Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக கிண்ண கிரிக்கெட் போட்டி - 2015 செய்திகளும் கருத்துக்களும்

Featured Replies

  • தொடங்கியவர்

West indies won by 6 wickets

  • Replies 827
  • Views 43.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

20 ஓவர் மிச்சம் வைத்து எமிரேட்ஸை புரட்டிப் போட்ட வெஸ்ட் இண்டீஸ்.. காலிறுதிக்குத் தகுதி!

 

நேப்பியர்: ஜேசன் ஹோல்டரின் பிரமாதமான பந்து வீச்சு, கார்ட்டர், திணேஷ் ராம் தின், சார்லஸ் ஆகியோரின் சிறப்பான ஆட்டம் காரணமாக இன்று நடந்த உலகக் கோப்பைப் போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை மேற்கு இந்தியத் தீவுகள் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று காலிறுதிச் சுற்றுக்குள் நுழைகிறது. இன்று நேப்பியரில் நடந்த இ்ப்போட்டியில் டாஸ் வென்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர் முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார்.

 

எமிரேட்ஸ் அணி முதலில் பேட் செய்து 175 ரன்களில் ஆல் அவுட் ஆனது. 20 ஓவர் மிச்சம் வைத்து எமிரேட்ஸை புரட்டிப் போட்ட வெஸ்ட் இண்டீஸ்.. காலிறுதிக்குத் தகுதி!  மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் வேகப் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் எமிரேட்ஸ் வீரர்கள் சுருண்டார்கள். ஒரு கட்டத்தில் அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 46 ரன்கள் என்ற மோசமான நிலையில் இருந்தது. இருப்பினும் பின்வரிசை வீரர்களால் அணி மீண்டு 175 ரன்களுக்கு வந்து சேர்ந்தது. இந்த ஸ்கோரை பின்னர் 4 விக்கெட்களை இழந்து மேற்கு இந்தியத் தீவுகள் அணி எட்டிப் பிடித்து வெற்றியைத் தட்டிச். சென்றது. ஜான்சன் சார்லஸ் 55 ரன்கள் எடுத்தார்.

 

ஜோனதன் கார்ட்டர் 50 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆட்டத்தின் 31வது ஓவரின் போது வெற்றி வெஸ்ட் இண்டீஸ் வசமானது. இந்த வெற்றியின் மூலம் தற்போது பி பிரிவில் புள்ளிகள் பட்டியலில் 3வது இடத்தில் இருக்கிறது மேற்கு இந்தியத் தீவுகள் அணி. இன்று பி பிரிவில் பாகிஸ்தான், அயர்லாந்து அணிகள் தங்களது கடைசி லீக் போட்டியில் மோதுகின்றனர். இதில் ஏதாவது அதிரடி, எதிர்பாராத மாற்றம் நடந்தால் புள்ளிகள் பட்டியலில் பாதிப்பு ஏற்படலாம். போட்டிக்குப் பின்னர் கேப்டன் ஜேசன் ஹோல்டர் பேசுகையில், நாங்கள் திட்டமிட்டு ஆடினோம். அதே போல வென்றோம்.

 

இந்தப் போட்டியை வெல்வது மட்டுமல்லாமல், போட்டியை 36 ஓவர்களுக்குள் முடிக்கவும் வேண்டியிருந்தது. அதை நாங்கள் செய்து வி்ட்டோம் என்றார் ஹோல்டர். முன்னதாக எமிரேட்ஸ் அணியிலும் சில சந்தோஷங்கள் காணப்பட்டன. அந்த அணியின் அம்ஜத் ஜாவேத் 56 ரன்களையும், நசீர் அஜீஸ் 60 ரன்களையும் குவித்தார். 7வது விக்கெட்டுக்கு இவர்கள் இருவரும் சேர்ந்து 107 ரன்களைக் குவித்தனர். எமிரேட்ஸ் பேட்டிங் ஆர்டரை ஹோல்டரும், ஜெரோம் டெய்லரும் இணைந்து சீர்குலைத்தனர். ஹோல்டர் 4 விக்கெட்களையும், டெய்லர் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். இன்றைய போட்டியில் கிறிஸ் கெய்ல் முதுகு வலி காரணமாக இடம் பெறவில்லை. காலிறுதிக்குள் நுழைந்துள்ள மேற்கு இந்தியத் தீவுகள் அணி மார்ச் 21ம் தேதி நடைபெறும் காலிறுதிப் போட்டியில் நியூசிலாந்துடன் மோதும்.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/world-cup-2015-west-indies-crush-uae-6-wickets-virtually-enter-quarters-222659.html

  • கருத்துக்கள உறவுகள்

ஏதாவது இணையத்தில் நேரடியாக பாக்கும் வசதி உண்டா :rolleyes:

  • தொடங்கியவர்

cricvid.com

  • தொடங்கியவர்

35mk55e.png

  • தொடங்கியவர்

அயர்லாந்தை விரட்டியது பாகிஸ்தான்.. காலிறுதியில் ஆஸி.யுடன் 'ஆசிட் டெஸ்ட்'!

 

l அடிலைட்: உலகக் கோப்பை கிரிக்கெட் காலிறுதிப் போட்டியில் விளையாட பாகிஸ்தான் தகுதி பெற்று விட்டது. இன்று நடந்த முக்கியமான போட்டியில் அது அயர்லாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று காலிறுதிக்குள் நுழைந்தது. அயர்லாந்து அணி இந்தத் தோல்வியுடன் தொடரை விட்டு வெளியேற்றப்பட்டது. அடிலைடில் இன்று நடந்த போட்டியில் அயர்லாந்து முதலில் பேட் செய்தது. அதில் கேப்டன் போர்ட்டர்பீல்ட் அபாரமாக ஆடி அசத்தலாக சதம் அடித்தார்.

 

அவரது சிறப்பான ஆட்டம் காரணமாக அயர்லாந்து அணி 50 ஓவர்களில் 237 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அயர்லாந்தை விரட்டியது பாகிஸ்தான்.. காலிறுதியில் ஆஸி.யுடன் 'ஆசிட் டெஸ்ட்'! இதையடுத்து பேட் செய்த பாகிஸ்தான் அணி தனது வெற்றி இலக்கை நிதானமாக ஆடி எட்டிப் பிடித்தது. 46.1 ஓவர்கள் வரை நீண்ட போட்டியில், பாகிஸ்தான் அணி 3 விக்கெட் இழப்புக்கு 241 ரன்களை எடுதச்து வென்றது. இன்றைய போட்டி பாகிஸ்தானுக்கு மட்டுமல்லாமல், அயர்லாந்துக்கும் கூட முக்கியமானதாக இருந்தது. காரணம், பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்த இரு அணிகளும் மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளும் தலா 6 புள்ளிகளுடன் சம நிலையில் இருந்தன.

 

இதனால் காலிறுதிக்கு முன்னேறப் போகும் அணி யார் என்பதில் சிக்கல் இருந்தது. ரன் ரேட் அடிப்படையில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 3வது இடத்தில் இருந்தது. பாகிஸ்தான் 4வது இடத்திலும், அயர்லாந்து 5வது இடத்திலும் இருந்தன. இன்று அயர்லாந்து வென்றிருந்தால் அது 3வது இடத்திற்கு வந்திருக்கும், பாகிஸ்தான் வெளியேறியிருக்கும். எனவேதான் பாகிஸ்தான் வெற்றியை குறி வைத்து இன்று விளையாட வேண்டியிருந்தது. அதன்படியே அந்த அணி அபாரமான வெற்றியைப் பெற்று காலிறுதிக்குள் நுழைந்து விட்டது. அயர்லாந்து அணியின் கேப்டன் போர்ட்டர்பீல்ட் மிகச் சிறப்பாக விளையாடி சதம் போட்டார்.

 

107 ரன்கள் எடுத்த அவருக்குப் பின்னால் வேறு யாருமே சரியாக ஆடவில்லை. எல்லாம் வருவதும், கட்டையைப் போடுவதும், போவதுமாகவே இருந்தனர்.  இதனால் 50 ஓவர்களில் 237 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது அயர்லாந்து. பின்னர் விளையாட வந்த பாகிஸ்தான் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் அகமது செஷாத்தும், சர்பிராஸ், அஹமதும் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தினர். இருவரும் பிரமாதமாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 120 ரன்களைச் சேர்த்தனர்.

 

செஷாத் 63 ரன்களில் ஆட்டமிழக்க, மறுபக்கம் சர்பிராஸ், கடைசி வரை ஆட்டமிழக்காமல், 101 ரன்களைக் குவித்தார். பின்னர் வந்த மிஸ்பா உல் ஹக் 39 ரன்களும், உமர் அக்மல் ஆட்டமிழக்காமல் 20 ரன்களையும் எடுத்து அணியை வெற்றிக்கு இட்டுச் சென்றனர். ஆஸ்திரேலியாவுடன் காலிறுதி மோதல் தற்போது காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ள பாகிஸ்தான் அணி, காலிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை சந்திக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/pak-beat-ireland-enters-into-qf-222681.html

 

  • தொடங்கியவர்

உலகக் கோப்பை: காலிறுதியில் கை கலக்கப் போகும் 8 'வஸ்தாதுகள்' இவர்கள்தான்!

 

அடிலைட்: உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் இன்றுடன் குரூப் போட்டிகள் முடிவடைந்து விட்டன. அடுத்து 8 வலிமையான அணிகள் நாக் அவுட் சுற்றுக்குள் நுழைகின்றன. இதில் வெல்லும் அணி அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறும். தோற்கும் அணிகள் தொடரை விட்டு வெளியேறும். இங்கு வெற்றி மட்டுமே செல்லும். தோற்றால் தலையில் துண்டைப் போட்டுக் கொண்டு கிளம்ப வேண்டியதுதான். பிப்ரவரி 14ம் தேதி தொடங்கிய உலகக் கோப்பைப் போட்டியில் மொத்தம் 42 சுற்றுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

ரன் குவிப்புகள், சாதனைகள் படைப்பு, சாதனைகள் தகர்ப்பு என கலக்கின

 

இப்போது 8 அணிகள் கடைசியாக காலிறுதி சுற்றுக்கு வந்துள்ளன. இதில் நான்கு அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும், நான்கு அணிகள் வீடு திரும்பும்.

 

மார்ச் 18ம் தேதி சிட்னியில் முதல் காலிறுதிப் போட்டி நடைபெறும்.

 

ஆஸ்திரேலியாவில் 3 காலிறுதிப் போட்டிகளும், நியூசிலாந்தில் ஒரு போட்டியும் நடைபெறவுள்ளன.

 

இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், மேற்கு இந்தியத் தீவுகள், பாகிஸ்தான் ஆகியவை காலிறுதிக்கு முன்னேறியுள்ளன. இதில் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகியவை மட்டுமே தோல்வியையே சந்திக்காமல் காலிறுதிக்கு வந்துள்ளன.

 

காலிறுதிப் போட்டிகளில் மோதவுள்ள அணிகள், போட்டி நடைபெறும் தினம் குறித்த விவரம் (நேரங்கள் இந்திய நேரப்படி):

 

மார்ச் 18 - காலை 9 மணி - தென் ஆப்பிரிக்கா - இலங்கை.

 

மார்ச் 19 - காலை 9 மணி - இந்தியா - வங்கதேசம்

 

மார்ச் 20 - காலை 9 மணி - ஆஸ்திரேலியா - பாகிஸ்தான்

 

மார்ச் 21 - காலை 6.30 மணி - நியூசிலாந்து - மேற்கு இந்தியத் தீவுகள்

 

அரை இறுதிப் போட்டிகள்: முதல் அரை இறுதிப் போட்டி - மார்ச் 24 - ஆக்லாந்து

 

2வது அரை இறுதிப் போட்டி - மார்ச் 29 - மெல்போர்ன்

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/icc-world-cup-2015-quarter-final-teams-venues-schedule-222683.html

  • தொடங்கியவர்

2h4b1vp.png

  • கருத்துக்கள உறவுகள்
நமக்கு இன்னும் ஸ்ரீ லங்காவில் கொஞ்ச நம்பிக்கை இருக்கு.
தம்பி மஹேல ...பட்டைய கெளப்பியே ஆகவேணும். மிச்சம் உள்ள சிங்கன்மர் "உடல் உபாதை"  தேடிக்கொள்ளாமல், நிதானமா இருப்பார்களாக.
கம்மா கோ சிக்காகோ ...வானா வா போனா போ... :D

என்னமோ தெரியலை . சொறிலங்கா தோக்கும்போது கிடைக்கும் சந்தோசம் வேறு எதிலும் எனக்கு கிடைப்பதில்லை. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏதாவது இணையத்தில் நேரடியாக பாக்கும் வசதி உண்டா :rolleyes:

 

http://cricket-365.tv/cricket-live-streamings.html

  • கருத்துக்கள உறவுகள்

அரையிருதிக்கு முன்னேறும் அணிகள் இந்தியா அவுஸ்திரேலியா மற்றும் தென் ஆபிரிக்கா நியூசிலன்ட் மிகவும் தரமான அணிகள்.

xbmc or kodi உங்கள் கணணியில் நிறுவினால் அனைத்துவகையான ஒளிபரப்புகளை நேரடியாக பார்க்கலாம் விளம்பரத்தொல்லைகளின்றி

  • தொடங்கியவர்

டிசைன் அப்படி.. நாக்-அவுட் சுற்றுகளில் ஆட்டம் 'டை'யானாலும், கைவிடப்பட்டாலும், இந்தியாவுக்கே லாபம்!

 

மெல்போர்ன்: காலிறுதி, அரையிறுதியில் போட்டி டை ஆனால், மழையால் ரத்து செய்யப்பட்டால் அடுத்த சுற்றுக்கு செல்லும் அணி எப்படி தேர்வு செய்யப்படும் என்பதை ஐசிசி மீண்டும் ஒருமுறை விளக்கியுள்ளது. உலக கோப்பை காலிறுதி போட்டி மற்றும் அரையிறுதி போட்டிகளுக்கு, ரிசர்வ்டே என்ற நடைமுறையை ஐசிசி கொண்டு வந்துள்ளது. மழையால் ஆட்டம் பாதித்தாலும், மறுநாளும், ஆட்டத்தை தொடர முடியும். ஒருவேளை அன்றும் மழை பெய்தால், ஆட்டம் கைவிடப்படும்.

 

ஐசிசி விதிமுறை அதுபோன்ற ஆட்டம் கைவிடும் சூழல் ஏற்பட்டாலோ அல்லது போட்டியே டையில் முடிந்தாலோ, அடுத்த சுற்றுக்கு அணிகள் எப்படி தேர்ந்தெடுக்கப்படும் என்பதற்கான ஐசிசி விதிமுறை இதுதான்:

லீக் ஆட்டம் கணக்கெடுப்பு காலிறுதியில், ஆட்டம் கைவிடப்படும் நிலை ஏற்பட்டாலோ அல்லது, போட்டி டை ஆனாலோ, லீக் சுற்றில், அவ்விரு அணிகளில், எந்த அணி அதிக புள்ளிகள் பெற்றதோ, அந்த அணிதான் அடுத்த சுற்றுக்கு போகும்.

 

இந்தியாவுக்கு சாதகம் ஏ பிரிவில் நியூசிலாந்தும், பி பிரிவில் இந்தியாவும், லீக் சுற்றுகளில் முதல் இடங்களை பிடித்துள்ளதால், இவ்விரு அணிகளுக்கும் இந்த விதி சாதகமாகும்.

ஆஸி., தென் ஆப்பிரிக்கா அதேபோல, ஏ பிரிவில் 2ம் இடம் பிடித்துள்ள ஆஸ்திரேலியாவுக்கும், பி பிரிவில் 2ம் இடம் பிடித்துள்ள தென் ஆப்பிரிக்காவுக்கும் கூட இந்த விதி அனுகூலமேயாகும்.

சூப்பர் ஓவர் ஆனால், இறுதி போட்டியின்போது, ஆட்டம் டை ஆனால், சூப்பர் ஓவர் மூலம் வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்படுவர். காலிறுதி, அரையிறுதிக்கு இந்த சூப்பர் ஓவர் நடைமுறை கிடையாது.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/world-cup-what-happens-if-quarter-final-is-abandoned-or-tie-222710.html

  • தொடங்கியவர்

உலக கோப்பை நாக்-அவுட் சுற்றுகளில் 'ரிசர்வ் டே' விதி அறிமுகம்! அப்படீன்னா என்ன தெரியுமா?

 

மெல்போர்ன்: உலக கோப்பை காலிறுதி, அரையிறுதி, பைனல் ரிசர்வ் டே என்ற நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. லீக் ஆட்டங்களில் இல்லாத இந்த நடைமுறை, நாக்-அவுட் கட்டத்தை ஆட்டம் எட்டியுள்ள நிலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 

அது என்ன ரிசர்வ் டே என்று தெரியுமா? வரும் 18ம் தேதி முதல் உலக கோப்பை காலிறுதி போட்டிகள் தொடங்க உள்ளன. ஒவ்வொரு போட்டிகளுக்கும் நடுவே ஒருநாள் இடைவெளி தரப்பட்டுள்ளது. இதைத்தான் ரிசர்வ் டே என்று கருத வேண்டும்.

மறுநாளிலும் போட்டி ஏனெனில், ரிசல்ட் கிடைக்காத போட்டிகளை, மறுநாளிலும் நடத்த இந்த வசதி செய்யப்பட்டுள்ளது.

 

3 திருத்தங்கள் மாற்றப்பட்ட விதிமுறைகள் படி மூன்று முக்கிய திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

 

இது உதாரணம் ஒன்று 19 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில், மழை பெய்து ஆட்டம் ஒத்தி வைக்கப்பட்டு தலா 46 ஓவர்களாக குறைக்கப்பட்டால், அப்படி ஓவர்களை குறைத்த பிறகும் மழையால் ஆட்டத்தை தொடர முடியாமல் போனால், அடுத்த நாள் ஆட்டம் மீண்டும் 50 ஓவர்கள் போட்டியாகவே தொடங்கும்.

 

உதாரணம் 2 மழையால் ஆட்டம் குறுக்கிட்டு தலா 46 ஓவர்களாக குறைக்கப்பட்டால், அதன்பிறகு ஒரு ஓவர் வீசப்பட்டு மீண்டும் மழையால் அன்று ஆட்டத்தை தொடர முடியாமல் போனால், மறுநாளில் 46 ஓவர்கள் கொண்ட போட்டியாகவே அது அமையும்.

 

உதாரணம் 3 டாஸ் போடப்பட்ட பிறகு மழையால் அன்று ஆட்டம் ரத்தானாலும், மறுநாள், டாஸ் போடாமலே ஆட்டம் தொடங்கும். அணி வீரர்களை மாற்றமும் செய்ய கூடாது.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/world-cup-you-need-know-about-reserve-days-quarters-semis-222705.html

  • தொடங்கியவர்

bjeclj.jpg

  • தொடங்கியவர்

8 முறை மோதல்.. ஆளுக்கு "பப்பாதி" வெற்றி.. இது பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா கதை!

 

பெங்களூரு: உலகக் கோப்பைப் போட்டிகளில் பாகிஸ்தானும், ஆஸ்திரேலியாவும் மொத்தம் 8 முறை மோதியுள்ளன. அதில் ஆளுக்கு நான்கு வெற்றிகளையும், 4 தோல்விகளையும் சந்தித்து சம பலத்தில் உள்ளன. 8 முறை மோதல்.. ஆளுக்கு நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் காலிறுதிக்கு இரு அணிகளும் முன்னேறியுள்ளன. 3வது காலிறுதிப் போட்டியில், மார்ச் 20ம் தேதி இவர்கள் இருவரும் அடிலைடில் நடைபெறும் போட்டியில் மோதவுள்ளனர்.

 

உலகக் கோப்பையைப் பொறுத்தமட்டில் இந்த இரு அணிகளும் சம பலத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இரு அணிகளும் 1999 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சந்தித்தன. அதில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று கோப்பையை தட்டிச் சென்றது.

 

இதுவரை பாகிஸ்தானும், ஆஸ்திரேலியாவும் மோதிய போட்டிகளின் முடிவுகள் விவரம்:

 

1975- 73 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி (ஸ்கோர் - 60 ஓவர்களில் ஆஸி. 278-7. பாகிஸ்தான் 53 ஓவர்களில் 205).

 

1979 - 89 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி. (ஸ்கோர் - பாக். 60 ஓவர்களில் 286-7, ஆஸி. 57.1 ஓவர்களில் 197.)

 

1987 - 18 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி (ஸ்கோர் - ஆஸி. 50 ஓவர்களில் 267-6, பாக். 49.2 ஓவர்களில் 249.)

 

1992 - 48 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி (ஸ்கோர் - பாக். 50 ஓவர்களில் 220-9, ஆஸி. 45.2 ஓவர்களில் 172.)

 

1999 - 10 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி (ஸ்கோர் - 50 ஓவர்களில் 275-8, ஆஸி. 49.5 ஓவர்களில் 265.)

 

1999 - இறுதிப் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி (பாக். 39 ஓவர்களில் 132. ஆஸி. 20.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 133)

 

. 2003 - 82 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி (ஸ்கோர் - ஆஸி. 50 ஓவர்களில் 310-8, பாக். 44.3 ஓவர்களில் 228.)

 

2011 - 4 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி (ஸ்கோர்- ஆஸி. 46.4 ஓவர்களில் 176, பாக். 41 ஓவர்களில் 178-6).

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/wc-2015-pakistan-australia-have-met-8-times-wc-share-the-222725.html

  • தொடங்கியவர்

நம்ம போட்டிக்கு யாருப்பா அம்பயர்?.... லிஸ்ட் ரிலீஸ்!

 

சிட்னி: உலகக் கோப்பை காலிறுதிப் போட்டிகளுக்கான நடுவர்கள் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. மார்ச் 18ம் தேதி தொடங்கும் காலிறுதிப் போட்டிகளுக்கான நடுவர் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. சிட்னியில் முதல் காலிறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.

 

அதில் இலங்கையும், தென் ஆப்பிரிக்காவும் மோதவுள்ளன.

 

முதல் போட்டிக்கான நடுவர்கள் விவரம்:

கள நடுவர்கள் - ராட் டக்கர் (ஆஸி.), நிகெல் லாங் (இங்கிலாந்து), 3வது அம்பயர் - ரிச்சர்ட் கெட்டில்போரோ (இங்கிலாந்து), 4வது நடுவர் ப்ரூஸ் ஆக்ஸன்போர்ட் (ஆஸ்திரேலியா), மேட்ச் ரெப்ரீ - டேவிட் பூன் (ஆஸ்திரேலியா).

 

2வது போட்டிக்கான நடுவர்கள்:

மார்ச் 19ம் தேதி நடைபெறும் இந்தியா - வங்கதேசம் இடையிலான 2வது காலிறுதிப் போட்டிக்கான நடுவர்கள் விவரம். கள நடுவர்கள் - இயான் கோல்டு (இங்கிலாந்து), ஆலிம் தர் (பாகிஸ்தான்), 3வது நடுவர் - ஸ்டீவ் டேவிஸ் (ஆஸி.), 4வது நடுவர் - பால் ரீபல் (ஆஸி.), மேட்ச் ரெப்ரீ - ரோஷன் மகானமா (இலங்கை).

 

3வது போட்டிக்கான நடுவர்கள்:

மார்ச் 20ம் தேதி ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையிலான 3வது காலிறுதிப் போட்டிக்கான நடுவர்கள். கள நடுவர்கள் - மாராய்ஸ் எராஸ்மஸ் (தெ. ஆ), குமார் தர்மசேனா (இலங்கை). 3வது நடுவர் ரிச்சர்ட் இல்லிங்வொர்த் (இங்கிலாந்து), 4வது நடுவர் - பில்லி பெளடன் (நியூசிலாந்து). மேட்ச் ரெப்ரீ - ரஞ்சன் மதுகல்லே (இலங்கை).

 

4வது போட்டிக்கான நடுவர்கள்:

மார்ச் 21ம் தேதி நியூசிலாந்து, மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான 4வது காலிறுதிப் போட்டிக்கான நடுவர்கள் விவரம்: கள நடுவர்கள் - ரிச்சர்ட் கெட்டில்போரோ, ப்ரூஸ் ஆக்ஸன்போர்ட். 3வது நடுவர் - ராட் டக்கர், 4வது நடுவர் - நிகெல் லாங். மேட்ச் ரெப்ரீ - கிறிஸ் பிராட்.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/worldcup-2011/umpires-world-cup-2015-quarter-finals-announced-222719.html

  • தொடங்கியவர்

மெக்கல்லம், தில்ஷன் கொடுத்த அடியிலிருந்து மீண்டு வர ஜான்சன் தீவிர முயற்சி
 

 

நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸி. வேகப்புயல் ஜான்சன் எப்படியும் எதிரணியினரை கதிகலங்கச் செய்வார் என்று எதிர்பார்க்கபப்ட்டது.

ஆனால், அவருக்குப் பதிலாக சிம்ம சொப்பனமாகத் திகழ்கிறார் மற்றொரு ஆஸி. வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்.

 

நியூசி. அதிரடி வீரர் பிரெண்டன் மெக்கல்லம் அன்று மிட்செல் ஜான்சை கேட்டுக் கேட்டு அடித்தார். 4 ஓவர்களில் 52 ரன்களைக் கொடுத்தார் மிட்செல் ஜான்சன். அதன் பிறகு இலங்கையின் திலகரத்னே தில்ஷன் ஒரே ஓவரில் ஜான்சனை 6 பவுண்டரிகள் விளாசினார். மெக்கல்லம், ஜான்சனின் திசை மற்றும் அளவை பாதிக்கும் விதமாக அதிரடி காட்டினார், என்றால் தில்ஷன் மிகவும் அனாயசமாக முறையான கிரிக்கெட் ஷாட்களில் 6 பவுண்டரிகளை ஒரே ஓவரில் விளாசினார்.

 

அனைத்து கிரிக்கெட்டிலும் இதற்கு முன்னர் இந்தியாவின் தற்போதைய அணித் தேர்வுக்குழு தலைவர் சந்தீப் பாட்டீல், பாப் வில்லிஸ் பந்துவீச்சை டெஸ்ட் போட்டி ஒன்றில் தொடர்ச்சியாக 6 பவுண்டரிகள் விளாசியுள்ளார். அதன் பிறகு இந்திய வேகப்பந்து வீச்சாளர் முனாஃப் படேலின் ஒரே ஓவரில் மே.இ.தீவுகளின் ராம் நரேஷ் சர்வாண் 6 பவுண்டரிகளை டெஸ்ட் போட்டிகளில் விளாசியுள்ளார். அதன் பிறகு மீண்டும் ஒரு வேகப்பந்து வீச்சாளர் 6 பவுண்டரிகளை வாங்கிக் கட்டிக் கொண்டவர் என்ற முறையில் மிட்செல் ஜான்சனின் தன்னம்பிக்கை தற்போது கொஞ்சம் ஆடிப்போயுள்ளது.

 

இந்நிலையில் மெக்கல்லம், தில்ஷன் கொடுத்த அடியிலிருந்து மீண்டு வருவது பற்றி பேசிய ஜான்சன், “தில்ஷனுக்கு எதிரான அந்த குறிப்பிட்ட ஓவர் மோசமானது என்று கூற மாட்டேன். முதலில் ஓவர் பிட்ச் பந்துகளை வீசினேன், பிறகு லெந்த்துக்கு சற்று பின்னால் வீசினேன். ஆனால் ஒரு ஷார்ட் பிட்ச் பந்து வீசினேன், அதுதான் எனக்கு திருப்தி அளிக்கவில்லை. மற்ற பந்துகள் சரியானதுதான்.

 

ஆனால், அதன் பிறகு அந்தப் போட்டியில் மீண்டும் வந்து சிறப்பாக வீசினோம். அந்தப் பிட்ச் கொஞ்சம் மந்தமாகும் என்று எதிர்பார்த்தோம், ஆனால் அது மாறவேயில்லை. அதிர்ஷ்டவசமாக நாங்கள் நிறைய ரன்களைக் குவித்திருந்தோம்.

எனவே அடிவாங்கியது பற்றி எந்த மன அழுத்தமும் இல்லை. இந்தத் தொடர் முழுதுமே அடிவாங்குவேன் என்பதில் ஓரளவுக்கு நான் தெளிவாகவே இருந்தேன். இன்றைய ஒருநாள் கிரிக்கெட் ஆட்டம் அப்படிப்பட்டது.

 

காலிறுதி வந்துவிட்டது, அதே பிராண்ட் கிரிக்கெட்டை நாங்கள் தொடர்வோம் என்றே கருதுகிறேன்.

 

எனக்கு முன்னால் என்ன வருகிறதோ, அதனை எதிர்கொள்ளத் தயாராகிவிட்டேன். அடிவாங்கியது பற்றிய மன அழுத்தங்கள் இல்லை.” என்றார் ஜான்சன்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/article6999331.ece

  • தொடங்கியவர்


அழுத்தங்களை சந்திக்க எம் வீரர்களுக்கு தெரியும்: அத்தப்பத்து
 

 

இலங்கை அணியின் வீரர்களுக்கு வாழ்வா சாவா போட்டிகளில் அழுத்தங்களை சந்திப்பது எவ்வாறு என நன்றாக தெரியும் என இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளர் மார்வன் அத்தப்பத்து தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின் உலகக் கிண்ண குழுவில் உள்ள வீர்கள் மற்றைய அணியில் உள்ள வீரர்கள் விளையாடிய போட்டிகளிலும் பார்க்க கூடுதலான போட்டிகளில் விளையாடியவர்கள்.

 

குறிப்பாக 2007ஆம் ஆண்டு உலகக் கிண்ணம் அடங்கலாக அதிகமான அவ்வாறன போட்டிகளில் விளையாடியுள்ளனர். வேறு எந்த அணியும் விளையாடாதளவு கடந்த 7 வருடங்களில் இலங்கை வீரர்கள் வாழ்வா சாவா போட்டிகளில் விளையாடியுள்ளனர். உலகக் கிண்ண தொடரில் 5 போட்டிகளில் கடந்த இரண்டு உலகக் கிண்ணங்களிலும் விளையாடியுள்ளனர். இரண்டு இறுதிப் போட்டிகளிலும் மாத்திரமே அவர்கள் தோல்விகளை சந்தித்தனர். அதேவேளை கடந்த உலக 20-20 தொடரில் வெற்றி பெற்றுள்ளனர். அதற்க்கு முதல் நடைபெற்ற உலக 20-20 தொடரில் இறுதிப் போட்டியில் தோல்வியை சந்தித்தனர்.

 

லசித் மாலிங்கவே இவ்வாறான முக்கிய போட்டிகளை வெற்றி பெற்று தருபவர் என மார்வன் அத்தப்பத்து தெரிவித்துள்ளார். முதற்ப் போட்டியில் மோசமான பந்துவீச்சை காட்டி இருந்தாலும் பின்னர் நடைபெற்ற போட்டிகளில் சிறப்பாக பந்துவீசியுள்ளார். சிறந்த வீரர்கள் இவ்வாறே செயற்படுவார்கள். இனி வரும் போட்டிகளிலும் இவ்வாறு சிறப்பாக பந்துவீசி இலங்கை அணிக்கு வெற்றிகளை பெற்று தருவார் என மார்வன் அத்தப்பத்து நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

 

இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்களே கூடுதலான ஓட்டங்களை பெற்றவர்கள் வரிசையில் இருக்கின்றனர். எனவே, துடுப்பாட்டமும் நல்ல முறையில் உள்ளது. எனவே, முக்கிய போட்டிகளில் சரியாக விளையாடி அந்த நேரத்தில் ஓட்டங்களை பெற்று வெற்றியைப் பெறுவதே மிச்சம் உள்ளது. எங்களால் அழுத்தங்களை சரியாக சமாளித்து வெற்றிகளைப் பெற முடியும் என மார்வன் அத்தப்பத்து மேலும் தெரிவித்துள்ளார்.

- See more at: http://www.tamilmirror.lk/141837#sthash.RhM5bYAt.dpuf

  • தொடங்கியவர்


தொடந்து விளையாடுவதில் அர்த்தமில்லை: அயர்லாந்து தலைவர்
 

உலகக் கிண்ண தொடரில் பங்குபற்றும் அணிகள் 10 ஆக குறைக்கப்பட்டால் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுவதில் அர்த்தமில்லை என அயர்லாந்து அணித் தலைவர் வில்லியம் போர்ட்ஸ்பீல்ட் தெரிவித்துள்ளார்.

 

இந்த உலகக்கிண்ண தொடரில் அவர்கள் சிறப்பாக விளையாடி வெளியேறினர். பலமான அணிகளுக்கு சவாலாக விளங்கினர். பாகிஸ்தான் அணியுடன் தோல்வியடைந்து வெளியேறியது கவலை என்றாலும் திறமையான அணி உலகக்கிண்ணத்தில் இருந்து வெளியேற்றப்படுகின்றது என்பது கவலையே. துணை அங்கத்துவ நாடுகள் உலகக்கிண்ணத்தில் விளையாடும் வாய்ப்புகளை தொடர்ந்து இழக்கவிருக்கின்றன. பலமான அணியாக அயர்லாந்து வழர்ந்து வருகின்ற போதும் இங்கிலாந்து பிராந்திய அணிகளின் ஆதிக்கம் பல வீரர்களை இங்கிலாந்து அணி நோக்கியும், இங்கிலாந்தின் பிராந்திய அணிகள் நோக்கியும் நகர்த்தியுள்ளன. இங்கிலாந்து அணியின் தற்போதைய தலைவர் ஒய்ன் மோர்கன் அயர்லாந்து அணி வீரர் என்பது குறிபிடத்தக்கது.

 

எங்கள் கருத்துகள் கோரிக்கைகள் எல்லாவற்றையும் சர்வதேசக் கிரிக்கெட் பேரவை இன்னும் இரு வாரங்களில் மறந்துவிடும். இந்த பேச்சு இல்லாமல் போய்விடும். கிரிக்கெட்டை வளர்க்க விரும்பினால் அதிக அணிகளுக்கு வாய்ப்புகள் வழங்க வேண்டும். போட்டிகள் அதிக நாட்கள் எடுக்கின்றன என்ற காரணம் இருந்தாலும் அடுத்த உலகக் கிண்ண தொடர் இந்த தொடரை விட இரண்டு மூன்று நாட்கள் அதிகமாக நடைபெறவுள்ளன. அப்படியானால் ஏன் 10 அணிகள் விளையாடவேண்டும்? அதேவேளை 10 அணிகள் மாத்திரம் என்றால் மற்றைய அணிகள் நாடுகள் கணெக்கெடுக்கப்பட கூடாதா? என்ற கேள்விகளை வில்லியம் போர்ட்ஸ்பீல்ட் எழுப்பியுள்ளார். விளையாட்டை வளர்க்க வேண்டும் என்றால் ஏதாவது இருக்க வேண்டும். நோக்கம், திட்டம் என்பன சரியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

 

10 அணிகளுக்கு மட்டும் தான் கிரிக்கெட் என்றால் விளையாடும் மற்ற மற்றைய அணிகள் என்ன செய்வது என்ற கேள்விகளை எழுப்பி தன மன ஆதங்கத்தை பாகிஸ்தான் அணியுடனான தோல்விக்கு பின்னர் வெளியிட்டார். பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் இவர் சதம் அடித்தமை குறிப்பிடத்தக்கது.

- See more at: http://www.tamilmirror.lk/141846#sthash.n2RLzE42.dpuf

  • தொடங்கியவர்

வாழ்வா? சாவா? போராட்டத்திற்கு தயாராகும் இலங்கை அணி
 

2efu9nb.jpg

பதி­னோ­ரா­வது உலகக் கிண்ண கிரிக்கெட் அத்­தி­யா­யத்தில் எட்டு அணிகள் சம்­பந்­தப்­பட்ட வாழ்வா? சாவா? போராட்டம் இலங்கை- – தென் ஆபி­ரிக்க அணி­க­ளுக்கு இடை­யி­லான முத­லா­வது கால் இறுதிப் போட்­டி­யுடன் ஆரம்­ப­மா­க­வுள்­ளது.

இந்தப் போட்டி சிட்னி கிரிக்கெட் விளை­யாட்­ட­ரங்கில் நாளை­ம­று­தினம் நடை­பெ­ற­வுள்­ளது.

லீக் சுற்று முடி­வ­டைந்­துள்ள நிலையில் இனி­மேலும் இரண்­டா­வது வாய்ப்­புக்கு இட­மில்­லாமல் எட்டு அணிகள் கால் இறு­தி­களில் தத்­த­மது தலை­வி­தியை நிர்­ண­யித்­துக்­கொள்­ள­வுள்­ளன.

கராச்­சியில் 1996 மார்ச் 17ஆம் திகதி அவுஸ்­தி­ரே­லி­யாவை வெற்­றி­கொண்டு உலக சம்­பியன் பட்­டத்தை சூடி சரி­யாக 19 வரு­டங்­களின் பின்னர் மீண்டும் சம்­பி­ய­னாகும் நம்­பிக்­கை­யுடன் இலங்கை அணி இறுதிச் சுற்றை எதிர்­கொள்­கின்­றது.

இலங்­கையின் சிரேஷ்ட வீரர்­க­ளான மஹேல சர்­வ­தேச கிரிக்கெட் அரங்­கி­லி­ருந்து முழு­மை­யா­கவும் சங்கா சர்வ ­தேச ஒருநாள் கிரிக்கெட் அரங்­கி­லி­ருந்தும் ஓய்வு பெற­வுள்ள நிலையில் அவர்கள் இரு­வ­ருக்கும் சிறந்த பிரி­யா­வி­டையை அளிக்கும் வகையில் ஏனைய வீரர்கள் முழு ­அ­ள­வி­லான திற­மையை வெளிப்­ப­டுத்­து­வ­தற்கு காத்­தி­ருக்­கின்­றனர்.

நியூ­ஸி­லாந்து, அவுஸ்­தி­ரே­லியா ஆகிய வர­வேற்பு நாடு­க­ளிடம் தோல்­வி­யுற்ற போதிலும் ஆப்­கா­னிஸ்தான், பங்­க­ளாதேஷ், இங்­கி­லாந்து, ஸ்கொட்­லாந்து ஆகிய நாடு­களை வெற்­றி­கொண்டு கால் இறு­தியில் விளை­யாடும் வாய்ப்பை இலங்கை உறுதி செய்­து­கொண்­டி­ருந்­தது.

இலங்­கையின் துடுப்­பாட்டம் மிளிர்­கின்­ற­போ­திலும் பந்­து ­வீச்சும் களத்­த­டுப்பும் பல­வீ­ன­மா­கவே காணப்­ப­டு­கின்றன. எனினும் தமது அணி எந்த சவா­லையும் எதிர்­கொள்ள தயார் என அணி முகா­மைத்­துவம் உறு­தி­பட கூறி­ வ­ரு­கின்­றது.

‘‘இந்த அணிதான் அதி திற­மை­வாய்ந்த அணி­யாகும். இந்த அணியைக் கொண்டு அதி­கப்­பட்ச பலனைப் பெற்­றுக் ­கொள்­ள­வேண்டும். ஒரே நேரத்தில் சகல துறை­க­ளிலும் பிர­கா­சிக்க வேண்டும் என எதிர்­பார்க்க முடி­யாது. எல்லா அணி­க­ளிலும் மேடு, பள்­ளங்கள் இருக்­கத்தான் செய்யும். எனினும் எமது அணி எந்த சவா­லையும் முறி­ய­டித்து முன்­னோக்கிச் செல்லும் என நம்­பு­கின்றேன்’’ என அணி முகா­மை­யாளர் மைக்கல் டி சொய்ஸா தெரி­வித்தார்.

‘‘அணி வீரர்­களைப் பொறுத்த மட்டில் மிகுந்த நம்­பிக்­கை­யுடன் உள்­ளனர். இந்த நம்­பிக்கை தான் வெற்­றிக்கு வித்­திடப் போகின்­றது’’ என அவர் மேலும் கூறினார்.

இலங்கை அணியைப் பொறுத்த மட்டில் முன்­வ­ரிசை துடுப்­பாட்ட வீரர்கள் குறிப்­பாக குமார் சங்­கக்­கார தொடர்ச்­சி­யாக நான்கு சதங்­களைக் குவித்து அணியின் துடுப்­பாட்ட சிக­ர­மாக விளங்­கு­கின்றார்.

ஆரம்பத் துடுப்­பாட்­டக்­காரர் திலக்­க­ரட்ன டில்ஷான் அடுத்­த­டுத்து இரண்டு சதங்­களைக் குவித்து சங்­கக்­கா­ர­வுக்கு பக்­க­ப­ல­மாக இருந்­து­வ­ரு­கின்றார்.

மற்­றைய ஆரம்ப வீர­ரான லஹிரு திரி­மான்ன, முன்னாள் அணித் தலைவர் மஹேல ஜய­வர்­தன ஆகியோர் தலா ஒரு சதத்தைப் பதிவு செய்­துள்­ளனர். இவர்கள் பிர­கா­சித்து வந்­துள்­ளதால் ஏனைய துடுப்­பாட்­டக்­கா­ரர்­க­ளுக்கு சோதனை ஏற்­ப­டு­வ­தற்­கான சந்­தர்ப்பம் மிகக்­கு­றை­வாக இருந்­து ­வந்­தது.

ஆனால், பந்­து­வீச்­சிலும் களத்­த­டுப்­பிலும் இலங்கை வீரர்கள் பாரிய அளவில் முன்­னேற்­றத்தை வெளிப்­ப­டுத்த­ வேண்டும். அல்­லது உரிய பலா­ப­லனை அனு­ப­விக்க நேரிடும்.

மேலும் இலங்­கையின் பிர­தான சக­ல­துறை வீர­ரான திசர பெரேரா, உலகக் கிண்ணப் போட்­டி­களில் பிர­கா­சிக்கத் தவறு­கின்­றமை இலங்­கைக்கு பெரும் சோத­னையைக் கொடுத்­துள்­ளது. அவர் உரிய வேளையில் பிர­கா­சிப்பார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

மறு­பு­றத்தில் பந்­து­வீச்சில் லசித் மாலிங்க துல்­லி­ய­மாக பந்­து­வீசி எதி­ர­ணி­களின் விக்கெட்­களைப் பதம் பார்ப்­பது மிகவும் அவ­சி­ய­மாகும்.

ரங்­கன ஹேரத், சுரங்க லக்மால் ஆகிய இரு­வரும் காயம் மற்றும் உபா­தை­க­ளி­லி­ருந்து குணமடைந்துள்ளபோதிலும் குறைந்தது பத்து ஓவர்களை வீச வேண்டிய கட்டாய நிலையில் ஏஞ்சலோ மெத்யூஸ், திலக்கரட்ன டில்ஷான் ஆகியோர் இருக்கின்றனர். ரங்கன ஹேரத் விளையாடாத பட்சத்தில் சீக்குகே பிரசன்ன அல்லது சச்சித்ர சேனா நாயக்க விளையடுவதற்கான வாய்ப்பு இருக்கின்றது. வேகப்பந்து வீச்சில் லசித் மாலிங்கவுடன் நுவன் குலசேகர இணைவார் என நம்பப்படுகின்றது.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=9277#sthash.OCQgWk4J.dpuf

11071610_798832390193994_648636676512509

  • தொடங்கியவர்

உலக கோப்பையில் சம பலத்துடன் இந்தியா-வங்கதேசம்! பயமுறுத்தும் புள்ளி விவரம்!!

 

மெல்போர்ன்: இந்தியா-வங்கதேச அணிகள் உலக கோப்பை காலிறுதி போட்டியில் வரும் 19ம்தேதி பலப் பரிட்சை நடத்த உள்ளன. நடப்பு உலக கோப்பையில், இதுவரை எந்த போட்டியிலும் தோல்வியடையாத இந்தியா இந்த போட்டியில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெறும் என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களுக்கு உள்ளது. இந்த நிலையில், இவ்விரு அணிகளின் முந்தைய மோதல்கள் குறித்த ஒரு புள்ளி விவர பார்வை இதோ:

 

உலக கோப்பையில் முதல் முறை இந்தியாவும், வங்கதேசமும் இப்போதுதான் முதல் முறையாக உலக கோப்பை காலிறுதியில் சந்திக்கின்றன. இதற்கு முன்பு, லீக் ஆட்டங்களில் இவ்விரு அணிகளும் மோதியுள்ளன.

பழிக்கு பழி இரு அணிகளும் உலக கோப்பையில் இதுவரை 2 முறை மோதியுள்ளன. 2007 உலக கோப்பை லீக் போட்டியில், இந்தியாவை வங்கதேசம் தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பிவைத்தது. 2011ல் டோணி தலைமையிலான இந்திய அணி, வங்கதேசத்தை வீழ்த்தி பழி தீர்த்தது. ஆக, உலக கோப்பையில் இரு அணிகளும் சம பலத்துடன் இருப்பதாக இந்த புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

 

அடுத்தடுத்து சதங்கள் உலக கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிராக இரு இந்திய வீரர்கள் சதம் அடித்துள்ளனர். வீரேந்திர சேவாக் 175 ரன்களும், கோஹ்லி 100 ரன்களும் விளாசியுள்ளனர். இருவருமே 2011ல் நடந்த போட்டியில்தான் இந்த சதங்களை விளாசினர்.

தல எப்படி? 2007 உலக கோப்பையில், கேப்டனாக இன்றி, களம் கண்ட டோணி, 3 பந்துகளை சந்தித்து டக் அவுட் ஆனார். 2011 உலக கோப்பையில், டோணி களமிறங்க வாய்ப்பு கிடைக்கவில்லை.

 

அங்கிட்டு யாருமில்ல வங்கதேச வீரர்களில் யாரும் இந்தியாவுக்கு எதிராக சதம் அடித்தது இல்லை. 2011ல் தமிம் இக்பால் அதிகபட்சமாக 70 ரன்களை அடித்தார்.

முதல் போட்டியிலேயே சதம் 2011 உலக கோப்பையில்தான் விராட் கோஹ்லி முதல்முறையாக உலக கோப்பை தொடரில் கால் பதித்தார். முதல் போட்டியிலேயே வங்கதேசத்துக்கு எதிராக சதம் அடித்தார்.

 

ஓல்ட் இஸ் கோல்ட் கடந்த உலக கோப்பை தொடரில் மோதியபோது இருந்த 6 வீரர்கள் வங்கதேசத்தில் இந்த உலக கோப்பையிலும் ஆடுகின்றனர். இந்தியாவை பொறுத்தளவில், டோணி மற்றும் கோஹ்லி ஆகியோர் மட்டுமே பழைய அணியில் இருந்தவர்களாகும்.

ஒட்டுமொத்தமாக இந்தியா ஆதிக்கம் ஒட்டுமொத்தமாக இதுவரை இவ்விரு அணிகளும் 29 ஒரு நாள் போட்டிகளில், சந்தித்துள்ளன. அதில், இந்தியா 24 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. வங்கதேசம் 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 2 போட்டிகளில் ரிசல்ட் கிடைக்கவில்லை.

 

இங்கு முதல் முறை ஆஸ்திரேலியாவில், முதல் முறையாக இந்தியா, வங்கதேச அணிகள் மோத உள்ளன.

இப்படி ஆகிபோச்சே 2012 ஆசிய கோப்பையில், வங்கதேசத்துக்கு எதிராக, சச்சின் டெண்டுல்கர் தனது 100வது சர்வதேச கிரிக்கெட் சதத்தை பதிவு செய்தார். அந்த போட்டியில் வங்கதேசம் வெற்றி பெற்றது.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/10-facts-about-india-bangladesh-world-cup-quarter-final-222733.html

  • தொடங்கியவர்

2005mp2.jpg

  • தொடங்கியவர்

இதுவரை 42 போட்டிகளில் 35 சதங்கள்
 

இந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இதுவரை நடை பெற்ற 42 லீக் போட்டிகளில் 35 சதங்கள் விளாசப்பட்டுள்ளன. இதுவே உலகக் கோப்பை போட்டி ஒன்றில் எடுக்கப் பட்டுள்ள அதிகபட்ச சதமாகும்.

 

இதற்கு முன்பு கடந்த 2011-ம் ஆண்டு உலகக் கோப்பையில் 24 சதங்கள் விளாசப்பட்டதே சாதனையாக இருந்தது. அந்த போட்டி முழுவதும் பேட்ஸ்மேன் களுக்கு சாதகமான ஆடுகளங்கள் உள்ள இந்தியா, இலங்கை, வங்கதேசத்தில் நடைபெற்றது.

 

மிகக்குறைவான சதம் கொண்ட போட்டியாக 1979-ல் நடைபெற்ற 2-வது உலகக் கோப்பை போட்டி அமைந்தது. பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் மிகுந்த அந்த போட்டி யில் 2 சதங்கள் மட்டுமே எடுக்கப் பட்டன. இதுவரை இலங்கை யின் குமார் சங்ககாரா மட்டும் 4 சதங்கள் அடித்துள்ளார்.

 

அவை தொடர்ந்து 4 போட்டி களில் எடுக்கப்பட்டவை. ஒரு நாள் போட்டியில் ஒரு பேட்ஸ்மேன் தொடர்ந்து 4 சதம் அடித்துள்ளது இதுவே முதல்முறை.

இந்திய தொடக்க வீரர் ஷீகர் தவண், இலங்கையின் திலகரத்னே தில்ஷான், ஜிம்பாப்வே அணியின் பிரெண்டன் டெய்லர், வங்கதேச பேட்ஸ்மேன் முகமதுல்லா ஆகி யோர் இரு சதங்கள் அடித்துள்ள னர்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-42-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-35-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article7002631.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.