Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

So cute with those sad puppy dog eyes and faces..

11061234_1643952632488976_61081536300513

  • Replies 3.9k
  • Views 330.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வாவ் என்ன வடிவான நாய்க்குட்டி! இதைப்பாக்க எனக்கு சின்னனிலை படிச்ச "தோதோ நாய்க்குட்டி துள்ளிவா நாய்க்குட்டி பாட்டும், அம்மாவின் நினைவும் வந்து தாலாட்டுது! நன்றி யாயி!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

11222689_1666588656911816_54893171303116

முதல்ல நாய்க்குட்டி இப்ப பூனைக்குட்டி பிறகென்ன எலிக்குட்டியா ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதல்ல நாய்க்குட்டி இப்ப பூனைக்குட்டி பிறகென்ன எலிக்குட்டியா ?

இவைகளும் பார்த்து ரசிக்க கூடியதாகத்தானே இருக்கிறது..அதனால் அடிக்கடி நாய்க் குட்டி,பூனைக்குட்டி இதர விடையங்களும் வரும்... :)     

 

11865053_1677593085810043_29446568287193

                                             

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

புகழ்பெற்ற கட்டட வடிவமைப்பாளர் ஈரோ சாரினென் (Eero Saarinen)

11903739_616608485108364_780938188388590

 

சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும் அமெரிக்காவின் கேட் வே ஆர்ச் உள்ளிட்ட பல கட்டடங்கள் இவர் வடிவமைத்ததே.

11898585_616608355108377_595578132457835

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கனடா- ரொறொன்ரோ- நூல் நிலையம் ஒன்றில் இருந்து கடன் வாங்கிய காமிக் புத்தகம் ஒன்று கிழிந்ததற்கு இளம் பையன் ஒருவன் பிராயசித்தம் கையாண்ட வழி நூல்நிலைய ஊழியர்களை பிரமிக்க வைத்ததுடன் இணையத்திலும் ஆயிரக்கணக்கானவர்களை கவர்ந்துள்ளது. பையன் தன் கைப்பட் எழுதிய மன்னிப்பு கடிதம் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
நூல்நிலையத்திற்கு விலாசமிடப்பட்டு ஜக்சன் என்ற தனது பெயரை கையொப்பமிட்டு இக்கடிதத்தை எழுதியுள்ளான்.
பெட்டி அறைக்குள் இருந்து புத்தகத்தை வாசித்து கொண்டிருக்கையில் தூங்கி விழுந்து விட்டான். புத்தகம் கீழே விழுந்து கிழிந்து விட்டது.
தனது தவறிற்கு மன்னிப்பு கேட்டதுடன் இவ்வாறு திரும்பவும் நடக்காது எனவும் உறுதியளித்துள்ளான்.
வெள்ளிக்கிழமை ரொறொன்ரோ மெயின் நூல்நிலைய ஊழியர் ஒருவர் திருப்பபட்ட காமிக் புத்தகத்திற்குள் கடிதம் வைத்திருந்ததை கண்டுபிடித்தார். நாடாவால் புத்தகம் பழுது பார்க்கப்பட்டிருந்தது.
ரொறொன்ரோ பொது நூல்நிலையம் கடிதத்தை படம் எடுத்து அவர்களது முகப்புத்தகத்தில் பதிவு செய்தனர். அங்கு இந்த படத்திற்கு கிட்டத்தட்ட 3,000 விருப்பு மற்றும் 400 பகிர்வுகளும் திங்கள்கிழமை கிடைத்துள்ளது.
ஜக்சன் தவறிற்கு பொறுப்பை ஏற்றுகொண்டதை பாராட்டியும் அவனது குறிப்பு அற்புதமானதெனவும் ஏராளமானவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
நூலக பொறுப்பாளர் குறிப்பு கவர்ச்சியானதென நினைத்து நூலகத்தில் ஞாபகார்த்தமாக போஸ்ட் செய்து வைக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.

boy

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திரைச் சீலைகளால் 
வெளிச்சத்தை 
அகலத் திறந்த 
ஜன்னல்

வெளியே 
மிகத் தெளிவாக
இலை விழுந்த கிளைகள் 
சிறைப்பிடித்த மரத்தில் 
ஒரேயொரு 
ரோட்விங்ற்றோஸ்ட்

நான் 
அதைப் பார்த்தேன்
அதுவும் 
தீவிரமாக விசாரித்தது

இந்த தருணத்தில் 
வாழ்ந்துகொண்டிருப்பதில் 
கிடைக்கும் 
துயரங்களின் 
சின்ன இடைவெளிகளில் 
ஒருங்கிசைந்து 
இயங்க முடியாத
அவமானத்தில் 
முகத்தை திருப்பினேன்

தலையத் திருப்பாத 
ரோட்விங்ற்றோஸ்ட்
முடிவோடு 
நிதானமாகியது

அதன் பின் 
அச்சுறுத்தல்களைத் 
தொடர்ச்சியாகத் 
தருபவர்களின் 
குறுக்கீடுகளை 
கவிதையாக 
எழுதத் தொடங்கினேன்

ஆவேசமாகி 
ஜன்னல் விளிம்பில்
வேகமாக மோதிச் சென்றது 
அந்த
ரோட்விங்ற்றோஸ்ட் !
.
.நாவுக்கரசன்(ஒஸ்லோ-நோர்வே)
20.08.15./// நோர்வேயின் கோடைகாலப் பறவை ரோட்விங்ற்றோஸ்ட் //// 

 

11892145_10207065790024374_8180192554186

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வன்னிப்பாடசாலைகளில் நிலவும் மிகவும் மோசமான ஆங்கில ஆசிரியர்கள் பற்றாக்குறை தொடர்பாக நேற்று நான் எழுதிய பதிவுக்கு பலர் தமது கருத்துக்களை வெளிப்படையாகவும் ஒரு சிலர் உள் பெட்டியிலும் தெரிவித்திருந்தனர். உண்மையாகவே பாடசாலைகளில் நிலவும் ஆசிரியப்பற்றாக்குறை ஒரு பெரும் வளப்பிரச்சனை என்பதை பலரும் நன்கறிவர்.

அதற்காக அது அப்படித்தான் ஒன்றும் செய்ய முடியாது என அலட்சியமாக விட்டுச் செல்லக்கூடிய ஒரு பிரச்சனை அல்ல. தடைகளையும், பிரச்சனைகளையும் பேசிக் கொண்டிருப்பதை விடுத்து ஓரளவேணும் ஆங்கிலம்,கணிதம், விஞ்ஞானம் போன்ற இன்னும் முக்கிய பாடங்களுக்களுக்கான ஆசிரியத்தேவையை நிறைவு செய்வதற்கு சாத்தியப்படக் கூடிய வழிவகைகளை கண்டறிய வேண்டும்.

இப்படியான அடிப்படையான விடயங்கள் மக்கள் மத்தியில் முக்கியமான பேசு பொருளாக மாற வேண்டும். அப்போதுதான் புதிய வளங்களை கண்டறியவும் ஒன்றிணைக்கவும் முடியும். மேலும் இப்படியான வேலைத்திட்டங்கள் இன்று தொடங்கி நாளை பிசு பிசுத்துப் போகும் ‘சோடா காஸ்’ விளையாட்டுகள் அல்ல. எதிர்கால சந்ததியின் வாழ்வோடு தொடர்புபட்டது. எனவே இது நீண்டு நிலைக்கக் கூடிய செயற்திட்டங்களாக அமைய வேண்டும். எனவே அதிகாரமும் செயற்பாட்டுத்திறனும் கொண்டதாக வட மாகாண கல்வியமைச்சு தன்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டியது வரலாற்றுக் கடமையாகும்.

இதற்காக வெளியிலிருக்கும் வளங்களை தாராளமாக பயன்படுத்த வேண்டும். என்னிடம் ஒரு நண்பர் குறிப்பிட்டிருந்தார் அவுஸ்திரேலியாவில் “தமிழ் கோ” என்கிற ஒரு அமைப்பு இதற்காக ஏதோ வேலைத்திட்டங்கள் மேற்கொள்வதாக அவர்கள் வடமாகாண கல்வியமைச்சிடம் இதற்கான வழிகாட்டல்களை பெறுவதுதான் பொருத்தமாக இருக்கும் என நான் நினைக்கிறேன். பலர் வெளிநாடுகளிலிருந்து தமது மண்ணுக்கு திரும்பி வந்து ஆங்கிலம் கற்பிக்க விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார்கள் வரவேற்கத்தக்க விடயம்.

என்னைப் பொறுத்தவரை உடனடியாக செய்ய வேண்டியது பொருத்தமான நிபுணர்களைக் கொண்ட கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டு ஆசிரிய வளப்பங்கீடு பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். பல நகரப் பாடசாலைகளில் தேவைக்கும் அதிகமான ஆங்கில. கணித, விஞ்ஞான ஆசிரியர்கள் குவிந்துள்ள நிலைமைகளும் உண்டு. இவைகள் பாரபட்சமற்ற ஆய்வுகள் மூலம் வெளிக் கொணரப்படவேண்டும். உடனடியான வளப்பகிர்வுகள் கஷ்டப்பிரதேசமாக கருதப்படும் இடங்களுக்கு பங்கீடு செய்யப்பட வேண்டும்.
அடுத்த கட்டமாக புதிய ஆசிரியர்கள் உருவாக்கப்படவேண்டும். இதற்காக கல்வியமைச்சு புதிய சிந்தனைகளோடும், அர்ப்பணிப்போடும் ஏனைய வளங்களையும் இணைத்து செயற்பட வேண்டும். உதவி செய்யக் கூடிய நிலைமையில் உள்ளவர்கள் அதனை வழங்க முன்வர வேண்டும்.

இன்னொரு முக்கிய விடயம் என்னவெனில் இது உண்மையான மக்கள் சேவையாக இருக்க வேண்டுமே தவிர வெறும் உணர்ச்சிக் கோசமாக மாறிவிடக் கூடாது. இனிவரும் எமது இளைய சந்ததியாவது தமது எதிர்காலத்தை புத்தியால் வெல்லட்டும்.

 

தமிழினி ஜெயக்குமரன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆகஸ்ட் 23: பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய எழுத்தாளர் வ.ரா மறைந்த நாள் இன்று.

 

11866239_617275815041631_312299041893068

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

11889486_617925111643368_837347342161905

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

நீங்கள் நண்டு வாங்கும் போது (படத்தில் நண்டின் மேல் உள்ள சிறு ஓட்டையை கவனிக்கவும்..!)இப்படி சிறு துவாரம் கண்ணில் பட்டால் வாங்காதீர்கள். இப்படிப் பட்ட நண்டுகள் சைனாவில் இருந்து இறக்குமதியாகின்றன.

இந்த நண்டுகள் பார்க்கும் போது, புதியதாய் இருக்க வேண்டுமென்ற நோக்குடன்.. நமது உடலுக்கு தீங்கு செய்யும் மருந்துகளை இஞ்ஜக்ஷன் போட்டு, விற்பனைக்கு அனுப்பி வைக்கிறார்கள். !!

 

11891078_897319163671853_203061875545269

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

 

நீங்கள் நண்டு வாங்கும் போது (படத்தில் நண்டின் மேல் உள்ள சிறு ஓட்டையை கவனிக்கவும்..!)இப்படி சிறு துவாரம் கண்ணில் பட்டால் வாங்காதீர்கள். இப்படிப் பட்ட நண்டுகள் சைனாவில் இருந்து இறக்குமதியாகின்றன.

இந்த நண்டுகள் பார்க்கும் போது, புதியதாய் இருக்க வேண்டுமென்ற நோக்குடன்.. நமது உடலுக்கு தீங்கு செய்யும் மருந்துகளை இஞ்ஜக்ஷன் போட்டு, விற்பனைக்கு அனுப்பி வைக்கிறார்கள். !!

 

11891078_897319163671853_203061875545269

நன்றி.. யாயினி..!

ஐயையோ.. இப்படியெல்லாம் அநியாயங்கள் நடக்குமா?

நண்டைக் கண்டால்...நம்மால சும்மா இருக்க முடியாதே? :love:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Lankathas Pathmanathan's photo.

புதிய மோசடி ......

தெற்காசிய சமூகத்தை குறிவைத்து மேற்கொள்ளப்படும் நூதனமான புதிய மோசடி ஒன்று குறித்து அவதானமாக இருக்குமாறு ரொறன்ரோ காவல்துறையினர் தெற்காசிய சமூகத்தை இன்று எச்சதித்துள்ளனர்.

மோசடி இதுதான்

1) கனடாவின் குடிவரவு அதிகாரியாக தன்னை அடையாளப்படுத்தி ஒருவர் உங்களை தொலைபேசி மூலம் தொடர்புகொள்வார்.

2) உங்களது நிரந்தர குடியுரிமை அட்டை (Permanent Resident Card) காலவதியாகிறது எனவும் அதனை புதுப்பிக்க வேண்டும் எனவும் அவர் கூறுவார்.

3) நீங்கள் ஒரு குறிப்பிட்ட தொகை பணத்தை பணமாற்று முகவர்கள் ஊடாக தன்னிடம் அனுப்பி வைப்பதன் மூலம் தன்னால் உங்கள் நிரந்தர குடியுரிமை அட்டையை புதுப்பிக்க முடியும் என கூறுவார்.

4) உங்கள் பணம் கையில் கிடைக்கும்வரை பலமுறை உங்களைத் தொடர்புகொள்ளும் ”குடியவரவு அதிகாரி” உங்கள் பணம் கிடைத்தவுடன் தலைமறைவாகிவிடுவார்.

இதுபோன்று உங்களுக்கும் தொலைபேசி அழைப்புக்கள் வந்தால் அருகில் உள்ள காவல் நிலையம்வரை ஒரு நடைசென்று அவர்கள் காதில் இதை போட்டுவிடுங்கள். அல்லது ரொறன்ரோ காவல்துறையினரை பின்வரும் வழிமுறைகளில் தொடர்புகொள்ளலாம்.

Detective Colin Stewart @ 416-808-2300
Crime Stoppers anonymously @ 416-222-TIPS (8477), 
www.222tips.com

உங்கள் குடியுரிமை குறித்த கேள்விகளை நீங்கள் நேரடியாக கனடிய குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் ஊடாகவோ அல்லது உங்கள் குடியுரிமை நாட்டின் தூதரகங்கள் ஊடாகவோ இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

Canadian Immigration & Citizenship 1-888-242 2100 
www.cic.gc.ca

உங்கள் உறவினர் நண்பர்களுடன் இந்தத் தகவலை பகிர்ந்து கொள்ளுங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆகஸ்ட் 25: விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் நினைவு தினம் இன்று.

11949383_175006189497495_732329744845507

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் நண்டு வாங்கும் போது (படத்தில் நண்டின் மேல் உள்ள சிறு ஓட்டையை கவனிக்கவும்..!)இப்படி சிறு துவாரம் கண்ணில் பட்டால் வாங்காதீர்கள். இப்படிப் பட்ட நண்டுகள் சைனாவில் இருந்து இறக்குமதியாகின்றன.

இந்த நண்டுகள் பார்க்கும் போது, புதியதாய் இருக்க வேண்டுமென்ற நோக்குடன்.. நமது உடலுக்கு தீங்கு செய்யும் மருந்துகளை இஞ்ஜக்ஷன் போட்டு, விற்பனைக்கு அனுப்பி வைக்கிறார்கள். !!

உண்மையில் நாம்... சீன உணவுகளையே, நாம் தவிர்க்க வேண்டும்.
அண்மையில்... இங்கு ஒரு சீனா உணவகத்தில், 
காலாவதியான.... கேட்டுப் போன கோழிகளை அழிக்கும் இடத்திலிருந்து....
அந்தக் கோழிகளை எப்படியோ.... எடுத்து, சமைத்து கண்டு பிடிக்கப் பட்டு, அந்த உணவகத்தை சீல் வைத்து விட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

So cute with those sad puppy dog eyes and faces..

11061234_1643952632488976_61081536300513

நல்ல குட்டி நாய். ஊரில் ஆண் & பொண் நாய்கள் வளர்ந்தனான், அப்ப பல குட்டிகள் வீட்டில்ல
ஓடித் திரியும், ஆசையாக வளர்த்துக்கொண்டிருக்க, யாராவது உறவினர்களுக்கு அம்மா
கொடுத்திடுவா, அந்த குட்டிகளின் பிரிவை தாங்க சில நாட்களாகும், இங்கும் வளர்க்க
ஆசை பிள்ளைகள் வளர்ந்தபின் வளர்க்க வேண்டும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆகஸ்ட் 27: நவின அஞ்சல் முறையை அறிமுகப் படுத்திய ரோலண்ட் ஹில் மறைந்த நாள் இன்று.'
1837 ஆம் ஆண்டு, தனது 42 ஆவது வயதில் "தபால் அலுவலகச் சீர்திருத்தம்: இதன் முக்கியத்துவமும் நடைமுறைச் சாத்தியமும்" ("Post Office Reform: its Importance and Practicability") என்ற அவரது பிரபலமான பிரசுரத்தை வெளியிட்டார். இப் பிரசுரத்தில் அவர் அதிகாரப்பூர்வ, முன்னரே அச்சடிக்கப்பட்ட கடித உறைகளையும், ஒட்டத்தக்க தபால்தலைகளையும் வெளியிடவேண்டிய அவசியத்தை எடுத்துக்காட்டினார்

 
Sahana Sahana's photo.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வீரமங்கை செங்கொடியின் 4ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சாவு ஒறுப்பு அளிக்கப்பட்ட சாந்தன்,முருகன் மற்றும் வேரறிவாளன் ஆகியோரின் உயிர்காக்க தன்னுயிரை ஈகம் செய்த "வீரமங்கை" செங்கொடியின் 4ம் ஆண்டு வீரவணக்கம் நாள் இன்றாகும்.

சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் சாவு ஒறுப்பை நிறைவேற்ற இந்திய அரசு முயன்றவேளை அம்மூவரையும் காப்பாற்றும் நோக்குடன் 28.08.2011 அன்று காஞ்சிபுரம் தாலுகா பணிமனையின் முன்பு தன்னுடலில் தீமூட்டி வீரமங்கை செங்கொடி ஈகைச்சாவடைந்தார்.

தன் இன உறவுகள் மூவரின் உயிர்காக்க தன்னுயிரை ஆகுதியாக்கிய இந்த வீரமங்கைக்கு சீரம் தாழ்ந்த இதய அஞ்சலிகள்.

11902560_10156077162640637_4616435256954

 

 

11947673_743246912446040_465355551531813

11232129_743246932446038_646424527303628

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

616996_449535261757616_1834410098_o.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

அலெஸ்ட்டீடீ (Alestidae fish) 

பிரிசினசு லொங்கிப்பின்னிசு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தண்ணீரை பூமிக்குள் தேடுவது ஆபத்து; அதை வானத்தில் இருந்து வரவழைக்க செய்.. 

- நம்மாழ்வார்

11904695_1673027509579868_18959726896423

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அனைத்துலக காணாமற்போனோர் நாள் (International Day of the Disappeared) ஆகஸ்ட் 30 ஆம் நாளன்று உலகெங்கும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. உலகின் பல நாடுகளிலும் காவற்துறையினராலோ அல்லது பாதுகாப்புப் படையினராலோ பல்வேறு காரணங்களுக்காகவும் கைது செய்யப்பட்டு காணாமற்போவோர் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக இந்நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது. கொஸ்டா ரிக்காவில் 1981 இல் தொடங்கப்பட்ட கைதாகிக் காணாமற்போவோரின் உறவினர்களின் கூட்டமைப்பு (Federation of Associations for Relatives of the Detained-Disappeared, FEDEFAM) என்ற அரசு சார்பற்ற அமைப்பினால் இலத்தீன் அமெரிக்காவில் இரகசியமான முறையில் கைது செய்யப்படலை எதிர்த்து இக்கோரிக்கை முதன் முதலில் விடுக்கப்பட்டது.

அனைத்துலக மனித உரிமை அமைப்புகள் குறிப்பாக அனைத்துலக மன்னிப்புச் சபை, மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பு, செஞ்சிலுவைச் சங்கம் ஆகியன இந்த இரகசியக் கைதுகளுக்கு எதிராக அதிக அக்கறை எடுத்துச் செயற்படுகின்றன. "அனைத்துலக காணாமற்போனோர் நாள்" இந்த அமைப்புகளின் சேவை குறித்து பொதுமக்களுக்கு விளக்கவும் அவர்களுக்கு இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நிதி மற்றும் தன்னார்வலர்களை சேர்ப்பதற்கும் உதவுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

வீரமங்கை செங்கொடியின் 4ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சாவு ஒறுப்பு அளிக்கப்பட்ட சாந்தன்,முருகன் மற்றும் வேரறிவாளன் ஆகியோரின் உயிர்காக்க தன்னுயிரை ஈகம் செய்த "வீரமங்கை" செங்கொடியின் 4ம் ஆண்டு வீரவணக்கம் நாள் இன்றாகும்.

சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் சாவு ஒறுப்பை நிறைவேற்ற இந்திய அரசு முயன்றவேளை அம்மூவரையும் காப்பாற்றும் நோக்குடன் 28.08.2011 அன்று காஞ்சிபுரம் தாலுகா பணிமனையின் முன்பு தன்னுடலில் தீமூட்டி வீரமங்கை செங்கொடி ஈகைச்சாவடைந்தார்.

தன் இன உறவுகள் மூவரின் உயிர்காக்க தன்னுயிரை ஆகுதியாக்கிய இந்த வீரமங்கைக்கு சீரம் தாழ்ந்த இதய அஞ்சலிகள்.

11902560_10156077162640637_4616435256954

 

 

11947673_743246912446040_465355551531813

 

செங்கொடியின் நினைவு நாளை... நினைவு கூர்ந்த யாயினிக்கு நன்றி.
யாழ்களத்தில்.... வேறு எங்கும் அவரை நினைவு கூரப் படவில்லை என்பது கவலையான விடயம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தில் மிகப்பழமையான பத்து மொழிகளை Worldblaze இணையத்தளம் வரிசைப்படுத்தியிருக்கிறது. அந்த இணையத்தளம் தந்தவற்றை அப்படியே தருவதுடன், அது வரிசைப்படுத்தியதையும் உங்களுக்கு என் மொழியில் தருகிறேன்.

உலகில் பேசப்படும்/பட்ட மிகப்பழமையான முதல் பத்து மொழிகள்
Top 10 Oldest Languages in the World

சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மொழியானது தோன்றியிருந்தாலும், கிட்டத்தட்ட 6000 மொழிகள் தற்போது உலகெங்கும் பேசப்பட்டு வருகின்றன. இந்த மொழிகளில் பழைய மொழிகள் எவையென்பதைக் கண்டுபிடிப்பதில் பல சிரமங்கள் இருக்கின்றன. எங்களால் உருவாக்கப்பட்ட வரிசை இது.

10 வது இடத்தில் லத்தீன் மொழி (Lattin)

ரோம சாம்ராஜ்ஜியத்தில், லத்தீன் மொழி பரவலாகப் பேசப்படதாகக் கருதப்படுகிறது. அது கி.மு.75 ஆண்டு அளவுகளில் உருவாகியிருக்கலாம்.

9 வது இடத்தில் ஆர்மேனியன் மொழி (Armenian)

இந்தோ-ஐரோப்பிய மொழியாகக் கருதப்படும் ஆர்மேனிய மொழி, கி.மு. 450 வருட அளவில் தோன்றியிருக்கலாம்.

8 வது இடத்தில் கொரியன் மொழி (Korian)

கொரியன் மொழி கி.மு.600 ஆண்டளவில் உருவாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

7 வது இடத்தில் எபிரேய மொழி (Hebrew)

இஸ்ரேலில் அங்கீகாரமுள்ள மொழியான, எபிரேய மொழி கி.மு.1000 ஆண்டுகள் பழமையானது என்கிறார்கள்.

6 வது இடத்தில் அராமிக் மொழி (Aramaic)

அரபு மொழி, எபிரேய மொழி ஆகிய இரண்டுக்கும் அடிவேராக இருந்த மொழி அராமிக் மொழியென்று சொல்கிறார்கள். இது கி.மு.1000 ஆண்டுகளுக்கு முந்தைய காலங்களில் உருவாகியிருக்கிறது.

5 வது இடத்தில் சீன மொழி (Chinese)

சீனர்களாலும், சுற்றுப் பிரதேச மக்களாலும் பேசப்பட்டுவந்த இந்தச் சீன மொழி, கி.மு.1200 வருடங்களுக்கு முன்னர் உருவாகியிருக்கலாம்.

4 வது இடத்தில் கிரீக் (Greek)

கிரேக்க தேசத்திலும் அதைச் சுற்றியுள்ல பிரதேசங்களிலும் கி.மு.1450 ஆண்டளவுகளில் கிரேக்க மொழி உருவாகியிருக்கலாம்.

3 வது இடத்தில் எகிப்து மொழி (Egyptian)

ஆஃப்ரோ-ஆசிய மொழியாகக் கருதப்படும் எகிப்திய மொழி, கி.மு. 2600 ஆண்டளவுகளில் உருவாகியிருக்கலாம்.

2 வது இடத்தில் சமஸ்கிருத மொழி (Sanskrit)

இந்தியாவில் உருவான சமஸ்கிருத மொழி, பல ஐரோப்பிய மொழிகளுக்கு அடிப்படையானது. ஆனால் இதே மொழி தமிழ் மொழியை அடிப்படையாகக் கொண்டது. இது கி.மு. 3000 ஆண்டளவுகளில் உருவாகியிருக்கலாம்.

1 வது இடத்தில் தமிழ் மொழி (Tamil)

5000 ஆண்டுகளுக்கு மேல் பழைமயான மொழி தமிழ் மொழியாகும். இன்றுவரை உயிர்ப்புடன் இருக்கும் பழைய மொழிகளில் தமிழ் முன்னணியில் உள்ளது.

 

 
safe_image.php?d=AQCw3YOqJMbxkTkK&w=470&
There are about 6000 languages that exist today. Language began thousands of years ago and determining the oldest of them is a hot debate. Researchers
WORLDBLAZE.IN
 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.