Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்னிந்திய விஜய் தொலைக்காட்சி சூப்பர் சிங்கர்கள் கலந்து கொள்ளும் இசை நிகழ்ச்சி மட்டக்களப்பில் நாளை.

Featured Replies

10300891_700412030013437_158907388684096

ticket%2B%282%29.jpg

மட்டக்களப்பு தமிழ்ச்சங்க கட்டட நிதிக்காக தமிழ்ச்சங்கம் வழங்கும் தென்னிந்திய விஜய் தொலைக்காட்சி கலைஞர்களின் 'சுப்பர்சிங்கர் இசை நிகழ்ச்சி' அக்டோபர் 5ம் திகதி மாலை 6.30 மணிக்கு மட்டக்களப்பு விபுலானந்தா இசைநடன பல்கலைக்கழக உள்ளரங்கில் நடைபெறவுள்ளது.

இதில் உலக மக்களை வியக்கவைத்த விஜய் தொலைக்காட்சி கலைஞர்களான திவாகர், நித்தியஸ்ரீ, சரத்சந்தோஷ், சோனியா, வைஜெயந்தி, அழகேசன் ஆகியோர் பாடவுள்ளனர்.

தகவல்: battinews

http://www.battinews.com/2014/09/ticket-center-super-singer-music-concert.html?m=1

Edited by துளசி

  • Replies 69
  • Views 4.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

திருகோணமலையில் இன்று மாலை நடைபெறவிருப்பதாகவும் ஒரு முகநூல் பதிவு பார்த்தேன். அதற்கான செய்தி கிடைத்தால் யாராவது இணைத்து விடுங்கள்.

  • தொடங்கியவர்

தாயக மற்றும் புலம்பெயர் மக்கள் தென்னிந்திய கலைஞர்களை அழைப்பதை விடுத்து எமது கலைஞர்களுக்கு சந்தர்ப்பங்கள் வழங்குங்கள்.

துளசி..உண்மையை சொல்லுங்கள்..நீங்கள் எந்த ஒரு தென்னிந்திய திரைப்படமோ நிகழ்ச்சியோ பார்ப்பதில்லையா?

  • தொடங்கியவர்

துளசி..உண்மையை சொல்லுங்கள்..நீங்கள் எந்த ஒரு தென்னிந்திய திரைப்படமோ நிகழ்ச்சியோ பார்ப்பதில்லையா?

தென்னிந்திய திரைப்படங்கள் பார்த்திருக்கிறேன். நாடகங்கள் எதுவும் பார்ப்பதில்லை. தென்னிந்திய கலைஞர்களை அழைத்து நடத்தும் நிகழ்வுகளில் கலந்து கொண்டதில்லை. இனியும் கலந்து கொள்ளப்போவதில்லை.

ஒரு திரைப்படத்தை தொலைக்காட்சியிலோ youtube இலோ பார்ப்பதற்கும் தென்னிந்திய நடிகர்கள், பாடகர்களை அழைத்து நிகழ்வுகள் செய்வதற்கும் உள்ள வேறுபாட்டை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

நிகழ்ச்சி இனிதே நடைபெற வாழ்த்துக்கள்

என்ன வித்தியாசம்? மக்கள் விரும்புவதால் தான் இவ்வாறான நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. முதலில் சும்மா கண்டதையெல்லாம் புறக்கணிப்பதை நிறுத்துங்கள். புலம்பெயர் தேசங்களில் மாசத்து இரண்டு இவ்வாறன நிகழ்வுகள் அரங்கம் நிறைந்த நிகழ்வுகளாக நடக்கின்றன. 

என்ன வித்தியாசம் என்பது உங்களுக்கு தெரியவில்லையா?

1) தமது திறமைகளை நிரூபிப்பதற்கு அவர்களுக்கான களம் அங்கே உள்ளது. எம்மவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கான களம் இன்னும் சரியாக அமையவில்லை. எனவே வாய்ப்புகளை எமது கலைஞர்களுக்கு வழங்க வேண்டும்.

2) தென்னிந்திய கலைஞர்களை அழைத்து நிகழ்வுகளை வைப்பதன் மூலம் எம்மக்கள் இப்பொழுது ஒரு பிரச்சினையும் இல்லாமல் சந்தோசமாக உள்ளார்கள் என்ற பிரச்சாரத்துக்கு அது பயன்படும்.

உதாரணமாக மக்கள் இவ்வாறான நிகழ்வுகளை விரும்புகிறார்கள் என்று நீங்கள் கூறியதை போல் மற்றவர்களும் நினைப்பார்கள்.

பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்தும் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்க இவ்வாறான நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் மக்களால் தெரிந்தோ தெரியாமலோ மக்களின் பிரச்சினைகள் மூடி மறைக்கப்படுகிறது. போரில் ஏற்பட்ட வலிகளை மறந்து அனைவரும் சந்தோசமாக உள்ளார்கள் என்று காட்டவே அது பயன்படும்.

தென்னிந்திய கலைஞர்களை அழைத்து நிகழ்வுகளை வைக்க வேண்டாம் என்று தாயக மக்களுக்கு கூறிக்கொண்டு புலம்பெயர் மக்கள் மட்டும் நடத்தலாம் என்றில்லை.

புலம்பெயர் மக்களையும் சேர்த்து தான் எனது விமர்சன கருத்தை வைத்திருக்கிறேன்.

நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெறவும், அரசியல் ரீதியில் என்றும் நாம் ஆதரவுக் கரம் கோரி நிற்கும்  எம் தொப்புள் கொடி உறவுகளின் நிலமான தமிழகத்தில் இருந்து வந்த கலைஞர்கள்  நன்கு திறமையை வெளிக்காட்டவும், கிழக்கு மக்கள் ஒரு சில மணி நேரங்களாவது மனம் மகிழவும் என் வாழ்த்துக்கள்.

மிகச்சரியான  கருத்து...

ஈழம்

தமிழகம்  

என்றும்

எதிலும் சேர்ந்து நின்றாலே  வாழ்வு....

மறுபுறம்

வந்து செல்வோர் எல்லாவற்றையும்  பார்த்து  உணர்ந்து காவிச்செல்வர்

என்ன வித்தியாசம் என்பது உங்களுக்கு தெரியவில்லையா?

1) தமது திறமைகளை நிரூபிப்பதற்கு அவர்களுக்கான களம் அங்கே உள்ளது. எம்மவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கான களம் இன்னும் சரியாக அமையவில்லை. எனவே வாய்ப்புகளை எமது கலைஞர்களுக்கு வழங்க வேண்டும்.

எமது கலைஞர்களின் நிகழ்வுகளும் சமாந்தரமாக நடக்கின்றன..நாட்டிலும் புலத்திலும்..ஏதோ தமிழக கலைஞர்களுக்கு மட்டும் தான் களம் உள்ளமாதிரி கதைக்க வேண்டாம். மக்கள் எதை பார்க்க வேண்டும் எதை பார்க்க கூடாது என்று எவரும் கட்டளை இட தேவை இல்லை. 

2) தென்னிந்திய கலைஞர்களை அழைத்து நிகழ்வுகளை வைப்பதன் மூலம் எம்மக்கள் இப்பொழுது ஒரு பிரச்சினையும் இல்லாமல் சந்தோசமாக உள்ளார்கள் என்ற பிரச்சாரத்துக்கு அது பயன்படும்.

மக்கள் சந்தோசமாக இருக்கத்தான் ஆசைப்படுகிறார்கள். அவர்கள் காலம் முழுவதும் அழுதுகொண்டே இருக்க வேணுமா? இல்ல தென்னிந்திய கலைஞர்கள் வராட்டி மக்கள் வேறு ஒரு விழாக்களுக்கோ நிகழ்வுகளுக்கோ செல்லாமல் வீட்டுக்குள்ளயே இருக்கப்போகிறார்களா? உங்கள் வாதப்படி ஊரில ஒரு சந்தோசமான நிகழ்வுகளும் நடக்ககூடாது. அனைவரும் அழுதுவடிந்துகொண்டு இருக்கவேனும். 

உதாரணமாக மக்கள் இவ்வாறான நிகழ்வுகளை விரும்புகிறார்கள் என்று நீங்கள் கூறியதை போல் மற்றவர்களும் நினைப்பார்கள்.

நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மக்கள் இவ்வாறான நிகழ்வுகளை விரும்புகிறார்கள். அது மனித இயல்பு. 

பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்தும் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்க இவ்வாறான நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் மக்களால் தெரிந்தோ தெரியாமலோ மக்களின் பிரச்சினைகள் மூடி மறைக்கப்படுகிறது. போரில் ஏற்பட்ட வலிகளை மறந்து அனைவரும் சந்தோசமாக உள்ளார்கள் என்று காட்டவே அது பயன்படும்.

நல்லூர் திருவிழால யாழ்ப்பாண சனம் அள்ளுப்பட்டு போகேக்க பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகள் எங்க போனது?

தென்னிந்திய கலைஞர்களை அழைத்து நிகழ்வுகளை வைக்க வேண்டாம் என்று தாயக மக்களுக்கு கூறிக்கொண்டு புலம்பெயர் மக்கள் மட்டும் நடத்தலாம் என்றில்லை.

புலம்பெயர் மக்களையும் சேர்த்து தான் எனது விமர்சன கருத்தை வைத்திருக்கிறேன்.

எங்கும் யாரும் தமக்கு விரும்பின நிகழ்வுகளை வைக்கலாம். மக்கள் விரும்பினால் செல்வார்கள் இல்லை என்றால் அந்த நிகழ்வு தோல்வியில் முடியும். இப்படி போற வாற எல்லோரையும் துரோகியாக்கி உப்புசப்பில்லாத விடயங்களை எல்லாம் புறக்கணி என்று துவங்கி தான் இப்ப நாங்கள் காமடி பீசா நிக்கிறம்

எவர் சொல்லியும் இனி எதுவும் ஆகப்போவதில்லை ,எம்மவர் விடுமுறைக்கு செல்வதை நிற்பாட்ட முடியவில்லை.

 தமிழ் நாட்டு கலைஞர்களின்  நிகழ்சிகளை பார்ப்பதால் மக்கள் சந்தோசமாக இருக்கின்றார்கள் என்று சர்வதேசம் நம்பி விடும் :D .எப்படிஎல்லாம் சர்வதேசத்தை பற்றி நினைக்கின்றார்கள்   :icon_mrgreen: ,

அதற்குள் அங்குள்ள நிலைமையை காவி வந்துவிடுவார்கள் என்று வேறு . :lol: எந்த சுவரில் போய் முட்ட . :o

  • கருத்துக்கள உறவுகள்

துளசி தமிழகத்திலும் எம்மவரை இணைத்தே இசை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றது. உ+ம்: ஜெசிக்கா முதல் 10க்குள் சுப்பர் சிங்கரில் நிற்கிறார். புலத்திலும் தமிழ் நாட்டு கலைஞர்களும் எமது கலைஞர்களும்  ஒரே மேடையில் நிகழ்வுகளை நடத்துகிறார்கள். உ+ம்: ஈழநாடு நடாத்திய அன்பு இல்லத்துக்கான நிதி சேகரிப்பில் கனேடிய , தென்னிந்திய பாடகர்கள் ஒரே மேடையில் கலந்து சிறப்பித்தனர்.  அதே போல் தாயகத்திலும் நடைபெற வேண்டும். ஒற்றுமையே பலம்.

  • தொடங்கியவர்

எமது கலைஞர்களின் நிகழ்வுகளும் சமாந்தரமாக நடக்கின்றன..நாட்டிலும் புலத்திலும்..ஏதோ தமிழக கலைஞர்களுக்கு மட்டும் தான் களம் உள்ளமாதிரி கதைக்க வேண்டாம். மக்கள் எதை பார்க்க வேண்டும் எதை பார்க்க கூடாது என்று எவரும் கட்டளை இட தேவை இல்லை.

மக்கள் சந்தோசமாக இருக்கத்தான் ஆசைப்படுகிறார்கள். அவர்கள் காலம் முழுவதும் அழுதுகொண்டே இருக்க வேணுமா? இல்ல தென்னிந்திய கலைஞர்கள் வராட்டி மக்கள் வேறு ஒரு விழாக்களுக்கோ நிகழ்வுகளுக்கோ செல்லாமல் வீட்டுக்குள்ளயே இருக்கப்போகிறார்களா? உங்கள் வாதப்படி ஊரில ஒரு சந்தோசமான நிகழ்வுகளும் நடக்ககூடாது. அனைவரும் அழுதுவடிந்துகொண்டு இருக்கவேனும்.

நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மக்கள் இவ்வாறான நிகழ்வுகளை விரும்புகிறார்கள். அது மனித இயல்பு.

நல்லூர் திருவிழால யாழ்ப்பாண சனம் அள்ளுப்பட்டு போகேக்க பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகள் எங்க போனது?

எங்கும் யாரும் தமக்கு விரும்பின நிகழ்வுகளை வைக்கலாம். மக்கள் விரும்பினால் செல்வார்கள் இல்லை என்றால் அந்த நிகழ்வு தோல்வியில் முடியும். இப்படி போற வாற எல்லோரையும் துரோகியாக்கி உப்புசப்பில்லாத விடயங்களை எல்லாம் புறக்கணி என்று துவங்கி தான் இப்ப நாங்கள் காமடி பீசா நிக்கிறம்

நீங்கள் என்ன தான் கூறினாலும் எமது கலைஞர்களுக்கான சரியான களம் இன்னும் அமையவில்லை என்பதே உண்மை.

மக்களை சந்தோசமாக இருக்க வேண்டாம் என்று கூறவில்லை. ஆனால் அனைத்து மக்களும் சந்தோசமாக உள்ளது போன்ற பொய்யான தோற்றப்பாட்டை இவ்வாறான நிகழ்வுகள் ஏற்படுத்துகின்றன.

எமது மக்கள் தமக்குள்ளேயே நடத்தும் நிகழ்வுகளை விட தென்னிந்திய கலைஞர்களை அழைத்து நடத்தும் நிகழ்வுகளே அதிகளவில் வெளியுலகை அடைகின்றன, பிரச்சாரங்களுக்கும் பயன்படுகின்றன.

நல்லூர் திருவிழாவுக்கு சனம் அள்ளுப்பட்டுக்கொண்டு செல்வதையும் நான் ஆதரிக்கவில்லை. கோவிலுக்கு செலவழிக்கும் பணத்தை பாதிக்கப்பட்ட மக்களுக்கு செலவளித்தாலாவது மக்கள் பயன் பெறுவார்கள்.

இங்கு நான் யாரையும் துரோகி என்று கூறவில்லை (கருணாவை தவிர வேறு யாரையும் இதுவரை துரோகி என நான் குறிப்பிட்டு எழுதியதில்லை). யாரையும் இந்நிகழ்வுக்கு செல்லுங்கள் என்றோ புறக்கணியுங்கள் என்றோ சொல்லவில்லை.

எனக்கு தோன்றிய கருத்தை மட்டுமே கூறினேன். நீங்கள் என்னை கேள்வி கேட்டதால் உங்களுக்கு பதிலளிக்கிறேன்.

Edited by துளசி

  • தொடங்கியவர்

துளசி தமிழகத்திலும் எம்மவரை இணைத்தே இசை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றது. உ+ம்: ஜெசிக்கா முதல் 10க்குள் சுப்பர் சிங்கரில் நிற்கிறார். புலத்திலும் தமிழ் நாட்டு கலைஞர்களும் எமது கலைஞர்களும் ஒரே மேடையில் நிகழ்வுகளை நடத்துகிறார்கள். உ+ம்: ஈழநாடு நடாத்திய அன்பு இல்லத்துக்கான நிதி சேகரிப்பில் கனேடிய , தென்னிந்திய பாடகர்கள் ஒரே மேடையில் கலந்து சிறப்பித்தனர். அதே போல் தாயகத்திலும் நடைபெற வேண்டும். ஒற்றுமையே பலம்.

தாயக நிலையும் தமிழக நிலையும் ஒன்றல்ல.

  • தொடங்கியவர்

எவர் சொல்லியும் இனி எதுவும் ஆகப்போவதில்லை ,எம்மவர் விடுமுறைக்கு செல்வதை நிற்பாட்ட முடியவில்லை.

தமிழ் நாட்டு கலைஞர்களின் நிகழ்சிகளை பார்ப்பதால் மக்கள் சந்தோசமாக இருக்கின்றார்கள் என்று சர்வதேசம் நம்பி விடும் :D .எப்படிஎல்லாம் சர்வதேசத்தை பற்றி நினைக்கின்றார்கள் :icon_mrgreen: ,

எம்மவர்கள் அகதியாக பதிந்து விட்டு nationality எடுத்ததும் விடுமுறைக்கு தாயகத்துக்கு சென்று வருவதும் தவறு. இது பற்றி முன்னரும் ஒரு கருத்து வைத்திருந்தேன்.

தாயக மக்கள் எந்தப்பிரச்சினையுமில்லாமல் சந்தோஷமாக உள்ளார்கள் என்ற பிரச்சாரம் சர்வதேசத்தை நோக்கி மட்டுமல்ல தமிழ் மக்களை நோக்கியும் தான் முன்னெடுக்கப்படுகிறது. இப்படியான பிரச்சாரங்களை உண்மை என்று நம்புவோரும் பலர் உள்ளார்கள்.

பலர் சந்தோசமாகவும் பலர் போக்கிடம் இல்லாமலும் இருக்கிறார்கள்.இதைப் போக்க நாம் என்ன செய்யலாம் என்பதே எம் முன் உள்ள கேள்வி

  • தொடங்கியவர்

பலர் சந்தோசமாகவும் பலர் போக்கிடம் இல்லாமலும் இருக்கிறார்கள்.இதைப் போக்க நாம் என்ன செய்யலாம் என்பதே எம் முன் உள்ள கேள்வி

1) பாதிக்கப்பட்ட மக்களுக்கு கல்வி மற்றும் வாழ்வாதாரத்துக்கு உதவுதல். இதற்கு பண உதவி, ஆளுதவி தேவை.

இதில் தெரியாத நபர்களை நம்பி பணம் கொடுக்க பயத்திலேயே பல மக்கள் உதவ முன்வருவதில்லை. சிலர் தமது சுயநலம் காரணமாக உதவ முன்வருவதில்லை. ஆனால் சிலர் தமக்கு யார் மேல் நம்பிக்கை உள்ளதோ அவர்கள் மூலம் உதவிக்கொண்டு தான் உள்ளார்கள். அதை யாழிலேயே பார்க்கலாம்.

2) அரசியல் தீர்வு கிடைக்க வேண்டும்.

இதற்கு தாயக, தமிழக, புலம்பெயர் அமைப்புகள், மக்கள் சேர்ந்து அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

அதை விட்டு இப்படியான நிகழ்வுகளால் மக்களுக்கு நன்மையை விட தீமையே அதிகம் என்பது என் கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்

தாயக நிலையும் தமிழக நிலையும் ஒன்றல்ல.

கலைஞர்களை ஒன்றிணைப்பது ஒரு வகையில் ஒற்றுமையை பலப்படுத்தும்.

இவ் வகையான நிகழ்ச்சிகளை ஏற்றுக் கொள்வதா இல்லையா என்பதை தாயக மக்கள் தீர்மானிக்கட்டும். அவர்களின் விடயங்களை தீர்மானிக்கும் உரிமையை  புலம்பெயர் தமிழ் மக்களுக்கு எவரும் கொடுக்கவும் இல்லை, கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை.

இவ்வாறான நிகழ்ச்சிகள் தம் துயரங்களுக்கு வெள்ளையடித்து, அனைத்து உரிமைகளும் பெற்று, எப் பிரச்சனைகளும் இல்லாமல் தாம் அங்கு வாழ்கின்றனர் என்று வெளி உலகுக்கு காட்டிவிடும் என்று அபத்தமான அரசியல் செய்யும் நிலையில் அவர்கள் இல்லை. அப்படியே அவர்கள் நினைத்தால் அவர்களே இவ் வகையான நிகழ்வுகளை புறக்கணிப்பர்.  

புலம்பெயர் நாடுகளில் இருந்து கொண்டு, தாயக மக்களின் மீது ஏவல் செய்ய முனையும் அரசியல் காலவாதியாகி பல நாட்களாகிவிட்டன. இது புரியாமல் ஒரு ஒதுக்குப் புறத்தில் நின்றுகொண்டு குய்யோ முய்யோ என்று கத்திக் கொண்டு நிற்கும் ஒரு சிலரால் எந்தவிதமான காத்திரமான அரசியலும் செய்ய முடியாது என்பதை காலம் பல முறை காட்டி விட்டது.

நன்றி

  • தொடங்கியவர்

எனக்கு தோன்றிய கருத்தை நான் எழுதியுள்ளேன். புலம்பெயர் தமிழர்கள் எதையும் சொல்லக்கூடாது என்று சொல்வதற்கான உரிமையையும் யாரும் யாருக்கும் கொடுக்கவில்லை. :)

  • கருத்துக்கள உறவுகள்

போராட்ட காலத்தில் புலம்பெயர்ந்தோர்  ஒரு ஏஜண்டாகவே செயற்பட்டனர் .அங்கிருந்து வரும் கட்டளைகளை செய்வது மட்டுமே அவர்கள் வேலை ,அதற்குமேல் எதுவும் செய்யமுடியாது .இப்போது தலைகள் இல்லாததால் வால்கள் ஆடத்தொடங்கிவிட்டன .தாயகத்தில் உள்ள மக்கள் என்ன செய்யவேண்டும் என்பதை தீர்மானிப்பது தாங்கள் தான் எனும் முட்டாள்தமான மயக்கத்திலே புலம்பெயர்ந்தோர் உள்ளனர் .

  • தொடங்கியவர்

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும். அதை இங்கு எழுதுவதால் "தாயக மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை புலம்பெயர் தமிழர்கள் தீர்மானிக்கிறார்கள்" என்று அர்த்தப்பட்டு விடாது.

எனது கருத்து தாயக மக்களை மாற்றுமளவுக்கு நான் பெரிய ஆளும் கிடையாது. அதற்காக எனக்கு தோன்றுவதை கூறாமல் இருக்கவும் முடியாது.

சுப்பர் சிங்கர் நிகழ்ச்சி பார்ப்பதால் மக்கள் சந்தோசமாக இருக்கிறார்கள் என்று நினைக்க சர்வதேசம் எங்களை போன்ற கிணத்து தவளை அல்ல. 1000 ரூ டிக்கட் வாங்கி சனம் களியாட்ட நிகழ்வு பார்க்கும் அளவுக்கு அவர்களின் வாழ்க்கை தரம் முன்னேறுகிறதென்றால் அது சந்தோசமே. போராட்ட கால மனநிலையிலிருந்து தாயக மக்கள் வெளியே வந்துவிட்டார்கள். நீங்கள் அதை ஏற்க மறுக்கிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுத போரட்டம் எதனால் ஆரம்பிக்கப்பட்டது என்பதற்க்கான நிகழ்வுகள் மீண்டும் சிங்களத்தினால் வலிந்து திணிக்கப்படுகின்றது. காலச்சக்கரம் சுழல்கின்றதே தவிர நிகழ்வுகள் அதே நிகழ்வுகள்தான் எம் கண்முன்னே விரிகின்றன இதுதான் இங்குள்ள நிஜம்!!!! 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.