Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வால்நட்சத்திரத்தில் இறங்கியது பிலே கலன்

Featured Replies

141112150024_philae_512x288_pa_nocredit.
 
பிலே ஆய்வுக்கலன் வால்நட்சத்திரத்தின் மீது இறங்குவதைக் காட்டும் வரைபடம்
 
சூரியக் குடும்ப அமைப்பின் ஊடாக சுமார் 10 ஆண்டுகள் பயணித்த பின்னர், ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் , விண்கலன் ரொசெட்டாவின் ஆய்வுக்கலனான, பிலே கலன், வால் நட்சத்திரத்தின் மீது இறங்கி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றில் இது போல வால் நட்சத்திரத்தின் மீது இறங்கிய முதல் விண்கலன் இதுதான்.
 
சில நிமிடங்களுக்கு முன்னர்தான், இந்த இரண்டு கிலோமீட்டர் அகலமுள்ள வால்நட்சத்திரத்தின் பனிக்கட்டிகள் படர்ந்த மேற்பரப்பின்மீது இந்த பிலே ஆய்வுக்கலன் பத்திரமாக இறங்கியது என்ற சமிக்ஞையை விண்வெளி விஞ்ஞானிகள் அந்தக்கலனிடமிருந்து பெற்றனர்.
 
இந்த விண்கலனும், வால் நட்சத்திரமும், மணிக்கு 66,000 கிலோ மீட்டர் வேகத்தில் விண்வெளியினூடாக பறந்து கொண்டிருக்கையில் இந்த நுட்பமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
 

  • கருத்துக்கள உறவுகள்

இபபோதுதான் டிஸ்கவறியில் இது சம்பந்தமான நிகழ்ச்சி ஒன்றைப் பார்த்து முடித்தேன். வியக்கவைத்த விஞ்ஞான சாதனை..

  • கருத்துக்கள உறவுகள்

அந்த பிலே கலமானது harpoons இயங்கமுடியாத காரணத்தால் bounce பண்ணி தரை இறங்கியது , ஆனால் unanchored state கலமானது மீண்டும் bounce பண்ணி இருக்கலாம் என்று சந்தேகிக்கிறார்கள் ஆனால் கலம் bounce பண்ணி இறங்கிய இடம் horizon இல் இருப்பதால் இன்றுதான் அதை ஊர்ஜிதம் செய்வார்கள். Conspiracy theorist இதை வேறுமாதிரி கதைப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதைய தகவலின்படி பிலே வண்கல்லில் இறங்கிவிட்டது. ஆனால் அதன் stability ஒரு கேள்விக்குறி தான்

http://www.bbc.com/news/science-environment-30034060

  • கருத்துக்கள உறவுகள்

வால் நட்சத்திரத்தை சென்றடைந்தது வெற்றியானாலும்
ஆய்வுக்கலனின் தொடர்ச்சியான செயற்பாடு கேள்விக்குறியாகவே இருக்கின்றது.

அடுத்த ஆய்வுக்கலன் செல்லும் போது அதிக தொழில் நுட்பம் தேவைப்படும்.

  • தொடங்கியவர்

வால் நட்சத்திரத்தில் இறங்கிய கலனின் 'ஆயுள்' குறித்த கவலைகள்

 

வால் நட்சத்திரத்தின் மீது வெற்றிகரமாக ஃபைலே ஆய்வுக்கலன் இறங்கிவிட்டாலும்,அது எவ்வளவு காலம் தனது வேலையைச் செய்யும் என்பது குறித்து கவலைகள் எழுந்திருக்கின்றன.

இறங்கியதிலிருந்தே அது குறிப்பிடத்தக்க முடிவுகளைத் தந்திருக்கிறது என்று ஐரோப்பிய விஞ்ஞானிகள் இதன் முக்கிய மின்கலம் ( பேட்டரி) இன்னும் ஒரு சில நாட்களில் தீர்ந்துவிடும் நிலையில் இருப்பதாகக் கூறுகிறார்கள்.
 
இதற்கு மாற்றாக மின்சக்தியை வழங்க ஃபைலே கலனில் சூரிய சக்தியை மின் சக்தியாக மாற்றும் தகடுகள் பொருத்தப்பட்டிருந்தாலும், இந்த கலன் இறங்கிய இடம் நிழலாக இருப்பதால் அந்தத் தகடுகள் வேலை செய்யவில்லை என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
இந்த ஆய்வுக்கலனை கவனமாக வேறு ஒரு நல்ல இடத்துக்கு நகர்த்த தாங்கள் முயலப்போவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
 
இதைச் செய்ய முடியாவிட்டால் கூட, இந்த ஆய்வுக்கலன் சூரியனை நெருங்கும் போது , அதன் சூரியத் தகடுகள் விழித்தெழும் வாய்ப்பு இருக்கிறது.
 
அதன் முதல் வேலை நாளில், ஃபைலே கலன் இந்த வால்நட்சத்திரத்தின் அமைப்பையும், அதன் காந்தப்புலனையும் வரைபடமாக்கியிருக்கிறது.
இந்த ஆய்வுக்கலனை அது தற்போது இருக்கும் இடத்திலிருந்து நகர்த்துவதன் மூலம் மேலும் சில கருவிகளை இயக்கவைக்க முடியும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
 
  • கருத்துக்கள உறவுகள்

இதை மிகவும் கச்சிதமாக வால்நட்சத்திரத்தில் இறக்கிய விஞ்ஞானிகள், தொழில் நுட்ப நிபுணர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். இது முதல் மேற்பரப்பை தொட்டு பின்னர் 1km வரை மேலெழுந்து 2 மணி நேரத்தின் பின்னர் மீண்டும் மேற்பரப்பை அடைந்தது. வால்நட்சத்திரத்தின் தன்னை தானே சுற்றும் சுழற்சி 7 மணி நேரம் என்பதால், இது நிர்ணயிக்க பட்ட இடத்தில 2ம் முறை இறங்காமல் சற்று தூரம் தள்ளியே நிக்கிறது.

பலருக்கு சூப்பர் மார்கெட் கார் தரிப்பிடத்தில் நேராக கார் நிப்பாட்ட எவ்வளவு சிரமம் இருக்கும் நிலையில், இந்த குழுவினர் வால்நட்சத்திரத்தில் பிலே கலன் இறக்கிய சம்பவம் விண் வெளி ஆராச்சிக்கு கிடைத்த மிக பெரிய வெற்றி.

  • தொடங்கியவர்

மின்சக்தி தீரும் தறுவாயில், வால் நட்சத்திரத்தில் ஆய்வு செய்கிறது ஃபிலே

 

வால்நட்சத்திரத்தில் புதனன்று தரையிறங்கிய ஃபிலே ஆய்வுக் கலனுடைய மின்கலன் சக்தி ஒரு சில மணி நேரங்களில் தீர்ந்துவிடும் என அச்சங்கள் தெரிவிக்கப்படும் நிலையில், ஆய்வுக் கலன் அந்த விண்கல்லின் மேற்பரப்பில் துளையிட்டு ஆய்வு செய்ய ஆரம்பித்துள்ளதாக ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவன விஞ்ஞானிகள் கூறூகின்றனர்.

 

141114101017_philae_image_640x360_epa.jp
ஃபிலே எடுத்த முதல் பனோரமா படமாக வெளியிடப்பட்டுள்ள படம்
 
விண்கல்லின் மேற்பரப்பில் ஆய்வுக்கலன் பிடிமானம் இல்லாமல் நிற்கின்ற சூழ்நிலையில், துளையிடும் கருவியை இயக்கும்போது, ஆய்வுக்கலன் நிலைகுலையலாம் என ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம் கூறுகிறது.
 
ஆபத்தையும் பார்க்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் ஏனெனில் இன்றோடு அந்த ஆய்வுக்கலனின் மின் சக்தி வற்றிவிடலாம் என்றும் அது தெரிவித்துள்ளது.
மேட்டுக்கு அடியில் நிழல் விழும் இடத்தில் இந்த ஆய்வுக்கலன் நின்றுகொண்டிருப்பதால், சூரிய சக்தியைப் பயன்படுத்தியும் அதனால் இயங்க முடியாது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
மேற்பரப்பில் துளையிட்டு எடுக்கும் துகள்களை இந்த ஆய்வுக் கலனிலேயே இருக்கும் கருவிகள் இரசாயன ஆய்வுக்கு உட்படுத்தும்.
 
  • கருத்துக்கள உறவுகள்

எந்த இடத்தில் கலத்தை இறக்குவது என்பதில் விஞ்ஞானிகளுக்கும் பொறியியலாளர்களுக்கும் இடையில் மிகுந்த இழுபறி நிலவியதாக அறியமுடிகிறது. விஞ்ஞானிகளின் தலைவர் தமது ஆராய்ச்சிக்குத் தகுந்த இடத்திற்காகவும், பொறியியலாளர்கள் கலத்தை இறக்குவதற்கு தகுந்த (சமாந்தரமான, பாறைகளற்ற) இடத்திற்காகவும் வாதிட்டிருக்கிறார்கள். இறுதியில் விஞ்ஞானிகளின் அணியே வெற்றி பெற்றது.

  • கருத்துக்கள உறவுகள்

எந்த இடத்தில் கலத்தை இறக்குவது என்பதில் விஞ்ஞானிகளுக்கும் பொறியியலாளர்களுக்கும் இடையில் மிகுந்த இழுபறி நிலவியதாக அறியமுடிகிறது. விஞ்ஞானிகளின் தலைவர் தமது ஆராய்ச்சிக்குத் தகுந்த இடத்திற்காகவும், பொறியியலாளர்கள் கலத்தை இறக்குவதற்கு தகுந்த (சமாந்தரமான, பாறைகளற்ற) இடத்திற்காகவும் வாதிட்டிருக்கிறார்கள். இறுதியில் விஞ்ஞானிகளின் அணியே வெற்றி பெற்றது.

இந்த வாதப் பிரதி வாதங்களை, முதலே முடிச்சிருக்க முடியாதா?

 

மனித குலத்தின் மகத்தான ஒரு சாதனையாக இது அமைந்திருக்கும்!

 

இப்பவும் இது ஒரு சாதனை என்பதில் ஐயமில்லை!

 

இருந்தாலும்.. கொஞ்சம் சரிஞ்சு போச்சுது! :o

 

எப்பவும் இஞ்சினியர் மார் சொல்லுறதைக் கேக்கிறது நல்லது போல கிடக்கு! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

எந்த இடத்தில் கலத்தை இறக்குவது என்பதில் விஞ்ஞானிகளுக்கும் பொறியியலாளர்களுக்கும் இடையில் மிகுந்த இழுபறி நிலவியதாக அறியமுடிகிறது. விஞ்ஞானிகளின் தலைவர் தமது ஆராய்ச்சிக்குத் தகுந்த இடத்திற்காகவும், பொறியியலாளர்கள் கலத்தை இறக்குவதற்கு தகுந்த (சமாந்தரமான, பாறைகளற்ற) இடத்திற்காகவும் வாதிட்டிருக்கிறார்கள். இறுதியில் விஞ்ஞானிகளின் அணியே வெற்றி பெற்றது.

 

இந்த வாதப் பிரதி வாதங்களை, முதலே முடிச்சிருக்க முடியாதா?

 

மனித குலத்தின் மகத்தான ஒரு சாதனையாக இது அமைந்திருக்கும்!

 

இப்பவும் இது ஒரு சாதனை என்பதில் ஐயமில்லை!

 

இருந்தாலும்.. கொஞ்சம் சரிஞ்சு போச்சுது! :o

 

எப்பவும் இஞ்சினியர் மார் சொல்லுறதைக் கேக்கிறது நல்லது போல கிடக்கு! :icon_idea:

 

இந்த விண்கலம், பூமியிலிருந்து புறப்படும்.... அந்த, நல்ல நேரத்தை....

கணித்த, ஜோதிடர்களே.... உண்மையில், பாராட்டுக்குரியவர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அங்கை ஒரு பிரச்சனையுமில்லை....பட்டரிதான் கொஞ்சம் வீக்காம்....அதுவும் வெய்யில் வெக்கையிலை  எல்லாம்  சரி வந்துடுமாம்....... :wub:  :wub:  :wub:

உங்கை ஒருசில ஆக்களுக்கு ஜேர்மனி எண்டால் வயித்தெரிச்சல் போலைகிடக்கு  :lol:  :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

வால் நட்சத்திரத்தில் இறங்கிய ரோபோ: நீடிக்கும் நிச்சயமற்ற நிலை

BY TRT தமிழ் ஒலி செய்திப்பிரிவு on

 

14 நவம்பர் 2014

tc3a9lc3a9chargement7.jpg?w=464&h=245

ஐரோப்பிய நாடுகள் விண்வெளிக்கு அனுப்பிய ரோபோ இயந்திரம் வால் நட்சத்திரத்தின் மேற்பரப்பில் இறங்கியிருக்கிறது.

Rosettaஎனினும், பிளே என்ற ரோபோ இயந்திரத்தின் கூரான கால்களைப் போன்ற பகுதிகள் வால் நட்சத்திரத்தின் மேற்பரப்பில் சரியாக நங்கூரமிடத் தவறியதால், அதன் நிலை தெளிவாகத் தெரியவில்லையென விஞ்ஞானிகள் அறிவித்துள்ளார்கள்.

ரொசிற்றா என்ற செய்மதியிலிருந்து அனுப்பப்பட்ட பிளே என்ற ரோபோ இயந்திரம் பூமியிலிருந்து 510 மில்லியன் கிலோமீற்றர் தொலைவிலுள்ள வால் நட்சத்திரத்தின் மேற்பரப்பில் இறங்கியது. எனினும், முதற்தடவை மேற்பரப்பைத் தொட்டு விட்டு அது மேலே கிளம்பிச் சென்றது. அதன் பின்னர் தான் மீண்டும் தரையில் கால் பதித்திருக்கக் கூடுமென செயற்றிட்ட முகாமையாளர் ஸ்ரீபன் உலமெக் தெரிவித்தார்.

இந்த ரோபோ இயந்திரம் வால் நட்சத்திரத்தில் கால் பதித்தமையானது மனித குல வரலாற்றில் முக்கியமான முன்னேற்றமென ஐரோப்பிய விண்வெளி நிலையம் கூறியது.

http://trttamilolli.info/2014/11/14/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%99/

  • தொடங்கியவர்

'ஃபீலே ஆய்வுக்கலம் மீளவும் இயங்கும்': விஞ்ஞானிகள் நம்பிக்கை

 

141113142103_philae_304x171_getty_nocred

 

வால்நட்சத்திரத்தின் தரையிலிருந்து தகவல்களை அனுப்பிய பீலே ஆய்வுக்கலம் உறக்கநிலைக்கு சென்றுவிட்டது

 

ஐரோப்பிய விண்வெளி நிலையத்திலிருந்து வால் நட்சத்திரம் ஒன்றுக்கு அனுப்பப்பட்ட ஆய்வுக்கலம் மீளவும் நகர்த்தி நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், அதன் மின்கலன்களுக்கு மீளவும் சக்தியூட்டிக்கொள்ள முடியும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

 

குறித்த வால்நட்சத்திரம் சூரியனை நோக்கி வேகமாக நெருங்கிக் கொண்டிருக்கின்றபடியால், சோலார் கருவிகள் கூடுதல் சூரிய ஒளியைப் பெறக்கூடிய விதத்தில் ஃபீலே ஆய்வுக்கலம் சற்று நகர்த்திவைக்கப்பட்டுள்ளது.
 
வால்நட்சத்திரத்தின் தரையிலிருந்து பெறப்பட்ட மேலும் ஒருதொகுதி மாதிரித் தகவல்களை பூமிக்கு அனுப்பிவைத்த பின்னர் ஃபிலே கலம் உறக்கநிலைக்கு சென்றுள்ளது.
இந்த வாரத்தின் முற்பகுதியில் தரையிறங்கியபோது ஃபீலே ஆய்வுக்கலம் பாறையொன்றின் நிழல் படக்கூடிய இடத்தில் நிலைகொண்டுவிட்டது.
இதனால் அதன் மின்கலன்களுக்கு மீளசக்தியூட்ட முடியாதநிலை ஏற்பட்டது.
 
  • தொடங்கியவர்

வால் நட்சத்திரத்தில் உயிர் உருவாவதற்கான அடிப்படை மூலக்கூறுகள்

 

பிலே விண்கலம் தரையிறங்கிய வால் நட்சத்திரத்தின் மேற்பரப்பில் கரிமச் சேதன மூலகங்கள் இருப்பதாக அந்த விண்கலம் கண்டறிந்துள்ளது.

 

141118232910_philae_640x360_esa_nocredit
வால் நட்சத்திரத்தில் உயிர் உருவாவதற்கான அடிப்படை மூலக்கூறுகள்
 
காபனைக் கொண்டுள்ள இந்த கரிமச் சேதனங்கள்தான் பூமியில் உயிர்கள் தோன்றியதற்கான அடிப்படையாகும். ஆகவே எமது பூமிக்கு இதுபோன்ற வால் நட்சத்திரங்களில் இருந்து முன்னர் கிடைத்திருக்க்கூடிய இரசாயன பொருட்கள் பற்றிய விபரங்களையும் இது தரக்கூடும்.
அந்த வால் நட்சத்திரத்தின் மெல்லிய சூழலை முகரக்கூடிய வகையில், ஜேர்மனியால், நிர்மாணிக்கப்பட்டிருந்த ஒர் கருவியால் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இன்னுமொரு ஆய்வின்படி வால் நட்சத்திரத்தின் பெரும்பான்மையான மேற்பரப்பு நீரினாலான பனி படலத்தால் மூடப்பட்டுள்ளது என்றும், சிறிய அளவில் மேற்பரப்பில் ஒரு தூசியும் காணப்படுவதாகவும் கூறப்படுகின்றது.
 
141113150607_comet_640x360_esa_nocredit.
 
''வால் நட்சத்திரம் 67 பி'' என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த பறக்கும் பாறையில், ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் விண்கலம் 10 வருட பயணத்தின் பின்னர் நவம்பர் 12 ஆம் திகதி தரையிறங்கியது.
கரிமச் சேதன மூலகங்கள் பற்றிய தகவலைக் கண்டுபிடித்த ''கொசக்'' கருவியை ஆராய்ந்த டாக்டர் ஃபிரட் கோஸ்மான் அவர்கள், பிபிசியிடம் பேசுகையில், தமது முடிவு குறித்து மேலும் விளக்கத்தை கண்டறிய தாம் முயன்று வருவதாகக் கூறியுள்ளார். 
 
குறிப்பாக என்ன மூலக்கூறு கண்டுபிடிக்கப்பட்டது என்றோ அல்லது அது எவ்வளவு சிக்கலானது என்றொ அந்தக் கருவி கண்டுபிடிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
 
ஆனால், இந்த முடிவுகளின் மூலம் இப்படியான வால் நட்சத்திரங்களில் இருந்து பூமிக்கு கிடைத்திருக்கக்கூடிய இரசாயன திண்மக் கட்டிகள் எவ்வாறு புவியில் உயிர்கள் உருவாக காரணமாக இருந்திருக்கும் என்ற சூட்சுமத்தை கண்டறிய முடியும் என்றும் அவர் நம்புகிறார்.
பிலே தரையிறங்கிய பிறகு வால் நட்சத்திரத்தில் ஒரு சுத்தியலை பிரயோகிக்கும் வகையில் நிர்மாணிக்கப்பட்டிருந்த ''முபுஸ்'' என்னும் கருவியின் ஆரம்ப கட்ட தகவல்களின்படி, அங்கு 10 முதல் 25 செண்டிமீட்டர் கனதியான தூசிப்படலமும் அதற்கு கீழே நீரினால் ஆன பனிக்கட்டியும் இறுக்கமாக படர்ந்திருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
 
சூரிய குடும்பத்தின் வெளிவட்டப் பாதையில் இருக்கக்கூடிய வெப்ப நிலை காரணமாக இந்த பனி நன்றாக இறுகி இருப்பதாகவும், அது மணற்கற்களின் அளவுக்கு திண்மமாக இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
ஆயினும் மேலும் இது குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.