Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொக்கிசங்கள்...(பரணில் கிடந்த பால்யகால குட்டி குட்டி சந்தோசங்களில் ஞாபகத்திற்கு வந்த ஒன்று... :) )

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொக்கிசங்கள்...

 

கண்டங்களை தாண்டி வந்தாலும் ஊரில் விட்டு விந்த எங்கள் பால்யகால கனவுகளையும் நினைவுகளையும் தம்முள் பதிவு செய்து வைத்து கேட்கும்போதெல்லாம் பொக்கிசமாய் திருப்பி தருகின்றன 80களின் பாடல்கள்...

சின்னவயதில் அம்மா மதியம் கிணற்றடியில் குளிக்கவார்க்கும்போது வீதியால் போகும் ஜஸ்கிறீம்வானில் கேட்டு கேட்டு மனதில் பதிந்த பாடல்கள் இவை..நாங்கள் வளர்ந்துவிட்டோம்..ஆனால் இந்தப்பாடல்களும் அந்த நினைவுகளும் இன்னமும் இளமையாக பசுமையாக...


 

https://www.youtube.com/watch?v=85gB12x1UFs
 
https://www.youtube.com/watch?v=fAiPFq93yJE
 
 
 
வாட்டர் பம்மில் இணைத்து இயக்கிய மோட்டரில் இந்தப் பாடல்வரும் படம் பார்த்திருக்கிறேன்...படம் தொடங்கமுன்னர் ரீ.வி யில் புள்ளியாக புள்ளியாக வரும்போது நமக்குள் ஏற்படும் சந்தோசத்துக்கு அளவே இல்லை..இப்பொழுது மனதுள் புள்ளி புள்ளியாக வந்து போகும் அந்த நினைவுகளும் அவ்வளவு இனிமையாக இருக்கின்றன...

 

https://www.youtube.com/watch?v=Ef6v-dnxZeY

அப்ப எமக்குத்தெரிஞ்ச விஞ்ஞானத்தில் ஏழு கலரும் வந்தால்தான் படம் வரும் எண்டு நம்பிக்கை... ரீவியில புள்ளிகளைக்கண்டதும் நமக்கு ஏற்படும் எல்லைகடந்த சந்தோசம் இருக்கே அப்பப்பா...எந்தவார்த்தைகளுக்குள்ளும் அடக்கிவிடமுடியாது அதை விபரித்து...

படம் போடப்போகினமாம் எண்ட செய்தியை ஒருகிழமைக்குமுன்னமே அறிஞ்சு அந்த ஒரு கிழமை முழுக்க ஒரு யுகமாக தவிச்சிருந்து படம்போடும் அந்தநாளும் வந்து அடிச்சுபிடிச்சுமுன் வரிசையில போய் இருந்தால்  சாமத்தியவீட்டுக்கொப்பியை முதல் போட்டு கடுப்பாக்குவாங்க இந்த பெரிசுகள்...செம காண்டாய் இருக்கும்..

படம் போட எழுப்புங்க எண்டு பெரிசுகளிட்ட சொல்லீட்டு தூங்கிடுவம்..எழுப்புவாங்கள் எண்ட நம்பிக்கையில..நம்பிக்கைதான வாழ்க்கை... அதை விட கீரோ வில்லனுக்கு எப்படா அடிப்பான் என்று பெரிய எதிர்பார்ப்புடன் முழிச்சு கொண்டிருப்பம் கடசியா வில்லன் அடி வாங்கும் போது நாங்கள் நித்திரையா போயிடுவம்..கமல் படம் தொடங்கும்போது நித்தா கொண்டு ரஜனி படத்துக்கு எழும்புவம் பாருங்க என்ன படம் எண்டு பள்ளிகூடத்தில சொல்லும்போது குழப்பம் வந்திடும்...

இரவு தொடங்கினால் விடியிறவரைக்கும் போடக்கூடிய ஆகக்கூடிய அந்த நாலு படமும் பார்க்கணும் எண்டு நினைச்சுட்டு போவம்... அங்க போன பிறகு ஒரு படம் அரைவாசி போகும் போதே நித்திரயாகிடுவம்.........விடியக்காலமை வீட்டுக்காறன் அடிச்சுக்கலைக்கும்போதுதான் தெரியும் படம் முடிஞ்சுது எண்டு..

அதை விட வீட்டுக்காரனுக்கு வரும் கோவம் பாருங்க ........அந்த வீட்டுகார அம்மா சாணத்தை கரைச்சு தெளிச்சு கொண்டு திரியும் போது தான் அவையளுக்கு விளங்கும் ஏண்டா படம் போட்டம் என்டு.......இரவு படம் பார்க்க வரும் எல்லா பக்கிகளும் சேர்ந்து அவங்க வீட்டை மூத்திரம் பெஞ்சு நாறடிச்சு போட்டு போயிருக்குங்கள்..

பொறுத்த நேரம் கிளைமாக்ஸாய் பாத்து இஞ்சின் நிக்கும் பாருங்க...ரீ.வி டெக் வாடகைக்கு குடுக்கிறவர் அப்பதான் கீறோவாய் தெரிவார்..சிங்கர் ஓயில் வார ரின்னுக்குள்ல இருக்கிற கொஞ்ச பெற்றோல வாட்டர் பம்முக்கு காட்டிபோட்டு கயித்தைபுடிச்சு இழுப்பார்..பொறுத்த நேரம் பாத்து கயிறும் அறுந்துபோகும்..அதுக்கும் தப்பி இஞ்சின் ஸ்டாட் பண்ணிணால் பலகையில அடிச்சிருக்கிற பல்ப் எரியும் பாருங்க..அதுதான் கரண்ட் வருதா என்டு பாக்கிற ரெஸ்டர்..அது எரியும்போது மனசுக்குள்ள ஆயிரம் பட்டாம் பூச்சி பறக்கும் பாருங்க..அப்பப்பா..

இதைவிட இடையில குறுப்பாய் பிரிஞ்சு சண்டையும் வந்திடும்..ரப்பர் பாண்டால் பின்னால் இருந்து முன்னாலை இருக்கிறவனுக்கு அடிச்சிட்டு இல்லாட்டி கச்சான் கோதால் எறிஞ்சுபோட்டு கம்முண்ணு இருப்பதால் பெரிய கலவரமே உண்டாகிடும்...

ரப்பர் பாண்டில அடிக்கும் போது சிலதுகள் ஈய கம்பிய வளைச்சு வைச்சு அடிக்கும் போது வரும் கோவம்.. அவனை அப்படியே பிடிச்சு அடிச்சு அவனை கடிச்சு அந்த இடமே பெரிய ரண களமாகிடும்... பிறகு தம்பிக்கு உதவியா அண்ணனும் அண்ணனுக்கு உதவியா தம்பியும் சேர்ந்து அடிச்சவனுக்கு பதில் தாக்குதல்.. இதில் ஒரு அண்ணன் தம்பி பாசம் ....இப்படியான சந்தர்ப்பம் இனி எப்ப வருமோ..

அழகான உறவுகள்...இனிமையான தருணங்கள் அவை...அவ்வளவு கஸ்டத்திலும் வாழ்க்கை எவ்வளவு கலகலப்பாக இருந்தது...அந்த வாழ்க்கையில் ஒரு ஜீவன் இருந்தது..அழகியல் இருந்தது...பொருளாதாரம் தேடிய இந்த புலம்பெயர் வாழ்வில் தொலைந்தத்துவிட்டோம் அந்த கலகலப்பை...

எப்ப நாங்கள் எங்களுடைய குடும்ப சுமைகளை சுமந்து கொண்டு வெளிநாடு என்ற பாலைவனத்துக்கு புறப்பட்டு வந்தமோ அன்றுடன் முடிந்து விட்டது எங்களின் பாச பிணைப்புகள் எல்லாம்..

அர்த்தம் தெரியாவிட்டாலும் இந்தப்பாடல்களை அடிக்கடி முனுமுனுக்கும் அந்த சின்ன வயதிற்கு மீண்டும் திரும்பி போகலாம் என்று இருந்தால் எவ்வளவு இனிமையாக இருக்கும்..

நினைவுப்பரண்களில் பொக்கிசங்களாய் புதைந்திருக்கும் காலங்கள் அவை..இவைபோன்ற பாடல்கள் அவற்றை தூசிதட்டிக்கொண்டே இருக்கும் எம் வாழும் காலங்கள் முழுமைக்கும்...

https://www.youtube.com/watch?v=bxkQh1tWSkA

 

https://www.youtube.com/watch?v=rLbGCC6VNqY

 

https://www.youtube.com/watch?v=n2YzI0FZsA4

 



 


 

 

 

Edited by சுபேஸ்

மலரும் நினைவுகள் நன்றாக இருக்கிறது .........  இன்னும் பல நினைவுகள் தொடர்ந்து மலரட்டும் !!!

 

  • கருத்துக்கள உறவுகள்

பரணில் இன்னும் நிறையத் தூசுகள் கிடக்கு , ஏறுனனீங்கள் அப்படியே எல்லாத்தையும் இங்கால கொட்டிட்டு இறங்குங்கோ சுபேஸ்...! :)

  • கருத்துக்கள உறவுகள்

சாச்சாச்சா இந்தப்பொடி தூசைத்தட்ட வெளிக்கிட்டு சாடைமாடையாக எங்கள் பரணிலும் தூசு தட்டலாமா என்று தோன்றுகிறது... என்ன மலரும் நினைவுகளை பதிவுகளுக்குள் கொண்டு வந்தால் சுவார்சியமாகத்தான் இருக்கும். நேற்றைய காலத்தின் பல அவஸ்தைகள் இன்று மீளப்பார்க்கும்போது முறுவலைத் தோற்றுவிக்கின்றன எப்படி?...சரி சரி தம்பியின் புண்ணியத்தால் நாங்களும் பழைய பரண்களைத் தட்டுவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில.. எங்கட முன் வீட்டு அக்காவை.. கனடாவில இருந்து வந்த ஒரு சொட்டை மாப்பிள்ளை கலியாணம் கட்டின அன்று.. இந்தப் பாட்டுத்தான்.. அடிக்கடி.. அவங்க வீட்டில போட்டாங்க..!

 

 

--------

 

இசைக்கும் ஞாபக சக்திக்கும் நிறையத் தொடர்புள்ளது.

 

நல்ல பதிவு நண்பரே..! :)


இது முன்னையதுக்கு அடுத்து அதிகம் ஒலித்த பாடல்...

 

 

முன்னம் எல்லாம் இப்பாடல்கள்..வெறும் வார்த்தைகளாக இருந்து..இசையால் மயக்கியவை.. இப்ப வார்த்தைகளாலும் மயக்குகின்றன.. அது தான் வித்தியாசம். :)

 

நாங்க இணைச்ச இரண்டாவது பாடல் பற்றி..இன்னொரு கொசுறுத் தகவல்..

 

எங்க அப்பத்தா இந்தப் பாட்டில வாற நாயகி கட்டிக்கிற மாதிரித்தான் சாறி கட்டும்.

அதில இடுப்பு பக்கமா..பின்னால ஒரு குட்டி வாலு இருக்கும். அப்பத்தா சொக்கா வாங்கித் தான்னு அதைப் பிடிச்சு இழுத்த ஞாபகங்கள்.

இப்ப பெட்டையள் கட்டிற சாறியை பிடிச்சு இழுக்கத் தேவையில்ல... சாதுவா காலால மிதிச்சாலே போதும்.. கொழுவி விட்ட சாறி மொத்தமா உடம்பை விட்டு விலகி வந்திடும்..!
:lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அழகான உறவுகள்...இனிமையான தருணங்கள் அவை...அவ்வளவு கஸ்டத்திலும் வாழ்க்கை எவ்வளவு கலகலப்பாக இருந்தது...அந்த வாழ்க்கையில் ஒரு ஜீவன் இருந்தது..அழகியல் இருந்தது...பொருளாதாரம் தேடிய இந்த புலம்பெயர் வாழ்வில் தொலைந்தத்துவிட்டோம் அந்த கலகலப்பை...

எப்ப நாங்கள் எங்களுடைய குடும்ப சுமைகளை சுமந்து கொண்டு வெளிநாடு என்ற பாலைவனத்துக்கு புறப்பட்டு வந்தமோ அன்றுடன் முடிந்து விட்டது எங்களின் பாச பிணைப்புகள் எல்லாம்........

 

 

...உண்மையான உயிரோட்டமுள்ள  வார்த்தைகள்.. நினைவுகள் மலருகின்றன.. பாராட்டுக்கள்.. :lol: 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.