Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளுக்கு எதிரான போரில் இரசாயன ஆயுதங்கள் - ஆதாரத்தை முன்வைத்தது இந்தியத் தொலைக்காட்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

newsx.jpg

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் சிறிலங்காப் படையினர் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியது தொடர்பான புதிய ஆதாரங்களை, இந்தியாவின் நியூஸ் எக்ஸ் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. 

இதில், இரசாயனக் குண்டு வீச்சினால், உடலில் எரிகாயங்களுக்கு உள்ளான ஒரு குழந்தை மற்றும் ஆண் ஒருவர் தொடர்பான ஒளிப்படங்களும் இடம்பெற்றுள்ளன. 

அத்துடன், சீருடையணிந்த சிறிலங்கா இராணுவச் சிப்பாய் ஒருவர், போரின் இறுதிக்கட்டத்தில் இரசாயன ஆயுதங்களை எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பதை விபரிக்கும், காணொளிப்பதிவும் வெளியிடப்பட்டுள்ளது. 

போரின் இறுதிக்கட்டத்தில், கடற்கரையோரத்தில் சிக்கியிருந்த விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதாகவும், அந்தக் குண்டுகள் சுமார் 1 கி.மீ சுற்றளவு கொண்ட பிரதேசத்தில் அழிவுகளை ஏற்படுத்தும் திறன் கொண்டது என்றும் அந்த இராணுவச் சிப்பாய் தெரிவித்துள்ளார். 

இறுதிக்கட்டப் போர் நடந்த பிரதேசத்தில், சிறிலங்காப் படையினரால் அமைக்கப்பட்டிருந்த, போர்த் தளபாடக் காட்சியகத்தில், வைத்து குறித்த சிப்பாயிடம் செவ்வி காணப்பட்டுள்ளது. 

இரசாயன ஆயுதம் என்று சுட்டிக்காட்டி அவர், அதுதொடர்பாக, கொச்சைத் தமிழில் விளக்கமளித்துள்ளார். 

sla-chemical.jpg

chemical.jpg

அதேவேளை, இரசாயனக் குண்டுவீச்சில், உடல் முழுவதும் எரிகாயங்களுடன் அழுது கொண்டிருக்கும் ஆண் ஒருவரினதும், எரிகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்படும் குழந்தை ஒன்றினதும் ஒளிப்படங்களையும் நியூஸ் எக்ஸ் வெளியிட்டுள்ளது. 

போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்காப் படையினரால், வெள்ளைப் பொஸ்பரஸ் என்ற இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. 

இது எரிகாயங்களை ஏற்படுத்தும் தன்மை கொண்டது என்பதும், அனைத்துலக அளவில் போரில் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டதுமாகும். 

இதற்கிடையே, சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய, இந்திய தொலைக்காட்சியில் வெளியான இந்த போர்க்குற்றச்சாட்டை நிராகரித்துள்ளார். 

“புலிகளுக்கு எதிரான போரில் நாம் எப்போதும், மரபு ரீதியான ஆயுதங்களையே பயன்படுத்தினோம். 

திரிபுபடுத்தப்பட்ட அல்லது பொய்யான இந்தக் குற்றச்சாட்டு, ஜெனிவா கூட்டத்தை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டிருக்கலாம். 

சிறிலங்கா எந்த ஆயுதங்களையோ, குண்டுகளையோ உற்பத்தி செய்வதில்லை என்பது உங்களுக்குத் தெரியும். 

அரசாங்கங்கள் மூலமாகவே, அவற்றை நாம் வாங்கினோம். 

விடுதலைப் புலிகள் ஆயுதங்களை உற்பத்தி செய்ய முயன்றனர் என்பது தெரிந்ததே. 

அவர்களின் தளங்களில் இருந்து பெருமளவு இரசாயனங்களை நாம் கைப்பற்றியுள்ளோம். 

சிறிலங்கா இராணுவத்துக்கும், அரசாங்கத்துக்கும் எதிரான உணர்வுகளை தூண்டிவிடும் நோக்கில் சில தரப்பினரால், இந்த புதிய காணொலியை வெளியிடப்பட்டுள்ளது. 

இதனை நாம் நிராகரிக்கிறோம் ” என்று தெரிவித்துள்ளார். 

நியூஸ் எக்ஸ் வெளியிட்டுள்ள தகவல்களைக் காண இங்கே அழுத்துங்கள் -

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=rsQc5kxDqnw

http://www.puthinappalakai.com/view.php?20140317110152

மூண்டு சிங்களவன் அரசியல்வாதிகளின் சுருட்டலால் பாலம் இடிந்து விழுந்து செத்தாலும் அது தமிழரின் பிழை என்று பீல் பண்ணும் இருவரும் இந்த பதிவு பக்கம் தலை வைக்கமாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீலங்காவுக்கு இன அழிப்பு போரில் இந்தியா மட்டும் உடந்தை அல்ல அந்த கிளப்பில் வேறு அங்கத்தவர்களும் இருந்தார்கள் என்பதையும் இந்தியாவுக்கு வெளியில் தயார் செய்யப்பட்ட இரசாயன குண்டுகள் தான் ஈழத்தமிழர்களை அழிக்க இந்த போரில் பயன்படுத்தப்பட்டன என்றும் இந்திய அரசு தனது ஊதுகுழல்கள் மூலம் சொல்லிவைக்க விரும்புகிறது.

மூண்டு சிங்களவன் அரசியல்வாதிகளின் சுருட்டலால் பாலம் இடிந்து விழுந்து செத்தாலும் அது தமிழரின் பிழை என்று பீல் பண்ணும் இருவரும் இந்த பதிவு பக்கம் தலை வைக்கமாட்டார்கள்.

அண்ணே இதெல்லாம் அந்த சனத்தை மேய்த்து கொண்டு போய் பலி குடுத்தவரை கேட்க வேண்டியது.....

உங்களுக்கு தானே பக்தி முத்தி போச்சு...ஒன்றுமே தெரியவில்லை....

இலங்கை பாவித்த ஆயுதங்கள் எது தடை செய்ய பட்டது??

சில நாடுகள் தாங்களாகவே பாவிக்க மாட்டோம் என்று சொன்ன ஆயுதங்கள் இருக்கே ஒழிய ..(உ+ம்..சில நாடுகள் தாங்கள் cluster bombs பாவிக்க மாட்டோம்...) வேறு இல்லை..

நீங்கள் உங்களுக்கு ஏற்றவாறு வரலாறுகளை திரித்து எழுதிய படியால்...யாருக்குமே உண்மை தெரியாது....

உங்களுக்கும் பக்தி முத்தி போய் விட்டது....

இப்படியே ஒப்பாரி வைக்க வேண்டியது தான்... :)

இன்று Crimea இல் நடப்பது மாதிரி இன்னும் 20 வருடத்தில் வடக்கு கிழக்கிலும் இலங்கை ஒரு தேர்தல் வைத்து முழு இலங்கையையும் ஒரு சிங்கள பௌத்த நாடு ஆக்கும் :)

****

Edited by இணையவன்

நீங்கள் இன்னும் சோறு சாப்பிடுகிறீர்களா? :D

அல்லது காலமையில 'கிரி பத்' தொடங்கியாச்சா? :o

'ட்ரை கிளீன்' பண்ண வேண்டிய மூளையை, அநியாயமா 'யாழ்' களத்திலை வைச்சுச் 'சவுக்காரம்' போட்டுத் தோய்ச்சு வீணாக்கிறீங்கள் போல கிடக்கு! :rolleyes:  

Edited by இணையவன்
மேற்கோள் தணிக்கை செய்யப்பட்டுள்ளது.

கைவசம் தேங்காய் பொச்சுக்கு தான் வழி....அது தான்...இன்னும் தேசியம் விளங்கவில்லையோ தெரியாது :)

எப்போதும் கிரிபத்தும்..போல்சம்பலும் தான் பேவரிட் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கைவசம் தேங்காய் பொச்சுக்கு தான் வழி....அது தான்...இன்னும் தேசியம் விளங்கவில்லையோ தெரியாது :)

எப்போதும் கிரிபத்தும்..போல்சம்பலும் தான் பேவரிட் :lol:

இந்தப் போக்கிலை போனீங்கள் எண்டால், நாளைக்கு 'முருகைக் கல்லு' தான் ...கவனம்! :D

Small%20(6cm)%20coral%20stone,%20Nanumea

அண்ணே இதெல்லாம் அந்த சனத்தை மேய்த்து கொண்டு போய் பலி குடுத்தவரை கேட்க வேண்டியது.....

உங்களுக்கு தானே பக்தி முத்தி போச்சு...ஒன்றுமே தெரியவில்லை....

இலங்கை பாவித்த ஆயுதங்கள் எது தடை செய்ய பட்டது??

சில நாடுகள் தாங்களாகவே பாவிக்க மாட்டோம் என்று சொன்ன ஆயுதங்கள் இருக்கே ஒழிய ..(உ+ம்..சில நாடுகள் தாங்கள் cluster bombs பாவிக்க மாட்டோம்...) வேறு இல்லை..

நீங்கள் உங்களுக்கு ஏற்றவாறு வரலாறுகளை திரித்து எழுதிய படியால்...யாருக்குமே உண்மை தெரியாது....

உங்களுக்கும் பக்தி முத்தி போய் விட்டது....

இப்படியே ஒப்பாரி வைக்க வேண்டியது தான்... :)

இன்று Crimea இல் நடப்பது மாதிரி இன்னும் 20 வருடத்தில் வடக்கு கிழக்கிலும் இலங்கை ஒரு தேர்தல் வைத்து முழு இலங்கையையும் ஒரு சிங்கள பௌத்த நாடு ஆக்கும் :)

ஒரு 300 வருடத்தில் நடக்க இருந்ததை...தலைவரின் தூரநோக்கு 50 வருடத்தில் சாத்தியமாக்கி விட்டது... :)

உங்களுக்கு தான் சிறி லங்கா பக்தி முத்திபோச்சு.

இப்படிதான் ரோகன் ஜெநோசைட்ரத்னா 53,000 டொலர் அரிச்சனை செய்திருக்கிறார்.

உங்கட தலீவரும் தமிழர் நிலத்தின் மீது பக்தி முத்தி தான் தடை செய்யப்பட்ட இரசாயன ஆயுதங்களை பாவித்து அப்பாவிகளை கொன்று ஒழித்து இந்தியா, பிரித்தானியா, கனடா வென்று போகமுடியாமல் திண்டாடுறார்.

உங்களுக்கு சிறி லங்கா பக்தி பூளையா கண்ணை மறைத்து இப்போது நடக்கும் தமிழீழ ஆதரவு போராட்டங்கள் கண்ணுக்கு தெரியவில்லை.

ஐம்பதற்கும் கீழ்பட்ட நாடுகளில் தடை பட்ட புலிகளை உலகம் பூரா தடை பட்டது போல் பில்டப்.

ஆனால் 112 நாடுகளில் தடைபட்ட கிளஸ்டர் குண்டுக்கு தடை கொடுக்க மனமில்லை.

சிறி லங்கா பக்தியில் நிர்வாணம் அடைந்து முக்தி அடைந்துவிட்டீர்கள். கருத்துக்கள் எல்லாம் ஒளிவட்டம்.:)

Edited by விவசாயி விக்

விவசாயி அண்ணா உலகம் முழுக்க தற்கொலை தாக்குதலுக்கு பல்கலைகழகங்கள் வைத்திருக்கிறார்களா அண்ணா?

உலகம் முழுக்க புலிகளுக்கு தடை நீக்கி விட்டார்கள் என்று எனக்கு தெரியாது அண்ணா.....

என்னை பொறுத்த வரை நான் இன்று சிறிலங்காவுக்கு  போய் மாணிக்க கங்கையில் குளித்து விட்டு வரலாம் அண்ணா....தலைவர் இருக்கும் போது ..சிங்களவனுக்கும்  கும்பிடவேனும்...தமிழனுக்கும் கும்பிட வேணும்....

இப்போது நான் சிங்களவனுக்கு மட்டும் தான் அண்ணா கும்பிட வேணும்.. (ஒன்று மிச்சம்)..வென்ற பக்கம் சாய்வதே.... என் பிழைப்பு...

தலைவர் வென்றிருந்தால்....நான் எப்படி தலைவரின் காவடி எடுத்திருப்பேன் என்று யோசித்து பாருங்கோ.... :)

ஓமண்ணே..வைத்திருக்கினம். உங்களுக்கு தெரியாது என்றால் அப்படி இல்லை என்று அர்த்தம் இல்லை.

ஜப்பானியர் கண்டு பிடித்து, ஆராய்ச்சி செய்து தற்கொடை தாக்குதலை தொடக்கி வைத்தார்கள்.

ஹாலிவுட் தற்கொடை பாடம்...சீ...படம் எடுப்பது தெரியாதாக்கும்? வில் சிமித்து படத்தில் பிளேனை கொண்டு குத்தினால் புல்லரிச்சு ஒழும்பி நிண்டு சலூட் அடிப்பீங்கள்.

டொம் குரூஸ் வாளோட மெசின் கன் சூட்டுக்க தற்கொடையா ஓடினால் மெச்சுவீர்கள்.

300 படத்தில் ஒரு மில்லியன் எதிரியை 300 பேர் தற்கொடையா போய் எதிர்த்தால் கிராபிக்ஸ் சுப்பர் என்று புகழ்வீர்கள்.

சுருட்டுக்காக எட்டி மிதித்து தற்கொடை செய்தவர் உங்களுக்கு மாவீரன்.

உங்களுடைய விசுவாசத்தை மெச்சுறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

கொத்துக் குண்டுகளை தாம் பாவிக்க மாட்டடோம் என்று சுமார் 84 நாடுகள் இதுவரை இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன. 2008 ஆம் ஆண்டு டிசெம்பெர் மாதம் 8 ஆம் தேதி இது கைச்சாத்தானது. இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னெவென்றால் இலங்கையோ அல்லது இலங்கைக்கு இக்குண்டுகளை வழங்கியதாகக் கருதப்படும் சீனா, இந்தியா, ரஷ்ஷியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளோ இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவில்லை. ஆகவேதான் தங்குதடையின்றிப் பாவித்திருக்கிறார்கள். 

கொத்துக்குண்டுகளை அமெரிக்கா வியட்நாமில் சந்தோஷமாகப் பாவித்தது. ரஷ்ஷியா ஆப்கானிஸ்த்தானிலும், செச்னியாவிலும் பாவித்தது. சீனாவோ ஏற்றுமதி செய்துவருகிறது. இந்தியா, இலங்கையைப் பின்பற்றி சட்டிஷ்க்கரிலோ அல்லது காஷ்மீரிலோ இதைச் செய்யக் காத்திருக்கிறது.

ஆகவே இந்த ஆயுதம் உலக நாடுகளால் தடைசெய்யப்பட்டதென்பது பிழையான கருதுகோள் என்றுதான் நான் நினைக்கிறேன். 84 நாடுகளைத்தவிர ஏனைய நாடுகள் இவற்றைப் பாவிப்பதை நிறுத்தவில்லை. 

http://en.wikipedia.org/wiki/Convention_on_Cluster_Munitions

Edited by ragunathan

ஏதோ இலங்கைத் தமிழருக்கு விளக்கமளிப்பது போலுள்ளது. பேட்டி எடுத்தவர் இலங்கைத் தமிழரா?

ஓமண்ணே..வைத்திருக்கினம். உங்களுக்கு தெரியாது என்றால் அப்படி இல்லை என்று அர்த்தம் இல்லை.

ஜப்பானியர் கண்டு பிடித்து, ஆராய்ச்சி செய்து தற்கொடை தாக்குதலை தொடக்கி வைத்தார்கள்.

ஹாலிவுட் தற்கொடை பாடம்...சீ...படம் எடுப்பது தெரியாதாக்கும்? வில் சிமித்து படத்தில் பிளேனை கொண்டு குத்தினால் புல்லரிச்சு ஒழும்பி நிண்டு சலூட் அடிப்பீங்கள்.

டொம் குரூஸ் வாளோட மெசின் கன் சூட்டுக்க தற்கொடையா ஓடினால் மெச்சுவீர்கள்.

300 படத்தில் ஒரு மில்லியன் எதிரியை 300 பேர் தற்கொடையா போய் எதிர்த்தால் கிராபிக்ஸ் சுப்பர் என்று புகழ்வீர்கள்.

சுருட்டுக்காக எட்டி மிதித்து தற்கொடை செய்தவர் உங்களுக்கு மாவீரன்.

உங்களுடைய விசுவாசத்தை மெச்சுறேன்.

திரைப்படம் பார்த்தா இவ்வளவு காலமும் போர் புரிந்தார்கள்?

தமிழ்சிறீ: இங்கு யாரும் இலங்கையை தூக்கி பிடிப்பது கிடையாது...ஆனால் தலைவரின் முரட்டு பக்தர்கள் எல்லாரையும் துரோகி ஆக்கி மற்ற பக்கம் தள்ளி விடுவார்கள்

கருணா எல்லாரும் இயக்கத்தில் சேர்ந்ததே தலைவரையும் தமிழரையும் கவுக்கவா?

எல்லாரையும் துரோகியாக்கியதே தான் மிச்சம்......

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் போக்கிலை போனீங்கள் எண்டால், நாளைக்கு 'முருகைக் கல்லு' தான் ...கவனம்! :D

Small%20(6cm)%20coral%20stone,%20Nanumea

https://www.facebook.com/photo.php?fbid=1476524822561662&set=p.1476524822561662&type=1

திரைப்படம் பார்த்தா இவ்வளவு காலமும் போர் புரிந்தார்கள்?

தமிழ்சிறீ: இங்கு யாரும் இலங்கையை தூக்கி பிடிப்பது கிடையாது...ஆனால் தலைவரின் முரட்டு பக்தர்கள் எல்லாரையும் துரோகி ஆக்கி மற்ற பக்கம் தள்ளி விடுவார்கள்

கருணா எல்லாரும் இயக்கத்தில் சேர்ந்ததே தலைவரையும் தமிழரையும் கவுக்கவா?

எல்லாரையும் துரோகியாக்கியதே தான் மிச்சம்......

உங்களுக்கு அரசியலும் தெரியாது, இராணுவ யுக்திகளும் தெரியாது.

நீங்கள் மட்டும் தமிழரை பயங்கரவாதியாக்கி கடத்தி, சுட்டு கொன்று, பிணத்தை வன்புணர்ந்து எங்களை புலிகள் பக்கம் தள்ளுவது சரியா?

கடைசி 5 வருடமா சிறி லண்கனின் படுகொலைகளை தமிழரின் பிழையாக காட்டுவது தான் உங்களுக்கு பீரீஸ் போட்ட கட்டளை என்று தெரியும்.

இப்போது வெளிவரும் ஜெனோசைட் வீடியோ எல்லாம் உங்களின் சிங்கள "துரோகிகள்" செய்யும் வேலை.

வாய்க்கு வாய் கருணாவை இழுக்கும் உங்களுக்கு புலிகளை வென்ற சிங்கள தளபதி துரோகியாக்கபட்டு கோவணத்துடன் சிறைசாலையில் வாடுவது தெரியவில்லை.

நீங்கள் எங்கள் பக்கம் சாயாதீர்கள்.

அது சரி பிரபாகரனுக்கு தலைமைத்துவ வகுப்பெடுக்கும் நீங்கள் 27 வருடமாக தலைமையை தேடுவது பெரிய கொமெடி.

நீங்களே பெரிய அமைப்பை தொடங்கலாமே?

உங்களால் முடியாது. வாயால் வட்டிலப்பம் சுட மட்டுமே லாயக்கு.

எந்த தலைப்பில் செய்தி வந்தாலும் அதன் பின்னோட்டமாக  எங்கு எமக்கு பிடிக்காத கள உறுப்பினரை எப்படி   சீண்டி விளையாடலாம் என்று காத்திருந்து சீண்டிவிளையாடி  பொழுது போக்கும்  அன்பான கள உறுப்பினர்களுக்கும்  எந்த உபயோகமும் அற்ற மீண்டும் மீண்டும் ஒரே விடயத்திற்குள்ளேயே நிற்கும் , வீண் சீண்டல் கருத்துகளுக்கு பதில் கூறி தமது  நேரத்தை  விரயமாக்கும் அன்பான  கள உறுப்பினருக்கும் நன்றி. இன்று இங்கு 19 பாகை சிறந்த காலநிலை. இளவேனிற்காலத்தின் வாசலில் நிற்கிறோம். கணணியை மூடிவிட்டு வெளியே  சென்று சுத்தமான காற்றை சுவாசித்தால் உடலுக்கும் உள்ளமும் (Korperlich und Geistig erholung)  ஆரோக்கியமாக இருக்கும்.   நன்றி.

Edited by tulpen

நன்றி சகோதரி. நான் வெளியில் -1 செல்சியஸ் டிக்ரீயில், நல்ல சூரிய வெளிச்சத்தில் நின்று மாட்டுக்கு தீவனம் காட்டுகிறேன். :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.