Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முகநூலில் ரசித்தவை

Featured Replies

இழப்பதற்கு ஒன்றுமில்லை ஜெயிப்பதற்கு உலகமே இருக்கிறது ....

குடும்ப வறுமையால் சலூன் கடை நடத்தி கட்டிங், சேவிங் செய்வதில் பட்டதாரி இளம்பெண் ஒருவர் சாதனை படைத்துள்ளார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட மேற்குபல்லடம் முனியப்பன்கோயில் வீதியை சேர்ந்த தங்கவேலு மகள் தேவி (30).

பிகாம் பட்டதாரியான இவர், அங்கு சலூன் கடை நடத்தி வருகிறார். ஆண்கள், குழந்தைகள் என அனைவருக்கும் முடிவெட்டுகிறார். ஷேவிங் செய்கிறார். இவரது தொழில் நேர்த்தியை கேள்விப்பட்டு ஏராளமானோர் வாடிக்கையாளராகி உள்ளனர். பட்டதாரி பெண் தைரியமாக சலூன் தொடங்கி இருப்பது இப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தேவி கூறியதாவது:

அரசு வேலைக்கு பலமுறை முயன்றும் கிடைக்கவில்லை. குடும்ப வறுமை வாட்டியது. தந்தை சர்க்கரை நோயாளி என்பதால், தந்தையின் தொழிலை கையில் எடுத்தேன். சிறுவயதில் இருந்தே அவரது பணியை பார்த்து வந்த எனக்கு தற்போது கை கொடுக்கிறது. தொடக்க நாட்களில் ஆண்கள் வரவே கூச்சப்பட்டனர். சிலர் கேலியும் கிண்டலும் செய்தனர். ஆனாலும் நான் மனம் தளரவில்லை. சீரான முடிவெட்டை பார்த்து, நாளாக நாளாகத்தான் வரத்துவங்கினர் என்றார். வாழ்த்துவோமே ......
 
10151844_752347514795754_774362563506401

வாழ்த்துக்கள் சகோதரி ..
 

 


ஷாஹித் அப்ரிடி ........!!

புயல் வேக மட்டை வீச்சில் பிரசித்தி பெற்றவர்.
ஒரு முறை ஜெயசூரியா வேகமாக நூறு ரன்களை அடித்த சாதனையை யாரும் முறியடிக்க முடியாது என்று நண்பர்களிடம் சொல்லி கொண்டு இருந்தேன். ஆனால் சில மாதங்களுகுள்ளகவே அந்த சாதனையை 16 வயதில் முறியடித்தவர். அதுவும் தன்னுடைய முதல் அறிமுக தொடரில்...

அன்றில் இருந்து இவருடைய அதிரடி ஆட்டதிற்கு நான் பலிகடா ஆகிவிட்டேன். நான் விளையாடி கொண்டு இருந்து கிரிக்கெட் அணியில் அன்றில் இருந்து அதிரடி ஆட்டம் மட்டுமே ஆடுவேன். வெறும் 15 ஓவர் மட்டும் விளையாடும் அந்த ஆட்டத்தில் நூறு ரன்களை அடித்தவன் என்கிற சாதனை எனக்கு சொந்தமானது. சரி.. இப்போ விசயத்திற்கு வருவோம்...
இவர் எந்த அளவிற்கு அதிரடி ஆட்டகாரரோ அதே அளவிற்கு இளகிய மனம் படைத்தவர். இந்தியாவில் கோடி கோடியாக கிரிக்கெட் விளையாடி சம்பாரிதவர்கள் எல்லாம் ஹோட்டல் , கம்பனி என்று தங்களின் தொழிலை மட்டுமே வளமாக்கி கொண்டார்கள். தனக்காக கைதட்டிய ரசிகனை பற்றி ஒரு முறையும் சிந்திக்காதவர்கள். இன்று ஓய்வு பெற்ற பின்பும் எதாவது வருமானம் வருமா என்று ஏங்கி கொண்டு இருக்கிறார்கள்.

அந்த வகையில் ஷாஹித் அப்ரிடி தான் வாழ்நாளில் சம்பாரித்த பணத்தை எல்லாம் அவர் பிறந்து வளர்ந்த கிராமத்திற்கு இலவச மல்டி ஸ்பெஷல் மருத்துவமனை , மற்றும் தரமான சாலைகள் போடுவதற்கு செலவு செய்து உள்ளார். இதுவரை அவர் 17 மில்லியன் டாலர்களை அவர் செலவு செய்து உள்ளார். இந்திய மதிப்பில் 77 கோடிக்கும் மேல் ... ஆனால் இந்தியாவில் இருக்கும் கிரிக்கெட் ஆட்டகாரரர்கள் என்ன செய்ய போகிறார்கள்... ஓய்வு பெற்ற பிறகு கிரிக்கெட் அகடமி தொடங்குவார்கள். அதில் புதிய புதிய ஆட்டகாரரர்கள் நுழைவதற்கு லட்ச கணக்கில் பீஸ் வாங்குவார்கள். அவர்களின் சம்பளத்தில் இருபது சதவீதம் வாழ்நாள் முழுவதும் கமிசன் பெறுவார்கள்.... இது தானே நடந்து கொண்டு இருக்கிறது.

அப்ரிடியின் மனிதநேய செயலை கிரிக்கெட் மைதானத்தில் இருந்து விலகி நின்று பாராட்டுவோம்...!!

1947365_753115151385657_3004747134908678

 

Edited by Athavan CH

  • Replies 178
  • Views 29.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

படம் பெயர் - திருடா திருடி

கதாநாயகன் - ராஜா

கதாநாயகி - கனிமொழி

வில்லன் - CBI

கதை - கலைஞர் கருணாநிதி,தயாளு அம்மாள்

திரை கதை - சோனியா காந்தி

எழுத்து - சிதம்பரம்

இயக்கம் - மன்மோகன் சிங்க்

budget - 1,76,000 கோடி

Producer - மக்கள் வரி பணம்

 

 

# ஒரே படம் ! ஓஹோனு வாழ்க்கை !
 

10173736_755511727812666_578351768672412

 

 

Edited by Athavan CH

  • தொடங்கியவர்

che308s.jpg

 

சே குவேரா மனைவிக்கு எழுதிய கடிதம் பிரியமானவளே! 

உன்னைப் பிரிந்து போவது கஷ்டமாக இருக்கிறது. என்னை நீ புரிந்து கொண்டிருப்பாய். ஏகாதிபத்தியத்தை அழிக்கும் புனிதமான காரியத்துக்காகத் தியாகங்கள் செய்ய விரும்புகிற இந்த மனிதனை நீ நன்கு அறிவாய். தைரியத்தை இழந்து விடாதே. ஒருவேளை, நான் இறந்து போனால், என் குழந்தைகள் வளர்ந்ததும், நான் விட்டுச் செல்லும் பணியைத் தொடர்ந்து செய்வார்கள் என்று நம்புகிறேன். மக்களின்துன்பங்களைக் கண்டு நம்மைப் போலவே அவர்களும் கோபம் கொள்வார்கள் என்று நம்புகிறேன். காலமும் தூரமும் நம்மைப் பிரித்தாலும், எப்போதும் நான் உங்களுடன்தான் இருப்பேன். என் நேசத்திற்குரிய மனிதர்களை, உன்னை, நம் குழந்தைகளை விட்டுப் பிரிகிறோம் என்று எண்ணும்போது, என் வேதனை அதிகரிக்கிறது. ஆனால், மக்களைச் சுரண்டும் எதிரிகளோடு போரிடுவதற்குதான் நான் சென்று கொண்டிருக்கின்றேன் என்று நினைக்கும்போது என் வேதனை குறைகிறது. உன் உடல்நலத்தை கவனமாகப் பார்த்துக் கொள். குழந்தைகளைக் கவனித்துக் கொள். என் தாய்நாட்டில் பிறந்ததையும், உன்னை என் மனைவியாகப் பெற்றதையும் எண்ணி நான் பெருமைப்படுகிறேன். இந்தப் போராட்டத்தில் நான் இறக்க நேர்ந்தால், அந்த இறுதித் தருணத்தில் உன்னைப் பற்றித்தான் நினைத்துக் கொண்டிருப்பேன். 

நான் இன்று கண்ட ஒரு பதிவு. முற்றிலும் ஆங்கிலத்தில் இருந்தாலும்...ஒரு நல்ல பதிவு என்பதால் இணைக்கின்றேன்

 

a_335_20140402180604.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்குத்தான் பொது அறிவு (common sense approach) வேணும் என்கிறது.. :D

  • தொடங்கியவர்

10155875_750064785034298_403451510172606

  • தொடங்கியவர்

1984 இல் டெல்லியில் இந்திய பொலிசாரின் உதவியுடன் கொல்லப்பட்ட சீக்கியர்கள்

 

1984-Delhi-Programs-1.png

 

1984-Delhi-Programs-2.png

 

4721114714_6a47be4212_z.jpg

 

1984-+police+beats+Sikh+women.gif

 

 

46589263+sikh+bodies+341.jpg

 

Dead+bodies+scattered+of+Sikhs+1984.jpg

 

killed+and+burnt+body.jpg

  • தொடங்கியவர்

1979533_759051414125364_5554822068813278

வந்து வாழ்த்துங்கள் !! உலகின் அழகான காதல் ஜோடியை !!!
இந்தியாவின் தலைநகரம் டெல்லியை சேர்ந்தவர் லஷ்மி, வயது 24.9 ஆண்டுகளாக தைரியமாக வெளியே வரமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் அழகு பெண், பார்ப்பவர்களுக்கு வினோத பொருளாய் தென்படுகிறார்.
இதற்கெல்லாம் என்ன காரணம்? யாரால் நேர்ந்தது? என்று ஆராய்ந்தால் மிக கொடுமையான சம்பவம் அவளது வாழ்க்கையை புரட்டி போட்டுள்ளது என்பது தான் உண்மை.

பள்ளிப்பருவ காலத்தில் குடும்பம்- நண்பர்கள் என அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டு பட்டாம்பூச்சி போன்று சிறகடித்து கொண்டிருந்த காலம் அது.

15 வயதான போது, பக்கத்து வீட்டு தோழியின் சகோதரன் காதலிப்பதாய் கூறியுள்ளார். அத்தருணத்தில் காதலையும், காதலிப்பதாய் சொன்ன நபரையும் வெறுத்து ஒதுக்கியுள்ளார், பல்வேறு முயற்சிகள் செய்தும் அவ்விளைஞனின் முயற்சிகள் தோல்வியில் முடிந்து போனது.
இதனால் கோபமடைந்த அவ்விளைஞன், லஷ்மியின் மீது ஆசிட்டை ஊற்றியுள்ளான், துடிதுடித்துப் போனாள், இதன்பின் பத்துக்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டும் பலனில்லாமல் போனது.
எந்தவொரு ஆண்மகனும் திருமணம் செய்து கொள்ள முன்வரவில்லை.

காலங்கள் கடந்து போக, அலுவலகம் ஒன்றில் பணிக்கு சேர்ந்தாள். அங்கு தான் அவளுக்கு அலோக் தீக்ஷித் என்ற சமூக ஆர்வலரின் நட்பு கிடைத்தது.
லஷ்மியின் வாழ்க்கையில் நடந்த சோகம், அலோக் மனதில் நீங்கா வடுவாய் இருந்தது. அவளை தனது துணைவியாக ஏற்றுக்கொள்ள தீர்மானித்தார், லஷ்மியின் சம்மதத்தை கேட்டுள்ளார்.
ஆனால் லஷ்மியோ தன்னைவிட அழகிலும், அறிவிலும் உயர்ந்தவர் என்ற காரணத்தால் திருமணத்திற்கு மறுத்துவிடுகிறார்.

உடனே சமூகத்தின் பார்வையில் கணவன்- மனைவி என்ற கோட்பாட்டிற்குள் நாம் நுழையாமல் நம் வாழ்க்கையை தொடருவோம் என்று அலோக் கூறவே, பச்சைக் கொடி காட்டியுள்ளார் லஷ்மி.
இருவரும் மிக சந்தோஷமாக தங்களது இல்லற வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.
இன்றைய காலகட்டத்தில் காதல் என்ற பெயரில் அரங்கேறிவரும் கொடூரங்களுக்கு மத்தியில் இப்படியான காதலும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன

  • கருத்துக்கள உறவுகள்
10295776_1427591060832890_74480425343960

ஒரு நாள் ஒரு நாய் கடைக்கு வந்துச்சு.. கடைக்காரர் விரட்டி விட்டார்..

திரும்ப திரும்ப அந்த நாய் கடைக்கு வந்துச்சு… என்னடா பெரிய தொல்லையா போச்சுன்னு வெளிய வந்து பார்த்தா அந்த நாய் வாயில ஒரு சீட்டும் பணமும் இருந்துச்சு…

கடைக்காரர் ஆச்சர்யமாகி அந்த சீட்டை எடுத்து அதில் உள்ள சாமான்களை போட்டு, மீதி பணத்தையும் அதே பையில் போட்டு நாய் கழுத்தில் மாட்டிவிட்டார்.

நாய் திரும்பி நடக்க ஆரம்பிச்சுது. கடைக்காரர் சுவாரசியமாக நாய் பின்னாலே நடக்க ஆரம்பித்தார்.. அந்த நாய் தெருவை கடந்து மெயின் ரோட்டிற்கு வந்தது.. அப்போது ரெட் சிக்னல்.. அந்த நாய் ரோட்’டை கடக்காமல் நின்றது… பச்சை லைட் விழுந்தவுடன் ரோட்டை கடந்தது…

கடைக்காரருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை… அது பின்னாலே அதன் வீடு செல்ல முடிவெடுத்தார். அந்த நாய் ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்றது. ஒரு குறிப்பிட்ட பேருந்து வந்தவுடன் நாய் பேருந்தில் ஏறியது.

கண்டக்டரும் நாய் வாயில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு ஒரு டிக்கெட் கொடுத்தார். இரண்டு நிறுத்தங்கள் கடந்து நாய் பேருந்தில் இருந்து இறங்கியது.

கடைகாரரும் அதன் பின்னால் இறங்கினார். நாய் ஒரு தெருவை கடந்து ஒரு வீட்டின் முன் நின்று கதவை தட்டியது.

கதவு திறந்து ஒரு ஆள் வந்தார். நாயின் கழுத்தில் உள்ள பையை கழட்டி விட்டு நாயை அடித்தார்.

கடைக்காரர் ஓடி சென்று நிறுத்துங்க?? ஏன் அடிக்கறீங்க?? அது எவ்வளவு பொறுப்பா கடைக்கு போயிட்டு, சிக்னல் மதிச்சு, பஸ்ல டிக்கெட் எடுத்துகிட்டு வருது அதை போய் அடிக்கறீங்களே …???

அதுக்கு அந்த ஆள் சொன்னார் வீட்டு சாவிய எடுத்துட்டு போகாம வந்து கதவ தட்டுது பாருங்க.. நாய்க்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்லன்னு.

Note : நமக்கு மேல உள்ள முதலாளிங்க மேனேஜர் எல்லாரும் இப்படி தான்.. நீ எவ்வளவு தான் பொறுப்பா இருந்தாலும் உனக்கு நல்ல பெயரே கிடைக்காது

 

  • தொடங்கியவர்

6000 வருடங்களுக்கு மேலாக ஒரே இடத்தில் இயங்கி வரும் நகரம் மதுரை.

 

10303769_760528593977646_566050892296974
 

பெருமையுடன் பகிருங்கள் 

நகரம் மட்டும் இயங்கவில்லை தனது கலாச்சாரத்தை இன்று வரை எடுத்து வந்துள்ள காரணத்தினால் மதுரையை "The World's only living civilization" என்று டிஸ்கவரி தொலைக்காட்சியின் "The Story of India" ஆவணப்படத் தொகுப்பாளர் மைக்கெல்வுட்ஸ்.
மேலும் மதுரையை ஒட்டி அமைந்துள்ள பெருமாள் மலையின் அருகில் நரசிங்கம்பட்டி கிராமத்தில் சமீபத்திய தொல்லியல் துறை ஆய்வில் சுமார் 6000 ஆண்டுகளுக்கு முந்தைய
ஈமக்காடு (இறந்தவர்களை புதைக்கும் இடம்)
கண்டுபிடிக்கப்பட்டது. 

இதில் வியக்கத்தக்க விடயம் என்னேன்றால் இறந்தோரைப் புதைத்த
இடத்தினை அடையாளம் கொள்ள புதைத்த
இடத்தின் மீது அடையாளமாய் கற்களை அடுக்கி வைக்கும் பழக்கம் இருந்துள்ளது. மேலும் இது இறந்தோரை தாழியில் அடைக்கும்.நாகரீகத்திற்கும் முந்தையது. இந்த இடத்தை இப்போது நீங்கள் சென்று பார்த்தாலும் கற்குவியலைக் காணலாம். அங்கு வந்து குறிப்பிட்ட நாட்களில் வந்து பூஜித்து வழிபடும் வழக்கத்தையும் சிலர் கொண்டுள்ளனர் அவர்களை விசாரித்த போது பரம்பரை, பரம்பரையாக பாரம்பரியமாக அழிபடுவதாகவும் இதற்கான காரணம் தெரியாது அங்கு முன்னோர்கள் இருப்பதாக நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். 

அது அவர்களது முன்னோர்கள் புதையுண்ட இடம்
என்று தொல்லியல் ஆய்வாளர்கள் சொன்னதைக் கேட்டு பிரம்மித்தனர். ஆம் நண்பர்களே சுமார் 6000 வருடமாக தொடர்ந்து ஒரு நகரம் இயக்கம்
கொண்டு வருவது மட்டுமல்ல, ஒரு கலாச்சாரமும் தொடர்ந்து இடைவெளியில்லாமல் இயங்கி வருகிறது என்றால் பிரம்மிப்பாக.உள்ளதல்லவா?

 

 

10155687_759555974074908_513916019611208

Edited by Athavan CH

  • தொடங்கியவர்

10155289_759555100741662_465405739370464

 

அரண்மனையில் ஒரு போட்டி!

விஷ பாம்புகள் மற்றும் முதலைகள் நிறைந்த ஒரு குளத்தை நீந்தி கடந்து சாதனை புரிபவருக்கு 1000 வராகன் பொன், அல்லது 10 கிராமங்கள், அல்லது தன் ஒரே மகளான இளவரசியை திருமணம் செய்வது, இந்த மூன்றில் ஒரு பரிசை போட்டியாளர் தேர்ந்தெடுக்கலா ம்.
உயிர் பிழைப்பது சிரமம் என்பதால் போட்டி அறிவித்து வெகு நேரம் ஆகியும் யாரும் போட்டிக்கு வரவே இல்லை.
திடீர் என்று ஒரு இளைஞன் குளத்தில் குதித்ததும் மன்னருக்கு குஷி. உயிரையும் துச்சமாக மதித்து ஒரு சாதனையாளன் போட்டிக்கு தயாராகி விட்டானே?
ஒரு வழியாக நீந்தி பத்திரமாக கரையேறி விட்டான்.
அவனை கட்டி அணைத்து, பாராட்டுதல்களை தெரிவித்து,
"உனக்கு என்ன பரிசு வேண்டும் கேள்! ஆயிரம் வராகன் பொன்னா?"
"இல்லை..."
"பின்னே... 10 கிராமங்களா?"
"ப்ச்! வேண்டாம்..."
"ஆஹா! அப்படி என்றால் இளவரசியை திருமணம் செய்து கொள்கிறாயா?"
"தேவை இல்லை..."
"இது மூன்றில் ஒன்றை தானே பரிசாக அறிவித்து இருந்தேன். மூன்றுமே வேண்டாம் என்று சொல்லி விட்டாயே? ஆனாலும் உன்னை வெறும் கையுடன் அனுப்ப எனக்கு மனம் வரவில்லை. உனக்கு என்ன வேண்டுமோ அதை கேள், கட்டாயம் அதை தருகிறேன்..."
"என்னை எவன் இந்த குளத்தில் தள்ளி விட்டான் என்று தெரியனும்...!"

  • தொடங்கியவர்

வாழ்க்கையின் மூன்று நிமிடங்களை இங்கே செலவிடலாமே.. 

Please share and think about this!

 

http://www.youtube.com/watch?v=ynxdOhY5RYE

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கையின் மூன்று நிமிடங்களை இங்கே செலவிடலாமே.. 

Please share and think about this!

 

 

அருமையான  

தேவையான பதிவு

நன்றி  ஐயா...

Edited by விசுகு

  • தொடங்கியவர்

தந்தைக்கு மகன் செய்யவேண்டிய கடமையை செய்யும் அற்புத மகன்களில் ஒருவர்.... 

 

10264441_760984747265364_356135126294941


 

Edited by Athavan CH

  • தொடங்கியவர்

அப்பா

 

  • தொடங்கியவர்

1. தமிழக அரசு முத்திரை கோபுரம் – ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோபுரம்............
2. தமிழகத்தின் நுழைவாயில் – தூத்துக்குடி
3. தமிழகத்தின் மான்செஸ்டர் – கோயம்புத்தூர்
4. மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம் – கோயம்பத்தூர்
5. மக்கள் தொகை குறைந்த மாவட்டம் – பெரம்பலூர்
6. மிக உயரமான தேசியக்கொடி மரம் – புனித ஜார்ஜ் கோட்டை (150 அடி)
7. மிகப் பெரிய பாலம் இந்தியாவின் முதல் கடல்வழி பாலம் – பாம்பன் பாலம் ( ராமேஸ்வரம் )
8. மிகப் பெரிய தேர் – திருவாரூர் தேர்
9. மிகப்பெரிய அணைக்கட்டு – மேட்டுர் அணை
10. மிகப் பழமையான அணைக்கட்டு – கல்லணை
11. மிகப்பெரிய திரையரங்கு (ஆசியாவில்) – தங்கம் (மதுரை – 2563 இருக்கைகள்)
12. மிகப்பெரிய கோயில் – தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில்
13. மிகப்பெரிய கோயில் பிரகாரம் – ராமேஸ்வரம் கோயில் பிரகாரம்
14. மிகப்பெரிய கோபுரம் – ஸ்ரீ ரெங்கநாதர் கோயில் கோபுரம் (திருச்சி)
15. மிகப்பெரிய தொலைநோக்கி – காவலூர் வைணுபாப்பு (700 m)
16. மிக உயர்ந்த சிகரம் – தொட்டபெட்டா [ 2,636 m (8,648 ft) ]
17. (உலகின்) மிக நீளமான கடற்கரை – மெரினா கடற்கரை (14 km )
18. மிக நீளமான ஆறு – காவிரி (760 km)
19. மக்கள் நெருக்கம் அதிகமுள்ள மாவட்டம் – சென்னை (25937/km2)
20. மக்கள் நெருக்கம் குறைவாக உள்ள மாவட்டம் – சிவகங்கை (286/km2)
21. மலைவாசல் தலங்களின் ராணி – உதகமண்டலம்
22. கோயில் நகரம் – மதுரை
23. தமிழ்நாட்டின் ஹாலந்து – திண்டுக்கல் (மலர் உற்பத்தி)
24. (ஆசியாவில்) மிகப்பெரிய பேருந்து நிலையம் – கோயம்பேடு பேருந்து நிலையம்
25. மிகப்பெரிய சிலை – திருவள்ளுவர் சிலை (133 அடி)

 

 

 

1002680_761690480528124_2816370235189936

  • கருத்துக்கள உறவுகள்

10300631_385350974939047_100304206256013

  • தொடங்கியவர்

இதுபோல நீங்களும் சைக்கிள் கற்றுக்கொண்ட ஞாபகம் இருக்கிறதா ? !  

 

1614062_628336627244112_2862959021417443

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  பதிவுக்கு

7 வயசில்  அப்பருடைய  பெரிய  ரலி  சைக்கிளை  இப்படி ஓடி அசத்தியதை  எப்பொழுது  நினைத்தாலும் இனிக்கிறது

  • கருத்துக்கள உறவுகள்

https://www.facebook.com/photo.php?v=755927721108162

  • கருத்துக்கள உறவுகள்

லுங்கி டான்ஸ்... லுங்கி டான்ஸ்..!

 

என்ஜாய்...!!

 

 

https://www.facebook.com/photo.php?v=758554830845451

  • தொடங்கியவர்

ஆபிரகாம் லிங்கன் கூறிய உவமைக் கதை....

 

மன்னன் ஒருவன் வேட்டையாடப் புறப்படுவதற்கு முன்பு தனது அமைச்சரை நோக்கி ""மழை வருமா?'' என்று கேட்டான். ""வராது'' என்று சொன்னவுடன் வேட்டைக்குப் புறப்பட்டான்.

போகிற வழியில் ஒரு குடியானவன் கழுதை மேல் வந்து கொண்டிருந்தான். மன்னனைக் கண்டதும் ""கொஞ்ச நேரத்தில் மழை வரும்'' என்று அவன் எச்சரித்தான்.
அதைப் பொருட்படுத்தாமல் சென்ற மன்னன், வேட்டையாடிக் கொண்டிருந்தபோது பலத்த மழை பெய்து தொப்பலாக நனைந்து விட்டான்.
திரும்பும் வழியில் அதே குடியானவனைச் சந்தித்த மன்னன் ""மழை வரும் என்று உனக்கு எப்படித் தெரியும்?'' என்று கேட்டான்.

உடனே குடியானவன் ""எனக்குத் தெரியாது. ஆனால், என் கழுதைக்குத் தெரியும். மழை வருகிற சமயங்களில் அது தன் காதுகளை முன்னுக்கு நீட்டிக் கொள்ளும். நான் தெரிந்து கொள்ளுவேன்'' என்றான்.
அரண்மனை திரும்பிய மன்னன் அமைச்சரைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, அந்தக் குடியானவனின் கழுதையை அமைச்சராக்கினான்.

கதையை முடித்த அமெரிக்க ஜனாதிபதி லிங்கன் ""அதில்தான் மன்னன் ஒரு தவறு செய்துவிட்டான். ஏனெனில் அது முதற்கொண்டு எல்லாக் கழுதைகளும் ஏதாவது பதவி வேண்டும் என்று அலைகின்றன'' என்றார்...

  • தொடங்கியவர்

எதை தொலைத்தாய் என்னிடத்தில் 
ஆடையைக் கழற்றி தேடுகிறாய் ...!!!

உன் தேடலில் நான் தொலைத்தேன் 

எதை தொலைத்தாய் என்னிடத்தில் 
ஆடையைக் கழற்றி தேடுகிறாய் ...!!!

எதை தொலைத்தாய் என்னிடத்தில் 
ஆடையைக் கழற்றி தேடுகிறாய் ...!!!

உன் தேடலில் நான் தொலைத்தேன் 
என் பெண்மையை 
உன் ஆண்மைக்காக.....!!!

பெண்ணை விட ஆணை பலமாக 
படைத்ததற்கு காரணம் ; 
அவங்களுக்கு பாதுகாப்பாக 
இருக்கவேண்டும் என்றுதான். பலவந்த 
படுத்துவதற்கு அல்ல..

 

 

10325302_762490497114789_491520365642778

  • கருத்துக்கள உறவுகள்

உன் தேடலில் நான் தொலைத்தேன் 

என் பெண்மையை 
உன் ஆண்மைக்காக.....!!!

 

உதுக்குப் பெயர் ஆண்மை இல்லை. கோழைத்தனம்.  :unsure:  :blink: 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.