Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாண்புமிகு சோழியான் அண்ணாவிற்கு அன்புடன் .....

Featured Replies

நேற்றும் இன்றும் இசை சம்பந்தமான பயணம் ஒன்றை டென்மார்க்கிற்கு மேற்கொண்டிருந்தேன் எமது யாழ்கள உறவு.எம் மூத்த கலைஞ்சர்  சோழியான் அண்ணா   வாழும் பிரேமன் நகர் ஊடாக பயணித்தேன் நேரப்பிரச்சனை காரணமாக அவரை சந்திக்க முடியல பிரேமன் நகரினூடு பயணித்த வேளை அவர் நினைவாக  மயக்கும் மாலைப்பொழுதில் அவரது  நகரை எனது கைத்தொலைபேசிமூலம் கிளிக் செய்தேன் .மன்னிக்கவும்  சோழியான்   அண்ணா  வருகிற சனிக்கிழமை மீண்டும் அதே பாதை ஊடாக டென்மார்க் செல்ல இருக்கிறேன் ...சந்திக்க முயற்சிக்கிறேன்  .........
 
10628849_1484504355137737_83242280866063
10604714_1484504405137732_87637244191174

Edited by தமிழ்சூரியன்

  • கருத்துக்கள உறவுகள்

சந்திப்பு நிகழ்வுகள் சிறப்புடன் அமையட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட பையனும் டென்மார்க் தான் முடிஞ்சா சந்திக்கவும்.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கட பையனும் டென்மார்க் தான் முடிஞ்சா சந்திக்கவும்.....

அவர் அங்கைதான் போறாரோ ஆருக்குத்தெரியும்?.. :rolleyes:

  • தொடங்கியவர்

பையனோடு  பேசி விடாச்சு பாருங்க .. :D ......அவரோடு சந்திப்பது பற்றி சில நாட்களுக்கு முன்னே தனிமடலில் பேசியாச்சு .........அவரை சந்தித்த பின் அது பற்றிய ஓர் பதிவையும் உங்களுக்கு விரைவில் இணைப்பேன் ...................மேலும் நான் இந்த களத்தில் மதிக்கும் மாண்பு மிகு மனிதர்களில் குமார சாமி அண்ணாவும் ஒருவர் ,அவரையும் நான் சந்திக்க மிக ஆவலாய் இருக்கிறேன் . :)

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மன் உறவுகள் பலர் இருப்பதால் அவர்களையும் சந்திக்கலாம்.

எத்தனை மணிக்கு செல்கிறீர்களோ தெரியாது... வரும்போது நள்ளிரவோ அல்லது ஞாயிறு அதி காலையோ அல்லது பகலோ எனது வீட்டிலேயே சந்திக்கலாம்... ஆனால் சனிக் கிழமை 16.00 மணிக்கு முன் சந்திக்கலாம் என்றுமட்டும் சொல்ல மாட்டீங்கள் என நம்புகிறேன்.!! வருக! வருக!! வருக!! (முகவரி உங்களிடம் உள்ளது. தேவையாயின் கேளுங்கள், தரப்படும்!!)  :o  :D 

  • கருத்துக்கள உறவுகள்

திருமதி மகேசுவரி வரதராசா அவர்களின் இறுதி வணக்கத்திற்கு வந்திருந்தேன். அங்கு திரு சோழியான் அவர்களை சந்திக்கும் வாய்ப்புக் கிடைக்கலாம் என்ற நம்பிக்கையும் கொண்டிருந்தேன். எண்ணம் ஈடேறவில்லை. தேடிச் சந்திக்கும் வசதியும் கிட்டவில்லை. :(

நானும் பிரபல எழுத்தாளர் இந்துமகேஷ் மற்றும் இருவரும் வந்திருந்தோமே... மற்றும் எழிலன் குடும்பம் (முன்சன்). இராஜன் முருகவேல் குடும்பம் (பிறேமன்) இணைந்தளித்த அஞ்சலியை ஒரு பெண்மணி வாசித்தாரே... கவனிக்கவில்லையா... (பெருமளவு அஞ்சலிகள் வாசிக்கப்பட்டதால் கவனித்திருக்க மாட்டீர்கள்.. அது அவரது 31வது நாள் நினைவுமலரிலும் இடம்பெற்றுள்ளது.)

அந்த மண்டப வலப்புறத்தில் வெளியே அடுக்கி வைத்திருந்த கோலா, பன்ராக்களோடைதான் அதிக நேரத்தைச் செலவிட்டுக்கொண்டிருந்தனான்!!  :o  :D

  • கருத்துக்கள உறவுகள்

நானும்  வருடத்தில 2 தடவையாவது இந்தப்பாதையால் போய்வருபவன்....

ஆனால் காய்

வேலை வேலை முடிந்தா குட்டித்தூக்கம்  என்று இருப்பதனால் குழப்பவிரும்பவில்லை..... :lol:  :D

ஏன் அவற்றிற்குள் ஏதும் கலந்து வைச்சிருந்தவையோ... :o  :o

இப்ப ரண்டு வருசத்துக்கு மேலை கலப்பு புகைப்பு எல்லாம் விட்டாச்சே!!  :o (இதைத்தான் சொல்லுறது சுடலை ஞானம் எண்டு.  :D )

நானும்  வருடத்தில 2 தடவையாவது இந்தப்பாதையால் போய்வருபவன்....

ஆனால் காய்

வேலை வேலை முடிந்தா குட்டித்தூக்கம்  என்று இருப்பதனால் குழப்பவிரும்பவில்லை..... :lol:  :D

என்ன பெரிய வேலை சார்.. ஒரு கிழமைக்கு முந்தி சொன்னால் லீவு எடுக்க வசதியாக இருக்கும். அவ்வளவுதான். ஆகவும் அவசரம் எண்டால் 'சிக் லீவ்' இருக்குதானே?!  :o  :D

சோழியான் என்றதும் பார்த்தேன்  நல்ல பிரகாசமான இடத்தில்தான் இருக்கிறார்.  நானும் சுகம் கேட்டதாகக் கூறவும்.

  • கருத்துக்கள உறவுகள்
மாண்புமிகு சோழியான் அண்ணாவிற்கு அன்புடன்

மாண்புமிகு  என்று போட்டு அவரை அந்நியப்படுத்தி விட்டீர்களே...!

  • தொடங்கியவர்

மாண்புமிகு  என்று போட்டு அவரை அந்நியப்படுத்தி விட்டீர்களே...!

அந்நியப்படுத்தவில்லை  சகோதரா [ரி] :)   அன்புடன் கலந்த ஓர் மரியாதை அது ....... :D

மாண்புமிகு என்று போட்டு அவரை அந்நியப்படுத்தி விட்டீர்களே...!

என்னை மாதிரி சோழி அண்ணா, சோழி அங்கிள், சோழி தாத்தா என அன்போடு அழைக்கணும். :lol: சோழி அண்ணாவுடன் திண்ணையில் அடித்த அரட்டைகள் மறக்க முடியாதவை. :D

Edited by துளசி

தமிழ்சூரியன் அண்ணா,

சோழி அண்ணாவை சந்திக்க சென்றால் உங்கள் CD க்களில் சிலவற்றையும் கையுடன் கொண்டு செல்லுங்கள். (விற்பனைக்கு அவர் உதவுவார் எனின்)

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

நானும் பிரபல எழுத்தாளர் இந்துமகேஷ் மற்றும் இருவரும் வந்திருந்தோமே... மற்றும் எழிலன் குடும்பம் (முன்சன்). இராஜன் முருகவேல் குடும்பம் (பிறேமன்) இணைந்தளித்த அஞ்சலியை ஒரு பெண்மணி வாசித்தாரே... கவனிக்கவில்லையா... (பெருமளவு அஞ்சலிகள் வாசிக்கப்பட்டதால் கவனித்திருக்க மாட்டீர்கள்.. அது அவரது 31வது நாள் நினைவுமலரிலும் இடம்பெற்றுள்ளது.)

அந்த மண்டப வலப்புறத்தில் வெளியே அடுக்கி வைத்திருந்த கோலா, பன்ராக்களோடைதான் அதிக நேரத்தைச் செலவிட்டுக்கொண்டிருந்தனான்!!  :o  :D

நான் என் மகள் மகனுடன் வந்திருந்தேன் 800 கிலோ மீற்றருக்குமேல் பயணம். தாமதமாகவே வரமுடிந்தது. அதனால் உங்கள் அஞ்சலியைக் கேட்கும் வாய்ப்புத் தவறிப்போயிருக்கலாம். கோலா, பன்ராக்களை நானும் கவனித்தேன். நான் பெரும் குடிமகன் அதனால் இந்தச் சிறு குடிகளுக்கிடையே வருவதில்லை. பிறேமன் லோகனை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம் அவரிடம் உங்களைப்பற்றி வினவினேன். நீங்கள் வரவில்லைப்போல் தெரிகிறது என்று கூறினார். நாங்கள் வந்த வேளையில் தமிழாலய நிர்வாகி ஒருவர் தனது நிர்வாகத் திறன் பற்றியும், தான் நிர்வாகத் திறமை பெறுவதற்கு மகேசுவரி அவர்கள் அளித்த ஊக்கம் பற்றியும் அஞ்சலி என்ற பெயரில் தனது பெருமையை முழங்கிக் கொண்டிருந்தார்.

மாண்புமிகு  என்று போட்டு அவரை அந்நியப்படுத்தி விட்டீர்களே...!

அதுதானே... அண்ணா என்றுவிட்டு மாண்புமிகு என்று அதற்குள் ஒரு கோடு...?!!

நேரில் பார்த்தால் துளசி சொல்லுறதுபோல தாத்தா என்றுதான் சொல்லுவாங்கள்போல...!!  :D

நான் என் மகள் மகனுடன் வந்திருந்தேன் 800 கிலோ மீற்றருக்குமேல் பயணம். தாமதமாகவே வரமுடிந்தது. அதனால் உங்கள் அஞ்சலியைக் கேட்கும் வாய்ப்புத் தவறிப்போயிருக்கலாம். கோலா, பன்ராக்களை நானும் கவனித்தேன். நான் பெரும் குடிமகன் அதனால் இந்தச் சிறு குடிகளுக்கிடையே வருவதில்லை. பிறேமன் லோகனை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம் அவரிடம் உங்களைப்பற்றி வினவினேன். நீங்கள் வரவில்லைப்போல் தெரிகிறது என்று கூறினார். நாங்கள் வந்த வேளையில் தமிழாலய நிர்வாகி ஒருவர் தனது நிர்வாகத் திறன் பற்றியும், தான் நிர்வாகத் திறமை பெறுவதற்கு மகேசுவரி அவர்கள் அளித்த ஊக்கம் பற்றியும் அஞ்சலி என்ற பெயரில் தனது பெருமையை முழங்கிக் கொண்டிருந்தார்.

 800 கிமீ. மேல் பயணம் என்றால்... stuttgart அல்லது München இக்கு கிட்ட இருந்து வந்திருப்பீர்களா?!  :D

பிறேமன் லோகனை தெரியும். காணும் இடத்தில் நேரம் போவது தெரியாமல் உரையாடுவதும் உண்டு,

ஆனால் அவருக்கு இராஜன் முருகவேலை தெரியும். சோழியானை தெரியுமா என்பது சந்தேகமே!  :o  :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.