Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவத்தினரில் 15 சடலங்களை கைப்பற்றியுள்ளோம் - எழிலன்

Featured Replies

கொல்லப்பட்ட 50 இராணுவத்தினரில் 15 சடலங்களை கைப்பற்றியுள்ளோம்: சி.எழிலன்

[சனிக்கிழமை, 7 ஒக்ரொபர் 2006, 08:05 ஈழம்] [திருமலை நிருபர்]

வாகரை பனிச்சங்கேணி ஆக்கிரமிப்பு முயற்சி முறியடிப்பு சமரில் கொல்லப்பட்ட 50-க்கும் மேற்பட்ட இராணுவத்தினரின் 15 சடலங்களை கைப்பற்றியுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் தெரிவித்துள்ளார்.

20061006002.jpg

இது குறித்து "புதினம்" செய்தியாளருக்கு சி. எழிலன் அளித்த நேர்காணல்:

சிறிலங்கா இராணுவத்தினர் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் கடல் மற்றும் வான் படைகளின் தாக்குதல் துணையுடன் ஆட்டிலெறி மற்றும் பல்குழல் ரொக்கட் தாக்குதல்களுடன் பெருமெடுப்பில் பனிச்சங்கேணியை நோக்கி வலிந்த தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

20061006003.jpg

கடல் வழி தரையிறக்கமுயற்சியும் சிறிலங்கா இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு எதிராக தமிழீழ விடுதலைப்புலிகள் தீவிர தாக்குதலை நடத்தி சிறிலங்கா இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பை முறியடித்து அவர்களை பழைய நிலைகளுக்கு விரட்டியடித்தனர்.

இதில் 50-க்கும் அதிக இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட இராணுவத்தினரில் 15 பேரின் சடலங்கள் நேற்று இரவு வரை கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் உயிருடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறிலங்கா இராணுவத்தினரின் ஆயுதத் தளபாடங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சடலங்களை கையளிப்பதற்காக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக்குழு மற்றும் இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக்குழு ஆகியவற்றுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார் சி.எழிலன்.

படங்கள்: திருமலையிலிருந்து எ.சண்முகம்

http://www.eelampage.com/?cn=29195

  • தொடங்கியவர்

சிறப்பு அதிரடிப்படையினரின் (SF) உடல்கள் போல இருக்கிறது... கையில் உறைகளை போட்டுக்கொள்ள சாதாரண படைவீரர்களுக்கு கொடுக்க படுவதில்லை என நினைகிறேன்...!

  • தொடங்கியவர்

பனிச்சங்கேணி மோதலில் 8 படையினருக்கு காயம் - பிரசாத் சமரசிங்க.

பனிச்சங்கேணிப் பகுதியில் நேற்று இடம்பெற்ற மோதலில் தமது தரப்பில் 8 பேர் மட்டுமே காயமடைந்துள்ளதாக சிறீலங்கா படைத்துறைப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் கூறுவதுபோது 30 படையினர் கொல்லப்படவில்லை என்றும் நேற்றை தாக்குதலானது மாங்கேணிப் பகுதியில் உள்ள முன்னணி அரண்கள் மீது விடுதலைப் புலிகள் தாக்குதலைத் தொடுத்துள்ளதாகவும் அதனையடுத்தே படையினர் தாக்குதலைத் தொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

நேற்றை மோதலில் விடுதலைப் புலிகள் தரப்பில் 20 பேர் தொடக்கம் 25 பேர் வரையில் உயிரிழந்திருக்கலாம் என தெரிவித்த சமரசிங்க தற்காப்பு மோதலில் முப்படையினரும் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனால் தங்கள் தரப்பில் 8 பேருக்கு காயம் என்று கூறுகிறார் சிறீலங்கா படைத்துறைப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க. இதைத்தான் சிங்கள மக்களும் மற்றும் முட்டாள் வெள்ளையவனும் நம்புவார்கள். இவர்களுக்கெல்லாம் படம் எடுத்து காட்டணும் (கொல்லப்பட்ட இராணுவத்தினரில் 15 பேரின் சடலங்களை). :evil:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Sri Lanka declines to recieve bodies of dead soldiers, captured soldier talks to media ->

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19837

உண்மை தானே இராணுவத்தினரை இப்போது ஒட்டுக்குழு உறுப்பினர் என்றால் தான் இராணுவத்துக்கே புரியும் இலங்கையில் இராணுவம் இல்லை

07_10_06_vaharai_03.jpg

07_10_06_vaharai_05_435.jpg

07_10_06_vaharai_04.jpg07_10_06_vaharai_01.jpg

பாவம் இப்ப ரம்புகெல...புலிகளின் 11 பேருடய உடல்களை

தாம் எடுத்ததாக ஏறி இருந்து சொன்னவர் இப்ப ஆதரத்துடன் 15

பெயருடய சடலங்களும் . 1 வரையும் சிறை பிடித்துள்ளார்கள்....

இப்ப பாவம் பெரிய பாடு பட்டு முளு புசனிக்காய

சோத்துக்குள் புதைப்பார்

இது தானே அவரின் வேலை...

ஏக காலத்தில் புலிகள் படைக்கு கொடுத்த

மரண அடி...

ஆக...எம் தமிழர் மாறி மாறி கதைச்சவயளுக்கு

இது நல்ல பாடமும் கூட....

பலிகளின் மதி நுட்பத்தை சரியாக

முடிந்தவரை கணக்கிட்டால்

இவ்வாறான குழப்பங்கள் எம்மவரிடை வராது...

நன்றி

- வன்னி மைந்தன் -

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Sri Lanka declines to recieve bodies of dead soldiers, captured soldier talks to media ->

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19837

400 இராணுவத்தினர்- 80 து.இரா.குழுவினருடன் மேற்கொள்ளப்பட்ட வாகரை ஆக்கிரமிப்பு முயற்சி முறியடிப்பு- 11 போராளிகள் வீரச்சாவு: எழிலன்

[சனிக்கிழமை, 7 ஒக்ரொபர் 2006, 16:52 ஈழம்] [ம.சேரமான்]

தமிழீழ நிர்வாகப் பகுதியான வாகரை பனிச்சங்கேணி பிரதேசத்தை ஆக்கிரமிக்க 400 சிறிலங்கா இராணுவத்தினரும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவைச் சேர்ந்த 80 பேரும் ஈடுபடுத்தப்பட்டனர் என்றும் இந்த ஆக்கிரமிப்பு முறியடிக்கப்பட்ட சமரில் 11 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர் என்றும் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளர் சி. எழிலன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் எழிலன் கூறியுள்ளதாவது:

வாகரை வலிந்த தாக்குதலில் 400 சிறிலங்கா இராணுவத்தினரும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினர் 80 பேரும் ஈடுபடுத்தப்பட்டனர்..

இந்த முறியடிப்புச் சமர் சிறப்பு தளபதி கேணல் சொர்ணம் வழிகாட்டுதலின் கீழ் நடத்தப்பட்டது.

எம்மால் கைது செய்யப்பட்டுள்ள சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த கெமுனு வாட்ச் 6ஆம் படையணியின் கே.எம்.எஸ். ரட்ணநாயக்க (வயது 31) (S400714), நுவரெலியா ரிக்கிலிகம பகுதி பனங்கமுவவைச் சேர்ந்தவராவார். அவரது வயிறு, முழங்கால் ஆகிய பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சமரில் 50க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்ட இராணுவத்தினரில் 9 பேரின் உடல்களைப் பெற்றுக் கொள்ள சிறிலங்கா அரசாங்கம் மறுத்துவிட்டது.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரிடம் இராணுவத்தினரது உடல்களை ஒப்படைப்பதாக நாம் தெரிவித்தோம். ஆனால் உடல்களை பெற்றுக் கொள்ள மறுத்துவிட்டனர்.

முறியடிப்புச் சமரில் வீரச்சாவடைந்த ஒரு போராளியின் உடலை ஒப்படைக்க உள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த முறியடிப்புத் தாக்குதலில் மொத்தம் 11 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். சிறிலங்கா இராணுவத்தினரால் 12 போராளிகளினது வித்துடல்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுவது உண்மையல்ல.

பனிச்சங்கேணி மற்றும் வாகரை பகுதியில் சிறிலங்கா இராணுவ எறிகணைத் தாக்குதலில் இரு பொதுமக்கள் கொல்லப்பட்டுளனர்.

சிங்கபுர இராணுவ முகாமிலிருந்து கட்டுமுறிவு நோக்கி திசை திருப்புவதற்காக ஒரு நடவடிக்கையை இராணுவத்தினர் மேற்கொண்டனர்.

பனிச்சங்கேணியில் தரையிறக்க முயற்சி மேற்கொண்ட கடற்படையினரை தமிழீழ கடற்படையினர் விரட்டியடித்தனர்.

சிறிலங்கா இராணுவத்தினரிடமிருந்து கைப்பற்றப்பட்ட

இரு 100 எறிகணைகளுடன் 81 எம்.எம். மோர்ட்டார்கள், எறிகணைகளுடன் ஒரு 60 எம்.எம். மோர்ட்டார், 10 ரொக்கெட் புரொபெல்ட் கிரேனெட் லாஞ்சர்கள், பி.கே.எல்.எம்.ஜி.எஸ்., ஏ.கே.எல்.எம்.ஜிகள், ஏ.கே.47 துப்பாக்கிகள் மற்றும் பெருந்தொகையான ஆயுதங்கள் வாகரையில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன என்றார் எழிலன்.

புலிகளால் கைது செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த கே.எம்.எஸ். ரட்ணநாயக்க இந்த ஆக்கிரமிப்பு முயற்சி தொடர்பில் கூறியதாவது:

வாகரையை ஆக்கிரமிக்கும் நோக்கத்துடன் 300க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் உள்நுழைந்தோம். கஜுவத்த இராணுவ முகாமிலிருந்து ஏ-15 வீதியூடாக விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிக்குள் நுழைந்தோம். பனிச்சங்கேணி கடற்பிரதேசத்தில் கடற்படையும் எமது அணியுடன் இணைந்தது.

வயது குறைந்த சிறார்கள் உட்பட 80க்கும் மேற்பட்ட துணை இராணுவக் குழுவினரையும் எமது வழிகாட்டுதலின் கீழ் இணைத்துக் கொண்டோம். அவர்களும் இராணுவச் சீருடையை அணிந்திருந்தனர். அவர்களை அடையாளம் காண்பதற்காக அவர்கள் கைகளில் பச்சை பட்டை அணிவிக்கப்பட்டிருந்தது என்றார் அவர்.

அடையாளம் காணப்பட்டுள்ள சிறிலங்கா இராணுவத்தினரது உடல்கள் விவரம்:

- லான்ஸ் கோர்பொரல் ஏ. பிரேமசந்திர (S413527), அத்துலபுர, ரக்குவன, ரத்னபுரி

- சேர்ஜெண்ட் ஆர்.டி. அத்துலகுமார (S41398151), கத்துவக, கொட்டுபிட்டிய, வெலிமத, நுவரெலிய

- சேர்ஜெண்ட் எஸ்.என்.டி. பண்டாரநாயக்க (S418182) ககலவதுர, நிவாச, தொலசவௌ. ரத்தினபுரி

- S413951 (யெஅந ழெவ யஎயடையடிடந)

- S406842 (பெயர் வெளியாகவில்லை)

- S413527 (பெயர் வெளியாகவில்லை)

- S413250 (பெயர் வெளியாகவில்லை)

மேலும் துணை இராணுவக் குழுவைச் சேர்ந்த 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

படுகாயமடைந்திருந்த சேர்ஜெண்ட் பண்டாரநாயக்க என்பவர் விடுதலைப் புலிகளின் சிகிச்சையில் இருந்த போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

http://www.eelampage.com/?cn=29198 - புதினம்

நல்ல அடி போல இருக்கு ஆனால் எனது அறிவுக்கு கிட்டியபடி பெரும் திருவிழா ஒன்ரு காத்திருப்பதாக தெரிகின்ரது

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம எப்ப அந்த திருவிழா தொடங்க போது...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம்ம எப்ப அந்த திருவிழா தொடங்க போது...

பெரும்பாலும் தேசியத்தலைவரின் மாவீரர்தின உரையின் பின் பாரிய மாற்றங்கள் எற்பட வாய்ப்புக்கள் உள்ளன. அதைத்தான் எல்லோரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்க

வெற்றிக்களிப்பில போச்சுவார்த்தையில் ஈடுபாடு காட்டாது துள்ளிக்குதித்த சிறீலங்காவிற்கு சர்வதேச சமூகத்தின் சார்பில் புலிகள் (இராணுவரீதியில்) பக்குவமாக ஒரு குட்டுப் போட்டிருக்கிறார்கள்.

இதுக்கு கை கால் காது மூக்கு வைச்சு திருவிழான தீர்த்தம் எண்டு ஆள் ஆளுக்கு திருப்பி வெளிக்கிடாதேங்கோ. :roll:

நேற்றோ படையள் கிழக்கு தீமோரில செய்த மாதிரி உங்களுக்கு பிறகு திருவிழா எடுக்கும். நீங்கள் மிக சிறிய பலவீனமான இனம். அனபடியா சமாதானம் எண்டு ஒப்பாரி வைக்கிறது சரணாகதி ஆகாது. இல்லாட்டி அத்திவாரத்திற்கே ஆப்புத்தான் :P :wink: :idea:

[[[[நீங்கள் மிக சிறிய பலவீனமான இனம். அனபடியா சமாதானம் எண்டு ஒப்பாரி வைக்கிறது சரணாகதி ஆகாது. இல்லாட்டி அத்திவாரத்திற்கே ஆப்புத்தான்]]]

:twisted: நீங்கள்???

  • தொடங்கியவர்

[[[[நீங்கள் மிக சிறிய பலவீனமான இனம். அனபடியா சமாதானம் எண்டு ஒப்பாரி வைக்கிறது சரணாகதி ஆகாது. இல்லாட்டி அத்திவாரத்திற்கே ஆப்புத்தான்]]]

:twisted: நீங்கள்???

இதுதான் மற்ற பகுதிகளில சிலர் வைக்கிற ஒப்பாரிகளையும் படிக்க வேணும் எண்டது...

பேசாமல் சமாதானம் எண்டு சத்தம் போடுறது நல்லது...

படுகாயமடைந்திருந்த சேர்ஜெண்ட் பண்டாரநாயக்க என்பவர் விடுதலைப் புலிகளின் சிகிச்சையில் இருந்த போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

நல்ல விசயம். பிடிச்ச மற்ற நாயையும் அடிச்சு சாகடிக்க வேணும். சும்மா எங்கட சனத்தின்ர காசில சோறு போடக்கூடாது. தேவை இல்லாத செலவு. :evil: :evil: :evil:

kurukaalapoovan:- நீங்கள் மிக சிறிய பலவீனமான இனம்!

Panangkai:- நீங்கள்?

Thala:- பேசாமல் சமாதானம் எண்டு சத்தம் போடுறது நல்லது...

Panangkai:- :roll:

kurukaalapoovan:- நீங்கள் மிக சிறிய பலவீனமான இனம்!

Panangkai:- நீங்கள்?

Thala:- பேசாமல் சமாதானம் எண்டு சத்தம் போடுறது நல்லது...

Panangkai:- :roll:

பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது, குறுக்கால போவான் எழுதிறது இப்படித் தான், அவர் இங்க ஒரு சில பேருக்கு விளங்கிற மாதிரித் தான் பொடி வச்சுத் தான் எழுதுவார், உதெல்லத்தையும் கண்டு குளம்பாதையுங்கோ? :wink: :lol:

மாங்கேணி சமரில் 12 இராணுவத்தினரைக் காணவில்லை: சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு

ஜஞாயிற்றுக்கிழமைஇ 8 ஒக்ரொபர் 2006இ 05:24 ஈழம்ஸ ஜம.சேரமான்ஸ

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான மாங்கேணி சமரில் 12 இராணுவத்தினரைக் காணவில்லை என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளதாக தனியார் இலத்திரனியல் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் கவனத்துக்கு பாதுகாப்பு அமைச்சு கொண்டு சென்றதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காணாமல் போன இராணுவத்தினரை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் பாதுகாப்பு அமைச்சு கூறியதாக அந்த ஊடகத்தின் செய்தி கூறுகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான மோதலில் கொல்லப்பட்ட 50 இராணுவத்தினரில் தங்களிடம் உள்ள 9 பேரின் உடல்களைப் பெற்றுக்கொள்ள சிறிலங்கா அரசாங்கம் மறுத்ததாக திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

புஞ்சிபண்டாவும் ஏக்கநாயக்கவும் எங்கள் மண்ணுக்கு உரமாகி உதவுகிறார்கள். நாமோ வேலைவெட்டியில்லாமல் இங்கு குப்பைகொட்டுகின்றோம்............

புலிகள் (இராணுவரீதியில்) பக்குவமாக ஒரு குட்டுப் போட்டிருக்கிறார்கள்

இது புலிகளின் தாக்குதல் அல்ல .......ஊடுரூவிய படையினரை தடுத்து நிறுத்திய எதிர் தாக்குதல் மட்டுமே...... இதன் பிறகாவது இலங்கையரசு பேச்சுவார்த்தைக்கு வராமல் போகுமானால் அவர்களின் தலைவிதி அவ்வளவுதான்..............

12 பேரை காணவில்லையாம்? முகத்தார் கண்டிங்களோ? :P :P :P :P

பனிச்சங்கேணி மோதலில் பலியானோரின் சடலங்களை ஒப்படைப்பதில் நெருக்கடி சிரமத்தை எதிர்நோக்கும் ஐ.சி.ஆர்.சி., கண்காணிப்புக் குழுவினர்

[08 - October - 2006] [Font Size - A - A - A]

மட்டக்களப்பு பனிச்சங்கேணி பகுதியில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மோதலில் கொல்லப்பட்டவர்களது சடலங்களை பொறுப்பேற்று ஒப்படைப்பதில் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமும் நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளன.

வெள்ளிக்கிழமை அதிகாலை வாகரை நோக்கி கஜுவத்தை மற்றும் மாங்கேணி பகுதிகளிலிருந்து படையினர் மேற்கொண்ட மும்முனைத் தாக்குதலில் பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்த மோதலில் கொல்லப்பட்டவர்களில் 12 விடுதலைப் புலிகளது சடலங்களை தாங்கள் கைப்பற்றி வாழைச்சேனை ஆஸ்பத்திரியில் ஒப்படைத்துள்ளதாகவும் இவற்றை புலிகளிடம் ஒப்படைப்பதற்காக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் (ஐ.சி.ஆர்.சி.) கையளிக்கவுள்ளதாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

எனினும், வெள்ளிக்கிழமை மோதலில் தங்கள் தரப்பில் ஒரு போராளியை காணவில்லையெனவும் இந்தப் 12 பேரில் அவரது சடலமிருந்தால், அதனைத் தங்களிடம் ஒப்படைக்குமாறும் அந்தப் போராளியின் கையிலும் உடையிலுமுள்ள இலக்கத்தகட்டு எண்ணையும் புலிகள் ஐ.சி.ஆர்.சி.யிடம் தெரிவித்துள்ளனர்.

இதேநேரம், இந்த மோதலில் கொல்லப்பட்ட படையினரில் 11 பேரதும் கருணா குழுவைச் சேர்ந்த நால்வரதும் சடலங்களை கைப்பற்றியதாக தெரிவித்துள்ள புலிகள் இந்த 15 சடலங்களையும் படைத்தரப்பிடம் ஒப்படைக்கப்போவதாக கூறியுள்ளனர்.

இதற்காக கண்காணிப்புக் குழுவுடனும் ஐ.சி.ஆர்.சி.யுடனும் வெள்ளிக்கிழமை இரவு தொடர்பு கொண்ட புலிகள் இதுபற்றி அறிவித்திருந்தனர்.

நேற்றுக்காலை இந்தச் சடலங்களை எடுத்துச் செல்ல வருவதாக இவ்விரு தரப்பும் கூறிய போதும் இவர்கள் வாகரை செல்வதற்கு படையினர் அனுமதிக்காததால் படையினரின் சடலங்களை ஐ.சி.ஆர்.சி.யினர் கொண்டு செல்லவில்லையென புலிகளின் திருமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எஸ்.எழிலன் தெரிவித்தார்.

இந்தச் சடலங்களில் நான்கு கருணா குழுவினருடையதென்பதை, வெள்ளிக்கிழமை சமரில் காயத்துடன் கைது செய்யப்பட்ட இராணுவச் சிப்பாயான கே.எம்.எஸ். இரத்நாயக்கா (பனங்கமுவ, ரிகிலகஸ்கம- நுவரெலியா) தெரிவித்துள்ளார்.

கருணா குழுவினரும் இராணுவச் சீருடையுடனேயே இருந்தாலும் படையினர் அவர்களை இனங்காண்பதற்கு வசதியாக கருணா குழுவினரின் கையில் பச்சை பட்டி கட்டப்பட்டிருக்குமெனவும் இவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் 15 சடலங்களையும் பொறுப்பேற்க இன்று ஐ.சி.ஆர்.சி.யினர் வந்தால் அவற்றை அவர்களிடம் தாங்கள் ஒப்படைப்போமென எழிலன் தெரிவித்தார்.

இதேநேரம், வாழைச்சேனை ஆஸ்பத்திரியில் தங்களது போராளிகள் 12 பேரது உடல்கள் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக படையினர் கூறுவதை எழிலன் மறுத்துள்ளார்.

காணாமல் போன தங்கள் போராளியின் உடல் இதில் இருந்தால் பெற்றுத்தருமாறு ஐ.சி.ஆர்.சியிடம் கேட்டுள்ளோம்.

ஏனைய சடலங்கள் கருணா குழுவினுடையதாக அல்லது பொதுமக்களினுடையதாயிருக்கலா

இது புலிகளின் தாக்குதல் அல்ல .......ஊடுரூவிய படையினரை தடுத்து நிறுத்திய எதிர் தாக்குதல் மட்டுமே...... இதன் பிறகாவது இலங்கையரசு பேச்சுவார்த்தைக்கு வராமல் போகுமானால் அவர்களின் தலைவிதி அவ்வளவுதான்..............

ஓம் முகத்தார், சிறீலங்கா இராணுவத்தின் ஆக்கிரமிப்பு முயற்சிக்கு கொடுக்கப்பட்ட பதிலடியை தான் "குட்டு" என்றேன். சம்பூர் "வெற்றி" ஆனாது சிறீலங்காவை பேச்சில் நாட்டம் கொள்ள உதவ வில்லை. கருணா பிளவு ஆழிப்பேரலை போன்றவற்றின் பின்னர் புலிகள் பலவீனமாக இருக்கிறார்கள் என்று கணக்கு போட்டு வைத்திருந்த சிறீலங்கா அரசியல் இராணு மட்டங்களிற்கு அதை உறுதி செய்துவிட்டதாக சம்பூர் போய்விட்டது. புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள மேலும் பலபிரதேசங்களை ஆக்கிரமிக்க திட்டங்கள் ஏற்பாடுகளை நடைபெறுகிறது. அதாவது தீச்சுவாலையில் உருவாக்கப்பட்ட இராணு சமநிலை இல்லை புலிகள் பலவீனமாக இருக்கிறார்கள். எனவே நோர்வே மத்தியஸ்தம், அது கொண்டு வந்த யுத்தநிறுத்த உடன்படிக்கை, அதை கண்காணிக்கும் குழு, உதவி வழங்கும் நாடுகளிற்கான இணைத்தலமை போன்ற சர்வதேச வலைப்பின்னல் எல்லாம் இன்று பலவீனமான புலிகளை பாதுகாப்பவையாக தெரிய தொடங்கி இருக்கிறது சிறீலங்காவிற்கு.

2002 இல் விழுந்து கட்டி சர்வதேசம் யுத்த நிறுத்த உடன்படிக்கையை கொண்டு வந்தது தமிழருக்கு தீர்வு கொடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அல்ல. தீச்சுவாலைக்கும் கட்டுநாயக்கவும் அடுத்த தாக புலிகள் இராணுவ மேலாண்மை நோக்கி சென்று விடக்கூடாது என்பதற்கா. சமாதான பேச்சுகளோடு சமாந்தர நிகழ்ச்சி நிரலாக புலிகளை பலவீனமாக்குவதை ரணிலும் சர்வதேசமும் சாதுரியமாக நகர்த்தி வந்தன. சமாதான போச்சுக்களில் புலிகளை பலவீனமாகவும் பயங்கரவாதிகளாகவும் காட்டுவதில் முனைப்புடன் செயற்பட்ட சர்வதேச சக்திகளிற்கு (இந்திய உட்பட) இன்று அதை தொடர முடியாத சங்கடமான நிலை உருவாகி வருகிறது. பலவீனமான புலிகளோடு சர்வதேச மயப்படுத்தப்பட்ட உறவாடல் தேவை இல்லை என்ற இறுமாப்பில் சிறீலாங்கா இருக்கிறது. சர்வதேசத்தை புறந்தள்ளி சிங்கள இனவாதத்தின் இந்த இறுமாப்பு மேலும் அதிகரிக்கும். தமிழர் தரப்பு மீது அடக்கு முறைகளும் அவலங்களும் தொடர்ந்து அதிகரிக்கும். சர்வதேசம் தமது ஈடுபாட்டை தக்க வைக்க புலிகளை நம்பியிருக்க வேண்டிய நிலை உருவாகி வருகிறது. சர்வதேசமட்டத்தில் சிறீலங்கா மீது இராஜதந்திர அரசியல் அழுத்தங்கள் வேலை செய்யாத நிலையில் நோர்வே, இணைத்தலமை நாடுகளும் மற்றும் இந்தியா என்பன எல்லாமே புலிகளின் இராணுவ அழுத்தத்தை நம்பியிருக்க வேண்டிய நிலை ஆகிறது. இது தான் இன்றய இனிவரும் காலத்து சமன்பாடு.

இங்கு பலவீனமாக பார்க்கப்படும் தமிழர் தரப்பின் மொளத்திலும் பொறுமையிலும் ஒரு பலம் இருக்கிறது இன்னொருவடிவில் உருவாகியும் வருகிறது என்றதை உணர்ந்தால் எமது இன்றய இழப்புகளையும் அவலங்களையும் விளங்கிக் கொள்ள உதவும். அனால் இந்த புதிய சமன்பாட்டை எமக்கு சாதகமான முறையில் வைத்து உரிய முறையில் அறுவடை செய்ய வேண்டி பொறுப்பின் ஒரு பெரும்பங்கு புலம்பெயர்ந்துள்ள எம்மவர்களிடம் உண்டு. நாங்கள் அந்த கடமையை சரிவர செய்கிறோமா என்றால் இல்லை. இராணுவ வலுச்சமநிலை இன்னமும் இருக்கா இல்லையா என்ற ஆய்வுகள், அமாவசை வருகுது மழைகாலம் வருகுது திருவிழா தீர்த்தம் வெள்ளம் என்று எமது கற்பனையில் காலத்தை வீணடித்துக் கொண்டு சின்னத்திரையில் வெற்றிச் செய்து வரும் என்று பாத்துக் கொண்டு இருக்கிறறோம். இது ஒரு பரிதாபமான நிலை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

11 இராணுவத்தினரின் சடலங்கள் ஒப்படைப்பு

[ஞாயிற்றுக்கிழமை, 8 ஒக்ரொபர் 2006, 20:02 ஈழம்] [திருமலை நிருபர்]

வாகரைப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்ட சிறிலங்கா இராணுவத்தினர் 11 பேரின் சடலங்கள் இன்று ஒப்படைக்கப்பட்டுள்ளன.

வாகரையில் சிறிலங்கா இராணுவத்தினரால் நேற்று முன்னாள் பாரிய இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்ப்டது. அதனையடுத்து தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய முறியடிப்புச் சமரில் சிறிலங்கா இராணுவம் மற்றும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரின் 14 சடலங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டன.

இவற்றை சிறிலங்கா இராணுவத்தினர் ஏற்க மறுத்ததால் அவை தமிழீழ விடுதலைப் புலிகளாலேயே புதைக்கப்பட்டிருந்தன.

இதேவேளை இன்றும் தமிழீழ விடுதலைப் புலிகளால் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போது மேலும் மூன்று சடலங்கள் மீட்கப்பட்டன.

இந்நிலையில் சடலங்களை ஒப்படைக்குமாறு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், இலங்கைப் போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழு ஆகியவற்றிடம் சிறிலங்கா இராணுவம் விடுத்த கோரிக்கையையடுத்து புதைக்கப்பட்ட சடலங்கள் அகழப்பட்டன.

இச்சடலங்களில் ஆறு துணை இராணுவக் குழுவினருடையது என்பதால் சிறிலங்கா இராணுவத்தினரது 11 சடலங்களும் இன்று ஞாயிற்றுக்கிழமை தமிழீழ விடுதலைப் புலிகளால் கையளிக்கப்பட்டுள்ளன.

வாகரையில் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன், துணைத்தளபதி அறிவு ஆகியோர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் மட்டக்களப்பு போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழு ஆகியவற்றின் பிரதிநிதிகளிடம் சடலங்களை ஒப்படைத்தனர்.

http://www.eelampage.com/?cn=29213 - புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.