Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் 5 தமிழக மீனவர்களுக்கு மரண தண்டனை: கொழும்பு நீதிமன்றம் தீர்ப்பு

Featured Replies

court_2178777h.jpg
கோப்புப் படம்

போதைப்பொருள் கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், தமிழக மீனவர்கள் 5 பேருக்கு மரண தண்டனை விதித்து கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நவம்பர் 2011ல் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தங்கச்சிமடம் மீனவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். போதைப்பொருள் கடத்தியதாக பிரசாத், அகஸ்டஸ், வில்சன், எமர்சன், லாங்லட் என்ற 5 பேரும் வெளிக்கடை சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கு கொழும்பு உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இன்று தமிழக மீனவர்கள் 5 பேருக்கும் மரண தண்டனை விதித்து கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதேபோல் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக இலங்கையைச் சேர்ந்த மூன்று பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இவர்கள் 8 பேரும் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து, இலங்கை உச்ச நீதிமன்றத்தில் மீனவர்கள் மேல் முறையீடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 14-ம் தேதிக்குள் இலங்கை உச்ச நீதிமன்றத்தில் அவர்கள் மேல்முறையீடு செய்யலாம். குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான அனில் சில்வா, ஷராஃபி மொஹிதீன், ஸ்ரீகாந்த் ஆகியோர் ஆஜராகினர். கொழும்பு உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாகவும் அறிவித்தனர்.

http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-5-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article6548222.ece?homepage=true

  • கருத்துக்கள உறவுகள்
30-death-sentence-for-5-tn-fishermen-and

போதைப் பொருள் கடத்தியதாக, 5 ராமேஸ்வரம் மீனவர்களுக்கு தூக்கு தண்டனை-

கொழும்பு ஹைகோர்ட்!

கொழும்பு: போதைப் பொருள் கடத்தியதாக பொய் வழக்கு தொடர்ந்து 5 ராமேஸ்வரம் மீனவர்களுக்கு இன்று தூக்கு தண்டனை விதித்துள்ளது கொழும்பு உயர்நீதிமன்றம்.

ராமேஸ்வரத்தில் இருந்து 2011ஆம் ஆண்டு நவம்பர் 28ந் தேதி காலை 712 விசைப்படகுகளில் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தங்கச்சிமடத்தை சேர்ந்த கிளாடுவின் படகில் சென்ற மீனவர்கள் எமர்சன், பிரசாந்த், வின்சென்ட், அகஸ்டீஸ், போல்டேத் ஆகியோரை சிறை பிடித்து சென்றனர்.

அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்தனர். சிறை பிடித்துச் செல்லப்பட்ட மீனவர்கள் 5 பேரும் நெடுந்தீவு கடற்படை முகாமில் தங்க வைக்க்கப்பட்டு பின்னர் அவர்கள் மீது போதைப் பொருள் கடத்தி வந்ததாக ஊர்காவல்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இது தமிழகத்தில் பெருங்கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் மேலும் 3 இலங்கையர்களும் சேர்க்கப்பட்டு மொத்தம் 8 பேர் மீது வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் இன்று இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பளித்த கொழும்பு உயர்நீதிமன்றம் 5 ராமேஸ்வரம் மீனவர்கள் உட்பட 8 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இது தமிழகத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்ஸ் தமிழ்.

சிங்கள அரசின் குற்றச்சாட்டில், எவ்வளவு தூரம் உண்மை உள்ளது என்று தெரியவில்லை.
சிங்கள அரசியல் வாதிகள், கொழும்பு துறைமுகத்தினூடாக... கொன்ரெயினர்களில் போதை பொருள் கடத்தி பிடிபட்டு, இன்றும் அரசில் அமைச்சர்களாக உள்ளார்கள்.
தமிழன் என்றவுடன், தூக்கு தண்டனை. :( 

  • கருத்துக்கள உறவுகள்

மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை: மத்திய அரசுக்கு தமிழக தலைவர்கள் வலியுறுத்தல்!

சென்னை: தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் ஐந்து பேரையும் விடுவிக்க இலங்கை அரசை, இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

TKS%20Elangovan%20DMK.jpgதி.மு.க அமைப்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் கூறுகையில், "தனது நாட்டின் குடிமகன்கள், வேறு ஒரு நாட்டின் அரசால் ஆதாரமில்லாமல், தவறான முறையில் தண்டிக்கப்படும்போது அவர்களை காக்க வேண்டியது சம்பந்தப்பட்ட அரசின் கடமை. அந்த வகையில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை காக்க வேண்டியது இந்திய அரசின் கடமை. எனவே, இந்திய அரசு இதற்கான உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

தி.மு.க.வை சேர்ந்த கே.எஸ்.ராதாகிருஷ்ணன், தமிழக மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட தீர்ப்பு வேதனையை தருகிறது என்றும், மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மத்திய அரசு பொறுப்பற்ற தன்மையில் நடந்து கொள்வதையே தீர்ப்பு காட்டுகிறது என்று குற்றம்சாட்டியுள்ள அ.தி.மு.க பேச்சாளர் ஆவடி குமார், மீனவர்களுக்கு தீர்வு கிடைக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளும் என்று தெரிவித்துள்ளார்.

tamilisai%20sountherarajan%201%282%29.jpதமிழக மீனவர்களுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது மிகவும் வேதனைக்குரியது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

ganadesisan%284%29.jpgதமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஞானதேசிகன் கூறுகையில், ஐந்து மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசை, இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கை தேவை என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

seeman%20.jpgநாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், "தமிழக மீனவர்களுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது ஒருவகையான அச்சுறுத்தல்" என்று தெரிவித்துள்ளார்.

nedumaran%20%288%29.jpgஉலகத் தமிழர் பேரவைத் தலைவர் பழ.நெடுமாறன் கூறுகையில், "தமிழக மீனவர்கள் நீதி கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மத்திய அரசு சார்பில் வழக்கறிஞர்களை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

தூக்குத் தண்டனை ஒட்டுமொத்த மீனவ சமுதாயத்துக்கும் விழுந்த பேரிடி என்று மீனவர்களின் உறவினர் பேட்ரிக் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேச விடுதலை இயக்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் தியாகு கூறுகையில், தமிழக மீனவர்களை விடுவிக்க இந்திய அரசு கோரிக்கை வைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

ஐந்து தமிழக மீனவர்களுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்துள்ள தேசிய மீனவர் பேரவையை சேர்ந்த இளங்கோ, இலங்கை நீதிமன்றத்தின் தீர்ப்பு அரசியல் விளையாட்டு என்று கூறியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநல செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் “மத்திய அரசாங்கம் இப்பிரச்னையில்  ராஜீய முறையில் தலையீடு செய்து, தண்டனை விதிக்கப்பட்டவர்கள் அந்நாட்டு மேல்நீதிமன்றங்களில் மேல்முறையீடு செய்வதற்கும், தூக்கு தண்டனையிலிருந்து விடுவிப்பதற்கும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் ” எனக் கூறியுள்ளார்.
   
http://news.vikatan.com/article.php?module=news&aid=34132

  • கருத்துக்கள உறவுகள்

Syed-Akbaruddin-indian-foriegn-ministry-
கொழும்பு உயர் நீதிமன்றினால் இன்று மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர்கள் ஐந்து பேர் தொடர்பிலும் கவனம் செலுத்திள்யுளதாக இந்திய அரசு அறிவித்துள்ளது.

அதேவேளை தண்டனைக்கு முகம்கொடுத்துள்ள ஐவரும், அப்பாவி மீனவர்கள் என்றும் இந்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்திய அரசின் இந்த நிலைப்பாட்டை இந்திய வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சஹீத் அக்பரூதீன் தெரிவித்துள்ளார்.

ஐந்து மீனவர்களுக்கு எதிராக இலங்கையிலுள்ள நீதிமன்றமொன்று தீர்ப்பு வழங்கியுள்ள நிலையிலும், அந்த ஐந்து மீனவர்களும் அப்பாவிகள் என்பதிலும், போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களுக்கும் அவர்களுக்கும் எந்தவித தொடர்பும் இருக்காது என்பதிலும் இந்திய அரசு தொடர்ந்தும் உறுதியாக இருக்கின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தீர்ப்பு தொடர்பில் இந்திய அரசு, இலங்கை அரசுடன் தொடர்ச்சியாக தொடர்புகளை மேற்கொண்டு ஆராய்ந்து வருவதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சஹீத் அக்பரூதீன் மேலும் தெரிவித்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

அதேவேளை தண்டனைக்கு முகம்கொடுத்துள்ள ஐவரும், அப்பாவி மீனவர்கள் என்றும் இந்திய அரசு தெரிவித்துள்ளது.

நட்புநாடு என்ற ரீதியில் அறிக்கை  மட்டும் தானா?

அல்லது.............??? :(

5 மீனவர்களுக்கு தண்டனை:மேல்முறையீடு செய்வதாக வெளியுறவுத் துறை தகவல்

புதுடில்லி:இலங்கையில் தமிழக மீனவர்கள் 5 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து கொழும்பு ஐகோர்ட்டில் இந்திய தூதரகம் மேல்முறையீடு செய்யும் என்று இந்திய வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது.

இந்தியா-இலங்கை கடல் எல்லையில் போதை பொருட்கள் கடத்தலில் ஈடுபட்டதாக கூறி தங்கச்சிமடத்தை சேர்ந்த ஐந்து மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் நவம்பர் 28, 2011ல்கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் அவர்கள் மீது கொழும்பு ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வந்தது.

இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதிபதி பத்மா சூரசேன குற்றஞ்சாட்டப்பட்ட 5 பேருக்கும் தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். அவர்கள் நவம்பர் 14ம் தேதிக்கு இலங்கை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டது.தமிழக மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் 5 தமிழக மீனவர்களுக்கு எதிராக கொழும்பு ஐகோர்ட்டு விதித்துள்ள தீர்ப்புக்கு எதிராக, இந்திய தூதரகம், முழுமையாக மேல்முறையீடு செய்யும் என்றும் அடுத்த 14 நாட்களில் மீனவர்களின் வழக்கறிஞர்கள் அப்பீல் மனுதாக்கல் செய்வார்கள் என்றும் இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் சையத் அக்பரூதின் கூறியுள்ளார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1103615

இலங்கை நீதிமன்றம் 5 தமிழக மீனவர்களுக்கு மரண தண்டனை விதித்துள்ளதை பற்றி சீமான் அண்ணா தந்தி தொலைக்காட்சிக்கு கொடுத்த பேட்டி

(Facebook)

Edited by துளசி

மீன்பிடித்த 5 அப்பாவி தமிழக மீனவருக்கு தூக்கு தண்டனை விதிப்பதா?

150க்கும் மேற்பட்ட இயக்கங்களின் கூட்டமைப்பான தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் சார்பில்

சென்னையில் இலங்கை தூதரகத்தை அகற்றும் மாபெரும் முற்றுகைப் போராட்டம்!

நாள்: 31.10.2014, வெள்ளிக்கிழமை

இடம்: இலங்கை தூதரகம், நுங்கம்பாக்கம், சென்னை

நேரம்: காலை 11 மணி

தமிழர்கள் பாரம்பரியமாக மீன்பிடிக்கும் கச்சத்தீவு அருகே மீன்பிடித்தார்கள் என்கிற ஒற்றை காரணத்துக்காக மட்டுமே 2011ஆம் ஆண்டு நவம்பர் 28-ந் தேதி 5 ராமேஸ்வரம் தங்கச்சிமடம் மீனவர்களை சிங்களக் கடற்படை கைது செய்தது.

தமிழினத்தை அழிப்பதையே இலக்காகக் கொண்டு நரவேட்டையாடும் சிங்களப் பேரினவாத கடற்படை, 5 அப்பாவி மீனவர்கள் மீது போதைப் பொருட்களைக் கடத்தினார் என்ற அபாண்டமான பொய்க்குற்றச்சாட்டை சுமத்தி சிறையில் அடைத்தது.

5 அப்பாவி மீனவர்கள் கைது செய்யப்பட்ட நாள் முதல் மத்திய அரசு தலையிட வலியுறுத்தி தமிழக அரசு எத்தனை எத்தனை கடிதங்கள் எழுதியது? ஒரே ஒரு கடிதத்துக்குக் கூட மத்திய அரசு பதில் அளிக்கவில்லை.

இந்த 3 ஆண்டு காலத்தில் இந்தியா- இலங்கை இடையே எத்தனை எத்தனை சந்திப்புகள் நடைபெற்றன? ஒரு முறையேனும் இந்த பிரச்சனையை இலங்கையின் கவனத்துக்கு இந்திய மத்திய அரசு கொண்டு சென்றதில்லை.

தமிழ்நாடு எனும் மாநிலம் தனிநாடு என்பதைப் போல இந்த மாநில அரசே வெளிநாடு ஒன்றில் வழக்கை நடத்திக் கொள்ளட்டும்; ஏதோ ஒரு தீர்ப்பை வாங்கிக் கொள்ளட்டும் என்று மாற்றாந்தாய் மன்பான்மையோடு நடந்து கொண்ட காரணத்தால்தான் மட்டுமே இன்று 5 அப்பாவித் தமிழக மீனவர்கள் தூக்கு மேடையில் நிற்கிறார்கள்.

பாகிஸ்தான் சிறையில் சரப்ஜித் கொல்லப்பட்டபோது துடிதுடியாய் துடித்த இந்தியப் பேரரசின் நெஞ்சம் சிங்களவனால் 600க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட போது துடிக்கவில்லை- ஈவிரக்கம்கூட காட்டவில்லை.

தமிழ்நாட்டு மக்களை இந்தியாவின் குடிமக்களாகக் கருதாத ஒரே காரணத்தால்தான் சிங்கள பேரினவாதிகள் ஆணவத்தின் உச்சத்திலே நின்று தமிழக மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதித்து வரலாற்றுப் பகை தீர்க்க முயல்கிறார்கள்.

தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் தன்மான உணர்ச்சிகளை கிஞ்சிற்றும் மதிக்காது அலட்சியமாக இந்தியப் பேரரசு செயல்பட்டதால்தான் எங்களது தமிழகத்து உறவுகள் இன்று எதிரியின் தேசத்தில் தூக்கு மேடையில் நிறுத்தப்பட்டுள்ளனர் என்று பகிரங்கமாக குற்றம்சாட்டுகிறேன்.

இத்தனை காலமும் வாய்மூடி மவுனியாக இருந்துவிட்டு இப்போதாவது, தமிழக மீனவர்கள் போதைப் பொருட்களை கடத்தினார்கள் என்பதற்கு ஆதாரம் இல்லை- கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் மேல்முறையீடு செய்யும் என்று வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் சையத் அக்பருதீன் கூறியுள்ளார்.

இந்த வாக்குறுதியையாவது செயல்படுத்தி 5 தமிழரது உயிரை மீட்டு மிகச் சிறிய அளவிலான ஆறுதலையாவது இந்தியாவின் ஒரு மாநிலமாக இருக்கக் கூடிய தமிழ்நாட்டு குடிமக்களுக்கு மத்திய அரசு அளிக்க வேண்டிய பெருங்கடமை இருக்கிறது.

மத்திய அரசின் எத்தனையோ துரோகங்களின் வடுக்கள் இன்னமும் ஆறாத புண்ணாக இருந்த போதும் இருந்த தருணத்திலாவது இந்திய மத்திய அரசு தனது தவறுகளுக்கு பிராயசித்தமாக 5 அப்பாவி மீனவர்களை விடுதலை செய்ய தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

அதே நேரத்தில் தமிழ்நாட்டுத் தமிழன் தனித்துவிடப்பட்டவன்; தட்டிக் கேட்க நாதியில்லை என்ற கொக்கரிப்பில் சிங்களப் பேரினவாதம் 5 அப்பாவி தமிழருக்கு தூக்கு தண்டனை வழங்கியிருக்கிறது என்பதுதான் யதார்த்தம்.

சிங்கள் பேரினவாதத்தின் இந்த அகம்பாவத்துக்கும் தமிழினத்தை ஆகக் கூடிய சாத்தியங்களால் எல்லாம் அழித்துவிடலாம் என்று கங்கணம் கட்டிக் கொண்டு நடாத்துகிற அட்டூழியங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய கடமை தமிழர்களுக்கு இருக்கிறது.

தமிழக மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதித்து ஆணவத்தை வெளிப்படுத்தியிருக்கும் ராஜபக்சே கும்பலுக்கு பாடம் புகட்டும் வகையில்

தமிழ்நாட்டுத் தலைநகர் சென்னையிலே இருக்கும் சிங்கள பேரினவாத அரசின் தூதரகத்தை அகற்றும் வகையில்

தமிழக வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் சார்பில் வெள்ளிக்கிழமையன்று (31.10.2014)

சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை அகற்றுகிற மாபெரும் முற்றுகைப் போரை நடத்துவோம்!

ஜாதி, மத, கட்சி எல்லை கடந்து அனைத்து தமிழர்களும் தமிழராய் ஓரணியில் ஒன்று திரண்டு தமிழர் தம் உணர்வையும் ஒற்றுமையும் இன எதிரிகளுக்கு புரிய வைப்போம் என்று தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு அன்புடன் அழைக்கிறது!

தி.வேல்முருகன்

ஒருங்கிணைப்பாளர்,

தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு

https://m.facebook.com/story.php?story_fbid=339452056237326&id=152515898264277&ref=bookmark

Edited by துளசி

தமிழ்நாட்டை கொந்தளிக்கும் நிலைக்கு உருவாக்கி மீண்டும் அங்கே கலகங்களை உருவாக்கி ..............
 
சிலவற்றை சாதிப்பதற்காக................. 
 
இதுவும் ஒரு நாடகமாகவே கருதவேண்டியுள்ளது .........சுப்ரமணியம் சுவாமிகளின் மாஸ்டர் பிளான் ஆகவும் இருக்கலாம்  :icon_mrgreen:

சரி, இந்த 5 மீனவர்களும் உண்மையாகவே போதைப் பொருள் விற்று இருக்க மாட்டார்கள் என்பதற்கு என்ன சான்று? இவர்களுடன் சேர்த்து மேலும் 3 சிங்களவர்களுக்கும் இதே தண்டனை தான் அளிக்கப்பட்டு இருக்கு.

இன்று கூக்குரல் இடும் தமிழத் தலைமைகள் வழக்கு நடக்கும் போது தகுந்த வழக்கறிஞர்களையாவது நியமித்து இருக்கலாமே? இது வரைக்கும் இவர்களின் வழக்கு பற்றி மத்திய அரசுக்கு எந்தளவுக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர்? இனியாவது மேன்முறையீடு செய்யும் போது தகுந்த முறையில் செயலாற்றுவார்களா என்று பார்போம்

சரி, இந்த 5 மீனவர்களும் உண்மையாகவே போதைப் பொருள் விற்று இருக்க மாட்டார்கள் என்பதற்கு என்ன சான்று? இவர்களுடன் சேர்த்து மேலும் 3 சிங்களவர்களுக்கும் இதே தண்டனை தான் அளிக்கப்பட்டு இருக்கு.

ஆம் பல கோணங்களில் சிந்திக்கலாம் .ஆனால் இலங்கை நீதித்துறையும் அரசும் செயல்படும் விதமும் ,செயல்பட்ட விதமும் ஒரு கோணத்தில் மட்டுமே சிந்திக்க வைக்குது நண்பரே .

சரி, இந்த 5 மீனவர்களும் உண்மையாகவே போதைப் பொருள் விற்று இருக்க மாட்டார்கள் என்பதற்கு என்ன சான்று? இவர்களுடன் சேர்த்து மேலும் 3 சிங்களவர்களுக்கும் இதே தண்டனை தான் அளிக்கப்பட்டு இருக்கு.

இன்று கூக்குரல் இடும் தமிழத் தலைமைகள் வழக்கு நடக்கும் போது தகுந்த வழக்கறிஞர்களையாவது நியமித்து இருக்கலாமே? இது வரைக்கும் இவர்களின் வழக்கு பற்றி மத்திய அரசுக்கு எந்தளவுக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர்? இனியாவது மேன்முறையீடு செய்யும் போது தகுந்த முறையில் செயலாற்றுவார்களா என்று பார்போம்

ஒருவேளை இவர்கள் போதைப்பொருள் கடத்தியிருந்தாலும் அதற்கு வேறு தண்டனைகள் இல்லாமல் தூக்கு தண்டனை விதிப்பது சட்டப்படி சரியானதா?

ஏனைய மூவரும் சிங்களவர்கள் தானா? ஆம் எனின் மேன்முறையீட்டில் அவர்களது தூக்கு தண்டனை ரத்து செய்யப்படும் என இப்பொழுதே முடிவெடுக்கப்பட்டிருந்தால் இவர்களுக்கு மட்டுமே இறுதி தண்டனை கிடைக்கும்.

இவ்வளவு காலமும் மீனவர் பிரச்சினை பற்றி கண்டுகொள்ளாத இந்தியா இதற்கு மட்டும் உடனடியாக அறிக்கை விட்டிருக்கிறார்கள்.

எனவே இது சந்தேகத்திற்குரியது.

அதேபோல் இது பொய் குற்றச்சாட்டாக இருக்கவும் வாய்ப்புள்ளது.

ஒருவேளை இவர்கள் போதைப்பொருள் கடத்தியிருந்தாலும் அதற்கு வேறு தண்டனைகள் இல்லாமல் தூக்கு தண்டனை விதிப்பது சட்டப்படி சரியானதா?

அநேக நாடுகளில் கடும் தண்டனை கொடுக்கின்றார்கள். சிங்கபூர், மலேசியா, அரபு நாடுகள் மற்றும் இலங்கையிலும் மரண தண்டனைதான். குறிப்பிட்ட அளவுக்கு மேல் என்றால் மரண தண்டனைதான். விமான நிலையங்களிலும் இது பற்றி தெளிவாக (இலங்கையிலும்) எழுதி வைத்து இருக்கின்றார்கள்.

போதைப் பொருள் குற்றத்திற்காக ஒவ்வொரு மாதமும் குறைந்தது 3 பேராவது இலங்கையில் மரணதண்டனை தீர்ப்புக்குள்ளாகின்றனர். ஆனால் பல தசாப்தங்களாக இத் தண்டனை நிறைவேற்றப்படுவதில்லை.

தமிழ்நாட்டை கொந்தளிக்கும் நிலைக்கு உருவாக்கி மீண்டும் அங்கே கலகங்களை உருவாக்கி ..............

சிலவற்றை சாதிப்பதற்காக.................

இதுவும் ஒரு நாடகமாகவே கருதவேண்டியுள்ளது .........சுப்ரமணியம் சுவாமிகளின் மாஸ்டர் பிளான் ஆகவும் இருக்கலாம் :icon_mrgreen:

10610657_10152471586703354_7408360402514

'There are other ways to get the votes'

Other ways mean - "Giving death sentences to fishermen and then releasing them"

அப்புறம் மோடி தலையிட்டு விடுவிப்பார். மீனவர்கள் ஓட்டு பிரதியுபகாரமாக கேட்கப்படும்.

(டென்சி அண்ணா முகநூலில் ஒரு comment இல் இதை சுட்டிக்காட்டியிருந்தார்.)

இந்தியப் பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க நல்லெண்ண நடவடிக்கையாக ஐந்து மீனவர்களுக்கும் ஜனாதிபதி மகிந்ர றாஜபக்ச அவர்கள் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார்.

இந்தச் செய்தியை விரைவில் எதிர்பார்க்கலாம்...

  • கருத்துக்கள உறவுகள்

சரி, இந்த 5 மீனவர்களும் உண்மையாகவே போதைப் பொருள் விற்று இருக்க மாட்டார்கள் என்பதற்கு என்ன சான்று? இவர்களுடன் சேர்த்து மேலும் 3 சிங்களவர்களுக்கும் இதே தண்டனை தான் அளிக்கப்பட்டு இருக்கு.

இன்று கூக்குரல் இடும் தமிழத் தலைமைகள் வழக்கு நடக்கும் போது தகுந்த வழக்கறிஞர்களையாவது நியமித்து இருக்கலாமே? இது வரைக்கும் இவர்களின் வழக்கு பற்றி மத்திய அரசுக்கு எந்தளவுக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர்? இனியாவது மேன்முறையீடு செய்யும் போது தகுந்த முறையில் செயலாற்றுவார்களா என்று பார்போம்

(கொழும்பு உயர் நீதிமன்றினால் இன்று மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர்கள் ஐந்து பேர் தொடர்பிலும் கவனம் செலுத்திள்யுளதாக இந்திய அரசு அறிவித்துள்ளது.

அதேவேளை தண்டனைக்கு முகம்கொடுத்துள்ள ஐவரும், அப்பாவி மீனவர்கள் என்றும் இந்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்திய அரசின் இந்த நிலைப்பாட்டை இந்திய வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சஹீத் அக்பரூதீன் தெரிவித்துள்ளார்.

ஐந்து மீனவர்களுக்கு எதிராக இலங்கையிலுள்ள நீதிமன்றமொன்று தீர்ப்பு வழங்கியுள்ள நிலையிலும், அந்த ஐந்து மீனவர்களும் அப்பாவிகள் என்பதிலும், போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களுக்கும் அவர்களுக்கும் எந்தவித தொடர்பும் இருக்காது என்பதிலும் இந்திய அரசு தொடர்ந்தும் உறுதியாக இருக்கின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.)

தமிழர்களாகிய  நாம்

எமது  வரலாற்றுப்பாடங்கள் ஊடாக

சிங்களம் தமிழர்களுக்கென்று ஒரு நீதியை  வைத்திருப்பதை அறிவோம்

அது சிங்களவருக்கு பொருந்தாது என்பதையும்

அவ்வாறு தண்டனை விதிக்கப்பட்ட சிங்களவர்கள் எல்லோரும்

தண்டனைக்கு மாறாக பெரும் சலுகைகளைப்பெற்று  வாழ்வதையும் அறிவோம்

அந்தவகையில் தான் எமது கருத்துக்கள் இருக்கின்றன.....

இவர்களுடன் சேர்த்து மேலும் 3 சிங்களவர்களுக்கும் இதே தண்டனை தான் அளிக்கப்பட்டு இருக்கு.

தமிழ் மீனவர்களை விடுவிக்க கோரி யாழ்.ஆயரிடம் மகஜர்!

menavar_family.png

போதைபொருள் கடத்தலில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டி இந்திய மற்றும் இலங்கை மீனவர்கள் 8 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றினால் மரண தண்டனை வழங்கி நேற்று தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது. இதனை ஆட்சேபித்தும் மரண தண்டனை விதிக்கப்பட்ட யாழ்ப்பாண மீனவர்கள் மூவரினதும் பேரின் உறவினர்களும் கிராம மக்களும் ஆயர் இல்லத்திற்கு முன்னால் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை நடத்தியுள்ளனர்.

இன்று பிற்பகல் நடத்தப்பட்ட இப்போராட்டத்தில் பொய்குற்றச்சாட்டினில் தண்டிக்கப்பட்டுள்ள இந்திய-இலங்கை மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரியே மகஜர் ஒன்றினையும் யாழ். ஆயரிடம் அவர்கள் வழங்கியுள்ளனர்.

மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களுள் ஜவர் தமிழக மீனவர்களாவர்.அவர்களது விடுதலையை வலியுறுத்தி தமிழகமெங்கும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.pathivu.com/news/35009/57//d,article_full.aspx

தமிழர்கள் என்பதால் ஜெயலலிதா, இந்த ஹீரோயின் - couriers போன்றவர்களுக்கு தண்டனை கொடுக்கக்கூடாது என்று புது சரித்திரம் படைகிறார்கள்....இதனால் தான் தமிழகத்தில் படித்தவன் விடயம் தெரிந்தவன் எதிலும் ஈடுபடாமால்...முழு முட்டாள் கூட்டங்கள் எல்லா விடயங்களிலும் தலையை நுழைத்து ..முழு தமிழகத்தையும் ஒரு முட்டாள் மாநிலமாக மற்றவர்கள் பார்த்து சிரிக்கும் நிலைக்கு கொண்டுவந்திருக்கிறார்கள்.....

கடத்தல் காரர்கள் (அடியாள்/கூலிகள்) மீனவர்கள் போல் குரியர் வேலை செய்வது காலம் காலமாக இந்த கடலில் நடப்பது..

 ம்ம்ம்ம் ஜேம்ஸ் பாண்ட் துப்பறிந்து சொல்லிட்டார் . :lol:  :D

 ம்ம்ம்ம் ஜேம்ஸ் பாண்ட் துப்பறிந்து சொல்லிட்டார் . :lol:  :D

தமிழர்களுக்கு (இல்லையென்றால் ஜெயலலிதாவுக்கு அல்லது அந்த ஐந்து பேருக்கும் :) :) ) விளக்கு பிடிப்பவரும் வந்து விட்டார்........

Edited by naanthaan

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் என்பதால் ஜெயலலிதா, இந்த ஹீரோயின் - couriers போன்றவர்களுக்கு தண்டனை கொடுக்கக்கூடாது என்று புது சரித்திரம் படைகிறார்கள்....இதனால் தான் தமிழகத்தில் படித்தவன் விடயம் தெரிந்தவன் எதிலும் ஈடுபடாமால்...முழு முட்டாள் கூட்டங்கள் எல்லா விடயங்களிலும் தலையை நுழைத்து ..முழு தமிழகத்தையும் ஒரு முட்டாள் மாநிலமாக மற்றவர்கள் பார்த்து சிரிக்கும் நிலைக்கு கொண்டுவந்திருக்கிறார்கள்.....

கடத்தல் காரர்கள் (அடியாள்/கூலிகள்) மீனவர்கள் போல் குரியர் வேலை செய்வது காலம் காலமாக இந்த கடலில் நடப்பது..

எப்படின்னேய் உங்களுக்கு இப்படி விளக்கம் உங்களை பார்க்க பொறாமையாய் இருக்கு யாழில் மெத்தபடித்த அறிவாளியாய் ஜகஜகஎன்னு பிரகாசிக்கிறீங்க :icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen:

தமிழர்களுக்கு (இல்லையென்றால் ஜெயலலிதாவுக்கு அல்லது அந்த ஐந்து பேருக்கும் :) :) ) விளக்கு பிடிப்பவரும் வந்து விட்டார்........

ஆகா என்ன ஞானம் ..............வெளிச்சத்தில் தமிழன் வாழவேண்டும் ................புரிஞ்சிட்டீங்க ,அதுக்குத்தான் விளக்கு அவசியம் என்று ................நான் சொல்லல ஜேம்ஸ் பாண்ட் என்று  :lol:  :lol:  :lol:

சரி, இந்த 5 மீனவர்களும் உண்மையாகவே போதைப் பொருள் விற்று இருக்க மாட்டார்கள் என்பதற்கு என்ன சான்று? இவர்களுடன் சேர்த்து மேலும் 3 சிங்களவர்களுக்கும் இதே தண்டனை தான் அளிக்கப்பட்டு இருக்கு.

இன்று கூக்குரல் இடும் தமிழத் தலைமைகள் வழக்கு நடக்கும் போது தகுந்த வழக்கறிஞர்களையாவது நியமித்து இருக்கலாமே? இது வரைக்கும் இவர்களின் வழக்கு பற்றி மத்திய அரசுக்கு எந்தளவுக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர்? இனியாவது மேன்முறையீடு செய்யும் போது தகுந்த முறையில் செயலாற்றுவார்களா என்று பார்போம்

சிறிலங்காவின் நீதித் துறை மீது நீங்கள் அபரிமிதமான நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள். 

சிறிலங்காவிற்கு இதுவரை மிக அதிகளவில் போதைப் பொருள் கொண்டு வந்தது யார் என்றால் பிரதமர் ஜயரத்னவும் அவரது புதல்வர்களும்.  கொழும்பில் பிடிபட்ட கொள்கலனை விடுவிக்கும் படி பிரதமரின் செயலாளர் கடிதம் அனுப்பி அது பொரும் சர்ச்சையாகியது. ஆனால் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

அடுத்ததாக ஒருவரை  குற்றவாளியாக்க வேண்டும் என நினைத்து விட்டால் எப்படி செயல்படுவார் என்பதும் அனைவரும் அறிந்ததே. அண்மையில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற பத்திரிகையாளர்கள் பயணித்த வானிற்குள் கஞ்சாப் பொட்டலம் வந்த விடயமும் நடந்தேறியது.

பிரதம நீதியரசே நீதியைப் பெறமுடியாது தவிக்கும் ஒரு நாட்டின் நீதித்துறை தொடர்பிலும் அதன் தீர்ப்புகள் தொடர்பிலும் கிஞ்சித்தும் நம்பிக்கை வைக்க முடியாது..

ஆகா என்ன ஞானம் ..............வெளிச்சத்தில் தமிழன் வாழவேண்டும் ................புரிஞ்சிட்டீங்க ,அதுக்குத்தான் விளக்கு அவசியம் என்று ................நான் சொல்லல ஜேம்ஸ் பாண்ட் என்று  :lol:  :lol:  :lol:

அண்நை நீங்க ரொம்ப புகழுறீங்க....நீங்க விளக்கு பிடிச்சு..முடிச்சவுக்கி..மொள்ளைமாறிகளை எல்லாம் வெளிச்சத்துக்கு கொண்டுவர உழைகுறீங்க பாருங்க அதை பார்க்க 'புல்'லரிக்குது.....

உங்களது விளக்கு பிடிக்கும் கடமைக்கு தலை வணங்குகிறேன்....உங்களது சேவை எல்லாருக்கும் தேவை..

சரி, இந்த 5 மீனவர்களும் உண்மையாகவே போதைப் பொருள் விற்று இருக்க மாட்டார்கள் என்பதற்கு என்ன சான்று? இவர்களுடன் சேர்த்து மேலும் 3 சிங்களவர்களுக்கும் இதே தண்டனை தான் அளிக்கப்பட்டு இருக்கு.

இன்று கூக்குரல் இடும் தமிழத் தலைமைகள் வழக்கு நடக்கும் போது தகுந்த வழக்கறிஞர்களையாவது நியமித்து இருக்கலாமே? இது வரைக்கும் இவர்களின் வழக்கு பற்றி மத்திய அரசுக்கு எந்தளவுக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர்? இனியாவது மேன்முறையீடு செய்யும் போது தகுந்த முறையில் செயலாற்றுவார்களா என்று பார்போம்

இந்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கையர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழர்கள் என நினைக்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.