Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீட்டில் மனிசி கூட சண்டையா.. அப்படி என்றால் நீங்கள் மரணத்தை கூவி அழைக்கிறீர்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

_74725719_angry_couple.jpg

 

 

வீட்டில்.. கணவன்.. மனைவி.. பிள்ளைகளை.. உறவினர்கள்.. நண்பர்களிடையே கடுப்பாகி.. அடிக்கடி சண்டையும்.. வாதங்களும் நடந்தால் (யாழுக்கும் பொருந்தும் போல) அது ஆயுளின் பெரும்பகுதியை குறைக்கலாம் என்று சமீபத்தில் நடுத்தர வயதினரை வைத்து மேற்கொண்ட ஆய்வில் இருந்து தெரிய வந்துள்ளது.

 

இது ஆண்கள் பெண்கள் என்று இருபாலாருக்கும் பொருந்தும்.

 

அடிக்கடி கடுப்பாவதால்.. உயர் குருதி அழுத்தம்.. மன அழுத்தம்.. மன உளைச்சல்.. கவலை.. போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு அது இதயம் மற்றும் மூளை சார்ந்த பாதிப்புக்களை உண்டு பண்ணி... மரணத்தையும் துரிதப்படுத்த வழிவகுப்பதாக இந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

 

இதில் உள்ள முக்கிய ஆபத்து என்னவென்றால்.. இது 50% - 100% வரை இறப்பை விரைவு படுத்துவதுதான்.

 

எனவே சண்டை.. விவாதம் என்று வந்தால்.. அதில் காலை விடும் முன் கொஞ்சம் யோசித்து நல்ல முடிவை எடுத்துக் கொண்டு.. அன்பே சிவம் அல்லது all is well என்று உச்சரிச்சுக் கொண்டு இருப்பது நல்லது.

 

நாவடக்கம்.. உண்டி சுருக்கல்.. இவை எல்லாம் எம் முன்னோர் கற்றுத் தந்தும்.. நாம் கேட்டால் தானே. இப்படி ஆய்வுகள் வந்து சொன்னால் தான் உண்டு.

 

-----------------------

 

Having frequent arguments with partners, friends or relatives can increase the risk of death in middle-age, say Danish researchers.

 

http://www.bbc.co.uk/news/health-27327325

 

அதுதான் சிங்கம் சிங்கிளாக ?? :D

அதுதான் சிங்கம் சிங்கிளாக ?? :D

சிங்கம் சிங்கிளா தமிழ் படத்தில் மட்டும் தான் வரும்.

நிசத்தில் ஆறேழு பெண் சிங்கங்கள் வேட்டையாடி வர திண்டு கொழுக்கும் சோம்பேறி மிருகம். :)

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டிலோ பழகுபவர்கள் மத்தியிலோ தவிர்க்க முடியாத பிரச்சனைகள் ஏற்பட்டு அது நம்மை உடல் ரீதியாக பலவாறு தாக்குகிறது என்பது முற்றிலும் உண்மை..நானும் இவ்வாறான பிரச்சனைகளால் உடல் ரீதியா எதிர் நோக்கிக் கொண்டே போகிறேன் என்றே சொல்லலாம்..

அதிகரித்து செல்லும் இரத்த அழுத்ததிலிருந்து அனைத்தும் ஆரம்பித்து விடுகிறது. உணர்வுகளை பிரச்சனைகளை வெளியில் சொல்லி கொள்ள முடியாத போது, எங்களுக்குள்ளயே அடக்கி கொள்வது பல தரப்பட்ட உடல் உபாதைகளுக்கு வழிவகுக்கிறது..இதில் நானே நீங்களோ விதி விலக்காக இருக்க மாட்டீர்கள் என்று நம்பிறன்..

Edited by யாயினி

வீட்டிலோ பழகுபவர்கள் மத்தியிலோ தவிர்க்க முடியாத பிரச்சனைகள் ஏற்பட்டு அது நம்மை உடல் ரீதியாக பலவாறு தாக்குகிறது என்பது முற்றிலும் உண்மை..நானும் இவ்வாறான பிரச்சனைகளால் உடல் ரீதியா எதிர் நோக்கிக் கொண்டே போகிறேன் என்றே சொல்லலாம்..

அதிகரித்து செல்லும் இரத்த அழுத்ததிலிருந்து அனைத்தும் ஆரம்பித்து விடுகிறது. உணர்வுகளை பிரச்சனைகளை வெளியில் சொல்லி கொள்ள முடியாத போது, எங்களுக்குள்ளயே அடக்கி கொள்வது பல தரப்பட்ட உடல் உபாதைகளுக்கு வழிவகுக்கிறது..இதில் நானே நீங்களோ விதி விலக்காக இருக்க மாட்டீர்கள் என்று நம்பிறன்..

ஒருத்தரும் விதிவிலக்கு அல்ல.

விட்டு சென்ற எல்லோருடனும் நான் செலவழித்த நல்ல நேரங்களை அசை போடுவேன்.

என்னிடம் உதவி பெற்று வளர்ந்தவுடன் மனதை புண்படுத்திவிட்டு சென்றார்கள் பலர்.

அதே நேரம் பல புதிய நண்பர்கள் கிடைத்து என்னை கேட்காமலே தூக்கிவிட்டார்கள்.

என்னால் எல்லோரையும் மகிழ்ச்சி படுத்த முடியாது ஆனால் என்னை தளம்பாமல் வைத்திருக்க எனது மனதை பயிற்சி படுத்துகிறேன்.

யாழ் களத்தில் தான் மிளகாய் நேரில் தேன் :)

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு சண்டை பிடிக்க வீட்டில் யாரும் இல்லை....சுவாமிப் படத்தோடும்,கணணியோடும் தான் சண்டை பிடிக்கிறது:D

  • கருத்துக்கள உறவுகள்

சுத்தப் பொன்னையனாக இருந்தால் நல்லம் என்று ஆய்வு சொல்வதாக எடுத்துக்கொள்கின்றேன். :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

நான் எதையும் தூக்கி தலையில் வைப்பதில்லை.இதுவும் கடந்து போகும் என்று நினைத்தால் வாழ்க்கை இன்பமயமே

  • கருத்துக்கள உறவுகள்

மனிசியுடன் சண்டை பிடிப்பதும், சந்தோசம் தானே...
அதற்குப் பெயர் தான்.... "ஊடலுடன், கூடிய காதல்."

"இன்னிக்கு... ராத்திரிக்கு," பாட்டு ஞாபகம் வருதா..... இல்லையா.....

  • கருத்துக்கள உறவுகள்

ஒருத்தரும் விதிவிலக்கு அல்ல.

விட்டு சென்ற எல்லோருடனும் நான் செலவழித்த நல்ல நேரங்களை அசை போடுவேன்.

என்னிடம் உதவி பெற்று வளர்ந்தவுடன் மனதை புண்படுத்திவிட்டு சென்றார்கள் பலர்.

அதே நேரம் பல புதிய நண்பர்கள் கிடைத்து என்னை கேட்காமலே தூக்கிவிட்டார்கள்.

என்னால் எல்லோரையும் மகிழ்ச்சி படுத்த முடியாது ஆனால் என்னை தளம்பாமல் வைத்திருக்க எனது மனதை பயிற்சி படுத்துகிறேன்.

யாழ் களத்தில் தான் மிளகாய் நேரில் தேன் :)

 

 

வீட்டில் எப்போதும் அமைதியாக இருந்து பழக்கப்பட்டு விட்டேன்.இப்போ சற்று வாய் திறந்து ஏதாச்சும் சொல்லப் போனால் எல்லார் மத்தியிலும் ஒரு விதக் கெட்டபெயரோ இல்லை குறிப்பிட்ட உறவுகளையோ, நட்புக்களையோ இளக்க வேண்டிய சூள் நிலைகளும் ஏற்பட்டுள்து..பழகியவர்களை இளப்பது மிகவும் கடினம் ஏதோ செய்யக் கூடாத குற்றங்களைச் செய்தவள் போல், தூக்கி எறிந்துட்டு தடைகள் போன்றவற்றை போட்டு செல்வது  தான் மிகவும் கொடுமையான விடையமாக இருக்கும்...என்ன செய்வது எல்லோரும் மனிதர்கள்.அவர்,அவர்களுக்கு என்று ஒவ்வொரு தனிக் குணங்கள் இருக்கவே செய்யும்...

 

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாகப் பலரைப்போலவே , அமைதியாக வாழ்க்கையை நகர்த்தி விட்டு,அதிலிருந்து விடை பெற்றுச் செல்வதையே விரும்புகின்றேன்!

 

ஆனால், பல எதிர்பாராத பிரச்சனைகள் எப்போதுமே, என் மீது திணிக்கப்படுகின்றன! 

 

ஒவ்வொருவரும், தாங்கள் தங்களையும், தங்கள் செயல்களையும் நியாயப்படுத்த முயல்வதையும், உண்மையான பொறுப்புக்களைத் தட்டிக்கழிக்க முயல்வதையுமே அவதானித்தேன்!

 

அதன் பின்னர், அவர்களை நான் கணக்கிலெடுப்பதில்லை.... அதற்காக அவர்கள் மீது 'காழ்ப்புணர்வுகளை' வெளிப்படுத்துவதுமில்லை!

 

காலப்போக்கில், அவர்களாகவே அமைதியாகி விடுவார்கள்!

 

எது சரியென எனது அறிவுக்குப் படுகின்றதோ, அதைச் செய்தபடியே.... நகர்ந்து செல்வது தான்... வாழ்க்கையின் வழி..! :D

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம்  பொய்

 

மனைவியும் நானும் சண்டைபிடித்தது 5 வீதம் என்றால்

95 வீதம்

இருவரும் சந்தோசமாக

சிரித்து விளையாடி  மகிழ்ச்சியாக  இருந்திருக்கின்றோமே....

 

அப்போ

ஆயுளை 90 வீதம் அதிகரித்திருக்கின்றோம் என்று தானே  பொருள்...

எனது வாழ்வு இது தான்

வாழ்வு என்பது வாழ்வதற்கே..... :wub:

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சிரித்து விளையாடி மகிழ்ச்சியாக இருப்பதை நாமும் அண்மையில் அறிந்துகொண்டோம்தானே.. :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சிரித்து விளையாடி மகிழ்ச்சியாக இருப்பதை நாமும் அண்மையில் அறிந்துகொண்டோம்தானே.. :D:lol:

 

 

அதுக்குத்தானே

5 வீதம்  கழித்துவிடடிருக்கின்றேன்.... :icon_mrgreen:  :D  :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.