Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உழைப்பு...கற்பனை....ஆவணப்படம் - T-Rex Autopsy, National Geographic Channel நிகழ்ச்சியின் பின்னனித் தகவல்கள்

டைனோசர் குறித்த ஆவணப் படங்களில் இந்த படம் T-Rex Autopsy அளவிற்கு மற்றும் ஒரு ஆவணப் படம் எடுக்கப்பட முடியுமா என்பது இனி யோசனைக் குறிய ஒரு விசயம்தான். இந்த ஆவணப் படத்திற்கான டைனோசரை உருவாக்க கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ஆகியிருக்கிறது. இரவுப் பகல் பாராத 17 வடிவமைப்பு கலைஞர்களின் உழைப்பு இந்த டைனோசருக்கு பின்னால் இருந்திருக்கிறது.

இந்த ஆவணப் படத்தை அதிசயிக்க காரணம் ஒரு நிச டைனோசரை இரத்தமும் சதையும் எலும்புகளுமாக ஆராய்ச்சியாளர்கள் வெட்டி எடுப்பதுப்போல இது தயாரிக்கப்பட்டிருந்ததே. இந்த மிகத் தத்துருபமான டைனோசரை வடிவமைக்க பல பக்கங்களிலான அறிவியல் தகவல்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

T-Rex டைனோசரின் எலும்புகள், தசைகள், நரம்புகள் என்று மிகத் மிகத் நுணுக்கமான தகவல்கள் எல்லாம் இந்த ஆவணப்படத்திற்காக திறட்டப்பட்டிருக்கிறது. அது இந்த ஆவணப் படத்தை பார்க்கும்பொழுது வெளிப்படுகிறது. அதிலும் T-Rex-ன் ஒரு கண்ணை வெட்டியெடுத்து கண்களின் பாகங்களை தனி தனியாக பிரித்துயெடுத்து கண்ணின் லென்சையும் வெளியே எடுத்துக்காட்டும் காட்சி உச்சக்கட்டம்.

T-Rex-ன் உடல் பாகங்களான இதயம், குடல், வயிறு, கருப்பை அதனுள் இருக்கும் முட்டை, நெஞ்செலும்பு கூடு, நுரையீரல், சிறுநீரகம் என்று அனைத்தையும் 3D “sketch” என்று அழைக்கப்படும் தொழில் நுட்பத்தின் மூலம் maquette ஆக முதலில் செய்திருக்கிறார்கள். இந்த maquette என்பது ஒரு முழு அளவிலான சிலையின் சிறிய மாதரி சிலைவடிவம். இந்த maquette-யை அடிப்படையாக கொண்டு இந்த ஆவணப்படத்திற்கான T-Rex-ன் உடல் பாகங்களை scanned CAD data-வாக கணினியில் ஏற்றியிருக்கிறார்கள்.

பிறகு அந்த தரவுகளை அடிப்படையாக வைத்து ஒரு பொறியியல் கம்பெனியை அனுகி T-Rex-ன் அடிப்படை உடல் அமைப்பை polystyrene கொண்டு வடித்திருக்கிறார்கள். இந்த polystyrene உருவத்தின் மீது ஈரப்பத களிமண்ணை மூசியிருக்கிறார்கள். இந்த கட்டத்தில் அந்த களிமண்ணில் தோல் சுருக்கங்களையும் நரம்பு புடைப்பு எலும்பு புடைப்புகளையும் செதுக்கியிருக்கிறார்கள்.

இந்த polystyrene மற்றும் களிமண் வடிவமைப்பில் fibreglass-யை உருக்கி ஊற்றி latex மற்றும் polyurethane அடிப்படையிலான டைனோசருக்கான மேல் தோலை உருவாக்கியிருக்கிறார்கள். மேல் தோலில் மயிர்களுக்கு 20,000 டர்கி கோழி மற்றும் வாத்துகளின் இறகுகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இப்படி உருவான இந்த T-Rex-ற்கு தேவைப்பட்ட மூலப் பொருட்கள், 4 டன் களிமண், 100 லிட்டர் latex rubber, 200 லிட்டர் silicone rubber, 600 லிட்டர் polyester resin இது தவிர பல நூறு மீட்டர்கள் நீளம் கொண்ட fibreglass matt.

இப்படி இந்த டைனோசர் உருவாகிக்கொண்டிருந்த ஒவ்வொரு கட்டத்திலும் பல புதைப்படிவ ஆராய்ச்சியார்களின் (palaeontologist) அறிவுரைகளும் பெறப்பட்டிருக்கிறது. பல தகவல் தொழில் நுட்ப அறிஞர்களின் 3-D model தொழில் நுட்பமும் இந்த டைனோசரை உருவாக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

ஒரு ஆவணப் படத்தை இப்படிக் கூட பிரம்மிப் பூட்டும் விதத்தில் தயாரிக்க முடியும் என்பதற்கு இந்த T-Rex Autopsy ஆவணப் படம் மிகச் சிறந்த உதாரணம். ஆவணப் படத்தில் ஆராய்ச்சியாளர்களாக தோன்றுபவர்கள் இரத்தமும் சதையும் நின நீருமாக டைனோசரை துண்டு துண்டாக வெட்டி அதன் உள் பாகங்களை குறித்து விளக்கும்போது 65 கோடி ஆண்டுகளுக்கு முற்ப்பட்ட ஒரு நிச டைனோசரின் பிரேத பரிசோதனையை கண் முன்னால் பார்ப்பதுப்போலவே இருக்கிறது. வாய்ப்புக் கிடைத்தால் தவறாமல் பாருங்கள் நண்பர்களே.

11391139_1511620985751181_28866182248564
  • Replies 3.9k
  • Views 330.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினமாக (World Day Against Child Labour)ஜூன் 12: 

கல்வி எனும் பெருஞ்செல்வம் குழந்தைகளுக்கு கிட்டமுடியாமல் தடுக்கும் எந்த ஒன்றை எதிர்ப்போம்.

 

11392898_1114415458575849_10554634004235

 

10287006_125773697754078_773744122401163

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜூன் 14: இன்று உலக ரத்த தானம் செய்வோர் தினம்..

 

11401037_126950190969762_703468610961921

 

 

11401034_126963377635110_454749932690159

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

blood_2437739f.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜூன் 14: போராளி சே குவேரா பிறந்த தினம் இன்று - சிறப்பு பகிர்வு..

அநியாயங்களிடையே பிறக்கிறான் 'சே' !

"கோழையே, சுடு! நீ சுடுவது 'சே'வை அல்ல; ஒரு சாதாரண மனிதனைத்தான்!" தன் கால்தடம் பதியும் நிலபரப்பு எல்லாம் என் தேசமே என்று முழங்கிய 'சே'வின் இறப்பில் பிறந்த செவ்வரிகள் இவை.

'சிரிக்கும் கண்கள், புகைக்கும் உதடுகள், சீவி முடியாத தலைமயிர்,பயணித்து கொண்டேயிருக்கும் கால்கள், ஓயாத போராட்டங்கள்' இதுவே எர்னெஸ்டோ 'சே'குவேராவின் முத்திரைகள்.

உலக வரலாற்றில் 'சே'வின் போராட்ட பேச்சுகள் அழுத்தமானவை,அவையாவும் ஏகாதிபத்தியத்தை துரத்தி அடிக்கக்கூடியவை.இப்படியிருந்தது அவரின் பேச்சுகள் "ரஷ்ய ஏவுகணைகள் கியூபாவில் இறங்கினால் அது முதலில் அமெரிக்க நகரங்களையே குறிவைக்கும். அமெரிக்கா ஒரு கழுதைப்புலி, இதனின் கொடிய ஏகாதிபத்தியத்தை வேரறுப்பேன்"என சவாலிட்டார்.'அமெரிக்காவால் பாதிக்கப்படும் சிறிய நாடுகளுக்கு உதவுவது ரஷ்யாவின் கடமை'என ரஷ்யாவுக்கும் அறிவுரைத்தார்.

'சே'வின் கால்தடங்கள் லத்தீன் அமெரிக்க பகுதிகள்,ஆப்பிரிக்க நாடுகள்,ஆசிய நாடுகள் என அநியாயங்களின் பிறப்பிடத்தில் எல்லாம் பதிந்தது.கியூபா விடுதலையை கண்டதே 'சே'வின் புரட்சியால் தான்.

"சாவை எண்ணி ஒருபோதும் நான் கவலை கொள்வதில்லை, என் பின்னால் வரும் தோழர்கள் என் துப்பாக்கியை தூக்கிக் கொள்வார்கள். தோட்டாக்கள் தொடர்ந்து சீறும் !" என்ற 'சே'மரணத்தை கண்ட அஞ்சிடாத மனிதராகவே வாழ்ந்து வந்தார்.

இப்படியான 'சே'ஒரு மருத்துவர்.ஆஸ்துமாவின் பாதிப்போடே அடர்ந்த காடுகளில் போராடியவர்.

'மனிதனுக்கு மனிதன் எவனும் இங்கு அடிமையில்லை' என்பதே 'சே'வின் கோட்பாடு. இவ்வுலகத்தை குலுக்கிய பெருந்தலைவர்களின் ஆயுட்காலம் மிகக்குறைவே,அவர்களது மரணமும் மர்மமானதே.ஆனால் அவர்களது சித்தாந்தத்திலேயே அ

நியாயங்களின் உலகம் தோற்கடிக்கப்படுகின்றது. இவ்வுலகத்தை குலுக்கும் எந்தவொரு தேசப்போராட்டமும் வர்கப்போராட்டமும் இவர்களை மறப்பதில்லை.மாவீரம் என்பது வீரத்தால் முடிசூடப்படுவதல்ல,எண்ணத்தால் - செயல்பாட்டால் - மனிதத்தால் முடிசூடப்படுவது.

இவ்வுலகத்தில் சீறி சினந்த தோட்டாக்கள் யாவுமே தன் சொந்த நாட்டு மக்களுக்காக பாய்ந்தது.'சே'வின் தோட்டாக்கள் மட்டுமே இனங்கள் மறந்து மொழிகள் அற்று நாடுகளின் எல்லைகள் அறியாமல் அநியாயங்களிடையே சிக்கித்தவித்த மனிதனுக்காக பாய்ந்தது. மாவீரர்களை மரணம் புதைப்பதில்லை,விதைக்கிறது !

இன்றும் கியூபா பள்ளி மாணவர்கள் பள்ளிகளில் தினந்தோறும் சொல்வது என்ன தெரியுமா ? 'எங்கள் முன்னோர்கள் கம்யூனிஸ்ட்டுகளாக இருந்தார்கள்,நாங்கள் 'சே'வை போல் இருப்போம்' என்பதுவே !

நாமும் 'சே'வைப் போல் இருப்போம் மனிதனாக...நல்ல தோழனாக.

 

 

10250263_593347667434446_89033153263166310003463_126957694302345_55571519352451411425154_126959527635495_783394630018185

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு முறை ஒரு சிறுவன் குட்டி நாய்கள் விற்கும் கடைக்குச் சென்றான். அங்கே ஒரு குட்டி நாய் மட்டும் தனியாக இருப்பதைக் கண்ட அவன் கடைக்காரரிடம் அது பற்றி விசாரிக்க

அவர் " அந்த குட்டி நாய்க்கு ஒரு கால் கிடையாது . அதனால் அதை விற்பனைக்கு வைக்காமல் சும்மா வைத்திருக்கிறோம் " என்றார்.

அந்த சிறுவன் அந்த குட்டி நாயை கையில் ஏந்தி அதன் காதுகளை மென்மையாக நாக்கில் தடவிக் கொடுத்தான். உடனே அந்த நாயும் அவன் காதுகளை மெலிதாக தனது நாவால் தடவிக் கொடுத்தது.

உடனே அவன் இந்த நாயை வாங்கியே தீர வேண்டும் என்று நினைத்தான் .

நல்ல நிலையில் இருக்கும் நாய்களின் விலையோ 50 டாலர். அந்த சிறுவனிடம் இருப்பதோ 2 டாலர் மட்டுமே. உடனே வீட்டுக்கு விரைந்து சென்று 48 டாலர் திரட்டி கடைக்காரரிடம் கொடுத்து அந்த நாயை விலைக்கு வாங்கினான்.

அந்த கடைக்காரர் " இந்த ஊனமுற்ற நாயைப் போய் இவ்வளவு விலைக்கு வாங்குகிறாயே ? நீ என்ன முட்டாளா ? " என்று கேட்க அந்தச் சிறுவன் பதில் எதுவும் பேசாமல் தனது இடது கால் பேண்டைத் தூக்கி காட்டினான். அவன் தனது காலில் மரக் கட்டை அணிந்திருந்தான். அவனுக்கும் ஒரு கால் இல்லை.

மாற்றுத் திரனாளி என்றாலே பயன்படாதவர் என்று எண்ணக் கூடாது என்பதற்காகவே முழுத் தொகையையும் கொடுத்து வாங்கியதாக சொல்லாமல் சொன்னான்.

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

11536106_968889723144920_826396304535126

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கதர் - அர்த்தம் தெரியுமா?

கதர் என்பது அரேபியச் சொல். இதற்கு, கௌரவம் என்று பொருள். ஒரு சந்திப்பின்போது காந்திக்கு, முகம்மது அலி ஜின்னா ஒரு கைத்தறி ஆடையை அணிவித்தார். அப்போது, ''இதைக் கதராக (கௌரவமாக) ஏற்றுக்கொள்ள வேண்டும்'' என்றார். அன்று முதல் இந்த வகைத் துணிகள், 'கதர்’ எனப்படுகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

துரோண‌ர் த‌ரும‌ரை அழைத்தார். " இந்த‌ ஊரில் கெட்ட‌வ‌ர்க‌ள் யாராவ‌து இருக்கிறார்க‌ளா, பார்த்துவிட்டு வா" என்று அனுப்பினார்.

அவ‌னும் புற‌ப்ப‌ட்டுப் போனான்.

துரியோத‌னை அழைத்தார். " இந்த‌ ஊரில் நல்ல‌வ‌ர்க‌ள் யாராவ‌து இருக்கிறார்க‌ளா, பார்த்துவிட்டு வா என‌ அனுப்பினார். அவ‌னும் புற‌ப்ப‌ட்டு போனான்.

ஊரெல்லாம் சுற்றிப் பார்த்துவிட்டு இருவ‌ரும் திரும்பி வ‌ந்தார்க‌ள்.

" ஊரில் எல்லோரையும் பார்த்தேன். கெட்ட‌வ‌ன் ஒருவ‌ன் கூட‌ இல்லை." எனறான் த‌ரும‌ன்.

" நானும் எல்லோரையும் பார்த்தேன். ஊரில் ந‌ல்ல‌வ‌ன் ஒருவ‌ன் கூட இல்லை." என்று சொன்னான் துரியோத‌ன‌ன்.

இருவ‌ருமே ஒரே ம‌னித‌ர்க‌ளைத்தான் பார்த்தார்க‌ள்.ஒவ்வொரு ம‌னித‌னிட‌மும் ந‌ல்ல‌தும் உண்டு. கெட்ட‌தும் உண்டு.

த‌ரும‌ன் ந‌ல்ல‌வ‌ன். அவ‌ன் ந‌ல்ல‌தை ம‌ட்டுமே பார்த்தான். அவ‌னால் அப்ப‌டித்தான் பார்க்க‌ முடியும்.அத‌னால் அவ‌னுக்கு எல்லோரும் ந‌ல்ல‌வ‌ர்க‌ளாக‌ தெரிந்தார்க‌ள்.

துரியோத‌ன‌ன் கெட்ட‌வ‌ன்.அவ‌ன் கெட்ட‌தை ம‌ட்டுமே பார்த்தான். அவ‌னால் அப்ப‌டித்தான் பார்க்க‌ முடியும். அத‌னால் அவ‌னுக்கு எல்லோருமே கெட்ட‌வ‌ர்களாக‌ தெரிந்தார்க‌ள்.

உல‌க‌ம் ந‌ம் பார்வையை பொறுத்தே உள்ளது

 

படித்ததிலிருந்து....

  • கருத்துக்கள உறவுகள்

 

கதர் - அர்த்தம் தெரியுமா?

கதர் என்பது அரேபியச் சொல். இதற்கு, கௌரவம் என்று பொருள். ஒரு சந்திப்பின்போது காந்திக்கு, முகம்மது அலி ஜின்னா ஒரு கைத்தறி ஆடையை அணிவித்தார். அப்போது, ''இதைக் கதராக (கௌரவமாக) ஏற்றுக்கொள்ள வேண்டும்'' என்றார். அன்று முதல் இந்த வகைத் துணிகள், 'கதர்’ எனப்படுகிறது.

 

 

கதர் துணியின், பின்னணி சுவராசியமாக உள்ளது.

இப்போது தான்... முதன் முதலில் கேள்விப் படுகின்றேன். :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"கல்லாரே யாயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின்

நல்லறிவு நாளுந் தலைப்படுவர்-தொல்சிறப்பின்

ஒண்ணிறப் பாதிரிப்பூச் சேர்தலாற் புத்தோடு

தண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு"

கரு:- சிறந்த அழகும் மணமும் நிறைந்த பாதிரிப்பூ வைத்திருந்த புதிய மண்பாண்டத்தில் உள்ள தண்ணீருக்கும் அந்த மணம் கிடைப்பதைப் போல படிப்பறிவு இல்லைஎனினும் கற்ற பெரியோருடன் சேர்ந்து பழகுவதால் கொஞ்சம் கொஞ்சமாக நல்லறிவு வாய்க்கப் பெறும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மரம் கொத்திப் பறவை..

----------------------------------

எப்பேர்ப்பட்ட மரத்தையும் தனது கூரான அலகால் கொத்தி விடும் பறவை மரம்கொத்திப் பறவை.

ஆனால்....

மென்மையான வாழை மரத்தை மட்டும் இது தனது அலகால்கொத்தாதாம்.

அப்படிக் கொத்தினால்இ அதன் அலகு அதில் மாட்டிக் கொள்ளுமாம்.

உயிரிழக்கும் அபாயம் கூட உண்டாம்.

மரங்கொத்திப் பறவை நீர்ப் பதம் கொண்ட எந்த தாவரத்தையும் கொத்தாதம்.

இந்த செய்தி எனக்குப் புதிதாய் இருந்தது..

11425498_129537084044406_156543934748880

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் தமிழர்களிற்கு குடியுரிமைப் பாதிப்பு ஏற்படும் என்ற தொணிப்பட அண்மையில் வெளிவந்த செய்தியில் கனடாவில் தமிழர்கள் இரண்டாந்தரப் பிரஜைகள் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது இதனைக் கனடியக் குடிவரவு அமைச்சர் அடியோடு மறுத்துள்ளார்.

இது தொடர்பாக கனடியத் தமிழ் கண்சவேட்டிவ் அமைப்பு [www.constam.ca]விடுத்த அறிக்கையில், தனது கருத்தைப் பதிவு செய்துள்ள கனடியக் குடிவரவு அமைச்சர் கௌரவ கிறிஸ் அலெக்ஸ்சான்டர் அவர்கள்,

கனேடியப் பிரஜைகள் சகலரும் ஒரே மாதியாகவே நடத்தப்படுகின்றார்கள். கனடியக் குடியுரிமையில் இரண்டாந்தரப் பிரஜாவுரிமை என்று ஒன்றில்லை. இது தொடர்பான செய்திகளை நாங்கள் அடியோடு மறுக்கின்றோம் என்று தெரிவித்துள்ளதோடு,

கனடியக் குடியுரிமையை இழக்கும் சந்தர்ப்பத்தைக் கொண்டுள்ள இரட்டைப் பிரஜைகள் யாரென்றால், மேற்படி பிரஜைகள் பயங்கரவாதத்தில் தொடர்பான எந்தச் செயலிலும் ஈடுபடுதல், கனடாவிற்கு எதிராக அல்லது கனடியப் படைகளிற்கு எதிராகப் போராடுதல் அல்லது உளவு பார்த்தல் அலலது தேசவிரோதக் குற்றச்செயல்களில் ஈடுபடுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டவர்களேயாகும் எனவும்,

கனடாக் குடியுரிமையைப் பெறுபவர்கள் தொகை என்றுமில்லாவாறு அதிகரித்துள்ளது. கடந்த வருடத்தில் 261,000 பேர் கனடியக் குடியுரிமையைப் பெற்றுள்ளார்கள். இதுவே இதுவரை காலத்திலும் ஒரு குறித்த ஆண்டில் அதிகம் பேர் குடியுரிமையைப் பெற்ற ஆண்டாகும் எனவும் தெரிவித்துள்ளாh.

உண்மைக்குப் புறம்பான செய்தியை வெளியிட்டவர்களின் நோக்கம் தமிழ்க் கனேடியர்கள் பற்றிய தவறான செய்தியைப் பரப்புவதாகவும், தமிழ் மக்களைத் திசைதிருப்புவதாகவும் அமைந்துள்ளது எனக் கனடியத் தமிழ்க் கண்சவேட்டிவ் அமைப்புத் தெரிவித்துள்ளது.

There are no such classes in Canadian Citizenship – Minister Chris Alexander

The Canadian Tamil Conservatives Association [www.constam.ca] has been informed that a Sri Lanka based media has posted news that “Over 140 000 Sri Lankan citizens in Canada could face the risk of losing their Canadian citizenship or return to Sri Lanka after a new immigration law enacted by the Canadian Government dictates that these ‘second class’ citizens may have their citizenship status stripped at any point.”

In our opinion, this particular news contained incorrect information to mislead the public about Canadian Tamils, as the referred new procedures of a revocable citizenship has nothing to do with Tamil Community. The new procedure is targeting those who are knowingly engaged in listed activities that have been published by the Government of Canada as reason for removal of Canadian Citizenship of dual citizens.

Furthermore, the same news item made a referral to the Tamils as “second class citizens” – which is very contrary to the fact that Canada has no such system.

Commenting on the particular news item, Hon. Chris Alexander, the Minister of Citizenship and Immigration stated: “We categorically deny that there are such classes in Canadian Citizenship. All of our citizens are treated equally in all matters. The only people who risk having their Canadian citizenship revoked are dual nationals who are convicted of the most serious of crimes: terrorism, treason, spying and taking up arms against Canada or the Canadian Armed Forces. This is a tiny, tiny group of people who do not deserve to enjoy the benefits that come with being a Canadian citizen”.

Minister Alexander further stated that “”Canadian citizenship has unprecedented value today precisely because we are prepared to take such steps to keep Canada and Canadians safe. Larger than ever numbers of people continue to want to immigrate to Canada and become Canadian citizens. Last year, over 261,000 new Canadians were awarded citizenship — an all-time record.”

  • கருத்துக்கள உறவுகள்

மரம் கொத்திப் பறவை..
----------------------------------
எப்பேர்ப்பட்ட மரத்தையும் தனது கூரான அலகால் கொத்தி விடும் பறவை மரம்கொத்திப் பறவை.
ஆனால்....
மென்மையான வாழை மரத்தை மட்டும் இது தனது அலகால்கொத்தாதாம்.
அப்படிக் கொத்தினால்இ அதன் அலகு அதில் மாட்டிக் கொள்ளுமாம்.
உயிரிழக்கும் அபாயம் கூட உண்டாம்.
மரங்கொத்திப் பறவை நீர்ப் பதம் கொண்ட எந்த தாவரத்தையும் கொத்தாதம்.

இந்த செய்தி எனக்குப் புதிதாய் இருந்தது..

11425498_129537084044406_156543934748880
 
"கருங்காலிக் கட்டைக்கு நாணாத கோடாலி - வெறுங்
கதலித் தண்டுக்கு நாணும்"    ஔவையார்...!  அப்பவே சொல்லி வைத்தார்...!

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

புலவர் ஈழத்து சிவானந்தன் அவர்கள்  இறைவனடி சேர்ந்து விட்டார்கள்..

 

 
                                                                      10437660_131788177152630_469252928164936
 

 

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

மாஜிக் என்னும் போர்வையில் ஆபசத்தையும் இன்னும் வேண்டாதவற்iறும் புகுத்தும் வித்தைகளை கண்டுகளிக்க வேண்டுமா...நான் எழுதும் விடையம் எவ்வளவு பேரால் ஏற்றுக் கொள்ளப் படுகிறது என்று எனக்கு தெரியாது...ஆனாலும் சொல்ல வேண்டும் போல் உள்ளது.. நேற்று முன்  தினம் நான்  10 ஆவது வயது பிறந்த நாள் விழா ஒன்றுக்கு சென்று இருந்தேன்..அங்கு வந்திருந்தவர்களில் அனேகமானவர்கள் 10 வயது மற்றும் அதற்கும்   உட்பட்ட சிறுவர்,சிறுமிகள்களே..அந்த விழாவிற்கு மாஜிக் செய்வதற்காக வந்திருந்தவர் ஒரு வேற்று நாட்டு நபர்அவர்களுக்கு எல்லாமே சகஜமான விடையம்..

ஆனால் எங்களுக்கு,எங்கள் குழந்தைகளுக்கு அப்படி அல்லத் தானே..கொடுக்கும் பணத்திற்கு ஏற்ப மாஜிக் அங்கு நிறைவாக அமையவில்லை என்பது ஒரு புறம் இருக்க..மாஜிக் நடத்திக் கொண்டு இருப்பவர் ஒரு கட்டத்தில் தன் வித்தையால் ஒரு பொருளைக் கண்டு பிடித்தார்..அது என்ன பொருள் என்றால் ஆண்களின் ஜட்டி.இது எல்லாம் ஒரு மாஜிக்....

புரிந்து கொண்ட குழந்தைகள் ஜக்கி என்றார்கள்..முகத்தை சுளித்துக் கொண்டார்கள் என்றும் சொல்லிக் கொள்ளலாம்..அது ஒரு புறம் இருக்க, கழுத்தில் ஏதோ ஒன்றை மாட்டி விட்டு அதற்குள்ளால் ஒரு குடைக் கம்பி மாதிரி ஒன்றை விட்டு இழுக்கிறாராம் வருகிறது இல்லையாம்  என்ற மாதிரியும் ஒரு விடையம் செய்து காட்டினார்.. 
இதே விடையத்தை எங்கள் வீடுகளில் தனித்து இருக்கும் போது குழந்தைகள் தங்கள் சகோதரங்களுக்கு செய்ய முயற்சித்தால் என்ன செய்வது...

அந்த நேரத்தில் நாங்களே எங்கள் பிள்ளைகளை எடுத்துப் போட்டு குத்துவதா....இவை எல்லாம் கண்காணிக்கபட வேண்டிய விடையங்கள்..பிள்ளையின் விருப்பு என்று விட்டு எங்கள் பாட்டுக்கு பணத்தைக் கொட்டி வில்லங்கத்தையும் விலைக்கு வாங்கக் கூடாது..அறிவு பூர்வமாக செய்யக் கூடிய எத்தனையோ விடயங்கள் இருக்கிறது..அப்படி இருக்கையில் அசிங்கங்களை, ஆபசங்களை சிறுவயதிலயே காட்டி வளர்ப்பது நன்று அல்லவே.நான் இவற்றை பச்சை வாங்கும் எண்ணத்தில் எழுதவில்லை...

 

Edited by யாயினி

  • 4 weeks later...

வணக்கம் யாயினி. தாங்கள் நலமா ?  ஏன் உங்கள் பக்கம் பல நாட்களாக தொடரப்படாமல் உள்ளது்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் யாயினி. தாங்கள் நலமா ?  ஏன் உங்கள் பக்கம் பல நாட்களாக தொடரப்படாமல் உள்ளது்

வணக்கம் செந்தமிழாளன்..நான் நலம்.இங்காலப் பக்கம் வாறவர்களையும் காணம்...யாரையும் வோர் அடிக்க வைக்கிறனோ என்று பயமாக இருந்திச்சு..அதோடை எஸ்கேப் ஆகிட்டன்..

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

10559797_10203071462120011_8840445056745

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் செந்தமிழாளன்..நான் நலம்.இங்காலப் பக்கம் வாறவர்களையும் காணம்...யாரையும் வோர் அடிக்க வைக்கிறனோ என்று பயமாக இருந்திச்சு..அதோடை எஸ்கேப் ஆகிட்டன்..

 

நான் இந்தப் பக்கத்தின் ரசிகன், தவறாமல் பார்ப்பேன். அழகிய கோலம் போன்ற உங்கள் பதிவுகளில் அலங்கோலமாய் கருத்திடுவதைத் தவிர்கின்றேன்...!

தொடருங்கள் சகோதரி...!

தொடர்ந்து இணையுங்கள் யாயினி! 

  • கருத்துக்கள உறவுகள்

நான் இந்தப் பக்கத்தின் ரசிகன், தவறாமல் பார்ப்பேன். 

தொடர்ந்து இணையுங்கள் யாயினி! 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

11752019_10153105354522992_8242099609273

 

காணாமல் போயுள்ள தமிழ் இளைஞர் ஒருவரைக் கண்டுபிடிக்க உதவுமாறு ரொறன்ரோ காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

31 வயதான ஜெகமாறன் தவநாயகபதி என்பவரே ஜூலை மாதம் 22 திகதி (புதன்கிழமை) முதல் காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

இவர் இறுதியாக Queen - Ossington பகுதியில் காணப்பட்டுள்ளதாக காவல்துறையினரின் அறிக்கை தெரிவிக்கின்றது.

5"10 உயரமான இவரது புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ள காவல்துறையினர் இவரது பாதுகாப்புக்குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.

The Toronto Police Service is requesting the public’s assistance locating a missing man.

Jegamaran Thavanayagapathy, 31, was last seen on Wednesday, July 22, 2015, in the Queen Street West/Ossington Avenue area.

He is described as 5'10", 160 lbs., with short black hair and a receding hairline. He was wearing a blue baseball cap, blue windbreaker jacket, black jeans, and grey running shoes.

He has hearing and speech impairment. He lip-reads.

Police are concerned for his safety.

 

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் யாயினி... !

என்னப்பா இந்தப் பிள்ளையைக் கொஞ்ச நாளாக் காணக்கிடைக்குதில்லை எண்டு மனசுக்குள்ள ஒரு ஆதங்கம்!

தொடர்ந்து இணைந்திருங்கள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.