Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகள் இயக்கத்தையும், பிரபாகரனையும் இழிவுப்படுத்திய தொலைக்காட்சி மன்னிப்பு கேட்டது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

71.jpg

ஏஞ்சல் தொலைக்காட்சியில் கடந்த 8-4-2014 அன்று இரவு 8.30 மணிக்கு அதுதான் இது என்ற நிகழ்ச்சியில், விடுதலைப் புலிகள் இயக்கத்தார் தமிழர்களின் வீடுதோறும் சென்று பணம், நகைகளை கொள்ளையடித்து பணம் ஈட்டினர். தெரு ரெளடிகளைப் போன்று பணத்திற்காக மக்களை மிரட்டினர் என வெளியானது.

இதை அறிந்த தமிழர் எழுச்சி இயக்கத்தினர், அதன் பொதுச்செயலாளர் ப.வேலுமணி தலைமையில் சுமார் 60 பேர் வில்லிவாக்கம் காவல்நிலையத்திற்குச் சென்று மேற்கண்ட தொலைக்காட்சி நிறுவனத் தலைவரை கைது செய்ய வேண்டும் என்று புகார் கொடுத்தனர். அத்ன்படி வழக்கும் பதிவுச் செய்யப்பட்டது.

தொடர்ந்து, ஏஞ்சல் தொலைக்காட்சி நிறுவனத்திற்குள்ளே நுழைந்த தமிழர் எழுச்சி இயக்கத்தினர் கொடுத்த நெருக்கடியால், நிருவாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இறுதியில் ஏஞ்சல் தொலைக்காட்சி நிறுவனர் சாது சுந்தர் செல்வராசு, வில்லிவாக்கம் உதவி காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டார். த.எ.இ. தோழர்கள் இன உணர்ச்சியோடு முழக்கமிட்டனர். பிறகு போராளிகளின் தியாகத்தை இழிவுப்படுத்தியமைக்கு மன்னிப்புக் கேட்டார்.

இதில் த.எ.இ. மாவட்டச் செயலாளர் குமரவேல், மாவட்ட அமைப்பாளர் கண்ணன், வடசென்னை மாவட்ட செயலர் தனசேகர், மதியரசு மற்றும் தாசு, வின்னரசு, ரானே ஆகிய பலர் பங்கேற்றனர்.

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=119794

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் உறவுகளே.....

ஈழத்தமிழனுக்கு இல்லாத  உணர்வு இது....... :(  :(  :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் உறவுகளே.....

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் உறவுகளே.....

ஈழத்தமிழனுக்கு இல்லாத  உணர்வு இது....... :(  :(  :(

நன்றி தமிழக, ஈழ ஆதரவு உறவுகளே... என்று நானும் கூறுகின்றேன்.

இதில்... சபேசன் மேலுள்ள காணொளியை, இங்கு சம்பந்தமில்லாமல், இணைத்தது... ஏனென்று புரியவில்லை.

ஈழத்தமிழன் உலகம் கேட்பாரற்று, நாதியாக... நிற்கும் போது, தமிழகத் தமிழனின் ஒரு சிறு போராட்டமாவது... எமக்கு, சிறிது ஆறுதலைத்தரும்.

இலங்கை முஸ்லீம்களின், கொழுப்புக்கு... பொது பல சேனா செய்தது சரி. :)

அவர் நடுவிலதான் நிற்பாராம்

அவர் சொல்ல  வரும் கருத்தில் எனக்கும் உடன்பாடிருந்தது ஒரு காலத்தில்.......

ஆனால் சிங்களவன் வென்றவன்

அவனது வழிகளை  நாம் வெறுத்தவர்கள்

அது சரியல்ல  என்று வரலாறு சொல்கிறது

இனி

நாமும் எம்மை அந்த வழிகளில் மாற்றங்களை  ஏற்படுத்தணும்

மாறணும்

ஆனால் அதைப்பற்றி சபேசனுக்கு அக்கறையில்லை

வெறும் எழுத்து மட்டுமே அவரது மூலதனம்.......

Edited by விசுகு

நேற்று களத்தில் இணைக்கப் பட்டிருந்த செய்தித் தலைப்பு... ஒன்றில், கிழக்கு மாகாணத்திலுள்ள பொலிஸ் நிலையத்தில்.... ஒரு தமிழ்ப் பொலிசுக்கு சிங்களம் எழுதத் தெரியவில்லை, என்பதற்காக... அங்கிருந்த சிங்கள காவல் துறை அதிகாரி எதுகும் சொல்லாமல் இருந்த போது, முஸ்லீம் பொலிஸ் ஒன்று... அங்கு கிடந்த தடியால் அடித்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருந்தார் என்ற செய்தி வந்திருந்தது.

அதனை யாரும்... வாசித்திருந்தால், ஈழத்து முஸ்லீம்களுக்காக... யாரும் வக்காலத்து வாங்க மாட்டார்கள்.

தமிழன் இப்போது இருக்கும் நிலையில்.... நடுநிலையாவது, மண்ணாங்கட்டியாவது.

மன்னிப்புக் கேட்பது என்பது உண்மையாகவே தமது தவறை உணர்ந்து கேட்பதாக இருக்க வேண்டும். இந்த இரண்டு இடங்களிலும் அடாவடியாக உள்ளே நுழைந்து நெருக்கடி கொடுத்து மன்னிப்புக் கேட்க வைக்கப்பட்டிருக்கிறது. இது எவ்வித பயனையும் தராது. இப்படி நடப்பதும் ஒரு அராஜகம்தான்.

சுப்ரமணிய சுவாமி, சோ போன்றவர்கள் இதை விட மோசமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை எதுவும் செய்ய முடியவில்லை. யாரோ ஒரு அப்பிராணி மாட்டியிருக்கிறார். மன்னிப்புக் கேட்ட வைத்தாயிற்று. தோழர்களை பாராட்டுவோம்.

ஒருவர் தவறான கருத்தை வைத்தால், அதை மறுத்து நாம் எமது கருத்துக்களை மக்களிடம் கொண்டு போக வேண்டும். அதுதான் சரியான நடைமுறை.

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் தவறான கருத்தை வைத்தால், அதை மறுத்து நாம் எமது கருத்துக்களை மக்களிடம் கொண்டு போக வேண்டும். அதுதான் சரியான நடைமுறை.

அதுக்கு இன்னொரு டிவி வேணும்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

அதுக்கு இன்னொரு டிவி வேணும்.. :D

அப்ப  சபேசன் இனி தொலைக்காட்சியில் வரப்போறாரோ..........

இப்ப  புரியுது......... :D

அது தானே  பார்த்தேன்

சோனி  குடும்பி

சும்மா ஆடுதா என்று... :(

  • கருத்துக்கள உறவுகள்

-----

சுப்ரமணிய சுவாமி, சோ போன்றவர்கள் இதை விட மோசமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை எதுவும் செய்ய முடியவில்லை. யாரோ ஒரு அப்பிராணி மாட்டியிருக்கிறார். மன்னிப்புக் கேட்ட வைத்தாயிற்று.

------

நீங்கள் இதற்குள்... சோவை இழுத்ததால், பதில் சொல்ல வேண்டி வந்துள்ளது.

ராஜீவ்காந்தி கொலைக்கு முன்பிருந்தே... சோ புலிகளை, தாழ்த்தி விமர்சித்து வந்தவர் என்பதை.... நீங்கள் அறிவீர்கள்.

அப்போது அவருக்கு, மத்திய அரசு  Z பிரிவு பாதுகாப்பு கொடுக்க‌ முன் வந்த போது, அதனை சோ நிராகரித்து... சொன்ன காரணம், "புலி எப்போ... நினைத்தாலும்... தன்னை சுட்டுக் கொல்லலாம். அதற்கு தன்னுடன் சேர்த்து... காவலுக்கு நிற்கும் நாலு சிப்பாயையும்.. பலி கொடுக்க விருப்பமில்லையாதலால்..." தனக்கு காவல் தேவை இல்லை என்றார்.

ஃ சோவைப் பற்றி... யாருமே, அக்கறை கொள்ளவில்லை என்று தெரிகின்றது.

நீங்க தான்... அவங்களை, பெரிசாய் எடுக்குமாப் போலுள்ளது. :D

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

அப்போது அவருக்கு, மத்திய அரசு ---- பிரிவு பாதுகாப்பு கொடுக்க‌ முன் வந்த போது, அதனை சோ நிராகரித்து... சொன்ன காரணம், "புலி எப்போ... நினைத்தாலும்... தன்னை சுட்டுக் கொல்லலாம். அதற்கு தன்னுடன் சேர்த்து... காவலுக்கு நிற்கும் நாலு சிப்பாயையும்.. பலி கொடுக்க விருப்பமில்லையாதலால்..." தனக்கு காவல் தேவை இல்லை என்றார்.

உங்கட  எழுத்தைப்பார்த்தால்

சோ

கயிறை  எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார்  போலும்

அந்த நல்ல  செய்திக்காக  பிரார்த்திக்கின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

உங்கட  எழுத்தைப்பார்த்தால்

சோ

கயிறை  எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார்  போலும்

அந்த நல்ல  செய்திக்காக  பிரார்த்திக்கின்றேன்

இருக்கிறார் அல்ல இருந்தவர்...

அவர் ஒரு "விசரன்" என்ற படியால்...

ஏன்... வீணாய், ஒரு துப்பாக்கி ரவையை... வீணாக்க வேண்டும் என்று, இருந்திருக்கலாம். :icon_idea:  

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கிறார் அல்ல இருந்தவர்...

அவர் ஒரு "விசரன்" என்ற படியால்...

ஏன்... வீணாய், ஒரு துப்பாக்கி ரவையை... வீணாக்க வேண்டும் என்று, இருந்திருக்கலாம். :icon_idea:  

 இருந்தவர்  அல்ல இருக்கிறார் தான்

இனி  எதற்கு குண்டு............

அவருக்கெல்லாம் நல்ல  சாவு வராது சிறி :(  :(  :( 

(பச்சை  இன்மையால் பதில் எழுதும்படி வருகிறது)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப  சபேசன் இனி தொலைக்காட்சியில் வரப்போறாரோ..........

இப்ப  புரியுது......... :D

அது தானே  பார்த்தேன்

சோனி  குடும்பி

சும்மா ஆடுதா என்று... :(

veelai seyyuthu....enakku thamiz ezuthaththeriyaathu aaraavathu kaaddiththaangkoo....

  • கருத்துக்கள உறவுகள்

veelai seyyuthu....enakku thamiz ezuthaththeriyaathu aaraavathu kaaddiththaangkoo....

ஹ்ம்ம்ம்...........

இருட்டுக்குள்ளை வாங்கோ..... காட்டித்தாறம். :D  :lol:

மன்னிப்புக் கேட்பது என்பது உண்மையாகவே தமது தவறை உணர்ந்து கேட்பதாக இருக்க வேண்டும். இந்த இரண்டு இடங்களிலும் அடாவடியாக உள்ளே நுழைந்து நெருக்கடி கொடுத்து மன்னிப்புக் கேட்க வைக்கப்பட்டிருக்கிறது. இது எவ்வித பயனையும் தராது. இப்படி நடப்பதும் ஒரு அராஜகம்தான்.

சுப்ரமணிய சுவாமி, சோ போன்றவர்கள் இதை விட மோசமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை எதுவும் செய்ய முடியவில்லை. யாரோ ஒரு அப்பிராணி மாட்டியிருக்கிறார். மன்னிப்புக் கேட்ட வைத்தாயிற்று. தோழர்களை பாராட்டுவோம்.

ஒருவர் தவறான கருத்தை வைத்தால், அதை மறுத்து நாம் எமது கருத்துக்களை மக்களிடம் கொண்டு போக வேண்டும். அதுதான் சரியான நடைமுறை.

உண்மை உண்மை .தெரியாமல் செய்பவன் ,பேசுபவன் .தவறை உணரும்போது மன்னிப்பு என்பது இயல்பாக வரும் .அது மனிதம் ................ஆனால் தெரிந்தும் ,அயோக்கியத்தனமாகவும் பேசும்போது ,செய்யும்போது .அங்கே எந்த பீலிங்கும் வராது சார் ....நாம் பீலிங்கை வர வைக்கணும் .வர வைத்தார்கள் ...........அதுதான் சார் இப்ப தேவை .................நான் இயேசுவின் பக்தன் ...........ஆனால் இப்போ எனக்கு தேவை ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தில் திருப்பிக்குடு .அது ஏன் என்று ஏசுவுக்கு தெரியும் .நன்றி வணக்கம் . :D

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் புல் அரிக்க வைக்கிறார்கள் .சொறிந்து கொண்டு இருக்க வேண்டியதுதான் . :icon_mrgreen:

"நாமும் எம்மை அந்த வழிகளில் மாற்றங்களை  ஏற்படுத்தணும்.

மாறணும்"

அண்ணை அழகாக சொல்லுவார் , தொடங்குவமோ என்று கேட்டால் ஆள் கனடாவில் நிற்பார் . :icon_idea:

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் உறவுகளே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.