Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ் செல்ல அனுமதி பெறுவது எப்படி?

Featured Replies

வெளிநாட்டுக்கு இலங்கை பாஸ்போட்டில் களவா ஒடி வரும் போது லஞ்சம் கொடுத்தது ஓகே.

இப்ப வெளிநாட்டுப் பாஸ்போர்ட்டுடன் போகும் போதும் ஏன் லஞ்சம் கொடுக்கிறார்கள்?

எனக்குத்தெரிய அப்படி யாரும் செய்வதில்லை.

நாடு கடதிய ஆக்கள் அல்லது அளவுக்கு மீறி போத்தல் கொண்டு போறவை செய்யக்கூடும்.

கோசான் நான் லஞ்சம் கொடுத்தேன். அதுவும் எந்த தேவையும் இல்லாமல் நிறை கூடியதாக பொய் கூறி வாங்கினார்கள். என்னுடன் வந்த பலர்ரிடம் அவ்வாறு நடந்ததாக விமானத்தில் அறிந்தேன். அந்த காட்டு மிராண்டி அலுவலகர்களுடன் விவாதித்து பிரயோசனமற்ற நிலையில் பணத்தை கொடுத்துவிட்டு வந்தேன். கொழும்பு விமான நிலையம் லஞ்சத்தால் நிரம்பி கிடக்குறது.லஞ்சம் என்றால் என்னவென்று தெரியாத எனது பிள்ளைகள் முதல் முறையாக லஞ்சம் வாங்கும் நடைமுறையை பார்த்தார்கள். இங்கு பிறந்த எனதுபிள்ளைகளுக்கு லஞ்ச ஊழல் என்றால் என்ன என்பதை காட்டிய திருப்தி எனக்கு.
  • Replies 64
  • Views 5.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நான் பல வருடங்களுக்கு முன்பு சென்றபோது பெண் தொழிலாளி ஒருத்தி வெளிநாட்டுப் பணம் தரும்படி கேட்டவ. நான் கொடுக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கலாம் துல்பென்ஸ்,

எனக்கு ஒரு போதும் நிகழ்ந்ததில்லை. போகும் போதே சிங்களத்தில்தான் கதைப்பேன்.

அது ஒரு காரணமாக இருக்கலாம் .

ஒருமுறை கஸ்டம்ஸ் மறித்தார்கள் - தேவையானதை பாருங்கள், கேளுங்கள் எண்டேன். 10 நிமிசம் கிண்டிவிட்டு அசடு வழிந்தார்கள்.

நமக்கு ஒரு கெத்து இருப்பது போல காட்டிக்கொண்டாலே வம்புதும்புக்கு வரமாட்டார்கள். இலங்கையிலும் இந்தியாவிலும் இப்படியே.

இதே நிலையே வடக்கிலும் கிழக்கிலும் சந்தித்த ராணுவத்தினருடனும். நாங்கள் தயங்கி நிண்டால் அவர்கள் பாயப்பார்ப்பார்கள்.

ஆனால் எல்லாராலும் இப்படி டீல் பண்ண முடியாது என்பதும் உண்மையே. அவர்களும் தவிச்ச முயல் அடிக்கவே நிப்பார்கள். எல்லாம் அதிகார மமதை. சிறீலங்கன் எயர்லன்ஸிலிலும் இது உண்டு, லண்டன்- கொழும்பு பயணிக்கும் போது கிடைக்கும் கவனிப்பு, சென்னை கொழும்பு போகும் போது கிடையாது. திருச்சி கொழும்பு கேட்கவே வேண்டாம். மத்திய கிழக்கிலிருந்து வருவோர்க்கும் இதே நிலையே.

இதில் பெரிதாக இனபேதம் எல்லாம் இல்லை - கிடைத்ததை புடுங்கும் பழக்கம். சிங்களம் தெரியாவிடில் இன்னும் வசதி.

  • கருத்துக்கள உறவுகள்

இது வருத்தத்துக்குரிய விடயம் என்றாலும் பரவாயில்லை என்றே தோன்றுகிறது. ஏனென்றால் ஆப்கானிஸ்தானின காபுல், சோமாலியாவின் மொகடிஷு விமான நிலையங்கள் இன்னும் எவ்வளவோ மோசம்.. அதுக்கு கொழும்பு எவ்வளவோ பராயில்லை.. :D

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் அசாதராண நிலை இருக்கின்றது கிழக்கில் சாதராண நிலை நிலவுகின்றது?

வடகிழக்கு என்று இருந்த பிரச்சனை இன்று வடக்கு என்று பாதிநிலைக்கு வந்துவிட்டது. அதை தமிழர்களாகிய நீங்கள் ஒத்துக்கொள்வதே சிங்களத்துக்கு கிடைத்த பெரிய வெற்றி.

நாளை வடக்கும் குறுகி வவுனியா முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி விலத்தி யாழ்ப்பாணம் மட்டும் அசாதராணமாகவும் மற்றதெல்லாம் சாதராணமாகவும் தெரியும்.

சிங்களத்தின் சிந்தனை முறையும் உங்களின் சிந்தனை முறையும் இறுதியில் ஒன்றாகவே இருக்கின்றது.

யதார்த்ததில் சாதாரணநிலை அசாதராணநிலை என்று பார்க்கப்போனால் ஏனைய பிரதேசங்களை விட யாழ்ப்பாணத்துக்கே சிங்களம் அதிக பணத்தை செலவுசெய்து அபிவிருத்திகளை செய்கின்றது. வசதிவாய்புகளை செய்கின்றது. புலம்பெயர் தேசத்தில் இருந்து அதிகமானவர்கள் யாழ்பாணம் சென்று வருகின்றனர். எப்போதும் தொடர்பில் இருக்கின்றனர். அங்கு நடக்கும் விடயங்கள் இங்கு தெரியாமல் இருப்பது என்பதற்கு ஆக்கபூர்வமான தடை எதுவும் இல்லை.

உங்கள் சிந்தனை முறை யாழைவிட்டு வெளியில் இல்லை. உங்கள் பழக்கவழக்கங்களும் அணுகுமுறையும் யாழ் மையவாதத்துக்குள்ளாகவே கட்டியமைக்கப்பட்டது. இயக்கங்களின் தலமைகளும் சரி இன்றய அரசியல் தலமைகளும் சரி புலம்பெயர் தேசத்து குழுக்கள் அமைப்புகள் அரசுகள் எதுவானாலும் சரி இந்தச் சிந்தனைமுறைக்குள் இருந்து வெளியில் வந்த சரித்திரம் கிடையாது. இதன் விழைவுதான் மதவாரியான பிழவும் பிரதேசவாரியான பிழவும் அழிவுகளும் என எல்லாம் நிழகழ்ந்து இன்று நீங்களாகவே வடக்கு என்ற வட்டத்துக்குள் வந்துவிட்டீர்கள். நாளை யாழ்ப்பாணம் என்ற உண்மையான பிரதேசவாரி வட்டத்துக்குள் வந்துவிடுவது தவிரக்கமுடியாத நிகழ்வு. இன்று வடக்கிற்கு அனுமதி பெறவைக்கும் சிங்களம் நாளை அதை சுருக்கி யாழுக்காக மாற்றும். அதை நீங்கள் அணுகும் விதம் சிங்களத்திற்கு வெற்றியாக அமையும்.

சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்பதுபோலவே எந்த ஒரு மையவாதியின் விடுதலை முயற்சியும் விடுதலை நோக்கி துளியும் நகராது.

சிங்களம் எப்போதும் புலம்பெயர் தேசத்தில் உள்ளவர்களின் முயற்சிகளை முக்கியப்படுத்துவதுபோல், அதைப்பார்த்துப் பயப்படுவதுபோல் தன்னைக் காட்டிக்கொண்டிருக்கும். அது உங்களை உசுப்பேத்துவது மட்டுமே. ஏனெனில் சிங்களத்துக்கு நன்கு தெரியும் புலம்பெயர் தேசத்தில் தமிழ்தேசீயம் என்ற முகமூடிக்குள் இருப்பது மையவாதம் என்பது. முகமூடிக்குள் இருப்பவர்கள் தாங்களாகவே சொல்வார்கள் வடக்கைத் தவிர ஏனைய இடங்கள் சாதாரணமாக இருக்கின்றது என்று. நாளை யாழ்பாணத்தை தவிர எல்லாம் சாரதாணம் என்பார்கள். மிஞ்சிய யாழ்ப்பாணத்திற்க வெள்ளையடித்து உலகிற்கு பளிச் என்று காட்டுவது எப்படி என்பது சிங்களத்திற்கு நன்கு தெரியும்.

உங்களுக்குத்தான் மையவாதம் பக்கவாதம் எல்லாம் தேவை ..........
 
எனக்கு மேலே இருக்கும் கருத்தை எதிர்கொள்ளும் ஒரே வாதம்தான்.
மேலே இருக்கும் கருத்து யாழ்பாணம் பற்றி இருந்தால் ....... அதற்குள் யால காட்டை கொண்டுவந்து வைத்து கொண்டு பக்கவாதம் பேசுவதற்கு எந்த தேவையும் இல்லை.
 
இப்போ வட  பகுதிக்கு செல்வதற்கு வெளிநாட்டவர்கள் விசா பெறவேண்டும் என்பது கட்டுப்பாடு. செய்தி அது. அது சொல்லினிட்கும் விடயமே அங்கு ஒரு சாதரன் நிலைமை இல்லை என்பதைத்தான்.
ஆனாலும் அங்கே எல்லாம் நன்றாக நடக்கிறது என்று இங்கே பித்தலாட்டம் ஆடுவோரின் கருத்தை சுட்டி காடியே நான் அதை எழுதினேன்.
 
இதற்குள் மையவாதம் மன்னாங்கட்டி வாதம் எல்லாத்தையும் செருகினதும் அல்லாது  .... சிங்களவரின் இலக்கும்  அதுதான் என்றும் முடித்துள்ளீர்கள்.
 
அப்போ தமிழர்கள் இனி என்ன கிழக்கிற்கும் விசா நடைமுறை வேண்டும் என்று ஆர்பாட்டம் செய்வதா? அல்லது அப்படி செய்தால்தான் ஏதும் நடக்க போகிறதா?
அப்படிதான் ஏதும் நடந்தாலும் ............. எனது கருத்திற்கும் அதற்கும் என்ன சம்மந்தம்??
 
மையவாதம் ... மணிக்கூட்டு வாதம் .. இவற்றில் ஏதும் இருந்தால் தனியாக திரி திறந்து எழுதலாம். அல்லது தனியாக  ஒரு கருத்தை பதியலாம்.
 
இல்லதா விடயங்களை ஏன் இங்கே செருகுறீர்கள்? 
 
சிவ ப்பில் இருப்பது  வெறும் அவதூறு என்பதை புரியும் ஒரு பக்குவம் என்றாலும் ஒரு பொது களத்தில் இருந்தால் நன்று

ஆயிரம் பச்சைகள் சண்டமாருதன். முன்பெல்லாம் எனக்கு கருணாவை நினைத்தாலே கோபம் பொத்துக்கொண்டு வரும். அண்மையில் கடைசி வரை ஜெயந்தனில் இருந்த ஒரு போராளியிடம் பேசக்கிடைத்தது. இப்போ யோசித்துப்பார்த்தால் அவருக்கு வேறு தெரிவு எதையும் சில உள்வீட்டு நரிகள்விட்டு வைக்கவில்லையோ என்றும் தோன்றிகிறது.

தமிழ்தேசியம் எனும் பசுத்தோலை சில மையவாத ஓநாய்கள் போர்திக்கொண்டதே எம் போராட்டத்தோல்வியின் முதற்காரணம்.

அந்தமான் இந்தியாவின் பகுதி இல்லை என்பது நெடுந்தீவு யாழ்பாணத்தின் பகுதியில்லை என்பதைப்போல் அபத்தமானது.

அந்தமான், காஸ்மீர் மணிப்பூருக்கு போகவே முடியாது என்பதும் பிழை. இந்தியா போய் டெல்லியில் வெளிவிவகார அமைச்சில் அனுமதி எடுத்துப் போகலாம்.

அந்தமானுக்கு ஒன் அரைவல் வீசா என்பதும் சுத்த பீலா. போர்ட் பிளேயருக்கு தமிழ் நாடுபோய் அங்கிருக்கும் மத்திய அரசாத்ஜிகாரிகளிடம் அனுமதி பெற்றே போகணும்.

பிரச்சினையில்லாத அருணாச்சல், சிக்கிம், ஹிமாச்சலின் பலபகுதிகள், லட்சதீவுக்கும் மேலதிக அனுமத்ஜியின்றி போக முடியாது.

ஓ மறந்து போனேன் இதெல்லாம் இந்தியாவின் பகுதியில்லை - செவ்வாய்கிரகத்தின் பகுதிகள் என்பதை.

However, visiting tribal areas in the Andaman and Nicobar Islands is prohibited.

All foreign nationals require a permit to visit the Andaman Nicobar Islands, which is easily available on arrival at Port Blair by flight or ship from the Immigration Authorities for 30 days .This is extendable for another 15 days with permission and the delegated authority to extend permission is the Superintendent of Police, Andaman District-Port Blair. The Restricted Area Permit can also be obtained from the Indian Missions overseas and also from the Foreigners Registration offices at Delhi, Mumbai, Chennai and Kolkata and from the Immigration Authorities at the Airports of New Delhi, Mumbai, Chennai and Kolkata.

Places covered under Restricted Area Permit:

A. For day & night visits:

  • Entire Island of Middle Andaman, excluding tribal reserve.
  • All islands of Mahatma Gandhi Marine National Park except Boat, Hobday, Twin Islands, Tarmugli, Malay & Pluto. (Night halt in these island are subject to special permission from Administration)
  • Entire Island of South Andaman, excluding tribal reserve.
  • Baratang Island.
  • North Passage Island.
  • Little Andaman Islands, excluding tribal reserve.
B. For day visit only:
  • Ross Island
  • Naracondam Island
  • Interview Island
  • Brother Island
  • Sister Island
  • Barren Island (Live Volcano) – restricted to visit on board vessels only with no lan

 

Edited by Maruthankerny

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் பச்சைகள் சண்டமாருதன். முன்பெல்லாம் எனக்கு கருணாவை நினைத்தாலே கோபம் பொத்துக்கொண்டு வரும். அண்மையில் கடைசி வரை ஜெயந்தனில் இருந்த ஒரு போராளியிடம் பேசக்கிடைத்தது. இப்போ யோசித்துப்பார்த்தால் அவருக்கு வேறு தெரிவு எதையும் சில உள்வீட்டு நரிகள்விட்டு வைக்கவில்லையோ என்றும் தோன்றிகிறது.

தமிழ்தேசியம் எனும் பசுத்தோலை சில மையவாத ஓநாய்கள் போர்திக்கொண்டதே எம் போராட்டத்தோல்வியின் முதற்காரணம்.

அந்தமான் இந்தியாவின் பகுதி இல்லை என்பது நெடுந்தீவு யாழ்பாணத்தின் பகுதியில்லை என்பதைப்போல் அபத்தமானது.

அந்தமான், காஸ்மீர் மணிப்பூருக்கு போகவே முடியாது என்பதும் பிழை. இந்தியா போய் டெல்லியில் வெளிவிவகார அமைச்சில் அனுமதி எடுத்துப் போகலாம்.

அந்தமானுக்கு ஒன் அரைவல் வீசா என்பதும் சுத்த பீலா. போர்ட் பிளேயருக்கு தமிழ் நாடுபோய் அங்கிருக்கும் மத்திய அரசாத்ஜிகாரிகளிடம் அனுமதி பெற்றே போகணும்.

பிரச்சினையில்லாத அருணாச்சல், சிக்கிம், ஹிமாச்சலின் பலபகுதிகள், லட்சதீவுக்கும் மேலதிக அனுமத்ஜியின்றி போக முடியாது.

ஓ மறந்து போனேன் இதெல்லாம் இந்தியாவின் பகுதியில்லை - செவ்வாய்கிரகத்தின் பகுதிகள் என்பதை.

அங்க இந்தியன் ஆமியே போக முடியாது ..............

பிரச்சனை இல்லாமல் இருப்பது ..... என்பதை பிரச்சனை ஒன்றும் இல்லாத போதுதான் தமிழில் அப்படி சொல்வார்கள்.
நான் நினைக்கிறேன் தமிழ் மொழி பிரச்சனையாக இது இருக்கலாம் என்று. 
 
map-india-china-western-sector-1988.jpg

China is in occupation of approximately 38,000 sq. kms of Indian territory in Jammu and Kashmir. In addition, under the so-called China-Pakistan "Boundary Agreement" of 1963, Pakistan ceded 5,180 sq. kms. of Indian territory in Pakistan Occupied Kashmir to China. China claims approximately 90,000 sq. kms. of Indian territory in Arunachal Pradesh and about 2000 sq. kms. in the Middle Sector of the India-China boundary. Beijing has stated that it does not recognise Arunachal Pradesh.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒரு போதும் நிகழ்ந்ததில்லை. போகும் போதே சிங்களத்தில்தான் கதைப்பேன்.

அது ஒரு காரணமாக இருக்கலாம் .

 

 

இலங்கையில் லஞ்சம் இருக்கா??

உனக்கு  சிங்களம் தெரிந்திருந்தால் தப்பித்துக்கொள்ளலாம்....

 

என்னதொரு பொறுப்புணர்வு

பாசம்.......... :(

இந்த நடைமுறை இப்பொழுது இல்லையாம் நீக்கி விட்டார்களாம் உண்மையா பொய்யா .

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா... ஒரு மாதிரி எங்கட பிரச்சனை அந்தமான் வரைக்கும் இழுத்துக்கொண்டு போய்ட்டம்.  :wub:

 

நான் போனமுறை ஒரு நாட்டுக்கு விசா கேட்டனான். தர மாட்டன் என்டு போட்டாங்கள். இது ஒரு நியாயமான முடிவு. எனக்கு விருப்பம் இல்லை நீ வாறது என்டு இந்த பிஞ்சு முகத்துக்கு நேர சொல்ல அவங்களுக்கு எப்படி தான் மனசு வந்துதோ  :huh:

 

ஆனா நீங்க வாங்கோ. வந்து நாட்டை அபிவிருத்து பண்ணுங்கோ என்டு விசா எல்லாம் தந்துபோட்டு அங்கை போனவுடன அங்க போகாதேங்கோ இங்க போகதேங்கோ. அதுக்கு இதை கொண்டுவாங்கோ இதுக்கு அதை கொண்டுவாங்கோ என்டதெல்லாம் சிறீலங்கா மாதிரி ஜனநா(ய்)கமும் கருத்துரிமையும் செழித்து வளர்கின்றா வல்லரசு நாடுகளிற்கு அழகில்லை.  :icon_mrgreen:

 

 

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒரு போதும் நிகழ்ந்ததில்லை. போகும் போதே சிங்களத்தில்தான் கதைப்பேன்.

அது ஒரு காரணமாக இருக்கலாம் .

இதில் பெரிதாக இனபேதம் எல்லாம் இல்லை - கிடைத்ததை புடுங்கும் பழக்கம். சிங்களம் தெரியாவிடில் இன்னும் வசதி.

கொசான் மேல் குறிப்பிட்ட பகுதியில் எதை சொல்ல வருகிறீர்கள் என விளக்க முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

பெருமாள்,

சிங்களம் தெரியாதவர்களிடம் புடுங்குவது லேசு. சென்னையில் யாழ்ப்பாணத்தமிழில் போய் "பேந்து, பின்னை" என்று பேசினால் புடுங்குவாங்களே அப்படி. இதை இனவாதம் எண்டு சொல்ல முடியாது. தவிச்ச முயலடிக்கும் சுயநலவாதம்.

அருணாச்சலில் பிரச்சினை இல்லை என்பது கிளர்ச்சி குழு இல்லை எந்த அர்த்தத்தில சொன்னது. 50ம் ஆண்டில இருந்து சீனாக்கும் இந்த்ஹியாக்கும் அருணாச்சல் யாருடயது எண்டு எல்லை புடுங்கல் இருக்கு, புலவரிற்க்காக பதிலில் முன்னமே நானே இதே திரியில் சொன்ன விடயம்தான் அது. அதுக்குப்போய் படம் எல்லாம் போட்டுக்காட்டி - அறிவாளி எண்டு காட்டுறாங்களாக்கும்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் செல்ல விசா எடுத்தவர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து தீவுப்பகுதிக்குச் செல்வதற்கு

இன்னொரு முறை விசா எடுக்க வேண்டுமா ?
 

  • கருத்துக்கள உறவுகள்

சிலர் இங்கே சிங்கள அரசுக்கு வக்காளத்து வாங்குவது போல வெட்டி விழ்த்தும் பேச்சுக்களால் பக்கங்களை நிரப்புகின்றனர். இங்கே வெளிநாட்டில் இருந்து போகின்ற தமிழ்மக்களுக்கான பிரச்சனையாக இது மட்டுப்படுத்தப்படவில்லை. ஐநாவின் செயற்பாடுகளை முடக்கும் செயலாகவும் இது மாற்றம்பெறுகின்றது. இந்தத் தடை மூலம் வெளிநாட்டு பத்திரிகையாளர்கள், ஊடகங்கள், ஐநா விசாரணை அதிகாரிகள், அவர்களுக்காகத் தகவல் சேகரிக்க முற்படுவோர், மற்றும் சுற்றுலாப் பயணிகள் உற்பட்ட பலர் தடை செய்யப்படுவதற்கான சாத்தியங்கள் உருவாகின்றன. அதுவே அவர்களின் தேவையாகவும் உள்ளது. இதில் ஐநா வந்து ஏதாவது கிழிக்கும் என்றும் சொல்லவரவில்லை. இந்தத் திட்டத்தை அவர்களே போட்டுக் கொடுத்திருப்பார்கள் என்று மனது நம்பும்படியான நம்பிக்கையீனங்களையே ஐநா செய்து கொண்டிருக்கின்றது. அதன் மீதான நம்பிக்கை என்பது அறவும் இல்லை. வன்னியில் யுத்தம் நடந்தபோது அவர்கள் அந்தவகையில் தான் தன் பணியாளர்களை வெளியேற்றி கொலைகளுக்கு வழிவகுத்தன. பின்னர் ஊடகவியளாளர்களைப் பாதுகாப்பு அச்சுறுத்தல் சொல்லி சிங்கள அரசு அனுமதிக்கவில்லை. அதனால் இலட்சக்கணக்கான தமிழ்மக்களை நாம் இழந்தோம். இன்றைய சூழலில் வெளிநாட்டில் வெளிநாட்டு ஊடகங்களுக்கு வடக்கு முற்றிலுமாக இருட்டடிப்புக்குக் கொண்டு வரப்படுகின்றது. இதனால் வடக்கில் நடக்கும் பிரச்சனைகளை வெளியில் கொண்டுவரமுடியாத செயலையே இவை உருவாக்கும். உள்ளூர் ஊடகவியளார்கள் எந்தவொரு வாய் திறப்பினையும் செய்யமுடியாது என்பதால் மகிந்த தொடரூந்து விடுவதையும், வீதிக்கு தார் போடுவதையும் அனைவரும் பார்த்து சந்தோசமாக இருக்கக்கடவதாக!!..

  • கருத்துக்கள உறவுகள்

என்னுமொரு முக்கியபாதிப்பு. எந்தச் கைத்தொழில்களும் வடக்கிற்குக் கொண்டு செல்ல முடியாது. இப்படியான சட்டத்தால் எந்த வெளிநாட்டு அமைப்புக்களும் அதற்கு முன்வரமாட்டார்கள். வடக்கு என்பது புலத்தில் இருந்து கொட்டப்படும் எம்மவர்களின் பணங்களை மறுபக்கம் சிங்கள அரசாங்கம் உறுஞ்சுவதற்கான வழியே ஆகும். நாங்கள் தீனி அனுப்பிக் கொண்டிருக்கும்போது, மறுபக்கம் சிங்கள அரசாங்கம் முட்டையைக் களவாடிக் கொள்ளும். உண்மையில் வடமாகாண அமைச்சுசின் கீழ்த் தான் கைத்தொழில் அமைச்சும் வருகின்றது(உள்கட்டமைப்பு அமைச்சு) என நினைக்கின்றேன். அவர்கள் கைத்தொழில்களை மேம்படுத்த வேண்டும். ஒட்டிச்சுட்டான் ஆலை, நீர்வேலி கண்ணாடித் தொழிற்சாலை... தவிர மீன்பதனிடும் தொழில்சாலைகள் என ஆரம்பிக்கலாம் என நினைக்கின்றேன். நம்மவர்கள் பலர் சிங்களப் பகுதியில் இருந்து வருகின்ற நண்டுகளைத் தான் வெளிநாடுகளில் விற்கின்றார்கள்.(ஐரோப்பிய யூனியனின் தடை என்ன பாதிப்புத் தரும் எனத் தெரியவில்லை) இதைவிட அதிக பாதிப்புத் தரப் போவது பிளாஸ்டிக் கழிவுகள். யாழ்ப்பாணத்தின் கழிவுநீர் கால்வாய்களில் அதிகம் அடைந்து கிட்பபது இவைகளே. அவற்றை மீள்பாவனைக்கு ஏற்விதத்தில் மாற்ற தொழிற்சாலை தேவை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.