Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனீவா திடல் தான் எமது இன்றைய போர்க்களம் - உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்களின் ஜெனிவாவுக்கான அழைப்பு Video

Featured Replies

நாம் தொடர்ந்து எமது விடுதலையை தோள்களில் சுமந்து செல்ல ஐநா பேரணி ஆணிவேராக அமையும் . எமது விடுதலையை வென்றெடுக்க எமது துணிச்சலை , உறுதியை , ஓர்மத்தை , வேட்கையை , நம்பிக்கையை நாம் பெற இப்படியான பேரணி ஒரு தளமாக  அமையும் . ஐரோப்பிய புலம் பெயர் மக்களை  இப் பேரணியில் பெரும்திரளாக கலந்துகொள்ளும் படி உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார் . http://www.pathivu.com/news/33450/57//d,article_full.aspx

 பத்துதரம் பாடை வராது 
 பதுங்கி கிடக்கும் புலியே தமிழா 
 சிரித்துக்கொண்டே செருக்களம் வாடா
 என்று வார்த்தைகளால் நெருப்பு மூட்டிய மஹா கவிஞன்  இவன்.  
  • கருத்துக்கள உறவுகள்

 சிரித்துக்கொண்டே செருக்களம் வாடா
 .  

:D

உப்படி பலர் கூப்பிடுவினம் .....கூப்பிட்டால் போகவேணுமே?????

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

காசி - எங்கடா ஆளைக்காணோம் எண்டு பார்த்தன்.

உணர்சியூட்டி இளைனரை கொலைக்களத்துக்கு அனுப்பியதற்கு அமிரை விட 1000 மடங்கு பொறுப்பாளி இந்த கபட வேடதாரி.

சுயநலதுக்காய் அமிருக்கும் ராஜதுரைக்கும் சிண்டு முடிஞ்சு - வடக்கு/கிழக்கு பிரிவினைக்கு அச்சாரம் போட்ட கெட்டிக்காரன்.

அப்பாவிகள் சாக்களம் போக - இந்தியாவுக்கு ஓடிப்போய் - அகதி கோட்டாவில் பிள்ளைகளுக்கு மெடிக்கல் சீட் வாங்கி - டாக்டராக்கி - இரண்டு மகள்களையும் லண்டனில் டாக்டராக செட்டில் ஆக்கிய தமிழ்த்தேசிய வியாபாரி.

இங்கே வந்து கபட நாடகம் ஆடும் தமிழ் நெட் வகையறாக்களுக்கெல்லாம் முன்னோடி இந்த ஐயா.

  • கருத்துக்கள உறவுகள்

மாவையாரின் அண்ணன் அமீரின் பிள்ளைகள் மனிசி எல்லாம்.. தமிழீழப் போரில் வீரமரணம்.

சங்கரியின் பிள்ளைகள் மனிசி எல்லாம்.. வீரமரணம்.

சம்பந்தனின் பிள்ளைகள் மனுசி எல்லாம் வீரமரணம்.

சுமந்திரனின் பிள்ளை குட்டி குடும்பத்தோடு வீரமரணம்.

மாவையாருக்கு பிள்ளை குட்டி இருக்கோன்னு கூட தெரியாத அளவுக்கு அவரின்ர குடும்பம்.. ராஜதந்திர வீரமரணம்.

ஏன் இஞ்ச கூச்சல் போடுற.. சம்பந்தன் வகையறாக்களின் குடும்பம் எல்லாம் வீரமரணம்.

ஆக.. காசி ஐயா மட்டும் தப்புப்பண்ணிட்டார். உண்மையை கவிதையாக்கி தான் கஸ்டப்பட்டதும் இல்லாமல்.. பிள்ளைகளையும் கஸ்டப்பட விடாமல்.. படிக்க வைச்சிட்டார். அது ரெம்பத் துரோகம் பாருங்க. தமிழ்நெட் இதனை ஒத்துக்கொள்ளாட்டி.. அதுவும் தமிழ் தேசிய வியாபார இணையமே ஆகும். எல்லாம்.. புலிட காசில சேர்வர் வாங்கி ஓடிக்கிட்டு இருக்குது. தேனீயும் நெருப்பும் மட்டும் மக்கள் பங்களிப்பில இயங்கிக்கிட்டு இருக்குது.  :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் மேலே சொன்ன அனைவரும் எதோ ஒருவகையில் பாத்திரதர். சுமந்திரனை தவிர அவர் யாரையும் உசுப்பேத்தவில்லை. 09 முதல் அரசியலிலும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் மேலே சொன்ன அனைவரும் எதோ ஒருவகையில் பாத்திரதர். சுமந்திரனை தவிர அவர் யாரையும் உசுப்பேத்தவில்லை. 09 முதல் அரசியலிலும் இல்லை.

அப்படியானால்

புலம் பெயர்ந்தவனும்  செய்தது சரிதானே...

இப்போ

புலம் பெயர்ந்தவனும்  அரசியல் பேசலாம் தானே (ஒதுங்கியிருந்தவர்கள் வரிசையில் நின்று).. :(

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை. சுமந்திரன் கொழும்பிலே பிறந்தார் கொழும்பிலே வளந்தார். நாளைக்கு இலங்கையில் தமிழர்க்கு ஒரு இன்னல் என்றால் அதில் கொழும்பு வாழ் தமிழரும் பாதிப்படைவர். எனவே சுமந்திரன் இலங்கை தமிழ் தேசிய அரசியலில் ஒரு நியாயமான share holder. அவரை இலங்கை தமிழ் அரசியலில் ஈடுபட வேண்டாம் என்று யாரும் சொல்ல முடியாது. அப்படிச் சொன்னால் அது யாழ் மையவாத பிரதேசவாதம்.

ஆனால் புலம்பெயர்ந்தவர்கள் அப்படியில்லை. நாம் புலத்தில் சிட்டிசன், புலத்தில் வாக்காளர், புலத்தில் தான் எம் வாழ்வும் சாவும். போர் ஓய்வுக்குப் பின்பும் கூட கொலிடே போகத்தான் நாம் தயார். ஆக நாம் நிலத்தலைமைகளை கட்டுப்படுத்த முடியாது. அது அவர்களும் அவர்களின் வாக்காளரும் சம்பந்த பட்ட விடயம்.

ஒதுங்கி நாட்டில் இருந்தவர்களுக்கும், ஒதுங்கி ஓடி வந்து வெளிநாட்டில் இருந்து வக்கணையாய் ஸ்கோர் கேட்டவ்ர்களுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் அரசியல்வாதியும் கிடையாது.. தமிழ் மக்களின் உண்மையான பிரதிநிதியும் கிடையாது. சம்பந்தனின் அல்லக்கை.

சுமந்திரனை.. விடுதலைப்புலிகள் காலத்திலும் அரசியலுக்குள் நுழைக்க முயன்று தோற்றவர் சம்பந்தன். பின்னர் 2009 க்குப் பின்.. தன் இஸ்டத்துக்கு அதனை அமுலாக்கினார். பின் கதவு வழியாக.. (தேசிய பட்டியல் மூலம்) எம்பி ஆக்கி மகிழ்ந்தார். இன்று தான் சொல்ல நினைப்பதை சொல்லும் ஒலிவாங்கியாக அவரைப் பாவிக்கிறார். தட்ஸ் ஆல். :icon_idea::)

  • கருத்துக்கள உறவுகள்

பிரபுக்கள் சபை, செனேட் க்கு பதிலாக இலங்கை அரசியலமைப்பு சட்டம் கொடுக்கும் முறையே தேசிய பட்டியல்.

பிரபல்யம் இல்லாத ஆனால் புத்தி சாதுரியமான விற்பனர்களை நாடாளுமன்றம் கொண்டுவரும் ஒரு முறை இது.

யூகேயில் லேடி ஏமோஸ், பரனஸ் ஆஷ்டொன், ஊனா கிங் என்று பலர் இவ்வாறு தெரிவாகி நாட்டுக்கும் கட்சிக்கும் சேவை செய்துளனர்.

யூகேயின் national event எண்டு பீலா விட்டிடு, எதோ ஒரு tourism blog ஐ ஆதாரமாக காட்டும் கூகிள் ஆண்டவர் பக்தர்கள் இதை பின்கதவு, கொல்லைப்புறம் எனறு தம் சிற்றறிவுக்கு ஏற்பதான் விளங்கி கொள்ள முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

செய்தியை எங்கு வாசித்தோம் என்று கூட விளங்கிக் கொள்ள முடியாதவர்கள்.. கேவலம்.. சுமந்திரனுக்கு வக்காளத்து.

பிரிட்டனின் பிரதான நிகழ்வுகள்.. தேசிய அளவில் கொண்டாட்டப்படும் நிகழ்வுகள் விடுமுறைகள் அடங்கிய பள்ளிமாணவர்களுக்கான பாடசாலை இணைப்பில் இருந்து வழங்கப்பட்டிருந்து. காரணம்.. இது பள்ளிக்கூட விடயம். இதைக்கூட அறியாதவர்கள் தான் இங்கு... எங்களுக்கு வகுப்பெடுக்கிறார்கள் என்பதை மக்களுக்கு அழகாகத் தெளிவுறுத்த. மக்கள் விளங்கிக் கொண்டிருக்கிறார்கள். சம்பந்தப்படவர்களுக்கு தான் இன்னும் விளங்கேல்ல. பாவங்கள் அவர்களின் சிந்தனையே அவர்களுக்கு எதிரி. :):lol:

இல்லை. சுமந்திரன் கொழும்பிலே பிறந்தார் கொழும்பிலே வளந்தார். நாளைக்கு இலங்கையில் தமிழர்க்கு ஒரு இன்னல் என்றால் அதில் கொழும்பு வாழ் தமிழரும் பாதிப்படைவர். எனவே சுமந்திரன் இலங்கை தமிழ் தேசிய அரசியலில் ஒரு நியாயமான share holder. அவரை இலங்கை தமிழ் அரசியலில் ஈடுபட வேண்டாம் என்று யாரும் சொல்ல முடியாது. அப்படிச் சொன்னால் அது யாழ் மையவாத பிரதேசவாதம்.

ஆனால் புலம்பெயர்ந்தவர்கள் அப்படியில்லை. நாம் புலத்தில் சிட்டிசன், புலத்தில் வாக்காளர், புலத்தில் தான் எம் வாழ்வும் சாவும். போர் ஓய்வுக்குப் பின்பும் கூட கொலிடே போகத்தான் நாம் தயார். ஆக நாம் நிலத்தலைமைகளை கட்டுப்படுத்த முடியாது. அது அவர்களும் அவர்களின் வாக்காளரும் சம்பந்த பட்ட விடயம்.

ஒதுங்கி நாட்டில் இருந்தவர்களுக்கும், ஒதுங்கி ஓடி வந்து வெளிநாட்டில் இருந்து வக்கணையாய் ஸ்கோர் கேட்டவ்ர்களுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு.

சுமந்திரன் 2009க்கு முதல் அரசியலுக்கு வந்திருந்தால் நீலன் திருச்செல்வத்திற்கு நடந்தது தான் அவருக்கும் நடந்திருக்கும். வெற்றிகரமான துரோகி ஒழிப்பு என்று புலம்பெயர்ஸ் கொண்டாடி மகிழ்ந்திருப்பர். நீலன் போன்ற படித்த மேதைகளை நாம் இழந்தது இந்த இனத்தின் சாபக்கேடு. 

விஷயம் தெரிந்தவனை  அறிவில்லாதவர்களுக்கு பிடிக்காது ஏனென்றால் அவன் சொல்லுவதை செய்வதற்கு கஷ்டமாக இருக்கும்...

தெருச்சண்டியர்களை பார்க்கலாமே...யாரவது அப்பாவி நல்லவர்கள் பிரச்னை செய்யாதை என்று நல்ல விதமாக சொன்னால்..அவர்கள் மேலேறி அட்டகாசம் பண்ணுவார்கள்.......ஆனால் அந்த சண்டியர்களிலும் பார்க்க இன்னும் மூர்க்கமானவர்கள் வந்து அந்த பீலா விட்டவர்களுக்கு நாலு சாத்து போட அடங்கி போவார்கள்....இதற்க்கு எம்மிடம் நல்ல உதாரணங்கள் இருக்கு :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை. சுமந்திரன் கொழும்பிலே பிறந்தார் கொழும்பிலே வளந்தார். நாளைக்கு இலங்கையில் தமிழர்க்கு ஒரு இன்னல் என்றால் அதில் கொழும்பு வாழ் தமிழரும் பாதிப்படைவர். எனவே சுமந்திரன் இலங்கை தமிழ் தேசிய அரசியலில் ஒரு நியாயமான share holder. அவரை இலங்கை தமிழ் அரசியலில் ஈடுபட வேண்டாம் என்று யாரும் சொல்ல முடியாது. அப்படிச் சொன்னால் அது யாழ் மையவாத பிரதேசவாதம்.

ஆனால் புலம்பெயர்ந்தவர்கள் அப்படியில்லை. நாம் புலத்தில் சிட்டிசன், புலத்தில் வாக்காளர், புலத்தில் தான் எம் வாழ்வும் சாவும். போர் ஓய்வுக்குப் பின்பும் கூட கொலிடே போகத்தான் நாம் தயார். ஆக நாம் நிலத்தலைமைகளை கட்டுப்படுத்த முடியாது. அது அவர்களும் அவர்களின் வாக்காளரும் சம்பந்த பட்ட விடயம்.

ஒதுங்கி நாட்டில் இருந்தவர்களுக்கும், ஒதுங்கி ஓடி வந்து வெளிநாட்டில் இருந்து வக்கணையாய் ஸ்கோர் கேட்டவ்ர்களுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு.

நடக்கும்  அநியாயங்களை

வாயைப்பொத்தியபடி வீட்டுக்குள்  இருந்து பார்த்துக்கொண்டிருந்தவனைவிட

வெளியில் ஓடிப்போய் குரல் கொடுத்தவன்

உதவி  செய்தவன் அயோக்கியன் என்கிறீர்கள்... :(  :(  :(

10483143_250247125173243_201042366324932

  • கருத்துக்கள உறவுகள்

10483143_250247125173243_201042366324932

நீங்கள் சொல்வது சரிதான்..

புலம் பெயர் மக்கள் இந்த நிலையை  மாற்றவே உழைக்கிறார்கள்.....

  • கருத்துக்கள உறவுகள்

காசி - எங்கடா ஆளைக்காணோம் எண்டு பார்த்தன்.

உணர்சியூட்டி இளைனரை கொலைக்களத்துக்கு அனுப்பியதற்கு அமிரை விட 1000 மடங்கு பொறுப்பாளி இந்த கபட வேடதாரி.

சுயநலதுக்காய் அமிருக்கும் ராஜதுரைக்கும் சிண்டு முடிஞ்சு - வடக்கு/கிழக்கு பிரிவினைக்கு அச்சாரம் போட்ட கெட்டிக்காரன்.

அப்பாவிகள் சாக்களம் போக - இந்தியாவுக்கு ஓடிப்போய் - அகதி கோட்டாவில் பிள்ளைகளுக்கு மெடிக்கல் சீட் வாங்கி - டாக்டராக்கி - இரண்டு மகள்களையும் லண்டனில் டாக்டராக செட்டில் ஆக்கிய தமிழ்த்தேசிய வியாபாரி.

இங்கே வந்து கபட நாடகம் ஆடும் தமிழ் நெட் வகையறாக்களுக்கெல்லாம் முன்னோடி இந்த ஐயா.

Criticism are like homing pigeons, they always return home... Don't criticise. Lincoln always said two quotes" judge not, that ye be not judge ". " don't criticise them; they are just what we be under similar circumstances".

முதலில் criticism தை நிற்பாட்டுங்கள்.. காசி... கபடமானவராக இருந்தால் அதற்குரிய படிப்பினை உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

ராகா முதல்ல பீட்டரை நிறுத்தி விட்டு தமிழில் எழுதவும். இல்லாட்டி மோதிரக்குட்டு நிச்சயம்.

விமர்சனமே நியாயமான அரசியலின் அடிப்படை. விமர்சனம் செய்யாமல் மனிதர்களை தெய்வமாக, முருகனுக்கே நிகரானவராக கொண்டாடியபடியால் தான் ஒரு பேரழிவை தடுக்க வழியற்று லண்டன் மற்றும் உலக நகரின் வீதிகளில் பிச்சைகாரர் போல் அல்லும் பகலும் அலைந்து யுத்த நிறுத்தம் யாசிக்கும் படி நேர்ந்தது.

கிடைக்கவும் இல்லை.

லிங்கன் confederates ஐ விமர்சிக்காமல் தடவியா கொடுத்தார்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.