Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விக்னேஸ்வரன் போட்டியிட முன்வந்தால் யாராலும் அதனைத் தடுக்க முடியாது: கெஹலிய:-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெறவிருக்கும் சுதந்திரக்கட்சி  பாராளுமன்றக் குழுக்கூட்டம் வழமையானதொன்றே எனவும் ,  புதுமைக்குரியதல்லவெனவும் தெரிவித்த அமைச்சரவைப்  பேச்சாளரான  அமைச்சர் கெஹலிய  ரம்புக்வெல்ல ,  பாராளுமன்ற  அமர்வு  இடம்பெறும் இருகட்டங்களிலும் மாதமிருமுறை இக்குழுக்கூட்டம் நடைபெறுவதாகவும் குறிப்பிட்டார்.

எந்தத் தேர்தலையும் தீர்மானிப்பதற்காகவோ ,   தேர்தலை இலக்காகக் கொண்டோ  இன்றைய கூட்டம் கூட்டப்படவில்லை. 2016 ஆம் ஆண்டு வரை  தேர்தலுக்குரிய காலமிருக்கின்றது. அடுத்த வருடத்தில்  தேர்தலை  நடத்துவது  குறித்து ஆளும் தரப்புக்குள்  எதுவுமே பேசப்படவில்லை.

உரிய காலத்துக்கு முன்பதாக  தேர்தலை நடத்துவதற்குரிய  அதிகாரம் ஜனாதிபதிக்கு  இருக்கின்றது. அதற்கு எம்மிடம் அனுமதி கேட்கவேண்டிய  தேவை கிடையாது  எனவும் அமைச்சர் கெஹலிய ரம்புக் வெல்ல தெரிவித்தார்.

தமிழ்த் தரப்பைச் சேர்ந்த சிலர் ஜனாதிபதித்  தேர்தலின்போது  எதிரணிப்பொதுவேட்பாளராக  வடக்கு முதலமைச்சர்  விக்னேஸ்வரனை நியமிக்குமாறு யோசனை தெரிவித்திருப்பது தொடர்பாக அமைச்சரிடம் கேட்டபோது;

"அதனை என்னிடம் கேட்டு என்ன பிரயோசனம் . அவர்களிடமல்லவா கேட்க வேண்டும். எனினும் அவர் போட்டியிட முன்வந்தால்  யாராலும் தடுக்க முடியாது.  அவர் இந்த நாட்டின்  பிரஜையாவார்.  நீதிமன்றத்தால் குற்றவாளியாக்கப்படாத எந்தவொரு  பிரஜையும் இந்த நாட்டில்  தேர்தலில்  போட்டியிடுவதற்கு தடையெதுவும் கிடையாது" எனவும் அவர் தெரிவித்தார்.
  

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/106653/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தரப்பைச் சேர்ந்த சிலர் ஜனாதிபதித்  தேர்தலின்போது  எதிரணிப்பொதுவேட்பாளராக  வடக்கு முதலமைச்சர்  விக்னேஸ்வரனை நியமிக்குமாறு யோசனை தெரிவித்திருப்பது தொடர்பாக அமைச்சரிடம் கேட்டபோது;

"அதனை என்னிடம் கேட்டு என்ன பிரயோசனம் . அவர்களிடமல்லவா கேட்க வேண்டும். எனினும் அவர் போட்டியிட முன்வந்தால்  யாராலும் தடுக்க முடியாது.  அவர் இந்த நாட்டின்  பிரஜையாவார்.  நீதிமன்றத்தால் குற்றவாளியாக்கப்படாத எந்தவொரு  பிரஜையும் இந்த நாட்டில்  தேர்தலில்  போட்டியிடுவதற்கு தடையெதுவும் கிடையாது" எனவும் அவர் தெரிவித்தார்.

 

  என்ன அப்படி ஒரு சட்டம் சிறிலங்காவில் உள்ளதா? புத்த மதத்தை சேர்ந்தவரை தவிர வேறு யாரும் ஜனாதிபதி ஆக முடியாது. ஜே.ஆர் கூட இதற்கு விதிவிலக்கல்லவே.

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் சட்டத்தின் இரண்டாவது பிரிவின்படி "புத்த சாசனத்துக்கு இசைவாக ஆட்சி அமைய வேண்டும்" என்று உள்ளது. புத்த சாசனத்துக்கு இசைவானதா என்பதை கண்டி அஸ்கிரிய பீடம் தீர்மானிக்கும்.. :wub:

  • கருத்துக்கள உறவுகள்

ஆக ஜே.ஆர் புத்த மதத்துக்கு மாறியதும் அஸ்கிரிய பீடம் புத்தசாசனத்துக்கு இசைவானது என தீர்மானித்தது. 

  • கருத்துக்கள உறவுகள்

புத்த தர்மத்துக்கு இசைவாக யாரும் ஆட்சிசெய்யலாம் என்பதே அரசியலமைப்புச் சொல்வது.

ஜேஆர் தன் இளம் பராயத்திலேயே பெளத்த மததுக்கு மாறிவிட்டார்.

வரலாறு ரொம்ப முக்கியம் அமைச்சரே

தவிர அஸ்கிரிய பீடம் சொல்லித்தான் ஜேஆர் ஏற்றுக்கொள்ளப்பட்டார் என்பது - கற்பனை

  • கருத்துக்கள உறவுகள்

புத்த தர்மத்துக்கு இசைவாக யாரும் ஆட்சிசெய்யலாம் என்பதே அரசியலமைப்புச் சொல்வது.

ஜேஆர் தன் இளம் பராயத்திலேயே பெளத்த மததுக்கு மாறிவிட்டார்.

வரலாறு ரொம்ப முக்கியம் அமைச்சரே

தவிர அஸ்கிரிய பீடம் சொல்லித்தான் ஜேஆர் ஏற்றுக்கொள்ளப்பட்டார் என்பது - கற்பனை

 

 

சிறிலங்கா சரித்திரத்தில் ஒரு முஸ்லிமோ,தமிழரோ கிறிஸ்தவரோ ஜனாதிபதில்லியாக இன்று வரை வந்ததில்லை. இவ்வளவு காலமும் வராததால் இனியும் வரும் என எதிர்பார்க்க முடியாது. அதற்காக நிகழ்தகவே இல்லை.( சிறிலங்கா என்ன அமெரிக்காவோ) அப்படி எனில் மேற்கூறிய எவராலும் பௌத்தத்துக்கு இசைவாக ஆட்சி செய்ய தெரியாதா? கேனைகள் போல.
ஜே ஆர் பதவி பிரமாணம் எடுக்கும் சமயத்தில் தான் புத்த சமயத்துக்கு மாறினார். அவரின்  இயற் பெயர் Junius Richard Jayawardene. இவர் எப்படி புத்த சமயத்தவராய் இருப்பார்.
 
 
அது சரி சிங்க கொடியில் சிறுபான்மையினருக்கு நிறம் எல்லாம் இருக்கிறது என  சொல்லிக்கொண்டு எப்படி சிறுபான்மையினர் ஜனாதிபதியாக வரமுடியவில்லை?? அங்கேயும் சுத்துமாத்தா??
  • கருத்துக்கள உறவுகள்

அண்ண, ஜூனியஸ் ரிச்சர்ட் பிறகும் போது கிறீஸ்தவர், சட்டகல்லூரி காலத்திலேதான் பெளததுக்கு மாறினது.

உன்ணானா இது சத்தியம் ( Jayewardene converted from Christianity to Buddhism in his youth -http://en.wikipedia.org/wiki/J._R._Jayewardene).

அமெரிகாவும் இலங்கையும் ஒண்டே அண்ணை. அமெரிகா ஜனநாயக நாடு. அமெரிக்காவில 200 வருசதுக்கு பிறகுதானே ஒபாமா வந்தவர். தவிர இலங்கையில் துவேசம் மூன்று இனதிலும் தலைவிரித்தாடும் நிலையில் இது சாதியமே அண்ணை. நீங்கள் கேட்பது லிங்கன் காலத்தில் ஏன் ஒரு கறுப்பர் ஜனாதிபதியாகவில்லை என்பது போல அண்ணை. கெனடி காலத்திலேயே கிங்குக்கு நடந்தது தெரியும்தானே?

நீங்கள் கூறும் 78 குடியரசு யாப்பே ஜேஆர் 77 ச் வெண்ட பிறகு எழுதிவிச்சதண்ணே. அப்பவே ஜெ ஆர் பெளத்தராயிட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
இன்னுமொருவர் (ஒலிவர் குணதிலகவாவோ ஞாபகமில்லை) பௌத்தத்துக்கு மாறி தான் சத்தியபிரமாணம் எடுத்தவர்.
 
1912 ல் முஸ்லிம்களை சிங்களவர்கள் அடித்த போது முஸ்லிம்கள் இனவாதிகளா? அல்லது 1956ல் தமிழர்களை சிங்களவர்கள் கொன்ற போது தமிழர்கள் இனவாதிகளா? தமிழரையும் முஸ்லிம்களையும் இனவாதிகள் ஆக்கியதே சிங்கள இனவாத அரசுகள் தான். நீங்கள் மூல காரணத்தை தேட ஏன் முயலவில்லை. 
அமெரிக்காவை உதாரணம் காட்டியது சிறிலங்கா அரசு பற்றி கதைக்கும் போது சிறிலங்காவை அமேரிக்கா அளவுக்கு எழுப்பி கதைத்து புளகாங்கிதம் அடைகிறீர்கள்.அது தான் அமெரிக்காவை உதாரணம் காட்டினேன். 
  • கருத்துக்கள உறவுகள்

அண்ண,

ஆனானப்பட்ட பண்டாவே சொலமன் ரிச்வே ரிச்சர்ட் டயஸ் (SWRD)ஆகத்தான் பிறந்தவர்.

ஏன் மகிந்த கூட மகிந்த பேர்சி ராஜபக்ச தான். இதை இரண்டுமாரிப்பார்க்கலாம்.

1) 30-50 களில் சுதேசியத்துக்கு திரும்புதல் ஒரு பெரும் புரட்சியாக இருந்தது. Handy Perinbanayagam போன்ற முற்போக்கு தமிழ் தலைவர்களும் return to native religion செய்துள்ளனர். இதை இப்படி பார்க்கலாம். அல்லது

2) வாக்குக்காக மதம் மாறினார்கள் என்று பார்க்கலாம்.

எப்படிப் பார்த்தாலும் சட்டத்துக்கு பயந்து அல்லது பெளதராக மாறாவிடின் சட்டம் பதவியை தராது என்று பயந்து யாரும் மாறவில்லை.

அமெரிக்காவில் பிறக்காத எவரும் சனாதிபதியாக முடியாது என்று அமெரிக்க கொன்ஸ்டிடூஷன் சொல்வது போல பெளத்தர் அல்லாதோர் ஜனாதிபதியாக முடியாது என்று இலங்கை அரசியலமிப்பு சொல்லவில்லை.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களதும் முஸ்லீம்களதும் துவேசம் பெரும்பான்மை துவேசத்தின் பின் விளைவே என்பது உண்மையே.

ஆனால் அன்னியராட்ச்சி காலத்தில் தமிழர் நடந்த விதம், தமிழ்நாட்டில் அரசுகள் பலமாயிருந்த்ஹபோது இலங்கை தமிழரசுகள் சிங்கள அரசுகளை அடக்கியாண்டமை என்பன இந்த குரோதம் வளர காரணமாயிருந்த்ஹிருக்கலாம்.

மேலும் தமிழர், முஸ்லிம்களும் தமக்கிடியே காட்டும் துவேசதுக்கு பெரும்பான்மையை முழுக்காரணமாக காட்ட முடியாது. ஆக மூவினங்கலும் துவேசிகளாய் வாழும் ஒரு நாட்டில் ஒரு ஒபாமா இப்போதைக்கு சாத்தியமில்லை.

நீங்கள் தந்த wiki தரவுதான் இப்படிச் சொல்லுது.

It is only a norm that only a Sinhalese Buddhist can become a president in Sri Lanka. According to the Article 31 of the Sri Lankan constitution it says any citizen can become a president!

It is ONLY a NORM. NORM என்றால் - வழக்கு அல்லது நடைமுறை. ஆட்டம் வேறு நடைமுறை வேறு. அடுத்த பந்தி தெளிவாக சொல்லுது, according to article 31 ANY citizen can become President.

அரசியலமிப்பை இணைத்தற்க்கு நன்றி. கல்லூரிகாலங்களில் படித்தது. இப்போ மறுபடியும் பழைய நினைவுகள்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

நடைமுறையில் புத்த மதத்தவரை தவிர யாரும் ஜனாதிபதியாக வந்துள்ளனரோ? இனியும் வர சந்தர்ப்பம் உண்டோ?

  • கருத்துக்கள உறவுகள்

foreseeable future ற்க்கு இல்லை. எப்படி Lincoln கால யூஎஸ் இல் கறுப்பர் வருவது நினைத்துப் பார்க்க முடியாததோ அப்படி.

எப்படி ஒரு தமிழரல்லாதவர் வடமாகாண முத்ல்வராக முடியாதோ - அப்படி.

ஆனால் சட்டம் பெளத்தர் மட்டும் தான் வரலாம் எனறு சொல்லவில்லை.

நீண்ட நாட்களாக சிங்களர் அல்லாதவர் இலங்கையில் ஜனாதிபதியாக வர அரசியலமைப்பு சட்டத்தில் இடம் இல்லை என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அது தவறு என்று இப்பொழுது அறிய வருகிறது.
 
நுணா மற்றும் goshan_che உங்களது தகவலுக்கு நன்றி. 
 
நுணா கொடுத்த இணைப்பில் அரசியல் சட்டத்தின் 31வது  பிரிவு இப்படித்தான் சொல்கிறது.
 
31. (1) Any citizen who is qualified to be elected to the office of President may be nominated as a candidate for such office –
(a) by a recognized political party ; or
(b) if he is or has been an elected member of the legislature, by any other political party or by an elector whose name has been entered in any register of electors.
 
 
புத்த மதத்தை பொறுத்தவரை 9 வது பிரிவு கூறுவதாவது "புத்த சாசனத்தை பாதுகாப்பதும் வளர்ப்பதும் இலங்கையின் முக்கிய கடமையாகும்"
 
9.The Republic of Sri Lanka shall give to Buddhism the foremost place and accordingly it shall be the duty of the State to protect and foster the Buddha Sasana, while assuring to all religions the rights granted by Articles 10 and 14(1)(e).
 
10. Every person is entitled to freedom of thought, conscience and religion, including the freedom to have or to adopt a religion or belief of his choice.
 
14(1)(e) the freedom, either by himself or in association with others, and either in public or in private, to manifest his religion or belief in worship, observance, practice and teaching ;
 
இங்கே புத்த சாசனம் என்று கூறப்படுவது எது என்பதை யாரவது தெளிவுபடுத்தினால் நன்றாக இருக்கும்.
  • கருத்துக்கள உறவுகள்

அது ஒரு தப்பபிப்பிராயம் ஆதித்ய இளம்பிறையன். பள்ளிக் காலத்தில் நானும் அப்படியே நம்பினேன். கூட்டணியின் துவேச அரசியல் பொய்களில் இதுவும் ஒன்றாக இருந்திருக்கலாம்.

புத்தசாசனம் என்றால் "புத்தரின் போதனைகள்". Buddhist Doctrine என்பார்கள் ஆங்கிலத்தில். பெளத்த சித்தாந்தம்.

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு ஒரு ஜனாதிபதி தோ்தலில் குமார் பொனம்பலம நின்றதாக நிநைவு.தகவல் தவறானால் என்னை போட்டு கும்மக்குடாது சொல்லிப்போட்டன்.

முன்பு ஒரு ஜனாதிபதி தோ்தலில் குமார் பொனம்பலம நின்றதாக நிநைவு.தகவல் தவறானால் என்னை போட்டு கும்மக்குடாது சொல்லிப்போட்டன்.

 

ஓம், அவர் ஜனாதிபதி தோ்தலில் போட்டி இட்டார். எனக்கும் நினைவு இருக்கு.

 

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D

  • கருத்துக்கள உறவுகள்

ஒமோம். பின்னாளில் கோமாளி லிங்கமும் போட்டியிட்டு 9000 வாக்கு எடுத்தவர்.

  • கருத்துக்கள உறவுகள்

உலகில் மதச்சார்புள்ள நாடுகள் பட்டியலை எடுத்துப் பார்த்தால் அதில் இலங்கையின் பெயரும் இருக்கும். ஏனெனில், ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருப்பதால்..

தமிழனுக்கு சிங்களவன் ஜனாதிபதியாக வாக்குப் போடுவான் என்பதே ஒரு பெரும் கனவு.. :D அப்படியே போட்டுவிட்டாலும், புத்த சாசனத்துக்கு இசைவான ஆட்சியா என்பதை நிர்ணயிப்பது யார்? இந்தக் கேள்வி எழுந்தபோது ஓரிரு சிங்களவர்கள் எனக்குத் தந்த பதில்தான் அஸ்கிரிய பீடம். ஒவ்வொரு ஜனாதிபதியும் வெற்றி பெற்றதும் கண்டி விகாரைக்கு பூத்தட்டுடன் போனார்களா என்பதை அறிந்தால் விடயம் தெரிந்துவிடும்.. :D

நிற்க.. பிரித்தானிய முறையிலான நாடாளுமன்ற ஆட்சியை ஒழித்து அமெரிக்கா போன்ற ஜனாதிபதி ஆட்சி முறையை ஜே.ஆர். கொண்டு வந்ததற்கு வலிமையான காரணம் இருந்தது. தவறியும் ஒரு தமிழ்க்கட்சி ஆட்சியில் அமர்ந்துவிடக் கூடாது என்பதுதான் அது.

கதிர்காமர் போன்ற சிங்கள ஆதரவு பெற்ற தமிழர்கூட அதிகாரத்தைக் கைப்பற்றி விடக்கூடாது என்கிற நரித்திட்டத்தினால் புத்தசாசனம் பற்றிய குறிப்பு அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டது.

நிலைமை இவ்வாறிருக்க சிறுபான்மையினரும் இலங்கையில் ஜனாதிபதி ஆகலாம் என வாதிடுவது பேதமை. அதிலும்பார்க்க சவுதியில் ஒரு சைவ குருக்கள் அரசராக வர அதிக வாய்ப்புள்ளது.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சிலதுங்க.. சிறீலங்கா ஒரு ஜனநாயக விழுமிய நாடு என்று காட்ட முண்டி அடிக்கின்றன.

 

ஆனால்..அது சிங்கள பெளத்த பேரினவாத தேசம் என்பதில்.. ஜனநாயக விழுமியங்களை சிங்கள பெளத்த பேரினத்தின் இருப்புக்காக பயன்படுத்தும் ஒரு நாடு என்பதே யதார்த்தம்.

 

சில மாரித்தவக்களைகள்.. வாக் வாக் என்று கத்த வேண்டியது தான். நடைமுறையில் அவற்றால்.. சிங்கள பெளத்த பேரினவாதத்திற்கு எதிராக ஒரு துரும்பைக் கூட ஆட்ட முடியாது. :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

அடபோங்கப்பா. சிறிலங்காவின் ஜனநாயக விழுமியம்தான் சந்தி சிரிக்குதே, இதுக்க நான் வந்து தூக்கிப்பிடிச்சாதன் வேகுமாக்கும்.

சிங்கள, தமிழ், முஸ்லீம் பேரின, சிற்றின வாதங்கள் நிறைந்த நாடு இலங்கை. I think for the first time ever in history, Neddukku and I are at risk of agreeing with each other on a point. Is it a turrning point or a துன்பியல் சம்பவம் ;). Only time will tell.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

சிறுபான்மை இன மக்கள் கேட்பது தங்களின் நிலத்தில் தங்கள் வாழ்வுரிமை. அது மேலாதிக்கமோ.. இனவாதமோ அல்ல. தமிழர்கள் ஒன்றும் கொழும்பில்.. தனிநாடு கேட்கவில்லை. புலிகள் ஒன்றும் ஹம்பகாவை மீட்க ஹம்பகாவில் இராணுவ முகாம்களை தாக்கவில்லை. ஆனால் சிங்களவன்.. மொத்த நாட்டையும் தனது என்பதும்.. அதனை இலக்காகக் கொண்டு இராணுவத்தையும் சிங்களக் குடிப்பரம்பலையும்.. பெளத்த சின்னப் பரம்பல்களையும்.. அடாத்தாக மேற்கொள்வதும் தான்.. மேலாதிக்கமாக.. சிங்கள.. பெளத்த..பேரினவாதமாக..அமைகிறது.

 

அதேபோல்.. முஸ்லீம் தரப்புக்கள் சில மேற்கொள்ளும்.. இஸ்லாத்தின் பெயரிலான நில அபகரிப்புக்களும்.. மத அடிப்படைவாதம் சார்ந்ததாகும். தமிழர்களைப் பொறுத்த வரை அவர்கள்.. தங்களை நிலத்தை தங்களிடம் தாருங்கள். தங்கள் நிலத்தில்.. சொந்த உரிமையோடு.. ஆட்சி அதிகாரத்தோடு வாழ அனுமதியுங்கள் என்று தான் கேட்கிறார்கள். அது நியாயமான.. ஒன்று. அதனையும் சிங்கள பெளத்த.. பேரினவாதத்தையும்.. முஸ்லீம் மத அடிப்படை வாதங்களையும் ஒன்றென சிலர் காட்ட நினைப்பது அது அவர்களின் அறியாமை ஆகும். :icon_idea::)

Edited by nedukkalapoovan

இலங்கையின் அரசியலைப்பு சட்டம் என்ற புத்தகத்தில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பதை அறியும் ஆவலில் கேட்கிறேன்.

 

1. இசை சொன்ன அஸ்கிரிய பீடம் பற்றிய குறிப்பு அரசியலைப்பு சட்டத்தில் இருக்கிறதா? ஆம் எனில் exact text கொடுக்க முடியுமா? / அல்லது எந்த ஆர்டிகிள்?

 

2. ஒருவேளை தமிழர் ஒருவர் ஜனாதிபதியாக வந்துவிட்டால் அவர் புத்த மதத்திற்கு எதிரானவர் என்று யாரால் அவரை பதவியிறக்கம் செய்ய முடியும்? எந்தக் அளவுகோல் கொண்டு அதனை தீர்மானிப்பார்கள்??

 

3. அதிக அதிகாரம் கொண்டது பாராளுமன்றமா அல்லது நீதிமன்றமா ??

 

இந்தக் கேள்வி கேட்பதால் என்னையும் கும்மிடாதீங்க..... :)

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் அரசியலைப்பு சட்டம் என்ற புத்தகத்தில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பதை அறியும் ஆவலில் கேட்கிறேன்.

 

1. இசை சொன்ன அஸ்கிரிய பீடம் பற்றிய குறிப்பு அரசியலைப்பு சட்டத்தில் இருக்கிறதா? ஆம் எனில் exact text கொடுக்க முடியுமா? / அல்லது எந்த ஆர்டிகிள்?

 

2. ஒருவேளை தமிழர் ஒருவர் ஜனாதிபதியாக வந்துவிட்டால் அவர் புத்த மதத்திற்கு எதிரானவர் என்று யாரால் அவரை பதவியிறக்கம் செய்ய முடியும்? எந்தக் அளவுகோல் கொண்டு அதனை தீர்மானிப்பார்கள்??

 

3. அதிக அதிகாரம் கொண்டது பாராளுமன்றமா அல்லது நீதிமன்றமா ??

 

இந்தக் கேள்வி கேட்பதால் என்னையும் கும்மிடாதீங்க..... :)

 

1. அப்படியான குறிப்புகள் எதுவும் இல்லை. அது வெறும் மரபாகவே பின்பற்றப்படுகிறது. 

 

2. புத்த பிக்குகள் போராட்டம் நடத்தினால், அதனை ஆதாரமாகக் கொண்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து ஆளை வெளியேற்ற வழியிருக்கும் என்பது என் எண்ணம். இவ்வாறு இன்னும் நடைபெறவில்லை.

 

3. ஜனாதிபதி. 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் அரசியலைப்பு சட்டம் என்ற புத்தகத்தில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பதை அறியும் ஆவலில் கேட்கிறேன்.

 

1. இசை சொன்ன அஸ்கிரிய பீடம் பற்றிய குறிப்பு அரசியலைப்பு சட்டத்தில் இருக்கிறதா? ஆம் எனில் exact text கொடுக்க முடியுமா? / அல்லது எந்த ஆர்டிகிள்?

 

2. ஒருவேளை தமிழர் ஒருவர் ஜனாதிபதியாக வந்துவிட்டால் அவர் புத்த மதத்திற்கு எதிரானவர் என்று யாரால் அவரை பதவியிறக்கம் செய்ய முடியும்? எந்தக் அளவுகோல் கொண்டு அதனை தீர்மானிப்பார்கள்??

 

3. அதிக அதிகாரம் கொண்டது பாராளுமன்றமா அல்லது நீதிமன்றமா ??

 

இந்தக் கேள்வி கேட்பதால் என்னையும் கும்மிடாதீங்க..... :)

எனக்கு தொிந்த வரையில் உங்கள் முதலாவது கேள்விக்கு விடை அது ஒரு எழுதப்ாடாத விதி.ஆனால் மிகவும் வலியது.

இரன்டாவதுக்கு பதில்.அப்படி ஒரு அதிசையம் நடந்தால் அவர் தமிழர் என்பதை தவிர எந்த அழவு கோலும் தேவையில்லை இராணுவமே கவுத்துப்போடும்.

முன்றாவதுக்கு.தொியாது.  :(  :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.