Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆசியாவிலேயே இரு அதி நவீன போர்க்கப்பல்களை வைத்துள்ள ஒரே நாடு இந்தியா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

34 போர் விமானங்களை தங்கிச் செல்லக் கூடிய ஐஎன்எஸ் விக்ரமாதித்யா பற்றிய சுவையான முழுமையான பார்வை:-

 
 

ஆசியாவிலேயே இரு அதி நவீன போர்க்கப்பல்களை வைத்துள்ள ஒரே நாடு இந்தியா:- முக்கிய படங்கள் இணைப்பு-

 

34 போர் விமானங்களை தங்கிச் செல்லக் கூடிய  விக்ரமாதித்யா-

ரஷ்யாவிடமிருந்து ரூ.15ஆயிரம் கோடி அளித்து வாங்கப்பட்ட விக்ரமாதித்யா போர்க்கப்பல், 44,500 டன் எடை கொண்டது. 284 மீட்டர் நீளமும், 60 மீட்டர் உயரமும் பரப்பளவாக கொண்ட இந்த கப்பலை 3 கால்பந்தாட்ட மைதானங்களுக்கு ஈடாக கூறலாம். ஒரே நேரத்தில் இக்கப்பலில் 1600 பேர் பயணிக்கலாம். ஒரு லட்சம் முட்டைகள், 20 ஆயிரம் லிட்டர் பால், 16 டன் அரிசி ஆகியவற்றை சேமித்து வைக்க இதில் வசதியுள்ளது. இது ஒரு விமானம் தாங்கி போர்க் கப்பலாகும். 

இந்த இராட்சத கப்பல் எத்தனை விமானங்கள் போர் தளபாடங்களை காவிச் செல்லும் என்பதனை பாருங்கள்!

Name: INS Vikramaditya Namesake: Vikramāditya Builder: Black Sea ShipyardUSSR, andSevmashRussia Cost: $2.35 billion[1] Commissioned: 16 November 2013[2] Homeport: INS KadambaKarwar Identification: Pennant number: R33[3] Motto: Strike Far, Strike Sure[4] Status: in active service, as of 2014 General characteristics Class & type: Modified Kiev-class aircraft carrier Displacement: 45,400 tons of loaded displacement[5][6] Length: 283.5 metres (930 ft) (overall) Beam: 59.8 metres (196 ft)[7] Draught: 10.2 metres (33 ft) Decks: 22[8] Installed power: 6 turbo alternators and 6 diesel alternators which generate 18MWe[8] Propulsion: 8 turbopressurized boilers, 4 shafts, 4 geared steam turbines, generating 180,000 hp[8][9] Speed: in excess of 30 knots (56 km/h) Range: 7,000 nautical miles (13,000 km)

13,500 nautical miles (25,000 km) at 18 knots (33 km/h)[10] Endurance: 45 days[8] Complement: 110 officers and 1500 sailors[9] Sensors and

processing systems: Long range Air Surveillance Radars, LESORUB-E, Resistor-E radar complex, CCS MK II communication complex and Link II tactical data system[8] Armament:

Aircraft carried:

Maximum of 34 aircraft including upto[9]:

Aviation facilities:

 

 

 

 

 

 

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/108160/language/ta-IN/-----.aspx

  • கருத்துக்கள உறவுகள்

அதி நவீன போர்க்கப்பலை, சும்மா அழகுக்கு வைத்திருந்து என்ன பிரயோசனம்.
அப்பப்ப... பக்கத்து நாடுகளுடன், சண்டைக்கும் போக வேணும். :D

  • கருத்துக்கள உறவுகள்

இத்தனைக்கும் ரஷ்சியா ஒரே ஒரு விமானம் தாங்கி கப்பல் தான் வைச்சிருக்குது. இப்ப பிரான்ஸிடம் இருந்து வாங்கப் போகுதாம்... செய்யுற செலவு அதிகம் என்று.

 

விமானம் தாங்கி கப்பல்களில் உள்ள ஆபத்து.. இந்தக் கப்பல்கள் தாக்குதல்களில் ஈடுபடும் போது ஒரு ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளானால்.. அவ்வளவும் அம்போ..! :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அதி நவீன போர்க்கப்பலை, சும்மா அழகுக்கு வைத்திருந்து என்ன பிரயோசனம்.

அப்பப்ப... பக்கத்து நாடுகளுடன், சண்டைக்கும் போக வேணும். :D

 

கங்கிரஸின் தில் வந்து முதுகில் குத்துவதில் மட்டுமே இருந்தது. மோடியின் தில்லை இனி பார்ப்போம் எப்படியென்று

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மொழிபெயர்ப்பில் பிழை இருக்கவேண்டும்....இந்தியாவின் ஒரு விமானம் தாங்கி கப்பல் சேவை நிறைவை எப்போதோ செய்திருக்கவேண்டியது ஆகவே அது நவீன கப்பலாக இருக்க முடியாது....செய்தி இந்தியா தற்போது இரண்டு சேவையில் உள்ள விமானம் தாங்கி கப்பல்களை வைத்துள்ளது..எந்த ஆசிய நாட்டிடமும் இல்லை..மோடி போன பொழுது இரண்டுமே அவருக்கு மரியாதை செலுத்தியது...இந்தியா தானே கட்டும் கப்பல் சேவைக்கு வர இதில் ஒன்று ஒய்வு பெறும்..

 

ரஸ்யா வாங்க இருப்பது கெலிகொப்டர் தாங்கி கப்பல் அதனை துருப்பு காவியாகவும் பயன்படுத்தலாம்...ரஷ்யா வேறு ஒரு விமானம்தாங்கி கப்பலை தனக்காக (அல்லது சைனாவுக்காக) கட்ட போகுது என்று நினைக்கிறன் (சிலவேளை பிரான்சிடம் இருந்து வாங்கும் கப்பலின் புது தொழில் நுட்பங்களை அதற்கு பயன்படுத்தலாம்)....

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவிடம் விமானத்தாங்கிக் கப்பல் இருப்பதற்கு நிறையக் காரணங்கள் உண்டு.அது செய்யும் போர்கள். அது கொண்டிருக்கும் ஆக்கிரமிப்பு ஆசைகள்.... அதனால் அதன் தளத்தை கடலில் வைத்துக் கொள்ள அதற்குத் தேவைகள் உள்ளன. ஆனால் இந்தியாவுக்கு என்ன தேவை என்று தான் புரியவில்லை. இந்தியாவில் இலகுவான தளங்கள் உள்ளன. அவற்றையே பாவிக்கும் வசதி உளளபோது ஏன் இந்த வீம்புக்கு நடிக்கின்றது என்பது தான் தெரியவில்லை. தவிர அமெரிக்காவின் விமானந் தாங்கிகள் அணுமின்னில் இயங்கக் கூடியவை. அதனால் அதன் செலவினை மட்டுப்படுத்த முடியும். ஆனால் இது டீசலால் இயங்குகின்றது என நினைக்கின்றேன். எனிவரும் காலங்களில் இந்தியாவை விற்றுத் தான் இதற்குத் தீனி போட முடியும்...

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விகரமாதித்யாவை "அண்மையில்" ரஷ்யாவிடம் இருந்து கொள்வனவு செய்ததாக செய்தியில் சொன்னார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அக் காணோளியைப் பார்த்தீர்களா? ஜோர்ஜ் பெனார்ண்ட்டஸ் இருக்கும்போதே வாங்கிவிட்டனர்.

இந்திய சித்தாந்தத்தின் படி எந்த நாட்டின் மீதும் ஆக்கிரமிப்புக்காக இராணுவத்தை பயன்படுத்துவதில்லை...ஆகவே தான் 1971இல் பிடித்த பாகிஸ்தானின் (மேற்கில்) இடங்களை விட்டும் வந்தார்கள்...ஆனால் இந்திய இராணுவம் தங்களுக்கு வரும் ஆபத்தை முறியடிப்பதற்கு எபோதும் வலுவாக இருக்க வேண்டும் என்பது தான்....அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்கள் (நவீனமானவை) 80000 - 110000 tons displacement...இந்திய கப்பல்கள் 40000 tons.. கிட்டத்தட்ட பாதியும் இல்லை... இந்தியா தானே கட்டும் மூன்றாவது நாலாவது கப்பல்கள் அணுசக்தியில் இயங்கலாம் அவைகள் கிட்டத்தட்ட 65000 tions...

 

இந்தியா தற்போது தானே வடிவமைத்த அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை சோதனை செய்கிறது...அகவே அந்த அணுசக்தி தொழிநுட்பத்தை விரிவுபடுத்தி விமானம் தாங்கி கப்பலில் பயன் படுத்தலாம்....இந்தியா அமெரிக்காவை விட ஐம்பது வருடங்களாவது பின் தங்கியிருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

அக் காணோளியைப் பார்த்தீர்களா? ஜோர்ஜ் பெனார்ண்ட்டஸ் இருக்கும்போதே வாங்கிவிட்டனர்.

காணொளியை இப்ப பார்க்க முடியாது.. :D ஒருவேளை ஃபெர்னான்டஸ் காலத்தில் கட்டக் கொடுத்தது இப்பதான் வந்து சேர்ந்திருக்குமோ?! :unsure:

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

ஆசியாவிலேயே இரு அதி நவீன போர்க்கப்பல்களை வைத்துள்ள ஒரே நாடு இந்தியா

 

அப்படியானால்  சிறீலங்காவிடம் என்ன  இருக்கிறது??

ஏன் சிறீலங்கன் நேவியைக்கண்டால் பக்கத்தில் கூட  போக  பயப்படுகிறது இந்தியா??

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் புதிய போர் கப்பல் இன்று பிரதமர் மோடி பார்வையிட்டார்.. - செய்தி .

தோழர்களே எனக்கு தோன்றும் ஒரு சந்தேகம்.. ஒரு பழைய "பியட்" காரை தற்போதைய "ஹோண்டா" காரின் விலையை கொடுத்து வாங்கி ரிப்பேர் செய்து புதிதாக வர்ணம் பூசி உலக அளவிலான பந்தயத்திற்க்கு போனால் நான் ஜெயிப்பேனா..? இந்த பதிவை முழுமையாக படித்து விட்டு பதில் சொல்லுங்கள்..

• 1987-ஆம் ஆண்டு சோவியத் யூனியன் நாடுகள் உடைவதற்கு முன்பு அதன் கடற்படையில் "அட்மிரல் கோர்ஷ்கோ' என்ற பெயருடன் விளங்கியதுதான் தற்போதைய "ஐஎன்எஸ் விக்ரமாதித்யா' கப்பலாகும்.அதை இயக்க அதிகச் செலவானதால் 26 ஆண்டுகளுக்கு முன் 1987-இல் அதன் செயல்பாடு நிறுத்தப்பட்டது. 

• 2000 ஆம் ஆண்டு இந்தியாவிடம் ஐஎன்எஸ் விராட் என்ற ஒரே ஒரு விமானம் தாங்கிக் கப்பல் தான் இருந்தது. அது மிகவும் பழதாகிவிட்டதால் அதை 2007ம் ஆண்டில் ஓரங்கட்ட இந்திய கடற்படை திட்டமிட்டது.

• இதற்குப் பதிலாக ரஷ்யாவின் அட்மிரல் கோர்ஸ்கோவ் என்ற பழைய ஆயுட்காலம் முடிந்த விமானம் தாங்கிக் கப்பலை வாங்க 2000ம் ஆண்டில் திட்டமிட்டது இந்தியா. அப்போதே 13 ஆண்டுகள் பழமையான இந்த கப்பலை சரி செய்து 2008ம் ஆண்டில் இந்தியாவிடம் ஒப்படைப்பதாக ரஷ்யா உறுதியளித்தது.

• அதன்படி 2000ம் அண்டில் இந்த கப்பலை இந்தியாவுக்கு இலவசமாக ரஷ்யா தருவதாகவும், அதை ரிப்பேர் செய்வது, புதிய பாகங்களை பொறுத்துவது ஆகிய பணிகளை ரஷ்யாசெய்து தரும் என்றும் அதற்க்காக 5000ம் கோடி இந்தியா தரும் எனகூறப்பட்டது.

• ஆனால், திடீரென ரஷ்யா ரிப்பேர் செய்வதற்க்கு கூடுதல் விலையைக் கோரியது. இதை இந்தியா ஏற்றது. மீண்டும் மீண்டும் விலையை ஏற்றிக் கொண்டே போனது ரஷ்யா. 
இப்படியாக 4 வருடங்களில விலையை ஏற்றி ஏற்றி 2004ல் ரூ. 7,202 கோடி தருவது என முடிவுசெய்யப்பட்டு கடந்த பிஜேபி ஆட்சி காலத்தில் ஒப்பந்தம் போட பட்டது 

• இந்த அரதப் பழசான கப்பலுக்கு இவ்வளவு விலை தருவது வேஸ்ட் என்றது இந்திய ஆடிட்டர் ஜெனரல் அலுவலகம். இது குறித்து அப்போது மத்திய அரசின் தணிக்கை அதிகாரி (Comptroller and Auditor General of India-CAG) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
* புதிய கப்பலே இந்த விலைக்குத் தயாராக இருக்கும்போது ஏன் இவ்வளவு விலையை கொடுத்து இதை வாங்க வேண்டும் என்று தெரியவில்லை.
* மேலும் இந்தக் கப்பலின் ஆயுட்காலம் முடிந்துபோய் அது புதுப்பிக்கப்படுகிறது. இந்தக் கப்பலை 2007 முதல் 2011ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பயன்படுத்தவே இந்திய கடற்படை திட்டமிட்டிருந்தது.
ஆனால், இந்தக் கப்பலின் டிரையல் முடியவே 2012ம் ஆகிவிடும். இதனால் இந்திய கடற்படைக்கும் நீண்ட நாட்களுக்கு இது பயனுடையதாக இருக்காது. என்றது அதையும் மீறி இந்திய அரசு 60% முன் பணம் கொடுத்தது.

• ஒப்பந்த படி ரிப்பேர் செய்து 2008 ல் கப்பலை ஒப்படைக்காத ரஷ்யா மீண்டும் மீண்டும் கூடுதல் பணம் கேட்டு இழுத்தடித்தது அதற்கெல்லாம் தலையாட்டிய இந்திய அரசு இந்த கப்பலுக்காக கொடுத்த மொத்த தொகை 15000ம் கோடி. 

• 5000ம கோடி என விலை பேசப்பட்ட இந்த கப்பலை, பயன்பாட்டில் இருந்து நிறுத்திய 26 ஆண்டுகள் கழித்து இந்தியாவிடம் இருந்து 15000ம் கோடி பெற்று கொண்டு 2013ல் ரஷ்யா ஒப்படைத்து.

• இந்த கப்பலை 2013 நவம்பரில் அப்போதைய ராணுவ மந்திரி ஏகே. அந்தோணி தலைமையில் ஏற்கெனவே ஒரு முறை நாட்டுக்கு அற்பணிக்கும் விழாவும் நடைபெற்றது.

• இதே போன்ற ஒரு பதிய கப்பலின் தற்போதைய சர்வதேச விலை 16000ம் கோடி மட்டுமே.

• இந்தியா செய்த ஒரே காரியம் 2004ல் ஒப்பந்தம் போடும் போதே கப்பலுக்கு ஐஎன்எஸ் விக்கிரமாதித்யா என பெயர் வைத்தது மட்டுமே.

தோழர்களே இதில் எனக்கு தோன்றும் சந்தேகம்.. ஒரு பழைய "பியட்" காரை தற்போதைய "ஹோண்டா" காரின் விலையை கொடுத்து வாங்கி ரிப்பேர் செய்து புதிதாக வர்ணம் பூசி உலக அளவிலான பந்தயத்திற்க்கு போனால் நான் ஜெயிப்பேனா..?

அதையோ உங்கள் பணத்தில் நான் செய்தால் நீங்கள் பாராட்டுவீர்களா காறி முகத்தில் துப்புவீர்களா..?

தனி மனிதன் ஒருவன் செய்தால் தவறு மக்கள் பணத்தில் இந்திய அரசு செய்தால் வல்லரசா..? இதை விமர்சித்தால் தேசதுரோகியா..? 

போர் என்று ஒன்று வந்தால் தெரிந்து விடும் அது வரை இந்தியா வல்லரசுதான் யார் கேட்கப் போகிறார்கள்.. வந்தே மாதரம்..
-Facebook-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.