Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனீவாப் பேரணியில் இனப்படுகொலையாளர் ராஜபக்ச மற்றும் சுப்பிரமணியம் சுவாமி ஆகியோரது கொடும்பாவிகள் எரிப்பு!! படங்கள்

Featured Replies

ஜெனீவாவில் நடைபெற்ற இன அழிப்புக்கான நீதி கேட்கும் பேரணியில் இனப்படுகொலையாளன் மகிந்த ராஜபக்ச மற்றும் சும்பிரமணியம் சுவாமி ஆகியோரது கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன.

tamils_demonstraion_geneva.25.png

tamils_demonstraion_geneva.26.png

  • கருத்துக்கள உறவுகள்

வீதிகளின் நடுவில், இப்படியான கொடும்பாவி எரிப்புகளை....  விரும்பமாட்டார்கள்.
இப்படியான் சம்பவங்கள், எமக்கு கிடைக்கும் சொற்ப ஆதரவையும், இல்லாமல் போகச் செய்துவிடும்.

இப்படி அரைவேக்காட்டுத்தனமான செயல்கள்தான் இன்னும் வெளிநாட்டவர்களை எம்மை விட்டு மேலும் விலகச்செய்யும். இப்படித்தான் இங்கும் கனடாவில் இறுதிப்போர் நேரம் ஒரு பெருந்தெருவை மறித்து ஆர்ப்பாட்டம் செய்யப்போய் அனைத்து பத்திரிகை தொலைக்காட்சிகளிலும் எம்மை காய்ச்சி எடுக்க செய்தார்கள். கடைசியில  terrorist protest எண்டு பெயரும் கிடைச்சிது. 

  • தொடங்கியவர்

அப்ப பேசாமல் உங்களை மாதிரி வீட்டில இருந்த எங்களுக்கு தீர்வு கிடைக்குமோ

  • கருத்துக்கள உறவுகள்

போராடுங்கள் என்பதே எமக்கு விடுக்கப்படும் அறைகூவல். அதனையே மேடையில் கிங்க்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் கலாநிதி கிகேன் பொற்ரம் அவர்களின் உரையும் சுட்டியது. ஆனால் போராட்டத்திற்கான சூழலையும் தக்கவைக்கும் வகையிலே போராட்டங்கள் அமையவேண்டுமென்ற ஆதங்கமே. பலபேரின் முணுமுணுப்பாகவிருந்தது. உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாத ஒரு இயல்பான எழுகை நிகழ்வது இயல்பானது. ஐநா முன்றலில் எமது தேசவிடியல் கிடைக்கும் வரை கூட வேண்டிய நாம் அந்த இடத்தை அவர்கள் எமக்குத் தரும் வகையிலும் நடந்துகொள்ள வேண்டுமல்லவா?

அப்ப பேசாமல் உங்களை மாதிரி வீட்டில இருந்த எங்களுக்கு தீர்வு கிடைக்குமோ

போராடப் போய் போராட்டத்திற்கு பாதகமான செயல்களை செய்வதை விட போராட போகாமலே இருப்பது நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

அறப்போராட்டத்துக்கான அனுமதி  எடுக்கப்பட்டு நடைபெறும் இது   போன்ற போராட்டங்களில்

இவை எதிர் விளைவுகளைத்தராது.

இங்கு நடக்கும்  எல்லா  நாட்டு  போராட்டங்களிலும் (பிரெஞ்சு மக்கள் உட்பட) இது   போன்ற நிகழ்வுகள்  நடப்பது வழமை..

செய்யும் மக்களின் மனநிலையை  புரிந்தே அனுமதி  கொடுப்பார்கள்..

எத்தனையோ போராட்டங்களையும்

ஆர்ப்பாட்டங்களையும் சந்தித்த பூமி இது.

இவை  தவிர்க்கமுடியாதவை என  அவர்களுக்குத்தெரியும்

எமது வரலாற்றை  அறிந்த மக்களுக்கும் தெரியும்....

எதிர்மாறான விளைவுகளைத்தருமாக இருந்தால்

எம்முடன் சேர்ந்து  இயங்கும் வேற்று நாட்டவர்கள்

அரச  ஊழியர்கள்

மக்கள் பிரதிநிதிகள் அதை தவிர்க்கச்சொல்வர்..

இதுவரை அவ்வாறு சொன்னதாக தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

100  தரம் போய்

அமைதியாக இருந்து

எதுவும் நடக்காதவனின் மனநிலையை  எல்லோராலும் புரிந்துவிடமுடியாது அண்ணைமார்  :(

நீங்க வாயால வடையைச்சுடமுடியும் என்ற கட்சி........

நான் நூறு  தரம் போய் எதுவுமே நடக்கவில்லை என்று நிற்பவனின் கட்சி.....

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

வீதிகளின் நடுவில், இப்படியான கொடும்பாவி எரிப்புகளை....  விரும்பமாட்டார்கள்.

இப்படியான் சம்பவங்கள், எமக்கு கிடைக்கும் சொற்ப ஆதரவையும், இல்லாமல் போகச் செய்துவிடும்.

அனுமதி பெற்று செய்திருக்கலாம் அல்லவா..???! லண்டனில் பொலிஸ் அனுமதியோடு மகிந்தவின் கொடும்பாவி.. அவர் லண்டனுக்கு வந்திருந்த போது எரிக்கப்பட்டதை.. இங்கு உதாரணமாகக் காட்டலாம்.

கூடிய அளவு ஜனநாயகம் பேணும்.. நாடுகள் மக்களின் உண்மையான உணர்வுகள் வெளிப்படுவதை தடுப்பினம் என்று நினைக்கவில்லை.

உங்கள் இந்தக் கருத்தை மையமாக வைத்து தமிழர்கள் எனி சிங்களவனுக்கு எதிராக சுட்டு விரலும் நீட்டக் கூடாது என்கின்ற சிங்கள அடிவருடித் தமிழர்கள் இங்கு வறுத்துக்கொட்டுகிறார்கள். 

உண்மையில் இந்தப் போராட்டக்காரர்களுக்கு மிக்க நன்றி. எவ்வளவே சிரமங்களோடு ஒன்றுகூடி இதனைச் செய்கிறார்கள் என்பதே பெரிய விடயம். :icon_idea:

Edited by nedukkalapoovan

மற்றயவர்கள் ஜனநாயகம் பேணவேண்டும். ஆனால் நாங்கள் எமக்கு எதிர்கருத்திடுபவர்களை கேவலமாக வசைபாடுவோம். 
- இப்படிக்கு தமிழ் தேசியத்தை குத்தகைக்கு எடுத்த அல்லக்கை தமிழர்கள்   :D
 
(மற்றைய கருத்தாளர்களை மதிக்காமல் அடிவருடி, எலும்பு பொறுக்கி என்று எழுதினால் அவர்களிடம் இருந்த்தும் அதே பதில்தான் கிடைக்கும்)  :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.