Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக கிண்ண கிரிக்கெட் போட்டி - 2015 செய்திகளும் கருத்துக்களும்

Featured Replies

  • தொடங்கியவர்

இந்தியாவின் நட்சத்திர வீரர்களை பார்த்து பயமில்லை: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கேப்டன் அதிரடி பேட்டி!

 

பெர்த்: இந்திய அணியின் பெரிய நட்சத்திர வீரர்களை பார்த்து நாங்கள் பயப்படவில்லை என்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியின் கேப்டன் முகமது தாகிர் கூறியுள்ளார். இந்தியா-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் பெர்த் மைதானத்தில், இந்திய நேரப்படி, நாளை மதியம் 12 மணிக்கு தொடங்கும் போட்டியில் மோத உள்ளன. இரு அணிகளுமே இதற்காக தயாராகிவருகின்றன.

 

வெற்றி, தோல்வி இந்தியா இதுவரை மோதிய இரு போட்டிகளிலும் வெற்றி பெற்ற நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி, 2 போட்டிகளிலும் தோற்றுள்ளது. இருப்பினும் கடைசி வரை போட்டியை அளித்தே தோற்றுள்ளது.

 

பத்தோடு பதினொன்று.. இந்நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி கேப்டன் முகமது தாகிர் இன்று நிருபர்களிடம் கூறுகையில், "இந்தியாவில் பெரிய நட்சத்திர வீரர்கள் உள்ளனர் என்பது எங்களுக்கு தெரியும். ஆனாலும், இதற்கு முன்பு நாங்கள் ஆடிய இரு போட்டிகளைப்போலத்தான் இதையும் நினைத்துக் கொண்டுள்ளோம்.

 

ஸ்டேட்டசை பார்த்து பயப்படவில்லை எங்களைப் பொறுத்தளவில், இது மற்றொரு விளையாட்டு அவ்வளவுதான். இந்திய வீரர்களின் பெயர்கள், அந்த அணியின் ஸ்டேட்டஸ் ஆகியவற்றை பார்த்து நாங்கள் பயப்படவில்லை.

 

இந்தியாவிடம் களம் கண்டவர் தாகிர் 2004ல் இந்தியாவுக்கு எதிரான போட்டியின் மூலம் களமிறங்கினார். ஜாகிர்கான், அனில் கும்ப்ளே போன்ற பவுலிங் தாக்குதல்களை எதிர்கொண்டு அந்த போட்டியில் அரை சதமும் அடித்தார். இதுவரை 7 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள தாகிர், 89 ரன்கள் எடுத்துள்ளார். ஆப்-ஸ்பின் பந்து வீச்சு மூலம், 8 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

 

நாங்கள் வளர்கிறோமே.. தாகிர் மேலும் கூறுகையில், ஜிம்பாப்வேக்கு எதிராக ஆடியதைவிடவும், அயர்லாந்துக்கு எதிராக நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். அடுத்தடுத்த போட்டிகளில் எங்கள் திறன் மேம்பட்டுதான் வருகிறது. எனவே, இப்போது வெற்றி பெறுவது எப்படி என்பதை கற்றுக்கொள்ள வேண்டியதுதான் பாக்கி. இதுவரை இரு போட்டிகளிலுமே வெற்றிக்கு அருகே சென்றுதான் தோற்றுள்ளோம். ஆனால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

இரு இந்தியர்கள் ஐக்கிய அரபு எமிரேட்சில், பாலக்காட்டை சேர்ந்த கிருஷ்ண சந்திரன், மும்பையை சேர்ந்த ஸ்வப்னில் பாட்டில் ஆகிய இரு இந்தியர்கள் விளையாடுவது குறிப்பிடத்தக்கது.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/we-are-not-intimidated-india-s-big-stars-uae-captain-221823.html

  • Replies 827
  • Views 43.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

சூதாட்ட விடுதிக்கு சென்ற தேர்வு குழு தலைவர் மொயின்கான்! பாக். கிரிக்கெட் வாரியம் விசாரணை

 

கராச்சி: பாகிஸ்தான் கிரிக்கெட் தேர்வுக்குழு தலைவர் மொயின்கான் சூதாட்ட விடுதிக்கு சென்ற விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று அந்த நாட்டு கிரிக்கெட் வாரிய தலைவர் ஷகார்யார் கான் கூறினார். பாகிஸ்தான் தேர்வுக்குழு தலைவரும் முன்னாள் கேப்டனுமான மொயின்கான் நியூசிலாந்திந் கிறைஸ்ட்சர்ச் நகரிலுள்ள சூதாட்ட கேளிக்கை விடுதிக்கு (கேசினோ) சென்று உணவு சாப்பிட்டதாக தகவல் வெளியானது.

 

அதுவும் மே.இ.தீவுகளிடம் பாகிஸ்தான் ஆடிய போட்டிக்கு முந்தைய நாள் இரவில் இந்த விடுதிக்கு மொயின்கான் சென்றிருந்ததாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டது. ஏனெனில் அந்த போட்டியில் 150 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் படுதோல்வியடைந்திருந்தது. சூதாட்ட விடுதிக்கு சென்ற தேர்வு குழு தலைவர் மொயின்கான்! பாக். கிரிக்கெட் வாரியம் விசாரணை இதையடுத்து உடனடியாக பாகிஸ்தானுக்கு மொயின் திருப்பியனுப்பப்பட்டார்.

 

இதுகுறித்து பாக். கிரிக்கெட் வாரிய தலைவர் ஷகார்யார் கூறியது: சம்பவம் குறித்து முழு அளவிலான விசாரணை நடத்தப்படும். சூதாட்ட விடுதி இருப்பது கிறைஸ்ட்சர்ச்சில், ஆனால் பாகிஸ்தான் வீரர்கள் இருப்பது பிரிஸ்பேனில். எனவே விசாரணையில் சற்று காலதாமதம் ஆகியுள்ளது. விசாரணை முடிய மேலும் 3 நாட்களாவது தேவைப்படும். விசாரணையின் அம்சங்கள் பொதுமக்களுக்கும் தெரியப்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். பாகிஸ்தானின் தோல்வியில் இருந்து ரசிகர்கள் கவனத்தை திசைதிருப்புவதற்காக மொயின்கான் பதவியை பறித்து அவரை பலிகடாவாக்க அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/pcb-investigating-moin-issue-detail-shaharyar-221784.html

  • கருத்துக்கள உறவுகள்

உலகக் கோப்பை: ஏன்ய்யா, எங்களை இப்படி அலைக்கழிக்கிறீங்க: கடுப்பில் இலங்கை

 

மெல்போர்ன்: உலகக் கோப்பை போட்டிகளில் தாங்கள் அலைக்கழிக்கப்படுவதாக இலங்கை அணி தெரிவித்துள்ளது. உலகக் கோப்பை போட்டிகள் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடந்து வருகிறது. இலங்கை அணி முதல் இரண்டு போட்டிகளில் விளையாட நியூசிலாந்து சென்றது. அதன் பிறகு வியாழக்கிழமை வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் விளையாட ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகருக்கு வந்தது. விளையாடி முடிந்த சிறிது நேரத்தில் மீண்டும் நியூசிலாந்து கிளம்பிச் சென்றது. வரும் ஞாயிற்றுக்கிழமை வெல்லிங்டனில் நடக்கும் போட்டியில் இலங்கை இங்கிலாந்து அணியுடன் மோதுகிறது.

 

ஆஸ்திரேலியா வெல்லிங்டன் போட்டி முடிந்த பிறகு இலங்கை அடுத்த இரண்டு போட்டிகளில் விளையாட மீண்டும் ஆஸ்திரேலியா வர உள்ளது.

அசௌகரியம் ஆஸ்திரேலியாவுக்கு வருவதற்கு முன்பு நியூசிலாந்தில் போட்டிகளை முடிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். மாறி மாறி பயணம் செய்வது அசௌகரியமாக உள்ளது. மேலும் வீரர்கள் பயணத்திலேயே களைப்பாகிவிடுகின்றனர் என்று இலங்கை அணியின் மேனேஜர் மைக்கேல் டி ஜோய்ஸா தெரிவித்துள்ளார்.

 

ஓய்வு வெள்ளிக்கிழமை அணி வீரர்கள் ஆஸ்திரேலியாவில் இருந்து நியூசிலாந்துக்கு பயணம் செய்ததில் நேரம் போனது. சனிக்கிழமை அவர்கள் ஓய்வு எடுப்பார்கள். அப்படி என்றால் ஞாயிற்றுக்கிழமை போட்டிக்கு பயிற்சி செய்ய நேரம் இருக்காது என்றால் மைக்கேல்.

இந்தியா டோணி தலைமையிலான இந்திய அணி ஆடும் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. முதல் போட்டி அடிலெய்ட் நகரிலும், 2வது போட்டி மெல்போர்னிலும் நடைபெற்றது. நாளை நடக்கும் மூன்றாவது போட்டி ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நடைபெறுகிறது.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/exhausted-sri-lanka-unhappy-with-world-cup-travel-itinerary-221838.html

 

இவர்களை F- 16 ல்  கொண்டு போய் விட ஏலாதோ?? :lol:

  • தொடங்கியவர்

New Zealand
v
Australia
(14:00 local | 01:00 GMT | 02:00 CET)
India
v
U.A.E.
(14:30 local | 06:30 GMT | 07:30 CET)

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குப் புள்ளி போனாலும் பரவாயில்லை நாளைய மட்ச்யில் இந்தியா தோத்தால் எவ்வளவு சந்தோசம் :D

  • தொடங்கியவர்

நடப்பு உலகக்கோப்பையில் அசத்தும் டேனியல் வெட்டோரி: சுவையான தகவல்
 

 

நடப்பு உலகக்கோப்பைப் போட்டித் தொடரில் டேனியல் வெட்டோரி சிறப்பாக வீசி அசத்தி வருகிறார். இதனால் ஆஸி.க்கு எதிராக இவர் மீது ஏதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அவர் இந்த உலகக்கோப்பை தொடரில் இதுவரை 152 பந்துகளை வீசியுள்ளார். இதில் 1 பவுண்டரி ஒரு சிக்ஸ் மட்டுமே விட்டுக் கொடுத்துள்ளார். 90 பந்துகள் ரன் இல்லாத பந்துகளை அவர் வீசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இலங்கைக்கு எதிராக 10-0-34-2 என்று அருமையாக வீசிய போது ஒரேயொரு பவுண்டரி மட்டுமே கொடுத்தார்.

 

அடுத்ததாக ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக 8.2 ஓவர்கள் வீசி 1 மெய்டனுடன் 24 ரன்களுக்கு 3 விக்கெட். இதில் ஒரு சிக்ஸர் கொடுத்தார்.

 

இங்கிலாந்துக்கு எதிராக 7 ஓவர் 19 ரன் ஒரு விக்கெட். ஒரு பவுண்டரி கூட விட்டுக் கொடுக்கவில்லை.

 

மொத்தம் 25.2 ஓவர்களில் அவர் 77 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து இதுவரை 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இதே ஃபார்ம் தொடர்ந்தால் ஆஸி.க்கு கடினம்தான்.

 

ஆக்லாந்து ஈடன் பார்க்கில் நியூசி.யை வீழ்த்துவது கடினம் என்று ஸ்டீவ் வாஹ் கூறினாலும் புள்ளிவிவரங்கள் அடிப்படையில் இந்த மைதானத்தில் 16 போட்டிகளில் 11 போட்டிகளை வென்றுள்ளது ஆஸ்திரேலியா, இதில் கடைசி 5 போட்டிகளில் 4-இல் ஆஸி. வெற்றி.

 

பிரெண்டன் மெக்கல்லம் இன்னும் 47 ரன்களை எடுத்தால் ஆஸி.க்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் 1000 ரன்களை எடுத்த 4-வது நியூசி. வீரர் என்ற பெருமையை அடைவார்.

 

இங்கிலாந்தை நசுக்கிய டிம் சவுதி ஆஸி. பேட்ஸ்மென் ஷேன் வாட்சனுக்கு ஒரு நாள் போட்டிகளில் 75 பந்துகளை வீசியுள்ளார். இதுவரை ஷேன் வாட்சனை, சவுதி வீழ்த்தியதில்லை, ஆனால் வாட்சன் சவுதியை 75 ரன்கள் அடித்துள்ளார்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/article6941861.ece

  • தொடங்கியவர்

மெக்கல்லம் அதிரடி தொடருமா? வெற்றி யாருக்கு? ஆஸ்திரேலியா-நியூசிலாந்து போட்டி: ஒரு பார்வை
 

 

இந்த உலகக்கோப்பை போட்டித் தொடரில் இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு அடுத்தபடியாக மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் போட்டியில் நாளை ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

 

ஏற்கெனவே ஆஸி.-நியூசி. அணிகள் இறுதிப் போட்டியில் மோதும் என்று கிளென் மெக்ரா உள்ளிட்டோர் கணித்துள்ள நிலையில் நாளை ஆக்லாந்தின் ஈடன் பார்க் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெறுகிறது.

 

நியூசிலாந்து அணி தங்களது அனைத்துப் போட்டிகளிலும் இதுவரை வெற்றி கண்டுள்ளது. ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்தை வீழ்த்திய பிறகு வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டு புள்ளிகள் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன.

 

முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாஹ், நியூசிலாந்து அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்த வாய்ப்பு என்று கூறுகிறார்.

 

இவர் அதிகம் நியூசிலாந்து மைதானங்களில் விளையாடியிருப்பதால், “ஆக்லாந்து ரசிகர்கள் நியூசிலாந்துக்கே ஏகமனதாக ஆதரவு அளிப்பவர்கள். மேலும் கிரிக்கெட் ஆட மிகவும் கடினமான இடம் ஆக்லாந்து, அங்கு விளையாடி வெற்றி பெறுவது என்பது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை.”

ஆனாலும் ஆஸ்திரேலிய அணியில் நியூசி.யை வீழ்த்த நிறைய வீரர்கள் உள்ளனர். இருப்பினும் ஆக்லாந்தில் நியூசிலாந்தை வீழ்த்துவது கடினம்.” என்றார் ஸ்டீவ் வாஹ்.

இங்கிலாந்தை அன்று ஊதித்தள்ளினார் பிரெண்டன் மெக்கல்லம். இங்கிலாந்து இன்னிங்ஸ் 123 ரன்களுக்கு மடிய, பல்தேய்த்துவிட்டு வந்து பார்த்தால் 7 ஓவர்களில் நியூசி.யின் ஸ்கோர் 100 ரன்கள். எந்த பவுலருக்கும் மெக்கல்லம் கிரீஸில் நிற்கவில்லை.

 

ஆனால் நாளை ஆஸ்திரேலிய அணியை 123 ரன்களுக்கெல்லாம் நியூசி.யால் சுருட்ட முடியாது என்று கூறலாம். டிம் சவுதீ, டிரெண்ட் போல்ட் ஆகியோரை எப்படி ‘கவனிக்க’ வேண்டும் என்பதை இந்நேரம் ஆஸி.பயிற்சியாளர் டேரன் லீ மேனும், கேப்டன் மைக்கேல் கிளார்க்கும் தீர்மானித்திருப்பர். வார்னர், ஏரோன் ஃபின்ச், கிளார்க், மேக்ஸ்வெல், வாட்சன், ஸ்டீவ் ஸ்மித் மிட்செல் மார்ஷ் வரிசையில் நிச்சயம் 4 வீரர்கள் ஆடி விடுவார்கள். பந்துவீச்சில் பேட் கமின்ஸ் வருகிறார்.

 

நியூசி. அணியில் சவுதீ, டிரெண்ட் போல்ட் தவிர அனுபவமிக்க டேனியல் வெட்டோரியின் பங்கும் நாளை முக்கியமானது. அதாவது 300 ரன்களுக்கும் மேல் நியூசிலாந்து குவித்து விட்டால், பந்து வீச்சில் வெட்டோரியின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கும்.

 

அதேபோல் பிரெண்டன் மெக்கல்லத்தை தொடக்கத்திலேயே வீழ்த்தவும் இந்நேரம் வியூகம் வகுக்கப்பட்டிருக்கும். ஆனால் கேன் வில்லியம்சன் என்ற ஒரு வீரர் எந்தப் பந்துவீச்சையும் நின்று நிதானித்து பிறகு ஒரு கை பார்க்கக்கூடியவர், இவருக்கு எதிராக ஆஸி.வியூகம் செல்லுபடியாவது கடினமே. அதே போல் ராஸ் டெய்லர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான எடுத்த 117 ரன்களே நியூசி அணி வீரர் ஒருவரின் ஆஸி.க்க்கு எதிரான அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோராகும். நாளை இவையெல்லாம் உடைய வாய்ப்பிருக்கிறது.

 

மெக்கல்லமிற்கு எதிராக பேட் கமின்ஸை கண்ணில் காண்பிக்காமல் இருப்பது நல்லது. மிட்செல் ஸ்டார்க், மிட்செல் ஜான்சன் ஆகியோரை பயன்படுத்துவதே சிறந்தது. அப்படித்தான் கிளார்க் செய்வார் என்று எதிர்பார்க்கலாம். கிளார்க் ஒரு புத்திசாலித் தனமான, ஆக்ரோஷமான கேப்டன், பிரெண்டன் மெக்கல்லம்மின் சமீபத்திய கேப்டன்சி-பேட்டிங் எழுச்சி ஆகியவற்றுக்கிடையே, போட்டியில் எந்த அணி வெல்லும் என்ற சுவாரசியத்தை விட கிரிக்கெட் நிச்சயம் வெல்லும் என்று எதிர்பார்க்கலாம்.

2010-ஆம் ஆண்டு ஈடன் பார்க் மைதானத்தில் நியூசி.யை ஆஸ்திரேலியா வீழ்த்தியது. 2005-இல் நியூசிலாந்து அணி 337 ரன்கள் வெற்றி இலக்கை அனாயசமாகத் துரத்தி வென்றது.

 

எந்த நிலையிலும் நியூசிலாந்து அணி ஒரு சுலபமான அணி அல்ல. அதுவும் அவர்கள் சொந்த மண்ணில் நிச்சயம் அவர்கள் ஆட்டத்தில் கூடுதல் பொறி பறக்கும்.

‘ஸ்லெட்ஜிங்’ ஒரு பெரிய பங்காற்றும் என்று எதிர்பார்க்கலாம். இதில் ஆஸி. வீரர்கள் பலமானவர்கள். இதன் மூலம் நியூசி. பவுலர்களின் தன்னம்பிக்கையை குலைக்க முயற்சி செய்யலாம்.

எது எப்படியிருந்தாலும் ஒரு அருமையான போட்டி காத்திருக்கிறது. நாளை காலை இந்திய நேரப்படி காலை 6.30 மணி முதல் இந்தப் போட்டியைக் காணலாம்

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88/article6941224.ece

  • கருத்துக்கள உறவுகள்

Australia 107/9 (22.1 ov)

  • தொடங்கியவர்

Aus 151allout

  • தொடங்கியவர்

NZ 51/1 after 5.1overs

  • தொடங்கியவர்

M.Johnson 4.4 overs 66runs.

  • தொடங்கியவர்

1 விக்கெட்டால் நியூசிலாந்து வெற்றி

  • கருத்துக்கள உறவுகள்

அவுசும் கவுத்திட்டுதா

  • தொடங்கியவர்

எளிய இலக்கை போராடி எட்டி ஆஸி.யை வென்றது நியூஸி.

 

நியூஸிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை லீக் போட்டியில், நியூஸிலாந்து 1 விக்கெட் வித்தியாசத்தில் தடுமாறி வெற்றி பெற்றுள்ளது.

151 ரன்கள் என்ற எளிதான இலக்கை விரட்டிய நியூஸி. அணி, துவக்க வீரர்கள் கப்டில் மற்றும் மெக்கல்லம் மூலமாக அதிரடி துவக்கத்தைப் பெற்றது. சிக்ஸர்களும், பவுண்டரிகளும் அடுத்தடுத்து எளிதாக வர 3 ஓவர்களில் 39 ரன்கள் குவிக்கப்பட்டன.

 

4-வது ஓவரில் கப்டில் ஆட்டமிழந்தாலும், மெக்கல்லம் தனது விளாசலை விடவில்லை. 5 ஓவர்களில் நியூஸி. 50 ரன்கள் சேர்க்க, 7-வது ஓவரில் மெக்கல்லம் 21 பந்துகளில் அரை சதம தொட்டார்.

 

ஆனால் அடுத்த ஓவரிலேயே அவர் கம்மின்ஸ் பந்தில் வீழ்ந்தார். தொடர்ந்து ஆடிய டெய்லர், மற்றும் எல்லியட் அடுத்தடுத்து ஆட்டமிழக்க ஆட்டம் சட்டென எதிர்பாரத கட்டத்திற்கு திரும்பியது. 79 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் என்ற நிலையிலிருந்து 131 ரன்களுக்கு 4 விக்கெட் என்ற நிலைக்கு நியூஸி. அணியை ஆண்டர்சன் - வில்லியம்சன் ஜோடி எடுத்துச் சென்றது.

 

ஆண்டர்சன் 26 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, அடுத்து ஆட வந்த ரோஞ்சி, தான் சந்தித்த இரண்டாவது பந்தை சிக்ஸருக்கு விரட்டினார். ஆனால் அதற்குப் பின் ரன் ஏதும் சேர்க்காத ரோஞ்சி, ஸ்டார்க்கின் அடுத்த ஓவரில் ஆட்டமிழந்தார்.

 

அடுத்து களமிறங்கிய வெட்டோரி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். 3 விக்கெட்டுகள் கைவசம் இருக்க, வெற்றிக்கு 7 ரன்கள் மட்டுமே தேவையாயிருந்தது. ஸ்டார்க் வீசிய அடுத்த ஓவரில் வில்லியம்சன் ஒரு ரன் எடுக்க, மில்னே, சவுத்தி இருவரும் அடுத்தடுத்து பெவிலியன் திரும்ப நியூஸி. தோல்வியின் விளிம்புக்குச் சென்றது.

ஒரு விக்கெட் எடுத்தால் ஆஸி.க்கு வெற்றி, 6 ரன்கள் எடுத்தால் நியூஸி.க்கு வெற்றி என்ற நிலையில், கம்மின்ஸ் வீசிய அடுத்த ஓவரின் முதல் பந்தை வில்லியம்சன் சிக்ஸருக்கு விரட்டி, நியூஸிலாந்தை வெற்றிக்கு இட்டுச் சென்றார்.

 

வெகு சிறப்பாக பந்துவீசி ஆஸி.யை வெற்றிக்கு அருகில் எடுத்துச் சென்ற ஸ்டார்க், 9 ஓவர்கள் வீசி, 28 ரன்கள் கொடுத்து, 6 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

முன்னதாக டாஸ் வென்று பேட்டிங்கை தேர்ந்தெடுத்த ஆஸ்திரேலிய அணிக்கு முதல் இரண்டு ஓவர்கள் மட்டுமே சிறப்பாக இருந்தன. 2 ஓவர்களில் 24 ரன்கள் என்ற நிலையில் சவுத்தீ வீசிய 3-வது ஓவரின் முதல் பந்தை ஃபின்ச் சிக்ஸருக்கு விளாசினார். ஆனால் அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார்.

 

அடுத்து சற்று நிதானித்த ஆஸ்திரேலிய வீரர்கள் ரன் சேர்ப்பு வேகத்தை குறைத்துக் கொண்டனர். ஆனால் 13-வது ஓவரின் கடைசி பந்திலும், அடுத்த ஓவரின் முதல் பந்திலும் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழ, அந்த அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. 80 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் என்ற நிலையிலிருந்து ஆஸ்திரேலியா மீளவே இல்லை.

தொடர்ந்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழ 32.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 151 ரன்களை மட்டுமே ஆஸ்திரேலியா எடுத்தது.

நியூஸிலாந்து வேகப் பந்துவீச்சாளர் போல்ட் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவரது பந்துவீச்சில் ஆஸ்திரேலிய அணி நிலை குலைந்தது. சவுத்தி, விட்டோரி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

 

ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக ஹாடின் 43 ரன்களை சேர்த்தார். வார்னர் 34 ரன்களும், வாட்சன் 23 ரன்களும் எடுத்தனர். ஏனையோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AE%BF/article6944388.ece

  • தொடங்கியவர்

ஒரே பந்தில் 11 ரன்கள் அள்ளிக் கொடுத்த ஆஸ்திரேலிய முன்னணி பவுலர் ஜான்சன்! 

 

ஆக்லாந்து: உலக தரம் வாய்ந்த பவுலர் ஒருவர், ஒரே பந்தில், அதுவும் வீசிய முதல் பந்திலியே, 11 ரன்கள் அள்ளிக் கொடுத்தார் என்றால் நம்ப முடிகிறதா.. ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும். நியூசிலாந்து-ஆஸ்திரேலியா நடுவேயான லீக் போட்டி ஆக்லாந்து மைதானத்தில் இன்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 151 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதைத் தொடர்ந்து நியூசிலாந்தின், பிரெண்டன் மெக்கல்லம், மார்டின் குப்தில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

 

ஒரே பந்தில் 11 ரன்கள் அள்ளிக் கொடுத்த ஆஸ்திரேலிய முன்னணி பவுலர் ஜான்சன்! முதல் ஓவரை மிட்சேல் ஜான்சன் வீசினார். உலகின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் பட்டியலில் இருப்பவர் ஜான்சன் என்பதால், ஏதாவது மேஜிக் செய்து, ஆட்டத்தின் போக்கை ஆஸ்திரேலியா பக்கம் மாற்றுவார் என்று அந்த நாட்டு ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் நடந்ததோ வேறு. ஜான்சன் தனது முதல் பந்தை லெக் திசையில் வீச, அதை குப்தில், 4 ரன்களுக்கு விரட்டினார்.

 

ஆனால் காலை கிரீசுக்கு வெளியே வைத்து எறிந்ததால் அந்த பந்தை நோ-பால் என அறிவித்தார் அம்பயர். எனவே, பவுண்டரி மற்றும் நோ பாலுக்கான 1 ரன் என 5 ரன்கள் கிடைத்தது நியூசிலாந்துக்கு. நோ-பால் வீசியதால், அடுத்த பந்து ஃப்ரீ ஹிட்டாக கொடுக்கப்பட்டது. இதையடுத்து வேகமாக ஓடி வந்த ஜான்சன், மிடில்-ஸ்டம்ப் லைனில்ஸ பிட்ச் செய்து அவுட் ஸ்விங் செய்தார். ஆனால் குப்தில் அதை சர்வசாதாரணமாக லாங்க்-ஆப் திசையில் சிக்சராக மாற்றினார்.

 

எனவே முதல் பந்திலேயே 11 ரன்கள் கிடைத்தது நியூசிலாந்துக்கு. ஒரே பந்தில் 11 ரன்களை வாரி வழங்கினார் ஜான்சன். முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதைப்போல, அதன்பிறகு ஜான்சன் பந்து வீச்சு மைதானத்தின் நாலாபுறமும் விரட்டியடிக்கப்பட்டது தனிக்கதை.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/mitchell-johnson-gives-11-runs-his-firts-delivery-221858.html

  • தொடங்கியவர்

பவர் ஹிட்டிங்கை அதிகம் பயிற்சி செய்ததே சரிவுக்குக் காரணம்: மைக்கேல் கிளார்க்
 

 

நியூசிலாந்துக்கு எதிராக த்ரில்லரில் தோல்வி அடைந்தது ஆஸ்திரேலியா. தோல்விக்குக் காரணம் மோசமான பேட்டிங்கே என்று ஆஸி. கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.

 

ஆக்லாந்தில் இன்று நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் பரபரப்பான முறையில் நியூசி. வெற்றி பெற்றது.

மிட்செல் ஸ்டார்க் அபாரமாக வீசி ஏறக்குறைய தனிநபராக போட்டியை ஆஸி.க்கு வெற்றி தேடி தந்திருப்பார் என்ற போதிலும், கிளார்க் இன்றைய ஆஸி. பேட்டிங்கை மன்னிக்கும் மனநிலையில் இல்லை. 80/1 என்ற நிலையிலிருந்து 106/9 என்ற மோசமான நிலைக்கு ஆஸி. சரிந்தது.

 

“டி20 கிரிக்கெட்டிலும் சரி, ஒருநாள் கிரிக்கெட்டிலும் சரி பவர் ஹிட்டிங் மீது சில வேளைகளில் அதீத கவனம் செலுத்தப்படுகிறது என்று நான் கருதுகிறேன்.

புதிய பந்தில், ஸ்விங் ஆகும் தருணங்களில் சிறப்பாக ஆடுவது பற்றிய கவனம் பயிற்சிகளின் போது இல்லை என்றே நான் கருதுகிறேன். நியூசிலாந்தில் மட்டுமல்ல உலகின் எங்கு சென்று ஆடினாலும் புதிய பந்தில் ஸ்விங் இருக்கவே செய்யும், எனவே அதனை ஒருவாறு சமாளித்து பிறகு அடிக்கத் தொடங்கும் பயிற்சி முறையே சிறந்தது.

அடுத்த போட்டியில் பெர்த்தில் ஸ்விங் ஆகும், பிரிஸ்பனில் ஸ்விங் ஆவதை அனுபவித்திருக்கிறோம். மெல்போர்ன், சிட்னி என்று ஸ்விங் ஆகும். ஆகவே பேட்டிங்கில் இன்னும் சில விஷயங்களுக்கு நாங்கள் தீர்வு காண வேண்டியுள்ளது.

 

இந்த இடத்தில் நாங்கள் மிக மிக மோசமாக இருக்கிறோம் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. ஷாட் தேர்வு மிக மோசம், அனைத்தையும் விட தடுப்பாட்ட உத்தி மற்றெல்லாவற்றையும் விட மோசமாக உள்ளது.

 

இன்னும் ரன்கள் தேவை, நான் உட்படவே சேர்த்தே கூறுகிறேன். இன்று மிகுந்த ஏமாற்றமாக உள்ளது. என்னுடைய ஷாட் தேர்வும் மோசமே.

151 ரன்களை வெற்றிகரமாக தடுத்து விட முடியும் என்றே உறுதியாக நினைத்தேன். நான் அவர்களிடம் தெளிவாகக் கூறிவிட்டேன். ‘151 ரன்கள் போதுமானது மீதியை நீங்கள்தான் செய்ய வேண்டுமென்று’.

இவ்வாறு கூறினார் மைக்கேல் கிளார்க்.
 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D/article6945132.ece

 

  • தொடங்கியவர்

யு.ஏ.இக்கு எதிரான போட்டி: 19வது ஓவரிலேயே 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!

 

பெர்த்: இந்தியா-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டியில் எமிரேட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 102 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 18.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு அந்த ரன்களை எட்டிப்பிடித்தது இந்தியா. பெர்த் நகரில் இந்திய நேரப்படி பகல் 12 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில், இந்தியா-யு.ஏ.இ அணிகள் மோதி வருகின்றன. டாசில் வெற்றி பெற்ற யு.ஏ.இ முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் ஒரு மாற்றம்தான் செய்யப்பட்டிருந்தது. காயமடைந்த முகமது ஷமிக்கு பதிலாக புவனேஸ்வர் குமார் சேர்க்கப்பட்டார். யு.ஏ.இ அணி மாற்றமில்லாமல் களமிறங்கியது.

 

பவுன்சர் போட்டு தாக்கிய இந்தியா வேகப்பந்து மற்றும் பவுன்சர் பந்து வீச்சுக்கு சாதகமான பெர்த் மைதானத்தில், இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தினர். யு.ஏ.இ அணியின் தொடக்க வீரர் அம்ஜத் அலி 4 ரன்கள் எடுத்திருந்தபோது புவனேஸ்வர் குமார் வீசிய பவுன்சரை அடிக்க முற்பட்டு டோணியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

 

அஸ்வின் அசத்தல் மற்றொரு தொடக்க வீரர் ஆன்ட்ரி பெரேன்கர், உமேஷ் யாதவ் பவுன்சரில் டோணியிடம் கேட்ச் கொடுத்து 4 ரன்களில் வெளியேறினார். கிருஷ்ண சந்திரன் 4 ரன்கள் எடுத்திருந்தபோது அஸ்வின் பந்தில் ரெய்னாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். குர்ரம்கான் 14 ரன்கள் எடுத்தபோது அஸ்வின் பந்து வீச்சில், ரெய்னாவிடம் கேட்ச் கொடுத்தார். விக்கெட் கீப்பர் ஸ்வப்னில் பாட்டில் 7 ரன்களில், அஸ்வின் பந்து வீச்சில் தவானிடம் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து வீழ்ந்தார்.

 

ஆல் அவுட் ரோகன் முஸ்தபா 2 ரன்களில், மோகித் ஷர்மா பந்து வீச்சில் எல்பிடபிள்யூ ஆனார். அம்ஜத் ஜாவித் 2 ரன்களிலும், முகமது தாகிர் 1 ரன்களிலும் ஜடேஜா பந்து வீச்சில் அவுட் ஆனார்கள். முகமது நவீத் 6 ரன்களில் அஸ்வின் பந்து வீச்சில் கிளீன் பௌல்ட் ஆனார். சைமான் அன்வர் மட்டும் சிறிது போராடி 35 ரன்கள் எடுத்தார். அவரும் உமேஷ் யாதவ் பந்து வீச்சில் கிளீன் பௌல்ட் ஆக, 31.3 ஓவர்களில் யு.ஏ.இ பேட்டிங் முடிவுக்கு வந்தது. அந்த அணி 31.3 ஓவர்களில் 102 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

 

இந்திய பவுலர்கள் அபாரம் சீட்டு கட்டு போல சரிந்த யு.ஏ.இ பேட்டிங் வரிசையால், பந்து வீச வந்த இந்திய பவுலர்கள் அனைவருமே விக்கெட்டுகளுடனே திரும்பினர். இந்திய தரப்பில் அஸ்வின் அதிகபட்சமாக. 25 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதையடுத்து இந்தியா தனது பேட்டிங்கை தொடங்கியது.

 

தவான் அவுட் ஸ்கோர் 29 ரன்களாக இருந்தபோது, ஷிகர் தவான் 14 ரன்களில் அவுட் ஆனார். முகமது நவீத் பந்து வீச்சில் ரோஹன் முஸ்தபாவிடம் கேட்ச் கொடுத்து தவான் விக்கெட்டை பறிகொடுத்தார். முதல் போட்டியில் அரைசதம், 2வது போட்டியில் சதம் அடித்த தவான், இப்போட்டியில் சற்று ஏமாற்றம் அளித்தார்.

 

ரோகித் அபாரம் ஆனால் முதல் இரு போட்டிகளிலும் சொதப்பிய ரோகித் ஷர்மா சிறப்பாக ஆடி 55 பந்துகளில் 57 ரன்கள் குவித்தார். அவர் ஃபார்முக்கு வந்தது இந்தியாவுக்கு நல்ல சேதியாக அமைந்தது. விராட் கோஹ்லி நிதானமாக ஆடி 33 ரன்கள் எடுத்தார். 18.5வது பந்தில் ரோகித் ஷர்மா பவுண்டரி விளாச, 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது இந்தியா. மேன் ஆப் தி மேட்ச் விருது அஸ்வினுக்கு வழங்கப்பட்டது.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/icc-cricket-world-cup-2015-india-vs-icc-united-arab-emirates-221845.html

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

உலக கோப்பை தொடர்களுக்கு பிறகு முதல் முறையாக, ஆல்-அவுட் ஆன ஆஸ்திரேலியா!

 

ஆக்லாந்து: கடந்த 4 உலக கோப்பைகளிலும் எந்த ஒரு போட்டியிலும் ஆல்-அவுட் ஆகாத ஆஸ்திரேலியா முதல் முறையாக இன்று அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. இது ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கு ஒரு அபசகுணம் என்பது சரியாக இருக்கும். உலக கோப்பையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் நாடு ஆஸ்திரேலியா. 1987ம் ஆண்டு முதன்முறையாக ஆஸ்திரேலியா உலக கோப்பையை வென்றது. 1

 

992ல் பாகிஸ்தானும், 1996ல் இலங்கையும் உலக கோப்பை தொடரில் சாம்பியன் ஆகின. 4 உலக கோப்பை தொடர்களுக்கு பிறகு முதல் முறையாக, ஆல்-அவுட் ஆன ஆஸ்திரேலியா! தொடர் வெற்றிகள் 1999ல் ஆஸ்திரேலியா மீண்டும் உலக கோப்பையை கைப்பற்றியது. இதன்பிறகு, 2003 மற்றும் 2007 ஆகிய ஆண்டுகளிலும் தொடர்ச்சியாக ஆஸ்திரேலியாவே சாம்பியன் ஆனது. தடை போட்ட இந்தியா கடந்த 2011 உலக கோப்பையின்போது அரையிறுதிவரை வந்து இந்தியாவிடம் தோற்று வெளியேறியது

 

ஆஸ்திரேலியா. ஆல்-அவுட் இல்லை 1999 முதல் 2011 உலக கோப்பை அரையிறுதி வரை ஆஸ்திரேலியா 27 போட்டிகளில் ஆடியுள்ளது. ஆனால் எந்த போட்டியிலுமே ஆல்-அவுட் ஆகவில்லை. 200 ரன்களுக்கும் கீழே ரன்கள் எடுத்த போட்டிகளில் கூட அனைத்து விக்கெட்டுகளையும் எதிரணி கைப்பற்றவிட்டதில்லை ஆஸ்திரேலியா. குறைந்த ரன்கள் எடுத்தாலும், எதிரணியை அதற்கும் குறைவான ரன்களில் மடக்கிப்போட்டு வந்தது ஆஸ்திரேலியா.

 

முதல் முறை ஆனால், இன்று நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 151 ரன்களில் ஆஸ்திரேலியா ஆல்-அவுட் ஆகியுள்ளது. அதுவும் 32.2 ஓவர்களிலேயே மூட்டை கட்டிவிட்டது ஆஸ்திரேலியா. அந்த அணிக்கு இது மிகப்பெரும் மனரீதியான பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. மிக குறைந்த ஸ்கோர் மேலும் உலக கோப்பையில் 1983க்கு பிறகு ஆஸ்திரேலியா எடுத்த மிக குறைந்த ஸ்கோர் இதுதான்.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/australia-gets-all-out-after-27-consecutive-wc-inns-221864.html

  • தொடங்கியவர்

உலக கோப்பையில் நாளை இரு போட்டிகள்!

 

வெலிங்டன்: உலக கோப்பையில் நாளை இரு போட்டிகள் நடைபெற உள்ளன. உலக கோப்பையில் குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து-இலங்கை அணிகள் நியூசிலாந்தின் வெலிங்டன் மைதானத்தில் இந்திய நேரப்படி நாளை காலை 3.30 மணிக்கு தொடங்க உள்ள போட்டியில் மோத உள்ளன. உலக கோப்பையில் நாளை இரு போட்டிகள்! இங்கிலாந்து 2 போட்டிகளில் தோல்வியும், ஒரு போட்டியில் வெற்றியும் பெற்றுள்ளது.

 

இலங்கை இரு போட்டிகளில் வெற்றி பெற்று, ஒரு போட்டியில் தோற்றுள்ளது. எனவே இப்போட்டியில் இங்கிலாந்து வென்றால், ஏ குரூப்பில் புள்ளிகள் பட்டியலில் பெரும் மாற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே இந்த போட்டி முக்கியத்துவம் பெறுகிறது.

 

இந்திய நேரப்படி நாளை காலை 9 மணிக்கு தொடங்கும் மற்றொரு ஆட்டத்தில், குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான்-ஜிம்பாப்வே அணிகள் பலப்பரிட்சை நடத்த உள்ளன. பாகிஸ்தான் ஏற்கனவே ஆடிய 2 போட்டிகளிலும் தோற்றுள்ளது. ஜிம்பாப்வே 3 போட்டிகளில் ஆடி 1 வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டி பாகிஸ்தானுக்கு, வாழ்வா, சாவா போட்டியை போன்றதுதான் என்பதால் அந்த போட்டியிலும் விறுவிறுப்பு இருக்கும்.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/icc-cricket-world-cup-2015-england-vs-sri-lanka-pakistan-vs-221903.html

  • தொடங்கியவர்

England
v
Sri Lanka
(begins in 2h 24m)
Pakistan
v
Zimbabwe
(13:30 local | 03:30 GMT | 04:30 CET)

  • தொடங்கியவர்

இங்கிலாந்து துடுப்பெடுத்தாடுகிறது

  • கருத்துக்கள உறவுகள்

england good start

42-0-5

  • கருத்துக்கள உறவுகள்

62-1-10

  • கருத்துக்கள உறவுகள்

Eng 309/6 in 50 overs

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.