Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நவிப்பிள்ளை இலங்கை விவகாரத்தை சர்வதேச மயப்படுத்திவிட்டார் - வெளிவிவகார அமைச்சு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை விவகாரத்தை சர்வதேச மயப்படுத்திவிட்டார் என்று கடுமையாக அவர் மீது குற்றச்சாட்டுக்களை அடுக்கியுள்ள இலங்கை அரசு, புதிய ஆணையாளர் மீது தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
 
இலங்கை மீதான விசாரணை தொடர்பில் ரொய்ரர் செய்திச் சேவைக்கு நவநீதம்பிள்ளை கருத்துத் தெரிவித்திருந்தார். அதில் இலங்கைக்குச் செல்லாமலேயே விசாரணைகளை மேற்கொள்ளலாம் என்றும், போர்க்குற்றம் தொடர்பில் இலங்கைக்கு வெளியேதான் அதிகளவு சாட்சிகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
 
இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 
விசாரணைகள் அண்மையில் ஆரம்பமாகியுள்ள நிலையில், ஒரு விவகாரம் குறித்து நவநீதம்பிள்ளை ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுவது பக்கச்சார்பான நடவடிக்கைக்கான உதாரணம். விசாரணைகளில் செல்வாக்கு செலுத்தி முன்கூட்டியே திட்டமிடப்பட்ட பாதையில் அது நடைபெறச் செய்வதற்கான முயற்சியை இது அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றது.
 
இதேவேளை புதிய ஆணையாளர் பக்கச் சார்பின்மை, தனிப்பட்ட உணர்வுகளுக்கு இடம் கொடுக்காமை, சமமாக நடத்துதல் போன்ற கொள்கைளை பின்பற்றி செயற்படுவார் எனவும் நாடுகளின் இறைமை, பிரதேச ஒருமைப்பாடு, தனது ஆணையை முன்னெடுப்பதில் அரசுகளுக்குள்ளான உள்ளூர் நியாதிக்கம் என்பவற்றை மதிப்பார் எனவும் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது.
 
நவநீதம்பிள்ளை, போர்க் குற்றங்கள் குறித்த பெருமளவு தகவல்கள் இலங்கைக்கு வெளியே இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.கடந்த காலங்களிலும் அவர் இவற்றை சுட்டிக்காட்டியிருந்தார். நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து கிடைத்தவை என்று அவற்றை நியாயப்படுத்தியிருந்தார். எனினும் அவை எங்கிருந்து கிடைத்தன என்பதை அவர் பகிரங்கப்படுத்தவில்லை. அவற்றை ஆராய்ந்து உறுதிப்படுத்துவதற்கான ஏற்பாடுகளும் இடம்பெறவில்லை.
 
மாறாக அவர் நம்பகத்தன்மையற்ற ஐ.நா வட்டாரங்களிலிருந்து கிடைத்த மிகைப்படுத்தப்பட்ட தகவல்களுக்கு அங்கீகாரம் அளித்துள்ளார். ஆராயப்படாத புள்ளி விபரங்களை ஐநா ஆவணங்களில் சேர்த்துள்ளார்.
 
உயர்ந்த பட்ச பக்கச்சார்பின்மையை பேணவேண்டிய அதிகாரியயாருவரிடமிருந்து இது எதிர்பார்க்கக் கூடியதல்ல. இலங்கை குறித்து எடுகோளுடனும், பக்கச்சார்புடனும் மனித உரிமை ஆணையாளர் செயற்படுவது துரதிர்ஷ்டவசமானதாகும்.
 
இலங்கையின் உள்நாட்டு விசாரணைகள் ஆரம்பமாக முன்னரே அதனை அலட்சியம் செய்து, இலங்கை விவகாரத்தை சர்வதேச மயப்படுத்தும் தனது நோக்கத்தை அடைவதை இலட்சியமாக கொண்டு நவநீதம்பிள்ளை செயற்படுகிறார். தனது இந்த நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதற்காக அவர் தனது அறிக்கைகள் ஊடாகவும், வாய்மூல அறிக்கைகள் ஊடாகவும் ஐ.நா பொதுச் சபைக்கான ஆலோசனை அறிக்கைக்கு நம்பகத்தன்மையையும், அங்கீகாரத்தையும் பெற முயன்றுள்ளார்.
 
குறிப்பிட்ட அறிக்கையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் இரகசியமான முறையில் பெறப்பட்ட வாக்குமூலங்களை அடிப்படையாக கொண்டவை.
 
இலங்கை நிலவரத்தை வேறு நாடுகளின் நிலவரத்துடன் ஒப்பிடுவதன் மூலமாக இலங்கை தொடர்பில் திரிபுபடுத்தப்பட்ட அபிப்பிராயத்தை உருவாக்க முயல்கிறார்.
 
இலங்கையில் மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னர் ஏற்பட்டுள்ள சமூக – பொருளாதார உட்கட்டமைப்பு மாற்றங்களை கருத்தில் கொள்ளாமல மனித உரிமை ஆணையாளர் சர்வதேசத்தின் கவனத்தை இலங்கையை நோக்கி ஈர்ப்பதிலேயே அக்கறை காட்டி வருகிறார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=438343333815605248#sthash.fxvPPHhw.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

2 லட்சம் மக்கள் இறந்து, ஈழத்தமிழனின் பாரம்பரிய பூமி தினமும் பறி போய்கொண்டிருக்கு.....
இதை சர்வதேசப் படுத்தா விட்டால்.... நவிப்பிள்ளை ஐ.நா.வில் மனித உரிமை ஆணையாளராக இருந்து என்ன பயன்.
அவர் தனது கடமையை தானே.... செய்கிறார்.

மோட்டு சிங்களவன், பான் கீ மூன் மாதிரி.... நவிப்பிள்ளை இருக்க வேண்டும் என்று, ஆசைப் படுகிறான் போலை கிடக்கு.

2 லட்சம் மக்கள் இறந்து, ஈழத்தமிழனின் பாரம்பரிய பூமி தினமும் பறி போய்கொண்டிருக்கு.....

இதை சர்வதேசப் படுத்தா விட்டால்.... நவிப்பிள்ளை ஐ.நா.வில் மனித உரிமை ஆணையாளராக இருந்து என்ன பயன்.

அவர் தனது கடமையை தானே.... செய்கிறார்.

மோட்டு சிங்களவன், பான் கீ மூன் மாதிரி.... நவிப்பிள்ளை இருக்க வேண்டும் என்று, ஆசைப் படுகிறான் போலை கிடக்கு.

 

பான் கீ மூனின் மெளனத்தினையும், நவிப்பிள்ளையின் நடவடிக்கைகளையும் தீர்மானிப்பது அமெரிக்காவும், பலம் பொருந்திய மேற்கு நாடுகளும். அவர்களின் தாளத்துக்கு ஆடுவது இவர்கள் பணி.

 

அமெரிக்காவினதும், மேற்கினதும் நலன்கள் எம் தேவைகளுடன் ஒத்துப் போகும் போது மட்டுமே காட்சி மாறும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
நவிப்பிள்ளை இலங்கை விவகாரத்தை சர்வதேச மயப்படுத்திவிட்டார் - வெளிவிவகார அமைச்சு

 

நீங்கள் சர்வதேச ரீதியாய் கடன்வாங்கி சாப்பிட்டால் பிரச்சனையளும் சர்வதேசத்துக்கு வரத்தானே செய்யும். :D

  • கருத்துக்கள உறவுகள்

அதற்குத்தானே இறுதி வரை போராடினார்கள் ...போராளிகள்.......

அதற்குத்தானே இறுதி வரை போராடினார்கள் ...போராளிகள்.......

சிங்களவன் பயங்கரவாதிகளை அழித்தோம் என்று சொல்வதை விட கேவலமானது . உதுதான் உண்மையென்றால் கேஸ் தள்ளுப்பட்டுவிடும் .

 

ஆனால் அது உண்மையல்ல  என்று சர்வதேசத்திற்கு தெரியும் .

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் பயங்கரவாதிகளை அழித்தோம் என்று சொல்வதை விட கேவலமானது . உதுதான் உண்மையென்றால் கேஸ் தள்ளுப்பட்டுவிடும் .

 

ஆனால் அது உண்மையல்ல  என்று சர்வதேசத்திற்கு தெரியும் .

 

அன்டன் பாலசிங்கம் அவர்கள் ஐ.நா.சபை மூலம்தான் எந்த ஒரு விடுதலையும் வென்றேடுக்கலாம் என்ற கருத்தை உடையவர்.இன அழிப்பு ஒரு அரசால் ஒரு கூறிப்பிட்ட இனமக்களுக்கு எதிராக நடத்தப்படகூடாது என்பது ஐ.நா.சபை யில் சட்டமாக உண்டு என நினைக்கிறேன்....
 
சிறிலங்கா அரசு இன அழிப்பு செய்தாலும் செய்யவில்லை என்று கூறத்தான் பல மேற்கத்தைய,பிராந்திய வல்லரசுகள் முயற்சி எடுக்கின்றன.சிறிலங்காவில் இனவொழிப்பு நடந்தது என ஒரு பதிவை ஐ.நா சபையில் பதிவிடக்கூடாது என்பதில் பல பெரிய வல்லரசுகள்,குட்டிவல்லரசுகள் கடும் முயற்சி எடுத்துவருகின்றன.அப்படி ஒரு பதிவு வந்தால் அது சிறிலங்காவுக்கும் ,அந்த பிராந்தியத்திற்கும் ஒரு தலையிடியாக தொடர்ந்து  இருக்கும்.
 
தெற்காசிய பிராந்தியத்தில் உருவான விடுதலை போராட்டங்களில் ஐ.நா.சபை கதவு வரை சென்ற போராட்டம் எமது போராட்டம்தான் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை.
காளிஸ்தான்(பஞ்சாப் ),மிசோராம்,நாகலாந்து,மனிப்பூர் ,அசாம் போராட்டங்கள் எதுவும் ஐ.நாசபை வரை செல்லவில்லை.கஷ்மீர் போராட்டமும் செல்லவில்லை.பாகிஸ்தான் இந்திய எல்லை பிரச்சனை காரணமாக கஷ்மீர் பிரச்சனை ஐ.நா.சபையில் பதிவிலுள்ளது.
 
சிறிலங்காவில் இந்தியா தனது செல்வாக்கை பயன்படுத்த பல முயற்சிகளை எடுத்து வெற்றிகண்டுள்ளது.1971 ஆண்டு கிளர்ச்சியை முறியடித்தவுடன் இந்தியா செல்வாக்கு செலுத்த முயன்ற பொழுது பண்டாரநாக்க சர்வதேச விமானநிலையம்,சர்வதேச மாநாட்டு மணடபம் போன்றவற்றை கட்டிகொடுத்து சீனா தன்பலத்தை காட்டியது... இன்றும் பணபலத்துடன் சீனா ஆதிக்கம் செய்ய முயலுகையில் சீனாவுடன் பணபலத்துடன் ஈடுகொடுக்கமுடியாத இந்தியா இனவழிப்பு என்ற ஆயுதத்தைகாட்டி சிறிலங்காவை தனது  கட்டுப்பாட்டில் வைத்திருக்க முயலுகின்றது ,வெற்றியும் அடைந்து கொண்டு வருகின்றது.
 
சிறிலங்கா விசுவாசி லக்சமன் கதிர்காமர்,இந்தியா விசுவாசி சுப்பிரமணியசுவாமிகள் இவர்கள் இருவரதும் ஐ.நாடுகள் சபை தொடர்பான கருத்துக்களிலிருந்து இவர்களுக்கு அந்த சபை மீது ஒரு வித பயம் உள்ளது என்பது தெளிவாகிறது.
அன்டன் பாலசிங்கம் அவர்களின் புத்தகத்திலிருந்து.........ஐ.நா சபை நிறுவனம் வாயிலாக மானிடத்திற்குப் பொதுவான பண்பாட்டு விழுமியங்கள் தொகுக்கப்பட்டு ஐ.நாவின் சாசனங்களாகப் பிரகடனம் செய்யப்பட்டு உள்ளன. அடிப்படை மனித உரிமைகள்,மனித சுதந்திரங்கள்,அரசியல் உரிமைகள்,குடியுரிமைகள்,பெண் உரிமைகள்,சிறார் உரிமைகள்,தேசிய இனங்களின் சுநின்ணய் உரிமைகள் போன்ற உரிமைப்பிரகடனங்களாகவும் சர்வதேச் மனிதாபிமானச சட்டங்களாகவும் மானிடத்திற்கு போதுவான பண்பாட்டு விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டு ஐ.நா செயற்பட்டு வருகிறது இந்த அற்நெறிகோட்பாடுகளை ஐ.நாவில் அங்கம் வ்கிக்கும் உலக் நாடுகள் அனைத்துமே ஏற்றுக்கொண்டுள்ளன.மானிட்த்திற்கான பொதுவிழுமியங்களை மேலும் செழுமைப்படுத்தி  விரிவுபடுத்தவும் ஐ.நா முயன்று வருகிறது......

Edited by putthan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.