Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய அணுகுமுறையின் அடிப்படைகளில் மாற்றம்தேவை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய அணுகுமுறையின் அடிப்படைகளில் மாற்றம்தேவை

இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசுவதற்கான வாய்ப்புக்காக புதுடில்லியில் கடந்த சில தினங்களாகக் காத்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் தூதுக்குழு அவரிடம் கையளிப்பதற்கென்று வைத்திருந்த மகஜரை இந்திய அரசாங்கத்தின் உயரதிகாரிகளிடம் கையளித்து விட்டு நேற்று சனிக்கிழமை ஏமாற்றத்துடன் சென்னை திரும்பியிருக்கிறது.

அணிசேரா இயக்க நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு விட்டு ஹவானாவிலிருந்து நாடு திரும்பியதும் கலாநிதி சிங், இரா. சம்பந்தன் தலைமையிலான ஐவர் கொண்ட தூதுக்குழுவைச் சந்திப்பதற்கான வாய்ப்பு இருக்கின்றது என்று நம்பிக்கை கொடுக்கப்படாதிருந்திருந்தா

  • Replies 80
  • Views 9.2k
  • Created
  • Last Reply

வணக்கம் உறவுகளே

இக்க்ட்டுரையானது இந்தியாரசின் அவமானங்களையும் அப்படி பட்டும் விக்கிரமாதித்தன் போல மீண்டும் முருங்கை மரத்தில் ஏறும் இந்தியரசின் நடவடிக்கைகளை சரியாக வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது

இந்திய ஆக்கிரமிப்பு படை பற்றி எழுதும் போது எனக்கும் சபேசனுக்கும் எத்தனியோ முட்டுக்கட்டைகள் எத்தனையோ தனிமடல்கள்.எல்லாம் இதை நிறுத்தச்ச் சொல்லி நான் அப்போது எழுதுவதை நிறுத்தினேன் காரணம் பயமல்ல அது எம் உறவுகளின் இந்தியா நமக்கு சார்பாக வரும் என்ற நப்பாசையின் விளைவு என்றுதான் நினைத்து நிறுத்தினேன்.அதாவது ஆக்கிரமிப்பால் இறந்தவர்களையே மறக்கச்சொல்லி எத்தனியோ அன்புக்கட்டளைகள்.இது என்னத்தை காட்டுகின்றது எண்டால் ஒரு நாளில் தமிழீழம் கிடைத்து சிங்கள அரசாங்கத்துடன் ஒப்பந்தங்கள் செய்ய முற்படும் நேரம் வந்தால் எமக்காய் எம்முயிரை தந்த தியாகிகளையும் போரளிகளையும் மறக்கச்சொல்லுவது போன்றது.அது நடக்கக்கூடும் ஒரு நாள் அது இந்த யாழ்களத்தில் கூட எழுதப்படக்கூடும்.ஒருவர் கேட்டார் தம்பி 85 இப்போ 2006 இது இன்னும் 20 வருடங்களில் மாறிக்கேட்கப்படும் என்பதில் என்ன சந்தேகம்.??.ஜயா நம் தமிழன் தான் எபோதும் தமிழன்தான்.IPKF பற்றி எழுதும் போது 'எந்தப் புத்தில் எந்தப்பாம்மெண்டு" கேட்டவரும் இர்க்கிறார்கள்.அதாவது ஒரு அந்நிய காடைக்கும்பல் எம்மக்களை அழித்தது பற்றி எழுத முனைந்ததின் விழைவே. தெரிந்தொ தெரியாமலோ இப்போ புலிகள் தான் எம்விடுதலைக்காக உழைக்கும் வீரர்கள் மற்றைய இயக்கங்களின் தலைவர்களின் சுயநல நோக்கால் எத்தைனையோ விடுதலை வீரர்கள் இக் களத்தில் இருந்து அகற்றப்பட்டார்கள் அல்லது வெளியேறினார்கள் என்பது நிதர்சனம்.

எமது விடுதலை போராட்டம் எந்த ஒரு நாட்டினதுமோ அல்லது எந்தவொரு தனிமனிதரையுமோ நம்பி ஆரம்பிக்கப்படவில்லை.அதென்னய

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழவன் உங்கள் ஆதங்கம் கோபம் எல்லாமே புரிகின்றது. தமிழனக அரசியல் பற்றி பெரிதாக நான் அறிந்ததில்லை. அதனால் தமிழ் நாட்டு, விடையங்களில் கருத:த வை்பபதை தவிர்பது வழமை ஆனால் இன்றைய இந்த சூழலானது. மிகவும் கீழ்த்தரமான, கேவலமான, வெட்க கேடான வேலை. ஒரு வயது முதிர்ந்த அரசியல் வாதி, பல பட்டங்கள் பெற்ற அறிவுஜீவி செய்யக்கூடிய காரிமல்ல இது. தமிழக சட்டமன்றத்தில், எங்கள் பிஞ்சுகள் கருகான போது கண்ட கூட்டம் போட்ட போது மிகவும் மகிழ்ந்தேன். தமிழக அரசியலில் மாற்றம் வந்து விட்டதாகவே உணர்ந்தேன். ஆனால் இன்று இன்றை இந்த நிமிடம். என்ன சொல்லி திட்டலாமம் என்று வார்த்தை தேடிநிற்க்கின்றேன். ஒரு தலைமை என்பது, அதுவும் அரசியல் தலைமை என்பது மகக்களுக்காக இருக்க வேண்டும். சொந்த நிறுவனங்களும், பெருக்கும் புகழுக்குமல்ல. கருணாநிதியின் இந்த கோர முகத்தை, இப்படியான அரசியல் முகம் ஒன்று இருக்கிறது என்பதை முதல் தடவையாக, எனக்கு நினைவு தெரிந்த பின் நேரடியாக அறிகின்றேன். மிகவும் வருத்தமாக இருக்கின்றது. ஒரு தமிழன் மற்றைய தமிழன் சாகும் போதும், தன் அரசியல் சுயநலங்களை பற்றிக்கவலை கொள்கிறான் என்ற போது. சாதரணமான மனிதக்குணமற்ற இவர்கள் எப்படி தலைவர்களாக முடியும்?

காட்டு மிராண்டிகளாக, கொலைகாரார்களாக சித்திரிக்கின்றார்களா? எம்மை? தமிழ் தமிழ் என்று மேடையில் பேசும் போதும் வாய்கிழிய கத்தும் போதும் தமிழன் இரத்தம் மண்ணில் பாயும் போது இந்த பரதேசிக்கூட்டங்கள் வாய் சற்றும் சலனப்பட்டிருக்காதா? நாங்கள் யார்? எங்களுக்கு ஒரு அடையாளம் இல்லையா? எங்களுக்கு ஒரு வரலாறு இல்லையா? சிறிலங்காவிலிருந்து இந்தியா சென்றவர்கள் வேலை இல்லாதவர்களா? இவர்களும் அரசியல் வாதிகள் தானே? இவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தானே? இவர்களும் மக்கள் பிரதிநிதிகள் தானே? ஒரு மக்களின் பிரதிநிதியை ஒரு நாடு ஏற்காவிட்டால் அதன் கருத்த என்ன? அந்த பிரதிநிதி பிரதிநிதிப்படும் அனைவரையும் அவர்கள் வெறுக்கின்றனாரா? ஒரு அற்ப அரசியல் எதிர்காலத்தக்காக, ஒரு இனத்தின் எதிர்காலத்தை குழி தோண்டிப் புதைக்க முனைவது நியாயமா?

எங்கள் பிரதிநிதிகளை தமிழ் நாடு தொடக்கம், டெல்லி வரை அலைக்கழித்து இவர்கள் செய்திருப்பது. அவர்களை அவமானப்படுத்தியிருக்கின்றன

பால் கொடுத்த தாய் கருணாநிதி: ரஜினி

செப்டம்பர் 25, 2006

சென்னை:

அழுதால் தான் குழந்தைக்கு தாய் பால் கொடுப்பாள். ஆனால், திரையுலகத்தினர் அழாமலே பால் கொடுத்த தாய் கருணாநிதி என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.

சென்னையில் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு திரையுலகம் நடத்திய பாராட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது:

சினிமாவைப் பற்றி, சினிமா துறையில் இருப்பவர்களைப் பற்றி வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு அதிகம் தெரியாது. தெரியாத துறையைப் பற்றி நிறை பேர் திட்டுகிறார்கள், விமர்ச்சிக்கிறார்கள். சினிமா துறையில் இருப்பது எவ்வளவு சிரமானது. பிரச்சனைகளை சந்தித்து வர வேண்டும் என்பதெல்லாம் அதில் இருப்பவர்களுக்குத்தான் தெரியும்.

இப்போ சினிமா இன்டஸ்டிரியில் திண்டாட்டம் தான் அதிகம். பத்து பேர் நல்லாயிருந்தாலும், பத்தாயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவது தான் நடந்து வருகிறது.

நல்லாயிருப்பதாக நினைக்கும் அந்த பத்து பேரில் ஐந்து பேர் நல்லாயில்லை. நல்லாயிருப்பது போல நடிக்க வேண்டியிருக்கிறது. வட்டிக்கு காசு வாங்கி, ஒட்டியாணம் வாங்கியவர் அதற்கு வட்டி கட்ட ஒட்டியாணத்தையே விற்று கட்ட வேண்டிய நிலை தான் சினிமாவில் இருக்கிறது.

அசலை கட்ட வீட்டை விற்பார்கள். அதனால் தான் சினிமாக்காரர்கள் தூங்கும் போது கூட காலை ஆட்டியபடி தூங்க வேண்டும் என்பார்கள். இல்லையென்றால் இறந்துவிட்டான் என கூறிவிடுவார்கள்.

சங்கடப்படும் திரையுலகத்தினரை காப்பாற்ற யார் வருவார் என்றிருந்த நிலையில், முதல்வர் கருணாநிதி நிறைய சலுகைகளை வழங்கி திரையுலகத்தினரை காப்பாற்றியுள்ளார்.

எந்தக் குழந்தையும் அழுதால் தான் தாய் பால் கொடுப்பாள். திரையுலகத்தினர் அழாமலே பால் கொடுத்த தாய் கருணாநிதி.

இந்த சலுகைகளை, கலைஞர் தந்த பரிசுகளை யாரும் தட்டிப் பறிக்க விடாதீர்கள். அவ்வாறு ஒரு சூழ்நிலை வந்தால் சங்கங்கள் குரல் கொடுக்க வேண்டும். நானும் உங்களுடன் இருப்பேன்.

பெரிய, பெரிய தயாரிப்பாளர்கள் கூட சினிமாவினால் எல்லாத்தையும் இழந்துள்ளனர். பிரபலமாக இருந்த மாடர்ன் தியேட்டர் என்ன ஆனது. பெரிய நடிகராக, தயாரிப்பாளராக இருந்த அமிதாப் வீடு கூட ஒரு சமயம் ஏலம் விடும் அளவிற்கு போனது. இந்த ரஜினி எம்மாத்திரம்.

அரசியல்வாதிகளுக்கு ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தான் ஜாதகம் மாறும். ஆனால், சினிமா இன்டஸ்டிரியில் உள்ளவங்களுக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஜாதகம் மாறும் (சொல்லிவிட்டு கடகடவென சிரித்தார் ரஜினி)

அரசியல்வாதிகள் சினிமாக்காரர்களை விமர்சனம் செய்கின்றனர். ஒரு தலைவர் விமர்சனம் செய்யலாம். அவரோட வாலு விமர்சனம் செய்யலாம். வாலில் உள்ள முடிகூட விமர்சனம் செய்வதை தான் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

மக்களுக்கு நன்மை செய்யும் கருணாநிதி தனது குடும்பத்தாருடன் நலமாக வாழ வேண்டும். அப்போது தான் தமிழக மக்கள் சந்தோஷமாக இருப்பார்கள் என்றார் ரஜினி. http://thatstamil.oneindia.in/news/2006/09/25/rajini.html

ஓமோம் பால் குடுப்பார் கறுப்புக்கண்ணாடி போட்டு என்னத்தை பார்த்தவர் எண்டு எல்லோருக்கும் தெரியும் காலத்தை பாருங்கய்யா எதுக்கெல்லாம் கவனம் செலுத்தும் தமிழர் தலைவர் கறுப்புக்கண்னாடி மாமணி ஈழத்தவரிடம் அரசியல் சக்கடையை வீசப்பார்கின்றார்.இதுகெல்லா

ஈழத்துமக்களுக்கு சங்கடத்தை ஏர்படுத்தவேண்டாம் என சந்தர்ப்பவாதி கருநாநிதி ஒரு முறை சட்டசபையில் தெரிவித்தாராம் இப்ப யாரையா சங்கடத்தை கொடுத்தது???

துன்பத்தை தந்தவனுக்கே திருப்பிக்கொடு இது தலைவரின் கூற்று ஆக இதற்கெல்லாம் ஒருநாள் பதில் சொல்லியே ஆகவேண்டும்

கருணாநிதியை திட்டி வெறுத்து ஒதுக்கி ஒன்றும் நடக்காது. கருணாநிதியின் உண்மை முகத்தை தெரியாதவர்களிற்கு இது இன்னுமொரு சந்தர்பம். கருணாநிதி என்னத்திற்கு செவிசாய்ப்பார் அவரது பலவீனம் எது என்று அறிந்து அந்த வழியே அவரை வைத்து ஆக வேண்டியதை பார்க்க வேண்டும்.

நாங்கள் விரும்பியோ விரும்பாமலோ கருணாநிதி தான் தமிழ்நாட்டின் இன்றய முதல்வர். அந்த யதார்த்தத்தை ஏற்று செய்ய வேண்டியதை செய்ய முயற்சிக்க வேண்டும். அவரை ஒரு சாதாரண அரசியல்வாதியாக பாராது வல்லவர் கலைஞர் மூத்த தலைவர் என்று தலையில் தூக்கி வைத்து துதிபாடுவதும் பிறகு திட்டித்தீர்ப்பதும் ஒன்றையும் தராது. அவருடைய வழியில் போய் ஆக வேண்டியதை செய்ய வேண்டும் இதை நிச்சயம் வைகே உணர்ந்து கொள்வார்.

வணக்கம். இந்தக் களம் வருவதை இனி தவிர்க்கலாம் என எண்ணியிருக்கிறேன்.

இந்தியத் தமிழர்கள் பாவிக்க இந்தக் களம் ஏற்றதல்ல என்பதை இத்தனை நாட்க்ள் கழித்தாவது உணரமுடிந்திருக்கிறதே. அதுவரைக்கும் மகிழ்ச்சி

ஓமோம் பால் குடுப்பார் கறுப்புக்கண்ணாடி போட்டு என்னத்தை பார்த்தவர் எண்டு எல்லோருக்கும் தெரியும்

இதுமாதிரி தரங்கெட்ட மூன்றாம் தரமான கருத்துக்களை இந்தக் களம் இன்னமும் தொடர்ந்து அனுமதிக்குமானால்.... ரஜினி ஸ்டைலில் சொல்லுவதென்றால் "ஆண்டவனால் கூட இவர்களைத் திருத்த முடியாது" :lol::lol::lol:

உங்களது பிரதிநிதிகள் இந்திய அரசாங்கத்தில் இருப்பவர்களை காண வேண்டுமென்று வந்தவர்கள். பிரதமர் மற்றும் முதல் அமைச்சர், ஏனைய அதிகாரிகளைக் காண வந்தவர்கள் முறைப்படியான "அப்பாயிண்ட்மெண்ட்" இல்லாமல் நினைத்த நேரத்தில் நினைத்தவர்களை பார்க்க ஒரு இடைத்தரகரை நம்பி வந்திருப்பதன் கூத்தை என்னவென்று சொல்வது?

இலங்கையில் இருந்து கிளம்பும் முன்னரே இவர், இவரைப் பார்க்கப் போகிறோம் என்ற திட்டமிடுதல் ஏதாவது இருந்ததா? அல்லது Concerned Officials யாரையாவது தொடர்பு கொண்டார்களா?

யாரோ ஒரு இடைத்தரகர் அழைத்தார் என்று அவரை நம்பி வந்து மோசம் போய் விட்டு ஏனைய இந்தியத் தலைவர்களை நாகரிகமில்லாமல் வசைப்பாடுவது தான் உங்களுக்கு மகிழ்ச்சி என்றால் வசைபாடி விட்டுப் போங்கள்.... உங்கள் அறிவு அவ்வளவு தான் என்று நினைத்துக் கொண்டு நான் என் பொழைப்பை பார்க்க வேண்டியது தான்....

நன்றி! இனி இந்தக் களத்துக்கு வருவதில்லை என முடிவெடுத்திருக்கிறேன்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நண்பர் ஈழவனுக்கு

தங்களின் ஆதங்கம் புரிகிறது.கருணாநிதி ஒரு கபட அரசியல்வாதி.அவரை நம்புவது வீண்.நான் ஒரு தமிழ் நாட்டுத் தமிழன்.

வணக்கம். இந்தக் களம் வருவதை இனி தவிர்க்கலாம் என எண்ணியிருக்கிறேன்.

இந்தியத் தமிழர்கள் பாவிக்க இந்தக் களம் ஏற்றதல்ல என்பதை இத்தனை நாட்க்ள் கழித்தாவது உணரமுடிந்திருக்கிறதே. அதுவரைக்கும் மகிழ்ச்சி

இதுமாதிரி தரங்கெட்ட மூன்றாம் தரமான கருத்துக்களை இந்தக் களம் இன்னமும் தொடர்ந்து அனுமதிக்குமானால்.... ரஜினி ஸ்டைலில் சொல்லுவதென்றால் "ஆண்டவனால் கூட இவர்களைத் திருத்த முடியாது" :lol::lol::lol:

உங்களது பிரதிநிதிகள் இந்திய அரசாங்கத்தில் இருப்பவர்களை காண வேண்டுமென்று வந்தவர்கள். பிரதமர் மற்றும் முதல் அமைச்சர், ஏனைய அதிகாரிகளைக் காண வந்தவர்கள் முறைப்படியான "அப்பாயிண்ட்மெண்ட்" இல்லாமல் நினைத்த நேரத்தில் நினைத்தவர்களை பார்க்க ஒரு இடைத்தரகரை நம்பி வந்திருப்பதன் கூத்தை என்னவென்று சொல்வது?

இலங்கையில் இருந்து கிளம்பும் முன்னரே இவர், இவரைப் பார்க்கப் போகிறோம் என்ற திட்டமிடுதல் ஏதாவது இருந்ததா? அல்லது Concerned Officials யாரையாவது தொடர்பு கொண்டார்களா?

யாரோ ஒரு இடைத்தரகர் அழைத்தார் என்று அவரை நம்பி வந்து மோசம் போய் விட்டு ஏனைய இந்தியத் தலைவர்களை நாகரிகமில்லாமல் வசைப்பாடுவது தான் உங்களுக்கு மகிழ்ச்சி என்றால் வசைபாடி விட்டுப் போங்கள்.... உங்கள் அறிவு அவ்வளவு தான் என்று நினைத்துக் கொண்டு நான் என் பொழைப்பை பார்க்க வேண்டியது தான்....

நன்றி! இனி இந்தக் களத்துக்கு வருவதில்லை என முடிவெடுத்திருக்கிறேன்....

ஓமோம் லக்கி கருத்தை கருத்தால் வெல்லமுடியாதவ்ர் நீங்கல் உங்கள் தலவரை பற்றி குறை சோனபோது இப்ப்டி இருக்குதே உங்கள் தலையை நம்பி மோசம் போன எமக்கு எப்படி இருக்கும்.

:oops:

லக்கி உமக்கும் பட்ச்சிக் காச்சல் தொத்தீட்டுது போல. கூடவே ஒரு வாக்கெடுப்பும் நடத்துமன் லேற்றெஸ் பசன் அது தானாம்.

இங்குள்ளவர்களிற்கு ஊரில உறவினர்கள் நண்பர்கள் என்று பல பிணைப்புகள். அங்கு தினம் நடக்கு அவலங்களால் உறவினர்களை பறிகொடுத்தவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் என்று பலர். ஒரு நாளைக்கு சராசரி 5...10 பொதுமக்கள் காரணம் இன்றி வடக்கு கிழக்கு பிரதேசத்தில் கொல்லப்படுகிறார்கள். இது சராசரியே. அதை விட காணாமல் போவோர் காயப்படுவோர், காயம் என்றால் கால் இல்லை கய்யில்லை விரல்கள் இல்லை கண் இல்லை என்ற கொடுhர விபரங்கள் வெளிவருவதில்லை. பிடித்து சித்திரவதை செய்யப்படுபவர்கள் அந்த சித்திரவைதைகளின் நீண்டகால உடல் உளவியல் தாக்கங்கள் என்று பல. பாதிக்கப்பட்டவர்கள் உங்கள் உறவினரோ நண்பரோ என்றால்தான் இப்படியான விபரங்கள் தெரிய வரும். இப்படியான சூழ்நிலையில் எல்லாரும் உணர்ச்சிவசப்பட்டு எழுதுவது தவிர்க்க முடியாது ஆனால் அது சரி என்று சொல்லவில்லை. இந்த நிலையை நீர் கொஞ்சம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

முந்தி இருந்த யாழ்விட இப்ப இந்த விடயத்தில் முன்னேற்றம் இருக்கு என்று நம்பிறன். அவ்வப்போது உணர்ச்சிவசப்படும் போது நிலமை கட்டுக்கு மீறி போகுது பிறகு கட்டுப்பாட்டில் வருது. :oops:

இந்திய அரசியலை இங்கு எவராவது குறைகூறினால் அதுக்காக கவலை கொள்ள முடியாது... ஆனால் கலைஞர் பற்றி சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது... நாங்கள் விரும்பியோ விரும்பாவிட்டாலோ கலைஞர் தான் இண்றைய தேதியில் ஈழத்தமிழருக்கான நிலையை மாற்றக்கூடிய ஆற்றல் பெற்ற இந்திய தலைவர்...! அவரைத்தவிர வேறு எவராலும் இன்னிலை மாறும் எண்ற நம்பிக்கை இல்லை...!

கலைஞர் ஈழத்தமிழர் விடயத்தில் போதுமானா அக்கறை எடுக்கவில்லை என்பது உண்மைதான்... அதுக்கு அவர் இருக்கும் அரசியலை குறை சொல்லலாமே தவிர அவரை சொல்லி குற்ரம் இல்லை...!

தமிழக காங்கிரசார் பதிவு செய்யும் வளக்குக்களையும் சட்டமண்றத்தில் கொடுக்கும் குரல்களையும் தவிர்த்து கலைஞரால் செயற்பட முடியும் எண்று நம்பவில்லை...! இண்றய நிலையில் இராஜீவ் கொலையை செய்தார்கள் எண்று ஒரு இனத்தை வஞ்சிக்கும் காங்கிரசைப்பார்த்து அன்னை இந்திராவை கொண்ற இனத்தவரை பிரதமராக்கியது ஏன் எண்று கேட்க்கும் நிலையில் அண்ண்று போல் இண்று கலைஞர் இல்லை... அதுக்கு அவரின் வயது ஒரு காரணம்.. இன்னும் ஒண்று அனுபவம்... எதயும் விட்டுப்பிடிக்கும் எண்ணம்..!

அதுக்காக கலைஞரை விட்டுவிட முடியாது... எங்கு சுற்றியும் திரும்பவும் அவரிடம்த்தான் வந்து நிற்க்கவேண்டிய நிலை ஈழத்தவருக்கு இருக்கின்றது... ஆதலால் கலைஞரை செயற்பட தூண்டும் விதத்தில் ஆக்கக்களாயினும் ,கடித்தங்களாயினும், கட்டுரைகளாயினும் அமைய வேணும்... அவரை நோகடித்து இந்தப்பக்கம் தலைவைக்காத மாதிரி அமைவது நல்லதல்ல....!

வணக்கம். இந்தக் களம் வருவதை இனி தவிர்க்கலாம் என எண்ணியிருக்கிறேன்.

இந்தியத் தமிழர்கள் பாவிக்க இந்தக் களம் ஏற்றதல்ல என்பதை இத்தனை நாட்க்ள் கழித்தாவது உணரமுடிந்திருக்கிறதே. அதுவரைக்கும் மகிழ்ச்சி

ஓய்.... :evil: :evil: :evil:

வந்து கருத்து சொல்லும் எண்டால், வந்தாலும் வந்தீர்.... வந்து சொல்லுறீர் ஒரு கருத்து...! அதுவும் முதலும் கடைசியுமா.. :evil:

பிறகென்ன போய் உங்கள் கருத்து பகுதியில ஒரு வாக்கெடுப்பு நடத்துங்கோவன்.... :P இண்டைக்கு சாகவா நாளைக்கு சாகவா எண்டு...! :wink:

வந்து ஒழுங்கு மரியாதையாய் இதுக்கும் பதில் சொல்லுற வேலையை பாரும்....!

நன்றி தலை. உங்களுக்கு பதில் தனிமடலில் அனுப்பியிருக்கிறேன்.

நண்பர்களை பகைவர்களாக ஆக்கிக்கொள்ள விருப்பம் இல்லை. எனவே என் மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள எட்ட நின்று வேடிக்கைப் பார்ப்பதே சரி.

தம்பி ஈழவனுக்கு நான் எப்போதும் தனிமடலில் சொல்லும் அறிவுரையை மீண்டும் சொல்லுகிறேன் "அவசரப்படாதே" :lol::lol::lol:

ஆத்திரக்காரனுக்கு மட்டுமல்ல அவசரக்காரனுக்கும் புத்தி மட்டு தான்.....

தமிழறிஞர் கலைஞர் மிகவும் முதுமை அடைந்து விட்டார். இன்னும் எத்தனை காலத்திற்கு இயற்கை அவரை வைத்திருக்கும் என்று தெரியவில்லை. தந்தை பெரியார் போன்று அவர் நீண்ட காலம் உயிரோடு வாழ வேண்டும். உயிரோடு வாழ்கின்ற காலத்தில் மட்டும் அல்ல, செய்கையிலும் அவரைப் போன்று இருக்க வேண்டும்.

அவர் பல முறை முதல்வராக இருந்தது போதும். தனது மகன் ஸ்டாலின் மீது நம்பிக்கை வைத்து, அவரிடம் பதவியைக் கொடுத்து விட்டு, அவர் வாக்கு அரசியலில் இருந்து வெளியே வரவேண்டும். உலகில் வாழும் அனைத்து தமிழர்களுக்காகவும் மீண்டும் அவர் குரல் கொடுக்க வேண்டும். பகுத்தறிவை பரப்ப வேண்டும்.

அவர் விடை பெறுகி;ன்ற பொழுது சில இலட்சம் திமுக தொண்டர்களின் தலைவராக மட்டும் இருக்கக் கூடாது. 8 கோடி தமிழர்களின் தலைவராக விடை பெற வேண்டும்.

இது என்னுடைய ஆசை. பலருக்கும் இது போன்ற எண்ணம் உண்டு.

ஆனால் இந்த வயதிலும் அவர் முதல்வர் நாற்காலி மீது இத்தனை ஆசை வைத்திருக்கும் போது எங்களின் ஆசை வெறும் கனவாக மட்டும்தான் இருக்கும்.

சபேசனுடைய ஆசைதான் என்னுடையதும்... கலைஞர் அரசியலை துறந்தால் மிகமகிழ்ச்சி.... அவரின் அறிவுக்கும் ஆற்றலுக்கும் தமிழகம் முட்டுக்கட்டையாக நிண்றது என்பதுதான் உண்மை...! அவருடைய பல எண்ணங்களை செயற்படுத்த விடாமல் தடுத்ததும் பாழன இந்த அரசியல்தான்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்புடன் லக்கிக்கு

உங்கள் கலைஞ்ஞர் மீதான அபிமானத்தை நான் மதிக்கிறேன்.

அதற்க்கு தமிழ்நாட்டின் மீது செலுத்தும் அரசியல் பாதிப்புக்களே காரணமாக இருக்கும்.

வைக்கோவினால் ஏற்பாடு செய்யப்பட்ட அரசியல்வருகை ஒன்றுக்கு எதிர்த்தரப்பு அரசியல்வாதம் ஒன்றின் பாசை இதுதான் என்றால் அதேஅரசியலின் சிந்தனாவாதம் இதை ஏற்றுக்கொள்ளலாம்.

இதில் போட்டி பொறாமைக்கு மேலாக ஒரு இனத்தின் கண்ணீர்த்துளிகளின் பிரதிநிதித்துவத்துக்கு கிடைத்த இந்த சாட்டை பொருத்தமா?

தவிர இவளவுகாலமும் இந்த சந்திப்பு ஏற்படுத்திக் கொடுக்க அவர்கள் ஏன் முயலவில்லை.

இதைக்கூட ஒரு பெரும் ஊர்வல நிகழ்வோன்றின் மூலமே அடைய முடிந்தது வைக்கோவால். தி.மு.க வினருக்கு இலகுவாக இருந்திருக்குமே சந்திப்பு செய்து கொடுப்பதற்க்கு ஏன் முயலவில்லை பழையபுண்தாந்தான் பதிலுக்கு உபயோகப்படுமா?

எம் இரத்தத்தில் ஊறிப்போய் இருக்கும் தமிழ்ப்பற்றுக்கு கலைஞ்ஞரின் கலைப்பணியும் ஒரு முக்கிய காரணம்தான் யாரும் மறுக்கவில்லை ஆனால் உபயோகம் செயலுக்கு வேண்டாமா?

தி.மு.க வின் உபயோம் ஒப்பீடு செய்து திருப்த்திப்படுவதற்க்கு ஜெயலலிதா என்ற அலகு தகுதியானதுதானா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம். இந்தக் களம் வருவதை இனி தவிர்க்கலாம் என எண்ணியிருக்கிறேன்.

இந்தியத் தமிழர்கள் பாவிக்க இந்தக் களம் ஏற்றதல்ல என்பதை இத்தனை நாட்க்ள் கழித்தாவது உணரமுடிந்திருக்கிறதே. அதுவரைக்கும் மகிழ்ச்சி

இதுமாதிரி தரங்கெட்ட மூன்றாம் தரமான கருத்துக்களை இந்தக் களம் இன்னமும் தொடர்ந்து அனுமதிக்குமானால்.... ரஜினி ஸ்டைலில் சொல்லுவதென்றால் "ஆண்டவனால் கூட இவர்களைத் திருத்த முடியாது" :D:D:D

லக்கி லுக் அவர்களே, நீங்கள் பதிலளித்தால் என்ன பதிலளிக்காவிட்டால் என்ன இதைப்படிப்பீர்கள் என்று நம்புகின்றேன். தரம் கெட்ட மூன்றாம் தரமான கருத்துக்களுக்கே இப்படி உங்களுக்கு கோபம் வந்தால் தரம் கெட்ட மிக கேவலமான அரசியல் நடாத்துபவர்களை பார்த்து எமக்கு எவ்வளவு வரவேண்டும்? நீங்கள் ஒரு அரசியல் தலமைக்காய் கோபப்படுகின்றீர்கள் நாங்கள் எம் தாய் மண்ணில், சாவின் விளிம்பில் நிற்க்கும் எங்கள் மக்களை நினைத்து கோபப்படுகின்றோம்.

அது மட்டுமன்றி, எங்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கு, இந்திய அரசாலும், தமிழக அரசாலும் அவமானம் இழைக்கப்பட்டதாகவே என்னால் உணர முடிகின்றது. நான் முன்னர் சொன்னது போல, இங்கு யாரும் வேலை வெட்டி இன்றி இந்தியா வரவில்லை. அவர்கள் தங்கள் கடமைகளை செய்தவண்ணமே அங்கு வந்தனர். இந்திய தூதரகத்திலிருந்து சந்திப்பிற்கான சமிக்கைகள் காட்டப்பட்ட பின்னரே, இந்தியா சென்றனர். சரி பிரதமரை விடுங்கள், தமிழக முதல் வார் என்ற ரீதியில், ஒரு தமிழின அரசியல் வரதி, அல்லது கலைஞர் என்ற ரீதியில், கலைஞர் இவர்களை சந்தித்திருக்க கூடாதா?

சூர்யாவின் திருமணத்திற்க்கும் இன்னும் தனது சொந்த விடையங்களுக்காகஒதுக்கிய நேரத்தில் ஒரு 30 நிமிடம் ஒதுக்கியிருக்க முடியாதா? தி.மு.க. வின் தொண்டர் என்ற வகையில் நீங்களும் வைகோவிற்கு எதிரானவராக இருக்கலாம் ஆனால், வைகோவை விலக்கி இந்தியாவில் ஈழத்தமிழர்களால் செயற்ப்பட முடியாது. என்ற நிலையில் நாம் இருக்கின்றோம். சகோதரத்துவத்தையும், கட்சிகளுக்கிடையே ஒற்றுமையையும் அழைத்தவர், சக கட்சி ஒன்றின் ஏற்பாட்டில் ஈழத்தமிழர்கள் இந்திய தலைவர்களை சந்திப்பதற்க்கு முட்டுக்கட்டை போடுவதன் மூலம் ஒட்டு மொத்த ஈழத்தமிழினத்துக்கும் சொல்ல வருவதென்ன?

உங்களது பிரதிநிதிகள் இந்திய அரசாங்கத்தில் இருப்பவர்களை காண வேண்டுமென்று வந்தவர்கள். பிரதமர் மற்றும் முதல் அமைச்சர், ஏனைய அதிகாரிகளைக் காண வந்தவர்கள் முறைப்படியான "அப்பாயிண்ட்மெண்ட்" இல்லாமல் நினைத்த நேரத்தில் நினைத்தவர்களை பார்க்க ஒரு இடைத்தரகரை நம்பி வந்திருப்பதன் கூத்தை என்னவென்று சொல்வது?

இவர் யாரும் பாக்கிஸ்தான் அரசியல் வாதியில்லையே!அவரும் தமிழ் நாட்டிலிருக்கும் அரசியல் வாதி தானே? இவரின் செயற்பாடுகளுக்கு தானே கருணாநிதி பயப்படுகின்றார்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில கருணாநிதியையோ வைகோவையோ குறை சொல்வதைக்காட்டிலும், இந்திய ஆளும் வர்க்கம், அதன் ஆட்சி இயந்திரம் ஆகியவற்றைதான் குற்றம் சொல்லவேண்டும். அவர்கள் இன்னமும் அதே நிலையில்தான் உள்ளார்கள். தமிழ்நாட்டில் உள்ளவர்கள் இவ்விடயத்தில் ஆதிக்கம் செலுத்தும் நிலையில் இல்லை. மாறாக தங்களின் தொண்டர்களின் உணர்வை து}ணடிவிட்டு ஓய்ந்து போய்விடுவார்கள். கருணாநிதிக்கு சுமங்கலி கேபிள் விவகாரம் போல் இது ஒன்றும் அடிமடியில் கைவைக்கும் விடயமில்லை. மௌ;ள காரியமாற்றலாம். சட்டசபையில் வசனம் பேசினால் போதுமானது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் என்ர கருத்தை சொல்லிவிடலாம் என்டு நினைக்கிறன்.

நான் எப்பொழுதுமே இந்திய அரசியல் வாதிகள் மீது பற்று கொண்டதில்லை. ஒரு அரசியல் வாதி எப்படி இருக்ககூடாது என்பதற்கு நான் எப்பொழுதுமே தமிழக அரசியல்வாதிகளை உதாரணமாக எடுத்து கொள்பவன். இங்கே சில மாதங்களுக்கு முன் நான் இந்திய அரசியல் பற்றி எனது கருத்தை வெளியிட்ட பொழுது நிறையப்பேர் அதனை கண்டித்தனர். காரணம் தற்பொழுது தான் தமிழகம் ஈழத்தமிழர்களை ஆதரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் இப்படியான கருத்துக்கள் வேண்டாம் என்று. சரி என்று நானும் விட்டுவிட்டேன்.

நிறைய புத்தகங்களில் இந்தியா வளர்ந்து வரும் ஒரு பொருளாதார வல்லாதிக்க அரசு என்று படித்திருக்கிறேன். ஆனால் என்னைப் பொறுத்த வரையில் ஒரு சராசரி மனிதனின் வாழ்க்கை இந்தியாவில் வேறு. உதாரணமாக அமெரிக்காவை எடுத்துக்கொள்ளலாம். என்ன தான் (தங்களை தாங்களே) வல்லாதிக்க அரசு என்று கூறிக்கொண்டாலும் இன்றும் அமெரிக்காவில் குளிரில் தூங்க இடமின்றி இறப்பவர்களும் இருக்கிறார்கள். இவ் வல்லாதிக்க நாடுகள் வெளித்தோற்றத்திற்கு அப்படி தெரிந்தாலும் உண்மை நிலை வேறு.

தமிழகத்தை பொறுத்த வரையில் இருவர் உயிருடன் இருக்கும் மட்டும் வேறு எவரும் முதலமைச்சர் ஆக முடியாது என்ற நிலை. மாறி மாறி இவர்களே ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள். புதியவர்கள் வந்தால் தானே புதிய மாற்றங்கள் வரும்?

சரி இவர்களை விடுவோம். இங்கே நிறையப்பேர் இந்தியா எங்களை கவுத்துவிட்டது என்டு அலட்டிக்கொண்டிருக்கிறியள். நாங்கள் ஆசைப்பட்டுவிட்டு இப்பொழுது அவர்களை குறை சொல்ல முடியாது. இந்த விடயத்தில் நாங்கள் (ஈழத்தமிழர்கள்) ஏன் இப்படி இருக்கின்றோம் என்று விளங்கவில்லை. ஒரு சாதாரண யாழின பறோட்டாக்கு மீனா வந்து தான் விளம்பரம் பண்ணுமா? ஏன் அதை ஒரு சாதாரண பெண் பண்ணினா நாங்க என்ற பறோட்ட சாப்பிடுறத நிறுத்தவா போறம்? இவ்வளத்திற்கும் மேல மீனா ஒரு நன்றிக்கடனா என்டாலும் எங்களுக்கு ஏதாவது செய்யுறாவா? நாங்கள் சும்மா நாய் மாதிரி பின்னால திரிஞ்சிட்டு அவாவை குறை சொல்ல முடியா. நிதர்சன் சொன்னது போல "நாட்டுப்பற்றாளர்" சுூர்யாவின்ர கல்யாணத்துக்கு அம்மாவும் தாத்தாவும் போகினம். ஆனா நடிகர்களின்ர தொழில் அரைவாசிக்கு மேல எங்கட ஈழத்தமிழர்களால தான் கொடிகட்டிப் பறக்குது என்டது அவைக்கு தெரியும். ஆனாலும் எங்களுக்காக குரல் கொடுக்க மாட்டினம். ஏனென்டா எங்கடயள் தான் செருப்பால அடிச்சாலும் எப்படா அவன்ர படம் வரும் வாங்கி ஓடலாம் என்டு இருக்குதுவளே.

ஒரு வகையில பாக்கப்போனால் இந்தியா இப்படி எமது எம்.பி; மாருக்கு செய்தது ஒரு வெற்றியாகவே நான் கருதுகின்றேன். இனி இந்தியாவோ அல்லது மாற்றுக்கருத்தாளர்களோ புலிகள் இந்தியாவின் பிரதமரை கொன்றனர் என்ற கோசத்தை சற்று குறைப்பார்கள். அதே நேரத்தில் சர்வதேசத்திற்கு சனநாயக முறையில் தேர்தேடுக்கப்பட்ட எம்.பி. க்களிற்கு இந்தியா கொடுத்த பரிசு பற்றியும் புரியும்.

சிலர் நினைக்கலாம் இப்படி பண்ணியதால் இந்தியா எம்மை எதிர்க்கிறது என்று. இந்தியா புலிகளை எதிர்தாலும் அதை செயலில் காட்டுவதற்கு ஒன்றிற்கு பத்து மடங்கு யோசிப்பார்கள். எப்படா இந்தியா இலங்கை பிரச்சனைக்க முழுசுh தலையிடும் என்டு அமெரிக்காவும் அவர்களின் சிநேகிதர்களும் காத்துக்கொண்டிருக்கிறார்கள

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"The language agitation is intended to protect our culture, the prestige of our people, and the Party's political rights"

On Hindi, he says:

"Hindi is like 'carrier food' from the hotel; English is the food made by cook according to one's instructions; and Tamil, food from the mother who knows the family's needs and preferences, and feeds them accordingly"

கருணாநிதி

In October, 1963, an anti-Hindi conference was called in Madras by Karunanithi. The Articles of the Constitution that dealt with the national language was set flames in order to protest the lack of understanding from the Centre.

பல அரசியல் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள கருணாநிதி, குறிப்பாக இந்தி ஆதிக்க எதிர்ப்பு போராட்டம், தொடரூந்து நிலையப் பெயர் மாற்றப் போராட்டம், விலைவாசி உயர்வை எதிர்த்துப் போராட்டம் இவ்வாறாக பலமுறை சிறை சென்றுள்ளார். இலங்கைத் தமிழர்களுக்காவும் கூட! 1983ல் எங்களுக்காக தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியைத் துறந்தார். போடா சட்டத்திற்காக பாஜ மத்திய அரசையே வீழ்த்திய இந்தக் கலைஞர், ஏன் இப்படி “எட்டப்ப” வேலை பார்க்கிறார்? என எண்ணும் நிலை! அவரின் செயலலிதாமீதுள்ள அளப்பரிய வெறுப்புணர்ச்சியே, ஈழத் தமிழரின் நலனையும் காற்றில் விடக்காரணம் போலும். இன்னொரு காரணம், இவருக்கு ஆட்சித் துணையாக இருக்கும் ஈழத்தமிழரை வெறுக்கும் காங்கிரஸும்! கருணாநிதியைத் தாண்டி எவரும் தனிப்பட்ட அறிக்கைகள் விடக்கூடாது என்ற எதேச்சதிகாரப் போக்கு,ஸ்டாலின், தயாநிதி போன்றோரை எமக்காதரவாக கருத்துத் தெரிவிக்கும் சுதந்திரத்தையும் பறித்துவிட்டது. இப்படியே கருணாநிதி திமுக வை முன்நடத்தினால், கருணாநிதியின் பின்பு திமுகவில் பிளவுகள் ஏற்படும் சாத்தியமுண்டு. வைகோ கருணாநிதியுடன் இருந்திருந்தாரேயானால், அவரின் தனித்துவத்தை கருணாநிதி அழித்திருப்பார். அவருக்கு கருணாநிதியின் குணம் நன்றாக தெரிந்ததாலே, தன்னை சிறைபிடித்த சிங்காரியிடம் ஓடிப்போனார். அது வேறு கதை!

அன்றிருந்த கருணாநிதியின் குணாதிசயங்கள் இன்றிருக்குமேயானால், ஈழத்தமிழர் அவரை மாமனிதனாக கருதுவார்கள்!

எல்லாரும் தன்னைப் புகழப் புகழ அவருக்கு புகழ் போதையில் தடுமாறுகிறார் போலும். தற்போது “நட்சத்திர”ப் புகழ்தான் முக்கியமாகிவிட்டது. கூத்தாடிகள் ஒன்றுகூடினால் அம்மேடையில் ஏறுபவனும் கூத்தாடியாகிவிடுவான். இக் கூத்தாடிகள் (நடிகர்கள் வேறு, நடிகர்கள்போல் வேடமிடும் பல கூத்தாடிகளால் தமிழக சினிமாவே இன்று.... சொல்லத் தேழ்வையில்லை) எம் ஈழமக்கள் பட்டினிசாவையும் பல்வேறு அவலங்களையும் எதிர்நோக்கியிருக்கும் போது “பால் கொடுத்தார்” “பாணி ஆரம் கொடுத்தார்” என புகழாரம் செலுத்துகிறார், எம் ஆந்திரக் கூத்தாடி! ஏன் இவரும் ஒருமுறை சிங்காரிக்கு சார்பாக “ஓட்டுப் போடுங்கள்” என கூத்துப் போட்டவர்தானே. கருணாநிதி எதிர்பார்ப்பது 'எப்படி தன் அரசைத் தக்கவைத்துக்கொள்வது என்பதே!' வர்ணத்தொலைகாட்சிப் பெட்டிகள் = வடக்கு இந்தியன் சிரிக்கிறான்! அக்காலத் தமிழனை மதம் எனும் மாயைத் தூவி அடிபணிய வைத்தான்! இக்காலத் தமிழனை கூத்தாடிகள் ஆட்கொள்கின்றனர். இந்த "லஞ்சப்பெட்டி"களைக் கொண்டு SUN TV மூலம் தம் ஆட்சிக்கு வேண்டிய பரப்புரையை மேற்கொள்ள முனைகிறார்கள் இந்த மாறன் மாரும் நிதிமாரும்!

எம் தலவரின் உற்ற நண்பனே, ஒரே நாளில் “தானும் தலவனாகலாம்” எனு புகழ் போதையில் தமிழரின் துரோகியாக மாறி ஓடி ஒழிந்து சிங்களவனின் அடிவருடியாக வாழ்ந்து வரும் கதை யாவரும் அறிந்ததே! தமிழ் காக்கும் தலவர் தமிழ் துரோகிகளை சந்தித்தாரேயானால், ஈழத் தமிழினம் அவரையும் துரோகியாக கருதத் தொடங்கிவிடும்! இன்று மொட்டாக இருக்கும் தமிழீழம் மலரும் போது, துரோகிகள் துரோகிகளாகவே கருதப்படுவார்கள்! தமிழுக்கு மேன்மை ஏற்படுத்தினார் கம்பர்! ஆனால் தமிழனைக் கேவலப் படுத்தியதால் கம்பராமாயாணம் எரிபட்டது தமிழக வீதிகளில்! இதை கருணாநிதி உணர்ந்து, ஈழத் தமிழரின் பகைமையை சேகரிக்காமல், இன்று வாழ்த்தும் கூத்தாடிகளின் வாழ்த்துப் பாடல்களில் தன்னை மறந்துவிடாமல், அவதியுறும் தமிழினத்துக்கு தன் இளைய வாழ்க்கையின் தன் மான வீரத்துடன் தன் நேசக் கரத்தை நீட்டவேண்டும்! சமகால அரசியலில் கருணாநிதியின் தமிழீழ ஆதரவு எமக்கிருக்குமேயானால் மத்திய அரசிலும் எமக்கு ஆதரவுக் கிட்டும் வாய்ப்புண்டு. நாங்கள் விரும்புவது இந்தியாவின் தார்மீக ஆதரவையே!

லக்கி, உங்களின் கருத்துக்கள் மற்றயவர்களின் கருத்துக்களையும் அவர்களின் ஆதங்களையும் “உங்கள் கருணா நிதி”விசுவாசத்தினால் உந்தப் பட்டு கொச்சைப் படுத்துவதினாலேயே நீங்கள் பின்வாங்கும் நிலையை ஏற்படுத்துகிறீர்கள் “அமைதி படை” என்றதும், “பழையதைக் கிளறாதீர்கள்” என்பீர்கள். ஆனால் அதேபோல் பழைய விடையமான “ராசீவ்” மரணத்தை முன் வைத்து, இன்றும் அரசியல் பேசி எம்மை தீவிரவாதிகள் என்று இன்னும் எம் பிரதிநிதிகளைப் புறக்கணிக்கிறீர்கள்! எங்கையா நியாயம்! ஜேர்மானியர் யூதருக்கு இழைத்த கொடுமைகளை இன்றும் ஜேர்மானியரே யூதருடன் சேர்ந்து நினவு கூருகிறார்கள். நடந்த கொடுமைகளை நினைவு கூரும் காரணம், இனியும் இப்படி ஒரு துயரச் சம்பவம் நிகழக் கூடாதே என்பதினாலேயே. பழிக்குப் பழி வாங்குவதற்கன்று! நீர் எமக்காதரவாக கருத்துகள் எழுதாவிட்டாலும் எம் மன வேதனைகளை கொச்சைப் படுத்தாதேயும்! கருணாநிதி புகழ் நீரும் பாடலாம். உம்மை யார் தடுத்தார்கள். ஆனால் ஈழத் தமிழருக்காக தமிழகத்தில், உலகத்தில் குரல் கொடுக்கும் எவரையும் நீர் கிண்டல் செய்வதை எப்படி பொறுக்கமுடியும். கருணாநிதியின் பழசுகள் எமக்கு நன்கு தெரியும். சமகாலத்தில் அவரின் நடைமுறை தமிழக முதலமச்சர் என்றவிதத்தில் ஈழத் தமிழரின் நலனைப் பாதிப்பதினாலேயே, இக்களத்தில் “கருணாநிதி” எதிரலை எழும்பியுள்ளது. தமிழகத் தமிழர்களும் இதை உணர்கிறார்கள். ஆனால் "இந்திய"த் தமிழர் எப்படி உணர்கிறார்கள் என்பதை நீர் வைகோ இகழ் பாடுவதில் அறிய முடிகிறது! கருத்து எழுதுவது எழுதாமல் விடுவது அவரவர் விருப்பு வெறுப்பை பொறுத்தது. கருணாநிதியின் தற்போதைய செயல்களுக்காக நாம் அவரை வசை பாடுகிறோம் என்பதற்காக நீர் தமிழீழத்திற்கான உமதாதரவை நிறுத்தி விடாதேயும். எமக்கு ஒவ்வொரு தமிழக தமிழரின் ஆதரவும் தேழ்வை.

எமக்காதரவாக உலக மேடையில் குரல் எழுப்பினால், அவர்கள் கூத்தாடிகளாக இருந்தாலும் எம் மனதில் போற்றப் படுவார்கள்!

விரைவில், கருணாநிதி எம் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்து அவர்களை சந்தித்து, தமிழ் துரோகிகளை புறக்கணித்து எமக்கு தன் தார்மீக ஆதரவைப் பகிங்கரமாக தெரிவிப்பார் என விரும்புகிறோம்.

இதில் நீல நிறத்தில் எழுதப்பட்டவை என் கருத்தாகும்!

வைக்கோ வைபற்றி குறைகூறுபவர்களே இதை பாருங்கள் இதை போல உங்கள் தலைகளால் செயற்படமுடியுமா??

இதைபாருங்க இப்படி யாராவது இந்தியாவில் அனுபவ்வித்திருப்பீங்கலா

http://www.youtube.com/watch?v=kSWsdGCSjRM

http://www.youtube.com/watch?v=EmzehLRXP7A

http://www.youtube.com/watch?v=tIHIVM8D3B0

http://www.youtube.com/watch?v=9_7AJBQdVjs

http://www.youtube.com/watch?v=xPnrQxZd9VI

இதை அனுபாவ்த்துக்காக தரவில்லை பாருங்கல் என்ன வேலை இல்லாமலா அங்க இவர்கள் வந்தார்கள் இல்லையே

நீங்கள் உதவுவீர்கள் எண்டுதானே

தமிழ்நாட்டின் அரசியல் நிலை பற்றி சிந்திக்கும் போது ஞாபகத்துக்கு வரும் ஒரு ஈழத்து பாட்டின் சில வரிகள்

பாரதி இன்றிருந்தால் பசுந்தமிழ் பண்னொன்று இசைத்திருப்பான்

அதில் வீரமிகு தமிழ்நாட்டார் வீறிட்டு எழுந்திருப்பார்!

நண்பர் ஈழவனுக்கு

தங்களின் ஆதங்கம் புரிகிறது.கருணாநிதி ஒரு கபட அரசியல்வாதி.அவரை நம்புவது வீண்.நான் ஒரு தமிழ் நாட்டுத் தமிழன்.

நன்றி malu உங்களின் கருத்துக்கு உங்களின் ஆக்கபூர்வமான கருத்துக்களை இக்கருத்து பிரிவில் எதிர் பார்கின்றோம்

அன்புடன்

ஈழவன்

கூர் மழுங்கிய ஆயுதத்தை கையிலெடுக்கும் இந்திய கொள்கை வகுப்பாளர்கள்

சிறிலங்கா நாடாளுமன்றப் பிரதிநிகளாகிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்திப்பதில்லை என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்க் அறிவித்துவிட்டதாக இந்திய நாளேடுகள் தெரிவித்துள்ளன.

இந்தியப் பிரதமர் தெரிவித்திருந்த விருப்பத்தின் அடிப்படையில் புதுடில்லியில் முகாமிட்டு, அவரின் தரிசனத்திற்காக காத்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஏமாற்றத்துடன் சென்னைக்கும் திரும்பியுள்ளனர்.

அதேவேளையில் தமிழர் தலைவர்கள் என்ற போர்வையில் வேறு சிலர் புதுடில்லி வந்திருப்பதாகவும் இந்திய செய்தி ஊடகங்கள் வழியாக அறிய முடிகின்றது.

தினமணி நாளேடு தமிழர் தலைவாகளான வீ.ஆனந்தசங்கரி, த.சித்தார்த்தன், சிறீதரன் ஆகியோர் புதுடில்லிக்கு வந்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.

இது இந்திய அரசின் தெளிவற்ற கொள்கையையும் தடுமாற்றத்தையும் குறிப்பதாகவே அரசியல் அவதானிகள் கருதுகின்றனர். அத்துடன் இலங்கை இனப்பிரச்சனையில் நீண்டகாலமாக மௌனம் காத்துவந்த இந்திய அரசு வழமைபோல் குட்டையை குழப்புகின்ற வேலையை தொடர்கின்றதோ என்ற சந்தேகத்தை தோற்றுவித்திருக்கின்றது.

ஏனெனில் சிறிலங்கா அரசு வெறுப்படையும் வகையில் இந்திய அரசு தனது அழுத்தத்தை பிரயோகிக்கின்றது என்ற தோற்றப்பாடே அண்மைக்காலமாக தென்பட்டு வந்தது.

அதனடிப்படையில்தான் மகிந்தர்களும் பண்டாரநாயக்கர்களும் ஏன் அனைத்து சிங்கள ஊடகங்களும் இந்தியாவைச் சீண்டி பிறாண்டிக் கொண்டிருந்தன. இந்நிலையில்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை புதுடில்லிக்கு வரவழைத்திருந்தது இந்தியா.

இச்செய்திகள் வெளிவந்தபோதே இந்திய கொள்கை வகுப்பாளர்களும் அரசியல் சிந்தனையாளர்களும் சுறுசுறுப்பான செயற்பாடுகளில் இறங்கியதையும் அவதானிக்க முடிந்தது.

இந்த இந்திய கொள்கை வகுப்புக்குழுக்கள் எனப்படுவோர் சிறிலங்கா அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலான புதுடில்லியின் மாற்றம் கண்டு குழம்பி விட்டனர் போல் தெரிகின்றது.

இந்நிலையில் புதுடில்லியில் இலங்கை இனப்பிரச்சனை ஆலோசனைகள் மீளத் தீவிரமடையத் தொடங்கியதாக கூறப்படுகிறது. அதேபோல் கொள்கை வகுப்பாளர்கள் என்றழைப்போரிடம் இந்திய அரசாங்கம் ஆலோசனைகளைப் பெறத் தொடங்கியிருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இந்திய கொள்கை வகுப்புக்குழுக்கள் என்ற பட்டியலில் பல நிறுவனங்கள் புதுடில்லியில் முகாமிட்டு தங்களது மேதாவித்தனத்தை வெளிப்படுத்தி வருகின்றன. ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள், வெளிவிவகாரத்துறையினர், ஊடகவியலாளர்கள் என்ற பட்டியலில் உள்ளவர்கள் கூடும் மையங்களாக இவை உள்ளன.

அண்மையில் இவ்வகையான கொள்கை வகுப்புக்குழுக்கள் என்றழைக்கப்படுவோரின் கூட்டத்தில் அரசியல் அரங்கில் காணாமல் போயிருந்த வரதராஜப்பெருமாளுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

சிறிலங்காவுக்கான முன்னாள் இந்தியத் தூதுவர் என்.என்.ஜா, லெப்.ஜெனரல் வி.கே.சிங் மற்றும் நாராயணசுவாமி ஆகியோரும் இந்த ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.

இதில் என்.என்.ஜா கடும் போக்காளர். இந்தியாவின் "பிரதான கொள்கை வகுப்பாளர்"(!) சுப்பிரமணியசுவாமி, "சிங்கள ரத்னா" இந்து ராம் மற்றும் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் கூட்டணியில் வலம் வருகின்றவர்.

ஈழத் தமிழர் பிரச்சனையில் இந்தியாவுக்கும் தமிழர்களுக்கும் இடையே மோதலை ஏற்படுத்தி விட்ட இந்த கொள்கை வகுப்புக்குழுக்கள்தான் கடந்த 2004 ஆம் ஆண்டு புதுடில்லியிலே சுப்பிரமணியசுவாமியின் தலைமையில் மாநாடும் போட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர்கள் தங்கள் ஆலோசனைக்கு கீழ்வரும் விடயங்களை உள்ளடக்கியதாக அறியமுடிகின்றது.

- இலங்கை இனப்பிரச்சனையின் பின்புலம்

- ஆயுதக்குழுக்கள் உருவாக்கம் ஏன்?

- இந்திய- இலங்கை ஒப்பந்தம் மீதான விமர்சனங்கள்

- சந்திரிகா காலத்து அதிகாரப் பரவலாக்கல் யோசனைகள்

- தமிழீழ விடுதலைப் புலிகளின் வலிமை

- இந்தியாவின் பங்களிப்பு

- கிழக்கு மாகாண நிலைமை

- தமிழீழக் கோரிக்கையில் விடுதலைப் புலிகள் உறுதியாக உள்ளமை

- அகதிகள் பிரச்சனை

- சிறிலங்காவுக்கான இராணுவ உதவி

- சிறிலங்காவின் இரு பிரதான கட்சிகளுடன் இந்தியாவின் உறவு

என்றெல்லாம் விவாதித்து இறுதியில்

"ஐக்கிய இலங்கைக்குள் பேச்சு மூலமாக இறுதித் தீர்வு- அனைத்து இன மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்" என்ற கொள்கை முடிவுக்கு வந்திருக்கின்றார்கள்.

புதுடில்லியில் கொள்கை வகுப்பாளர்கள் எனப்படுவோர் இப்படியாக செயற்படும் நிலையில்தான் கியூபாவில் சிறிலங்கா அதிபர் மகிந்தவும் முக்கயமான ஒரு பணியை ஆற்றிவிட்டு வந்திருக்கின்றார்.

கீழே உள்ள இந்தப் படத்தை பார்த்தால் அவர் ஆற்றிய பணி புரியும்.

20060925006.jpg

துணை இராணுவக் குழு டக்ளசை இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு அறிமுகம் செய்து வைக்கும் மகிந்த ராஜபக்ச

அமைதியை உருவாக்க இராணுவ வலுச் சமநிலையை விடுதலைப் புலிகள் ஏற்படுத்திக் கொண்டனர். அமைதி முயற்சியும் முன்னெடுக்கப்பட்டது.

பேச்சும் யுத்தமும் யுத்தமும் பேச்சுமாக பேச்சுக்கள் ஒரு பக்கம் மற்றும் இராஜதந்திர நகர்வுகளுக்கு மத்தியில் இன்னமும் யுத்த நிறுத்த ஒப்பந்தம் என்பது செத்துவிட்டதாக அறிவிக்கப்படாத நிலை நீடிக்கிறது.

ஆனால் நீண்டகாலாமாக இந்திய உளவு அமைப்பின் உதவியுடன் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வரும்- கடந்த 15 ஆண்டு காலத்துக்கும் மேலாக தமிழீழ அரசியலில் எதுவித தொடர்புமற்று ஆனால் பெயருக்கு சிறிலங்கா இராணுவத்துடன் இணைந்து ஒரு துணை இராணுவக்குழுவை நடமாட விட்டுள்ள வரதராஜப்பெருமாள் புதுடில்லியில் ஆலோசனைக்கு அழைக்கப்பட்டதன் பின்னணி என்ன?

அல்லைப்பிட்டியில் நடந்தேறியது போன்று அப்பாவி பொதுமக்களை- புத்திஜீவிகளை சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கி தொடர்ச்சியாக கொன்று குவித்து வரும் துணை இராணுவக் குழுவைச் சேர்ந்த டக்ளஸ் தேவானந்தாவை மகிந்தர் இந்தியப் பிரதமருக்கு அறிமுகம் செய்தது தற்செயலானதா?

தற்போது தினமணி நாளேடு குறிப்பிடும் தமிழர் தலைவர்களான வீ.ஆனந்தசங்கரி, த.சித்தார்த்தன், சிறீதரன் போன்ற வகையறாக்கள் புதுடில்லி அழைக்கப்பட்டிருப்பதன் பின்னணி என்ன?

இவ்வகையானோரை முன்னிலைப்படுத்துவதில் கொள்கை வகுப்புக் குழப்பவாதக் குழுக்கள் முயற்சியாலும் அழுத்தத்தாலும் இந்திய அரசு தடுமாறுகின்றதா?

சிறிலங்கா நாடாளுமன்றப் பிரதிநிகளாகிய தமிழத் தேசிய கூட்டமைப்பினரை சந்திப்பதில்லை என்ற இந்திய பிரதமரின் முடிவிற்கும் இவைக்கும் தொடர்பிருக்கும் என்ற சந்தேகமே ஈழத்தமிழர்களிடம் மேலோங்கி இருக்கின்றது.

பல தடவைகள் தோற்றுப்போன இந்திய கொள்கை வகுப்பாளரின் திட்ட வரைவையே மீளவும் இந்திய அரசு ஏற்கப் போகின்றதா?

http://www.eelampage.com/?cn=28972

'அழகே உருவான அந்த அற்புதக் கலையரசியை விழுங்கிக் களித்திட மரணத்துக்கு எப்படித்தான் மனம் வந்ததோ!

இது நடிகை பத்மினியின் மரனத்துக்கு கருநாநிதி வெளியிட்ட அறிக்கையில் இருந்த ஒரு வசனம்.நான் அதில் தப்பேதும் சொல்லவில்லை அவரின் ஆத்மாசாந்திக்காக நானும் பிரார்த்திக்கிறேன் ஆனால் எமது விமோசனத்துக்கும் ஒரு நடவடிக்கையை அதாவது வரலாற்று கடமையை கட்சி பேதமின்றி ஆற்றமுடியவில்லையே கலஞருக்கு???

நான் அத்தனை தமிழ்நாட்டவரையும் தப்பாக சொல்லவில்லை பலாலி தளத்தில் கரும்புலியாய் வீரச்சாவைத்தழுவிய வீரத்தமிழன் லெப்.செங்கண்னன் தமிழ்நாட்டை சேர்ந்தவர்தான்

sengkannan4fq.jpg

இவ்வாறு மக்கள் இருக்கையில் ஏன் ஆட்சிபீடத்தில் இருப்பவர்களுக்கு அரசியல் கவுரவம் இது கவுரவத்துக்கான பிரச்சனை இல்லை அவ்ர்களின் வரலாற்று கடமை.ஒரே மொழி ஒரே கலாச்சாரம் எமக்கும் தமிழ்நாட்டுக்கும் தொப்புல்கொடி உறவு .ஆக அரசியல் தலைகளுக்கு அரசியல் லாபத்தை ஈழத்தவர் விடயத்தில் காட்டவேண்டாம் என்பதே என் பணிவான வேண்டுகோள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.