Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகக்கிண்ணத்திற்கான உதைபந்தாட்டப் போட்டி 2014

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலகக் கோப்பைக் கால்பந்தாட்ட முதல் காலிறுதியில் ஜெர்மனி அபாரமாக விளையாடி பிரான்ஸ் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது.

ஆட்டத்தின் 12வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் மாட்ஸ் ஹமெல்ஸ் அடித்த கோலே வெற்றி கோலாக அமைந்தது. அதன் பிறகு பிரான்ஸின் தீவிரவில்லாத முயற்சிகளை ஜெர்மனி எளிதில் முறியடித்தது.

xGermany_wins_1983676h.jpg.pagespeed.ic.

 

மீண்டும் கோல் கீப்பர் நியூயர் அபாரம்:

ஆட்டம் காய நேரத்திற்குச் சென்றபோது பிரான்சிற்குக் கிடைத்த கடைசி நேர வாய்ப்பை முறியடித்தார் ஜெர்மனி கோல் கீப்பர் நியூயர். 90+3வது நிமிடத்தில் பிரான்ஸ் ஒரு திடீர் மூவைச் செய்ய பந்து இடது புறம் பென்சீமாவிடம் வந்தது பென்சீமா ஜெர்மனி வீரர்களின் நெருக்கடியிலும் ஒரு ஷாட்டை கோல் நோக்கி அடித்தார். அது சற்றே பலவீனமான ஷாட்டாக இருந்தாலும் கோல் நோக்கிச் சரியாக மேலெழுந்துச் சென்ற பந்தை கடைசி வரை எச்சரிக்கையாக இருந்த நியூயர் தட்டி விட்டார். கடைசி விசில் ஊதப்பட்டது. பிரெஞ்ச் ரசிகர்கள் அழுகை வரும் நிலையில் இருந்தனர்.

பிரான்ஸ் பாரம்பரிய கால்பந்து உத்தியை ஆடும் வீரர்களுக்கு முன்னுரிமை அளித்து களமிறக்கியது. முக்கியமான ஸ்ட்ரைக்கர் ஜிரூவை அவர்கள் ஆட்டம் முடிய 5 நிமிடங்கள் இருக்கும் போது களமிறக்கியதும், மற்றொரு இளம் ஸ்ட்ரைக்கரை அதற்கு சற்று முன்னால் களமிறக்கியதும் வர்ணனையாளர்களால் விமர்சனத்திற்குட் படுத்தப்பட்டது.

இடைவேளைக்கு முன்:

ஆட்டம் தொடங்கி 3வது நிமிடத்தில் சற்றே பதட்டத்தில் ஆடியது பிரான்ஸ். அந்த அணியின் சாகோ தவறான திசையில் ஒரு ஷாட்டை அடிக்க அங்கு அபாய ஜெர்மனி வீரர் தாமஸ் முல்லர் சிறிது நேரம் பிரான்ஸ் தடுப்பாட்ட வீரர்களின் வயிற்றில் புளியைக் கரைத்தார். ஆனால் கடைசியில் ஒருவழியாக பந்து அப்பகுதியை விட்டு விரட்டப்பட்டது.

7வது நிமிடத்தில்தான் உறைந்திருந்த பிரான்ஸ் மைதான் வெயிலில் சற்றே சூடு பெற்றது. இடது புறத்திலிருந்து அந்த அணியின் எர்வா கிராஸ் ஒன்றைச் செய்ய ஜெர்மனி அதனை கிளியர் செய்தது, ஆனால் மீண்டும் பந்து பிரான்சின் கட்டுப்பாட்டுக்குள் வர பந்தை ஜெர்மனி பாக்ஸிற்குள் கொண்டு சென்றது. அங்கு வால்பியூனா கால்களைத் திருப்பி பென்சீமாவிடம் அடிக்க அது பென்சீமாவை விட்டு சற்றே தள்ளிச் சென்றது. பயனில்லாமல் முடிந்தது அந்த மூவ்.

9வது நிமிடத்தில் ஜெர்மன் கோல் கீப்பர் நியூயர் அடித்த கோல் கிக்கை பியூடெங் வலது புறத்திலிருந்து வாங்கி முல்லரிடம் அடிக்க பந்தை கோலுக்கு 30 அடி முன்னால் வாங்கிய முல்லர் பிரான்ஸ் வீரர்களை கதிகலக்கி உள்ளே கொண்டு சென்றார். 3 பேர் முல்லரிடம் குவிந்தனர். அவரோ மிக அனாயசமாக பந்தை ஓசிலிடம் அடிக்க, அவர் கோலை நோக்கி அடித்த முயற்சி முறியடிக்கப்பட்டது.

ஜெர்மனி அடித்த கோல்:

ஆட்டத்தின் 12வது நிமிடத்தில் ஜெர்மனி பந்தை எடுத்து செல்ல பிரான்ஸ் கோலுக்கு இடது புறத்தில் பெனால்டிக்கு கொஞ்சம் தொலைவே ஜெர்மனிக்கு ஃப்ரீகிக் கிடைத்தது. ஜெர்மனி வீரர் குரூஸ் ஃப்ரீகிக்கை அடித்தார். அருமையான ஷாட்டான அது மேலாக பெனால்டி பகுதிக்குள் நின்று கொண்டிருந்த மாட்ஸ் ஹமெல்ஸ் தலைக்கு மேல் வர அங்கு அவரை மார்க் செய்திருந்த பிரான்ஸ் வீரர் வரானே என்பவருக்கு மேல் எம்பி பந்தை கோலுக்குள் தலையால் அடிக்கிறார். கோல் கீப்பர் வெறும் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது. ஜெர்மனி 1-0 என்று முன்னிலை பெற்றது.

33வது நிமிடத்தில் ஜெர்மனி கோல் கீப்பர் நியூயரின் அபார சேவ்:

பிரான்ஸ் வீரர் கிரீய்ஸ்மன் மேலாகத் தூக்கி அடிக்கப்பட்டப் பந்தை அபாரமாகக் கணித்து வேகமாக எடுத்து முன்னேறினார். பெனால்டிப் பகுதிக்குள் நுழைந்து வால்பியூனாவுக்கு அடிக்க, அவர் ஒரு பவுன்ஸில் வந்த பந்தை கோல் நோக்கி அடித்தார். அங்கே அது கோல்தான் என்று பிரான்ஸ் ரசிகர்கள் ஆவலுடன் பார்க்க அதனை ஜெர்மனி கோல் கீப்பர் நியூயர் பாய்ந்து தட்டி விட்ட்டார். ஆனால் பந்து பிரான்ஸ் வீரர் பென்சீமாவிடம் வர அவர் அதனை கோலாக மாற்ற முயற்சித்தார். ஆனால் கோலுக்கு 5 அடி முன்னதாக செய்யப்பட்ட இந்த முயற்சியை ஜெர்மனி வீரர் ஹமெல்ஸ் தடுத்து வெளியே அடித்தார். பிரான்ஸிற்கு கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அதனால் ஒரு பயனும் விளையவில்லை.40வது நிமிடத்தில் பிரான்ஸ் ஆட்டம் சற்றே உயிர் பெற்றது. அந்த அணியின் மட்டூய்டி இடது புறத்திலிருந்து பந்தை பென்சீமாவுக்கு அடிக்க கோலுக்கு 9 அடி முன்னால் இருந்த பென்சீமா தலையால் அடிக்க அதனை ஜெர்மனி தடுப்பு வீரர் ஹமெல்ஸ் முறியடித்தார்.

43வது நிமிடத்தில் பிரான்ஸ் விரர் போக்பா ஒரு நல்ல, நீண்ட பாசை அடிக்க அதனை பென்சீமா நீட்டாக எடுத்து வந்து இடது புறம் சில வீரர்களைக் கடந்து பந்தை கடத்தி வந்தார். ஆனால் 20 அடி முன்னாலிலிருந்து அவர் ஷாட் ஆட அதில் போதிய சக்தி இல்லை நியூயருக்கு எளிதான ஒரு சேவ் ஆக அது அமைந்தது.

இடைவேளை நேரத்தில் ஜெர்மனி 1-0 என்று முன்னிலை பெற்றிருந்தது. முதல் பாதியில் ஜெர்மனி கட்டுப்பாட்டில் பந்து 57% இருந்தது. பிரான்ஸ் 5 முறை கோல் முயற்சி செய்தது. ஆனால் இதெல்லாம் கோலுக்கான தீவிர முயற்சிகள் அல்ல. இதில் 3 ஷாட்கள் இலக்கு நோக்கி அடிக்கப்பட்டன. ஷாட்டில் சக்தி இல்லை. ஃபவுல்களில் பிரான்ஸ் 7, ஜெர்மனி 3. பிரான்ஸ் இருமுறை ஆஃப் சைடு செய்தது.

பிரான்ஸின் முயற்சிகளில் பெரும்பாலும் ஒரு காரியவாத நோக்கம் இருக்கவில்லை. சற்றே எதிர்மறையாக ஆடியது போல் தெரிந்தது.

இடைவேளைக்குப் பிறகு:

பிரான்ஸ் இப்போது உத்வேகம் பெற்று ஆடியது. ஆட்டத்தில் ஒரு காரியவாத நோக்கம் தெரிந்தது. 47வது நிமிடத்திலேயே வால்பியூனா ஒரு கிராஸ் செய்ய அது ஜெர்மனியினால் தடுக்கப்பட்டது ஆனால் பந்து மீண்டும் பிரான்ஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்தும் பயனில்லாமல் முடிந்தது.

ஜெர்மனி தேவையில்லாத ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று ஆடியது. பிரான்ஸ் கோல் அடிக்க நிச்சயம் செய்யும் முயற்சிகளில் தவறு செய்வார்கள் என்று விட்டுவிட்டது.

நடுவர் உதவி இருந்தும் கோல் அடிக்காத பிரான்ஸ்:

ஆட்டத்தின் 50வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் வால்பியூனா ஃப்ரீகிக் ஒன்றை எவ்ரா அதனை தலையால் வாங்கி அடிக்க முயன்று தோல்வியுற்றார். எவ்ராவுக்கு திடீரென அவ்வளவு சுதந்திரம் கிடைத்தது எவ்வாறு என்று ரீ-ப்ளே காட்டியது. அவர் மிகத் தெளிவாக ஆஃப் சைடு, ஆனால் நடுவர் கண்டு கொள்ளவில்லை. இது கோலாகியிருந்தாலும் அவர் அனுமதித்திருப்பார். ஆனால் எவ்ரா அந்த வாய்ப்பைத் தவறவிட்டார்.

பிரான்ஸ் அணி லாங் பாஸ்களை ஆடியது ஆனால் அவற்றைத் தெளிவாக வாங்க ஆளில்லை. இந்த இடத்தில்தான் ஜிரூ சிறந்தவர் என்று கருதப்பட்டது ஆனால் அவர் களமிறக்கப்படவில்லை. 54வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் கிரீய்ஸ்மெனை ஃபவுல் செய்த கேடிராவுக்கு மஞ்சள் அட்டைக் காண்பிக்கப்பட்டது.

56வது நிமிடத்தில் ஜெர்மனி ஒரு தாக்குதலைத் தொடுத்தது. முல்லர், லாமிற்கு ஒரு பாஸ் செய்ய அவர் ஷ்வெய்ன்ஸ்டெய்ஜருக்கு அடிக்க அவர் 25 அடியிலிருந்து மிக வெளியே அடித்து வாய்ப்பைத் தவறவிட்டார்.

மீண்டும் 61வது நிமிடத்தில் கெடிரா பிரெஞ்ச் வீரர்கள் ஃப்ரீயாக அவரை விட்டுவிட பந்தை சுலபமாக பிரெஞ்ச் பகுதிக்குள் எடுத்துச் சென்றார். மிகத் துல்லியமாக ஸ்ட்ரைக்கர் க்லோஸிற்கு பந்தை அடிக்க அவர் பந்தை எதிர்பார்க்கவில்லை மீண்டும் ஒரு வாய்ப்பு தவற விடப்பட்டது.

இந்தத் தவற விடுதலுக்குப் பிறகு க்லோஸை ஜெர்மன் பயிற்சியாளர் உள்ளுக்குள் அழைத்து அவருக்குப் பதிலாக மேலும் சுறுசுறுப்பான, அபாய விரர் ஷுயர்லியை களத்திற்கு அனுப்புகிறார்.

ஷுயர்லி பிரான்ஸ் வீரர்களையும் தடுப்பணைகளையும் கடுமையாக ஆட்டம் முழுதும் அச்சுறுத்தினார்.

76வது நிமிடத்தில் பிரான்சிற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அந்த அணியின் வரானே ஒரு அருமையான பாஸை காலி இடத்தில் அடிக்க அதனை ஸ்ட்ரைக்கர் ரெமி துரத்திச் சென்று தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். அது பென்சீமாவிடம் வர அவர் அருமையாக ஜெர்மன் தடுப்பாட்ட வீரரைக் கடந்து பந்தை ஷாட் அடிக்கும் முன்பு பிளாக் செய்யப்பட்டார்.

81வது நிமிடத்தில் ஓஜில் அருமையாக இடதுபுறம் பந்தை எடுத்துச் சென்று அருமையாக கோல் அருகேயிருந்த முல்லரிடம் அடித்தார் முல்லர் சறுக்கிக் கொண்டு வந்து கோலுக்குள் அடிக்க வேண்டிய பந்தை கோட்டை விட்டார். ஆனால் பந்து மற்றொரு ஜெர்மனி வீரர் ஷுயர்லியிடம் வர அவர் 14 அடிக்கு முன்னாலிலிருந்து மிகவும் சொத்தையாக ஒரு ஷாட்டை அடிக்க அதனை பிரான்ஸ் கோல் கீப்பர் லோரிஸ் எளிதில் பிடித்தார்.

அதன் பிறகு பிரான்ஸின் ஆட்டத்தில் உத்வேகம் இல்லை. 90+3வது நிமிடத்தில்தான் அந்த ஒரே வாய்ப்பு வந்தது அதையும் நியூயர் தடுத்து விட்டார். காரணம் ஷாட் பலவீனமாக அமைந்தது. பென்சீமாவின் ஷாட்டில் சக்தியில்லை.

90 நிமிடங்களுக்குப் பிறகு 4 நிமிடங்கள் 25 வினாடிகளுக்கு ஆட்டம் சென்றும் பிரான்ஸினால் சமன் செய்ய முடியவில்லை. யு.எஸ் அணி அன்று கடைசி நேரத்தில் போராடி ஒரு கோலை அடித்தது. அதுபோன்ற போராட்டம் பிரான்சிடம் இல்லை.

இந்த ஆட்டத்தின் தொடக்கத்தில் ஜெர்மனியை பிரான்ஸ் பழிதீர்க்குமா என்று பேசப்பட்டது. 1982ஆம் ஆண்டு ஸ்பெயினில் நடைபெற்ற உலகக் கோப்பைக் கால்பந்து அரையிறுதியில் ஜெர்மனியிடம் தோற்றது. அதற்கு இப்போது பழிதீர்க்குமா என்று எதிர்பார்க்கப்பட்டது. பேசப்பட்டது ஆனால் பழிதீர்ப்பெல்லாம் ஒன்றுமில்லை. ஆட்டத்தில் அத்தகைய உத்வேகமோ, நினைவோ இருந்ததாகத் தெரியவில்லை.

பிரான்ஸ் நிர்வாகத்தியின் உத்தியும் திருப்திகரமாக இல்லை. ஸ்ட்ரைக்கர் ஜிரூ மற்றும் ரெமியை கடைசி நேரத்தில் களமிறக்கியது நிச்சயம் அந்த அணி நிர்வாகத்தின் மீது விமர்சனங்களை தொடுக்க வழிவகை செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.

 

தி இந்து

  • Replies 561
  • Views 31k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மருத்துவ பரிசோதனையில் நெய்மருக்கு முதுகெலும்பில் லேசான முறிவு ஏற்பட்டு இருப்பது தெரிய  வந்துள்ளது .

நெய்மரின் உலக கோப்பை கனவு கால் இறுதியோடு முடிந்துவிட்டது. அவர் காயத்தால் விலகியது பிரேசில் அணிக்கு பெரும் பின்னடைவாகும்

பிரேசில் அணிக்கு முதல் கோலை பெற்று தந்தவர் தியாகோ சில்வா. கேப்டனான அவர் ஆட்டத்தின் 64–வது நிமிடத்தில் கொலம்பியா கோல்கீப்பரை இடித்து தள்ளும் விதமாக மோதினார்.

இதனால் அவர் நடுவரால் எச்சரிக்கை செய்யப்பட்டு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டார். 2–வது முறையாக அவர் மஞ்சள் அட்டையை பெற்றதால் ஜெர்மனி அணிக்கு எதிரான அரை இறுதியில் சில்வா ஆட முடியாது.

 

இந்த இரு வீரர்களின் இழப்பை பிரேசில் அணி எப்படிச் சரி செய்யும் என்பது கேள்விக்குறி.

 

இதே நேரத்தில் ஜேர்மனி அணியினர் மிகவும் திடமான நிலையில் இறுதி ஆட்டத்திற்குள் நுழைவதற்குத் தயாராகி வருகின்றனர். :D

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனிக்கு அடிச்சது லக்.. :huh: நேமார் தலைமையில் பிறேசில் அணி முயல் மாதிரி ஓடி எலும்பு முறிந்து உட்கார்ந்து விட்டது. :blink: இப்ப ஆமைவேக டப்பா கார்கள் முந்திவிடும் போலை இருக்கு.. :o:D

  • கருத்துக்கள உறவுகள்

இன்று நடக்கும் விளையாட்டில் அகன்ரினா அணி வெல்கியத்தை வெல்லும் என்று புப்பி என்ற செல்ல நாய் சொல்லி இருக்குது...............:D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகத்தில்......  தொழிற்சாலை, கார் புகை மூலம்,

மாசு அடையாத நாடு ஜேர்மனி, என்பதில்  பெருமை கொள்கின்கின்றேன்.

 

இவ்வளவிற்கும்... ஜேர்மனி.. உலகப் புகழ் பெற்ற, பல கார்களை தயாரிக்கும் நாடு.

 

கனடாவில், இடியப்பம்.... மூன்று சதத்துக்கு, வித்தலூம்..... எனக்கு, கவலை இல்லை.

 

 

pev_zps0d038eac.jpg

 

ஓம் க்ரீம்...கிரீம்.....

 

இடியாப்பங்களின் கொட்டம் அடக்க கொள்ளிவால் பிசாசு ஏவப்படுகின்றது... :D  :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனிக்கு அடிச்சது லக்.. :huh: நேமார் தலைமையில் பிறேசில் அணி முயல் மாதிரி ஓடி எலும்பு முறிந்து உட்கார்ந்து விட்டது. :blink: இப்ப ஆமைவேக டப்பா கார்கள் முந்திவிடும் போலை இருக்கு.. :o:D

 

இப்போதாவது இப்படி எழுதியதற்கு நன்றிகள் :D :D :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆர்ஜெண்டீனா எதிர் பெல்ஜியம் 60 நிமிடங்கள்  1:0

  • கருத்துக்கள உறவுகள்

எப்படிப் பார்த்தாலும் நெய்மர் விளையாட விட்டாலும் கோப்பை வெல்லப் போவது என்னவோ பிறேசில் தான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆர்ஜெண்டீனா எதிர் பெல்ஜியம்   1:0

  • கருத்துக்கள உறவுகள்

புப்பி சொல்லிட்டு கொலன் தான் வெல்லும் என்று :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னவோ கோஸ்ரா ரிக்கா தான் வெல்லும் போலை இருக்கின்றது. :)
ஆனால் கொலண்ட் தான் வெல்லவேணும் :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Download_zps43bead4e.jpg

 

நெய்மர் நலம்பெற ஆண்டவனை வேண்டுகின்றேன். நல்லதொரு விளையாட்டு வீரன். :(  :(  :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒல்லாந்து தனது புதிய நுட்பமுறையில் அடுத்த ஆட்டத்திற்கு தெரிவாகியுள்ளது. வாழ்த்துக்கள். :)

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னவோ கோஸ்ரா ரிக்கா தான் வெல்லும் போலை இருக்கின்றது. :)

ஆனால் கொலண்ட் தான் வெல்லவேணும் :D

 

வாத்தியார் பாவம் :(

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாத்தியார் பாவம் :(

 

 

 

எனக்கென்னவோ கோஸ்ரா ரிக்கா தான் வெல்லும் போலை இருக்கின்றது.  :)

ஆனால் கொலண்ட் தான் வெல்லவேணும்  :D

 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லூயிஸ் வன் காலின் அதிரடி உத்தியினால்

பனால்ட்டியில்திறமை படைத்த கோல் தடுப்பாளர் களமிறக்கப்பட்டு

கோஸ்ரா ரிக்காவை வீழ்த்தியது ஒல்லாந்து.

  • கருத்துக்கள உறவுகள்

புப்பி சொன்ன போலவே விளையாட்டு முடிவுகள் அமையுது........... :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் பாவம் :(

 

 

இப்ப பாவமில்லை

ஒல்லாந்து எதிர் ஜேர்மனி என  இறுதி ஆட்டம் வந்தால்

வாத்தியார் நிலைமை பரிதாம் தான் :D:lol::icon_mrgreen:

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

bia_zps72622f33.jpg

 

sivp_zps5c2f42e4.jpg

 

 

இணைபிரியா நண்பர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

mosaico-sosia-dadivluiz-thiagosilva2.jpg

  • கருத்துக்கள உறவுகள்

சென்ற முறை நாய் சோதிடம் பலித்தது போல் இந்த முறை ஜேர்மனிடம் பலிக்காது. ஜேர்மனி இன்று பிறேசிலுக்கு அடி குடுக்க வாழ்த்துக்கள்!!!!! GERMANY Vs BRAZIL today 21.00 hrs

  • கருத்துக்கள உறவுகள்

:D :D :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கேப்டன் சில்வா மீதான தடையை நீக்க பிரேசில் அணி கோரிக்கை
8b5f11d7-2c85-493c-9b69-dda3d34782f9_S_s

 

பிரேசில் அணி கேப்டன் தியாகோ சில்வா ஜெர்மனி அணிக்கு எதிரான அரை இறுதியில் ஆட முடியாது. 2 மஞ்சள் அட்டை பெற்றுள்ளதால் அரை இறுதியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது பிரேசில் அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதை தொடர்ந்து சில்வா தடையை எதிர்த்து சர்வதேச கால்பந்து சம்மேளனத்திடம் பிரேசில் அப்பீல் செய்துள்ளது. ஒழுங்கு நடவடிக்கை குழு தலையிட்டு தடையை நீக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

மாலைமலர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உந்தப் புப்பி பிரேசிலைப் பப்பாவில் ஏத்திவிட்டுக் கீழே விழுத்தப்போகின்றது. :D :D :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரேசில் அணிக்கு டேவிட் லுயிஸ் கேப்டன்

 

aa940f7d-254e-488d-8fb9-37e8a3dcf12e_S_s

உலக கோப்பை கால்பந்து போட்டியில் முதலாவது அரைஇறுதி ஆட்டம் இந்திய நேரப்படி நள்ளிரவு 1.30 மணிக்கு நடக்கிறது. இதில் பிரேசில்– ஜெர்மனி அணியின் பலப்பரீட்சை நடத்துகின்றன.

உலகின் தலைசிறந்த அணிகள் மோதும் ஆட்டம் என்பதால் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு மஞ்சள் அட்டை பெற்றதால் பிரேசில் அணி கேப்டனும், சிறந்த பின்கள வீரருமான தியாகோ சில்வா இன்றைய முக்கியமான ஆட்டத்தில் விளையாட முடியாது. கொலம்பியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் கோல் அடித்து இருந்தார். ஏற்கனவே காயம் காரணமாக நெய்மர் விலகி இருந்தார். இந்த இருவரும் ஆடாதது பிரேசில் அணிக்கு பின்னடைவாகும். சில்வா தடையை எதிர்த்து பிரேசில் அப்பீல் செய்கிறது.

இதற்கிடையே இன்றைய ஆட்டத்துக்கான பிரேசில் அணியின் கேப்டனாக டேவிட் லுயிஸ் செயல்படு கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் ஏற்கனவே துணை கேப்டனாக உள்ளார். கொலம்பியாவுக்கு எதிரான ஆட்டத்தில் மிகவும் அற்புதமாக பிரீகிக் அடித்த டேவிட் லுயிஸ் கேப்டன் பொறுப்பு பற்றி கூறும்போது, சவாலை சந்திக்க தயார். அணியில் இருக்கும் வீரர்கள் பணிவுடனும், நகைச்சுவை உணர்வுடனும் நடந்து கொள்வார்கள் என்பதால் அவர்களை வழிநடத்துவது எளிதானது என்றார்.

நெய்மர் இடத்தில் வில்லியன் களம் இறக்கப்படலாம். அதே நேரத்தில் பெர்னான்டினோவுக்கும் வாய்ப்பு உள்ளது. தியாகோ சில்வா இடத்தில் டான்டே இடம் பெறுவார்.

நெய்மர், சில்வா இல்லாததால் வீரர்களை தேர்வு செய்வதில் பயிற்சியாளர் ஸ்காலரிக்கு கடும் தலைவலி இருக்கும்.

மாலைமலர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.