Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தெனாலிராமன்... வடிவேலுவை மிரட்டினால், கடும் விளைவுகளைச் சந்திக்க நேரும் - சீமான் எச்சரிக்கை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

07-seeman1-300.jpg

 

தெனாலிராமன்... வடிவேலுவை மிரட்டினால், கடும் விளைவுகளைச் சந்திக்க நேரும் - சீமான் எச்சரிக்கை.

 

இது குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமாான் வெளியிட்டுள்ள அறிக்கை:

நடிகர் வடிவேலு நடித்திருக்கும் 'தெனாலிராமன்' படத்தில் கிருஷ்ண தேவராயர் பாத்திரம் தவறாகச் சித்தரிக்கப்பட்டிருப்பதாகச் சொல்லி சில அமைப்புகள் அவருக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தி வருகின்றன. அவருடைய வீட்டை முற்றுகை இடப் போவதாகவும், அந்தக் காட்சிகளை நீக்காவிட்டால் வடிவேலு மீது தாக்குதல் நடத்தவும் தயங்க மாட்டோம் எனவும் சில அமைப்புகள் மிரட்டி வருகின்றன.

 

இன்னும் படமே வெளிவராத நிலையில், கிருஷ்ண தேவராயர் பாத்திரம் எப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது என்பது தெரியாமல் காதுக்கு வந்த தகவல்களை வைத்துக்கொண்டு ஒரு தமிழ்க் கலைஞனை அவனுடைய மண்ணிலேயே மிரட்டுகிற இந்த செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

 

படத்தில் கிருஷ்ண தேவராயர் பாத்திரம் உண்மையாகவே தவறாகச் சித்தரிக்கப்பட்டிருந்தால் அதனை முறைப்படி சொல்லி தகுந்த விதத்தில் பேசித் தீர்க்க வேண்டுமே தவிர, படத்தில் என்ன இடம் பெற்றிருக்கிறது என்பதே தெரியாமல் அடிப்போம் உதைப்போம் என ஆவேசம் பாடுவது எந்த விதத்தில் நியாயம்?

 

கிருஷ்ண தேவராயர் பாத்திரம் குறித்து குரல் எழுப்புபவர்களின் உணர்வுகளை நாங்கள் மதிக்கிறோம். உண்மையிலேயே கிருஷ்ண தேவராயர் பாத்திரம் தவறாகச் சொல்லப்பட்டிருந்தால் அதை நீக்கச் சொல்லிப் போராடுபவர்களுக்குப் பக்க பலமாக நாங்களும் நிற்போம். எந்த இனத்தவர்களின் மனதையும் புண்படுத்தி ரசிக்கும் கொடூர மனம் தமிழர்களுக்கு ஒரு போதும் கிடையாது.

 

படத்தில் கிருஷ்ண தேவராயர் பாத்திரம் தவறாகச் சித்தரிக்கபடவில்லை என்றும், கற்பனைக் கதையாகவே படம் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் படத் தயாரிப்பு தரப்பு அறிவித்திருக்கும் நிலையில், அதைக் காது கொடுத்துக் கேட்காமல் வடிவேலுவுக்கு எதிராக கொந்தளிப்பு கிளப்புவது ஒரு கலைஞனை புண்படுத்தும் செயல்.

 

ஆந்திராவிலோ கர்நாடகத்திலோ தமிழர்களுக்கு எதிரான சித்தரிப்பு செயல்கள் நடக்கிறபோது அம்மாநிலக் கலைஞர்கள் எவரையேனும் எதிர்த்து அங்கு பெருமளவில் வாழும் தமிழர்கள் ஒருமித்து திரண்டுவிட முடியுமா? அங்கிருக்கும் ஒரு கலைஞனுக்கு எதிராக ஒரு வார்த்தை உதிர்த்தாலும், அது எத்தகைய விளைவுகளை அந்த மாநிலத்தில் ஏற்படுத்தும்?

 

ஆனால், மண்ணின் மைந்தனாக பல கோடி தமிழ் மக்களின் நெஞ்சங்களில் நிறைந்திருக்கும் வடிவேலுவை சில அமைப்புகள் இங்கே மிரட்டுவது, தமிழர்களின் உணர்வுகளோடு விளையாடுகிற செயல். தமிழர்களின் தன்மானத்தை உரசிப் பார்க்கும் செயல்.

 

தமிழினத்தின் பெருமைமிகுந்த கலைஞன் வடிவேலு. அவரை எவ்வித இக்கட்டும் சூழாதபடி காப்பாற்ற வேண்டியது நம் இனத்தின் கடமை. திரையில் வேண்டுமானால் வடிவேலு ஒரு நகைச்சுவை நடிகராக இருக்கலாம்; ஆனால், உண்மையில் எங்கள் இனத்தின் கதாநாயகன் வடிவேலு.

 

பலகோடி தமிழ் மக்களின் பெருமைமிகு கலைஞனாக இருக்கும் வடிவேலுவை அவ்வளவு சீக்கிரத்தில் அச்சுறுத்திவிட முடியும் என யாரும் கனவு காணக்கூடாது. தற்போதைய அரசியல் சூழலில் வடிவேலுக்கு ஆதரவாக யாரும் இல்லை என எண்ணி, சிலர் அவரை மிரட்டி உருட்டி பணியவைத்துவிடலாம் என நினைக்கிறார்கள்.

 

மொத்த தமிழ்ச் சமூகமும் இந்த விவகாரத்தில் வடிவேலுவின் பின்னால் நிற்கும் என்பதை சம்பந்தப்பட்ட அமைப்புகள் புரிந்துகொள்ள வேண்டும். இதையும் தாண்டி வடிவேலுவை மிரட்டுகிற செயல்கள் தொடர்ந்தால் அவருக்கு அரணாகத் திரளவும், சம்பந்தப்பட்ட மிரட்டல் அமைப்புகளுக்கு தக்க பாடம் புகட்டவும் நாம் தமிழர் கட்சி கொஞ்சமும் தயங்காது.

-இவ்வாறு அந்த அறிக்கையில் செந்தமிழன் சீமான் குறிப்பிட்டு உள்ளார்

 

நன்றி தற்ஸ்தமிழ்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு உண்மையான தமிழனின் எதிர்வினை இவ்வாறுதான் இருக்கும்..!

நாமும் வடிவேலுவின் பக்கமே நிற்கவேண்டும்.....

https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Srn4nZf7r1U#t=467

தென்னிந்தியாவில் விஜய நகர பேரசின் வீழ்ச்சிக்குப்பின் கேரள, கர்நாடக மாநிலங்களில் ஆக்கிரமித்திருந்த வடுகர்கள் திரும்ப ஆந்திராவுக்கு விரட்டப்பட்டு விட்டனர். ஆனால் தமிழகத்தில் மட்டுமே அவர்களுக்கு ஏகபோக உரிமைகளை வழங்கி இன்றும் மண்ணின் மைந்தர்களின் வாழ்வாதரங்களை சுரண்டிக் கொண்டிருக்கின்றனர். 
அதற்க்குச் சில சான்றுகள் தமிழக சட்டசபையில் ஏறத்தாழ 36 தெலுங்கர்கள் உள்ளனர். மேலும் யார் ஆட்சிக்கு வந்தாலும் கோட்டையில் உள்ள அலுவலர்களில் அவர்களே அதிகம். இராஜபாளையம், திரு வில்லிபுத்தூர், கோவில்பட்டி பகுதிகளில் 95 சதவீத காணி உரிமைகள் அவர்களிடமே உள்ளது. இன்னும் அதிகம் சொல்லலாம். அதனால்தான் இவ்வளவு அடாவடியாக தமிழகத்தில் அவர்களால் செயல்பட முடிகிறது 
  • கருத்துக்கள உறவுகள்

வடிவேல் போல கருவேப்பிலைகள்.. பாவம். அந்த வகையில்.. செத்தபாம்பை திரும்பத் திரும்ப கப்டன் அடிக்கனுன்னு அவதிப்படுவதை.. சீமானின் சீறல் கொஞ்சம் என்றாலும் தடுக்கும் என்று நம்பலாம். !!! அதுவும் தேர்தல் நேரம். :icon_idea: :)

Edited by nedukkalapoovan

தமிழகத்து தெலுங்கு அமைப்புகளின் போராட்டம் பற்றி கேள்விப்பட்டவுடன், மற்ற மானிலங்களில் தமிழ் மக்கள் ஒரு சிறு குரல் தானும் கொடுக்க முடியாத சூழ்நிலையில் தமிழ் மண்ணில் இவ்வாரு போராட முடிகின்றது என்றால் தமிழர்கள் பற்றி எவ்வளவு மலினமாக எண்ணுகின்றார்கள் என்று நினைத்தேன். இந்த விடயத்தில் சீமானின் குரல் சிறப்பாக இருக்கின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த அமைப்புகளைச் சீண்டி விட்டு வடிவேலுவை அழ வைக்கிறதும் தமிழர்தானே  அப்பு.

 

ஐயையோ வந்துட்டாங்கையா வந்துட்டாங்க :)   

  • கருத்துக்கள உறவுகள்
Seeman comes in support of Vadivelu

 

Director and political activist Seeman has raised his voice in support of actor Vadivelu and his upcoming film Thenaliraman.

Thenaliraman directed by Yuvaraja Dhayalan has started facing threats from Telugu associations operating in Chennai. They have asked for a ban on the film since they fear that the film portrays king Krishnadevaraya in poor light. A clarification from AGS Entertainments, the producers of the film stating that Thenaliraman is a film based on Thenaliraman tales and all the characters in the film are purely fictional, has been disregarded by the groups protesting against the film. The protesters have allegedly threatened to besiege Vadivelu's home and also assault him if the film is the scenes depicting Krishnadeavaraya are not removed. This has irked Seeman who has sent a strongly worded pres statement cautioning those who protest against the film without watching it.

 

seeman_vadivel742014_m.jpg

 

Seeman has alleged that the intention of the protest seems to be thwarting a Tamil actor Vadivelu who is considered as a 'hero' by millions of Tamils from carrying out is professions. Seeman has warned the protestors that if they try to stop the release of the film without even watching the film, they will have to face serious consequences.

Seeman did not fail to show his empathy towards the sentiments of the Telugu people. He has said if the film really contains something that insults Krishnadevaraya, the ruler of Vijayanagar kingdom and also one of the most respected King of Telugu speaking community, those have to be removed but even that has to be done by way of peaceful talks and not by resorting to violence.

 

http://www.indiaglitz.com/seeman-comes-in-support-of-vadivelu-tamil-news-105832

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வடிவேலு, இதுவரை தமிழர்களுக்காக ஏதாவது செய்திருக்கிறாரா?  தெரிந்தவர்கள் சொல்லுங்க பிளீஸ்?

  • கருத்துக்கள உறவுகள்

வடிவேலு, இதுவரை தமிழர்களுக்காக ஏதாவது செய்திருக்கிறாரா?  தெரிந்தவர்கள் சொல்லுங்க பிளீஸ்?

போக்கிரி..

உங்கள் வீட்டுக்குள் யாராவது புகுந்து அடாவடி செய்தால் உங்களின் பக்கத்துவீட்டுக்காரர் நீங்கள் தமிழர்களுக்கு ஏதாவது செய்த‌வரா என்று அறிந்துதான் உதவ முன்வருவாரா? சொல்லுங்க பிளீஸ்.. :D

வடிவேலு, இதுவரை தமிழர்களுக்காக ஏதாவது செய்திருக்கிறாரா?  தெரிந்தவர்கள் சொல்லுங்க பிளீஸ்?

 

https://www.youtube.com/watch?v=uQriwyjk0ao

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போக்கிரி..

உங்கள் வீட்டுக்குள் யாராவது புகுந்து அடாவடி செய்தால் உங்களின் பக்கத்துவீட்டுக்காரர் நீங்கள் தமிழர்களுக்கு ஏதாவது செய்த‌வரா என்று அறிந்துதான் உதவ முன்வருவாரா? சொல்லுங்க பிளீஸ்.. :D

 

 

ஆதாயமில்லாமல் உதவி செய்பவரா சீமான்?   தலைவiரின் பெயரைத் தவறாகப் பயன்கடுத்தியது மட்டுமில்லாமல், அவரை மாதிரியே கொப்பி பண்ணியவர்தானே இந்த சீமான்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.