lol:

நாங்களும் அதை தானே சொல்லுறம்.. புலிகள் மட்டும் செய்திகளை வெளியிடட்டும்.. அதாவது யுத்த செய்திகளை.. அது தான் உண்மையான கள நிலவரம் என்ன எண்டு சனத்துக்கு தெரிய வைக்கும்.. எதுக்கு நீங்களாவே கதையை கட்டுறியள்.. சம்புரில ஆயுதத்தை ஏத்திக்கொண்டு புலியள் பருத்தி துறைக்கு போனவை எண்டு..

அப்படி இருக்கலாம் எண்டுதான் சொன்னேன்... உமது வாசிப்பு திறன் நண்றாக இருப்பது தெரிகிண்றது...! வன்னி மைந்தன் புலிகள் வலிந்து தாக்கினார்கள் என்பதுக்குத்தான் இல்லை அவர்கள் பின்வாங்கலுக்கான பாதுகாப்புக்காக கூட சண்டை நடந்திருக்கலாம் எண்று கூறப்பட்டது... உமது வசதிக்காக எதையும் மாற்ற முனையாதையும்...!

புலிகள் பின்வாங்கி போவதை நான் இங்கு சிலரைப்போல அவமதிக்கவில்லை... கீழ்த்தரமாக சண்டையை பற்றி அறியாத கூட்டம் சொல்வதுப்போல பயத்தில் அவர்கள் போவதில்லை...!

அவர்கள் போனாலும் சரியான் காரணமும் திட்டமிடலும் இருக்கும்...!

மற்றது உம்மை மாதிரி இரண்டும் கெட்டானாக நான் இல்லை எதிலும் நல்ல தெளிவுடன் இருப்பவன்...!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மான்தோலை கட்டிவைச்சிருக்கும்வரைதான் அது சுருண்டிருக்கும். அவிண்டுவிட்டால் அது திரும்பவும் விரிந்துவிடும். சம்பூரை இராணுவம் பிடித்ததாக வைத்துக்கொள்வோம். அதனால் யாருக்கு பாதிப்பு மாங்குளம் புளியங்குளம் என்று வருடக்கணக்கில் பிடித்ததை இரண்டுநாட்களில் பறிகொடுத்துவிட்டு ஓடினதை மறக்கமாட்டீர்கள். வெற்றியும் தோல்வியும் சகஜம். அரசாங்கத்தின் பேச்சைக்கேட்டு இங்கு பலர் அள்ளி வைத்த கருத்துக்கள்.... வெட்கப்பட வைக்கின்றது.

மதிக்காக நான் வேதனைப்படுகின்றேன். ஏனென்றால் களத்தில் இன்னும் பல மதிகள் தடைசெய்யப்படாமல் இருக்கின்றார்கள். என்னதான் பித்தளைக்கு தங்கமுலாம் பூசினாலும் சிறிது தேய்ந்துவிட்டால் பித்தளை பல்லிளிக்கும்

இன்று வசைபாடிய பலர் புலிகளின் அடுத்த வெற்றியில் கொஞ்சமும் கூச்சமில்லாமல் பரணிபாடுவார்கள். மதியையும் நல்லவனாக்கிய இந்த உறவுகளை பார்த்து வெட்கப்படுகின்றேன்.

இவர்களைவிட மதி எவ்வளவோ மேல். :evil: :evil: :evil: :evil: :evil:

மேற்கோள்:

ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள்...

ஒன்பது பிள்ளை பெற்றவளக்கு ஒருபிள்ளை பெற்றவள் முக்கிக் காட்டுவாளாம்...

இங்க என்னாடான்னா...

வயசுக்கு வராமலே....

இப்ப பிரைச்சினை பிள்ளை பெறுவது பற்றியல்ல. பிள்ளை பிறந்ததா இல்லலையா என்பது பற்றித்தான். :P :D

ஊடகத்தகவலின்படி பிள்ளை பாதியிலேயே.. நிற்கதாமே....

ஆனால் பல ஊடகங்கள் பிள்ளை பிறந்து பெயரும் வைத்தாகிவிட்டது என்கின்றார்களே?? :roll: :roll:

அப்ப சிங்கள...ஊடகமாக்கும்

இந்த தலைப்புக்கு மிக முக்கியம் பாருங்கோ...!

கடந்த சனிக்கிழமை ஒளிபரப்பப்பட்ட மாவிலாறு முதல் மண்டதீவு வரை --ஒரு இராணுவ ஆய்வு

http://www.eelamist.com/podcast/index.php?...%20Reviews&p=19

20060904151412sampurmap203a.jpg

சம்பூருகுள் இராணுவம் புகுந்தாலும் விடுதலைப் புலிகள் இன்னமும் போராடி வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

இழப்புகளை மட்டுப்படுத்திக் கொள்வதற்காக

செய்யும் ஒரு செயல் விடுதலைப் புலிகளுக்கு நிரந்தர

தோல்வியாகாது எனவும்

விடுதலைப் புலிகள் மரபு ரீதியான போரில் ஒரு சில அடிகள் பின் வாங்கினால்

கொரில்லா தாக்குதலில் பல அடிகள் முன்னேறுவர்கள் எனவும்

போர் ஒன்றால் ஒரு நிரந்தர வெற்றியை

அரசு கூட தக்க வைத்துக் கொள்ள முடியாது எனவும்

தென்னிலங்கை விமர்சகர் ஒருவர் கூறுகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

1983 ற்கு பின்பு சிறிலங்கா அரசு எத்தனையோ பிள்ளைகளை பெற்றெடுத்து பெயரும் வைத்திருக்கின்றது. இதுதான் முதல்தடவையாக சில யாழ்தள உறவுகள் பிள்ளையை சீராட்ட துடிக்கிறார்கள். பணம் பாதாளமட்டும் பாயுமென்பார்கள் அதுதானோ தெரியவில்லை. கடந்த கால ஜனாதிபதிகளின் ஆட்சியிலம் இராணுவபேச்சாளர்களின் பேச்சிலும்............

புலிகளின் தாக்குதலால் இறந்த இராணுவத்தினர் இப்போது எழுந்து நடக்கிறார்கள் என்ற ஓரே ஓரு (பொய்) குழந்தைதான் இன்னும் பிறக்கவில்லை. போற போக்கை பார்த்தால் அதுவும் சில நாளில் பிறக்கும் போலகிடக்குது.

ஏன் இதெல்லாம்?

உங்க தனிப்பட்ட ஆய்வுதான்....

எங்கோ ஓரிடத்தில் தூயவன் சொன்னது நினைவு வருது...

வெற்றி என்றால் மட்டும் ஆகோ ஓகோ...........

ஏதாவது பின்னடைவு வந்தால் ........

எல்லாமே போச்சுன்னு ஒப்பாரி.....

நித்திகை குள முற்றுகையின் போதும் ...

இப்பிடி ஆச்சாம்.

தாண்டிக்குளம் தாண்டி.........

மாங்குளம் வரய் ஆமி வந்தபோதும் ...இப்பிடியாம்

அப்புறம் புலி ஒவ்வொன்றாய் அடிச்சு கலைக்க ........

அதே ஆக ஓகோ .............

யுத்தத்தின் போக்கு சாதாரணமா கணிப்பிட முடியுமா?

யாழ்ப்பாணத்தை அவன் பிடிசதும் .. அவனுக்கே நம்ப முடியாத விசயம்...

அதே போல் ஆனையிறவை போட்டு தாக்கி அரியாலை கடந்து கச்சேரி வரை புலி போனதும்...

இன்னும் எங்களில் சிலர் நம்பவே முடியாத விசயம்...........

ஒன்றை கவனித்தீர்களா?

இதுவரை எந்த கட்டளை தளபதியும் வாய் திறக்கல..

எந்த மிக முக்கியமான படை அணியும் களத்தில் இறங்கியதா தகவலும் இல்ல..

ஒரு அமைதி ...

அது வாய் திறக்கும் மட்டும் கொஞ்சம் அடங்கினால்தான் என்ன?

பழய கதைகளில சொல்லுவினம் ஏழுகடல்தாண்டி ஏழுமலைதாண்டி போய் அங்கை இருக்கிற குகைக்குள்ள இருக்கிற கிளிக்கூண்டில இருக்குமாம் இராட்சதன் ஒருவனின் உயிர் எண்டு...! அதுமாதிரி இலங்கை அரசுக்கும் உயிர் நாடி எண்டு ஒண்டு இருக்கத்தானே வேணும்...!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா காலம் இருதரப்புக்கும் சம அந்தஸ் கொடுக்கவில்லை. புலிகளை ஒழித்துவிடும் பலம் பற்றிய நம்பிக்கை அவர்களை உறுதியாக பற்றியிருந்தால், அவர்கள் போரில் குதிக்க எவருக்கும் அஞ்சவேண்டியதில்லை. ஆனால் புலிகளுக்கு அதேவாய்ப்பு காலத்தால் வளங்கப்படவில்லை. அது உலகத்தோடே எதிர்பத்ற்க்கு சமனாகிறது, எனவே வெளிஉலகின் தாவாரங்களுக்குள் நின்று மேற்க்கொள்ளும் போர்நடவடிக்கை அந்த சக்திகளால் அநாதரவு படுத்தப்படுமட்டும் அல்லது எமது நிலைமகளின் நியாயத்தன்மை உலகுக்கு வெளிச்சமாகுமட்டும் நாம்தான் அந்த சூள்நிலையை உருவாக்கவேண்டும். எமது முளுபலமும் களம் இறங்கும் போது அவன் எவன் வீட்டு தாழ்வாரத்துக்குள் கால் வைக்க அவகாசம் வளங்கக்கூடாது, எவரும் கதவைத்திறந்து வைத்திருக்கும் நிலைமையும் இருக்க விடக்கூடாது. போர் அவனுக்கு இனிக்க வைக்கப்பட்டால்தானே இவை சாத்தியம்

வசம்பாரே: TBC குடும்பத்தார், சம்பூர் என்ன யாழ்பாணத்தைவிட பெரிய கவலை என்றா சொல்கிறார்கள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னாளை தமிழீழத் தேசியத்தை பலப்படுத்துவதில் செலவிட்டால் விடுதலையை உயிர் இழப்புக்களை குறைத்து விரைவு படுத்தலாம்.

தமிழீழக் காவலர்கள் ஒன்றும் கத்துக் குட்டிகள் அல்லர். தமிழீழப் போராட்டத்தை உன்னிப்பாக கவனிப்போருக்கு இது விளங்கும். வீணாக கண்ட குப்பைகளை இங்கே இடுவதைவிட்டு விட்டு. "போர்க் கலை" என்று சீன தத்துவாசியரின் நூலைப் படிக்கவும். இந்த நூல் பல கேள்விகளுக்கு விடை அவிள்க்க வல்லது.

"போர்க் கலை" - போரின் பாலர் பாடம்

http://www.sonshi.com/learn.html

http://www.kimsoft.com/polwar1.htm

நண்பர்களே.

மனம் துவண்டுவிடாதீர். இன்பத்திலும் துன்பத்திலும் எமது சகோதரருடன் உறுதுணையாக இருப்பது எமது தார்மீகக்கடன். எமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் எமது தேசத்தையும் மக்களையும்... நாங்கள் போராடவில்லை என்பதற்காக எமக்காக போராடும்... எமது சகோதரர்களையும் நேசிப்போம். மரணமே வாழ்வாகிப்போன எமது மக்களை ஒருமுறை உங்கள் கண்முன் கொண்டுவாருங்கள். அவர்களுக்காக நாம் செய்யவேண்டியன நிறையவே உண்டு. காலத்தின் தேவையறிந்து கடமை செய்வோம்.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் உலகத்த நோக்கி எத்தனையோ கேள்விகளும் கேட்டாச்சு எத்தனையோ ஆரிப்பாட்டஙகளும் நடத்தியாச்சு பலண் பூச்சியம் தான்...இப்படியே எழிழன் ஒவ்வோரு வராமும் போர் நிறு;த கண்காணிப்பு குழுக்கு அறிக்கை அணுப்பிட்டு கேள்வியும் கேட்டிட்டு இருக்கட்டும்

நாங்கள் செய்ய அது தான் எல்லையா? தினமும் செய்ய ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டாம் என்று தடுக்கப்பட்டதா? அல்லது, நாங்கள் செய்தது போதும் எனத் திருப்தி கொள்கின்றீர்களா?

என்னும் எவ்வளவோ, செய்ய வேண்டி இருக்கையில் சும்மா, நாங்கள் செய்தது போதும். அவர்கள் தான் கண்டு கொள்ளவில்லை என்று காரணம் சொல்ல வேண்டாம். இந்த விடுதலைப் போராட்டம் பற்றிய கவலைப்பட வேண்டியது நாங்களா? அவர்களா?

ஏதோ செய்ய நினைத்தோம். செய்தோம் அளவு போதும் என்றால், புலிகளும், அப்படியே போட்டுவிட்டுத் தான் போகவேணும்!

இந்தப் போராட்டம் எமக்குரியதே தவிர, மற்றவர்களுக்கு அல்ல. அதைப் புலிகள் மட்டும் தான் செய்யவேண்டும் என்றலல். நமக்கும் அதே பங்கு தான் இருக்கின்றது!

ஒரு தமிழனை கேள்வி கேட்க கூட துணிய வைத்திருக்கிறார்கள் என சந்தோசபடுங்கோ.........

கதைப்பது சுலபம் சுண்டல் செய்வது தான் கடினம்

:idea: :idea: :idea:

  • கருத்துக்கள உறவுகள்

உந்த எழிலன், புகித்தேவன், ... போன்றோர் ஊடகங்களுக்கு கருத்துச் சொல்வதை நிறுத்தினால் நல்லது!! சிலவேளை சகிக்க முடியவில்லை!!!!

பெருமையும் புகழ்;ச்சியும் சொல்லிக் கொண்டு திரிய, இது சினிமாப்படம் அல்லவே. மக்களின் போரியல்வாழ்வு! முதலில் அந்தக் கண்ணைத் திறந்து கொள்ளுங்கள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.