Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாயை கூடையில் சுமந்து செல்லும் நவீன சிரவண குமாரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தாயை கூடையில் சுமந்து செல்லும் நவீன சிரவண குமாரன்

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

அவர் வலது கையில் உள்ள குச்சியை பாவித்து பாரத்தை மறுதோளும் சுமப்பதுபோல் செய்கிறார். அருமையான சிந்தனை..

இணைப்பிற்கு நன்றி நுணா.. மீளவும் கண்டதில் மகிழ்ச்சி..! :D

  • கருத்துக்கள உறவுகள்

இந்தவிடையத்தை எந்தவகையிலும் என் மனம் ஏற்றுக்கொள்ளமுடியாதுள்ளது. அந்தத் தாயின்மீது எனக்குப் பரிதாபம் ஏற்படுவதைவிட ஆத்திரமே மேலோங்குகிறது. தாய் என்றால் அன்பு என்பதையே நான் அறிந்துள்ளேன் அது தவிர உணர்ந்துமுள்ளேன் இது அப்படியானதல்ல மிகவும் வெறுக்கத்தக்க விடையம்.

 

தவிர அவர் சரவணக்குமாரோ எவரோ, பெண்களை பாலியல் வன்புணர்வுக்கு காடையர்களால் உட்படுத்தப்படும்போதும், மதுரையில் கல்லூரிப்போரூந்தை தீவைத்து எரித்தபோதும் ஊடக விபச்சாரிகள் அதைத் தாங்கள் செய்தியாகப்போடவேண்டுமென வாழாவிருந்ததுமட்டுமல்ல ஊக்குவித்தார்கள் என்பது வரலாறு. இதனைச் செய்தியாகப்போட்டு பணம் சம்பாதிக்கும் ஊடகம் அவருக்கு அவரது தாயாரை இலகுவாக பயணிக்க வைப்பதற்காக என்ன வழியினைக் காட்டியது?

 

ஒட்டு மொத்தமாக என்னால் இதை ஏற்றுக்கொள்ளமுடியாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
தாயை கூடையில் சுமந்து நடந்தே யாத்திரை செல்லும் கைலாஷ் கிரி

ம.பி.யில் ‘வார்கி’ என்னும் கிராமத்தை சேர்ந்த இந்த பிரம்மச்சாரி, கீர்த்தி தேவி என்கிற தனது 80 வயது தாயை தன் தோளில் சுமந்தபடி நாடு முழுதும் பயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த 15 ஆண்டுகளாக புண்ணிய ஷேத்ரங்களுக்கு அவர் இப்படி பயணம் மேற்கொண்டு வருகிறார்.

ஒரு பெரிய நீளமான கழியில், இரண்டு கூடைகளைக் கட்டி தராசு போல் தொங்கவிட்டு, ஒரு பக்கம் தன தாயையும், மறுபக்கம் தங்கள் உடைமைகளையும் வைத்து, தோளில் சுமந்தபடி செல்கிறார் இந்த பிரம்மச்சாரி இளைஞர். இதுவரை காசி, தாராகேஷ்வர் உள்ளிட்ட பல்வேறு புனித தலங்களுக்கு சென்றுள்ளார்.

Kailash-Giri-11.jpg

இது பற்றி செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது :

“என் தாயாருக்கு கடவுள் பக்தி மிகவும் அதிகம். சிறுவயதில் நான் மரக்கிளையிலிருந்து விழுந்து, மிகப் பெரியளவில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை அளிக்க, போதிய வசதி இல்லை. எனது தாய், தொடர்ந்து கடவுளிடம் வேண்டிக் கொண்டார். என்ன ஆச்சரியம், எந்தவித சிகிச்சையும் எடுத்துக் கொள்ளாமல், விரைவிலேயே நான் பூரணமாக குணமடைந்து விட்டேன். வயதான காலத்தில் எனது தாய் புண்ணிய தளங்களுக்கு செல்லவேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் என்னிடம் வசதி இல்லை. எனவே எனது தாயின் ஆசையை நிறைவேற்றுவதற்காகவும், எனக்கு பூரண குணமளித்ததற்காக கடவுளுக்கு நன்றி சொல்லவும், இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளேன். எனது 24ம் வயதில் இந்த பயணத்தை தொடங்கினேன்” இவ்வாறு பிரம்மச்சாரி கூறினார்.

வயதான காலத்தில் எனது தாய் புண்ணிய தளங்களுக்கு செல்லவேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் என்னிடம் வசதி இல்லை. எனவே எனது தாயின் ஆசையை நிறைவேற்று-வதற்காகவும், எனக்கு பூரண குணமளித்ததற்காக கடவுளுக்கு நன்றி சொல்லவும், இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளேன். எனது 24ம் வயதில் இந்த பயணத்தை தொடங்கினேன்.

தன மகன் படும் சிரமத்தைப் பார்த்து, யாத்திரை போதும் அதை முடித்து ஊர் திரும்பிவிடலாம் என்று கீர்த்திதேவி கூற, ஆனால் பிரம்மாச்சாரி இதை விடக்கூடாது என்று உறுதியாக இருக்கிறார். ஆரம்பத்தில் இவரை பலரும் கிண்டல் செய்தனர். இப்போது, நல்ல வரவேற்பு கொடுக்கின்றனர். இவருடைய தாய் பக்தியைப் பார்த்து, அவர் காலில் விழுந்து வணங்குகின்றனர். சாப்பாடு, தங்கும் இடம் கொடுத்து உதவுகின்றனர்.

ஒரு விஷயம் கவனிச்சீங்களா… ஒரு பக்கம் அம்மாவோட ஆசையை நிறைவேற்ற மறுப்பக்கம் கடவுளுக்கு நன்றி சொல்ல இந்த பயணத்தை துவக்கினாராம். நமக்கு மண்டையில அடிச்சி ஏதோ சொல்ற மாதிரி இல்லே…?

நான் எங்கே எப்போ இவரை தரிசிச்சேன்….

2003ம் ஆண்டு. அப்போ நாங்க பூவிருந்தவல்லி பக்கத்துல குமணன்சாவடியில இருந்தோம். தேச யாத்திரை செஞ்சிகிட்டிருந்த கைலாஷ் கிரி அப்போ தமிழ் நாட்டுக்கு வந்திருந்தார். அவரை பத்தி அப்போ பேப்பர்ல்ல எல்லாம் நியூஸ் வந்திருந்தது. அதுல தான் எனக்கு இப்படி ஒருத்தர் இருக்குற விஷயம் தெரியும். அவரை நேர்ல பார்த்து ஆசி வாங்க துடிச்சேன். அவரை எங்கே போய் புடிக்கிறது? யாரை கேட்கிறது? எங்கே தேடுறது? ஒன்னும் புரியலே. ஆனா அவரை எப்படியாவது பார்த்துடணும்னு மனசு துடிச்சது. இப்போ இருக்குற மாதிரி பத்து வருஷத்துக்கு முன்ன ஊடக தொடர்புகளோ இல்லே இணைய வசதியோ இதெல்லாம் அவ்வளவா கிடையாது. அதனால அவர் அடுத்து எங்கே போறார்… போற வழியில எங்கே தங்குறார் இதெல்லாம் என்னால தெரிஞ்சிக்க முடியலே. சரி… நாம கொடுத்து வெச்சது அவ்ளோ தான்னு விட்டுட்டேன்.,

Kailash-Giri-2.jpg

எங்க வீட்டு பக்கத்துல ‘தக்ஷின் ஷீரடி’ன்னு ஒரு சாய்பாபா கோவில் இருக்கு. அந்த கோவிலுக்கு ஒவ்வொரு வியாழக்கிழமையும் போய் அங்கே பஜன்ஸ்ல கலந்துக்குவேன். ஒரு நாள் பஜன்ஸ் முடிஞ்சு தீபாராதனை காட்டுறதுக்கு முன்ன குட்டிக்கதை ஒன்னை சொன்னேன். கடைசீல ஒவ்வொரு வாரமும் பஜன்ஸ் முடியும்போது நான் குட்டிக்கதை சொல்ற மாதிரி ஆயிடுச்சு. (ஆக்கிட்டாங்க!)

இந்த சூழ்நிலையில, ஒரு நாள் காலையில, எழுந்திருச்சு குளிச்சு ஆபீஸ்க்கு ரெடியாகிட்டிருக்கேன். அப்போ அப்பா வெளிய எங்கேயோ போயிட்டு வந்தாரு…

Kailash-Giri-4.jpg

“எங்கேப்பா இவ்வளவு சீக்கிரம் காலையில போயிட்டு வர்றீங்க?”ன்னு நான் கேட்க… “கண் பார்வை இல்லாத அம்மாவை தோள்ல சுமந்துகிட்டு ஒருத்தரு நாடு முழுக்க புண்ணிய ஷேத்ரங்களுக்கெல்லாம் போறார். அவர் திருப்பதி போற வழியில… நேத்து இந்த வழியா வந்தார். (பூந்தமல்லி நெடுஞ்சாலை, குமணன்சாவடி) நம்ம சாய் பாபா கோவில்ல இருக்குறவங்க எல்லாம் அவரை போய் பார்த்து, எங்க கோவில்ல இன்னைக்கு நைட் தங்கிட்டு காலையில் உங்க உணவை முடிச்சிட்டு போகணும்னு கேட்டுகிட்டாங்க. அவர் ஒத்துகிட்டு நைட் கோவில்ல தங்கியிருந்தார். இதோ இப்போ தான் கிளம்புறார்…”

அப்பா… சாவகாசமா சொல்ல… எனக்கு தூக்கி வாரிப் போட்டிச்சு… அட யாரை நாம் சந்திக்கனும்னு தேடிக்கிட்டுருக்கோமோ அவர் இங்கேயே நம்ம பக்கத்துலைய வந்திருக்கார். நமக்கு தெரியாம போயிடிச்சே.. அப்படின்னு என்னை நொந்துகிட்டேன்.

அட யாரை நாம் சந்திக்கனும்னு தேடிக்கிட்டுருக்கோமோ அவர் இங்கேயே நம்ம பக்கத்துலைய வந்திருக்கார். நமக்கு தெரியாம போயிடிச்சே.. அப்படின்னு என்னை நொந்துகிட்டேன்.

“அப்பா… அவரை தான் நான் பார்க்கணும்னு துடிச்சிக்கிட்டுருக்கேன்… அவர் இன்னும் எவ்ளோ நேரம் இருப்பார்? உங்களுக்கு விபரம் ஏதாவது தெரியுமா?”

“அவர் கிளம்பிக்கிட்டுருக்கார்.. உடனே போனா பார்த்துடலாம்…” என்று அப்பா சொல்ல…

“சரி.. நான் அவரை பார்த்துட்டு அப்படியே ஆபீஸ் கிளம்புறேன்” என்று கூறிவிட்டு ஒரே தாவலில் பைக்கில் ஏறி ஸ்டார்ட் செய்தேன்.

லைஃப்ல அது மாதிரி நான் வேகமா பைக் ஒட்டினதே கிடையாதுங்க… அடிச்சி பிடிச்சி கோவிலுக்கு ஓடுனா.. நான் போறதுக்குள்ளே கைலாஷ் கிரி கிளம்பிட்டார். எனக்கு என்னவோ போல ஆயிடுச்சு.

அவரை பார்த்து ஆசீர்வாதம் வாங்காம விடுறதில்லன்னு முடிவு செஞ்சி, அவர் எந்த வழியா போறாரு… எங்கே போறாரு… எவ்வளவு தூரம் போயிருப்பார்.. இதெல்லாம் கேட்டு தெரிந்துகொண்டு, பைக்கை விரட்டுகிறேன்.

சரியா குமணன்சாவடி எல்லையில அவரை பிடிச்சிட்டேன். என் பைக்கை நிறுத்திட்டு நான் ஓடுறேன்… ஆனா நான் ஓடுறதை விட, அவர் நடக்கிறது ஸ்பீடா இருக்கு… இதெப்படி இருக்கு….

“சார்… சார்… உங்களை பார்க்க தான் கோவிலுக்கு ஓடினேன்….. அதுக்குள்ளே நீங்க கிளம்பிட்டீங்கன்னு சொன்னாங்க…. ஒரு நிமிஷம் நின்னீங்கன்னா…. உங்க கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்குவேன்…”

Kailash-Giri-3.jpg

அவரால் தமிழில் பேச முடியாவிட்டாலும் நான் சொல்வதை புரிந்துகொண்டார். இதயங்கள் பேசும்போது அங்கே மொழி தடையாக இருக்குமா என்ன?

ஒரு நிமிடம் நிறுத்தினார். மிகவும் பொறுமையாக அந்த துலாபாரத்தை இறக்கி வைத்தார்.

முதல்ல இப்படியாப்பட்ட பிள்ளையை பெத்ததுக்கு அந்த தாயை தொட்டு கும்பிடுவோம்னு சொல்லி அவங்க காலை தொட்டு கும்பிட்டுட்டு கையில கொஞ்சம் ரூபாய் நோட்டுக்களை திணிச்சேன். (அவங்க வாங்க மறுத்துட்டா என்ன பண்றது?). நான் இவரை மறித்ததை … இந்த அம்மாகிட்டே பேசினதை…அவங்களுக்கு பணம் கொடுத்ததை பார்த்த ஒரு சிலர்… அவங்களும் அதே மாதிரி செஞ்சாங்க…

அப்புறம் கைலாஷ் கிரி கிட்டே சொன்னேன்… “நீங்கள் ஈடுபட்டிருக்கும் சேவைக்கு ஈடு இணை இந்த உலகத்தில் ஏது? நீங்கே ஏன் கோவில் கோவிலா போகணும்… கடவுளே உங்களை தேடி நீங்க இருக்குற இடத்துக்கு வருவாரே?” அப்படின்னேன்…. கைலாஷ் கிரி உடனே தன்னோட அம்மாவை காட்டினார். அதுக்கு அர்த்தம் “எல்லா பெருமையும் என் தாய்க்கு தான்” என்பது எனக்கு புரிஞ்சது.

அப்புறம் கைலாஷ் கிரி கிட்டே சொன்னேன்… “நீங்கள் ஈடுபட்டிருக்கும் சேவைக்கு ஈடு இணை இந்த உலகத்தில் ஏது? நீங்கே ஏன் கோவில் கோவிலா போகணும்… கடவுளே உங்களை தேடி நீங்க இருக்குற இடத்துக்கு வருவாரே?” அப்படின்னேன்….

அப்புறம் நடுரோடுன்னு கூட பார்க்காம சாஷ்டாங்கமா அவர் கால்ல விழுந்து நமஸ்காரம் பண்ணேன்…. “அட எதுக்கு இதெல்லாம் பண்றீங்க”ன்னு என்னை தூக்கிவிட்டார். நமஸ்காரம் பண்ணும்போது மறக்காம அவர் காலை தொட்டு கும்பிட்டேன்.

எழுந்து நிமிர்ந்து பாக்குறேன்… மறுபடியும் அம்மாவை தூக்கிகிட்டு அவர் பாட்டுக்கு வேகமா நடந்து போய்கிட்டுருந்தார்.

(அப்போ டிஜிட்டல காமிரா ரொம்ப காஸ்ட்லி. So, பேசிக் மாடல் ஃபிலிம் காமிரா ஒன்று தான் என்கிட்டே இருந்தது. அதில் எடுத்தவை தான் இந்த படங்கள்!!)

காசி, ராமேஸ்வரம், இப்படி எங்கே போனாலும் நான் கழுவ முடியாத என்னோட பாவங்கள் எல்லாம் அந்த நொடியே பறந்து போய்டிச்சுங்க. அதுக்கு பிறகு நான் செஞ்ச பாவங்கள் வேண்டுமானால் என் பாவ புண்ணிய அக்கவுண்ட்டில் இருக்கலாம். ஆனா முன்னாடி பண்ணது எல்லாம், எப்போ நான் கைலாஷ் கிரியோட கால்ல விழுந்தேனோ அப்போவே போய்டுச்சு…

தற்போது நமது நாட்டில் இந்த பூவுலகில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அக்கிரமங்களை சகிக்காமல் பூமாதேவி கோபத்தில் வெடித்து சிதறாமல் இருக்கிறாள் என்றால் அதற்கு காரணம் கைலாஷ் கிரி போன்றவர்கள் நம்முடன் இருப்பது தான். அவர் சுவாசித்த காற்றை நானும் சிறிது சுவாசித்தேன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.

அன்றைக்கு நான் கைலாஷ் கிரியை மட்டும் சந்திக்கவில்லை… முப்பத்து முக்கோடி தேவர்களையும் பூவுலகில் உள்ள அத்துணை புண்ணிய ஷேத்ரங்களையும் ஒருங்கே சந்தித்தேன்.

அவர் நிக்கிற ஸ்டைலை பாருங்களேன்… என்ன கம்பீரம்… என்ன தேஜஸ்… ஏதோ பரசுராமரையே நேர்ல பார்த்த மாதிரி இருந்தது எனக்கு.

எனக்கென்னவோ, கயிலையில் பரமசிவன் பார்வதி திருமணம் நடைபெற்றபோது வட பகுதி தாழ்ந்து தென்பகுதி உயர்ந்தது. அதை சரிசெயா அகத்தியரை தென்பகுதிக்கு செல்லும்படி இறைவன் பணித்தான். அது போல, இந்த கலியுகத்தில் பாவிகளால் சுயநலமிகளால் அக்கிரமக்காரர்களால் கறைபட்டிருக்கும் நம் பாரதத்தை சுத்தப்படுத்த வேண்டியே கைலாஷ் கிரியை இறைவன் இப்படி செய்ய வைத்தானோ என்று தோன்றுகிறது. உண்மையா இருந்தாலும் இருக்கலாம்ங்க.

- See more at: http://rightmantra.com/?p=1163#sthash.G0EjjL2A.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

அன்னையும் பிதாவும் முன் அறி  தெய்வம்...! மனம்தான் எதையும் தீர்மானிக்கிறது , அனுபவிக்கிறது. அவ்வகையில் இவர் போன்றவர்களைத்  தரிசிப்பதுக்கும் பூர்வபுண்ணிய பலன் வேண்டும். :D

 

மீடியாக்குள்ள அம்புட்டுட்டார், இனி அவர்கள் பார்த்துக் கொள்ளுவார்கள் , இவரை எப்படிக் கேவலப்படுத்தலாம் என்டு...! :huh:

  • கருத்துக்கள உறவுகள்

அந்த மனிதர் தாயில் பாசமும், கடவுளில் நன்றியும், நம்பிக்கை வைப்பதில் தப்பில்லை.
அதற்காக... 24 வயதில் தொடங்கி கடந்த பதினைந்து வருடமாக, தாயை தோழில் தூக்கிக் கொண்டு திரிவது நல்லாயில்லை. அவரின் முள்ளந்தண்டு இன்னும்... எத்தனை நாளைக்கு தாக்குப் பிடிக்கும் என்பது கேள்விக்குறி. அடுத்து... திருமணம் செய்யவில்லை, வேலை வெட்டிக்குப் போகவில்லை.
80 வயது தாய் இன்னும், சில வருடங்களில் இறந்த பின்பு... பைத்தியம் பிடித்து திரியப் போகின்றார்.
அந்தத் தாய் .... அவரின் வாழ்க்கையைப் பழுதாக்கிய... பெரும் பழியை சுமக்கப் போகின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு சாடையா மேல்மாடி பிழைபோல் இருக்கு.. :o

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு சாடையா மேல்மாடி பிழைபோல் இருக்கு.. :o

 

கடந்த 15 வருடமா தூக்கி கொண்டு திரியிறாராம் ....
கீள்மாடியிலும் ஒண்டும் இல்லைபோல்தான் இருக்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.