Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இசைப்பிரியாவுக்கு அருகே இருப்பவர் மல்லாவியைச் சேர்ந்த குணசிங்கம் உசாலினி- பெற்றோர் உறுதிப்படுத்தினர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்- இணைப்பு - 2

Usalini_CI.png

முதற் பதிவேற்றம்- 19-05-2014 - 15:37

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் ஜந்தாம் ஆண்டின் நினைவு கூரல் காலப்பகுதியில் வெளியிடப்பட்ட போர்க்குற்ற சாட்சியப் புகைப்படத்திலுள்ள மற்றைய பெண்ணும் அடையாளம் காணப்பட்டுள்ளார். இறுதிப்போரில் இராணுவத்தினரால் உயிருடன் பிடிக்கப்பட்ட இசைப்பிரியாவுக்கு அருகில் இருப்பவர் மல்லாவியைச் சேர்ந்த குணலிங்கம் உஷாளினி என அவரது பெற்றோர் அடையாளப்படுத்தி உள்ளனர்.


இது தொடர்பில் உஷாளினியின் பெற்றோர் தெரிவிக்கையில் 'இறுதிப்போரின் போது நாம் முள்ளிவாய்க்காலுக்குச் சென்றிருந்தோம். அப்போது எமது மகள் உஷாளினி 2009 மே மாதம் முற்பகுதியில் காணாமற் போயிருந்தார். மீள் குடியேற்றத்தின் பின்னர் எமது மகள் காணாமற்போனமை தொடர்பாக பல்வேறு தரப்பினரிடமும் முறைப்பாடு செய்திருந்தோம். அண்மையில் கிளிநொச்சியில் நடைபெற்ற காணாமற்போனோரை கண்டறியும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிலும் சாட்சிகளைப் பதிவு செய்திருந்தோம். இந்த நிலையில் நேற்று ஊடகங்களில் வெளியாகிய புகைப்படத்தில் இசைப்பிரியா என்ற போராளிக்கு அருகில் எமது மகள் இருப்பதை நாம் அடையாளம் கண்டோம் என தெரிவித்துள்ளனர்.

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/107142/language/ta-IN/article.aspx

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இசைப்பிரியாவுடன் இருப்பது எங்கள் பிள்ளை : பெற்றோர்

 

கனகரத்தினம் கனகராஜ்

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற இறுதிப்போரின் போது இராணுவத்தினரால் உயிருடன் பிடிக்கப்பட்டதாக கூறப்படும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகத்துறையில் பணியாற்றிய சோபனா தர்மராஜா என்றழைக்கப்படும் இசைப்பிரியாவுக்கு அருகில் இருக்கின்ற மற்றைய யுவதி, முல்லைத்தீவு, மல்லாவியைச் சேர்ந்த குணலிங்கம் உஷாலினி என அவரது பெற்றறோர் தெரிவித்துள்ளனர்.

மற்றொரு யுவதியுடன் இசைப்பிரியாவின் புகைப்படம் ஊடகங்களில் வெளியானதை அடுத்தே அந்த புகைப்படத்தில் இருக்கின்ற மற்றைய யுவதி தங்களுடைய மகளென அவருடைய பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் அவருடைய பெற்றோரான குணலிங்கம், செல்வராணி தம்பதியர் தமிழ்மிரருக்கு தெரிவிக்கையில்;

இறுதிப்போரில் போது நாம் முள்ளிவாய்க்காலுக்குச் சென்றிருந்தோம். அப்போது எங்களது மகள் உஷாலினி, 2009 மே மாதம் முற்பகுதியில் காணாமற்போயிருந்தார். எங்களுடைய மகள் காணாமற்போனமை தொடர்பாக மீள்குடியேற்றத்தின் பின்னர் பல்வேறு தரப்பினரிடம்; நாம் முறைப்பாடு செய்திருந்தோம்.

காணாமற்போனோரை கண்டறியும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் கிளிநொச்சியில் நடத்தப்பட்ட விசாரணைகளின் போதும் இது தொடர்பில் சாட்சிகளைப் பதிவு செய்திருந்தோம்.

எங்களுக்கு இரண்டு மகள்களும் இரண்டு மகன்களும் இருந்தனர். இதில் எமது மூத்தமகள் உஷாலினி, கடந்த 1990ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் திகதி மல்லாவி யோகபுரத்தில் பிறந்தார். தரம் 6 வரையில் மல்லாவி பாலிநகர் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றுவந்த இவர், தொடர்ந்து கிளிநொச்சி மத்திய கல்லூரியில் தனது கல்வியினைத் தொடர்ந்தார்.

அவர் உயர்தரத்தில் கல்வி கற்றுக் கொண்டிருக்கையில், அதாவது 2008ஆம் ஆண்டு இறுதிக் காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைக்கப்பட்டார். வீட்டுக்கு ஒருவர் என்ற அடிப்படையில் புலிகள் அமைப்பில் இணைய வேண்டும் என்ற கொள்கைக்கு அமைவாகவே உஷாலினி, அவ்வமைப்பில் இணைக்கப்பட்டார்.

புலிகள் அமைப்பில் அவர் இணைக்கப்பட்டதன் பின்னர், மகளுடன் எங்களுக்கு இருந்த தொடர்பு குறைந்தது. இந்நிலையில் நாம் எங்கள் பிள்ளையினை 2009ஆம் ஆண்டு மே மாதம், முள்ளிவாய்க்கால் பகுதியில் சந்தித்தோம். அதன்பிறகு எங்கள் மகளை நாங்கள் காணவில்லை.

பின்னர் நாங்கள் 2009 மே 17ஆம் திகதி இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்து செட்டிக்குளம் மெனிக்பாம் முகாமில் தங்க வைக்கப்பட்டோம். அப்போதுகூட, எமது மகள் உயிருடன் இருக்கின்றாரா? இல்லையா? என்பது பற்றி அறியாமல் இருந்தோம். இதனால், வவுனியாவில் சர்வதேச செஞ்சிலுவை குழுவிலும் குருமங்காட்டிலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் எமது மகள் தொடர்பில் முறைப்பாடுகளை பதிவு செய்தோம்.

இந்நிலையில், கடந்த 2010ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் திகதி, எமது வீட்டுக்கு வந்த மல்லாவியைச் சேர்ந்த நபர் ஒருவர், உங்கள் மகள் உயிருடன் 4ஆம் மாடியில் இருக்கிறாள் என்றும் செலவிற்கும் விடுதலைக்குமாக பணம் தரும்படியும் கூறி மகள் கைப்பட எழுதிய கடிதமொன்றினை எங்களுக்கு காண்பித்தார்.

அதனை நம்பி நாங்கள் ஒரு இலட்சம் ரூபா பணமும் தோடு ஒன்றையும் அவரிடம் வழங்கினோம். இருந்தும் அதற்கான பயன் எதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையில், அண்மையில் கிளிநொச்சியில் இடம்பெற்ற காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் நாங்கள் எங்கள் மகள் பற்றி சாட்சியமளித்தோம்.

இந்நிலையில் இம்மாதம் 19ஆம் திகதி ஊடகங்களில் வெளியான புகைப்படத்தில்  இசைப்பிரியாவுடன் எமது மகள் இருப்பதை கண்டோம். அதன்பிறகே எங்கள் மகள் கொல்லப்படவில்லை என்றும் அவர் இன்னும் உயிருடன் இருக்கிறாள் என்பதனை அறிந்துகொண்டோம்.

இசைப்பிரியா கொல்லப்பட்டமையை புகைப்படங்கள் மூலம் அறிந்தோம். இருந்தும் எமது மகள் கொல்லப்படவில்லையென்றும் இன்னமும் எமது மகள் உயிருடன் இருக்கின்றாள் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

 

http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/111220-2014-05-20-15-48-11.html

  • கருத்துக்கள உறவுகள்

இசைப்பிரியாவுக்கு அருகே இருப்பவர் குணசிங்கம் உசாலினி-! -பெற்றோர் உறுதிப்படுத்தினர் !

 

 

image%28240%29.jpg​முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் ஜந்தாம் ஆண்டின் நினைவு கூரல் காலப்பகுதியில் வெளியிடப்பட்ட போர்க்குற்ற சாட்சியப் புகைப்படத்திலுள்ள மற்றைய பெண்ணும் அடையாளம் காணப்பட்டுள்ளார். இறுதிப்போரில் இராணுவத்தினரால் உயிருடன் பிடிக்கப்பட்ட இசைப்பிரியாவுக்கு அருகில் இருப்பவர் மல்லாவியைச் சேர்ந்த குணசிங்கம் உசாலினி என அவரது பெற்றோர் அடையாளப்படுத்தி உள்ளனர்.

இது தொடர்பில் உசாலினியின் பெற்றோர் தெரிவிக்கையில் ‘இறுதிப்போரின் போது நாம் முள்ளிவாய்க்காலுக்குச் சென்றிருந்தோம். அப்போது எமது மகள்  உசாலினி 2009 மே மாதம் முற்பகுதியில் காணாமற் போயிருந்தார். மீள் குடியேற்றத்தின் பின்னர் எமது மகள் காணாமற்போனமை தொடர்பாக பல்வேறு தரப்பினரிடமும் முறைப்பாடு செய்திருந்தோம். அண்மையில் கிளிநொச்சியில் நடைபெற்ற காணாமற்போனோரை கண்டறியும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிலும் சாட்சிகளைப் பதிவு செய்திருந்தோம். இந்த நிலையில் நேற்று ஊடகங்களில் வெளியாகிய புகைப்படத்தில் இசைப்பிரியா என்ற போராளிக்கு அருகில் எமது மகள் இருப்பதை நாம் அடையாளம் கண்டோம் என தெரிவித்துள்ளனர்.

 

07.01.1990 ஆம் ஆண்டு பிறந்த உசாலினி மல்லாவி பாலைநகர் மகா வித்தியாலயத்தில் 2008 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரத்தில் கல்வி கற்று வந்துள்ளார். எல்லோருடனும் அன்பாகவும் கலகலப்பாகவும் பழகுவார்.

அவரைப் பிடிக்காதவர்கள் எங்கள் பாடசாலையிலேயே இல்லை என்று கூறலாம். படிப்பிலும் நல்ல கெட்டிக்காரியாக விளங்கியவர்.

உசாலினியை செல்லமாக மச்சக்கன்னி என அழைப்போம். அவரின் இடது பக்க கன்னத்தில் பெரிய மச்சம் இருப்பதே அதற்கு காரணம் ஆகும்.

இராணுவத்திடம் சரணடைந்த இசைப்பிரியா உட்பட ஏராளமானவர்கள், கைகள் பின்புறமாகக் கட்டப்பட்ட நிலையில் துன்புறுத்தப்படுவது போன்ற காட்சிகள் அடங்கிய புகைப்படம் ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- See more at: http://vannimedia.com/site/news_detail/35004#sthash.A3jZPUQJ.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

இசைப்பிரியா.. உஷாலினி மற்றும் இளையோர் மற்றும் மக்களை மிகக் கொடூரமான முறையில் கொன்ற சிறீலங்கா இராணுவப் படைப்பிரிவு 53வது டிவிசன் ஆகும்.

The 53 Division of Sri Lanka Army reportedly captured Isaipiriya. The SL Defence Ministry had earlier claimed that the 53 Division had killed Isaipiriya at battlefront.

 

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=37223

அவர் உயர்தரத்தில் கல்வி கற்றுக் கொண்டிருக்கையில், அதாவது 2008ஆம் ஆண்டு இறுதிக் காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைக்கப்பட்டார். வீட்டுக்கு ஒருவர் என்ற அடிப்படையில் புலிகள் அமைப்பில் இணைய வேண்டும் என்ற கொள்கைக்கு அமைவாகவே உஷாலினி, அவ்வமைப்பில் இணைக்கப்பட்டார். :( 

  • கருத்துக்கள உறவுகள்

வந்திட்டார் ஒருத்தர் சுயவிளக்கம் கொடுக்க.

 

அவர் 2008ம் ஆண்டு.. அமைப்பில் இணைக்கப்பட்டு.. சண்டைக்கோ எங்கும் போகவில்லை. சிறிது காலத்திலேயே வீடு திரும்பி விட்டார்.

 

(news sources in Ki’linochchi told TamilNet Monday. The girl was not a LTTE fighter, although she had been recruited by the movement in 2008 for a few months, according to the relatives of the victim. )

 

சரணடைந்த.. போரில் காயப்பட்ட யாரையும் கொல்லக் கூடாது என்பது தான் ஜெனிவா போரியல் விதிகளை ஏற்றுக் கொண்டு ஐநாவால் அங்கீகரிக்கப்பட்ட நாடுகள் செய்ய வேண்டியது. போரின் இறுதிக் கட்டத்தில்.. ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைய உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தது. பொதுமக்களும்.. சரணடைய கேட்கப்பட்டிருந்தனர். ஆக.. முள்ளிவாய்க்காலில் சரணடைந்த அனைவரும் ஜெனிவா சரணடைதல்..போரியல் விதிக்குள் அடக்கப்படும் நிலையில்.. அவர்களை கொன்றது மகா தவறு மட்டுமன்றி.. அதனை வேறு எதனைக் கொண்டும் நியாயப்படுத்தல் மிகக் கீழ்த்தரமான செயலாகும்..!

 

சிறீலங்காவுக்கு அந்தக் கடப்பாடே தெரியவில்லை. ஐநா அதனை கண்காணிக்கத் தவறி உள்ளது. இந்தச் சம்பவம்.. ஒரு இன அழிப்புக்கான அடையாளங்களுடன் கூடிய கூட்டுப்படுகொலையாகும்...! இதனை சர்வதேச நாடுகள் இதய சுத்தியோடு விசாரிக்க வேண்டும்.

தமிழ் நெட் . :icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen:

நேற்று அவரின் தந்தையாரின் பேட்டி பி பி சி யில் கேட்டேன் .

 

சிங்கள அரசை பற்றி சொல்லி தெரிய தேவையில்லை.

புலிகள் பிடிக்காமல் இருந்திருந்தால் எத்தனயோ பேர் இப்ப வெளிநாட்டில் குழந்தை குட்டிகளுடன் இருந்திருப்பார்கள் . :(

  • கருத்துக்கள உறவுகள்

அப்படிப் பார்த்தால் புளொட் போன்ற ஒட்டுக்குழுக்களாலும்... இணைக்கப்பட்டு கொல்லப்பட்ட பலர் அன்று அப்படிச் செய்யப்பட்டிருக்காவிட்டால்.. வெளிநாட்டில் அசைலம் அடிச்சு பிள்ளை குட்டியோடு இருந்திருப்பார்கள். அதேபோல் சிங்களப் படையிலும் அப்பாவி சிங்கள இளைஞர்கள் படைக்கு கட்டாயமாக சேர்க்கப்பட்டிருக்காவிட்டால் அவர்களும் ஆயிரக்கணக்கில் செத்திருக்க வேண்டி வந்திருக்காது. அவர்களும் மத்திய கிழக்கு.. இத்தாலி.. கனடா.. லண்டன்.. அவுஸி என்று போய் வாழ்ந்திருப்பார்கள்.

 

இப்ப அதுவல்ல.. பிரச்சனை. நடந்த சம்பவங்களை மூடிமறைக்காமல்.. சர்வதேச சமூகம் வழங்கிய உத்தரவாதத்துக்கு அமைய சரணடைந்தவர்களை கொலை செய்தமை குறித்த விசாரணையும்.. குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதும்.. நீதியும் பெறப்படுதலே முக்கியம்.

 

புலிகள் ஆட்சேர்த்தார்கள் என்பதற்காக சரணடைந்தவர்களை சுட்டுக்கொல்ல வேண்டும்.. பாலியல் வன்புணர வேண்டும்.. மிலேச்சத்தனமாக நடத்த வேண்டும்.. என்ற சட்டம் எங்கும் நடைமுறையில் இல்லை..!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அவர் உயர்தரத்தில் கல்வி கற்றுக் கொண்டிருக்கையில், அதாவது 2008ஆம் ஆண்டு இறுதிக் காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைக்கப்பட்டார். வீட்டுக்கு ஒருவர் என்ற அடிப்படையில் புலிகள் அமைப்பில் இணைய வேண்டும் என்ற கொள்கைக்கு அமைவாகவே உஷாலினி, அவ்வமைப்பில் இணைக்கப்பட்டார். :( 

 

அர்ஜுன் அண்ணைக்கு இந்த விடயம் இப்போதுதான் தெரியும்???

பல நாடுகளில் ராணுவத்திற்குக் கட்டாயமாக ஆட்சேர்ப்பு நடத்துவதைச் சட்டமூலமாக்கியுள்ளனர்.

புலிகள் அங்கீகரிக்கப்படாத வகையில் நாட்டைத் தக்க வைத்த நேரத்தில் சட்ட்மூலம் ஆக்க முடியவில்லை.

சிங்களவன் இப்போதும் தமிழ் மக்களிடையே கட்டாய ஆட்சேர்ப்புத்தான் செய்கின்றான் அதைத் தட்டிக் கேட்க கழகக் கண்மணிகள் என் முன்வருவதில்லை :D

குத்து சண்டை சாம்பியன் முகமது அலி கட்டாய இராணு பயிற்சிக்கு போக மறுத்து சிறை சென்றது எல்லாம் யாம் அறியும் .

 

இன்று வாழ்வாதாரத்திற்கு வழியில்லாமல் எம்மவர் இராணுவத்தில் இணைவதும் அறிவோம்.

.

ஆனால் புலிகள் சிறுவர்களை இராணுவத்தில் எப்படி இணைத்தார்கள் என்பது நான் மட்டுமல்ல உலகமே அறியும் .

கடைசியில் அவர்களுக்கு நடந்தததை நினைத்து தான் எனக்கு இவ்வளவு கோவம் .

 

பிடித்தவர்களை விட பிடித்ததை நியாயப்படுத்திய புண்ணியவான்கள் இன்று தமது பிள்ளைகளுடன் விடுமுறை போக இடம் தேடுகின்றார்கள் என்று இன்னும் கோவம் .

 

எந்த இயக்கம் பிள்ளைகளை கடத்தினாலும் பிழை தான் அதை உரத்த சொல்லிக்கொண்டுதான் வந்தோம் ஆனால் புலி ஆதரவாளர்கள் மட்டும் மற்றவர்கள் கடத்தினால் பிழை புலி கடத்தினால் சரி என்பார்கள் .

உசாலினியும் இசைப்பிரியாவுடன் சேர்ந்து கொல்லப்பட்டு விட்டார். அது பற்றிய படங்களும் இணையத்தில் இருக்கிறதே! அந்த அப்பாவிப் பெற்றோர் மகள் இன்னமும் உயிருடன் இருப்பதாக சொல்கிறார்கள்.

ஒரு சகோதரியை கொடூரமாக இழந்த அந்தகுடும்பத்தின் நிலை சில வியாதி பிடிச்சவர்களுக்கு புரிவதில்லை.. வெறும் காழுபுணர்ச்சி மட்டும் கொண்டு கொடூர மனம் கொண்ட கூட்டம்...

அவர் உயர்தரத்தில் கல்வி கற்றுக் கொண்டிருக்கையில், அதாவது 2008ஆம் ஆண்டு இறுதிக் காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைக்கப்பட்டார். வீட்டுக்கு ஒருவர் என்ற அடிப்படையில் புலிகள் அமைப்பில் இணைய வேண்டும் என்ற கொள்கைக்கு அமைவாகவே உஷாலினி, அவ்வமைப்பில் இணைக்கப்பட்டார். :( 

 

இப்படி கனக்க சொல்லாம் அண்ணை....    

 

நீங்கள் எல்லாம் தூண்டி விட்டாமல் இருந்து இருந்தால் பலர் புளட்டில் சேர்ந்து இருந்து இருக்க மாட்டார்கள்...    ஒற்றுமையாக இருப்பது என்ன எண்டதை  சரியாக நீங்கள் எல்லாம் கடைப்பிடிச்சு இருந்தால்  பிரபாகரனை துவக்கை தூக்கி தலையில் வைத்தி மிரட்டி துரத்தி இருந்து இருக்க மாட்டார்கள்... 

 

நீங்கள் எல்லாம் பொய் பிரச்சாரம் செய்து ஆள் சேர்க்காமல் விட்டு இருந்தால் புளட்டில் 6000 பேர் சேர்ந்து இருக்க மாட்டார்கள்...  அப்படி பலர் சேராமல் விட்டு இருந்தால் கைகளில்  நிறைய ஆயுதங்கள் வந்திருக்காது...  

 

அப்படி ஆயுதங்கள்  சேராமல் போய் இருந்தால் பல இயக்கங்களாக புளட் பிளவு பட்டு இருந்து இருக்காது...   அப்படி பிளவு படாமல் இருந்து இருந்தால்   சகோதர போர் நடந்தே இருந்து இருக்காது... !!

 

புளட்டுக்கு  தலைவராக இருந்து இருக்காவிட்டால் உமாமகேஸ்வரன் கொல்லப்பட்டு இருந்து இருக்க மாட்டார்... !!  

 

இப்பிடி உங்கட ஊத்தகளை இன்னும் கழுவி கழுவி ஊத்தலாம்  பாருங்கோ....   25 வருசம் களிச்சு இன்னும் நாறுது...

Edited by தயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.