Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நைஜீரியாவில் போகோஹராம் தீவிரவாதிகள் மீண்டும் கைவரிசை. கார் வெடிகுண்டு வெடித்து 118 பேர் பலி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நைஜீரியாவில் போகோஹராம் தீவிரவாதிகள் மீண்டும் கைவரிசை. கார் வெடிகுண்டு வெடித்து 118 பேர் பலி.

cfa5da0026babb98c4dca95935589f42.jpg?resகடந்த மாதம் 300 நைஜீரிய பள்ளி மாணவிகளை கடத்திய போகோஹராம் தீவிரவாதிகள் மீது போர் நடவடிக்கை எடுக்க நைஜீரியா உள்பட நான்கு ஆப்பிரிக்க நாடுகள் முடிவு செய்திருப்பதாக நேற்று செய்திகள் வெளியாகின. இதனால் ஆத்திரமடைந்த போகோஹராம் தீவிரவாதிகள் நேற்று நைஜீரிய நகரம் ஒன்றில் அடுத்தடுத்த இரண்டு கார் வெடிகுண்டுகளை வெடிக்க வைத்து பழிவாங்கினர். இந்த பயங்கர தாக்குதலில் 118 பேர் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன. பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

நைஜீர்யாவின் முக்கிய நகரமான Jos என்னும் நகரில் நேற்று மாலை அடுத்தடுத்து வெடித்த இரண்டு கார் குண்டுகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முதல் வெடிகுண்டு வெடித்த அரைமணி நேரத்தில் அடுத்த குண்டு வெடித்ததால் பொதுமக்களிடையே பெரும் பீதி நிலவியது. மீட்புப்படையினர்களும், போலீஸார்களும் காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 100க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி வருகின்றனர். Jos  நகர மருத்துவமனை முழுவதும் ஒரே ரத்தமாக இருப்பதாக செய்திகள் கூறுகின்றன.

வெடிகுண்டு வெடித்த இடம் போர்க்களமாக காட்சி தருகிறது. முதலில் வெள்ளை நிற வேனில் இருந்த வெடிகுண்டு வெடித்ததாகவும், அடுத்த அரைமணி நேரத்தில் சிறிது தூரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றில் இருந்த வெடிகுண்டு வெடித்ததாகவும் கூறப்படுகிறது. நைஜீரியாவில் போகோஹராம் தீவிரவாத இயக்கத்தால் மட்டுமே இந்த வருடத்தில் சுமார் 2000 பேர் வரை பலியானதாக கூறபப்டுகிறது.

http://itamilweb.com/?p=20355

  • கருத்துக்கள உறவுகள்

நைஜீரியாவுக்கு.. உதவி செய்யுறம் என்று கொண்டு.. ஸ்பை பிளேனை தூக்கிக் கொண்டு.. ஓடின.. அமெரிக்கா.. பிரிட்டன்.. பிரான்ஸ் இவை தான்.. இந்தக் கொலைகளுக்குக் காரணம்.

சும்மா கிடந்தவனை உசுப்பேத்தி அழிக்கிறம் ஒழிக்கிறம் என்று கதையளக்க வெளிக்கிட்டுத்தான் இந்த நிலை..!

பேச்சுக்கள் மூலம்.. பிரச்சனையை தீர்க்கும் இதய சுத்தி உள்ள வழிமுறைகளை அமெரிக்க வல்லாதிக்க சக்திகள் இப்போதெல்லாம் விரும்புவதில்லை. உடன அடிதடி..! இந்தப் வல்லாதிக்கப் பயங்கரவாதம் தான்.. மற்றவர்களையும் வன்முறை வழியை நாட வகை செய்கிறது. அனைத்துவிதமான இந்த வல்லாதிக்கப் பயங்கரவாதத்தை அழிக்காமல்.. உலகில் பயங்கரவாதத்தையோ வன்முறையையோ கட்டுப்படுத்த முடியாது..!

நைஜீரியாவில் நடப்பது முதல்தரமான பயங்கரவாதம். இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் பயங்கரவாதம் தான் அங்கு தலைவிரித்தாடுகின்றது. கிறிஸ்தவர்களுக்கு எதிராகவும் பெண் பிள்ளைகள் பாடசாலைக்கு செல்வதற்கு எதிராகவும் இயங்கும் அடிப்படைவாத பயங்கரவாத அமைப்பான Boko Haram இனை அழித்தொழிப்பதில் எந்த தவறும் இல்லை.

இப்படியான இரத்த வெறி பிடிச்ச முஸ்லிம் பயங்கரவாதிகளின் நடவடிகைகளால் தான் நியாயமான காரணங்களுக்காக போராடும் விடுதலை இயக்கங்களுக்கும் எதிரான போக்கு உலகில் உருவானது.  ஒரு விடுதலை அமைப்புக்கும் Boko Haram போன்ற பயங்கரவாத இயக்கங்களுக்கும் இடையில் மலையளவு வேறுபாடுகள் உள்ளன,

முஸ்லிம் / இஸ்லாமிய அடிப்படை பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா + மேற்கு நாடுகள் எடுக்கும் அனைத்து இராணுவ நடவடிக்கைகள் அனைத்துக்கும் நான் ஆதரவு கொடுக்கின்றேன். 

உலகில் இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதம் பூண்டோடு அழிக்கப்பட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
இப்படியான இரத்த வெறி பிடிச்ச முஸ்லிம் பயங்கரவாதிகளின் நடவடிகைகளால் தான் நியாயமான காரணங்களுக்காக போராடும் விடுதலை இயக்கங்களுக்கும் எதிரான போக்கு உலகில் உருவானது.  ஒரு விடுதலை அமைப்புக்கும் Boko Haram போன்ற பயங்கரவாத இயக்கங்களுக்கும் இடையில் மலையளவு வேறுபாடுகள் உள்ளன.

இதனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அமெரிக்கா பிரிட்டன் பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு எது இஸ்லாமிய பயங்கரவாதம்.. எது விடுதலைப் போராட்டம்.. எதில் நியாயம் உள்ளது.. என்ற அனைத்தும் தெரியும். தெரியாமல் அவர்கள் முடிவெடுக்கிறார்கள் என்பது சுத்தப் பொய். ஏதோ அவர்கள் ஒன்றும் அறியாத பாப்பாக்கள் என்று காட்டுவது போன்றது.

நைஜீரியாவில்.. கிளர்ச்சி செய்யும் அதே மாதிரித்தான்.. லிபியாவிலும்.. சிரியாவிலும்.. கிளர்ச்சி செய்தார்கள். அதனை மேற்குலகம் பயங்கரவாதமாகக் கருதவில்லை. அரசுகளுக்கு எதிரான புரட்சியாகக் கருதியது. காரணம்.. எண்ணை வளத்தை தங்கள் வசப்படுத்த.

அதேபோல்.. நைஜீரியாவிலும்.. அடிக்கடி.. இஸ்லாமிய தீவிரவாதிகள் அதன் எண்ணை வளத்தை மையப்படுத்தி தாக்குதல் நடத்தி வந்த நிலையில்... இவ்வளவு காலமும் இல்லாத அக்கறை அமெரிக்காவுக்கு இப்போ அங்கு தோன்றி உள்ளது.

அங்கே சீனாவும் உள்ளது.

இந்த கடத்தலுக்கு காரணமே மேற்குலக அணுகுமுறைகள் தான். இந்த அழிவுக்கு காரணமும் அதுதான்.

தங்களின் சுயலாபத்திற்காக பயங்கரவாதம் என்பதை விபரிப்பதும்.. பயன்படுத்துவதும் மேற்குலக நாடுகள் செய்யும் தவறே அன்றி.. இவை எந்த மக்களாலும் விரும்பி வளர்க்கப்படுவதாகத் தெரியவில்லை..!

ஈராக்கை அடிச்சு நொருக்கப் போய் அது இன்று... பல இலட்சம் மக்களின் அழிவோடு.. தினமும் அழிந்து கொண்டிருக்கிறது...??! இது சதாமின் தவறு என்றால் அவர் சாகடிக்கப்பட உடன் அது முடிவுக்கு வந்திருக்க வேண்டும். அவர் சாகடிக்கப்பட்ட பின் தான் அதிக மரணங்கள் நிகழ்ந்துள்ளன. ஆகவே தவறு யாருடையது..??!!

அதேபோல்.. லிபியா. அதேபோல் எகிப்த். எங்கும் வன்முறையும் சாவுகளும்.

உக்ரைனிலும் கூட.. தங்களுக்கு வசதியான.. கிளர்ச்சிக்காரர்கள் கையில் ஆட்சியை தூக்கிக் கொடுத்திட்டு.. இப்போ.. ரஷ்சியா அதையே மாற்றி இவர்களுக்கு எதிராகச் செய்ய.. சண்டை இட்டு சாகச் சொல்லி விட்டிருக்கிறார்கள்.

இதில் யார் கொடிய பயங்கரவாதிகள்..????! இஸ்லாமிய மதவாதிகளா...??! அமெரிக்க  மேற்குலக வல்லாதிக்க சக்திகளா..???!

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் உங்களுடைய லாஜிக் சரியில்லை அப்பு. முஸ்லீம் மதவாதிகளின் அப்பட்டமான ஒரு பயங்கரவாத செயலை கண்டிப்பதை தவிர்த்து நீங்கள் எதோ அவர்கள், மற்றும் தலிபானுகள் போன்றவர் எம்மவரை போல் கொள்கை குறிக்கோளுடன் போராடுவதை போலவும், அதனை தடுக்கும் மேற்குலக நாடுகளை வில்லன்கள் போலவும் எழுதி உள்ளீர்கள். வரலாற்றில் நிறைய இடங்களில் அமெரிக்க தான்தோன்றிதனமாக முடிவுகளை எடுத்து அழிவுகளை ஏற்படுத்தி இருக்கிறதை நானும் ஏற்றுக்கொள்கிறேன். அனால் இந்த முஸ்லீம் மதவாதிகளின் ஞாயம் அற்ற பாதக செயல்களுக்கு  எதிராக அமெரிக்கா + மேற்கு நாடுகள் எடுக்கும் அனைத்து இராணுவ நடவடிக்கைகள் அனைத்துக்கும் நான் ஆதரவு கொடுக்கின்றேன் :)  :)

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்கானிஸ்தானில் தானே வளர்த்த அல்கைடாக் குழுத்தான் அமெரிக்காவின் மார்பிலே பாய்ந்தது:
அதைப்போலவே இந்த நைஜீரியப் பயங்கரவாதிகளை வளர்த்து விட்டத்திலும் மேற்குலகிற்கு நிறையப் பங்கு உள்ளது:
ஆயுத விற்பனை மூலமே தனது வருமானத்தில் 50 வீதத்திற்கு மேலாக வருவித்துக்கொள்ளும் மேற்குலகம் அப்பாவிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

  மிகக் கொடிய இஸ்லாமிய தீவீரவாதிகள்

  • கருத்துக்கள உறவுகள்

நாம் என்னவும் சொல்லலாம்

ஆனால் அங்குள்ள  மக்கள் என்ன  சொல்கிறார்கள்???

அது தான் முக்கியம்

புலிகளையும் இவ்வாறு தான் சிறீலங்கா  படம் காட்டினார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நாம் என்னவும் சொல்லலாம்

ஆனால் அங்குள்ள  மக்கள் என்ன  சொல்கிறார்கள்???

அது தான் முக்கியம்

புலிகளையும் இவ்வாறு தான் சிறீலங்கா  படம் காட்டினார்கள்

அவர்களின் கொள்கை இஸ்லாம் மதம் மட்டுமே

இஸ்லாமியச் சட்டப்படி நாடுமுழுவதும் ஒழுங்கமைக்கப்படவேண்டும் என்ற முறையில் போராடுகின்றனர்.

குரானை மையமாகக் கொண்ட சரியா என்கின்ற சட்டத்தினை எந்தவிதமான கேள்விகளும் இன்றி ஏற்றுக்கொள்ள வேண்டும். அதனை எதிர்ப்பவர்கள் துரோகிகள் ஆக்கப்பட்டுக் கொல்லப்படுவர்.

எந்த நாட்டில் வாழும் மக்களும் மதத்தின் போர்வையில் அடக்கப்படுவதற்கு ஒத்துழைப்பு வழங்கக்கூடாது.

ஆனால் மேற்குலகம் முகவர்கள்  மூலம் தங்கள் ஆயுத விற்பனையை ஊக்கிவித்து இப்படியான பயங்கரவாதிகளை வளர்த்துவிட்டிருப்பது கவலைக்குரியதே

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் உங்களுடைய லாஜிக் சரியில்லை அப்பு. முஸ்லீம் மதவாதிகளின் அப்பட்டமான ஒரு பயங்கரவாத செயலை கண்டிப்பதை தவிர்த்து நீங்கள் எதோ அவர்கள், மற்றும் தலிபானுகள் போன்றவர் எம்மவரை போல் கொள்கை குறிக்கோளுடன் போராடுவதை போலவும், அதனை தடுக்கும் மேற்குலக நாடுகளை வில்லன்கள் போலவும் எழுதி உள்ளீர்கள். வரலாற்றில் நிறைய இடங்களில் அமெரிக்க தான்தோன்றிதனமாக முடிவுகளை எடுத்து அழிவுகளை ஏற்படுத்தி இருக்கிறதை நானும் ஏற்றுக்கொள்கிறேன். அனால் இந்த முஸ்லீம் மதவாதிகளின் ஞாயம் அற்ற பாதக செயல்களுக்கு  எதிராக அமெரிக்கா + மேற்கு நாடுகள் எடுக்கும் அனைத்து இராணுவ நடவடிக்கைகள் அனைத்துக்கும் நான் ஆதரவு கொடுக்கின்றேன் :)  :)

இஸ்லாமிய மதப் பயங்கரவாதத்தை ஊட்டி வளர்த்ததே அமெரிக்கா தான்.

தலிபான்களை ரஷ்சியர்களுக்கு எதிராக உருவாக்கியதே இவர்கள் தான்.

அதேபோல்.. ஒசாமாவை உருவாக்கியதும் இவர்கள் தான். ஒசாமா ஒன்றும் சோமாலியாவில் இருந்து உருவாகவில்லை. அமெரிக்காவின் செல்லப்பிள்ளை சவுதி பெற்றெடுத்து உருவாக்கின ஒருவர்.

அமெரிக்காவின் அணுகுமுறைகள் தான் செப் 11 தாக்குதலுக்கும் வித்திட்டது.

ஆனால் அதில் 2000 பேர் உயிர் இழந்திருந்தால்.. அதன் பின்னர் இலட்சக்கணக்கான மக்கள் அமெரிக்காவால் அதன் நேசப்படைகளால்.. கொல்லப்பட்டுள்ளார்கள்.

இஸ்லாமிய மத அடிப்படைவாதம் ஒரு வெறி. அது மனித உயிர்கள் பற்றி கிஞ்சிதமும் அக்கறைப்பட்டதில்லை. ஆனால் அதற்கு நிகரானதே அமெரிக்க வல்லாதிக்க பயங்கரவாதமும். அது மட்டும் இலேசுப்பட்டதல்ல. தனது தேவையின் முன் அது கோடிக்கணக்கானவர்களையும் பலியிடத் தயங்காது.

அந்த வகையில் இந்த இரண்டுமே மிகவும் கண்டிக்கத்தக்க பயங்கரவாதங்களாகும்.

இவற்றை வன்முறையால் அன்றி.. இதய சுத்தி உள்ள நேர்மையான..பேச்சுக்கள்.. புரிந்துணர்வுகள் மூலம் முடிவுக்கு கொண்டு வருவதே அப்பாவி மக்களின் உயிர்களை.. உரிமைகளை காக்கவும்.. அமைதி மீது நம்பிக்கை வரவும் செய்யும்..! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இதனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அமெரிக்கா பிரிட்டன் பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு எது இஸ்லாமிய பயங்கரவாதம்.. எது விடுதலைப் போராட்டம்.. எதில் நியாயம் உள்ளது.. என்ற அனைத்தும் தெரியும். தெரியாமல் அவர்கள் முடிவெடுக்கிறார்கள் என்பது சுத்தப் பொய். ஏதோ அவர்கள் ஒன்றும் அறியாத பாப்பாக்கள் என்று காட்டுவது போன்றது.

நைஜீரியாவில்.. கிளர்ச்சி செய்யும் அதே மாதிரித்தான்.. லிபியாவிலும்.. சிரியாவிலும்.. கிளர்ச்சி செய்தார்கள். அதனை மேற்குலகம் பயங்கரவாதமாகக் கருதவில்லை. அரசுகளுக்கு எதிரான புரட்சியாகக் கருதியது. காரணம்.. எண்ணை வளத்தை தங்கள் வசப்படுத்த.

அதேபோல்.. நைஜீரியாவிலும்.. அடிக்கடி.. இஸ்லாமிய தீவிரவாதிகள் அதன் எண்ணை வளத்தை மையப்படுத்தி தாக்குதல் நடத்தி வந்த நிலையில்... இவ்வளவு காலமும் இல்லாத அக்கறை அமெரிக்காவுக்கு இப்போ அங்கு தோன்றி உள்ளது.

அங்கே சீனாவும் உள்ளது.

இந்த கடத்தலுக்கு காரணமே மேற்குலக அணுகுமுறைகள் தான். இந்த அழிவுக்கு காரணமும் அதுதான்.

தங்களின் சுயலாபத்திற்காக பயங்கரவாதம் என்பதை விபரிப்பதும்.. பயன்படுத்துவதும் மேற்குலக நாடுகள் செய்யும் தவறே அன்றி.. இவை எந்த மக்களாலும் விரும்பி வளர்க்கப்படுவதாகத் தெரியவில்லை..!

ஈராக்கை அடிச்சு நொருக்கப் போய் அது இன்று... பல இலட்சம் மக்களின் அழிவோடு.. தினமும் அழிந்து கொண்டிருக்கிறது...??! இது சதாமின் தவறு என்றால் அவர் சாகடிக்கப்பட உடன் அது முடிவுக்கு வந்திருக்க வேண்டும். அவர் சாகடிக்கப்பட்ட பின் தான் அதிக மரணங்கள் நிகழ்ந்துள்ளன. ஆகவே தவறு யாருடையது..??!!

அதேபோல்.. லிபியா. அதேபோல் எகிப்த். எங்கும் வன்முறையும் சாவுகளும்.

உக்ரைனிலும் கூட.. தங்களுக்கு வசதியான.. கிளர்ச்சிக்காரர்கள் கையில் ஆட்சியை தூக்கிக் கொடுத்திட்டு.. இப்போ.. ரஷ்சியா அதையே மாற்றி இவர்களுக்கு எதிராகச் செய்ய.. சண்டை இட்டு சாகச் சொல்லி விட்டிருக்கிறார்கள்.

இதில் யார் கொடிய பயங்கரவாதிகள்..????! இஸ்லாமிய மதவாதிகளா...??! அமெரிக்க  மேற்குலக வல்லாதிக்க சக்திகளா..???!

உங்களிடமிருந்து இப்படியொரு கருத்தை எதிர்பார்க்கவில்லை.

போக்கோ ஹராம் பயங்கரவாதிகளையும், கிளர்ச்சிக் குழுக்களையும் ஒரே தட்டில் நீங்கள் வைத்துப் பார்த்ததைத்தான் சொல்லுகிறேன்.

நைஜீரீயாவில் மேற்குலக கல்வி வேண்டாம், பெண்கள் பாடசாலைக்குப் போகக் கூடாது, சரியா என்கிற இஸ்லாமியச் சட்டம் வேண்டும் என்று கோரி ஆயிரக்கணக்கான அப்பாவிக்ளைக் கொன்று வருகிறது போக்கோ ஹராம் இதில் எந்த இலட்சியம் உங்களுக்கு உன்னதமாகத் தோன்றியது என்பது எனக்குப் புரியாத புதிராக இருக்கிறது.

270 பெண்பிள்ளைகளைக் கடத்திக்கொண்டுபோய் , அவர்களைக் கட்டாய மதமாற்றம் செய்துவிட்டு, தமது சகாக்களை விடுதலை செய்யவில்லையென்றால், அந்தப் பிள்ளைகள் ஒவ்வொருவரையும் அடிமைகளாக மற்றைய நாடுகளுக்கு விற்கப்போகிறோம் என்று ஒரு அமைப்புக் கூறுவது உங்களுக்கு கிளர்ச்சியாகவும், விசுகருக்கு மக்களின் போராட்டமாகவும் தெரிகிறது.

நீங்கள் சொன்ன ஈராக்கிய லிபிய பிரச்சினைகளில் அமெரிக்காவோ அல்லது மேற்குலகமோ தலையிட்டதன் காரணம் சரியாக இருந்தாலும் கூட, அங்கு இன்றும் மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்படுவது இஸ்லாமியப் பயங்கரவாதத்தாலன்றி அமெரிக்காவினாலோ அல்லது வேறெந்த மேற்குலக நாட்டினாலோ அல்ல. அமெரிக்காவின் படையெடுப்பின்மூலம் ஏற்படுத்தப்பட்ட அதிகார வெற்றிடத்தை அல்கொயிடா போன்ற இஸ்லாமிய மத அடிப்படைவாத பயங்கரவாதிகள் நிரப்பிக் கொள்கின்றன. ஈராக், லிபியா போன்ற நாடுகளில் இன்று நடப்பது அதுதான். சிரியாவிலும் இந்த நிலமை ஏற்பட இருந்த நிலமை மாறி இப்போது ஆசாத்தின் கையோங்கி வருகிறது. ஏனென்றால் சிரியாவில் ஆசாத்துக்கெதிராகப் போராடிவரும் குழுக்களில் பெரும்பாலானவை ஒன்றில் அல்கொய்தாவின் பக்க அமைக்களாகவோ அல்லது அதனைக் காட்டிலும் கொடிய அமைப்பான ISIS என்கிற பரந்த ஈராக்கிய - சிரிய இஸ்லாமிய தேசம் என்றழைக்கப்படும் ஒரு பயங்கரவாத அமைப்பாகவோதான் இருக்கின்றன. இதன் கராணமாகவே ஆரம்பத்தில் கிளர்ச்சிக்காரருக்கு இருந்த மேற்குலக ஆதரவு இப்போது மங்கி வருகிறது.

முதலில் விடுதலைப் போராட்டம் ஒன்றிற்கும் மத அடிப்படைவாதத்துடனான கண்மூடித்தனமான பயங்கரவாதத்திற்கும் இடையிலான வேறுபாட்டை விளங்கிக் கொள்ளுங்கள்.

அமெரிக்கா எங்கு போனாலும் எண்ணெய்க்காகத்தான் போகிறதென்னும் உங்கள் எண்ணம் சிலவேளை சிரிக்க வைக்கிறது. போக்கோ ஹராம் நைஜீரியாவில் தோன்றுவதற்கு பல்லாண்டுகளுக்கு முன்பே அங்கே எண்ணெய் வளம் இருப்பது அமெரிக்காவிற்குத் தெரியும். ஆனால் இப்போதுதான் அந்த எண்ணெய் வளத்தைக் கண்டுபிடித்து அங்கே ஊடுருவப் பார்க்கிறதென்று நீங்கள் சொல்லுவது நகைச்சுவை.

போக்கோ ஹராம் முற்றாக அழிக்கப்பட வேண்டும். மனித உயிரைத் துச்சமென மதித்து அப்பாவிகளைக் கொடுமைப்படுத்தும் எந்த அமைப்பும் தண்டிக்கப்பட வேண்டும், அது கிளர்சிக்குழுவாக இருந்தாலென்ன, அல்லது வெறும் பயங்கரவாதமக இருந்தாலென்ன.

எமது வசதிக்காக எம்மால் நடத்தப்பட்ட அப்பாவிகள் மீதான தாக்குதல்களையும் படுகொலைகளையும் இதுவரை கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்ததுபோல இனியும் இருக்கவேண்டாம். அதற்கான தண்டனையை நாம் இன்று பார்த்தாயிற்று. நாம் அழிக்கப்படுவதற்கு அதுவும் ஒரு காரணம் என்பதை நாம் இன்னமும் புரிந்துகொள்ளவில்லை. 

எந்த மதத்தின் பேராலோ அல்லது இனத்தின்பேராலோ நடத்தப்படும் பயங்கரவாதத்தை ஆதரிப்பதை நிறுத்துவோம். கொல்லப்படுவது எதிரி இனமாக இருந்தாலும் கூட, படுகொலை படுகொலைதான், பயங்கரவாதம் பயங்கரவாதம் தான். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நைஜீரியாவில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 4 மாணவிகள் தப்பி வந்தனர்

நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள சிபோக் கிராமத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் தேர்வு எழுத சென்ற 276 மாணவிகளை கடந்த மாதம் 14-ந்தேதி போகோ ஹரம் தீவிரவாதிகள் வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றனர். இதில் 53 மாணவிகள் ஏற்கனவே தப்பி வந்துவிட்டனர்.

கடத்தப்பட்ட மாணவிகளை மீட்கும் நடவடிக்கையில் நைஜீரியா ராணுவத்துடன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் படை வீரர்களும் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து 4 மாணவிகள் தப்பி வந்துள்ளனர். இதனை அந்நாட்டு கல்வி ஆணையர் மூஸா ஐனுவா உறுதிபடுத்தியுள்ளனர். ஆனால் மாணவிகள் எவ்வாறு தப்பி வந்தனர்? என்பது பற்றி அவர் தகவல்கள் எதுவும் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

இன்னும் 219 மாணவிகள் தீவிரவாதிகளிடம் பணயக்கைதிகளாக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.maalaimalar.com/2014/05/30040501/4-girls-kidnapped-by-militants.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.