Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் படிப்போம் தமிழ் படிப்போம் 3

Featured Replies

இவர் ஏன் இப்பிடி ரெட்டைப்பல்லைநீட்டிக்கொண்டு முழிக்கிறார்?

மூன்றாவது பல்லு இல்லாததால்.

  • Replies 128
  • Views 75.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

என்னதிது நான் வாறநேரம் வாத்தியார் மட்டம்போடுறார்

  • கருத்துக்கள உறவுகள்

வரவர மாணவர்கள் வாத்தியாரைத் தேட வேண்டியுள்ளது........

:lol: :lol: :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் அவர்களே,

நான் சில வாரங்கள் வகுப்பிற்கு வரமுடியாதுள்ளதால், வாங்கியிலுள்ள எனது இருக்கையில் யாரும் உட்காரக்கூடாததென்ற 'நல்ல எண்ணத்தில்' மறைவாக பிளேடு துண்டுகளை பதித்துள்ளேன்.. :o

இதனால் எழும் பிரச்சனைகளுக்கு, நான் பொறுப்பாளியாக முடியாதென்று உங்களிடம் ரகசியமாக இத்தால் கூறிகொள்ள விரும்புகிறேன். :)

  • கருத்துக்கள உறவுகள்

அட பிளேடு போடுற ஆளா நீங்கள் ???? :lol: :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பள்ளிக்குடத்தில்  வாத்தியாருக்கும் பிளேடா  ??? :D:lol::icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் அவர்களே,

நான் சில வாரங்கள் வகுப்பிற்கு வரமுடியாதுள்ளதால், வாங்கியிலுள்ள எனது இருக்கையில் யாரும் உட்காரக்கூடாததென்ற 'நல்ல எண்ணத்தில்' மறைவாக பிளேடு துண்டுகளை பதித்துள்ளேன்.. :o

இதனால் எழும் பிரச்சனைகளுக்கு, நான் பொறுப்பாளியாக முடியாதென்று உங்களிடம் ரகசியமாக இத்தால் கூறிகொள்ள விரும்புகிறேன். :)

பிறகு படக்கூடாத இடத்தில் பிளேடு பட்டால் வீண் பழி உங்களுக்கு அண்ணா :lol:

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் அவர்களே,

நான் சில வாரங்கள் வகுப்பிற்கு வரமுடியாதுள்ளதால், வாங்கியிலுள்ள எனது இருக்கையில் யாரும் உட்காரக்கூடாததென்ற 'நல்ல எண்ணத்தில்' மறைவாக பிளேடு துண்டுகளை பதித்துள்ளேன்.. :o

இதனால் எழும் பிரச்சனைகளுக்கு, நான் பொறுப்பாளியாக முடியாதென்று உங்களிடம் ரகசியமாக இத்தால் கூறிகொள்ள விரும்புகிறேன். :)

அடப்பாவி..... யாரும் கவனிக்காமல் இருந்து,

ஆசனப் பகுதியில்.... பிளேடு வெட்டினால்,

யாரப்பா... அதுக்கு, மருந்து போட்டு கட்டி விடுறது.

  • கருத்துக்கள உறவுகள்

IMAGE1All8223.jpg

சுமே வரேக்க உப்புத்தூள் கொண்டு வரவும்

  • கருத்துக்கள உறவுகள்

images.jpg06-match-box-300.jpg

ருல்பன்,  வரும் போது.... நெருப்பெட்டி கொண்டு வரவும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சரி தமிழ் படிக்க ஆவலாக வகுப்பிற்கு வருபவர்களுக்கான 5  கேள்விகள்
ஒவ்வொரு கேள்விக்கும் தலா 2 புள்ளிகள்
முதலாவதாக  சகல கேள்விகளுக்கும் ஒரே முறையில் விடை எழுதியவருக்குப் பின்னர் புள்ளிகள் வழங்கப்படும். ( வாத்திக்கு நேரம் இருந்தால்)

100 கேள்விகளுக்குப் பின்னர் மொத்தப்புள்ளிகளின் அடிப்படையில்
அதிக புள்ளிகளைப் பெற்றவருக்குப் புலமைப்பரிசில் வழங்கப்படும்

1.மொழியைப் பிழையின்றிப் பேசவும் எழுதவும் உதவி  செய்வது .............?
சரியான பதிலைத் தெரிவு செய்யவும்

இலக்கியம்
இலக்கணம்
அகராதி

2.முதல் எழுத்துக்கள் எத்தனை?
அவை யாவை?

3.சார்பெழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?
சரியான பதிலைத் தெரிவு செய்யவும்

10
20
30

4.உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் எத்தனை?
சரியான பதிலைத் தெரிவு செய்யவும்

240
360
90

5. உயிர் மெய் நெடில் எழுத்துக்கள் எத்தனை?
சரியான விடையைத் தெரிவு செய்யவும்

128
126
226

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் வரும்போதே கேள்வியைக்கேட்டு மண்டையைக்காய வைக்கிறாரே யாராவது பதில் எழுதினாப்பிறகு ஈயடிச்சான் கொப்பி பண்ணவேண்டியதுதான் எதற்கும் இலையான் கொல்லி எழுதுகிறவரைக்கும் பொறுப்போம்....

நாலுபேர் தாறுமாறா எழுதினாப்பிறகு நானும் எழுதினா வாத்தியார் கண்டுபிடிக்கமாட்டார்

ரெண்டுநாள் கழிச்சு குருட்டுப்பூனை விட்டத்தில பாய்கிறமாதிரி குத்து மதிப்பா எழுதவேண்டியதுதான்.

இதில எதையாதவது தெரிவு செய்கிறதென்றாலும் 24 மணித்தியாலம் வேணும் :unsure: :unsure: :blink:

  • கருத்துக்கள உறவுகள்

---

100 கேள்விகளுக்குப் பின்னர் மொத்தப்புள்ளிகளின் அடிப்படையில்

அதிக புள்ளிகளைப் பெற்றவருக்குப் புலமைப்பரிசில் வழங்கப்படும்

1.மொழியைப் பிழையின்றிப் பேசவும் எழுதவும் உதவி  செய்வது .............?

சரியான பதிலைத் தெரிவு செய்யவும்

இலக்கியம்

இலக்கணம்

அகராதி

2.முதல் எழுத்துக்கள் எத்தனை?

அவை யாவை?

அகர முதல, எழுத்தெல்லாம்....

ஆதி பகவன் முதற்றே உலகு.

3.சார்பெழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?

சரியான பதிலைத் தெரிவு செய்யவும்

10

20

30

4.உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் எத்தனை?

சரியான பதிலைத் தெரிவு செய்யவும்

240

360

90

5. உயிர் மெய் நெடில் எழுத்துக்கள் எத்தனை?

சரியான விடையைத் தெரிவு செய்யவும்

128

126

226

  • கருத்துக்கள உறவுகள்
கேள்வி பிறந்தது நேற்று பாஞ்சர் பறந்துவந்தார் இன்று!.
 
இத்தனைநாள் வகுப்புக்கு ஏன் வரவில்லை என்று கேட்கக்கூடாது?. இருந்தாலும் காரணத்தையும் சொல்லிவிடுகிறன். இந்தமுறை பாஞ்சுக்குப் படிக்கப் பஞ்சியாக இருந்தது. படிக்காமல் பாசுபண்ண ராசவன்னியர் கூறிய அறிவுரையைப் பின்பற்றினேன். பின்பற்றிய பின்புதான் வாத்தியார் கடிநாய் வளர்ப்பது தெரியவந்தது. :(  
 
வாத்தியார் வீட்டு நாய்க்குப் பயந்து வேலியால் பாய்ந்து அவர் அகத்தாளுக்கு பலாப்பழம் கொடுத்து மடக்கி வாத்தி தயாரித்த கேள்விப் பேப்பரை மடக்க முயன்றேன். மனிசி அமசடக்கி. பழத்தையும் வாங்கி என்னைக்கொண்டே என்ரை காசிலை பலசரக்கும் வாங்கிப்போட்டு கடைசிவரை பேப்பரைக் காட்டாமல் ஏமாத்திப்போட்டா. மனவருத்தத்திலை சம்பவத்தை சகாராத் தங்கச்சிக்குச் சொல்லி, வேலிபாய்ஞ்ச கதையையும் சொல்லிப்போட்டன். ஆனால் அதுமுதல் வேலியில் ஒணான் ஓடினாலும் பாஞ்சர்தான் வேலிபாயிறார் என்று சகாராத் தங்கச்சி நினைக்கத்தொடங்க.... அவ ஆத்துக்காரர் இப்பஒன்றுக்கு இரண்டு அல்சேசன் நாய்கள் வாங்கி வளர்க்கத் தொடங்கி... பாஞ்சரைக்கண்டால் பஞ்சு பஞ்சாக்கு என்று பழக்கியும் வைத்திருக்கிறாராம். பரீட்சை எழுத, ஒழித்து ஒழித்துத்தான் வந்தேன்.  
 
வாத்தியாருக்கு எனது விடையுடன் வணக்கங்கள் பல!!. நான் ஏகலைவன் வாரிசு குருவே!
 
1.மொழியைப் பிழையின்றிப் பேசவும் எழுதவும் உதவி  செய்வது .............?
சரியான பதிலைத் தெரிவு செய்யவும்
 
இலக்கியம்
இலக்கணம்
அகராதி
 
2.முதல் எழுத்துக்கள் எத்தனை?
அவை யாவை?
முதல் எழுத்துக்கள் 30 ஆகும்.
ஆவையாவன உயிரெழுத்து மற்றும் மெய்யெழுத்து ஆகும்.
 
3.சார்பெழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?
சரியான பதிலைத் தெரிவு செய்யவும
10
20
30
 
4.உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் எத்தனை?
சரியான பதிலைத் தெரிவு செய்யவும
240
360
90
 
5. உயிர் மெய் நெடில் எழுத்துக்கள் எத்தனை?
சரியான விடையைத் தெரிவு செய்யவும
128
126
226
 
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னவோ பாஞ்சுக்கு சகாரா விடையலளைச் சொல்லிக் குடுத்திருக்குமோ எண்டு சந்தேகம்.

3.சார்பெழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?
சரியான பதிலைத் தெரிவு செய்யவும
10
20
30
 
சார்பெழுத்துக்கள் 217 என்பது தான் நான் படித்தது

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1.மொழியைப் பிழையின்றிப் பேசவும் எழுதவும் உதவி  செய்வது .............?
சரியான பதிலைத் தெரிவு செய்யவும்
 
இலக்கியம்
இலக்கணம்
அகராதி
 
2.முதல் எழுத்துக்கள் எத்தனை?
அவை யாவை?
முதல் எழுத்துக்கள் 30 ஆகும்.
ஆவையாவன உயிரெழுத்து மற்றும் மெய்யெழுத்து ஆகும்.
 
3.சார்பெழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?
சரியான பதிலைத் தெரிவு செய்யவும
10
20
30
 
4.உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் எத்தனை?
சரியான பதிலைத் தெரிவு செய்யவும
240
360
90
 
5. உயிர் மெய் நெடில் எழுத்துக்கள் எத்தனை?
சரியான விடையைத் தெரிவு செய்யவும
128
126
226

சகல கேள்விகளுக்கும் பாஞ்ச் சரியான விடைகளை அளித்துள்ளார்.

வாழ்த்துக்கள் பாஞ்ச் :D

  • கருத்துக்கள உறவுகள்

...

... இப்ப ஒன்றுக்கு இரண்டு அல்சேசன் நாய்கள் வாங்கி வளர்க்கத் தொடங்கி... பாஞ்சரைக் கண்டால் பஞ்சு பஞ்சாக்கு என்று பழக்கியும் வைத்திருக்கிறாராம். பரீட்சை எழுத, ஒழித்து ஒழித்துத்தான் வந்தேன்.

ஓ.. நீங்கள் ஓடி ஒளியும் 'சிதம்பர ரகசியம்' இதுதானா? :lol:

பாஞ்சு பாஞ்சு வகுப்பிற்கு வரவேண்டியவர், இப்படி பஞ்சாகிப் போவெனென்று பஞ்சியாய் கிடப்பது பற்றி பஞ்சாயத்து வைத்து பாஞ்ச் அவர்களை பஞ்சர் (Puncture) ஆக்கிவிட வேண்டியதுதான்.. :icon_idea::)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வினாக்கள்  பகுதி 2

6.) குற்றியலுகரம் என்பதைப் பிரித்து எழுதினால் எப்படி வரும் ?

7.) பசு என்ற சொல்லில் உள்ள உகரத்தின் மாத்திரை எவ்வளவு?

8.) பாடு என்ற சொல்லில் உள்ள உகரத்தின் மாத்திரை எவ்வளவு?

9.) பெயர்ச்சொற்கள் எத்தனை வகைப்படும்?
அவை யாவை?

10.) சிவப்பு, இனிப்பு, சதுரம், கோபம் ஆகிய சொற்கள்
எந்த வகையைச் சேர்ந்த பெயர்ச்சொற்களாகும்?

  • கருத்துக்கள உறவுகள்

ஓ.. நீங்கள் ஓடி ஒளியும் 'சிதம்பர ரகசியம்' இதுதானா? :lol:

பருந்தைக் கண்டால் குருவி ஓடி ஒழியத்தானே வேண்டும் ராசவன்னியரே....!! :(
 
வன்னியரே! நீங்கள் வன்னிக்காட்டுக்குள் இருப்பதால் உங்களுக்குப் பாதகமில்லை. நான் பாஞ்சு பாஞ்சு எங்கும் திரிவதால் பதுங்கிப் பதுங்கித்தானே திரியவேண்டும். 
 
'உயரப்பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா?'  :o
 
நான் முக்கி முனகிப் படித்து பரீட்சையில் பாசாகினாலும்.! வாத்தியாரிட்டை ஏச்சும், பேச்சும் வாங்கிப் போதாதற்கு பிறின்சிப்பாலிடமும் குழப்படிக்கு அடிவாங்கியும், பரீட்சையில் எங்களைப்பார்த்து எழுதிப் பாசாகிவிட்டுப் பவிசுகாட்டித் திரிந்த மெசொபொத்தேமியா சுமேரியரும், வல்வை சகாறாவும் பிரபல எழுத்தாளர்களாக மாறிப் புத்தகங்களும் வெளியிட்டு உயர உயரப் பறக்கிறார்கள். நாங்கள், மன்னிக்கவும். நான் இப்போதும் வாத்தியார் வைக்கும் பரீட்சையில் சித்தியடைவேனா? என்று ஏங்கிக்கொண்டிருக்கிறேன். வாத்தியாரோ...!! சுமேயும், சகாவும் எழுதின புத்தகங்களைத் தேடித் தேடித் தன்னுடைய அறிவை மேலும் வளர்த்துக்கொள்ள ஓடித்திரிவதைக் கண்டபின்பும் நான் ஓடி ஒழியாமல் ஒளிரமுடியுமா??  :huh:
  • கருத்துக்கள உறவுகள்

வினாக்கள்  பகுதி 2

6.) குற்றியலுகரம் என்பதைப் பிரித்து எழுதினால் எப்படி வரும் ?

குற்று + இயல்+உகரம்

7.) பசு என்ற சொல்லில் உள்ள உகரத்தின் மாத்திரை எவ்வளவு?

ஒரு மாத்திரை

8.) பாடு என்ற சொல்லில் உள்ள உகரத்தின் மாத்திரை எவ்வளவு?

ஒரு மாத்திரை

9.) பெயர்ச்சொற்கள் எத்தனை வகைப்படும்?
அவை யாவை?

ஆறு வகைப்படும்

அவை பொருட்பெயர், இடப்பெயர், தொழிற்பெயர்,காலப்பெயர், சினைப்பெயர், குணப்பெயர்.

10.) சிவப்பு, இனிப்பு, சதுரம், கோபம் ஆகிய சொற்கள்
எந்த வகையைச் சேர்ந்த பெயர்ச்சொற்களாகும்?

குணப்பெயர்

பருந்தைக் கண்டால் குருவி ஓடி ஒழியத்தானே வேண்டும் ராசவன்னியரே....!! :(
 
வன்னியரே! நீங்கள் வன்னிக்காட்டுக்குள் இருப்பதால் உங்களுக்குப் பாதகமில்லை. நான் பாஞ்சு பாஞ்சு எங்கும் திரிவதால் பதுங்கிப் பதுங்கித்தானே திரியவேண்டும். 
 
'உயரப்பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா?'  :o
 
நான் முக்கி முனகிப் படித்து பரீட்சையில் பாசாகினாலும்.! வாத்தியாரிட்டை ஏச்சும், பேச்சும் வாங்கிப் போதாதற்கு பிறின்சிப்பாலிடமும் குழப்படிக்கு அடிவாங்கியும், பரீட்சையில் எங்களைப்பார்த்து எழுதிப் பாசாகிவிட்டுப் பவிசுகாட்டித் திரிந்த மெசொபொத்தேமியா சுமேரியரும், வல்வை சகாறாவும் பிரபல எழுத்தாளர்களாக மாறிப் புத்தகங்களும் வெளியிட்டு உயர உயரப் பறக்கிறார்கள். நாங்கள், மன்னிக்கவும். நான் இப்போதும் வாத்தியார் வைக்கும் பரீட்சையில் சித்தியடைவேனா? என்று ஏங்கிக்கொண்டிருக்கிறேன். வாத்தியாரோ...!! சுமேயும், சகாவும் எழுதின புத்தகங்களைத் தேடித் தேடித் தன்னுடைய அறிவை மேலும் வளர்த்துக்கொள்ள ஓடித்திரிவதைக் கண்டபின்பும் நான் ஓடி ஒழியாமல் ஒளிரமுடியுமா??  :huh:

பாஞ்ச வேண்டுமானால் என் இரண்டு புத்தகங்களையும் உங்களுக்கு அனுப்பிவைக்கட்டுமா ???? :D
 
  • கருத்துக்கள உறவுகள்

பாஞ்ச வேண்டுமானால் என் இரண்டு புத்தகங்களையும் உங்களுக்கு அனுப்பிவைக்கட்டுமா ???? :D

தன்னியனானேன் சோதரி. :wub:

  • கருத்துக்கள உறவுகள்
6.) குற்றியலுகரம் என்பதைப் பிரித்து எழுதினால் எப்படி வரும் ?
    குற்று + இயல் + உகரம் என்று வரும்
 
7.) பசு என்ற சொல்லில் உள்ள உகரத்தின் மாத்திரை எவ்வளவு?
    1மாத்திரை 
 
8.) பாடு என்ற சொல்லில் உள்ள உகரத்தின் மாத்திரை எவ்வளவு?
    1/2 மாத்திரை
 
9.) பெயர்ச்சொற்கள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
    பெயர்ச்சொற்கள் 6வகைப்படும்
     அவையாவன 
    பொருளாகு பெயர், இடவாகு பெயர், காலவாகு பெயர், சினையாகு பெயர், பண்பாகு பெயர், தொழிலாகு  பெயர். என்பனவாகும்.
 
10.) சிவப்பு, இனிப்பு, சதுரம், கோபம் ஆகிய சொற்கள் எந்த வகையைச் சேர்ந்த பெயர்ச்சொற்களாகும்?
     பண்புப்பெயர் வகையைச் சேர்ந்த பெயர்ச்சொற்களாகும். 
 
  • கருத்துக்கள உறவுகள்

பருந்தைக் கண்டால் குருவி ஓடி ஒழியத்தானே வேண்டும் ராசவன்னியரே....!! :(
 
வன்னியரே! நீங்கள் வன்னிக்காட்டுக்குள் இருப்பதால் உங்களுக்குப் பாதகமில்லை. நான் பாஞ்சு பாஞ்சு எங்கும் திரிவதால் பதுங்கிப் பதுங்கித்தானே திரியவேண்டும்.

அது பருந்தல்ல, பாஞ்ச் அவர்களே, நீங்கள் ஒளிந்து ஒளிர்வதால் பதட்டத்தில் பருந்து என எண்ணிவிட்டீர்கள், அது அரு'மருந்தாகும்'. :)

நான் முக்கி முனகிப் படித்து பரீட்சையில் பாசாகினாலும்.! வாத்தியாரிட்டை ஏச்சும், பேச்சும் வாங்கிப் போதாதற்கு பிறின்சிப்பாலிடமும் குழப்படிக்கு அடிவாங்கியும், பரீட்சையில் எங்களைப்பார்த்து எழுதிப் பாசாகிவிட்டுப் பவிசுகாட்டித் திரிந்த மெசொபொத்தேமியா சுமேரியரும், வல்வை சகாறாவும் பிரபல எழுத்தாளர்களாக மாறிப் புத்தகங்களும் வெளியிட்டு உயர உயரப் பறக்கிறார்கள். நாங்கள், மன்னிக்கவும். நான் இப்போதும் வாத்தியார் வைக்கும் பரீட்சையில் சித்தியடைவேனா? என்று ஏங்கிக்கொண்டிருக்கிறேன். வாத்தியாரோ...!! சுமேயும், சகாவும் எழுதின புத்தகங்களைத் தேடித் தேடித் தன்னுடைய அறிவை மேலும் வளர்த்துக்கொள்ள ஓடித்திரிவதைக் கண்டபின்பும் நான் ஓடி ஒழியாமல் ஒளிரமுடியுமா??  :huh:

நீங்கள் சித்தியடைந்து 'சக்தி'யடைவீர்களென உங்கள் யாழ் வகுப்பு பெறுபேறுகள் சொல்கின்றனவே..? (ஆனால் சக்தியென்றால், எது, யாரென்று மட்டும் கேட்டுவிடாதீர்கள்..!) :lol:

வாழ்த்துக்கள், பாஞ்ச். :)

பாஞ்ச வேண்டுமானால் என் இரண்டு புத்தகங்களையும் உங்களுக்கு அனுப்பிவைக்கட்டுமா ???? :D

கடைசி வாங்கியில் இருக்கும் அவருக்கு அவசியம் தேவைதான், அப்படியே வேலி தாண்டி ஓடிவிடலாமல்லவா? :)

  • கருத்துக்கள உறவுகள்

அது பருந்தல்ல, பாஞ்ச் அவர்களே, நீங்கள் ஒளிந்து ஒளிர்வதால் பதட்டத்தில் பருந்து என எண்ணிவிட்டீர்கள், அது அரு'மருந்தாகும்'. :)

நீங்கள் சித்தியடைந்து 'சக்தி'யடைவீர்களென உங்கள் யாழ் வகுப்பு பெறுபேறுகள் சொல்கின்றனவே..? (ஆனால் சக்தியென்றால், எது, யாரென்று மட்டும் கேட்டுவிடாதீர்கள்..!) :lol:

வாழ்த்துக்கள், பாஞ்ச். :)

கடைசி வாங்கியில் இருக்கும் அவருக்கு அவசியம் தேவைதான், அப்படியே வேலி தாண்டி ஓடிவிடலாமல்லவா? :)

:lol: :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாஞ்ச்... 6 வது கேள்விக்கான விடை பிழை
சுமேரியர்..... 6 வது 8 வது கேள்விகளுக்கான விடைகள் பிழை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.