Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக கிண்ண கிரிக்கெட் போட்டி - 2015 செய்திகளும் கருத்துக்களும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இசை... சொறிலங்காவின் அந்த "பொன்னான" தருணங்களை இங்கு கண்டுகளிக்கலாம்.. :)  :icon_idea:

 

http://www.cricketcountry.com/videos/south-africa-vs-sri-lanka-full-video-highlights-icc-cricket-world-cup-2015-quarter-final-match-highlights-266156

  • Replies 827
  • Views 43.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நிறவெறி இருந்தாலும் சிறுபான்மையினர் ஆதிக்கம் செலுத்தும் ஒரு அணியை சொறீலங்காவில் யாராலும் உருவாக்கிக் காட்ட முடியுமா..?! திறமை இருந்தாலும் வர முடியாது. தென்னாபிரிக்க அணியில்.. கறுப்பை விட வெள்ளை அல்லது கலப்புத் தான் அதிகம் விளையாடுது. ஆட்சியில் இருப்பது கறுப்பின அரசு. :icon_idea:  :)

 

 

நீங்கள் சரித்திரம் தெரிந்துகொண்டுதான் பேசுகிறீர்களா??

 

நிறவெறி என்பது கறுப்பினத்தவர், வெள்ளையினத்தவர் மேல் காட்டுவது அல்ல. மாறாக இன்றுவரை சிறுபான்மையின வெள்ளையர்கள் அந்த நாட்டின் உண்மையான மக்களான கறுப்பினத்தவர் மேல் காட்டியது, இன்றும் காட்டிக்கொண்டு வருவது.

 

கறுப்பின அரசு ஆட்சியில் இருப்பது என்னவோ உண்மைதான். ஆனால் கறுப்பினத்தவர்களுக்கு எதிரான வெள்ளையின நிறவெறி இப்போதும் அங்கே மிக வெளிப்படையாகத்தான் இருக்கிறது.

 

கறுப்பர்கள் செல்லமுடியாத இடங்களும், கடைகளும், பார்களும் இன்னும் தென்னாபிரிக்காவில் பரவலாக இருக்கின்றன.அண்மையில் தென்னாபிரிக்காவுக்கு வேலை நிமித்தம் சென்றுவந்த எனது வெள்ளையின ந்ண்பன் ஒருவன் இதை நேரில் கண்டிருக்கிறார். 

 

தென்னாபிரிக்க அணியில் கறுப்பினத்தவர்களை விட வெள்ளையினத்தவர் அதிகம் விளையாடக் காரணம் என்னெவென்று நினைக்கிறீர்கள்?? கறுப்பினத்தவர்களை அடிமைகளாக வைத்திருந்து இன்றுவரை அவர்களை வறுமையின் விளிம்பில் வைத்திருக்கும் வெள்ளையினத்தவர்கள் தமது அடிமைகளுக்கு வாழ்வதற்கு வாழ்க்கையே வழங்காதபோது எங்கிருந்து கிரிக்கெட் விளையாடுவதற்கு அவர்களுக்கு வசதியும் அந்தஸ்த்தும் வருமென்று நீங்கள் நினைக்கிறீர்கள்? 

 

இனவெறியைப் பொறுத்தவரையில் சிறிலங்காவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் வேறுபாடில்லை. 

 

நீங்கள் இனவெறியைக் காரணம் காட்டி சிறிலங்காவை வெறுப்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் தென்னாபிரிக்காவை ஆதரிப்பதைத்தான் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. 

 

ஆனால், அரசியல் எதுவும் இல்லை, தென்னாபிரிக்காவை உங்களுக்குப் பிடிக்கும் என்று சொல்லுங்கள், நம்புகிறேன். 

11074158_792009527556892_55968883018448211069265_791883724236139_361410170402690

 

 

 

வேந்தன்,

 

நீங்கள் சிறிலங்காவை எதிர்ப்பதில் நியாயம் இருக்கிறது.

 

உங்களிடம் ஒரு கேள்வி, நீங்கள் இந்திய அணியின் அபிமானியா??

 

அப்படியானால் எதற்கு சிறிலங்காவை மட்டும் எதிர்க்கிறீர்கள் ?? இந்திய அணியையும் அல்லவா சேர்த்து எதிர்க்க வேண்டும்?? இந்தியா தமிழினத்திற்கு செய்யாததையா இலங்கை செய்துவிட்டது?? முள்ளிவாய்க்கால் படுகொலைகூட இந்தியாவின் திருவிளையாடல் தானே??

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சரித்திரம் தெரிந்துகொண்டுதான் பேசுகிறீர்களா??

 

நிறவெறி என்பது கறுப்பினத்தவர், வெள்ளையினத்தவர் மேல் காட்டுவது அல்ல. மாறாக இன்றுவரை சிறுபான்மையின வெள்ளையர்கள் அந்த நாட்டின் உண்மையான மக்களான கறுப்பினத்தவர் மேல் காட்டியது, இன்றும் காட்டிக்கொண்டு வருவது.

 

கறுப்பின அரசு ஆட்சியில் இருப்பது என்னவோ உண்மைதான். ஆனால் கறுப்பினத்தவர்களுக்கு எதிரான வெள்ளையின நிறவெறி இப்போதும் அங்கே மிக வெளிப்படையாகத்தான் இருக்கிறது.

 

கறுப்பர்கள் செல்லமுடியாத இடங்களும், கடைகளும், பார்களும் இன்னும் தென்னாபிரிக்காவில் பரவலாக இருக்கின்றன.அண்மையில் தென்னாபிரிக்காவுக்கு வேலை நிமித்தம் சென்றுவந்த எனது வெள்ளையின ந்ண்பன் ஒருவன் இதை நேரில் கண்டிருக்கிறார். 

 

தென்னாபிரிக்க அணியில் கறுப்பினத்தவர்களை விட வெள்ளையினத்தவர் அதிகம் விளையாடக் காரணம் என்னெவென்று நினைக்கிறீர்கள்?? கறுப்பினத்தவர்களை அடிமைகளாக வைத்திருந்து இன்றுவரை அவர்களை வறுமையின் விளிம்பில் வைத்திருக்கும் வெள்ளையினத்தவர்கள் தமது அடிமைகளுக்கு வாழ்வதற்கு வாழ்க்கையே வழங்காதபோது எங்கிருந்து கிரிக்கெட் விளையாடுவதற்கு அவர்களுக்கு வசதியும் அந்தஸ்த்தும் வருமென்று நீங்கள் நினைக்கிறீர்கள்? 

 

இனவெறியைப் பொறுத்தவரையில் சிறிலங்காவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் வேறுபாடில்லை. 

 

நீங்கள் இனவெறியைக் காரணம் காட்டி சிறிலங்காவை வெறுப்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் தென்னாபிரிக்காவை ஆதரிப்பதைத்தான் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. 

 

ஆனால், அரசியல் எதுவும் இல்லை, தென்னாபிரிக்காவை உங்களுக்குப் பிடிக்கும் என்று சொல்லுங்கள், நம்புகிறேன். 

 

 

சரித்திரம் மாறிவிட்டது. இப்ப நினைத்தாலும்.. தென்னாபிரிக்க அணியை முழுமையான கறுப்பின அணியாக மாற்றக் கூடிய அரச பலம்.. கறுப்பின மக்களிடம் உள்ளது. 

 

ஆனாலும் அவர்கள் அப்படிச் செய்யமாட்டார்கள்.. காரணம்.. கறுப்பினர் அல்லாதவர்களிடம் உள்ள திறமையை கொண்டு நாட்டின் பெருமை கட்டிக்காக்கவே அவர்கள் நினைக்கிறார்கள். 

 

வெள்ளையிடம் காசு பணம்.. படிப்பு இருக்கலாம். ஆனால் அதிகாரம் இல்லை. 

 

சிறிலங்காவைப் பொறுத்தவரை சிறுபான்மையினரிடம் எதுவுமே இருக்கக் கூடாது என்ற இனவெறி. அதைக்காட்டிலும் தென்னாபிரிக்க நிறவெறி மோசமா...?!

 

தென்னாபிரிக்க அணியை பிடிக்கக்காரணம்.. சவால்களில் இருந்து.. தங்களை தூக்கி நிறுத்தக் கூடிய.. தோல்விகளில் இருந்து.. துவண்டு விழாது மீண்டெழும் அந்தப் பண்பும்.. விளையாட்டில் அவர்கள் கடைப்பிடிக்கும்.. ஒழுங்கும்.. ஒழுக்கமும்.

 

சொறிலங்காவில்.. கிரிக்கெட் அரசியல். சொறிலங்கா கிரிக்கெட் அணி.. அந்த அணியின் வெற்றி.. சிங்கள பேரினவாத வெற்றியின் சின்னமாகவே சிங்களவர்களால் சித்தரிக்க வைக்கப்படுகிறது. கொண்டாடப்படுகிறது.  :icon_idea:  :)

  • தொடங்கியவர்

IND 132/3

  • கருத்துக்கள உறவுகள்

90b260dd4940d1e2810d10dc790f4168

Edited by putthan

  • தொடங்கியவர்

நன்றி புத்தன் இணைப்புக்கு :)

  • தொடங்கியவர்

முதலில் சொதப்ஸ்... பின்னர் பிரில்லியன்ட் பினிஷ்.. இந்தியா 302 .. உபயம் ரோஹித், ரெய்னா + ஜடேஜா!

 

மெல்போர்ன்: பச்சை சட்டை போட்ட வங்கதேச புலிகளின் தாக்குதலால், ப்ளூ சட்டை போட்ட வரிப்புலிகள் சற்று பதுங்கியிருந்த நிலையில், கடைசி கட்ட ஓவர்களில் பாய்ந்து குதறி எடுத்தனர் இந்திய வீரர்கள். இதனால் 302 ரன்களை குவித்து, வங்கதேசத்துக்கு எதிராக தொடை தட்டியுள்ளது இந்தியா. உலக கோப்பை காலிறுதி போட்டியில் டாசில் வெற்றி பெற்று பேட்டிங்கை தேர்ந்தெடுத்த இந்தியாவுக்கு ரோகித் ஷர்மா, ஷிகர் தவான் நல்ல தொடக்கம் தந்தனர். இந்த ஜோடி 75 ரன்கள் சேர்த்திருந்தபோது, தவான் ஸ்டம்பிங்காகி அவுட் ஆனார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய நம்பிக்கை நட்சத்திரம், விராட் கோஹ்லி வெறும் 3 ரன்களில் நடையை கட்டினார்.

 

சற்று நம்பிக்கையளித்த ரஹானேவும் மோசமான ஒரு ஷாட் மூலம் 19 ரன்களில் அவுட் ஆனார். முதலில் சொதப்ஸ்... பின்னர் பிரில்லியன்ட் பினிஷ்.. இந்தியா 302 .. உபயம் ரோஹித், ரெய்னா + ஜடேஜா! 28 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்களை மட்டுமே இந்தியா சேர்த்திருந்தது. எனவே மேற்கொண்டு விக்கெட்டை பறிகொடுத்து விடக்கூடாது என்பதற்காக இந்திய வீரர்கள் ரோகித் மற்றும் ரெய்னா இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். ஆனால், ஓவர்கள் முடிவடைய உள்ள நிலையில், ரோகித் ஷர்மா மற்றும், ரெய்னா அதிரடியை ஆரம்பித்தனர். இதற்கு வசதியாக 35வது ஓவரில் பேட்டிங் பவர் பிளேயை இந்தியா வாங்கியது. நன்கு ஆடிக் கொண்டிருந்த சுரேஷ் ரெய்னா 65 ரன்கள் எடுத்திருந்தபோது மோர்டசா பந்து வீச்சில் முஸ்பிகுர் ரஹிமிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

 

முதலில் சொதப்ஸ்... பின்னர் பிரில்லியன்ட் பினிஷ்.. இந்தியா 302 .. உபயம் ரோஹித், ரெய்னா + ஜடேஜா! இதைத் தொடர்ந்து டோணி களமிறங்கினார். ஆனால் 11 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே சேர்த்த நிலையில் டோணி தஸ்கின் அகமது பந்து வீச்சில் நாசிர் ஹொசைனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். முன்னதாக 126 பந்துகளில், 137 ரன்கள் குவித்த ரோகித் ஷர்மாவும், அதே பவுலரால் கிளீன் பௌல்ட் செய்யப்பட்டார். ஆனால் இறுதி கட்டத்தில் ரவீந்திர ஜடேஜா காட்டிய அதிரடியால் இந்திய அணி 300 ரன்களை தாண்டியது. 50 ஓவர்கள் முடிவில், இந்தியா 6 விக்கெட்டுகளை இழந்து 302 ரன்கள் எடுத்திருந்தது. 10 பந்துகளில் 23 ரன்களுடன் ஜடேஜாவும், 3 ரன்களுடன் அஸ்வினும் களத்தில் நின்றனர். அந்த அணியின் தஸ்கின் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் 300 ரன்களை சேஸ் செய்வது கஷ்டமான காரியம் என்ற நிலையில், வங்கதேசம் பேட்டிங் செய்ய உள்ளது.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/india-won-the-toss-decided-bat-222896.html

  • தொடங்கியவர்

7 வருட பகை வெடித்தது மைதானத்தில்.. கோஹ்லியை திட்டியபடி சீறி பாய்ந்த வங்கதேச பவுலர்!

 

மெல்போர்ன்: உலக கோப்பை காலிறுதியில், வங்கதேசத்துக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில், விராட் கோஹ்லி அவுட் ஆனதும், வங்கதேச பவுலர் ருபேல் ஹொசைன் அவரை பார்த்து ஸ்லட்ஜ் செய்வது போல கத்தி கூச்சல் போட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. ஏன் கோஹ்லி மீது ருபேலுக்கு இந்த கோபம் என்று தோண்டிப் பார்த்தால், அது பல ஆண்டுகளை தாண்டி செல்கிறது. தவான் அவுட் ஆனதும், விராட் கோஹ்லி பேட் செய்ய மைதானத்திற்குள் வந்தபோதே, வங்கதேச பவுலர் ருபேல் அவரிடம் சென்று ஏதோ சொல்லிவிட்டு கெக்க..பிக்கே என சிரித்தார். இதை பார்த்த ரசிகர்களும், ஏதோ பழைய நண்பர்கள் சந்தித்து பேசிக்கொள்கிறார்கள்போல என நினைத்துக் கொண்டனர்.

 

கோஹ்லி அவுட் ஆனால், 5 நிமிடங்களில் ரசிகர்களே அதிர்ச்சியடையும் ஒரு சம்பவம் மைதானத்தில் அரங்கேறியது. ஆம்.. ருபேல் பந்து வீச்சில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து விராட் கோஹ்லி 3 ரன்களிலேயே அவுட் ஆனார்.

சீறிய ருபேல் கோஹ்லி அவுட் ஆனதும், ருபேல் அவரை நோக்கி ஆக்ரோஷமாக எதையோ சொல்லியபடி கத்தினார். நெஞ்சை நிமிர்த்தி திமிறியபடி நின்ற அவரை சக வீரர்கள் சேர்ந்து பிடித்து வைத்தனர். விட்டால், கோஹ்லியை அடிக்க பாய்ந்துவிடுவாரோ என்று நினைக்கும் அளவுக்கு அவரது நடவடிக்கைகள் இருந்தன. ஆனால், கோஹ்லி பின்னால் திரும்பி பார்க்காமல் பெவிலியனை நோக்கி நடந்து சென்றார்.

 

பல ஆண்டு பகை விராட் கோஹ்லி மீது அப்படியென்ன கோபம் ருபேலுக்கு என்று விசாரித்தால், அப்போதுதான் தெரிகிறது, இது இன்று, நேற்று வந்த பிரச்சினை இல்லை, பல ஆண்டுகால பிரச்சினை என்பது.

அப்பவே, அப்படி.. 2008ம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் உலக கோப்பையை இந்திய அணி வென்றது. அப்போது விராட் கோஹ்லிதான் இந்தியாவின் கேப்டனாக செயல்பட்டார். அந்த தொடரில், வங்கதேசத்துக்கு எதிரான போட்டியின்போது, ருபேல் மற்றும் விராட் கோஹ்லி இருவருக்கும் நடுவே சொற்போர் வெடித்துள்ளது. சக வீரர்கள் தலையிட்டு சண்டையை விலக்கிவிடும் நிலைக்கு போயுள்ளது.

 

கடந்த உலக கோப்பை இந்த தகராறு காலம் காலமாக ஓயாமல் தொடர்ந்து வருகிறது. 2011 உலக கோப்பையின்போது, விராட் கோஹ்லி, வங்கதேசத்துக்கு எதிராக சதம் அடித்து பதிலடி கொடுத்தார். ஆனால், ருபேல் பந்து வீச்சில்தான் அப்போதும் அவுட் ஆனார். இந்நிலையில்தான், இன்றும், களத்திற்கு வந்த விராட்டை சீண்டி பார்த்துள்ளார் ருபேல். கோஹ்லியும், கொஞ்ச ரன்களில் அவுட் ஆகவே, ருபேலுக்கு ஆக்ரோஷம் தலைக்கு ஏறிவிட்டது.

 

பொறுத்தது போதும் கோஹ்லி.. நடிகை கொடுத்த பாலியல் பலாத்கார வழக்கில் ஜாமீன் பெற்று விளையாட வந்துள்ள ருபேல், இன்னும் பெரிய அளவில் சர்வதேச வீரராக மிளிராதவர். ஆனால் கோஹ்லி, சர்வதேச அளவில் முன்னணி பேட்ஸ்மேனாக தன்னை வார்த்தெடுத்துள்ளார். எனவே அடுத்த இந்தியா-வங்கதேச மோதலின்போது கோஹ்லி விஸ்வரூபம் எடுத்து ருபேலுக்கு தனது பேட்டால் பதில் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர் இந்திய ரசிகர்கள்.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/the-virat-rubel-rivalry-222929.html

  • தொடங்கியவர்

அலிம்தார் ஏன் அப்படிச் செய்தார்... பாக். நடுவருக்கு எதிராக வெடித்த நோ-பால் சர்ச்சை! 

 

மெல்போர்ன்: இந்திய வீரர் ரோகித் ஷர்மாவுக்கு தவறான தீர்ப்பு மூலம் வாழ்வளித்துவிட்டார் கள நடுவர் அலிம்தார் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்திய அணி 39.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்களுடன் நிதானமாக ஆடிக் கொண்டிருந்த தருணம் அது. ரோகித் ஷர்மா அடித்து ஆட முற்பட்டுக் கொண்டிருந்தார். அப்போதுதான், வேகப் பந்து வீச்சாளர் ருபேல் புல்டாஸ் ஒன்றை வீசினார். அதை ரோகித் இடதுபுறமாக இழுத்து அடிக்க, அந்த பந்து பவுண்டரி எல்லையில் கேட்ச் ஆனது. சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்படி கேட்ச் கொடுத்து விட்டாரே என்று இந்திய ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

 

 

 

மேலும், செட்டில் ஆன பேட்ஸ்மேன் அவர்தான் என்பதால், ரன் ரேட் வீழ்ச்சியடைந்துவிடுமே என்ற அச்சமும் இந்திய ரசிகர்களுக்கு ஏற்பட்டது. அலிம்தார் ஏன் அப்படிச் செய்தார்... பாக். நடுவருக்கு எதிராக வெடித்த நோ-பால் சர்ச்சை! ஆனால், லெக் அம்பயர் அலிம்தார் ஆபத்பாண்டவராக இந்தியாவுக்கு கை கொடுத்தார். ஆம்.. அந்த பந்து இடுப்புக்கு மேலே உயரமாக வந்த புல்டாஸ். எனவே அது நோபால் என்று கள நடுவருக்கு சமிக்ஞை செய்தார்.

 

 

கள நடுவர் இயான் கவுல்ட் அதை ஏற்று நோபால் என அறிவித்தார். நோபாலில் பிடிபட்ட கேட்ச் என்பதால், ரோகித் நாட்-அவுட் என அறிவிக்கப்பட்டது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட ரோகித் ஷர்மா சதம் எடுத்து அசத்தினார். சதம் அடித்த பிறகுதான் அதிரடியாக ஆடத் தொடங்கி, சிக்சரும், பவுண்டரியுமாக பறக்கவும் விட்டார். மொத்தத்தில் 137 ரன்களை குவித்த ரோகித் ஷர்மா, தஸ்கின் பந்து வீச்சில் பௌல்ட் ஆகி அவுட் ஆனார்.

mmbihc.jpg

 

ஆனால் ரோகித் ஷர்மாவின் ரன் குவிப்புதான், ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. இந்நிலையில், அலிம்தார் மீது, லட்சுமணன், வார்னே போன்ற பல்வேறு முன்னாள் வீரர்களும் அதிருப்தி வெளிப்படுத்தியுள்ளனர். ரோகித் ஷர்மா 90 ரன்களுக்கு பிறகு கூடுதலாக எடுத்த 47 ரன்களையும் அலிம்தார்தான் ஸ்கோர் செய்தார் என்று வறுக்கின்றனர் வலைவாசிகள்.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/aleem-dar-under-fire-after-his-no-ball-call-helps-rohit-sharma-hit-century-222936.html

  • கருத்துக்கள உறவுகள்

இதைப்பார்த்தால் no ball மாதிரித்தானே தெரியுது??

நீங்கள் சரித்திரம் தெரிந்துகொண்டுதான் பேசுகிறீர்களா??

 

நிறவெறி என்பது கறுப்பினத்தவர், வெள்ளையினத்தவர் மேல் காட்டுவது அல்ல. மாறாக இன்றுவரை சிறுபான்மையின வெள்ளையர்கள் அந்த நாட்டின் உண்மையான மக்களான கறுப்பினத்தவர் மேல் காட்டியது, இன்றும் காட்டிக்கொண்டு வருவது.

 

கறுப்பின அரசு ஆட்சியில் இருப்பது என்னவோ உண்மைதான். ஆனால் கறுப்பினத்தவர்களுக்கு எதிரான வெள்ளையின நிறவெறி இப்போதும் அங்கே மிக வெளிப்படையாகத்தான் இருக்கிறது.

 

கறுப்பர்கள் செல்லமுடியாத இடங்களும், கடைகளும், பார்களும் இன்னும் தென்னாபிரிக்காவில் பரவலாக இருக்கின்றன.அண்மையில் தென்னாபிரிக்காவுக்கு வேலை நிமித்தம் சென்றுவந்த எனது வெள்ளையின ந்ண்பன் ஒருவன் இதை நேரில் கண்டிருக்கிறார். 

 

தென்னாபிரிக்க அணியில் கறுப்பினத்தவர்களை விட வெள்ளையினத்தவர் அதிகம் விளையாடக் காரணம் என்னெவென்று நினைக்கிறீர்கள்?? கறுப்பினத்தவர்களை அடிமைகளாக வைத்திருந்து இன்றுவரை அவர்களை வறுமையின் விளிம்பில் வைத்திருக்கும் வெள்ளையினத்தவர்கள் தமது அடிமைகளுக்கு வாழ்வதற்கு வாழ்க்கையே வழங்காதபோது எங்கிருந்து கிரிக்கெட் விளையாடுவதற்கு அவர்களுக்கு வசதியும் அந்தஸ்த்தும் வருமென்று நீங்கள் நினைக்கிறீர்கள்? 

 

இனவெறியைப் பொறுத்தவரையில் சிறிலங்காவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் வேறுபாடில்லை. 

 

நீங்கள் இனவெறியைக் காரணம் காட்டி சிறிலங்காவை வெறுப்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் தென்னாபிரிக்காவை ஆதரிப்பதைத்தான் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. 

 

ஆனால், அரசியல் எதுவும் இல்லை, தென்னாபிரிக்காவை உங்களுக்குப் பிடிக்கும் என்று சொல்லுங்கள், நம்புகிறேன். 

 

 

 

வேந்தன்,

 

நீங்கள் சிறிலங்காவை எதிர்ப்பதில் நியாயம் இருக்கிறது.

 

உங்களிடம் ஒரு கேள்வி, நீங்கள் இந்திய அணியின் அபிமானியா??

 

அப்படியானால் எதற்கு சிறிலங்காவை மட்டும் எதிர்க்கிறீர்கள் ?? இந்திய அணியையும் அல்லவா சேர்த்து எதிர்க்க வேண்டும்?? இந்தியா தமிழினத்திற்கு செய்யாததையா இலங்கை செய்துவிட்டது?? முள்ளிவாய்க்கால் படுகொலைகூட இந்தியாவின் திருவிளையாடல் தானே??

நான் இந்திய அணியின்  அபிமானி இல்லை ரகுனாதன்..

  • தொடங்கியவர்

இதைப்பார்த்தால் no ball மாதிரித்தானே தெரியுது??

 

பந்து இடுப்புக்கு மேல் இருக்க வேண்டும், அதே நேரம் துடுப்பாட்டவீரர் அந்த பந்தை அடிக்கும்போது எங்கு இருந்தார் என்பதும் முக்கியம். இதில் ரோஹித் கிரீஸ்க்கு வெளியில். அவர் கிரீஸ்க்குள் இருந்து இருந்தால் பந்து இடுப்புக்கு கீழ்தான்.

  • தொடங்கியவர்

வாட் ஏ கேட்ச்... வங்கதேச டாப் பேட்ஸ்மேனை, டாப்பு டக்கர் கேட்ச்சால் வெளியேற்றிய தவான்!

 

மெல்போர்ன்: அடுத்தடுத்த போட்டிகளில் சதம் எடுத்து அசத்தி ஃபார்மில் இருந்த வங்கதேச பேட்ஸ்மேன் மஹ்மதுல்லாவை 'அவுட் ஸ்டாண்டிங்' கேட்ச் மூலம் வெளியேற்றினார் ஷிகர் தவான். இந்தியாவின் 302 ரன்களை விரட்டி பிடிக்க தொடங்கிய வங்கதேசம் 33 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றத்தை சந்தித்தது. அந்த நேரத்தில்தான் சவுமியா சர்க்கார் மற்றும் மஹ்மதுல்லா இணைந்து வங்கதேசத்தை மீட்க போராடினர்.

 

இதில், மஹ்மதுல்லாதான், வங்கதேசத்தின் துருப்பு சீட்டு விக்கெட்டாக பார்க்கப்பட்டது. ஏனெனில், லீக் போட்டிகளில் அடித்தடுத்து சதம் அடித்து, நல்ல ஃபார்மில் இருந்தார் மஹ்மதுல்லா. அவரை வைத்துதான் ரன் சேஸிங்கில் மிரட்ட முடியும் என்பது வங்கதேச திட்டமாக இருந்தது. அதேபோல, மஹ்மதுல்லாவும், 21 ரன்களுடன் நல்ல டச்சில் ஆடி வந்தார். அந்த நேரத்தில்தான், 2 ஓவர் ஸ்பெல்லை முடித்து, ஓரமாக நின்ற, முகமது ஷமியை மீண்டும் பந்து வீச அழைத்தார் டோணி. அந்த ஓவரில், ஷமி வீசிய பந்தை மஹ்மத்துல்லா தூக்கி அடித்து ஆட, அது கிட்டத்தட்ட எல்லைக் கோட்டை கடக்கும் நிலைக்கு பறந்து சென்று கொண்டிருந்தது. ஆனால், எல்லைக் கோட்டின் மிக அருகில் நின்ற தவான், அதை கேட்சாக மாற்ற முயன்றார். அப்போது, நிலைதடுமாறி, எல்லைக் கோட்டுக்கு அந்த பக்கம் தவான் சாய தொடங்கினார்.

n6zuxi.jpg

 

பந்தோடு விழுந்தால், அது சிக்சராக மாறிவிடும் என்பதை உணர்ந்தார் தவான். உடனே அவரது மூளையில், பல்பு எரிந்தது. எனவே, பந்தை மேலே தூக்கி எறிந்து விட்டு பவுண்டரி எல்லைக்குள் சென்று காலை ஊன்றினார் தவான். பிறகு, மீண்டும் மைதானத்திற்குள் நடந்து வந்து, மேலேயிருந்து வந்த பந்தை கேட்சாக மாற்றினார். கிட்டத்தட்ட ரஜினிகாந்த் தீக்குச்சியை மேலே போட்டு, தீ பற்ற வைக்கும் ஸ்டைலை போல இருந்தது தவானின் ஆக்ஷன். 3வது அம்பயரிடம் கள நடுவர்கள் கருத்து கேட்க, அவரும் ரிப்ளே செய்து பார்த்துவிட்டு, அது ஒரு நல்ல கேட்ச் என்று சான்றளித்து மஹ்மதுல்லாவை பெவிலியன் அனுப்பி வைத்தார். அதுமட்டுமல்ல, சர்க்கார் 29 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஷமி பந்து வீச்சில், டோணியும், அருமையாக தனது இடது பக்கம் பாய்ந்து அவரை அவுட் செய்து அசத்தினார். இரு கேட்சுகளுமே அபாரமாக இருந்தன.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/dhawan-just-just-takes-it-inside-the-rope-222947.html

  • தொடங்கியவர்

இந்திய அணிக்கு வாழ்த்துக்கள். பங்களாதேஷ் அணியும் குறைந்தவர்கள் அல்ல. அடுத்த முறை அவர்கள் சாதிப்பார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இசை... சொறிலங்காவின் அந்த "பொன்னான" தருணங்களை இங்கு கண்டுகளிக்கலாம்.. :):icon_idea:

http://www.cricketcountry.com/videos/south-africa-vs-sri-lanka-full-video-highlights-icc-cricket-world-cup-2015-quarter-final-match-highlights-266156

இணைப்புகளுக்கு நன்றி நெடுக்ஸ்..

  • தொடங்கியவர்

உலகக் கோப்பை விக்கெட் வித்தகர்களில் ஷமி முதலிடம்
 

நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஷமி 17 விக்கெட்டுகளுடன் முதலிடம் வகிக்கிறார்.

இன்று வங்கதேசத்துக்கு எதிராக 2 அருமையான கேட்ச்களை முறையே ஷிகர் தவன், தோனி பிடிக்க மஹமுதுல்லா, சவுமியா சர்க்கார் விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஷமி, ஆஸி.யின் மிட்செல் ஸ்டார்க்கை (16) கடந்து சென்றுள்ளார்.

 

நியூசி. பவுலர் டிரெண்ட் போல்ட் 15 விக்கெட்டுகளையும், தென் ஆப்பிரிக்காவிடம் இம்ரான் தாஹிர் 15 விக்கெட்டுகளையும், மோர்கெல் 14 விக்கெட்டுகளையும்

ஜெரோம் டெய்லர் 14 விக்கெட்டுகளையும், வஹாப் ரியாஸ் 14 விக்கெட்டுகளையும், வெட்டோரி 13 விக்கெட்டுகளையும், சவுதி 13 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B7%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/article7011484.ece

  • தொடங்கியவர்

உலக கோப்பை தொடரில் அடுத்தடுத்து 7 அணிகளை ஆல்-அவுட் செய்து இந்தியா புது சாதனை!

 

மெல்போர்ன்: உலக கோப்பையில் லீக் ஆட்டங்கள் ஆறிலும் தான் சந்தித்த எதிரணிகளை ஆல் அவுட் ஆக்கி சாதனை படைத்தது இந்தியா. காலிறுதியிலும், வங்கதேசத்தை ஆல்-அவுட் செய்ததன் மூலம், உலக கோப்பை தொடர் ஒன்றில், தொடர்ந்து 7வது முறையாக எதிரணியை ஆல்அவுட் செய்த முதல் அணி என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து, ஜிம்பாப்வே ஆகிய 6 அணிகளுக்கு எதிரான லீக் போட்டிகளிலும் அவ்வணிகளை ஆல் அவுட் செய்தனர் இந்திய பவுலர்கள். உலக கோப்பை தொடரில் அடுத்தடுத்து 7 அணிகளை ஆல்-அவுட் செய்து இந்தியா புது சாதனை!

 

இந்நிலையில், காலிறுதியில் இன்று வங்கதேசத்தை சந்தித்தது இந்தியா. இப்போட்டியில் இந்தியாவின் 302 ரன்களை விரட்டி பிடிக்க முயன்ற வங்கதேசத்தை ஆல்அவுட் செய்யும் முனைப்பில் பந்து வீசினர் இந்திய பவுலர்கள். இருப்பினும் 43வது ஓவர் வரை வங்கதேசம் 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்தது. எனவே, எஞ்சிய 6 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆல்-அவுட் சாதனையை நிகழ்த்த முடியுமா என்ற கேள்விக்குறி எழுந்தது.

 

ஆனால் கடைசி நேரத்தில், உமேஷ் யாதவ் வீசிய அனல் பறக்கும் பந்துகளால் சாதனை சாத்தியமாயிற்று. 45வது ஓவரிலேயே 193 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது வங்கதேசம். இதன்மூலம், உலக கோப்பை வரலாற்றில் முதல் முறையாக, அடுத்தடுத்த 7 போட்டிகளிலும் எதிரணிகளை ஆல்அவுட் ஆக்கிய அணி என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/india-become-the-1st-team-bowl-their-opponents-in-7-consecutive-222959.html

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த விளையாட்டில்  இவர்களின் சாதனைகளுக்குச் சோதனை வரலாம். :D

  • தொடங்கியவர்

உலக கோப்பை... வங்கதேசத்தை அடித்து நொறுக்கி அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா!

 

மெல்போர்ன்: உலக கோப்பையில், வங்கதேசத்துக்கு எதிராக காலிறுதி போட்டியில், இந்தியா 109 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமான வெற்றியை பெற்று அரையிறுதிக்குள் பிரவேசித்தது. இதன் மூலம், நடப்பு உலக கோப்பையில் தொடர்ந்து 7வது வெற்றியை பதிவு செய்த இந்தியா, ஆறாவது முறையாக உலக கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. உலக கோப்பை காலிறுதி போட்டியில் இந்தியா-வங்கதேசம் இன்று மெல்போர்ன் மைதானத்தில் மோதின.

 

முதலில் பேட் செய்த இந்தியா ரோகித் ஷர்மா சதம் உதவியுடன் 302 ரன்கள் குவித்தது. இதையடுத்து பேட் செய்ய வந்த வங்கதேசம் பதற்றமின்றி சேஸிங்கை தொடங்கியது. உலக கோப்பை... வங்கதேசத்தை அடித்து நொறுக்கி அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா! வங்கதேசம் 6.3 ஓவர்களில் 33 ரன்கள் எடுத்திருந்தபோது, உமேஷ் யாதவ் பந்து வீச்சில் டோணியிடம் கேட்ச் கொடுத்து தமிம் இக்பால் 25 ரன்களில் வெளியேறினார். அந்த அதிர்ச்சியில் இருந்து வங்கதேசம் மீள்வதற்குள், அதற்கு அடுந்த பந்திலேயே, தேவையில்லாமல் ஓடி, ஜடேஜாவால் இம்ருல் கையேஸ் ரன் அவுட் செய்யப்பட்டார். அவர் 5 ரன்களுடன் நடையை கட்டினார்.

 

உலக கோப்பை... வங்கதேசத்தை அடித்து நொறுக்கி அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா! அதன்பிறகு அந்த அணியின் சரிவை தடுக்க முடியவில்லை. சவுமியா சர்க்கார் 29 ரன்களும், மஹ்மதுல்லா 21 ரன்களும் எடுத்த நிலையில், அடுத்தடுத்து முகமது ஷமி பந்து வீச்சில் வெளியேறினர். சகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹிம் போன்ற, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பேட்ஸ்மேன்களும், முறையே 10 மற்றும் 27 ரன்களில் நடையை கட்டினர். அந்த அணியிலே அதிகபட்ச ரன் என்றால், அது நாசிர் ஹொசைன் எடுத்த 35 ரன்கள்தான். சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்த நிலையில், ரன் ரேட்டை உயர்த்த முடியாமல் வங்கதேசம் திணறியது. உலக கோப்பை... வங்கதேசத்தை அடித்து நொறுக்கி அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா! 45வது ஓவரில் வங்கதேசம், 193 ரன்களில் ஆல்-அவுட் ஆனது.

 

இதனால், இந்தியா 109 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. முன்னதாக, டாசில் வெற்றி பெற்று பேட்டிங்கை தேர்ந்தெடுத்த இந்தியாவுக்கு ரோகித் ஷர்மா, ஷிகர் தவான் நல்ல தொடக்கம் தந்தனர். இந்த ஜோடி 75 ரன்கள் சேர்த்திருந்தபோது, தவான் ஸ்டம்பிங்காகி அவுட் ஆனார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய நம்பிக்கை நட்சத்திரம், விராட் கோஹ்லி வெறும் 3 ரன்களில் நடையை கட்டினார். சற்று நம்பிக்கையளித்த ரஹானேவும் மோசமான ஒரு ஷாட் மூலம் 19 ரன்களில் அவுட் ஆனார். 28 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்களை மட்டுமே இந்தியா சேர்த்திருந்தது.

 

எனவே மேற்கொண்டு விக்கெட்டை பறிகொடுத்து விடக்கூடாது என்பதற்காக இந்திய வீரர்கள் ரோகித் மற்றும் ரெய்னா இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். ஆனால், ஓவர்கள் முடிவடைய இருந்த நிலையில், ரோகித் ஷர்மா மற்றும், ரெய்னா அதிரடியை ஆரம்பித்தனர். இதற்கு வசதியாக 35வது ஓவரில் பேட்டிங் பவர் பிளேயை இந்தியா வாங்கியது. உலக கோப்பை... வங்கதேசத்தை அடித்து நொறுக்கி அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா! நன்கு ஆடிக் கொண்டிருந்த சுரேஷ் ரெய்னா 65 ரன்கள் எடுத்திருந்தபோது மோர்டசா பந்து வீச்சில் முஸ்பிகுர் ரஹிமிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதைத் தொடர்ந்து டோணி களமிறங்கினார். ஆனால் 11 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே சேர்த்த நிலையில் டோணி தஸ்கின் அகமது பந்து வீச்சில் நாசிர் ஹொசைனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

 

முன்னதாக 126 பந்துகளில், 137 ரன்கள் குவித்த ரோகித் ஷர்மாவும், அதே பவுலரால் கிளீன் பௌல்ட் செய்யப்பட்டார். ஆனால் இறுதி கட்டத்தில் ரவீந்திர ஜடேஜா காட்டிய அதிரடியால் இந்திய அணி 300 ரன்களை தாண்டியது. 50 ஓவர்கள் முடிவில், இந்தியா 6 விக்கெட்டுகளை இழந்து 302 ரன்கள் எடுத்தது. 10 பந்துகளில் 23 ரன்களுடன் ஜடேஜாவும், 3 ரன்களுடன் அஸ்வினும் களத்தில் நின்றனர். அந்த அணியின் தஸ்கின் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆட்ட நாயகன் விருது, ரோகித் ஷர்மாவுக்கு கிடைத்தது.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/india-won-the-toss-decided-bat-222896.html

  • தொடங்கியவர்

ஆஸ்திரேலியா
v
பாகிஸ்தான்
(14:00 local | 03:30 GMT | 04:30 CET)

  • தொடங்கியவர்

ஆஸி., நியூஸி.யை அச்சுறுத்தும் இந்தியாவின் ஆதிக்க வெற்றி
 

 

உலகக் கோப்பை காலிறுதிப் போட்டியில் வங்கதேசத்தை 109 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று, தனது தொடர்ச்சியான ஆதிக்கத்தை நிரூபித்தது. | வாசிக்க - உலக் கோப்பை காலிறுதி: இந்தியா - வங்கதேசம் போட்டி பதிவுகள் |

 

ஒன்றை முதலில் கூறிவிடுவது சிறப்பு. நேற்று இலங்கை அணி ஏமாற்றமளித்தைத் தொடர்ந்து அனைத்து காலிறுதிப் போட்டிகளுமே அப்படித்தான் காற்றைப் பிடுங்கி விட்ட சைக்கிள் டியூப் போல் ஆகிவிடும் என்று தோன்றியது. வங்கதேச அணி, இலங்கை அணி அளவுக்கு மோசம் போய்விடவில்லை. குறிப்பாக 'பாடி லாங்க்வேஜ்' நன்றாக இருந்தது. ஆனால், பேஸ்மென்ட் வீக் ஆனதால் அந்த பாடி லாங்வேஜால் இந்தியாவை அசரடிக்கச் செய்ய முடியாமல் போனது.

இந்தக் காலிறுதியில் அவர்களுக்கான தருணங்கள் இருந்தன. குறிப்பாக, இந்திய அணி பேட் செய்தபோது. அந்த அணி நடுவில் சற்றே அச்சுறுத்தியது என்றுதான் கூற வேண்டும்.

 

7 போட்டிகள், 7 அணிகள், 70 விக்கெட்டுகள்:

இந்த உலகக் கோப்பை போன்று இந்தியா தொடக்கம் முதலே இவ்வளவு ஆதிக்கம் செலுத்திய உலகக் கோப்பை வேறு இல்லை என்றே கூறிவிடலாம்.

பாகிஸ்தானுக்கு எதிராகத் தொடங்கிய ஆதிக்கம், இன்று காலிறுதிப் போட்டியில் வங்கதேசம் வரை நீடித்து 7 போட்டிகளில் 7 அணிகளை ஆல் அவுட் செய்து 70 விக்கெட்டுகளை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. உலகப் பந்துவீச்சாளர்களே திணறி வரும் இன்றைய பேட்ஸ்மென் ஆதிக்க ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய பவுலர்கள் ஆதிக்கம் செலுத்துவதில் முரண் எதுவும் இல்லை.

 

நல்ல அளவு, திசை மற்றும் கட்டுக்கோப்புடன் வீசி, நல்ல களவியூகம், அருமையான கேப்டன்சி என்று அனைத்தும் கை கூடினால் பவுலர்கள் ஆதிக்கம் செலுத்த முடியும் என்பதை இந்திய அணி நிரூபித்துக் காட்டியுள்ளது. இயன் சாப்பல் சொன்னது போல், கேப்டன்சியில் தோனி அடுத்த கட்டத்தை எட்டியுள்ளார். அதுதான் நடு ஓவர்களில் விக்கெட்டுகளைக் கைப்பற்றும் உத்தி. இந்த உலகக் கோப்பையில் அது ஒன்றுதான் வெற்றிக்கு வழி வகுக்கும் என்பதை உணர்ந்த தோனி, அதற்குத் தக்கவாறு களவியூகம் அமைத்து, பந்துவீச்சிலும் சாதுர்யமான மாற்றங்களைக் கொண்டு வந்து அசத்தி வருகிறார்.

 

3 விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகு கோட்டைவிட்ட வங்கதேசம்:

டாஸ் வென்ற அணி பேட்டிங்தான் செய்ய வேண்டும் என்பது இந்த மைதானத்தின் விதி. அதையே தோனியும் செய்தார்.

மஷ்ரபே மோர்டசா தொடக்கத்தில் சரியாக வீசவில்லை. அவர் வீசிய முனையில் டஸ்கின் அமகதை கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால், இவர் பிடிவாதமாக அந்த முனையில் வீசி, டஸ்கினை கட் வேறு செய்தார்.

மோர்டசா 120-125 கிமீ வேகத்தில் பந்து வீசியது இந்த பிட்சில் நிச்சயம் கைகொடுக்காது. ஷேன் வார்ன் வர்ணனை செய்து கொண்டிருந்த போது, மோர்டசாவின் பவுலிங்கை எள்ளி நகையாடினார்.

முயற்சி எடுத்து அவர் வீசவில்லை என்றும், அவர் முயற்சி எடுத்து வீசும் பந்தும் மற்ற பந்துகளை விட மெதுவாக வருகின்றன என்றும் ஷேன் வார்ன் கடும் கிண்டலடித்தார். அவர் அப்படி கிண்டலடிப்பதற்கு மோர்டசாதான் காரணம்.

 

இந்திய அணியின் நல்ல துவக்கம்:

இந்திய அணி அருமையாகத் தொடங்கியது. ஷிகர் தவன், ரோஹித் ஜோடி 75 ரன்களை முதல் விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். ஆனால் அதற்கு முன்னர் 10 ஓவர்களில் 51 ரன்கள் எடுத்திருந்த இந்திய அணியை வங்கதேசம் கட்டுப்படுத்தி 6.3 ஓவர்களில் 25 ரன்களையே கொடுக்க ஷிகர் தவன் பதற்றமடைந்தார்.

இந்த நிலையில்தான் அவர் 30 ரன்களில் ஷாகிப் அல் ஹசன் பந்தை மேலேறி வந்து அடிக்க முயன்று ஃபிளைட்டில் மோசம் போனார். ஸ்டம்ப்டு ஆனார். முஷ்பிகுர் ரஹீமின் அருமையான ஸ்டம்பிங்காக அது அமைந்தது.

 

சோபிக்காது ஏமாற்றமளித்த கோலி:

விராட் கோலி பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே 51,000 ரசிகர்களின் ஆரவாரத்தில் களமிறங்கினார். ஆனால் 3 ரன்கள் எடுத்து ரூபல் ஹுசைன் வீசிய சற்றே வெளியே சென்ற பந்து ஒன்று அவரத் மட்டையை இழுத்துச் சென்றது. விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனது. மைதானத்தில் இந்திய ரசிகர்கள் கப்சிப். வங்கதேச ரசிகர்களின் உற்சாகம் கரைபுரண்டது.

10 ஓவர்களுக்கு முன்பாக கடைசியாக வந்த பவுண்டரிக்குப் பிறகு ரோஹித் 15-வது ஓவர் முடிவில் அடித்த சிக்ஸ். அதன் பிறகு 11 ஓவர்கள் வங்கதேசம் இந்திய அதிரடி வீரர்களை கட்டிப் போட்டது.

 

18-வது ஓவரில் 79/2 என்று இருந்த இந்திய அணி 28-வது ஓவர் முடிவில் 115 ரன்கள் என்று கட்டுப்படுத்தப்பட்டது. 10 ஓவர்களில் வெறும் 36 ரன்கள்தான். ஆனால் 37 பந்துகளைச் சந்தித்த ரஹானே ஒரு பவுண்டரியுடன் 19 ரன்கள் எடுத்த நிலையில் அப்போதுதான் அவுட் ஆனார். மிட் ஆஃப் உள்ளே இருந்தவுடன் தூக்கி அடிக்க நினைத்து டக்சின் அகமது பந்தில் மிட் ஆஃபில் ஷாகிபிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க இந்தியா 115/3 என்று ஆனது. அப்போது ரோஹித் சர்மா 73 பந்துகளில் 5 பவுண்டரி ஒரு சிக்சருடன் 56 ரன்களில் இருந்தார்.

 

ரோஹித் சர்மா, ரெய்னாவிடம் உடைந்துபோன வங்கதேசம்:

28 ஓவர்களில் 115/3. சற்றே நெருக்கடியான நிலை. இந்தக் கட்டத்தில் வங்கதேசம் கொஞ்சம் அலட்சியமாக ஆடியதாகவே தோன்றியது. அடுத்த 17 ஓவர்கள் ஆட்டத்தின் போக்கே மாறிப்போனது.

ரெய்னா களமிறங்கியவுடன் ஷார்ட் பைன்லெக், மற்றும் ஸ்லிப் வைத்து ஷார்ட் பிட்ச் பந்தை முயன்றிருக்க வேண்டும். ரெய்னாவும் ஒரு பந்தை எட்ஜ் செய்து பவுண்டரி அடித்தார். ஆனால் கேட்ச் பிடிக்க ஸ்லிப் இல்லை. இப்படியாக ரோஹித் சர்மாவும் சில ஷாட்களை ஆடினார்.

மேலும் வட்டத்துக்குள் நிற்கும் பீல்டிங் நிலை அறியாமல் வங்கதேச பவுலர்களும் லெக் திசையிலும் ஷார்ட் ஆகவும் வீசி ரெய்னா, ரோஹித்திடம் வாங்கிக் கட்டிக் கொண்டனர்.

அடுத்த 15.5 ஓவர்களில், அதாவது 95 பந்துகளில் 122 ரன்கள் குவிக்கப்பட்டது. 10 ஓவர்களில் 51/0, 35-வது ஓவரில் 155/3. அதன் பிறகு 15 ஓவர்கலில் மேலும் 147 ரன்கள்!!

 

இங்குதான் வங்கதேசத்தின் தோல்வி தொடங்கியது.

பவர் பிளேயின் முதல் ஓவரில் மீண்டும் மோர்டசா வந்தார். மோசமாக வீசினார் ரெய்னா 2 பவுண்டரிகளுடன் விளாசலை ஆரம்பிக்க 40-வது ஓவர் முடிவில் ஸ்கோர் 205 ஆனது. பவர் பிளேயில் 50 ரன்கள். விக்கெட் இல்லை. 40 ஓவர்களில் 205/3 என்ற நிலையிலிருந்து வங்கதேச பீல்டிங் மோசமாகப் போக அடுத்த 10 ஓவர்களில் 97 ரன்கள்.

ஆனால் ரோஹித் சர்மா 90களின் அருகில் இருந்த போது ரூபல் ஹுசைன் புல்டாஸை ஸ்கொயர் லெக்கில் கேட்ச் கொடுத்தார். ஆனால் நடுவர் அதனை நோ-பால் என்றார். இடுப்புக்கு மேல் சென்ற பந்து என்று தீர்ப்பளிக்கப்பட்டது. நாட் அவுட். இது வங்கதேசத்துக்கு பெரிய அடியாக மாறியது. அதன் பிறகு ரோஹித் 47 ரன்களை விளாசினார். அந்த மார்ஜினல் நோ-பால் இல்லையெனில் இந்தியாவை இன்னும் 10-20 ரன்கள் குறைவாகக் கூட வங்கதேசம் கட்டுப்படுத்தியிருக்கும்.

கடைசியில் ஜடேஜா மிகவும் சாதுரியமான சில பவுண்டரிகளை அடிக்க இந்தியா 302 ரன்கள் குவித்தது.

 

தோனியின் கேப்டன்சிக்கு முன்னால் சரிந்த வங்கதேசம்

தொடக்கத்தில் தமிம் இக்பால், மொகமது ஷமியை தொடர்ச்சியாக 3 பவுண்டரிகள் விளாச, சரி நல்ல ஒரு விரட்டல் இருக்கிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

ஆனால் உமேஷ் யாதவ் வீசிய அருமையான பந்தில் அவர் ஆட்டமிழக்க, அதே ஓவரில் சவுமியா சர்க்கார் வேடிக்கைப் பார்க்க ஜடேஜாவின் அருமையான பீல்டிங் மற்றும் த்ரோவுக்கு இம்ருல் கயேஸ் ரன் அவுட் ஆனார்.

33/2 என்ற நிலையில் சவுமியா சர்க்கார், 2 சதங்கள் கண்ட மஹமுதுல்லா இணைந்து நல்ல சில பவுண்டரிகளை அடித்தனர். ஆக்ரோஷம் காட்டினர். ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் அங்கு உருவாகிக் கொண்டிருந்தது. ஸ்கோர் 17-வது ஓவரில் 73/3 என்று உயர்ந்தது.

 

ஷிகர் தவன், தோனியின் அசாத்திய கேட்ச்:

அப்போதுதான் மொகமது ஷமி மீண்டும் பந்து வீச அழைக்கப்பட்டார். 17-வது ஓவரின் கடைசி, ஷார்ட் பிட்ச் பந்தை மஹமுதுல்லா அற்புதமாக ஹூக் ஆடினார். பந்து சிக்சருக்குச் சென்றது. எல்லைக்கோட்டிற்கு மிக அருகே தவன் அதனை கேட்ச் பிடிக்க முயன்றார். பந்து கையில் பட்டு எகிறியது. மீண்டும் பந்தை பிடித்தார் ஆனால் எல்லைக் கோட்டை கடந்து விடும் அச்சத்தில் பந்தை மேலே தூக்கி எறிந்து எல்லைக்கோட்டுக்கு வெளியே சென்று பிறகு உள்ளே வந்து பிடித்தார். மிகவும் அருமையான கேட்ச்.

இதனைத் தொடர்ந்து சவுமியா சர்க்காரும் மொகமது ஷமி பந்தை தொட பந்து 2-வது ஸ்லிப்பிற்குச் சென்றது. தோனி அருமையான டைவ் அடிதுப் பிடித்து ஒரு கையில் பிடித்தார். இதோடு வங்கதேசம் ஆட்டம் முடிந்தது என்றே கூற வேண்டும்.

 

அதன் பிறகு முஷ்பிகுர், நசீர் ஹுசைன் சபிர் ரஹ்மான் கொஞ்சம் நின்று பார்த்தனர், அடித்துப் பார்த்தனர், ஆனால் 45வது ஓவரில் 193 ரன்களுக்குச் சுருண்டது வங்கதேசம். உமேஷ் யாதவ் 9 ஓவர்களில் 1 மெய்டன் 31 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள். அஸ்வின் விக்கெட் எடுக்காவிட்டாலும் வங்கதேச வீரர்களின் மரியாதையைச் சம்பாதித்துக் கொண்டார். அவர் 10 ஓவர்களில் 30 ரன்களித்தான் விட்டுக் கொடுத்தார்.

 

ஜடேஜா கொஞ்சம் வாங்கிக் கட்டிக் கொண்டாலும் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 2 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றிய ஷமி முக்கிய கூட்டணியை உடைத்தார்.

பீல்டிங் இன்று உண்மையில் அபாரமாக அமைந்தது. ஷிகர் தவன் ஒரு கேட்சை கடைசியில் விட்டார், அது வங்கதேசம் தோல்வி நிலைக்கு வந்த பிறகு.. அதனால் ஒன்றும் ஆகிவிடவில்லை. மொத்தத்தில் பார்த்தால் ஜடேஜா இன்று தடுத்த ரன்கள் மட்டும் 30 ரன்களுக்கும் மேல் இருக்கும்.

அஸ்வின் வீசும் போது நிறைய சிங்கிள்கள் மிட் ஆனில் தடுக்கப்பட்டன. நிறைய 3 ரன்கள் 2 ஆக குறைக்கப்பட்டது. இப்படியாக ஆல்ரவுண்ட் ஆட்டத்திறனை இந்தியா மீண்டும் ஒரு முறை நிரூபித்துக் காட்டியது.

 

அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டாலும், பாகிஸ்தானை எதிர்கொண்டாலும் கவலையில்லை என்பதாகவே இந்திய ஆட்டம் இதுவரை ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளது. அத்துடன், பலம் பொருந்திய நியூஸிலாந்துக்கும் அச்சுறுத்தலை தந்திருக்கும் இந்தியாவின் இந்த ஆதிக்க வெற்றி.

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%86%E0%AE%B8%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/article7011823.ece

  • தொடங்கியவர்

இன்று இந்திய அணியுடன் அம்பயர்களும் சேர்ந்து விளையாடியதாக பங்களாதேஷ் மீடியாக்களால் பரவலாக பல குற்றச்சாட்டுக்கள் வைக்கபட்டுள்ளது

 

33l0e4z.jpg

Edited by நவீனன்

இன்னைக்கு அவுஸ் பாக்கிக்கு அடிக்குது.  :lol:
 
அரைஇறுதியில் இந்தியனுக்கு வெளுக்குது.  :icon_mrgreen:
  • தொடங்கியவர்

97/3

  • தொடங்கியவர்

மறுபடியும் ஒரு "பெய்ல்ஸ்" பிராப்ளம்... பந்து பட்டும் பெய்ல்ஸ் விழாததால் தப்பிப் பிழைத்த மிஸ்பா!

 

அடிலெய்ட்: டக் அவுட் ஆவதில் இருந்து நூலிழையில் தப்பினார் பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா-உல்-ஹக். ஸ்டம்பில் பந்து பட்டும் பெயில்ஸ் விழாததால் அதிருஷ்டவசமாக மிஸ்பா தப்பினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் 2 விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில் பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல் ஹக் களமிறங்கினார். அவர் ரன் ஏதும் எடுக்காத நிலையில், ஹசில்வுட் பந்தை சந்தித்தார். லெக் ஸ்டெம்ப் திசையில் பிட்ச்சாகி வந்த பந்தை, லெக் சைடில் தட்ட முயன்றார் மிஸ்பா.

 

ஆனால் பேட்டில் படாத பந்து, மிஸ்பா தொடையில் பட்டதுடன், ஸ்டம்பிலும் பட்டு சென்றது. இதனால் ஸ்டம்பிலுள்ள பல்புகள் கண் சிமிட்டின. மிஸ்பா அவுட் ஆகிவிட்டதாக நினைத்த ஹசில்வுட் கொண்டாட்டத்திலும் இறங்கினார். ஆனால், ஸ்டம்பில் இருந்து பெயில்ஸ் கீழே விழாததால் ஆஸி. வீரர்கள் குழப்பமடைந்தனர். இதையடுத்து டிவி ரிப்ளேயில் பார்த்தபோது, ஸ்டம்பில் இருந்து பெயில்ஸ் மேலே போவதும், மீண்டும், கீழே இறங்கி ஸ்டம்பிலேயே சமத்தாக உட்கார்ந்து கொள்வதும் தெரியவந்தது.

2eal66t.jpg

இதனால் ஆஸ்திரேலிய வீரர்கள் ஏமாற்றம் அடைந்தனர். மிஸ்பா தான் ஆடிய 6 லீக் ஆட்டங்களில் 4ல், அரை சதம் அடித்து பாகிஸ்தானுக்கு முதுகெலும்பாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நடப்பு உலகக் கோப்பையின் லீக் ஆட்டத்தில், யு.ஏ.இ அணி பந்து வீச்சின்போது, அயர்லாந்தின் எட் ஜாய்ஸ் இதேபோல தப்பி பிழைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/lucky-breakthrough-pakistan-caption-misbah-222979.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.