Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளும் படைப்பாளிகளும் - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தேவ அபிரா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளும் படைப்பாளிகளும் - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தேவ அபிரா

Theva%20abira_CI.png

ஆயுதம் தாங்கிய ஈழ விடுதலைப் போராட்டத்தின் முடிவிற்குப்பிறகு ஈழத்துக் கலை இலக்கியச்செயற்பாடுகளின் போக்குகள் தொடர்பாக அண்மைக்காலங்களில் பல கவலைகள் சமூக வலைத்தளத்தில் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஈழத்துப்படைப்பாளிகளின் அரசியல் நிலைப்பாடு தொடர்பாக பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் நிகழ்ந்து வருகின்றன.

80 களில் ஈழ விடுதலைப் போராட்டம் முனைப்படைந்த போது ஈழத்து இலக்கியங்கள் அறிவூட்டல் அல்லது பொழுது போக்கு என்ற நோக்கத்தைக் கடந்து சமூக விழுமியங்களைக் கேள்விக்குட்படுத்தி, இன ஒடுக்கு முறையைக் கேள்விக்குட்படுத்தி மக்களைப் போராட்டம் ஒன்றுக்கு தயார்படுத்தும், சமூக அசைவியக்கத்தை தூண்டும் நோக்கத்தைக் கையில் எடுத்துக்கொண்டன.

இந்த மாற்றத்தின் போது தனிமனித விருப்பங்கள், நோக்கங்கள் மற்றும் அனுபவங்களின் வெளிப்படுகை என்பது பின்தள்ளப்பட்டுப் பொதுநோக்கம், கூட்டுணர்வு என்பன முதன்மைப்படத்தொடங்கின. விடுதலைப்புலிகளின் எழுச்சியோடு இது இன்னும் செறிவு பட்டு மண்மீட்புப்போரில் பங்கேற்கத் தூண்டுதல், விடுதலைப்போராட்ட அமைப்பைப்பாடுதல், தலைமையைப்பாடுதல், தமிழர்களின் வீரம் செறிந்த தொன்மையை முதன்மைப்படுத்தல் போன்ற விடையங்கள் முக்கியமடைந்தன. வெளியுலகத் தொடர்பில்லாமல் மூடுண்டு கிடந்த ஈழத்தின் பிரதான கலை இலக்கியப்போக்கு இதுவாகவிருந்தது.

ஒரு சமூகம் எழுச்சி அடையும் போது மனிதரின் தன்முனைப்பைவிடவும் தனிமனிதப்பாடுகளைவிடவும் சமூக முனைப்பும் கூட்டுணர்வும் முதன்மை அடைகின்றன. இனவிடுதலைப்போராட்டத்திலும் சரி வர்க்க விடுதலைப் போராட்டத்திலும் சரி எல்லாவிதமான சமூக எழுச்சிகளிலும் சரி இந்தப்பண்பைப்பார்க்க முடியும்.

இத்தகைய காலங்களில் இலக்கியத்தின் சமூக மற்றும் அரசியற்பெறுமானம் குறித்த அக்கறை அதிகமடையும். அதிலும் கலை இலக்கியச் செயற்பாட்டைப் போராடும் அமைப்பை /அமைப்புகளைச் சார்ந்து செயற்படும் ஒன்றாக மாற்றும் முயற்சியும் எழுச்சியடையும்.

படைப்பாளிகளிடம் இருக்கக்கூடிய மாறுபட்ட அரசியல் நிலைப்பாடும் போராடும் அமைப்பின் மீதான விமர்சனமும் விடுதலைப்போராட்டத்தில் ஈடுபடும் அதிகாரங்களை அச்சமடையச் செய்கின்றன. விடுதலைக்கான கலை இலக்கியத்தைப் படைப்பது அல்லது போராடும் கலை இலக்கியத்தைப்படைப்பது என்பது தமது கண்காணிப்பின் கீழ் நிறுவனமயப்பட்ட வகையிலேயே நிகழவேண்டும் என அவை நினைக்கின்றன.

படைப்பு சுதந்திரத்தை உறுதி செய்து முரண்பட்ட கருத்துக்களையும் முரண்பட்ட அசைவியக்கங்களையும் அனுமதித்து தொடர்ச்சியான உரையாடலுக்கூடாக அவற்றை அணுகும் சனநாயக நடைமுறையை அனேகமான அதிகாரங்கள் கடைப்பிடிப்பதில்லை .

விடுதலைப்போராட்டம் நிகழ்ந்த பல நாடுகளில் போராட்டத்தை நடாத்திய அமைப்புக்கள் கலை இலக்கியங்களை அரசியல் மயப்படுத்தும் முயற்சியை தமது அதிகாரத்தின் ஊடாகவே சாதித்தன. இத்தகைய அரசியல் மயப்பாட்டுக்கு உட்படும் கலை இலக்கியப்போக்குகள் போராட்ட அமைப்பின் கருத்தியல் மற்றும் நடைமுறைகளை அனுசரித்துப்போகவேண்டியவையாக மாறிவிடும்.

மேற்கூறிய அடிப்படையில் விடுதலைப்புலிகளின் காலத்தில் விடுதலைப்புலிகளை ஆதரித்தவர்கள் விடுதலைப்புலிகளின் அறத்தையும் அறமற்ற செயற்பாடுகளயும் ஒன்று சேரவே ஏற்றுக்கொண்டார்கள் .இது அவர்களின் தெரிவின் பெறுபேறு.

அமைப்புசார் கலை இலக்கிய நிறுவன மயப்பாட்டுக்குள் வராத வரவிரும்பாத படைப்பாளிகள் தமக்குரிய தளமின்றி ஒதுங்கியிருக்கும் நிலை ஈழத்தில் ஏற்பட்டது. போராட்டச் சூழலில் இருக்கும் சனநாயகத்தைப் பொறுத்து பிரதான நீரோட்டத்தோடு ஒத்தோடாத படைப்பாளிகள் மாற்று அமைப்புக்களாகவோ அல்லது தனித்தோ இயங்குவதும் சாத்தியம். ஆனால் விடுதலைப்புலிகளின் சனநாயகமற்ற நடத்தைகள் காரணமாக ஈழத்துச் சூழலில் அந்த நிலை தோன்றவில்லை.

இதனால் விடுதலைப்புலிகளின் அறமற்ற நடத்தைகளை ஏற்றுக் கொள்ளாதவர்கள் மௌனமானார்கள் சக பயணிகளானார்கள் அல்லது அரங்கத்தை விட்டு அகன்று வெளியில் நின்று விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளை விமர்சித்தார்கள்.

போராடும் அமைப்பொன்றின் அறமற்ற நடத்தைகள் அதற்கு தரும் வெற்றிகளை விடவும் அது எதற்காகபோராடுகிறதோ அதன் அறங்களையும் நியாயங்களையும் அழித்து விடுவனவாக மாறி விடுகின்றன.. போராடும் அமைப்பொன்றின் நிலைப்பாடுகள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பான விமர்சனத்துக்கு இடமில்லாத போது அதனை ஏற்றுக்கொள்ள மானுட அறம் சார்ந்து சிந்திக்கும் படைப்பாளிகளுக்கு முடியாதிருக்கும் நிலை தோன்றுகிறது.

இன்னுமொரு முக்கியமான விடையத்தையும் இங்கு கவனிக்க வேண்டும். போராடும் விடுதலை அமைப்புக்களின் அதிகாரங்களை விமர்சிப்பது எவ்வளவுக்கு முக்கியமோ அவ்வளவுக்கு ஒடுக்கு முறையில் ஈடுபடும் அரசுகளின் அதிகாரங்களை விமர்சிப்பதும் முக்கியமானது. இரண்டு விமர்சனங்களும் ஒரே தராசில் நிறுக்கப்படுபவையும் அல்ல. போராட்ட அதிகாரத்துக்கும் ஒடுக்குமுறை அரச அதிகாரத்திற்கும் இடையிலான வேறு பாட்டையும் மேற்குறித்த இரண்டு அதிகாரங்களுக்கும் இருக்கும் நடைமுறைச் சாத்தியங்களையும் ஒரு படைப்பாளி புரிந்து வைத்திருக்க வேண்டும். இதில் தெளிவு இல்லாத படைப்பாளிகள் ஒடுக்கு முறையில் ஈடுபடும் அதிகாரத்தின் கருத்து நிலைகளை மறைமுகமாகவோ வெளிப்படையாகவோ சுய பிரக்ஞை இல்லாமலோ ஆதரிக்கும் சூழலுக்குள் சென்று விடுவார்கள்.

எனவே படைபாளிகளுக்கு எதனை ஏற்றுக்கொள்வது எதனை மறுப்பது என்ற தெரிவை செய்யும் பக்குவமும் தெளிவும் எக்காலத்திலும் அவசியமானவை.

விடுதலைப் போராட்டத்தை நிகழ்த்தும் அதிகாரங்கள் போராட்டக்காலங்களில் தனிமனித சுதந்திரத்துக்கு விதிக்கும் கட்டுப்பாடு இரண்டு முக்கியமான பிரச்சனைகளை உருவாக்கி விடுகிறது.

முதலாவது படைப்பாளிகளின் படைப்பாக்கத்தை அது சிதைத்து விடுகிறது. இரண்டாவது போராட்ட அசைவியக்கத்தின் மீதான உள்ளார்ந்த விமர்சனப் பார்வையையும் அது அழித்துவிடுகின்றது.

இதனால் ஒரு சமூகத்தின் மனச் சாட்சியின் மீதும் அறிவுச் சிந்தனை மீதும் அச்சம் தரும் ஒரு தடித்த போர்வை போர்த்தப்பட்டு விடுகிறது.

விடுதலைப்புலிகளின் மறைவோடு சகல படைப்பாளிகளுக்கும் இருந்த அக அழுத்தம் மறைந்து விடுகிறது. இதனால் இன்றைக்கு விடுதலைப்புலிகளின் காலத்தில் நிகழ்ந்தவைகளை அந்த அதிகாரத்தை ஏற்றுக்கொண்டிருந்த பல படைப்பாளிகள் அலச ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த அலசல் தவிர்க்க முடியாத தவிர்க்கக்கூடாதவொரு அலசல்.

ஆனால் கலை இலக்கியத்தளத்தில் இந்த அலசல்களைப் படைப்புக்களாகக் கொண்டுவரும் போது அதைச்செய்கிற படைப்பாளிக்கு இருக்கும் பொறுப்புணர்வு முக்கியமானது. இப்பொறுப்புணர்வு உள்ளதை உள்ளபடி கூறுதல் என்னும் தட்டையான பரிமாணத்துள் இருந்து வருவதல்ல. ஒரு படைப்பாளி அவர் சொல்வதினுள் உள்ளதைத் தான் உணர்ந்த பின் சொல்லவேண்டும். தான் சொல்வது எதனை மற்றவர்களுக்கு உணர்த்தும் என்பதையும் அவர் முன்னுணர்ந்து இருக்க வேண்டும் இந்த உணர்தல் கடந்த காலத்தில் நிகழ்ந்தது; நிகழ்காலத்தில் நிகழ்வது; எதிர்காலம் கோரி நிற்பது. ஆகிய மூன்றினுள்ளும் ஊடாடிய பின் வரவேண்டியது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் நிகழ்ந்த தவறுகளில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று இன்று பரவலாகப்பேசப்படுகிறது தவறுகளில் இருந்து கற்றுக்கொள்வது தேவையானதுதான் ஆனால் அக்கற்றலின் நோக்கம் என்ன என்பதும் முக்கியமானது.

எதிர்க்க முடியாத ஒடுக்கு முறை வலையத்தினுள் அகப்பட்டுக் கொண்டுள்ள ஒரு சமூகம் போராடுதலே தவறென்ற முடிவுக்கு வருதல் கூட ஒரு விதமான கற்றுக்கொள்ளல் தான். சில காலத்துக்கு முன்பு வாசித்த ஒரு கவிதையில், “இப்பொழுது எல்லாம் இயல்பாகத்தானே இருக்கின்றன. சுதந்திரமாக வீதியில் திரிய முடிகிறது. யாரும் காணமற்போவதில்லை. சின்ன அச்சமுமின்றி இருக்க முடிகிறது” என்றும் மீண்டும் இரத்தம் தோய்ந்த காலங்களுக்கு செல்ல வேண்டாம் என்றும் கூறப்பட்டிருந்தது. போராடுதல் என்பதை ஆயுதம் தாங்கிய போராட்டமாக மட்டுமே வரையறுத்துக்கொண்டு சமூக அசைவியக்கத்தை அக்காலத்தை நோக்கி மீண்டும் இட்டுச் செல்ல யதார்த்தங்களை உணராது கனவுகாண்பது தவறென்ற போதும் அமைதிக்குள் இருக்கிற மோசமான ஒடுக்குமுறையையும் விடுதலையற்ற சுதந்திரத்தினுள் இருக்கிற அடிமைத்தனத்தையும் அடிமைத்தனத்துள் உள்ள சுதந்திரத்தையும் உணர்ந்து கொள்ள முடியாத ஒரு படைப்பாளி தன் ஆன்மாவை இழந்து விடுகிறார். அவரது படைப்பு அதன் ஆழத்தையும் இழந்து விடுகிறது.

அதிகாரங்களை (புலிகளையோ/அரசையோ) விமர்சிக்கிற படைப்பாளிகள் தமது ஒவ்வொரு படைப்பிலும் நான் அதிகாரங்களை விமர்சிக்கிறேன் என இடைக்கிடை எழுதிக் கொண்டு இருக்க வேண்டுமா என்ற கேள்வியும் எழுகிறது. ஆனால் ஒரு படைப்பாளி தான் ஒடுக்குமுறை அதிகாரத்தை விமர்சிக்கிறேன் என்பதைத் தன் படைப்புக்கு வெளியேயும் வலியுறுத்திச் சொல்ல நேர்கிறதென்றால் அவரது படைப்புகளினூடாக அவ்வுணர்வு வாசகர்களைச் சென்றடையவில்லையோ என்ற தர்க்கமும் சாத்தியமாகிறது.

எந்தப்படைப்பாளியும் தான் எழுதுகிறவற்றினூடாக, எழுதாமல் சொல்கிற விடையங்களே படைப்பின் செய்தியாகின்றன. தனது எழுத்தின் மூலம் ஒரு படைப்பாளி வாசகரின் மனதில் உருவாகி விடுகிற உலகம் ஆழ்ந்த உணர்வுகளின் உலகமாகி விடுகிறது. மானுட ஆன்மாவின் அறங்களையும் பிறழ்வுகளயும் அதனைக் கொச்சப்படுத்தாமல் விரித்து வைக்கிற உலகமாகிவிடுகிறது. சமூக அசைவியக்கத்தையும் அதனுள் தொழிற்படுகிற அதிகார மூலங்களையும் வெளிப்படுத்துகிற உலகமாகி விடுகிறது. (இதனைச் செய்யப் படைப்பாளியின் படைப்பு மனம் தேர்கிற உத்திகள் படைப்பின் அழகியலாகின்றன) மானுட ஆன்மாவைக் கொசைப்படுத்தி வருகிற படைப்புகள், ஆழமான புரிதலற்ற மேம்போக்கான பாத்திர உருவாக்கங்களைக் கொண்டிருக்கிற படைப்புகள், வெறும் பிரமிப்புக்களையும் மலினமான உணர்வெழுச்சிகளையும் கொண்டிருக்கும் படைப்புகள் மனிதர்களிடத்தில் ஆழமான பாதிப்புக்களை ஏன் சலனங்களைக்கூட ஏற்படுத்துவதில்லை.

ஒரு படைப்பு அற்புதமான படிமங்களைக் கொண்டிருக்கலாம், புதிய உத்திகளைக்கொண்டிருக்கலாம், அழகான புனைவுகளைக் கொண்டிருக்கலாம், சீரான இறுக்கமான மொழி நடையைக் கொண்டிருக்கலாம். ஆனால் அதிகாரங்களினால் வழி நடத்தப்படுகிற உலகில் தனது படைப்பு தரும் செய்தி என்ன என்ற தெளிவை அது கொண்டிராத போது அது தன் சாரத்தை இழந்து விடுகிறது. இவ்வாறான சாரமிழந்த படைப்புகள் ஒடுக்கு முறைக்கு அறிந்தோ அறியாமலோ துணைபோகக்கூடிய எல்லைக்குள் வந்து விடுகின்றன.

ஒடுக்கு முறை என்பதை இன ஒடுக்கு முறை என்பதாக மட்டும் வரையறை செய்து கொள்வதும் தவறு. சாதிய ஒடுக்குமுறை பாலின ஒடுக்கு முறை வர்க்க ஒடுக்கு முறை என எல்லா வகையான ஒடுக்கு முறைகளிலும் படைப்பாளியின் கூருணர்வு அதனை கண்டு கொள்ளாது நகருமெனில் படைப்பாளி அங்கே தோற்று விடுகிறான்.

தனிமனித மனித உணர்வுகளில் தொடங்கி சமூக உணர்வு வரை யாவற்றையும் சரியான அரசியல் அறிவுடன் புரிந்து கொள்ளும் ஒரு படைப்பாளியின் படைப்பில் இருக்கக்கூடிய ஆழத்தினுள் எப்பொழுதும் ஒடுக்குமுறைக்கு எதிரான பண்பு இருந்து கொண்டேயிருக்கும். அது திட்டமிட்டு ஏற்படுத்தப்படுவதல்ல.

இங்கு நான் குறிப்பிடுகிற அரசியல் என்பது அமைப்புசார் அல்லது கட்சி சார் அரசியல் அல்ல. அமைப்புசார் அரசியல் என்பது மனித சமூகத்தை இயக்கிக்கொண்டு இருக்கும் ஒட்டுமொத்த அரசியல் செயற்பாட்டின் மிகச்சிறிய ஒரு கூறு மட்டுமே.

விடுதலைப்புலிகளை உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் ஆதரித்தவர்களும் விடுதலைப்புலிகளை விமர்சிப்பதையே தலையாய பணியாக கொண்டிருந்தவர்களும் ஒடுக்குமுறை அரசியலை ஒருதலைப்பட்சமாக மட்டுமே புரிந்து கொண்டிருந்தனர் என்று சொல்வது தவறாகாது.

ஒடுக்கப்படுகிற ஒன்றே ஒடுக்குகிறதாகவும் இருக்கும் போது படைப்பாளிகள் எடுக்க வேண்டிய நிலைப்பாடு கத்தியில் நடப்பதைப் போன்றது. ஈழவிடுதலைப்போராட்டத்தின் நியாயங்களுக்கு சமனாகவே ஈழத்தின் அகத்தினுள் ஒடுக்குமுறைகளும் நிகழ்ந்தன நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

விடுதலைப்புலிகளின் காலத்தில் இலங்கை அரசை விமர்சிக்க இருந்த சுதந்திரமும் இப்பொழுது இலங்கை அரசின் காலத்தில் விடுதலைப்புலிகளை விமர்சிக்க இருக்கும் சுதந்திரமும் தான் நாங்கள் இவ்வளவுகால இழப்பின் பின் இறுதியாகப்பெற்றுக்கொண்டது.

உண்மையிலும் நாங்கள் பெற்றிருக்க வேண்டியவைகள் இன்னமும் பெறப்படாமலேயே இருக்கின்றன. நாங்கள் கற்றுக் கொள்ள வேண்டியவற்றை “விடுதலைப்புலிகள் விட்ட தவறுகளில் இருந்து” எனக் குறுக்கி விடுகிறோம். தமிழர்களின் விடுதலைப்போராட்டம் விட்ட தவறுகளில் இருந்து என்று அதனைத் திருத்திக்கொள்ள வேண்டும்.

இன்றைக்கு விடுதலைப்புலிகளின் அதிகாரம் தமிழ்ச்சமூகத்தின் மீது இல்லை.. மூன்று தசாப்தகாலப் போராட்டத்தின் விளைவுகளை இந்தப் பாதிக்கப்பட்ட தலைமுறை அனுபவித்துக் கொண்டிருக்கும் போதே அடுத்த தலைமுறை தாராளவாத முதலாளித்துவச் சந்தைப்பொருளாதாரக் கலாசாரத்துக்குள் அடி எடுத்து வைத்து விட்டது.

இனி வரும் படைப்புகள் இந்தக்கலாசாரத்தின் குழந்தைகள் அல்லது அதன் எதிரிகள் ஆக இருக்கும்.

தேவ அபிரா

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/110265/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் காலத்துக்கு முன்னர் விமர்சனங்களை வைச்சு என்ன வெட்டியா கிழிச்சனீங்க.

 

சிறீலங்கா பிரித்தானிய காலனித்துவத்தில் இருந்து விடுபட்டது முதல் ஈன(ழ)த்தமிழர்கள் செய்து வந்த விமர்சனங்கள்.. என்பது அவர்களின் சோரம் போதல் அரசியலாகவே இருந்தது. மக்களின் அரசியல் தேவைகளை விடிவை நோக்கி இருந்ததில்லை.

 

இப்ப மட்டும் ஏதோ 30 வருசமா எதையோ இழந்திட்டதாவும்.. இவைட திறமைகள் மழுங்கடிக்கப்பட்டது போலவும் அளக்கலாமே ஒழிய.. வேற எதுவும் வெட்டி வீழ்த்த முடியாது. அது சிங்களவனுக்கும் தெரியும்.. உலகிற்கும் தெரியும். உங்க பலவீனத்தை நீங்கள் மறைக்கலாம்.. எதிரி அதை பயன்படுத்திக் கொள்வதையே அது ஊக்குவிக்கும்..! :lol::D

  • கருத்துக்கள உறவுகள்
போராடும் அமைப்பொன்றின் நிலைப்பாடுகள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பான விமர்சனத்துக்கு இடமில்லாத போது அதனை ஏற்றுக்கொள்ள மானுட அறம் சார்ந்து சிந்திக்கும் படைப்பாளிகளுக்கு முடியாதிருக்கும் நிலை தோன்றுகிறது.
உலக போராட்டங்கள் எதுவும் அறத்தோடு நடக்கவில்லை ஆனால் விடுதலை புலிகள்மட்டும் அறத்தோடு நடந்திருக்க வேண்டும் என முற்போக்குவாதிகள் பாடம் எடுக்கினம்.........

உலக போராட்டங்கள் எதுவும் அறத்தோடு நடக்கவில்லை ஆனால் விடுதலை புலிகள்மட்டும் அறத்தோடு நடந்திருக்க வேண்டும் என முற்போக்குவாதிகள் பாடம் எடுக்கினம்.........

இங்கு தான் எமது போராட்டம் தோற்றதிற்கான அனைத்துவிடயங்களும் அடங்கியிருக்கு .

தேவ அபிரா போன்ற விமர்சகர்கள் போராட்டத்திட்க்கான தங்களது நேரடிப்பங்களிப்பை முதல் தெரியப்படுத்தவேண்டும்.பின் விமர்சிக்கலாம்.
மலடிகள் பிள்ளைபெறுவது பற்றி வகுப்பெடுக்ககூடாது.
 

porattam endru vandha piragu arathai patri pesuvathu .......!

  • கருத்துக்கள உறவுகள்

உலகில் எந்த விடுதலைப்போராட்டமும் அறத்தின் பால் நடைபெறவில்லை.உலகே மீறிய அறத்தை புலிகள் மட்டுமே காத்திருந்தால் மட்டும் வென்றிருப்போமா தேவ அபிரா?

இங்கே ஒரு பெரிய விளக்கம்  உலக விடுதலை போராட்டங்களை பற்றி எழுதவேண்டிய தேவை வருகின்றது .

 

எமது விடுதலை போராட்டம் பெரியதொரு நன்மையை எமக்கு செய்தது. உலகெங்கும் நடைபெற்ற  விடுதலை போராட்ட வரலாறுகளை தமிழில் மொழி பெயர்த்து எமக்கு தந்தது .அனைத்து இயக்கங்களின் பங்களிப்பும் அதில் இருக்கு .வெற்றி அடைந்த போரட்டங்கள் மட்டுமல்ல தோல்வியடைந்த போராட்டங்களும் அதில் அடங்கும் .

ரஷ்யா,சீனா ,கியூபா ,வியட்னாம் ,எல்சல்வடோர் ,தென்னாபிரிக்கா என்று பல அதில் அடக்கம் .

 

இந்த விடுதலை போரட்ட வரலாறுகளை வாசித்த போது எமக்குள் ஏற்பட்ட கனவும் தாக்கமும் உணர்வும் எமது போரட்டத்தில் அறவே இல்லாமல் போனது பெரிய துரதிஸ்டம் .

.

முடிந்தால் நானே மாறுபாடுகளை கொஞ்சம் எழுதுகின்றேன் .

 

புலிகளை நான் முற்றாக வெறுப்பதற்கு அவற்றை வாசித்ததும் ஒரு காரணமாக இருக்கலாம் .

 

பனைமரத்தில் தேங்காய் புடுங்கவேண்டும் அல்லது புடுங்கியிருக்கவேண்டும் என்பதே அறிவுசார் நிலையாக உள்ளது. படைப்பாளி என்பதும் இந் நிலைக்கு அப்பாற்பட்டதில்லை.

 

அறமும் தனிமனிதசுதந்திரமும் ஜனாயகமும் சாதீயச் சமுதாயத்தில் எங்கனம் சாத்தியம்? ஈழச்சமுதாயத்தில் தனிமனித சுதந்திரத்தை அறத்தை உணர்வதே சாத்தியமற்றது. அப்படி ஒன்று இருந்த சுவடே கிடையாது. ஒன்று அடிமைப்படுத்துபவன் என்னுமொன்று அடிமைப்படுகின்றவன். இந்த அடிப்படைச் சாரம்சத்தை கடந்து இச்சமூகம் இல்லை.  இவற்றை பூசிமொழுகி தம்மைத் தாமே ஏமாற்றும் ஒரு மாயை புகைமூட்டம் போல் இருந்துவருகின்றது.

 

புலிகளின் காலம் இவ்வாறான ஒரு சூழலுக்குள் தனது ஆரம்பத்தையும் முடிவையும் கொண்டது. சமூகத்திற்கு அப்பாற்பட்ட அறம் தனிமனித சுதந்தித்தை இச் சூழலுக்குள் இயங்கி தனது ஆரம்பத்தையும் முடிவையும் கண்ட ஒரு அமைப்பிடம் எதிர்பார்ப்பது பனைமரத்தில் தேங்காய் புடுங்க முற்படுவது போன்றதே.

 

 

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்யா,சீனா ,கியூபா ,வியட்னாம் ,எல்சல்வடோர் ,தென்னாபிரிக்கா என்று பல அதில் அடக்கம் .

 

இந்த விடுதலை போரட்ட வரலாறுகளை வாசித்த போது எமக்குள் ஏற்பட்ட கனவும் தாக்கமும் உணர்வும் எமது போரட்டத்தில் அறவே இல்லாமல் போனது பெரிய துரதிஸ்டம் .

.

.

 

.......இவர்களின்போராட்டத்தால் அப்பாவி மக்கள் ஒருத்தரும் கொல்லப்படவில்லையா?....இவர்கள் போராடி வென்றதால் உலக மக்களுக்கு எதாவது பிரயோசம் உண்டா? அல்லது அந்த நாட்டு மக்களுக்கேனும் எதாவது பிரயோசனம் உண்டா?

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே ஒரு பெரிய விளக்கம்  உலக விடுதலை போராட்டங்களை பற்றி எழுதவேண்டிய தேவை வருகின்றது .

 

எமது விடுதலை போராட்டம் பெரியதொரு நன்மையை எமக்கு செய்தது. உலகெங்கும் நடைபெற்ற  விடுதலை போராட்ட வரலாறுகளை தமிழில் மொழி பெயர்த்து எமக்கு தந்தது .அனைத்து இயக்கங்களின் பங்களிப்பும் அதில் இருக்கு .வெற்றி அடைந்த போரட்டங்கள் மட்டுமல்ல தோல்வியடைந்த போராட்டங்களும் அதில் அடங்கும் .

ரஷ்யா,சீனா ,கியூபா ,வியட்னாம் ,எல்சல்வடோர் ,தென்னாபிரிக்கா என்று பல அதில் அடக்கம் .

 

இந்த விடுதலை போரட்ட வரலாறுகளை வாசித்த போது எமக்குள் ஏற்பட்ட கனவும் தாக்கமும் உணர்வும் எமது போரட்டத்தில் அறவே இல்லாமல் போனது பெரிய துரதிஸ்டம் .

.

முடிந்தால் நானே மாறுபாடுகளை கொஞ்சம் எழுதுகின்றேன் .

 

புலிகளை நான் முற்றாக வெறுப்பதற்கு அவற்றை வாசித்ததும் ஒரு காரணமாக இருக்கலாம் .

நிச்சயம் உங்கள் எழுத்து பல விடயங்களை அறிய உதவியாக அமையும் அர்யுன்.
 
உங்களது கருத்துக்களில் எனக்கு பல இடங்களில் உடன்பாடு உண்டு. ஆனால் நீங்கள் வேண்டுமென்றே சில கருத்தாளர்கள் மீது புலித்தாக்குதல் செய்வது பலமுறை சினப்படுத்தியமையால் சில இடங்களில் உங்கள் எடக்கு முடக்கு வழியில் நானும் எழுதியிருக்கிறேன். ஆனால் உங்கள் எழுத்துக்களை தொடர்ந்து வாசிப்பேன். குறித்த சிலரது கருத்துக்களை முழுமையாக வாசிப்பேன் அதில் நீங்களும் ஒருவர். 
 
தவறுகளிலிருந்து புதுப்பிக்கப்படுவோம் என சொல்லியே பலர் இப்போது எழுத புலம்பவும் தொடங்கியுள்ளார்கள்.அவர்கள்  புலி பிழை செய்தது செய்தது என்றுதான் எழுதுகிறார்கள் ஆனால் நடந்து முடிந்தவற்றையே கிழறிக்கிழறி சுவைப்பதில் என்ன சுவையை காண்கிறார்கள் ? 
 
ஆக அடுத்து என்ன செய்யப்போகிறோம் ? என்பதற்கான பாதையை யாராவது சொல்கிறார்களா ? 
 
நீங்கள் புளொட்டிலிருந்து உலக விடுதலைப்போராட்ட வரலாறுகளை படித்திருக்கிறீர்கள். நான் புலிகள் அமைப்பின் போராளிகளிடமிருந்து உலக விடுதலை வரலாற்று நூல்களை படித்திருக்கிறேன். இருவரும் வரலாறுகளை அறிந்திருக்கிறோம் ஆனால் வழிகாட்டியாக நாங்கள் என்னத்தை செய்தோம் ? அதையே முன்னுதாரணமாக காட்டி ஒரு வழியை சொல்வோமா ? 
 
புலிகள் செய்தது எல்லாம் சரியென்று வாதிடவரவில்லை. ஆனால் விடுதலைப்போராட்டங்கள் ஒவ்வொன்றும் அறத்தின் பால் நடக்கவில்லை. உலகம் மீறிய அறத்தில் ஒருதுளி தான் புலிகள் மீறியது. 
 
புலிவாழ்ந்த போது புலிக்கு சாமரம் புலி வீழ்ந்த போது சோபாவுக்கு ஆராத்தியென்றவர்கள் மீதே வெறுப்பாயிருக்கிறது. 
 
நீங்கள் இந்த வகையாளர்களை விட நிச்சயம் வித்தியாசமாக எழுதுவீர்கள் என நம்புகிறேன். 
 
நான் வாசிக்க விரும்பும் வரலாறு உங்களிடம் தமிழில் இருந்தால் அல்லது எங்காவது இணையத்தில் இருந்தால் தாருங்கள்.ஸ்ராலின்கிராட் யுத்தம் பற்றிய விடயங்களை முழுமையாக எங்காவது எடுக்க முடிந்தால் எனக்கும் தந்துதவுங்கள். (இது எனது தனிப்பட்ட வாசிப்புக்காக கேட்கிறேன்)
 

 

Edited by shanthy

  • கருத்துக்கள உறவுகள்

 

தேவ அபிரா போன்ற விமர்சகர்கள் போராட்டத்திட்க்கான தங்களது நேரடிப்பங்களிப்பை முதல் தெரியப்படுத்தவேண்டும்.பின் விமர்சிக்கலாம்.
மலடிகள் பிள்ளைபெறுவது பற்றி வகுப்பெடுக்ககூடாது.

 

 

 

அதிகம் தாரம் போகத்தேவையில்லை

யாழில் கருத்து எழுதுபவர்கள்

முக்கியமாக  போராட்டத்தை  விமர்சிப்பவர்கள்

முதலில்  இதைச்செய்யக்கடவது............. 

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்களின் தமிழர்கள் மீதான அடக்குமுறை பங்களிப்புச் செய்தாரா இல்லையா என்று பார்ப்பதில்லை. இலங்கையில் தமிழர்களாகப் பிறந்தது அல்லது இலங்கைத் தமிழர்களின் சந்ததியாக இருப்பதே அரசியல் கருத்துக்களை வைப்பதற்குப் போதிய தகுதியாகும். பத்துப் பிள்ளைகள் பெற்றவளுக்கு மலடி முக்கிக் காட்டக்கூடாது என்பது எல்லாம் தமிழர்களின் அரசியல் பாதை சரியாகச் சென்றதா இல்லையே என்ற விமர்சனங்களுக்குப் பதிலாக அமையாது.

கிருபன் அண்ணா,
இன்று போராட்டத்தைப்பற்றி இலகுவாக விமர்சிக்கிறார்கள்.ஒரு களப் போராட்டத்தின் வலிகளை அறியாமல்.மிகவும் ஆளணி குறைந்த அமைப்பு , எந்த நாடுகளின் உதவிகளும் அற்ற அமைப்பு எவ்வளவு கடினப்பட்டிருக்கும்.ஒவ்வொரு போராளியும் மாற்றிவிட ஆள் இல்லாமல் எவ்வளவு சுமைகளை சுமந்திருப்பார்கள்.இன்று கண்மூடி விமர்சிப்பவர்கள் அங்கும் தங்களை பாதுகாத்துக்கொண்டவர்கள் வெளியிலும் அப்படித்தான்.   
 
  • கருத்துக்கள உறவுகள்

புரட்சிகளின்போது முதலாவதாக வீழ்ந்து போவது சட்டதிட்டங்கள்தான். அவை சரியாக இல்லாத / செயற்படாத காரணங்களினாலேயே புரட்சிகள் ஏற்படுகின்றன. அவ்வாறு குழப்பங்களுக்குள் உருவான புரட்சிகளில் சட்ட ஒழுங்கை யாரும் எதிர்பார்ப்பதில்லை.

உதாரணமா, லிபியாவில் புரட்சி தூண்டப்படுகிறது. கடாபி பிடிக்கப்படுகிறார். பிறகு கொல்லப்படுகிறார். இவரது கொலை தவறானது. ஆனாலும் புரட்சி என்கிற காரணத்தினால் ஓரிருவர் தவிர ஏனையவர்கள் அனைவருமே தப்பிவிடுவார்கள். சாதாரண லிபிய சட்டங்களை புரட்சிக்காரர் அனைவரின்மீதும் பிரயோகித்துவிட முடியாது.

ஈழத்தில் நடந்தது புரட்சி என்போர் ஒருபுறம். பயங்கரவாதம் என்போர் மறுபுறம். இவர்களுக்கு இடையேயான வாதப் பிரதிவாதங்கள் அவ்வளவு இலகுவில் ஓயப்போவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே ஒரு பெரிய விளக்கம்  உலக விடுதலை போராட்டங்களை பற்றி எழுதவேண்டிய தேவை வருகின்றது .

 

எமது விடுதலை போராட்டம் பெரியதொரு நன்மையை எமக்கு செய்தது. உலகெங்கும் நடைபெற்ற  விடுதலை போராட்ட வரலாறுகளை தமிழில் மொழி பெயர்த்து எமக்கு தந்தது .அனைத்து இயக்கங்களின் பங்களிப்பும் அதில் இருக்கு .வெற்றி அடைந்த போரட்டங்கள் மட்டுமல்ல தோல்வியடைந்த போராட்டங்களும் அதில் அடங்கும் .

ரஷ்யா,சீனா ,கியூபா ,வியட்னாம் ,எல்சல்வடோர் ,தென்னாபிரிக்கா என்று பல அதில் அடக்கம் .

 

இந்த விடுதலை போரட்ட வரலாறுகளை வாசித்த போது எமக்குள் ஏற்பட்ட கனவும் தாக்கமும் உணர்வும் எமது போரட்டத்தில் அறவே இல்லாமல் போனது பெரிய துரதிஸ்டம் .

.

முடிந்தால் நானே மாறுபாடுகளை கொஞ்சம் எழுதுகின்றேன் .

 

புலிகளை நான் முற்றாக வெறுப்பதற்கு அவற்றை வாசித்ததும் ஒரு காரணமாக இருக்கலாம் .

 
 
இப்போதும் போராட்டம் நடத்தும் பல அமைப்புகள் .... குர்திஸ்தான் ...... கொலம்பிய போராளிகள் 
புலிகள் பற்றி பாடம் கொடுக்கிறார்கள்.
அருகிலேயே விழுங்க நின்ற இந்தியா 
நாலு பக்கமும் கடல் சூழ்ந்த பூகோள அமைவிடம். இதற்குள் இருந்து எப்படி விருட்சம் ஆனார்கள் என்று இப்போதும் சொல்லி கொடுக்கிறார்கள்.
 
உங்களுக்கு வெள்ளைக்காரன் காட்டினால்தான் வெள்ளை என்று நிக்கிறீங்கள்.
 
இந்த லட்சணத்தில் உலக போர் அது இது என்று வக்காலத்திட்கு குறைவில்லை.
உங்களின் வீட்டுக்கு வெளியிலேதான் உலகம் இருக்கு. உண்மையை நீங்கள் மறைக்கலாம். உலகம் மறக்காது. 
 
எழுதுகிறேன் ..................
 
இதை ஒரு 1500 தடவை எழுதிவிட்டீர்கள். 
  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்களின் தமிழர்கள் மீதான அடக்குமுறை பங்களிப்புச் செய்தாரா இல்லையா என்று பார்ப்பதில்லை. இலங்கையில் தமிழர்களாகப் பிறந்தது அல்லது இலங்கைத் தமிழர்களின் சந்ததியாக இருப்பதே அரசியல் கருத்துக்களை வைப்பதற்குப் போதிய தகுதியாகும். பத்துப் பிள்ளைகள் பெற்றவளுக்கு மலடி முக்கிக் காட்டக்கூடாது என்பது எல்லாம் தமிழர்களின் அரசியல் பாதை சரியாகச் சென்றதா இல்லையே என்ற விமர்சனங்களுக்குப் பதிலாக அமையாது.

 
அவர்களுடைய கருத்துக்கள் "கருத்து" என்ற தகுதி உடையவையா? 
என்பதுதான் கேள்வி.
கருத்து என்றால் என்ன என்று நீங்கள் கொஞ்சம் கருத்து சொன்னால் .....
 
அதை எடை கல்லாக வைத்துகொண்டு 
மேலே இருக்கும் கட்டுரையை ஒருமுறை எடை போட்டு பார்க்கலாம்.  
 
போர்காலத்தில் மண்ணில் என்ன நடந்தது என்று தெரியாத அரைகுறைகளுக்கு ... அதை பற்றி அலட்ட அருகைதை இல்லை என்பதை சொல்ல அதை வசித்தவர்களுக்கு தகுதி இல்லையா?? 

 

 
 
 
போர்காலத்தில் மண்ணில் என்ன நடந்தது என்று தெரியாத அரைகுறைகளுக்கு ... அதை பற்றி அலட்ட அருகைதை இல்லை என்பதை சொல்ல அதை வசித்தவர்களுக்கு தகுதி இல்லையா?? 

 

நிச்சயம் சொல்ல முழு உரிமையும் உண்டு ...................ஆனால் அவர்கள் கேட்கமாட்டார்கள் :D  :D

சாந்தி ,

இங்கு வந்து எதை எழுதினாலும் அதை வாசிக்கவோ விளங்கக்கூடியவர்களாக பலர் இல்லை .எனவே அவர்கள் தளத்தில் தான் நாங்களும் பயணிக்கவேண்டியிருக்கு :icon_mrgreen: .

"இவர்கள் போராடி வென்றதால் உலக மக்களுக்கு எதாவது பிரயோசம் உண்டா? அல்லது அந்த நாட்டு மக்களுக்கேனும் எதாவது பிரயோசனம் உண்டா?

இப்படி ஒரு கேள்வி கேட்பவர்களுக்கு எப்படி பதில் அளிப்பது .

இன்னொருவர் வந்து களவலி.ஆளணி பற்றி கதைகின்றார்கள் .இவை பற்றியே நாம் கதைக்கவில்லை .அவையெல்லாம் தெரியாதவர்கள் அல்ல .

புரட்சி என்றால் முதலில் மீறப்படுவது சட்ட திட்டங்கள் தான் ஆனால் அதன் எல்லைகளும் வரைமுறைகளும் தான் மக்களுக்கு போராட்டத்தின் நியாய தன்மையும் விடுதலை போரட்டத்திற்கும் பயங்கரவாதத்திற்கும் இடையில் இருக்கும் இடைவெளியை தீர்மானிக்கின்றது .சர்வதேச அங்கீகாரமும் போராட்டத்தின் வெற்றியும் கூட அங்குதான் இருக்கு

வெல்லத்தான் வீரம் கொல்ல அல்ல .


.

Edited by arjun

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி ,

இங்கு வந்து எதை எழுதினாலும் அதை வாசிக்கவோ விளங்கக்கூடியவர்களாக பலர் இல்லை .எனவே அவர்கள் தளத்தில் தான் நாங்களும் பயணிக்கவேண்டியிருக்கு :icon_mrgreen: .

"இவர்கள் போராடி வென்றதால் உலக மக்களுக்கு எதாவது பிரயோசம் உண்டா? அல்லது அந்த நாட்டு மக்களுக்கேனும் எதாவது பிரயோசனம் உண்டா?

இப்படி ஒரு கேள்வி கேட்பவர்களுக்கு எப்படி பதில் அளிப்பது .

இன்னொருவர் வந்து களவலி.ஆளணி பற்றி கதைகின்றார்கள் .இவை பற்றியே நாம் கதைக்கவில்லை .அவையெல்லாம் தெரியாதவர்கள் அல்ல .

புரட்சி என்றால் முதலில் மீறப்படுவது சட்ட திட்டங்கள் தான் ஆனால் அதன் எல்லைகளும் வரைமுறைகளும் தான் மக்களுக்கு போராட்டத்தின் நியாய தன்மையும் விடுதலை போரட்டத்திற்கும் பயங்கரவாதத்திற்கும் இடையில் இருக்கும் இடைவெளியை தீர்மானிக்கின்றது .சர்வதேச அங்கீகாரமும் போராட்டத்தின் வெற்றியும் கூட அங்குதான் இருக்கு

வெல்லத்தான் வீரம் கொல்ல அல்ல .

.

உக்கரையின் போராளிகள் போராடினால் பயங்கரவாதம் ...
சிரியாவில் பயங்கரவாதிகள் போராடினால் மக்கள் போராட்டம் ....
 
இதையெல்லாம் எது தீர்மானிக்குது என்றும் எழுதினால் நாம் வாசித்து தெரிந்து கொள்ளலாம். 

வழக்கம் போல இன்னொருவர் குர்திஸ் ,கொலம்பிய போராளிகள் புலிகளில் இருந்து பாடம் படிக்கின்றார்களாம் இதையே தான் ராஜபக்சாவும் சொல்லுகின்றார் பயங்கரவாதத்தை ஒழிப்பது எப்படி என்று உலகத்திற்கு பாடம் எடுக்க தயாராம் .

சபாஸ் சரியான போட்டி .

 

  • கருத்துக்கள உறவுகள்
நாங்கள் இந்த உலகில் நடப்பதை எழுதுகிறோம்.
 
நீங்கள் தொடர்ந்தும் வெளி உலகில் (உலகிற்கு வெளியில்) நடப்பதை எழுதுங்கள் உங்களைபோல அறிவு முகிர்ந்தவர்கள் யாரவது இருந்தால் வாசித்து அறிவார்கள். 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவர்களுடைய கருத்துக்கள் "கருத்து" என்ற தகுதி உடையவையா? 

என்பதுதான் கேள்வி.

கருத்து என்றால் என்ன என்று நீங்கள் கொஞ்சம் கருத்து சொன்னால் .....

 

அதை எடை கல்லாக வைத்துகொண்டு 

மேலே இருக்கும் கட்டுரையை ஒருமுறை எடை போட்டு பார்க்கலாம்.  

 

போர்காலத்தில் மண்ணில் என்ன நடந்தது என்று தெரியாத அரைகுறைகளுக்கு ... அதை பற்றி அலட்ட அருகைதை இல்லை என்பதை சொல்ல அதை வசித்தவர்களுக்கு தகுதி இல்லையா??

கருத்து எதுவாகவும் இருக்கலாம். பதிலளிக்க வேண்டியதும் தவிர்ப்பதும் ஒரு கருத்தை மற்றவர் எப்படி எடைபோடுகின்றார் என்பதைப் பொறுத்ததே. பல மலினத்தனமான கருத்துக்களுக்குப் பதில் வைப்பதைத் தவிர்ப்பதும் ஒரு வகையில் நல்லதே. பதில் வைக்கும்போது சில அநாவசியமான கருத்துக்கள் முக்கியத்துவம் பெறும் ஆபத்தும் உள்ளது!

அண்மையில் ஒரு பார்ட்டியில் சில பெரிசுகள் முள்ளிவாய்க்காலில் கடைசியாக என்ன நடந்தது என்று தமக்குத் தெரிந்த "உண்மைகளை" சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஒரு பெரிசு தலைவர் தப்பிப் போனதை விபரமாக விவரித்தார். நான் அவரைப் பார்த்து "ஐயா நீங்கள் 80க்கு முன்னரே இங்கு வந்துவிட்டீர்களா?" என்று கேட்டேன். அவரும் பெருமையாக "79இலேயே வந்துவிட்டேன்" என்றார். அரைகுறைகள் எங்கும் உள்ளன என்பதை ஒத்துக்கொள்கின்றேன்.

கட்டுரையில் இருந்து..

போராடும் விடுதலை அமைப்புக்களின் அதிகாரங்களை விமர்சிப்பது எவ்வளவுக்கு முக்கியமோ அவ்வளவுக்கு ஒடுக்கு முறையில் ஈடுபடும் அரசுகளின் அதிகாரங்களை விமர்சிப்பதும் முக்கியமானது. இரண்டு விமர்சனங்களும் ஒரே தராசில் நிறுக்கப்படுபவையும் அல்ல. போராட்ட அதிகாரத்துக்கும் ஒடுக்குமுறை அரச அதிகாரத்திற்கும் இடையிலான வேறு பாட்டையும் மேற்குறித்த இரண்டு அதிகாரங்களுக்கும் இருக்கும் நடைமுறைச் சாத்தியங்களையும் ஒரு படைப்பாளி புரிந்து வைத்திருக்க வேண்டும். இதில் தெளிவு இல்லாத படைப்பாளிகள் ஒடுக்கு முறையில் ஈடுபடும் அதிகாரத்தின் கருத்து நிலைகளை மறைமுகமாகவோ வெளிப்படையாகவோ சுய பிரக்ஞை இல்லாமலோ ஆதரிக்கும் சூழலுக்குள் சென்று விடுவார்கள்.

சாந்தி அக்காவின் விருப்பதிற்கு ஏற்ப எனக்கு சில விடயங்கள் எழுதும் ஆவல் வந்துள்ளது .

குறிப்பாக நாம் கற்பனையில் வளர்த்த போராட்டத்திற்கும் உண்மையில் நடந்த போராட்டத்திற்கும் இருந்த இடைவெளி .

எமக்குள் என்ன பிழை நடந்தது என்று எனது இயக்கத்தில் இருந்தே தொடங்க ஆசை .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.