Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவுஸ்திரேலியா நோக்கிப் பயணித்த 153 தமிழர்களும் இலங்கை கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கலாம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரதி  எழுதியது போல் நான் எழுதியிருந்தால்.........??? :(  :(  :(

  • Replies 247
  • Views 12.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இத தான் நானும் சொல்ல வந்தேன் ரதி தமிழினத்தை மேலும் மேலும் அகதிகள் ஆக்க இவர்களின் ஊக்கு விப்பு கடும் கண்டனத்துக்குரியது.......

  • கருத்துக்கள உறவுகள்

இது வரை இத் திரியை வாசித்ததில் இருந்து நான் தெரிந்தது கொண்டது என்ன என்டால்;

அங்கிருந்து உயிரை பணயமாக வைத்து பணமீட்டவோ அல்லது உண்மையாக அரசினால் பாதிக்கப்பட்ட போராளிகளை அங்கிருக்கும்[அவுசில்] தமிழ் மக்களே திரும்பியும் பார்ப்பதில்லை.இன்னும் சொல்லப் போனால் கொஞ்சப் பேர் அவர்களை அடிமையாகவே வைத்திருக்கிறார்கள்...இதில் வந்து சுண்டலுக்கு எதிராக கருத்து எழுதும் அவுஸ் உறவுகள் எத்தனை பேர் கப்பலில் வந்தவர்களுக்கு ஓடிப் போய் உதவி இருக்கிறார்கள்? மனசாட்சியைத் தொட்டு உண்மையை எழுதுங்கள் பார்ப்பம்.இலங்கை அரசை எதிர்க்க வேண்டும் என்பதற்காக மனசாட்சிக்கு எதிராக கருத்து எழுதுகிறீர்கள் என நான் நினைக்கிறேன்.

ஒரு கப்பலில் வருபவர்கள் 100 பேர் என்டால் அதில் உண்மையாகவே அரசினால் பாதிக்கப்பட்டு வருபவர்கள் 10 பேராத் தான் இருப்பார்கள்.அவுஸ் அரசு அந்த கப்பலை பிடித்து விசாரித்தால் உடனே அந்த 10 பேரையும் தான் திருப்பி அனுப்புவார்கள்.காரணம் சொல்வார்கள் அவர்கள் பயங்கரவாதிகள் அவர்களால் தங்கள் நாட்டுக்கு அச்சுறுத்தல் என்பார்கள்.அதை உங்களால் தடுக்க முடியுமா?...ஆகவே உண்மையாகவே பாதிக்கப்பட்டவனுக்கு அகதி அந்தஸ்து கிடைக்கிறது சரியான குறைவு என்பது என் கருத்து.

இப்பவும் ஈழத்தில் ஆங்காங்கே கொலை,கைது,பாலியல் வன்புணர்வு என்று நடக்கிறது இல்லை என்று மறுக்கவில்லை.ஆனால் 2009 யுத்தம் அதையொட்டி 2010,2011 ஆண்டுகளில் மக்கள் வகை,தொகையாக இப்படி கடல் மூலம் வெளிக் கிட்டு இருந்தால் அதில் ஒரு காரணமும்,நம்பகத் தன்மையும் இருக்கும்.அந்த காலத்தில் வெளிக்கிடாத மக்கள் இப்ப வெளிக்கிடுவதில் சிங்கள அரசின் சதி இருக்கும் என நான் நினைக்கிறேன். இதுவும் ஒரு வகை இன அழிப்புத் தான். ஆசை வார்த்தைகளை நம்பி எத்தனை சனம் கடலில் அநியாயமாய் உயிர் விடுகிறார்கள்.அதைத் தவிர அவுஸ்சுக்கு என்று வருபவர்கள் நிம்மதியாக இருக்கிறார்களா?...பக்கத்து தீவுகளில் தானே அடைத்து வைக்கிறார்கள்.அதை விட ஊரில் கூழோ,கஞ்சியோ குடிச்சிட்டு நிம்மதியாய் இருக்கலாம் என்பது என் கருத்து.

கடைசியாக தமிழர் எல்லோரும் இப்படி புலம் பெயர வெளிக் கிட்டால் இனி மேல் யாருக்கு தமிழீழம்? முழு இடத்தையும் சிங்களவனிட்டையும்,முஸ்லீம்களிட்டையும் கொடுக்க வேண்டியது தான்...அதற்கான முயற்சிகள் தான் கொஞ்சம்,கொஞ்சமாய் நடந்து கொண்டு இருக்குது. சிங்கள அரசின் இச் சதிக்கு புலத்தில் இருக்கும் தமிழரும் தெரிந்தோ,தெரியாமலோ உடந்தையாக இருப்பது வேதனை.

கொஞ்சப் பேர் ஓடி வருவார்கள் நீ புலத்தில் வசதியாய் இருந்து இப்படித் தான் எழுதுவாய் என...நான் புலத்தில் இருக்கிற படியால் தான் சொல்கிறேன்.புலத்தை விட ஊரில் கூழோ,கஞ்சியோ குடிச்சிட்டி இருப்பது எவ்வளவோ மேல்.தவிர நான் அந்த மக்களை அரசிற்கு எதிராக போராடு,போய் சா என சொல்லவில்லை. நன்றி

 

ரதியினது கருத்து, அவசரமானதும், உண்மைகளைச் சரியாக அறிந்து கொள்ள முடியாததாலும் ஏற்பட்டது என்பது எனது கருத்து!

 

பல சமூக அமைப்புக்கள், தங்கள் வேலைகளுக்கு நடுவிலும், சாப்பாடு கடைகளில் வாங்கிக்கொண்டு பின்னேரங்களில் போவதுண்டு!

 

நானும் சில தடைவைகள், அவர்களுடன் போயிருக்கின்றேன் ! அங்கு செல்பவர்களில் பலர், அவுஸில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்பவர்கள்!

 

சிட்னி முருகன் கோவிலில், சாப்பாடு ஓடர் பண்ணிக் கொண்டு போய்க் கொடுப்பவர்களும் உண்டு..! 

 

அங்கு தமிழர்களைத் திருமணம் செய்த சிங்களவர்களையும், நான் சந்தித்திருக்கிறேன்!

 

தமிழர்கள் பொதுவாகத் தானுண்டு தனது வேலையுண்டு என்னும் மனப்போக்கில் வாழ்பவர்கள் என்று சொல்லுங்கள்..! ஏற்றுக்கொள்ளுகின்றேன்!

 

ஆனால், எல்லாத் தமிழர்களையும் அந்தச் சுவர்களுக்குள் அடக்கிவிடக்கூடாது! ஆகக் குறைந்தது, இவ்வாறு அடிக்கடி அகதிகளைப் போய்ப் பார்க்கின்ற ஒரு பத்துப்பேரையாவது எனக்குத் தனிப்பட்ட முறையில் தெரியும்!

 

கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த பல அவுஸ்திரேலியர்களும், வார விடுமுறை நாட்களில் வந்து போவார்கள்! 

  • கருத்துக்கள உறவுகள்

Sri Lankan Tamil would-be refugees thought they were bound for New Zealand

  • by:AMANDA HODGE and ROSIE LEWIS
  • From:The Australian

 

Amanda Hodge

 

South Asia Correspondent

New Delhi

Rosie Lewis

 

Reporter

Canberra

 

Chandra Kumari, with her son, at a refugee camp in Coimbatore, Tamil Nadu yesterday.Source: Supplied

 

Chandra with husband Yasotharan.Source: Supplied

SRI Lankan asylum-seekers who boarded a fishing boat off the coast of south India last month believed they were heading to New Zealand, not Australia, the worried relatives of several people on board the missing boat told The Australian yesterday.

While Immigration Minister Scott Morrison has refused to confirm any knowledge of the boat, or a second one spotted closer to Cocos Island, the Sri Lankan government last night confirmed the Sri Lankan asylum seekers will be handed over to its Navy in a mid-ocean transfer, the first such official acknowledgment of the impending operation. At a weekly press conference in Colombo, Sri Lanka’s minister for media and information Keheliya Ranbukwella said: “The navy has accepted to receive them at whatever point. The Sri Lankan navy has agreed to accept the Sri Lankans.’’

But he later retracted the statement after he was queried about the navy’s denials that any such operation will take place, saying he had not yet spoken to the navy commander.

A senior navy official told The Australian this week that as many as 50 asylum seekers from a boat spied near the Cocos Islands at the weekend, and intercepted by Australian border protection authorities, would be handed over to Sri Lankan authorities in a mid-ocean similar to one which took place in July 2012.

Chennai-based Sri Lankan Tamil refugee advocate Samuel Chelvanayakam Chandrahasan said 57 of the 153 people on board the fishing vessel that left Pondicherry on June 13 had come from Indian government-sponsored Tamil refugee camps around the southern state of Tamil Nadu.

A further 50 are likely to have crossed the Palk Strait from Sri Lanka to board the boat in India.

Mr Chandrahasan said his Organisation for Eelam Refugees Rehabilitation had been getting frantic calls from relatives after a distress call was made from the boat last week. Occupants claimed they had only three litres of water left and no engine oil.

The boat, last seen about 250km from Christmas Island, has since disappeared. .

Chandra Kumari, 32, told The Australian yesterday she was unaware that her tractor-driver husband Yasotharan was planning to seek asylum when he left their Tamil refugee camp in Coimbat­ore, Tamil Nadu, with his brother and another man on June 4.

He called her on June 19 to say he was en route to another country to seek asylum; she thought he was heading for New Zealand.

It was the last she heard from him. “My husband knew about the Australian policy (of turning back asylum-seekers) and would not have taken the risk of going to Australia,” she said.

Ms Kumari said she feared for her and her husband’s safety if he were sent back to Sri Lanka, a country both families fled as war refugees 24 years ago, because of a 300,000 rupee debt her husband owed Indian money lenders and the fact there was no longer any family to rely on in Sri Lanka.

“If he is sent to Sri Lanka the whole family will have to commit suicide because we cannot repay the debt,” she said. “I beg the Australian authorities to just let him stay a few years and earn some money to pay our loans.”

Her tearful sister-in-law Indrani Yesumani said she too believed her husband had been aiming for New Zealand in the hope of raising money to continue her two children’s education.

“There are so many security concerns in Sri Lanka. Recently there have been attacks against Muslim minorities,” she said.

She added that she now feared her husband and brother-in-law would be imprisoned and tortured, as other returnees have claimed to have been.

Mr Chandrahasan said the best that could be hoped for was that asylum-seekers sent back to Sri Lanka would be released quickly from detention after screening and interrogation.

Tony Abbott appeared to confirm that the failed refugees would be handed over to Sri Lanka yesterday, saying while Sri Lanka was not “everyone’s idea of the ideal society’’ much progress on human rights had been made since the civil war between the Sinhalese majority government and Tamil rebels ended in May 2009.

He added he was “very happy to give the Australian people an assurance that we are absolutely confident that no harm would come to anyone who has been in our charge”, despite accusations his government was breaching international law by returning them to their home countries.

Sri Lankan high commissioner Admiral Thisara Samarasinghe denied that his country’s navy had taken custody of the asylum-seekers at sea, or that there were any navy vessels preparing to transfer asylum-seekers in the Indian Ocean, as a senior naval official told The Australian this week.

Although Sri Lankan navy spokesman Commodore Kosila confirmed to The Australian on Tuesday that as many as 50 asylum-seekers from the second boat spotted off Cocos Island at the weekend would be handed over, he said yesterday that he could “make no further comment”.

Admiral Samarasinghe insisted that the only Sri Lankans leaving the country were economic migrants and that thousands of returned asylum-seekers were now leading normal lives.

The UNHCR and the Australian Catholic Bishops joined the voices of opposition to the government’s hand-back policy yesterday.

“To offer a blanket response that unfairly treats all asylum-seekers as illegal, and returns them to the country from which they have fled, is both immoral and contrary to our international obligations as a signatory to the Refugee Convention,” said Maurizio Pettena, the director of the Australian Catholic Migrant and Refugee Office.

The UN refugee agency warned that “individuals who seek asylum must be properly and individually screened for protection needs, in a process which they understand and in which they are able to explain their needs”.

“Anything short of such a screening, referral and assessment may risk putting already vulnerable individuals at grave risk of danger,” the UNHCR said.

Mr Morrison said he would not be “intimidated” by such pressure. “We are doing what we said we would do, we are doing it in the way we said we would do it.”

Originally published as Tamils thought they were NZ-bound

அந்த தமிழகத்தில் திரையிடபட்டு விவாதத்துகுள்ளான சிங்கள படத்தின் கதையை ஆராய்ந்த மாதிரி இந்த கட்டுரையையும் ஆராய்ந்தால்..கப்பலில் உள்ளவர்களுக்கு அகதி என்கிற அந்தஸ்தே அவுஸ்திரேலியா குடுக்குமா என்பது சந்தேகம் (இலங்கையர்களை அகதிகள் இல்லை என்று டோனி அபோட் அடிச்சே சொல்லுகிறார்)...

Edited by naanthaan

  • கருத்துக்கள உறவுகள்

அந்த தமிழகத்தில் திரையிடபட்டு விவாதத்துகுள்ளான சிங்கள படத்தின் கதையை ஆராய்ந்த மாதிரி இந்த கட்டுரையையும் ஆராய்ந்தால்..கப்பலில் உள்ளவர்களுக்கு அகதி என்கிற அந்தஸ்தே அவுஸ்திரேலியா குடுக்குமா என்பது சந்தேகம் (இலங்கையர்களை அகதிகள் இல்லை என்று டோனி அபோட் அடிச்சே சொல்லுகிறார்)...

 

இங்கிலாந்தில் படித்தவர், ரொனி அப்பொட் ! 

 

இவர் வாயிலிருந்து வருவதெல்லாம், வேத வாக்குமில்லை!

 

இவர் அவுஸ்திரேலிய மக்களின் ஏகோபித்த குரலும் இல்லை!

 

அகதியாக வந்து குடியேறிய ஒருவருக்கு, இன்னொரு அகதியைப் பற்றி விமரிசிக்கும் தகுதியும் இல்லை!

 

நேரம் கிடைத்தால் இவரது வாழ்க்கை வரலாற்றையும் வாசித்துப் பாருங்கள், நாந்தான்!

 

ஒரு பத்துப் பக்கத்துக்கு மேல வாசிக்க, அதில் எதுவும் குறிப்பிடப்படும் படியாக இல்லை!

ரோனி அபோட்டின் மனைவி நியூசிலாந்து காரி..... :)

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே டோனி அபோட் எப்பிடி பட்டவர் என்று பிரச்சனையே அல்ல......ஆஸ்திரேலியா மக்கள் அவர்களிடம் ஆட்சியை கொடுத்து இருக்கின்றார்கள் பெரும்பான்மை மக்களும் அகதிகளின் வருகைக்கு எதிராக இருக்கின்றார்கள் சோ அவர் அதற்க்கு தகுந்த முடிவுகளை எடுத்து அமுல்ப்படுத்துகின்றார்..... இனி வரும் காலங்களில் இது இன்னும் கடுமையா இருக்கும்.... சோ சும்மா காச கட்டி ஏமாறாமல் வேற கொடுக்கிற காசில ஒரு தொழில அமைச்சு இல்லது பேங்க் ல போட்டிட்டு பேசாம இருங்க ..... சும்மா ஆஸ்திரேலியா போக வெளிக்கிட்டா நடுக்கடல்ல வைச்சு நேர sri lanka தான்....

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே டோனி அபோட் எப்பிடி பட்டவர் என்று பிரச்சனையே அல்ல......ஆஸ்திரேலியா மக்கள் அவர்களிடம் ஆட்சியை கொடுத்து இருக்கின்றார்கள் பெரும்பான்மை மக்களும் அகதிகளின் வருகைக்கு எதிராக இருக்கின்றார்கள் சோ அவர் அதற்க்கு தகுந்த முடிவுகளை எடுத்து அமுல்ப்படுத்துகின்றார்..... இனி வரும் காலங்களில் இது இன்னும் கடுமையா இருக்கும்.... சோ சும்மா காச கட்டி ஏமாறாமல் வேற கொடுக்கிற காசில ஒரு தொழில அமைச்சு இல்லது பேங்க் ல போட்டிட்டு பேசாம இருங்க ..... சும்மா ஆஸ்திரேலியா போக வெளிக்கிட்டா நடுக்கடல்ல வைச்சு நேர sri lanka தான்....

சுண்டல், சின்னப்பிள்ளை மாதிரிக் கதைக்கக் கூடாது!

 

தொழிற்கட்சியின் உட்பூசல்களும், அவர்களது ஊழல்களுமே 'லிபெரல்' கட்சி ஆட்சிக்கு வந்தமைக்கு முக்கியமான காரணங்களே தவிர, வெறும் வள்ளங்களை நிற்பாட்டும் கொள்கை, அவர்களது வெற்றிக்குக் காரணமாக அமைந்து விடவில்லை! 

 

ஐரோப்பாவிலோ, அல்லது அமெரிக்காவிலோ அகதிகளை வெத்திலை, பாக்கு வைத்து வரவேற்பது இல்லை!

 

நேஷனல் புறொன்ட், லு பென் போன்றவர்களது கட்சிகள் பல இடங்களை வென்றுள்ளன!

 

அகதிகள் பிரச்சனைக்கும், வேலையில்லாப் பிரச்சனைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு!

 

இந்த நிலை எப்போதும் ஏற்ற இறக்க நிலையிலேயே இருக்கும்!

 

நான் அகதிக்களுக்கு ஆதரவான ஒரு இயக்கத்தின் உறுபினராக நீண்ட நாட்கள் இருக்கிறேன்!

 

பல வெள்ளை நிறத்தவர்கள் எமக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறார்கள்!

 

இதில் வேடிக்கை என்னவெனில், இந்த இயக்கத்துக்கு நிதி உதவியை, வழங்குவதும் மத்திய அரசின் அமைச்சே!

 

எல்லாமே ஒரு விதமான அரசியல், சுண்டல்! :D

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே அகதிகள் வருகை என்பதில் எனக்கு பிரச்சனையே இல்லியே இனியும் அகதிகளாக தமிழர்கள் வெளியேறுவது தடுக்கப்பட வேண்டும்.... இதுவரை சுமார் 500000 மேற்ப்பட்டோர் வெளியேறி விட்டார்கள் இன்னும் வெளியேறுவது தடுக்கப்பட வேண்டும்..... ஏற்கனவே வெளியேறிய நாங்கள் எல்லாம் எப்பிடி திரும்பி போகலாம் என்று சிந்திக்க வேண்டுமே தவிர இன்னும் இன்னும் தமிழினத்தை அகதிகள் என்ற அவல நிலைக்கு தள்ளக்கூடாது.....

  • கருத்துக்கள உறவுகள்

எள்ளு காயுதென்டு எலிப்புளுக்கை ஏன் அழுவுது

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க என்ன போராட போய் எல்லாத்தியும் போட்டிட்டு லண்டன் ல வந்து குந்தி இருக்கிற ஆக்களா? குடும்பம் குட்டி மட்டும் காணும் எண்டு நினைக்க? நாங்க எல்லாம் குறுக்கிய வட்டத்தோட நிக்கிறதில பரந்து பட்டு சிந்திக்கும் திறன் இருக்கு..... அகதியலா ஒட்டு மொத்த தமிழினத்தையும் வெளில எடுத்து விட்டிட்டா பிரச்சனை தீரும் என்று நினைக்கிற முட்டாளுகளும் அல்ல....

Edited by SUNDHAL

இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு ஏதோ ஒரு மேற்குலக நாட்டுக்கு போய்விடுவதுதான் சுதந்திரம் மற்றும் பொருளாதாரத்தீர்வு என்று தீர்க்கமாக முடிவாகிவிட்டது. இதற்கு மாற்றீடாக ஒரு தேசத்தை அமைத்து அதில் சுதந்திரத்தையும் பொருளாதரா தீர்வையும் காண்பது என்ற சிந்தனை ஆரம்பத்தில் இருந்து குறைந்து குறைந்து இப்போது குறிப்பிடும் படியான வீதத்தில் கூட இல்லை.

 

இவ்வாறான ஒரு நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டதற்கு சிங்களம் புறநிலைக்காரணம். தமிழர்கள் அகநிலையிலிலும் சுதந்திரம் சுயமரியாதை போன்றவற்றிற்காக சிங்கள இன ஒடுக்குமுறைக்கு முன்னதாகவே போராடிக்கொண்டிருக்கின்றார்கள். சாதிய வர்க்க பிரதேசவாத ஏற்றதாழ்வுகளில் இருந்து விடுபட தமிழர்கள் பல வழிகளை கையாண்டுள்ளார்கள். குறிப்பிடும் படியாக கல்விகற்றல் அரச உத்தியோகம் பார்த்தல் பல்கலைக்கழகங்களுக்குள் நுழைதல் என்பவற்றிற்கான வெறி. டாக்டர் எஞ்சீனியர் யுனிவர்சிட்டி உத்தியோகம் என்பன ஒரு புது சமநிலை அடயாளமாக அகநிலைச் சுதந்திரத்தேடலுக்கு இருந்துள்ளது. அதற்கு முற்பட்ட காலத்தில் மதம் மாறுதல் என்பன இருந்துள்ளது.  

 

பின்னர் விடுதலைப்போராட்ட இயக்கங்கள் பல்கிப்பெருகியபோது அகநிலைச் சுதந்திரத்து ஒரு புதுச் சமநிலை என்ற புதிய நம்பிக்கையும் புறநிலையில் சிங்களத்தின் ஒடுக்குமுறையில் இருந்து விடுதலையும் கிடைக்கும் என்ற நம்பிக்கையம் உருவாகியது. ஆனால் எமக்குள் நாம் இரைதேடுவதில் இருந்து விடுபட முடியாத தூரதிஸ்ட நிலையால் இயக்கங்கள் குத்துப்பட எல்லா நம்பிக்கையும் படிப்படியாகக் கரையத்தொடங்கியது.

 

இப்போது அகநிலை மற்று புறநிலை அழுத்தங்களில் இருந்தும் பொருளாதார நெருக்கடிகளில் இருந்தும் விடுபடுதல் என்பது தேசத்தைவிட்டு எங்காவது சென்றுவிடுவது என்ற முடிவான நிலைக்குள் தமிழர்கள் வந்துவிட்டார்கள். இதற்கு உறுதியான நம்பிக்கை கொடுப்பவர்களாக முன்னர் புலம்பெயர்ந்த நாம் எமது வாழ்க்கைமுறையூடாக எமது நம்பிக்கையை அவர்களுக்கு வெளிப்படுத்துகின்றோம்.

 

நாட்டை விட்டுப்போ என்பது அகநிலையில் தமிழர்களும் புறநிலையில் சிங்களவர்களும். வெளிநாட்டுக்கு வா என்பது நாங்கள்தான். நாம் வரவேண்டாம் என்று சொன்னால் அதற்கு எந்த அர்த்தமும் கிடையாது. வேணுமானால் புலம்பெயர்ந்தவன் நாட்டிற்கு திரும்பப்போகலாம்.

 

இவைகள் எல்லாம் தலைக்குமேல் போன வெள்ளம் மாதிரி. அக மற்றும் புற நிலைச் சுதந்திரம் தேசீயம் தேசம் என்ற சிந்தனையை கட்டியெழுப்புவதே நடமுறைக்குச் சாத்தியம் இல்லை அதனால் மாற்றங்கள் குறித்து கற்பனையும் பண்ண முடியாது.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல் உங்களிடம் சில கேள்விகள்

1) அகதிகள் வருகைக்கு மக்கள் எதிர்ப்பு பலமாய் இருக்கிறது, அகதிகளை திருப்பி அனுப்புவது தான் மக்கள் ஆணை என்றால், 1951 ஐநா அகதிகள் சாசனத்தில் இருந்து ஏன் அவுஸ் வெளியேறவில்லை?

2) அகதிகளை விசரணையின் பின் திருப்பி அனுப்பலாம்தானே? 100 பேரில் 1 ஆள் உண்மையான அகதியாய் இருக்கும் பட்சத்தில் 99 பேரையும் விசாரனையின் பின் திருப்பி இருக்கலாம். இப்போ அந்த ஒரு ஆள் 4ம் மாடியில் நையபுடைக்கப்பட்டால் அதன் தார்மீக பொறுப்பு அவுசையும் அதன் நடவடிக்கையையும் ஆதரிக்கும் உங்களையும் சாராதா?

3) GJ Sri Lanka எனும் யூகே மேல் நீதிமன்ற தீர்ப்பு, அரசால் வேண்டப்படுபவர்களுக்கு இன்னும் உயிராபத்து உண்டு என்கிறது. இந்த தீர்ப்பு அவுசை கட்டுப்படுத்தா விடினும் இலங்கையின் நிலையை துல்லியமாக காட்டுகிறது. அபொட் இலங்கையில் யாருக்கும் பிரச்சினை இல்லை என்கிறார். நீங்களும் இலங்கையில் இப்போ எந்த தமிழருக்கும் அரசால் உயிராபத்து இல்லை என்கிறீர்களா ?

4) ஆம் எனில், இதுவரை இலங்கையை வசைபாடி நீங்கள் உட்பட்ட புலம்பெயர்ஸ் செய்ததெல்லாம் பித்தலாட்டமா?

5) இல்லை எனில், விசாரணையின்றி எல்லோரையும் திருப்பியது தவறென்பதை ஏற்கிறீர்களா?

6) மக்கள் வெளியேறினால் நிலம் பறிபோகும் என்றால் - மக்கள் சகல வதைகளையும் தாங்கி கொண்டு நீங்கள் கொலிடேபோவதற்க்காக நிலத்தை பிடித்து வைத்திருக்க வேண்டுமா?

7) நீங்கள் நாடு திரும்ப்பி, பிள்ளை குட்டியோடு வாழ்ந்தால் கணிசமாணளவு நிலத்தை காப்பாத்தலாம். எப்போ பெட்டி கட்டுவதாய் உத்தேசம்? அல்லது அப்பாவிகளின், ஏழைகளின் பிள்ளைகளுக்குத்தான் அந்த கடமை எல்லாம் எனக்கில்லை என்கிறீர்களா?

வழமையான Murdoc நுனிப்புல் மேயாமல் இதயசுத்தியுடன் பதிலளிப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே அகதிகள் வருகை என்பதில் எனக்கு பிரச்சனையே இல்லியே இனியும் அகதிகளாக தமிழர்கள் வெளியேறுவது தடுக்கப்பட வேண்டும்.... இதுவரை சுமார் 500000 மேற்ப்பட்டோர் வெளியேறி விட்டார்கள் இன்னும் வெளியேறுவது தடுக்கப்பட வேண்டும்..... ஏற்கனவே வெளியேறிய நாங்கள் எல்லாம் எப்பிடி திரும்பி போகலாம் என்று சிந்திக்க வேண்டுமே தவிர இன்னும் இன்னும் தமிழினத்தை அகதிகள் என்ற அவல நிலைக்கு தள்ளக்கூடாது.....

நீங்கள் வெறும் தமிழ் அகதிகள் என்கிற அளவிலேயே சிந்திக்கிறீர்கள். உங்கள் வாதப்படி பார்த்தால் ஈராக், ஆப்கானிஸ்தான், சிரியாவில் இருந்து வரும் அகதிகளை என்ன செய்வது?

நாங்கள் இங்கே வாதிடுவது அகதிகளின் பார்வையில் இருந்து அல்ல. ஐநாவின் அகதிகள் சாசனத்தில் கையெழுத்திட்ட அவுஸ்திரேலியா அதன் கடப்பாடுகளை மதிக்காமல் நடந்துகொள்வதைப் பற்றியே வாதிடுகிறோம். உங்கள் அரசு இவ்வாறு நடந்துகொள்வது அவுஸ்திரேலியர்களுக்குத்தான் மானக்கேடு. :icon_idea:

சுண்டல், சின்னப்பிள்ளை மாதிரிக் கதைக்கக் கூடாது!

 

தொழிற்கட்சியின் உட்பூசல்களும், அவர்களது ஊழல்களுமே 'லிபெரல்' கட்சி ஆட்சிக்கு வந்தமைக்கு முக்கியமான காரணங்களே தவிர, வெறும் வள்ளங்களை நிற்பாட்டும் கொள்கை, அவர்களது வெற்றிக்குக் காரணமாக அமைந்து விடவில்லை! 

 

ஐரோப்பாவிலோ, அல்லது அமெரிக்காவிலோ அகதிகளை வெத்திலை, பாக்கு வைத்து வரவேற்பது இல்லை!

 

நேஷனல் புறொன்ட், லு பென் போன்றவர்களது கட்சிகள் பல இடங்களை வென்றுள்ளன!

 

அகதிகள் பிரச்சனைக்கும், வேலையில்லாப் பிரச்சனைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு!

 

இந்த நிலை எப்போதும் ஏற்ற இறக்க நிலையிலேயே இருக்கும்!

 

நான் அகதிக்களுக்கு ஆதரவான ஒரு இயக்கத்தின் உறுபினராக நீண்ட நாட்கள் இருக்கிறேன்!

 

பல வெள்ளை நிறத்தவர்கள் எமக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறார்கள்!

 

இதில் வேடிக்கை என்னவெனில், இந்த இயக்கத்துக்கு நிதி உதவியை, வழங்குவதும் மத்திய அரசின் அமைச்சே!

 

எல்லாமே ஒரு விதமான அரசியல், சுண்டல்! :D

 

 

 

உட்கட்சிப் பூசல்கள், அமைச்சர் ஒருவரின் ஊழல் என்பன லேபரின் மதிப்பைக் குறைத்தன தான். லேபரை விட ஜூலியாவின் மதிப்பைத்தான் மிகவும் குறைத்தன. வேட்பாளராக கெவின் மீண்டும் தெரிவு செய்யப்பட்டு ஜூலியா பின்தள்ளப்பட்டவுடன் உட்கட்சிப் பூசல்கள், ஊழல் என்பனவும் பின் தள்ளப்பட்டன. ஆனால் கெவின் அகதிகள் விடயத்தில் மிகவும் மென்போக்கானவர் என்ற அபிப்பிராயம் மக்கள் மனதில் ஆழமாக பதிந்திருந்தது. அகதிகள் விடயத்தை தேர்தலில் லிபரலும் மீடியாக்களும் பெரிதாக்கின. 
 
பெரும்பான்மை மக்களுக்கு அகதிகளை பிடிக்கவில்லை. 
 
 
 
A strong majority of Australians, 60 per cent, also want the Abbott government to “increase the severity of the treatment of asylum seekers.”

 

  • கருத்துக்கள உறவுகள்

60% அவுஸ்திரேலியர்களுக்கு அகதிளைப் பிடிக்கவில்லை என்றால் பெரும்பான்மை மக்கள் விருப்பின் அடிப்படையில் அவுஸ்திரேலியா ஐநா அகதிகள் சாசனத்தில் இருந்து வெளியேறவேண்டும். அகதிகள் வேறு நாடுகளுக்குப் போகத் தலைப்படுவார்கள். இப்படி ஆபத்தான கடல்பயணங்களை செய்யத் தூண்டுவதும் அந்த அரசுதான் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

இங்கு அகதிகள் என்ற Broad Term  அல்ல பிரச்சனை. யார் அவர்கள் என்பது தான் பிரச்சனை.  :D

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் எமது இனத்தைப்பற்றி தான் நான் கவலைப்பட முடியும் இசை அண்ணா .... ஆப்கானில் இருந்து ஆபிரிக்கா வரை செல்ல எனக்கு பரந்த மனசு இல்லைப்பா..... :D

  • கருத்துக்கள உறவுகள்

சுண்ட்ஸ், என் கேள்விகளுக்கென்ன பதில்?

  • கருத்துக்கள உறவுகள்

உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களின் படி வந்த அகதிகளில் ஒருதொகுதியினர் இலங்கைக்கு அனுப்பப்பட்டு விட்டதாகவும் அவர்கள் எல்லோரும் நலமாக இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.... :D

இதான் பதில்

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு பெயர் பதில் இல்லை. குதர்க்கம்.

#அவர்கள் எல்லோரும் நலமாக இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன#

இலங்கை அரசு தானே சொல்கிறது? முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்தது மனிதாபிமான மீட்பு நடவடிக்கை, சமுர்தி உத்யோகத்தர் தன்னை தானே மரத்தில் கட்டினார், கான்ஸ்டபிள் தானே தன் காரை எரியூட்டினார், விஜித தேரர் தனக்கு தானே சுன்னாத் செய்தார். இந்த உறுதிபடுத்தப் பட்ட உண்மைகளையும் நீங்க நம்புறீங்களா சுண்டல்?

நீங்க பேசாம அடுத்த அவுசுக்கான இலங்கை தூதுவராகலாம்.

சும்மா சொல்லக் கூடாது முகத்தை சீரியசா வச்சபடி செம காமெடி பண்ணுவது ஒரு தனிக் கலை. உங்களுக்கு இது நல்லாவே வருது.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசு சொல்லல்ல ஆஸ்திரேலியா அரசு சொல்லி இருக்கு....

இது வரை ஆஸ்திரேலியாவில் இருந்து அனுப்ப பட்ட எவருக்கும் பாதுகாப்பு பிரச்சனை வந்ததாக தகவல் இல்லை.....

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி நாங்க அனுப்பின ஆக்கள 4ம் மாடில நையப்புடைக்கிறாங்க, ஆனா நாங்க தொடர்ந்து அனுப்புவம் என்று அவுஸ் சொல்லுமாக்கும்?

சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணா போச்சுது.

தகவலுக்குரிய லிங் இருந்தா கொடுக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்

The Federal Government has confirmed that 41 asylum seekers have been handed over to Sri Lankan authorities after being intercepted near the Cocos Islands.

It is believed that two boats were intercepted north-west of Australia in late June, but the Government was not confirming their existence.

However, Immigration Minister Scott Morrison has now confirmed that one of the boats, intercepted west of the Cocos Islands, was carrying 37 Sinhalese and four Tamils from Sri Lanka.

A statement from the Immigration Minister says the 41 people on board were processed at sea and transferred to the Sri Lankan navy yesterday near Sri Lanka.

The Government says one of the Sinhalese may have a case for seeking asylum but opted to be handed back to Sri Lanka.

The statement also said that all of the people on board were "safe and accounted for" and the boat was not in distress.

37 Sinhalese :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.