Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடாளுமன்றத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடு

Featured Replies

நாடாளுமன்றத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடு  

நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று (29/3/2014) சென்னை வளசரவாக்கத்தில் ஜெஎம்ஜெ திருமண மனடப்பதில் நடைபெற்றது. பொதுக்குழு கூட்டத்திற்கு கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமை வகித்தார். கூட்டத்தில் மாநில மண்டல மாவட்ட நகர ஒன்றிய பாசறை பொறுப்பாளர்கள் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். காலையில் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் மண்டல மாநில பொறுப்பாளர்கள் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி எடுக்க வேண்டிய நிலைப்பாடுகள் குறித்து தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். உணவு இடைவேளைக்கு பிறகு கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் இப்பொதுக்குழுவில் ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவுகளை பற்றி விருவாக உரையாற்றினார். அதன்படி

1. நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழர் நலனுக்கும், உரிமைகளுக்கும் எதிராக செயல்படும் காங்கிரஸ், பாரதிய ஜனதா ஆகிய தேசிய கட்சிகளை எதிர்த்து தமிழகத்தில் உள்ள அனைத்து பாராளுமன்ற தொகுதிகளிலும் தீவிர பிரச்சாரம் மேற்கொள்வதென்றும்.

2. தமிழர் இன நல எதிர்கால அரசியலில் பெரும் தீங்காக, அரசியல் நாகரிங்களுக்கு எதிராக, கொள்கையற்ற பிழைப்புவாத அரசியலை முன்னெடுக்கிற தேமுதிக போட்டியிடுகின்ற அனைத்து தொகுதிகளிலும் தீவிரமாக எதிர் பிரச்சாரம் செய்து அவர்களை வீழ்த்துவதென்றும்.

3. மதிமுக, பாமக, விடுதலை சிறுத்தைகள்,மனித நேய மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, புதிய தமிழகம்,இடதுசாரிகள் ஆகிய கட்சிகளை நாம் தமிழர் கட்சி தன் நேச சக்தியாக கருதுகிறது. இக்கட்சிகள் கொண்டுள்ள முறையற்ற/கொள்கையற்ற அரசியல் கூட்டணி அவர்களை நேரடியாக ஆதரிக்கமுடியாத நிலைக்கு நாம் தமிழர் கட்சி உள்ளாக்கி இருக்கிறது. எனவே இத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தன் நேச சக்திகளை எதிர்க்கவுமில்லை ஆதரிக்கவுமில்லை என்றும்.

4. முள்ளிவாய்க்கால் முற்ற சுவர் இடிப்பு, தமிழ்த்தேசிய தந்தை அய்யா பழ.நெடுமாறன் உள்ளிட்ட தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் கைது, சிறப்பு முகாம் என்ற பெயரில் ஈழத்தமிழர்களை வதை செய்யும் கொட்டடிகளை திமுக ஆட்சியின் தொடர்ச்சியாக அதிமுக அரசும் நடத்துவது போன்ற பிரச்சனைகளில் அதிமுக கடைபிடித்துவரும் நிலைப்பாடுகளும், தேர்தலுக்கு பிறகு அதிமுக பாஜகவோடு கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாலும் அதிமுகவின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாக இருப்பதால் அதிமுகவை முழுமையாக ஆதரிக்கமுடியாதென்றாலும்பாஜக தேமுதிக போட்டியிடுகின்ற தொகுதிகளில் அங்கு வெல்ல வாய்ப்புள்ள பிரதான கட்சியாக திகழ்கின்ற அதிமுகவே இருக்கின்ற நிலையில் அதை ஆதரிப்பதே மேற்படி தமிழர் விரோத கட்சிகளை வீழ்த்துவதற்கான ஒரே வழி என்பதால் அதை செய்வதென்று முடிவெடுக்கப்பட்டது.

மேற்படி எடுக்கப்பட்ட முடிவுகளை பொதுகுழுவில் பங்கெடுத்த அனைத்து நாம் தமிழர் பொறுப்பாளர்களும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டனர் . வருகின்ற ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் செந்தமிழன் சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியின் பிரச்சார பயணம் தொடங்குகிறது.

 

 

 

=== பாக்கியராசன் சே  === முகநூல்  == 29 மார்ச் 2014

 

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்.......



#தேசிய கட்சிகள் இரண்டுமே நம் எதிரி தான் இரண்டையும் அழிக்கவேண்டும் ...
#செத்துப்போன காங்கிரசுக்கு டெபாசிட் கூட கிடைக்ககூடாது..
#குடிகார நாயான விஜயகாந்த் நிற்கிற 14 தொகுதியுலும்தோற்க்கடிக்க படவேண்டும் .....
#மதிமுக,பாமக,விடுதலை சிறுத்தை,தமுக, ஆகிய கட்சிகளுக்கு எதிராக நாம் பிரச்சாரம் செய்ய வேண்டாம் காரணம் அவர்கள் நம் இனம் நம் இனத்தின் விடுதலைக்காக களமாடியவர்கள் அவர்கள் செல்கிற வழி காலபோக்கில் ஒரு நாள் அவர்கள் நம்மோடு பயணிப்பர் என்ற நம்பிக்கையுடன் செல்வோம் இவர்கள் போட்டியிடுகிற தொகுதியில் நம் பிரச்சாரம் இருக்ககூடாது அவர்கள் தனித்து நின்று அல்லது மேற்கூறிய அனைவரும் ஒரு கூட்டணியில் நின்றால் நாம் அவர்களுக்காக வாக்கு கேட்கலாம் ஆனால் அவர்கள் இருப்பது பிஜேபி மற்றும் திமுக விலஅதனால் அவர்களுக்கு ஆதரவாக வாக்கு கேட்க முடியாது, அவர்களை எதிர்த்து பிரச்சாரம் செய்ய போவதும் இல்லை ...
#அதிமுக விற்கு ஆதரவு இல்லை
#எப்போது முற்றம் இடிக்கப்பட்டு நெடுமாறன் அய்யாவை கைது செய்து சிறையில் அடைத்து அவர்கள் செய்த வரலாற்று பிழை , அவர்களை எதிர்த்தும் பிரச்சாரம் செய்வேன் .. ஆனால் தஞ்சை மற்றும் கன்னியாகுமரி எதிராக அங்கு நிற்கும் திமுக, காங்கிரசு,பிஜேபி இங்கு நிற்கும் அனைத்து இடத்திலும் இவர்களுக்கு எதிராக எவன் வலிமை மிக்கவன் நிற்கிறானோ அவனை ஆதரிப்போம்
#புதுவை பொறுத்தவரை நாராயணசாமி வரக்கூடாது அதனால் அவனை எப்படி வீழ்த்த முடியோமோ அப்படி வீழ்த்துவோம்அதனால் வரும் ஒட்டு அய்யா ராமதாசுக்கு வந்தாலும் சரி,அய்யா ரங்கசாமி க்கு வந்தாலும் சரி மொத்தலில் நாராயணசாமி வீழ்த்தவேண்டும்........
#கருணாநிதி தொடங்கிய அனைத்தையும் மூடிய செயலலிதா அகதிகள் முகாமை மட்டும் ஏன் மூடவில்லை இதையும் நாங்கள் கேட்போம் ...
#எம் இனத்திற்கு ஆதரவாக எவன் இருந்தாலும் சரி அவனுக்கு தோல் கொடுப்போம்
#எம் இனத்திற்கு எதிராகஎவன் எழுந்தாலும் சரி அவனை வீழ்த்துவோம்.....
#வருகிற 7 தேதி பிரச்சாரம் தொடக்கம் .....
#எங்கள் கோட்டை என பிஜேபி ம் காங்கிரசும் சொல்லி கொள்ளும் கன்னியாகுமரி தொகுதியில் இருந்து பிரச்சாரம் தொடக்கம் .......
#இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை....
#2016 ல் உருவாக்குவோம் அரசியல் புரட்சி .....

நாம் தமிழர் !!!

— with பாக்கியராசன் சே and 25 others.

 

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

 

நேற்று கூட்டத்தில் பேசிய எல்லோருடைய கவலையும் ஏற்கனவே அதிமுக ஆதரவாளர்கள் என்று முத்திரை குத்துகிறார்கள் இந்த முறையும் ஆதரித்தால் மேலும் அது வலுப்பெறும்..அதனால் வளர்ச்சி பாதிக்கப்படும்.. அறிவு சீவி முகமூடி போட்டுக்கொண்டு எல்லோரும் நம்மை விமர்சனம் செய்வார்கள் என்ற கருத்தை முன்வைத்தார்கள்.. எனக்கும் அதே பயம் இருந்தது உண்மை தான்.. சீமான் அண்ணனிடம் சொன்னேன்..

அண்ணன் தெளிவாக சொன்னார்.. தம்பி அவர்களை விட எனக்கும் உனக்கும் இந்த கட்சியின் வளர்ச்சியின் வளர்ச்சியில் அக்கறை இருக்கிறது. நம்மை விமர்சிப்பவர்கள் நாம் எந்த முடிவெடுத்தாலும் விமர்சிப்பார்கள். தேர்தலை புறக்கணிக்கிறோம் என்று சொல்லிப்பார் அதற்கும் விமர்சனம் வைப்பார்கள். இதை எல்லாம் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம்.. இம்முறை நமக்கு இப்படி ஒரு முடிவு எடுத்தாக வேண்டிய சூழல் அவர்களுக்கு புரியாது. புரிந்தாலும் அவர்கள் ஏற்க மாட்டார்கள்.

இந்த தேர்தல் தேசிய கட்சிகளுக்கான தேர்தல் தமிழகத்தில் தேசிய கட்சிகள் தலையெடுக்க விடுவது எக்காலத்திலும்தமிழ் இனத்தின் நலனுக்கு ஆபத்து. காங்கிரசும் பாஜகவும் தமிழர் நலனில் ஒரே நிலைப்பாடு தான் கொண்டிருக்கிறது, ஒரு சதவீதம் மாற்றமில்லை. இந்த நான்கு வருடமாக நாம் மட்டுமல்ல நம்மை போன்ற தமிழ்த்தேசிய இயக்கங்களின் எல்லா உழைப்பும் ஒரு தேசிய கட்சி எழுச்சி பெற்றால் கானல் நீராகிவிடும். தமிழர் உரிமை பிரச்சனைகளிலும் நமக்கு எதிரான முடிவை தைரியமாக எடுத்துவிடுவார்கள். ஈழ பிரச்சனை தமிழகத்தில் ஒரு பிரச்சனையே இல்லை என்று பரப்பப்படும். பின் இதுவரை நாம் எடுத்து வைத்த எல்லா வாதங்களும் வலுவிழந்துவிடும். இன்றைக்கு காங்கிரசை யாரும் கூட்டணி சேர்க்க அஞ்சும் நிலையை இந்த நான்கு வருடத்தில் உருவாக்கியிருக்கிறோம். அதே போல் மதவாதத்தின் பெயரால் பாஜகவோடும் பெரிய கட்சிகள் கூட்டணி வைக்க அஞ்சும் நிலை இருந்தது. ஆனால் இந்தமுறை தமிழருவிமணியன் போன்ற அரசியல் தெளிவற்ற ஆட்களால் முன்மொழியப்பட்டு விஜயகாந்த் போன்ற பிழைப்புவாத அரசியல் ஆட்களால் மீண்டும் பாஜக உயிர் பெற முனைகிறது. ஆக இந்த நேரத்தில் நாம் சரியான முடிவை எடுக்க வேண்டும். நாம் மட்டும் தான் தமிழர் நலன் என்ற பார்வையில் யோசித்து முடிவெடுக்க முடியும்.

சிவகங்கை தொகுதியை எடுத்துக்கொள் பெரியாரை செருப்பால் அடிப்பேன் என்று மேடை போட்டு சொன்னவரை வீழ்த்த வேண்டும் அதே போல் நம் இன அழிப்பின் சூத்திரதாரிகளில் ஒருவரான ப.சிதம்பரத்தின் மகனையும் வீழ்த்த வேண்டும் இப்படியான சூழலில் இவர்கள் விமர்சிக்கிறார்கள் என்று நாம் யாரையும் ஆதரிக்காமல் சென்று விட முடியாது. நாம் யாரையாவது ஆதரித்து தான் களத்தில் நிற்க வேண்டும். அதனால் வெல்ல வாய்ப்புள்ள பலமான கட்சியான அதிமுக வேட்பாளரை ஆதரிப்பதை தவிர வேறு வழி இல்லை. நம்மை விமர்சிப்பவர்களுக்கு இவர்கள் தோல்வி தேவையில்லை ஆனால் நமக்கு இவர்கள் தோல்வி அதுவும் மிக மோசமான தோல்வி தேவை.

காங்கிரசை இரண்டு பெரிய கட்சிகளும் புறக்கணித்துவிட்டன, பாஜகவையும் இரண்டு பெரிய கட்சிகளும் சேர்க்கவில்லை. ஆனால் விஜயகாந்த் இரண்டு பக்கமும் கடைசிவரை பேசிக்கொண்டிருந்தார். எந்த பக்கம் நல்ல பேரம் படிகிறதோ அந்த பக்கம் போகலாம் என்று கடைசிவரை வேலை செய்தார். ஆக இந்த மண்ணில் இனி ஒரு தேசிய கட்சி எழுந்து நிக்க உதவப்போவது விஜயகாந்த் தான். ஒரு வேலை தேமுதிக நான்கு ஐந்து இடம் வென்று பாஜக அரசில் பங்குபெற்றால் மற்ற இரு கட்சிகளையும் விட நமக்கு அதிக துரோகம் செய்வார். இந்த மண்ணில் தேசிய கட்சிகளை வளர்த்துவிடும் பணியை செவ்வனே செய்வார். அதனால் நாம் இந்த முறை அவரையும் எதிர்க்க வேண்டும் அதற்கும் பலமான எதிர்கட்சி வேட்பாளரை ஆதரிக்க வேண்டும்.

அணு உலை போராட்டத்தை நாம் முழுக்க ஆதரித்து நிற்கிறோம். ஆனால் அதற்காக ஆம் ஆத்மி என்ற தேசிய கட்சியை ஆதரிக்க முடியாது. ஏற்கனவே பாஜக காங்கிரஸ் என்ற இரண்டு எதிரிகள் இன்னொரு மூன்றாவது எதிரியை இந்த மண்ணில் வளர்த்து விட முடியாது. அணு உலை எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் தனியாக நில்லுங்கள் உங்களை ஆதிரிக்கிறோம் என்று சென்ற முறை இடிந்தகரை சென்ற பொழுது சொல்லிவிட்டு வந்தோம். அவர்கள் எங்கோ இருந்து வந்த வடநாட்டவரை நம்புகிறார்கள் நம்மை நம்பவில்லை. அவர்களின் இந்த முடிவு தவறானது என்று அந்த தேசிய கட்சியே தன் முரண்பட்ட நிலைப்பாடுகளால் அவர்களுக்கு புரியவைக்கும் நாம் அதுவரை அப்போராட்டத்தை எப்பொழுதும் போல் ஆதரித்துக் கொண்டிருப்போம்..

பாஜக நிற்கும் 8 தொகுதியிலும் தேமுதிக நிற்கும் 14 தொகுதி ஆக மொத்தம் 22 தொகுதியில் மட்டும் தான் நாம் அதிமுக வேட்பாளரை ஆதரிக்கப்போகிறோம். இது முழுக்க அதிமுக ஆதரவல்ல. அதிமுக தேர்தலுக்கு பிறகு கட்டாயம் பாஜகவோடு சென்று சேரும் அது கூட தெரியாமல் நாம் அரசியல் செய்யவில்லை. அப்படி நடக்கும் பொழுது நாம் அவர்களை பாஜகவை நாம் எதிர்ப்பதை விட அதிகம் எதிர்க்கலாம். இன்னொன்று எழுவர் விடுதலையை நாம் எதிர்நோக்கியிருக்கும் இந்நேரத்தில் நாம் அதையும் கணக்கில் எடுத்தே எந்த முடிவும் செய்ய வேண்டும். நம்மை விமர்சனம் செய்யும் யாருக்கும் அதை பற்றி கவலை இருக்காது. ஆனால் நமக்கு இது கடமை.


# விமர்சனங்களுக்காக சரியானதை செய்யாமல் விட முடியாது...

பாக்கியராசன் சே  // முகநூல் // 30 மார்ச் 2014

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

  • தொடங்கியவர்

 

3. மதிமுக, பாமக, விடுதலை சிறுத்தைகள்,மனித நேய மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, புதிய தமிழகம்,இடதுசாரிகள் ஆகிய கட்சிகளை நாம் தமிழர் கட்சி தன் நேச சக்தியாக கருதுகிறது. இக்கட்சிகள் கொண்டுள்ள முறையற்ற/கொள்கையற்ற அரசியல் கூட்டணி அவர்களை நேரடியாக ஆதரிக்கமுடியாத நிலைக்கு நாம் தமிழர் கட்சி உள்ளாக்கி இருக்கிறது. எனவே இத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தன் நேச சக்திகளை எதிர்க்கவுமில்லை ஆதரிக்கவுமில்லை என்றும்.

4. முள்ளிவாய்க்கால் முற்ற சுவர் இடிப்பு, தமிழ்த்தேசிய தந்தை அய்யா பழ.நெடுமாறன் உள்ளிட்ட தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் கைது, சிறப்பு முகாம் என்ற பெயரில் ஈழத்தமிழர்களை வதை செய்யும் கொட்டடிகளை திமுக ஆட்சியின் தொடர்ச்சியாக அதிமுக அரசும் நடத்துவது போன்ற பிரச்சனைகளில் அதிமுக கடைபிடித்துவரும் நிலைப்பாடுகளும், தேர்தலுக்கு பிறகு அதிமுக பாஜகவோடு கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாலும் அதிமுகவின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாக இருப்பதால் அதிமுகவை முழுமையாக ஆதரிக்கமுடியாதென்றாலும்பாஜக தேமுதிக போட்டியிடுகின்ற தொகுதிகளில் அங்கு வெல்ல வாய்ப்புள்ள பிரதான கட்சியாக திகழ்கின்ற அதிமுகவே இருக்கின்ற நிலையில் அதை ஆதரிப்பதே மேற்படி தமிழர் விரோத கட்சிகளை வீழ்த்துவதற்கான ஒரே வழி என்பதால் அதை செய்வதென்று முடிவெடுக்கப்பட்டது.

 

 

யாருக்காவது இவர் என்ன சொல்ல வாறார் என்று விளங்குதா? எனக்கு ஒரு இழவும் விளங்குதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

யாருக்காவது இவர் என்ன சொல்ல வாறார் என்று விளங்குதா? எனக்கு ஒரு இழவும் விளங்குதில்லை.

அதாவது தேசியக்கட்சிகள் பாஜக, காங்கிரஸ் முதல் எதிரிகள். அதனால் அவை போட்டியிடும் தொகுதிகளில் எதிர்த்து பிரச்சாரம் செய்யப்படும்.

தேமுதிக உள்ளூரில் எதிரி.. அதனால் எதிர்ப்பு பிரச்சாரம் செய்யப்படும்.

மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், பாமக, விடுதலைச் சிறுத்தைகள் போன்றவை நட்பு சக்திகள். ஆகவே அவர்களை எதிர்பதில்லை. ஆனாலும் அவை தவறான கூட்டணியில் இருப்பதால் அவற்றை ஆதரிப்பதும் இல்லை.

அதிமுக, திமுக போன்றவையும் உதவாத கட்சிகளே.. ஆனாலும் யாரையாவது சில தொகுதிகளில் ஆதரித்தேயாகவேண்டும். குறிப்பாக பாஜக, காங்கிரஸ், தேமுதிக போட்டியிடும் தொகுதிகளில். அங்கெல்லாம் யாரை ஆதரிக்க வேண்டும் என்பது பின்னர் கலந்தாலோசிக்கப்பட்டு தெரிவிக்கப்படும். குறிப்பாக விருதுநகரில் வைகோ அவர்களுக்கு ஆதரவு.. பல இடங்களில் அதிமுக ஆதரிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. எரிகிற கொள்ளியில் எந்தக்கொள்ளி நல்ல கொள்ளி என்கிற அடிப்படையில்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

சுத்தம்

  • கருத்துக்கள உறவுகள்

அதாவது தேசியக்கட்சிகள் பாஜக, காங்கிரஸ் முதல் எதிரிகள். அதனால் அவை போட்டியிடும் தொகுதிகளில் எதிர்த்து பிரச்சாரம் செய்யப்படும்.

தேமுதிக உள்ளூரில் எதிரி.. அதனால் எதிர்ப்பு பிரச்சாரம் செய்யப்படும்.

மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், பாமக, விடுதலைச் சிறுத்தைகள் போன்றவை நட்பு சக்திகள். ஆகவே அவர்களை எதிர்பதில்லை. ஆனாலும் அவை தவறான கூட்டணியில் இருப்பதால் அவற்றை ஆதரிப்பதும் இல்லை.

அதிமுக, திமுக போன்றவையும் உதவாத கட்சிகளே.. ஆனாலும் யாரையாவது சில தொகுதிகளில் ஆதரித்தேயாகவேண்டும். குறிப்பாக பாஜக, காங்கிரஸ், தேமுதிக போட்டியிடும் தொகுதிகளில். அங்கெல்லாம் யாரை ஆதரிக்க வேண்டும் என்பது பின்னர் கலந்தாலோசிக்கப்பட்டு தெரிவிக்கப்படும். குறிப்பாக விருதுநகரில் வைகோ அவர்களுக்கு ஆதரவு.. பல இடங்களில் அதிமுக ஆதரிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. எரிகிற கொள்ளியில் எந்தக்கொள்ளி நல்ல கொள்ளி என்கிற அடிப்படையில்.. :D

 

இப்ப.... புரிந்து விட்டது. :)

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப்பொறுத்தவரை

 

பாஐக தவிர்ந்த அதன் கூட்டணிக்கட்சிகள் - முழுத்தொகுதியிலும் வெல்லணும்

 

பாஐக  தோற்கும்  இடங்களில் அதிமுக  வெல்லணும்

 

இதன் மூலமே எதையாவது (தற்கொலை முயற்சியாக இருந்தாலும்)  பெற வலு இருக்கும்

 

இதையே 

நாம் தமிழர்  செய்ய  விரும்பகிறது என்று நினைக்கின்றேன்

பார்க்கலாம்

 

  • கருத்துக்கள உறவுகள்

கள நிலைமைக்கு ஏற்ற நல்ல முடிவுகள். நாம் தமிழர் கட்சியின் எதிர்காலம் சிறக்க வாழ்த்துக்கள்.


அதாவது தேசியக்கட்சிகள் பாஜக, காங்கிரஸ் முதல் எதிரிகள். அதனால் அவை போட்டியிடும் தொகுதிகளில் எதிர்த்து பிரச்சாரம் செய்யப்படும்.

தேமுதிக உள்ளூரில் எதிரி.. அதனால் எதிர்ப்பு பிரச்சாரம் செய்யப்படும்.

மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், பாமக, விடுதலைச் சிறுத்தைகள் போன்றவை நட்பு சக்திகள். ஆகவே அவர்களை எதிர்பதில்லை. ஆனாலும் அவை தவறான கூட்டணியில் இருப்பதால் அவற்றை ஆதரிப்பதும் இல்லை.

அதிமுக, திமுக போன்றவையும் உதவாத கட்சிகளே.. ஆனாலும் யாரையாவது சில தொகுதிகளில் ஆதரித்தேயாகவேண்டும். குறிப்பாக பாஜக, காங்கிரஸ், தேமுதிக போட்டியிடும் தொகுதிகளில். அங்கெல்லாம் யாரை ஆதரிக்க வேண்டும் என்பது பின்னர் கலந்தாலோசிக்கப்பட்டு தெரிவிக்கப்படும். குறிப்பாக விருதுநகரில் வைகோ அவர்களுக்கு ஆதரவு.. பல இடங்களில் அதிமுக ஆதரிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. எரிகிற கொள்ளியில் எந்தக்கொள்ளி நல்ல கொள்ளி என்கிற அடிப்படையில்.. :D

 

  • கருத்துக்கள உறவுகள்

தாங்கள் முன்னரே கேட்டதுமாதிரி தமிழ்க்கட்சிகள் (மதிமுக, பாமக, புதிய தமிழகம், விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி போன்றவை) ஒன்றாக இணைந்து தனி அணியாகப் போட்டியிட்டிருந்தால் எந்தக் குழப்பமும் இல்லாமல் 40 தொகுதிகளிலும் ஆதரித்திருப்போம் என்கிறார். ஆனாலும் அவை அவ்வாறு செய்யவில்லை. தமிழகத்தில் வாக்கு வங்கியே இல்லாத பாஜகவை இவற்றுள் சில கட்சிகள் பிடித்துக்கொண்டு தொங்குகின்றன.

 

அதாவது தமிழ்க்கட்சிகள் தனியாக நின்று வெல்லமுடியும் என்கிற நம்பிக்கை இந்த தமிழ்க்கட்சிகளுக்கு இல்லை. அதுவே உண்மையாக இருந்தாலும் கூட, கணிசமான கிறீஸ்துவ, முஸ்லீம் வாக்குகளை இழந்து பாஜக கூட்டணியில் இணைவதும் பொருத்தம் அல்ல. பாஜகவுடன் நிற்பதால் வென்றுவிடப்போவதும் இல்லை. அம்மாதான் இன்றைய நிலையில் பலமாக உள்ளார்.

 

மேலும், சீமானின் ஆதரவு மாற்றத்தை உண்டாக்கும் என அவர்கள் (தமிழ்க்கட்சிகள்) நம்பியிருக்கவுமில்லை. அப்படி இருக்கும்போது சீமான் மட்டும் வலுக்கட்டாயமாக ஆதரிக்கவேண்டிய தேவையும் இல்லை. மற்றத் தமிழ்க்கட்சிகள் நாம் தமிழர் ஆதரவை வேண்டாமல் பாஜகவை தேர்ந்தெடுத்தபோது சொன்ன செய்தியும் இதுதான்.

 

ஆகவே, இந்தத் தமிழ்க்கட்சிகளுக்கு ஆதரவும் இல்லை; எதிர்ப்பும் இல்லை என்கிற நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடு மிக நியாயமானது. காங்கிரஸ், பாஜக, தேமுதுக போன்றவை முதல் எதிரிகள் என்கிற அடிப்படையில் அந்தத் தொகுதியில் போட்டியிடும் வலுவான ஒரு மாற்றுக்கட்சிக்கு பிரச்சாரம் செய்வார்கள் என்று தெரிகிறது.

 

ஒரு உதாரணத்துக்கு, காங்கிரஸ் / பாமக / அதிமுக போட்டியிடும் ஒரு தொகுதியில் அதிக ஆதரவு பாமகவுக்கு இருக்குமாக இருந்தால் அவர்களுக்கே பிரச்சாரம் செய்வார்கள் எனத் தெரிகிறது. மாறாக அதிமுக பலமாக உள்ளதென்றால் அதிமுகவுக்கே பிரச்சாரம் அமையும். காங்கிரஸ் கட்டுத்தொகைகூட வாங்கக்கூடாது என்பதில் தெளிவாக உள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

 

ஆகவே, இந்தத் தமிழ்க்கட்சிகளுக்கு ஆதரவும் இல்லை; எதிர்ப்பும் இல்லை என்கிற நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடு மிக நியாயமானது. காங்கிரஸ், பாஜக, தேமுதுக போன்றவை முதல் எதிரிகள் என்கிற அடிப்படையில் அந்தத் தொகுதியில் போட்டியிடும் வலுவான ஒரு மாற்றுக்கட்சிக்கு பிரச்சாரம் செய்வார்கள் என்று தெரிகிறது.

 

ஒரு உதாரணத்துக்கு, காங்கிரஸ் / பாமக / அதிமுக போட்டியிடும் ஒரு தொகுதியில் அதிக ஆதரவு பாமகவுக்கு இருக்குமாக இருந்தால் அவர்களுக்கே பிரச்சாரம் செய்வார்கள் எனத் தெரிகிறது. மாறாக அதிமுக பலமாக உள்ளதென்றால் அதிமுகவுக்கே பிரச்சாரம் அமையும். காங்கிரஸ் கட்டுத்தொகைகூட வாங்கக்கூடாது என்பதில் தெளிவாக உள்ளார்கள்.

 

இசை

ஆய்வுக்கட்டுரைகளை  எழுதலாம் இனி

 

முக்கியமாக

தேவையற்று

தமிழ்க்கட்சிகளையோ

அதிமுக வையோ பகைக்காமல் இருக்கப்பார்க்கின்றார்கள்

நல்லமுடிவு....

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழத்திற்கு பாஜக ஆதரவளிக்காது:- வெங்காய நாயுடு:-

 

 

BJP.jpg

தமிழீழத்திற்கு பாரதீய ஜனதா கட்சி ஆதரவளிக்காது என அறிவித்துள்ளது.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி வெற்றியீட்டினாலும், தமிழீழம் அமைப்பதற்கு ஆதரவளிக்கப்பட மாட்டாது என தெரிவித்துள்ளது.

ஐக்கிய இலங்கைக்குள் தீர்வுத் திட்டம் என்பதே பாரதீய ஜனதா கட்சியின் நிலைப்பாடு என கட்சியின் சிரேஸ்ட தலைவர் வெங்காய நாயுடு தெரிவித்துள்ளார்.

ஐக்கிய இலங்கைக்குள் காத்திரமான ஓர் தீர்வுத் திட்டத்தை இலங்கை தமிழர்களுக்கு வழங்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

கட்சியின் கொள்கைப் பிரகடனம் தயாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/105150/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

வெங்கையா நாயுடுவை வெங்காய நாயுடு என்றூ எழுதுவது சரிதான்.. :D

 

இதற்குத்தான் பாஜகவுடன் வைகோ கூட்டணி வைப்பதைப் பற்றி விமர்சனங்கள் எழுந்தன.

  • கருத்துக்கள உறவுகள்

மாணவர்கள் அதிரடி நடவடிக்கை !

பா.ஜ.க விற்கு தாங்கள் கொடுத்த 48 மணி நேர கெடு இன்று முடிவடைந்த நிலையில் இன்று மாலை தமிழ் இளைஞர்கள் மற்றும் மானவர்கள் கூட்டமைப்பும் ,முற்போக்கு மாணவர் முன்னணியும் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.

மாணவர்களுடைய தேர்தல் நிலைப்பாடான BJP எதிர்ப்பையும் ,அதன் அவசியத்தையும் மக்களுக்கு புரியும்படி எடுத்து சொன்னார்கள்.

வர இருக்கும் 20 நாட்களில் எந்தெந்த வகையில் bjp க்கு எதிராக பிரச்சாரம் செய்ய இருக்கிறோம் என்பதை பட்டியல் இட்டு தெரிவித்தனர்.

முதல் கட்டமாக நாளை மாலை ப.ஜ.க வேட்பாளர் இல கணேசனின் தென்சென்னை தொகுதிக்குட்பட்ட அடையார் மத்திய கைலாஷ் பகுதியிலிருந்து பிரச்சாரத்தை துவங்க உள்ளனர்.

தமிழீழம் அமைவதற்கு ஆதரவு தெரிவிக்காத !ஏனைய தமிழர் வாழ்வாதார பிரச்சனைகளான கூடங்குளம் அணு உலை மீத்தேன் , முல்லை பெரியாறு ,மீனவர்கள் பாதுகாப்பு என எதிலும் தனது நிலைப்பாட்டை அறிவிக்காமலே தமிழகத்தில் தேர்தலில் போட்டியிட பா.ஜ.க நினைக்கிறது.

இதற்கு மானமுள்ள தமிழ் மாணவர்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் !

பா.ஜ.க விற்கு எதிராக முழு மூச்சாக பிரச்சாரம் செய்வோம் !

984052_791313067547387_472252550_n.jpg
fb

 

  • கருத்துக்கள உறவுகள்

வெங்கையா நாயுடுவை வெங்காய நாயுடு என்றூ எழுதுவது சரிதான்.. :D

 

இதற்குத்தான் பாஜகவுடன் வைகோ கூட்டணி வைப்பதைப் பற்றி விமர்சனங்கள் எழுந்தன.

 

பா.ஜ.க. தனது வாயாலேயே.... கெடப் போகின்றது.

வெங்கய்யா நாயுடு பேசாமல் வாயை... மூடிக் கொண்டிருந்திருக்கலாம்.

இதே... போல், தமிழக‌ பா.ஜ.க.  முன்னணித் தலைவர்களில் ஒருவரான எச். ராஜாவும், தமிழீழத்துக்கு ஆதரவில்லை என்று சில நாட்களுக்கு முன் அறிக்கை விட்டார்.

இந்தியாவை ஆட்சி செய்யும் உரிமையை... காங்கிரசிடம் இருந்து பறித்து பா.ஜ.க.விடம் கொடுக்கலாம் என்று மக்கள் எதிர்பார்க்கும் நிலையில்... இவர்களின் பேச்சு, கவலையை... ஏற்படுத்துகின்றது.

 

பா.ஜ.க. ஆட்சியிலிருக்கும்... அமைச்சரவையில், வைகோவும் இருக்கும் போது தான்... எமது குரல், உலகிற்கு உரத்துக் கேட்கும். வை.கோ. விற்கு வேறு தெரிவுகள் இல்லாத படியால்தான்... பா.ஜ.க.வுடன் இணைய வேண்டி வந்தது. :)

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

ஒலி, ஒளி, கமெரா கோணம் எல்லாம்.... சரி இல்லை.
சொல்ல வரும், விடயம் எப்படி இருந்தாலும்...
கமெரா கோணம் என்று, ஒன்று இருக்கு...
அதை... கவனத்தில், எடுத்தால்... தான், பல மக்களை அவதானிக்க முடியும், மாணவர்களே...
நீங்கள், செய்யும்... முய‌ற்சிகள், "ஆற்றில்... கரைத்த, பெருங்காயமாகப் படாது என்பது தான்.... எம் ஆதங்கம்."

இது கூட விளங்காமல் அரசியல் கதைக்கினம் .

பாரதிய ஜனதா ஆட்சி அமைத்தால் ஒரு மந்திரி பதவி கேட்டுவாங்கலாம் என்பதுதான் கூட்டு சேர்ந்தவர்கள் கொள்கை .

 தேவையான அளவு ம தி மு கா வை சேர்த்துக்கொள்ளவும் .#கூட்டணி. :icon_mrgreen:

 

சீமான் பற்றி எழுதி எனது நேரத்தை வீணக்க விரும்பவில்லை .(கனடா வந்து டிப்போர்ட் ஆன கேஸ் )

  • தொடங்கியவர்
(03.04.2014) மாணவர்களின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு கேள்வி பதில்கள்:-

1.செய்தியாளர்: தமிழர் நலனுக்கு எதிரான மத்திய கட்சிகள் தமிழ்நாட்டிற்குள் கால் பதிப்பதை அனுமதிக்க மாட்டோம் என்று சொல்கிறீர்கள் ? பிறகு ஏன் ஆம் அத்மியை நீங்கள் எதிர்க்க வில்லை ?

பிரபாகரன்: எங்களை பொறுத்தவரை தமிழ்நாட்டில் காங்கிரஸ் என்பது ஏற்கனவே செத்துப் போன ஒரு பாம்பு அதை அடிப்பதில் பிரோஜனம் இல்லை.
ஆம் அத்மி இப்பொழுது தான் முட்டையில் இருந்து வெளிவந்திருக்கும் குட்டி பாம்பு,
அதை அடித்து நாங்களே அதை வளர்த்து விட கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறோம்.
இப்பொழுது படம் எடுத்துக் கொண்டு இருக்கும் பா.ஜ.க என்கின்ற இந்த நச்சு பாம்பை தமிழ் நாட்டில் இருந்து அடித்து விரட்ட வேண்டியது எங்களின் வரலாற்றுக் கடமை.

2.செய்தியாளர்: ஏன் பா.ஜ.க வை மட்டும் எதிர்கிறீர்கள் ? கூட்டணிக் கட்சிகளை ஏன் எதிர்க்க வில்லை ?

பிரபாகரன்: இபொழுது இருப்பது உண்மையான கூட்டணி இல்லை , தேர்தலுக்கு பிறகு மாறப்போவதே நிலையான கூட்டணி.
இப்பொழுது இந்த பா.ஜ.க கூட்டணியில் இருக்கும் தமிழக கட்சிகளின் நிலைமை தேர்தல் முடிவிற்கு பிறகு பரிதபாமாகும்.
தமிழக கட்சிகள் எதுவும் பா.ஜ.க வின் கொள்கை பிடிப்பினால் விருப்பப்பட்டு இந்த கூட்டணியில் சேர வில்லை . அவர்கள் பாவம் ஏதோ அவர்களின் தேர்தல் லாபத்திற்காக இந்த கூட்டணியில் இருக்கிறார்கள்.
எனவே கூட்டணிக்கட்சிகளை விமர்சிக்க வேண்டும் என்கிற அவசியம் எங்களுக்கு இதுவரை ஏற்படவில்லை.

3.செய்தியாளர்: ஒரு வேலை உங்கள் எட்டு கோரிக்கைகளையும் பாரதிய ஜனதா கட்சி ஏற்றுக்கொண்டால் நீங்கள் அந்தக் கட்சியை ஆதரிப்பீர்களா ??

பிரபாகரன்: இந்த எட்டுக் கோரிக்கைகளில் ஒரு சின்ன இடத்தில கூட சமரசம் செய்துகொள்ள நாங்கள் தயாராக இல்லை.
ஒரு வேலை எட்டுக் கோரிக்கைகளையும் பா.ஜ,க முழுமையாக ஏற்றுக்கொண்டால் இந்த தேர்தலில் மட்டும் நாங்கள் அவர்களை எதிர்க்க மாட்டோம்.

4.செய்தியாளர்: உங்கள் பா.ஜ.க விற்கு எதிரான பிரச்சாரம் தேர்தல் வரை தானா ? இல்லை தேர்தலுக்கு பின்னும் தொடருமா ?

பிரபாகரன்: பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான பிரச்சாரம் என்பது தேர்தல் வரை மட்டுமே.
நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு பா.ஜ.க மற்றும் RSS ன் அடிப்படை மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிரானப் பிரச்சாரம் தொடரும்.

5.செய்தியாளர்: உங்கள் மீது அ.தி.மு.க சாயல் பூசப்படுகிறதே அதை நீங்கள் உணர்கிறீர்களா?

பிரபாகரன்: இதுவரை அப்படி எதுவும் நான் உணரவில்லை, நீங்கள் என் நடவடிக்கைகளை கூர்ந்து கவனிக்கவில்லை என்பது இதன் மூலம் தெரிகிறது.
தமிழக காவல் துறையால் அதிகம் பாதிக்கப்பட்ட மாணவர் அமைப்பு நாங்கள் தான்.
நவம்பர் மாதம் கன்னியாகுமரியில் அதிரடிப் படை போலீசார் தாக்கியதில் நாங்கள் இரண்டு நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோம்.
அந்த தாக்குதலினால் இன்னும் என்னால் சரிவர நடக்க முடியவில்லை.
பிரணாப் முகர்ஜி வருகையின் பொழுது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக காவல் துறை வீடு புகுந்து கைது சென்ற என்னை அழைத்துச் சென்றது.
கடந்த மாதம் 13ம் தேதி நடந்த UNICEF முற்றுகை போராட்டத்தின் பொழுது கொடி கிழித்ததாக கூறி எங்களுக்கு 15 நாள் கடும் காவல் தண்டனை கொடுத்தார்கள், ஐந்து நாட்கள் சிறையில் இருந்த நாங்கள் இப்பொழுதும் நிபந்தனை பிணையில் தான் வெளியில் இருக்கிறோம்.
ஒவ்வொருவர் மீதும் ஐந்து வழக்குகள் பதிய பட்டிருக்கிறது.
இப்பொழுது நீங்களே சொல்லுங்கள் தமிழக அரசாங்கம் யாருக்கு ஆதரவு ?

6.பிரபாகரன்: பா.ஜ.க போர்வையில் RSS இயக்கம் தமிழ்நாட்டிற்குள் கட்டமைப்படுவதை நாம் தடுக்க வேண்டும்.
கன்னியாக்குமரி , ராமநாதபுரம்,கோவை போன்று தமிழகத்தின் மற்ற மாவட்டங்களும் மதக் கலவர பூமியாக மாறுவதை தடுக்க இந்த தேர்தலில் பா.ஜ.க க்கு எதிரான தீவிர பிரச்சாரத்தை நாம் முன்னெடுப்பது அவசியம்.

1925ம் ஆண்டு RSS இயக்கம் வட நாட்டில் ஹெட்கேவர் என்பவரால் தோற்றுவிக்கப்பட்டு வர்னாசர்மா கொள்கையையும்,பிற்போக்கு தனத்தையும், தீவிர ஹிந்துத்துவ கொள்கையையும் நாடு முழுவது பரப்பி மக்களின் ஒற்றுமையை சீர்குலைத்து வந்தது.
அதே 1925ல் தமிழகத்தில் தந்தை பெரியார் சுய மரியாதை இயக்கத்தை துவக்கிவைத்தார். அதன் விளைவாக தான் அன்று கயவர்களால் தமிழ்நாட்டிற்குள் நுழைய முடியவில்லை. அய்யா இல்லாத குறையை தீர்க்க இன்று நாங்கள் அவரின் பணியை தொடர்கிறோம்.
— with Prabhakaran V Prabha PK and 48 others.== facebook ==

 

  • தொடங்கியவர்

இந்திய தேசிய கட்சிகள் மற்றும் தமிழர் விரோத கட்சிகளை எதிர்த்து களமாடுவோம்.
===============================================================================

 

தமிழக தமிழர்களாகிய நாம் மிக முக்கியமான கால கட்டத்தில் நிற்கின்றோம். இந்த தேர்தலானது இனப்படுகொலைக்கு பிறகான காலகட்டத்தில் தமிழகத்தில் வாழ்வாதார பிரச்சனைகளுக்கான மக்கள் போராட்டங்கள் பெரும் அளவில் நடைபெற்று கொண்டும், தமிழக மக்களின் குரலுக்கு காது கொடுக்காத, தமிழர்களுக்கு எதிராக செயற்பட்டுக் கொண்டிருக்கும் இந்திய தேசிய கட்சிகளின் தமிழர் விரோத கொள்கைகள் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு அன்னியப்பட்டு நிற்கும் சூழலில் நாம் தேர்தல் களத்தில் நிற்கின்றோம். குசராத்தில் இசுலாமியர்களை இனப்படுகொலை செய்த இந்துதுவ பயங்கரவாத பா.ஜ.க ஊடகங்களால் உருவாக்கப்பட்ட போலி பிம்பத்தின் மூலமாக தாங்கள் மாபெரும் சக்தி போல காட்ட முயற்சிக்கிறார்கள். அதேசமயம் அவர்கள் தமிழ் மண்ணில் நின்று தமிழீழத்தினை நாங்கள் ஆதரிக்க மாட்டோம் என கொக்கரிக்கிறார்கள். தாங்கள் தான் மாற்று என்று கூறியவர்களும் ஏழு தமிழர் விடுதலைக்கு எதிராக பேசி அம்பலப்பட்டுவிட்டனர். இந்திய தேசிய கட்சிகள் தமிழர்களுக்கு எதிரானதே என்பது தெளிவாக தெரிகிறது. எனவே தமிழகத்தில் தேசிய கட்சிகளை வேரோடு வேரடி மண்ணோடு விழ்த்துவோம்.

காங்கிரஸ் சி.பி.ம், பா.ஜ.க, ஆம் ஆத்மி உள்ளிட்ட தமிழர்களுக்கு எதிரான நிலைபாடு எடுக்கும் இந்திய தேசிய கட்சிகளை தமிழகத்தில் இருந்து விரட்டி அடிப்போம். தமிழீழ விடுதலையை எதிர்க்கும் எவனும் தமிழகத்தில் இடம் இல்லை என இந்தியர்களுக்கு புரியவைப்போம். இனப்படுகொலை நடத்திய இந்திய காங்கிரஸ் அரசில் பங்கெடுத்த இனப்படுகொலை பங்காளிகள் தி.மு.க, உள்ளிட்ட கட்சிகளையும் தமிழ்ச்சமுகம் சந்தித்த எந்த பிரச்சனைகளிலும் தமிழர்களோடு நிற்காத தே.மு.தி.க வையும் இந்த தேர்தல் களத்தில் நாம் எதிர்ப்போம். கடந்த காலங்களில் சில நிலைகளில் நமக்கு ஆதரவானவர் போல அறிக்கைகள் விட்டாலும் உங்களில் ஒருத்தியாக இருப்பேன் என வாக்குறுதி கொடுத்து சங்கரன்கோவில் இடைத்தேர்தலுக்கு பிறகு மாற்றியதை போல அ.தி.மு.க அரசு தன் நிலைபாட்டை மாற்றும். தமிழ் உணர்வாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி ஈழ ஆதரவாளராக தன்னை காட்டும் இந்த அரசு ஏழு தமிழர் விடுதலையில் 161 விதியை பயன்படுத்தி இருந்தால் அவர்கள் விடுதலை எளிதாகி இருக்கும் தன் அரசியல் ஆதாயதிற்க்காக அதை பயன்படுத்தி கொண்டது. இந்த அரசுதான் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் நினைவாக கட்டப்பட்ட முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடித்ததை நாம் மறந்து விடமுடியாது. அப்பாவி ஈழத்தமிழர்களை சிறப்பு முகாம்களில் அடைத்து வைத்து சித்திரவதை செய்வதும் இந்த அரசுதான் ஐ.நா. அலுவலக முற்றுகையிட்ட மாணவர்களை சிறையில் அடைத்ததும் இந்த அரசு தான். இந்த அரசு நமக்கான அரசு அல்ல நமது அரசும் அல்ல.

கூடங்குளம் அணுஉலை, மதுரை வடபழஞ்சி, தேனி நீயுட்ரினோ, அணுத்துகள் ஆய்வு மையம், தஞ்சை மீத்தேன் திட்டம், கல்பாக்கம் அணுஉலை, செய்யாறு அனல் மின் நிலையம், நாகப்பட்டினம் அனல் மின் நிலையம், கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டம் என தமிழக இயற்கை வளங்களை சூரையாடி தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்க வரும் திட்டங்களுக்கு எதிராகவும் தமிழக மீனவர் படுகொலை, ஏழு நிரபராதி தமிழர்கள் விடுதலை, 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் சிறைவாசிகள் விடுதலை, சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு என நாம் சந்திக்கும் பிரச்சனைகளுக்கும். முல்லை பெரியாறு, காவேரி, பாலாறு உள்ளிட்ட தமிழக ஆற்றுநீர் உரிமைகளுக்காகவும் தொடர்ந்து போராடும் மக்கள் உடன் நின்று களமாடுவோம். தமிழர்களின் நலன் கருதி தொடர்ந்து நாம் இந்த திட்டங்களை எதிர்க்க வேண்டிய கட்டாயத்திலும், தமிழர்களுக்கு எதிரானவர்களை மக்களுக்கு அடையாளங்காட்ட வேண்டிய இடத்தில் இருக்கிறோம். இந்த தமிழர் விரோத திட்டங்களையும், இந்த திட்டங்களுக்கு ஆதரவான அரசியல் கட்சிகளை எதிர்த்து களம் ஆடுவோம் இலங்கையுடன் வர்த்தக ஒப்பந்தம் போட்டவர்கள், பெரியாரை செருப்பால் அடிப்பேன் என் பேசியவர்கள் தமிழீழத்தை ஏற்க மாட்டோம் என்பவர்கள், தமிழீழ இனப்படுகொலைக்கு துணை நின்றவர்கள், அப்பாவி இசுலாமிய சகோதரர்களை இனப்படுகொலை செய்தவர்கள், ஏழு தமிழர் விடுதலை எதிர்த்தவர்கள் என நம் எதிரிகளை எதிர்த்து நாம் களமாடுவோம்.

மேற்கூறிய இந்திய தேசிய தமிழர் விரோத கட்சிகளை தவிர்த்து நமக்காக பேசுபவர்களை தேர்ந்தெடுப்போம்.

-பாலச்சந்திரன் மாணவர் இயக்கம்(07/04/2013)

 
  • தொடங்கியவர்

  • தொடங்கியவர்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=138541&hl=

 

2014 மக்களவைத் தேர்தலில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியவை = மே பதினேழு இயக்கம்

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=138541&hl=

Edited by மகம்

  • தொடங்கியவர்
திருநெல்வேலி பரப்புரை கூடத்தில் ஒரு நாம் தமிழர் தம்பி இப்படி பேசினான்..

நான் வெறும் காலில் நடக்கிறேன்.. நான் போகும் பாதையில் கடும் விஷம் நிறைந்த முட்கள் கிடக்கிறது. வீச்சமெடுக்கும் நரகல் கிடக்கிறது.. என்னை அசுத்தப்படுத்தும் சகதி கிடக்கிறது.. அத்தோடு சில பிஞ்ச செருப்புகளும், ஒரு நல்ல செருப்பும் கிடக்கிறது.. அந்த நல்ல செருப்பு பின்னொருநாளில் என் காலை கடிக்கும் என்று எனக்கு தெரியும்..

ஆனாலும்...

இன்று நான் என் பாதையில் முன்னேற, முள் குத்தாமல் நரகலை கடந்து சகதியை தாண்டி செல்ல எனக்கிருக்கும் ஒரே வழி இருக்கும் அந்த நல்ல செருப்பை பயன்படுத்துவது மட்டுமே. குறைந்த பட்ச அறிவை உபயோகிப்பவர்கள் நான் செய்வதை தான் செய்வார்கள்..

இந்த முடிவை தவறென்று சொல்கிறார்கள் சிலர். கட்டாயம் அச்செருப்பு கடிக்கும் என்று தங்கள் ஆசையை சொல்கிறார்கள் சிலர். பிஞ்ச செருப்பை போட சொல்கிறார்கள் சிலர். இப்படியான அறிவுரை கூறுபவர்கள் காலில் எல்லாம் முள் குத்திய வடுக்களும், நரகலில் மிச்சமும், சகதியின் அழுக்கும் ஒட்டிருப்பதை காண்கிறேன். ஆக என்னை விமர்சனம் செய்யவும், எனக்கு அறிவுரை சொல்லவும் அவர்கள் தகுதியற்றவர்களாகிறார்கள். பிஞ்ச செருப்புகளை வைத்து காலை புண்ணாக்கிக்கொள்ள நானொன்றும் முட்டாள் இல்லை..

இனநல அரசியல் பாதையில் விஷ முள்ளான பாஜகவையும், நரகலான காங்கிரசையும், சகதியான தேமுதிகவையும் கடக்க நான் உபயோகப்படுத்தும் செருப்பு தான் அதிமுக. அப்படி பின்னொரு நாளில் அதிமுக என்னும் செருப்பு கடித்தால் அப்பொழுது அச்செருப்பை நானே குப்பையில் வீசுவேன் ஆனால் இன்று அதுவே எனக்கிருக்கும் ஒரே சரியான பொருள். என் முடிவு மிக சரியானது என்பதை நான் வெற்றிகரமாக கடந்து சென்ற பின் முள் குத்திய வலியோடும் நாற்றத்தோடும், அழுக்கொடும் இன்று விமர்சனம் செய்து கொண்டு நிற்பவர்கள் உணருவார்கள்..

# நம்பினால் நம்புங்கள்... இதை பேசிய தம்பிக்கு வயது 25 கூட இருக்காது.. அந்த சின்ன தம்பிக்கு இருக்கும் அரசியல் தெளிவு இங்கிருக்கும் பல தலைவர்களுக்கு இல்லை என்பது தான் வேதனை.. நாம் தமிழர் கட்சியில் அண்ணன் மட்டுமல்ல தம்பிகளும் தெளிவு தான்...
 
 
  • தொடங்கியவர்

நாம் தமிழர்; சீமான் பேச்சுகள் = திருநெல்வேலி [ 8 ஏப்ரல் 2014]

 

  • தொடங்கியவர்

செந்தமிழன் சீமான் பேச்சு == ஆற்றூர்

 


செந்தமிழன் சீமான் பேச்சு == குளச்சல்

 


செந்தமிழன் சீமான் பேச்சு ==  வடசேரி

 

  • தொடங்கியவர்

 சீமான் பேச்சு = வள்ளியூர்

 

Edited by மகம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.