Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புங்குடுதீவு மகாவித்தியாலயத்துக்கான சுற்றுமதில் திட்டம் - France புங்குடுதீவு மக்கள் ஒன்றியம்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  உடையார்

பலரது கேள்விக்கும் உங்களது  பதிலில் பதிலுள்ளது

 

 

ஒன்றை  எல்லோரும் புரிந்து கொள்ளணும்

ஏற்கனவே

முன் பள்ளிகள்

ஆசிரியைகளுக்கான சம்பளம்

ஊக்குவிப்பு

மதிய  உணவு

அவர்களுக்கான உடுப்புக்கள்

குளங்களை கிணறுகளை துப்பரவு செய்தல்

பாடசாலைக்கு கணணிகள்

ஊரைச்சுற்றி  மரம் நடுவதற்கு தண்ணிவிட ரக்டர்

.....................

.........................

 

என்று பலவற்றை  செய்திருக்கின்றோம்

செய்து வருகின்றோம்

 

இந்த திட்டம் என்பது பல வருடங்களாக( கிட்டத்தட்ட 15 வருடங்களாக)

பாடசாலை அதிபர் மற்றும்  நிர்வாகத்தாலும் மாணவர்களாலும் விடப்பட்டுக்கொண்டே இருந்தது

நான் 2003 இல் போயிருந்த போது கூட அன்றைய  அதிபர் இது பற்றி  என்னிடம் பேசியிருந்தார்

அத்துடன் வருகின்றீர்கள்

பார்க்கின்றீர்கள்

செய்வோம் என்கிறீர்கள்

அத்துடன் சரி  என அலுத்துக்கொண்டார்...

 

போன வருடம் எமது செயலாளர்  போன போதும் இதையே சொல்லி  சலித்துக்கொண்டார்..

 

எனவே செயலில் காட்டலாம் என்றே இதை எடுத்தோம்

 

இதை எடுத்ததற்கு காரணம்

மத்தியில் உள்ளது

உயர்தர மற்றும் விஞ்ஞான ஆய்வுகூடம் உள்ள ஒரே ஒரு பாடசாலை

பிள்ளைகள் முக்கியமாக வளர்ந்த பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு மற்றும் அசௌகரியங்கள்

உள்ளே வருவதற்கும் வெளியில் செல்வதற்கும் ஆயிரம் வாசல்களை  தடை செய்தல்

கால்நடைகளின் தொல்லைகளிலிருந்து பாடசாலையையும் வகுப்புக்களையும் உபகரணங்களையும் பாதுகாத்தல்

உள்ளே மரங்களை  நட்டு  சோலையாக்க பாதுகாப்பு கொடுத்தல்

சகல விளையாட்டுக்களையும் விளையாட மைதானம் அமைத்து

புங்குடுதீவு பாடசாலைகள் மட்டுமல்ல

தீவுப்பகுதி பாடசாலைகள் அனைத்தும் வந்து விளையாட வசதி  செய்தல்

அத்துடன் இதன் மூலம் இந்தப்பகுதி சனநடமாட்டம் அதிகரித்து

வாணிபம் வேலை வாய்ப்பு என்பன பெருக எம்மால் ஆனதைச்செய்தல்.....

 

இவையே  இந்த திட்டம் சம்பந்தமாக எம்மால் கவனத்தில் எடுக்கப்பட்ட நல்ல விடயங்கள்

அதே நேரம் சில தீமைகளும் இருக்கலாம்

அவற்றை   எடை  போட்டால்

எதையும் செய்யமுடியாது என்பதால் ஆரம்பித்தோம்

 

மக்களிடம் போகமுதல்

முடிவு எடுத்ததும் எமது நிர்வாக உறுப்பினர்களிடம்  கையேந்தினோம்

6500 ஈரோக்கள்  சேர்ந்தது

கோபு என்கின்ற  வர்த்தகர் தனது பிள்ளைக்கு பிறந்தநாள் செய்தார்

அவரது பிறந்த நாள் மேடையில் அவரிடம் திட்டத்தை சொன்னோம்

ஒரு செக்கன் கூட யோசிக்கவில்லை

10 ஆயிரம்   ஈரோக்கள் தருகின்றேன் ஆரம்பியுங்கள் என்று தூக்கிவிட்டார்

மிகுதிக்கு 

திருமணவீடுகள்

சாமத்தியவீடுகள்

பிறந்தநாள் விழாக்கள்

ஏன் செத்தவீடுகளில் கூட கையேந்தினோம்...

நண்பர்கள்

அண்ணன

தம்பி

மச்சான்

மாமன்

சித்தப்பன் என ஊர் உறவுகள் அனைவரிடமும் கையேந்தினோம்

கையேந்தி வருகின்றோம்

 

திட்டத்தின் முன்னேற்றத்தை

படங்களை காட்டி பேசிவருகின்றோம்

நெருங்கிவிட்டோம்

செய்து முடிப்போம்....

 

இப்பொழுது நம்பிக்கை வருகிறது

அடுத்த வருடம்

அடுத்த திட்டம்

1 கோடி

 

எல்லோரும் வந்து கை கோருங்கள்

திட்டத்தை தாருங்கள்

செய்து முடிக்கலாம்

 

 

  • Replies 104
  • Views 10.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எந்த ஆண்டு இப்படி பாஞ்சனீிங்கள்.

 


மதில் கட்டியிருந்த மானிப்பாய் இந்துவிலேயே எத்தனை தரம் பாச்சிருக்கம் அதனால் அந்த ஆசிரியர்களுக்கு எத்தனை தலையிடி ஊரவர்களால். அவர்களை ஒழுங்காக படிப்பிக்க விட்டால்தானே.

 

 


எனக்கும் ஒரு கேள்வி குறை நினைக்காதையுங்கோ.மதில் இந்த முறையில் கட்டுவது நேரத்தையும் செலவவையும் அதிகப்படுத்தும் என்று எங்கடை இசை எங்கையோ சொன்ன மாதிரி இருக்கு.அவரையும் ஒருக்கா கேட்டுப்பாருங்கோ.மற்றும்படி உங்கள் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்.எனக்கும் ஒரு கேள்வி குறை நினைக்காதையுங்கோ.மதில் இந்த முறையில் கட்டுவது நேரத்தையும் செலவவையும் அதிகப்படுத்தும் என்று எங்கடை இசை எங்கையோ சொன்ன மாதிரி இருக்கு.அவரையும் ஒருக்கா கேட்டுப்பாருங்கோ.மற்றும்படி உங்கள் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்.

Edited by சுவைப்பிரியன்

  • கருத்துக்கள உறவுகள்

கேள்வியில் தப்பில்லை

எங்களுக்கும்   முதலில் அவ்வாறு தான் இருந்தது

நாங்கள் 25 லட்சமே  முதலில் நினைத்திருந்தோம்

 

ஆனால்  கேள்விக்கோரல் செய்தபோது

ஒரு   இடத்திலிருந்து

77 லட்சமும்

இன்னொரு இடத்திலிருந்து 56 லட்சமும் கோரப்பட்டது

 

அதிபருடனும்

சர்வோதய  அமைப்புடனும் தொடர்பு கொண்டு

56 லட்சத்தை தெரிவு செய்தோம்..

அத்துடன்  மலசலகூட வசதியுடன் 60 லட்சம் மதிப்பிட்டோம்....

(மதில் 600 அடி நீளமானது.  எட்டு அடி உயரமானது. அத்துடன் அத்திவாரம்  உவர் தண்ணீருக்கு பழுதாகாமலும்  நீண்ட காலம்  இருக்கக்கூடியவாறும் விசேச ஏற்பாட்டுடன் பதியப்படுகிறது. அத்துடன் ஒரு பக்கத்தில் குளம் இருப்பதால் அந்த இடத்துக்கு மட்டும் 18 லட்சம் முடிகிறது)

 

இதற்கான கடிதப்போக்குவரத்துக்கள் ஒப்பந்தங்கள் என்பன 

3 பகுதியிடமும் உண்டு.

 

தேவையானால்  இங்கு பதியப்படும்....

 

உங்கள் விளக்கத்திற்கும்

தனிமடலில் அனுப்பி வைத்த ஆதாரங்களுக்கும்

நன்றி ஐயா.

 

 

ஒரு அரசு செய்யும் வேலையை எதுக்கு நாம் செய்ய வேணும் என்பதுதான் கேள்வி அதுபோக ...இந்த அறுபது லட்சம் பணத்தில் அங்கு இருக்கும் முன்பள்ளி குழந்தைகளுக்கு வங்கியில் போட்டுட்டு ஒவ்வெரு நாளும் சத்துணவு கொடுத்து இருக்கலாம் பாலும் பயறுமா ..

 

இவ்வாறு இலட்சம் செலவு செய்து செய்யும் திட்டங்களை மக்கள் நலனுக்கு செய்யுங்கள் சுயதொழில் ...நாலு தையல் மிசின் ...ஒரு மூணுபேருக்கு ஆட்டோ ...இருவருக்கு சைக்கிள் என்று நன்மை அளிக்கும் .

 

தம்பி அஞ்சரன்,

 

உங்கள் திட்டமும் நன்றாக இருக்கு.

 

இதனை நீங்கள் ஏன் பொறுப்பெடுத்து

மற்றவர்களின் உதவிகளையும் பெற்று

நடைமுறைப்படுத்தக் கூடாது?

 

கேள்விகள் மட்டும் தான் கேட்பம் செயல்கள் செய்ய மாட்டம் என்ற கூட்டத்தில் நீங்கள்

இருக்க மாட்டீர்கள் என்று நினைக்கின்றோம்

உங்கள் விளக்கத்திற்கும்

தனிமடலில் அனுப்பி வைத்த ஆதாரங்களுக்கும்

நன்றி ஐயா.

 

தம்பி அஞ்சரன்,

 

உங்கள் திட்டமும் நன்றாக இருக்கு.

 

இதனை நீங்கள் ஏன் பொறுப்பெடுத்து

மற்றவர்களின் உதவிகளையும் பெற்று

நடைமுறைப்படுத்தக் கூடாது?

 

கேள்விகள் மட்டும் தான் கேட்பம் செயல்கள் செய்ய மாட்டம் என்ற கூட்டத்தில் நீங்கள்

இருக்க மாட்டீர்கள் என்று நினைக்கின்றோம்

அதுக்கான செயலின் முதல் கட்டம் தான் அங்கு ஒரு அனைத்து வட்டாரமும் இணைத்த ஒரு நிர்வாக குழு உருவாக்கம் இனி அவர்கள் ஊடா அங்கு உள்ள இப்பொழுதைய தேவை பற்றி அறிந்து அதை நிவர்த்தி செய்வது ...

 

முதல் கட்டமா ஊரைதீவு ..கேரதீவு பிள்ளைகள் பாடசாலை வர வெகு தூரம் நடப்பதால் அவர்களுக்கு ஆக இரண்டு ஆட்டோ எடுத்து இரு குடும்ப தலைவர்களுக்கு கொடுத்து அவர்களின் வேலை காலையில் பிள்ளைகளை ஏற்றி வந்து பள்ளியில் விட்டுட்டு அவர்கள் வேறு வாடகை தேவைக்கு போகலாம் பின்னர் பின்னேரம் வந்து அவர்களை ஏற்றி கொண்டுசென்று விட்டால் சரி ...

 

ஆக அவர்களுக்கும் ஒரு தொழிலா இருக்கும் பிள்ளைகளும் படித்ததா இருக்கும் அதை பாரிஸில் இருக்கும் கமலாம்பிகை பழைய மாணவர்கள் தாங்கள் செய்வதா உறுதி அளித்துள்ளார்கள் அண்ணே ..

 

இப்படியான சந்திப்புகள் செயல்பாடுகள் நாம் இப்பொழுது ஆரம்பித்துள்ளோம் .

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்ச்சி அஞ்சரன். வெற்றி பெற வாழ்த்துகள்


எந்த ஆண்டு இப்படி பாஞ்சனீிங்கள்.

 


 

 

1985-1989 வரை :D

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இடுகையில் பலவிடையங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தாலும்,

 

கேட்கப்ப்டும் கேள்விகள் (அவை அறிவுசார்ந்ததாக இல்லாது விட்டாலும், "நாங்கள் அப்படித்தான் கேட்பம் கோவிக்கக்கூடாது") அன்றேல் விமர்சனங்களுக்குப் பொறுப்பாகப் பதில் சொல்லும் ஜனநாயகத் தன்மை இருப்பதே புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் வெற்றி, இதைத் தொடர்வீர்களாகவிருந்தால் சாதிக்கலாம்.

கோபு என்கின்ற  வர்த்தகர் தனது பிள்ளைக்கு பிறந்தநாள் செய்தார்

அவரது பிறந்த நாள் மேடையில் அவரிடம் திட்டத்தை சொன்னோம்

ஒரு செக்கன் கூட யோசிக்கவில்லை

10 ஆயிரம்   ஈரோக்கள் தருகின்றேன் ஆரம்பியுங்கள் என்று தூக்கிவிட்டார்

பிறந்தநாள் செலவில் 3வீதம்தான் :)

பிறந்தநாள் செலவில் 3வீதம்தான் :)

அதுக்கு இந்தியாவில் இருந்து அழைத்து வந்த பாடகர் செலவு அதை விட அதிகம் அதனால் இது பெரிய காசே இல்லை அவர்களுக்கு .

  • கருத்துக்கள உறவுகள்

அவரின் செலவில் எத்தனை வீதமாகவும் இருக்கட்டும் கொடுப்பதற்கு மனம் வேண்டும்.

எங்கட ஆக்களுக்கு இதுதான் வேலை அவன் அதுக்கு செலவழிக்கிறான் இதுக்கு செலவழிக்கிறான் என்று புலம்புவது. ஒன்றுமே செய்யாது பலர் இருக்கிறார்கள் அவர்களை அணுகுங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவரின் செலவில் எத்தனை வீதமாகவும் இருக்கட்டும் கொடுப்பதற்கு மனம் வேண்டும்.

எங்கட ஆக்களுக்கு இதுதான் வேலை அவன் அதுக்கு செலவழிக்கிறான் இதுக்கு செலவழிக்கிறான் என்று புலம்புவது. ஒன்றுமே செய்யாது பலர் இருக்கிறார்கள் அவர்களை அணுகுங்கள்.

 

 

ஏதாவது  செய்தவன் 

செய்து கொண்டிருப்பவன்

ஒரு போதும்  எமக்கு ஆதரவாய் நீண்ட  கையை  பதம் பார்க்கமாட்டான்.......... :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்
இங்குள்ள அரசியல் உள் வெளி குத்துகள் எனக்கு புரியாது. ஆனால் எனது கருத்து :-
 
நாட்டில் அரசாங்கம் செய்யும் வேலைகளை ஏன் நாங்கள் செய்வான் என புறம்தள்ளினால் அங்கே எங்கள் இனத்தின் இருப்பும் வாழ்வும் இன்னொரு 10வருடத்தில் தடங்கள் அற்றுப்போய்விடும். 
 
இலங்கையில் பல பாடசாலைகளை Unichefபோன்ற நிறுவனங்கள் கட்டிக்கொடுத்துள்ளது. அதுபோல பல சிங்கள கிராமங்களில் வெளிநாட்டவர்கள் பள்ளிகள் கட்டிக்கொடுத்து படிக்க உதவுதல் முதல் ஆதரவற்ற சிங்கள குழந்தைகளுக்கு உதவுகிறார்கள். இங்கு யேர்மனியில் கூட பல யேர்மனியர்கள் சிங்கள பகுதிகளில் உதவிவருகிறார்கள். 
 
பல கிராமங்கள் கிழக்கில் தமிழர்களின் தடங்களும் வரலாறுகளும் அழிந்து கொண்டு போகிறது. இப்படி கிராமங்கள் தமிழர்களின் நிலமாக இருந்தது என்பதற்கான அடையாளங்களையும் இழந்து போக வைக்கிறது இக்கால நிலவரம். 
 
என்னைப் பொறுத்தவரை யாராவது தமிழ் அமைப்புகள் அல்லது நிறுவனங்கள் நிலத்தில் காலூன்ற வேண்டும். இந்த முன்னெடுப்பிற்கு பேதம் களைந்து ஆதரவை வழங்கி சில இராஜதந்திர பணிகளை முன்னெடுக்க வேண்டும். நாங்கள் யாருமில்லாத அந்த நிலத்தில் யாரையும் போய் வாழ் என்று சொல்லவோ வரலாற்றை பாதுகார் என்று சொல்லவோ உரிமையற்றவர்களாக இருக்கிறது தற்போதைய குழுவாத அரசியல்.
 
உலககோடு நாம் போராடும் சமவேளையில் தாயகத்தில் வாழும் உரிமையிழந்த மக்களுக்கான மனிதாபிமானப்பணிகளை வழங்குவதிலும் அக்கறை செலுத்த வேண்டும். 
 
ஸ்கொட்லாந் பிரிந்து போக நடைபெற்ற வாக்கெடுப்பில் மறுப்பு வாக்கை வழங்கிய தலைமுறைக்கு ஸ்கொட்லாந்தில் வலிகள் தெரியாது. அதேபோன்றதொரு நிலமை எங்களுக்கு வந்துவிட எங்களது குழுவாத அரசியல் இடம் கொடுக்க அனுமதிக்காமல் குறைந்த பட்சம் ஒற்றுமைப்பட முடியாது போனலும் ஒற்றுமையாக முயற்சிப்போம். அல்லது ஒற்றுமை போல வெளியில் காட்டிக்கொள்ளவாவது கற்றுக் கொள்வோம்.
 
பி.கு :- இது எனது தனிப்பட்ட கருத்து மட்டுமே. யாரும் பின் கதவு அயல் கதவால் வந்து அடிக்கப்படாது சொல்லீட்டன்.

 

Edited by shanthy

கடைசியில் சுவிஸ் ரஞ்சன் தான் அனைத்து தேசிய வாதிகளையும் வழி நடத்துகிறார் மதில் கட்டுவதுக்கு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடைசியில் சுவிஸ் ரஞ்சன் தான் அனைத்து தேசிய வாதிகளையும் வழி நடத்துகிறார் மதில் கட்டுவதுக்கு

 

கௌரவமான யாழ் கள உறவு என்ற ரீதியில்  உங்களுக்கான எனது பதில்..

 

மதில் கட்டுவது France  - புங்குடுதீவு மக்கள் ஒன்றியம்

அதற்கு பங்களிப்பு செய்வோர் பிரெஞ்சுவாழ் புங்குடுதீவு மக்கள்

இதற்கும் வேறு நாட்டு ஒன்றியங்களுடனோ வேறு நபர்களுடனோ தொடர்புகளோ பங்களிப்போ கிடையாது

 

சுவிஸ் ரஞ்சன் என்பவர் சுவிசிலுள்ள புங்குடுதீவு விளிப்புணர்வு ஒன்றியத்தின் ஊடகப்பேச்சாளர் என்பதை அவரே பல  இடங்களில் பதிந்துள்ளார்.  தனது முழுமையான முகவரி  தொலைபேசி இலக்கங்கள் இணையமுகவரிகள்.. அனைத்தையும் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

அவருடன் தொடர்பு  கொண்டு அவருடைய  செயல்களுக்கு விளக்கம் கேட்கலாம்

 

அவருடைய  முன்னைய  அரசியல் நிலைப்பாடு சார்ந்து

எம்மிடம் கேட்டால்...........

அவருடைய முன்னைநாள் தலைவரே இன்றைய  கூட்டமைப்பில்  நின்று அமோக வெற்றி  பெற்றுள்ளார்..

 

என்னுடைய  தனிப்பட்ட கருத்து

என்ன செய்கிறார் என்று தான் பார்ப்பேன்

எவர் செய்கின்றார் என்று பார்ப்பதில்லை

அந்த தடிப்பில் தமிழினம் இன்று இல்லை...........

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மழை  காரணமாக சிறிது தடைப்பட்ட  வேலைகள் மீண்டும் தொடர்கிறது.....

 

SAM_0355.jpg

 

SAM_0357.jpgSAM_0358.jpgSAM_0361.jpgSAM_0362.jpgSAM_0365.jpgSAM_0366.jpgSAM_0369.jpg

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முனைப்பு.

 

பள்ளி வளாகத்தினுள்ளே ஏகப்பட்ட நிலம் பொட்டலாக கிடக்கிறது..விளையாடும் நிலம் போக மீதி இடங்களில் வரிசையாக மரங்களை நட்டால் குளிர்ச்சியாக இருக்கும்..

 

சமூக விரோதிகளின் தொந்திரவு இருந்தால், மதிற்சுவரில் கண்ணாடி துண்டுகளையும் இறுதியில் பதித்துவிடுங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முனைப்பு.

 

பள்ளி வளாகத்தினுள்ளே ஏகப்பட்ட நிலம் பொட்டலாக கிடக்கிறது..விளையாடும் நிலம் போக மீதி இடங்களில் வரிசையாக மரங்களை நட்டால் குளிர்ச்சியாக இருக்கும்..

 

சமூக விரோதிகளின் தொந்திரவு இருந்தால், மதிற்சுவரில் கண்ணாடி துண்டுகளையும் இறுதியில் பதித்துவிடுங்கள்.

 

 

 

 

பிள்ளைகள் படிக்குமிடம்

கண்ணாடித்துண்டுகளை  வைப்பது ஆபத்து

ஆனால் எட்டடிக்கு உயர்த்தப்படுகிறது

அதற்கு மேலும் கம்பி வேலி  போடப்படும்..........

அடுத்து

மைதானமும் மரம் நடுகையும் ஆரம்பிக்கப்படும்...

பேசியபடியுள்ளோம்...

 

நன்றி  ஐயா

அக்கறைக்கும் ஊக்குவிப்புக்கும்........

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான சுவர்களை எட்டடிக்கு உயர்த்துவது நல்லதில்லை. இவை இரும்பினால் உரம் வழங்கப்படாமையால் (unreinforced type) பக்கவாட்டு விசை செலுததப்படும்போது உருக்குலையும் (brittle) தன்மையை கொண்டவை ஆகின்றன. இத்தகைய தன்மை இருந்தால் திடீரென்று இடிந்து விடும் (sudden collapse) நிலமை இருக்கும்.

இத்தகைய சிமென்ட் கல் செய்யும் வேலையை முதலில் நிறுத்த வேண்டும். Masonry blocks செய்ய ஆரம்பித்தால் விலையும் குறையும். தேவைப்பட்டால் இரும்புக் கம்பிகளையும் உள்நுழைத்து உறுதியாக்கலாம்.

வெளிநாடுகளில் பெரும்பாலும் உறுதியான கம்பி வேலிகளைத்தான் அமைக்கிறார்கள். செலவு குறைவு. பழுதானால் இலகுவில் திருத்தலாம். சாய்ந்தாலும் யாருக்கும் ஆபத்து வராது.

எது எவ்வாறாயினும் இத்திட்டம் பிரச்சினைகள் இன்றி வெற்றிபெற வாழ்த்துக்கள்.

இப்படியான சுவர்களை எட்டடிக்கு உயர்த்துவது நல்லதில்லை. இவை இரும்பினால் உரம் வழங்கப்படாமையால் (unreinforced type) பக்கவாட்டு விசை செலுததப்படும்போது உருக்குலையும் (brittle) தன்மையை கொண்டவை ஆகின்றன. இத்தகைய தன்மை இருந்தால் திடீரென்று இடிந்து விடும் (sudden collapse) நிலமை இருக்கும்.

இத்தகைய சிமென்ட் கல் செய்யும் வேலையை முதலில் நிறுத்த வேண்டும். Masonry blocks செய்ய ஆரம்பித்தால் விலையும் குறையும். தேவைப்பட்டால் இரும்புக் கம்பிகளையும் உள்நுழைத்து உறுதியாக்கலாம்.

வெளிநாடுகளில் பெரும்பாலும் உறுதியான கம்பி வேலிகளைத்தான் அமைக்கிறார்கள். செலவு குறைவு. பழுதானால் இலகுவில் திருத்தலாம். சாய்ந்தாலும் யாருக்கும் ஆபத்து வராது.

எது எவ்வாறாயினும் இத்திட்டம் பிரச்சினைகள் இன்றி வெற்றிபெற வாழ்த்துக்கள்.

இதை நாம சொன்னா  :)

  • கருத்துக்கள உறவுகள்

இதை நாம சொன்னா  :)

நீங்கள் சொன்னால் இதுக்குள் ஏதும் உள் நுண் அரசியல் இருக்குமோ என்று சந்தேகப்பட வைக்கும். :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான சுவர்களை எட்டடிக்கு உயர்த்துவது நல்லதில்லை. இவை இரும்பினால் உரம் வழங்கப்படாமையால் (unreinforced type) பக்கவாட்டு விசை செலுததப்படும்போது உருக்குலையும் (brittle) தன்மையை கொண்டவை ஆகின்றன. இத்தகைய தன்மை இருந்தால் திடீரென்று இடிந்து விடும் (sudden collapse) நிலமை இருக்கும்.

இத்தகைய சிமென்ட் கல் செய்யும் வேலையை முதலில் நிறுத்த வேண்டும். Masonry blocks செய்ய ஆரம்பித்தால் விலையும் குறையும். தேவைப்பட்டால் இரும்புக் கம்பிகளையும் உள்நுழைத்து உறுதியாக்கலாம்.

வெளிநாடுகளில் பெரும்பாலும் உறுதியான கம்பி வேலிகளைத்தான் அமைக்கிறார்கள். செலவு குறைவு. பழுதானால் இலகுவில் திருத்தலாம். சாய்ந்தாலும் யாருக்கும் ஆபத்து வராது.

எது எவ்வாறாயினும் இத்திட்டம் பிரச்சினைகள் இன்றி வெற்றிபெற வாழ்த்துக்கள்.

 

 

வணக்கம் இசை

 

உங்களுக்கு

இது சம்பந்தமான சகல தரவுகளையும் (வரைபடம் கட்டுமான சேர்ககைகள்  உட்பட)

தனி  மடலில் அனுப்பியுள்ளேன்.

 

 

இந்த நிறுவனம் பல கோயில் கோபுரங்களையும் கட்டிடங்களையும் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக செய்து வருகிறார்கள்....

 

நாட்டில் உள்ளதை வைத்தும்

அதில்  நிபுணத்துவமானவர்களின் ஆலோசனைகளின் படியும் தான் திட்டத்தை செய்ய முனைகின்றோம்..

 

இங்கிருக்கும் புது வடிவங்களை  அல்லது  புது தொழிற்நுட்பங்களை  அங்கு பாவிக்கும் நிலை தற்போதைக்கு வருமா எனத்தெரியவில்லை.  அதுவரை................?

 

இது மக்கள் பணம்

முடிந்தவரை

தீரவிசாரித்து

ஊரிலுள்ள  பாடசாலை அதிபர் உட்பட பலரிடமும்  பேசியே  முடிவுக்கு வந்தோம்

 

அத்துடன் வடபகுதி  கல்வித்திணைக்களத்திடமும்  இதைக்காட்டி அனுமதி  பெற்றிருந்தோம்....

 

இதற்கு மேல்....?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதை நாம சொன்னா  :)

 

 

இதுவரை

புங்குடுதீவு  மக்கள் ஒன்றியம் பிரான்சின் ஏதாவது ஒரு வேலைத்திட்டத்துக்கு ஆதரவு தந்துள்ளீர்களா?

ஆதரவாக கருத்தாவது வைத்துள்ளீர்களா?

காட்டுங்கள்...........

 

தவறுகளைச்சுட்டிக்காட்டுவதற்கும் பிழை பிடிப்பதற்கும்  பல ஆயிரம் வித்தியாசம்.

 

உலகில் மிகவும் இலகுவானதும் மலிவானதுமான வேலை பிழை பிடிப்பது....?

 

ஆனால் செயலில் இறங்கும் போதே

நல்லது கெட்டதும்

சரி பிழைகளும் தெரியும்

தெரியவரும்...

அது உங்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை........... :(  :(  :( 

இதுவரை

புங்குடுதீவு  மக்கள் ஒன்றியம் பிரான்சின் ஏதாவது ஒரு வேலைத்திட்டத்துக்கு ஆதரவு தந்துள்ளீர்களா?

ஆதரவாக கருத்தாவது வைத்துள்ளீர்களா?

காட்டுங்கள்...........

 

தவறுகளைச்சுட்டிக்காட்டுவதற்கும் பிழை பிடிப்பதற்கும்  பல ஆயிரம் வித்தியாசம்.

 

உலகில் மிகவும் இலகுவானதும் மலிவானதுமான வேலை பிழை பிடிப்பது....?

 

ஆனால் செயலில் இறங்கும் போதே

நல்லது கெட்டதும்

சரி பிழைகளும் தெரியும்

தெரியவரும்...

அது உங்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை........... :(  :(  :( 

பிரான்ஸ் ஒன்றியம் உருப்படியா என்ன திட்டம் செய்துள்ளது ஆதரவு தருவதற்கு ...

சரி இதில் தவறு இருக்கு என்று சொன்னால் கூட அதை கேட்கும் நிலையிலாவது இருந்து உள்ளீர்களா ..

 

உங்களுக்கே தெரியும் தானே புங்குடுதீவு மண்ணும் அதன் சூழும் சுவர்கள் பலகாலம் நின்று பிடிப்பதில்லை என்று கடல் காற்றுக்கு கம்பிகள் துருப்பிடிக்கும் அப்படியே வீங்கி மதில் வெடிக்கும் இதை தொண்ணூறுக்கு முன்னம் எங்கள் பாடசாலை மதில் கட்டமுன் இவ்வாறு விவாதம் எல்லாம் செய்தபின் மதில் கட்டாது வேலி அடைத்தவர்கள் ...அதாவது அப்பவே இருபத்தி ஐந்து லட்சம் பணத்துடன் சுவிஸ்சில் இருந்து கிளி மாஸ்டர் வந்தவர் பின்னர் அப்பணம் வங்கியில் இட்டு இன்றும் வட்டியுடன் இருக்கு கணேசா மகாவித்தியாலத்தில் .

 

ஆக நீங்கள் செய்யும் திட்டம் இவ்வளவு பணத்தை சேர்த்து மண்ணில் சும்மா போடுவது போலானது விளம்பரத்துக்கு உதவும் பள்ளிக்கு உதவாது ..

 

மகா வித்தியால அதிபரை கேளுங்கள் ஒருநாள் எத்தினை ஆசிரியர் வருகிறாகள் என்று குறைந்தது இருவர் வருவது இல்லையாம் படம் நடப்பது இல்லை ஏன் சம்பளம் ..போக்குவரத்து பிரச்சினை முடிந்தால் அவைகளை தீர்க்க ஏதாவது செய்யுங்க ..

 

உங்கள் ஒன்றியத்தை விட அங்கு தனிநபர்கள் அதிகம் செய்கிறார்கள் நீங்கள செய்திக்கும் ...விளம்பரத்துக்கும் செய்யும் வேலையை அவர்கள் சத்தம் இல்லாமல் செய்திட்டு வருகிறார்கள் அவைகள் உங்களுக்கு தெரியாமல் இல்லை ...

 

 

நிர்வாக கேள்வி எழுதல் என்பது பிழை பிடிப்பு அல்ல விமர்சனம் பொதுவெளிக்கு வந்தால் சந்தித்தே ஆகணும் அதை திசை திருப்பி விடுதல் அழகல்ல ...

 

ஊர் கூடி தேர் இழுக்கும் போது ஒருவன் குறுக்க கட்டை வைப்பான் ஏன் சாமி மேல் கோவமா இல்லை இழுப்பவர் மேல் கோவமா இல்லையே தேர் பிழையான பாதையில் போகக்கூடாது என்பதற்கே . :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

"மகா வித்தியால அதிபரை கேளுங்கள் ஒருநாள் எத்தினை ஆசிரியர் வருகிறாகள் என்று குறைந்தது இருவர் வருவது இல்லையாம் படம் நடப்பது இல்லை ஏன் சம்பளம் ..போக்குவரத்து பிரச்சினை முடிந்தால் அவைகளை தீர்க்க ஏதாவது செய்யுங்க"

 

படம் காட்ட இது சினிமா கொட்டகையல்ல பாடசாலை.

 

உங்கள் திட்டம் இதுவரை எந்தளவில்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸ் ஒன்றியம் உருப்படியா என்ன திட்டம் செய்துள்ளது ஆதரவு தருவதற்கு ...

சரி இதில் தவறு இருக்கு என்று சொன்னால் கூட அதை கேட்கும் நிலையிலாவது இருந்து உள்ளீர்களா ..

 

 

Page_1_ACFr_Og_Cf_Lyxb_FFP3_EWjt_Jt0h_rqPage_2_ACFr_Og_Cf_Lyxb_FFP3_EWjt_Jt0h_rqPage_3_ACFr_Og_Cf_Lyxb_FFP3_EWjt_Jt0h_rqPage_4_ACFr_Og_Cf_Lyxb_FFP3_EWjt_Jt0h_rqPage_5_ACFr_Og_Cf_Lyxb_FFP3_EWjt_Jt0h_rq

http://www.pungudutivu.fr/p/12-15-804000.html

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வன்னிக்கு  செய்துள்ளோம்

கிழக்குக்கு செய்துள்ளோம்

மன்னாருக்கு செய்துள்ளோம்

(திருகோணமலைக்கு  செய்துள்ளோம்)

 

 

புலத்தில்

தாயகத்தில் புனர்வாழ்வுக்கழகத்துடன் தோழோடு தோழாக நின்றுள்ளோம்

புலத்தில் எடுக்கப்பட்ட அத்தனை ஊர்வலங்கள் மாநாடுகளில் பங்கு பற்றியுள்ளோம்

எம்மால் முடிந்தவரை அவர்களுக்கு நிதிப்பங்களிப்பு செய்துள்ளோம்

உதாரணமாக லண்டனிலிருந்து யெனீவா வரை நடைப்பயணம் மேற்கொண்ட தம்பியுடன் பிரான்சில் கை கோர்த்து

அவருக்கான உணவு பானங்கள் உட்பட வழங்கி

 500 ஈரோக்களை  கொடுத்த ஒரே ஒரு அமைப்பு புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் தான்....

மாவீரர் தினத்தில் மக்கள் மண்டபத்து வருகை தர இலகுவாக வாகன வசதிகளை இலவசமாக  செய்து வருகின்றோம்...

லண்டனிலிருந்து

ஒரு பல்கலைக்கழக மாணவர் இலங்கைக்கு திருப்பி  அனுப்பப்பட இருந்தபோது

அவருக்கு தேவையான 2650 ஈரோக்களை வழங்கி  அவரது படிப்பு தொடரவும்

திருப்பி  அனுப்படாது தடுக்கவும் உதவியிருந்தோம்...

 

அத்துடன்  புலம் பெயர் சிறுவர்கள் மாணவர்களுக்காக 

அறிவுத்திறன் போட்டிகளை  நடாத்தி

மாணவர்களை ஊக்கப்படுத்தி  வருகின்றோம்

இன்று அவர்கள் பேச்சாளர்களாக

திறமையை  வெளிப்படுத்துபவர்களாக வளர்ந்து வருகிறார்கள்

 

எமது  இன ஒடுக்குதல்களை வெளியில் கொண்டுவர

குறும்படத்துறையை  ஊக்கப்படுத்தி பரிசளித்துவருகின்றோம்

எம்மால்  ஊக்கப்படுத்தப்பட்டவர்கள்

இன்று பிரான்சையும் தாண்டி

சர்வதேச அளவில் பரிசுகளை  எடுக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார்கள்

அவர்களே அதை மேடைகளில் சொல்லி  வருகிறார்கள்........

 

 

இதில் ஒன்று கூடவா

உங்களுக்கு ஆதரவாக கருத்தெழுத முடியாததாக உள்ளது

 

அப்படியென்றால் திருந்தவேண்டியது நாமல்ல............

 

Edited by விசுகு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.