Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புனிதமான கார்த்திகை மாதத்தில் ஒரு புல்லுருவியும் பிறந்துள்ளது - சரா எம்.பி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

280bb84cd1f5eb35ed1446bdb02fe2e1.JPG

கார்த்திகை மாதம் என்பது இலங்கைத் தமிழர்களைப் பொறுத்த மட்டில் ஒரு புனிதமான மாதமாகும். இதன் புனிதத் தன்மையை சீர்குலைக்கும் வகையில் இம் மாதத்தில் ஒரு புல்லுருவியும் பிறந்துள்ளது என்பதனை அண்மையில் பத்திரிகை வாயிலாக அறிந்துள்ளேன் என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.

 
திக்கம் இளைஞர் விளையாட்டுக் கழகத்தினால் நடத்தப்பட்ட உதைபந்தாட்டத் தொடரின் இறுதிநாள் நிகழ்வு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
அவர் மேலும் தெரிவிக்கையில்;
கார்த்திகை மாதம் விசேடத்துக்குரிய புனிதமான மாதமாகும். ஏனெனில் இம்மாதம் 26ஆம் திக எமது தேசியத் தலைவர் பிறந்துள்ளார். இதேபோல் எமது இனத்தின் விடுதலைக்காகப் பேராடி உயிர் நீத்த மாவீரர்களின் நினைவுநாள் கார்த்திகை 27ஆகும். இதனால் இந்த மாதம் புனிதமடைகிறது.
 
ஆனால் அரசுடன் இணைந்து இணக்க அரசியல் பேசி எம் இனத்தை நசுக்க நினைக்கும் புல்லுருவியும் பிறந்தது இம்மாதம் 10ஆம் திகதி என்பதை அண்மையில் பத்திரிகை வாயிலாக அறிந்தேன்.
 
தற்போது நான் பங்குபற்றும் நிகழ்வுகளில் இளைஞர் கூட்டமே அதிகமாகக் காணப்படுகின்றது. அதற்கு விளையாட்டுத்தான் காரணமாகவுள்ளது. அண்மையில் பருத்தித்துறையில் நடைபெற்ற உதைபந்தாட்டத்தின் இறுதிநாள் நிகழ்விலும் இன்றைய இறுதிநாள் நிகழ்விலும் இளைஞர்களே அதிகமாகக் காணப்படுகின்றனர்.
 
இந்த நிகழ்வை திக்கம் இளைஞர்கள் மிகச் சிறப்பாக ஒழங்குபடுத்தியுள்ளனர். இங்கு பல இளைஞர்கள் இருக்கின்றார்கள். நீங்கள் யோசிக்க வேண்டும். தற்போது மாவீரர் நாள் வரப்போகின்றது என்பதால் இராணுவத்தையும், புலனாய்வுப் பிரிவினரையும் வீதிகளில் கொட்டிவிட்டுள்ளார்கள். அவர்கள் எங்கும் ஊடுருவலாம். ஆனால் எம் மனதை ஊடுருவ முடியாது. 
 
அதேபோல் இவர்கள் எத்தனை பேரைக் கொன்று குவித்தாலும் எங்களுக்காக உயிர்நீத்த மாவீரர்களை நினைவு கூருவோம். இங்கு நான் மாவீரர் எனக் குறிப்பிடுவது விடுதலைப் புலிகளையே சாரும்.
 
தற்போது  ஏதாவது சூழ்ச்சி செய்து பல்கலைக்கழக மாணவர்களைக் கைது செய்து பல்கலைக்கழகத்தை மூடிவிட வேண்டும் என எண்ணுகிறார்கள். இதேபோல் விடுவிக்கப்பட்ட போராளிகளைக் கைது செய்யும் நடவடிக்கைகள் நடந்து கொண்டிருக்கின்றன.
 
எமக்காக உயிர்நீத்தவர்களை மறந்துவிடக்கூடாது. எந்த இடர்களிலும் நாம் இதனை நிச்சயமாகச் செய்ய வேண்டும். இத்துடன் எமது போராட்டம் முடியவில்லை. 
 
அரசியலில் எந்த வழிகளில் எந்த வகையில் போராட முடியுமோ அந்த வகையில் போராடுவோம் என்றார்.

http://onlineuthayan.com/News_More.php?id=245523651518672516

கொழும்பு உற்பத்தி பொருட்களின் முகவராக தனக்கு பதிலாக பினாமியை வைத்துக் கொண்டு தன் வியாபாரம் மட்டுமே செழிக்க வேண்டும் என்பதற்காக உள்ளூர் உற்பத்திகளை மாகாண அரசின் மூலம் முடக்கி 5000 அதிகமான தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்க முற்பட்ட ஒருவரை என்ன பெயரில் அழைப்பது என்று ஈ.சரவணபவன் இடம்தான் கேட்க வேண்டும் :rolleyes:

தன்னுடைய அதிகாரத்தை பயபடுத்தி காலம் காலமாக இருந்த குடிசைகைத்தொழிலான ஐஸ்கிரீம் உற்பத்தியை தடை செய்து சாதாரண மக்களின் வயித்திலே அடித்தவர் எல்லாம் புனிதர்களை பற்றி பேசுவது தான் உண்மையான இன்றைய தமிழர்களின் அரசியல் நிலைமை.

இதை என்றைக்கு தமிழ் மக்கள் உணர்கிறார்களோ, அன்றைக்கு தான் எமக்காக உயிர்நீத்த மாவீரர்களின் கனவு நிறைவேறும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆரந்தப் புல்லுருவி?

  • கருத்துக்கள உறவுகள்

ஆரந்தப் புல்லுருவி?

வேற யார் என்ட அண்ணாவாத் தான் இருக்கும்:rolleyes:

இம் மாதம் 10 ஆம் திகதி பிறந்தது டக்கிளஸ் தேவானந்தா.

 

 

வடக்கின் முக்கிய அரசியல்வாதியும், வர்த்தக பிரமுகருமான ஒருவரின் அரசியல் செல்வாக்கால் மக்கள் பாதிப்பு

 

பல ஐஸ்கிறீம் நிறுவனங்களுக்கு தடை?

 
வடக்கின் முக்கிய அரசியல்வாதியும், வர்த்தக பிரமுகருமான ஒருவரின் அரசியல் செல்வாக்கால் மக்கள் பாதிப்பு:
வடமாகாணத்தின் முக்கிய அரசியல்வாதியும், வர்த்தக பிரமுகருமான ஒருவரின் அரசியல் செல்வாக்கு காரணமாகவே வடக்கின் பல ஐஸ்கிறீம் நிறுவனங்களுக்கு தடைவிதிக்கப்பட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
 
யாழ் வர்த்தக சம்மேளன பிரமுகர் ஒருவர் கொழும்பிலிருந்து வெளியாகும் நாளிதழ் ஒன்றிற்கு இதனை தெரிவித்துள்ளார்.
 
யாழ்ப்பாணத்தின்  ஐஸ்கீறீம் தொழிற்துறையுடன் தொடர்புபட்ட59  நிறுவனங்கள் மீது விதிக்கப்பட்ட தடையால் 2500 தொழிலாளாகள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.15 000 வர்த்தகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
இந்த திடீர் தடை குறித்து எமக்கு சந்தேகங்கள் உள்ளன.வடமாகாணத்தின் செல்வாக்குள்ள அரசியல்வாதியும், பிரபல வர்த்தகருமான ஒருவரே இதன் பின்னணியிலிருப்பதாக நாங்கள் கருதுகின்றோம்,அவர் ஐஸ்கிறீம் நிறுவனமொன்றின் முகவராக உள்ளார். ஏனைய ஐஸ்கீறீம் உற்பத்தியாளர்கள் விற்பனையாளர்களுக்கு தடைவிதிப்பதன் மூலமாக தனது நிறுவனத்தின் விற்பனையை அதிகரிப்பதற்கு தனது அரசியல் இலாபத்தை அவர் பயன்படுத்துகின்றார்.
 
ஐஸ்கிறீம் உற்பத்திகள் தடைசெய்யப்பட்டதற்கு அவர்கள் தெரிவிக்கும் காரணங்கள் உண்மைக்குபுறம்பானவை, சோடிக்கப்பட்டபவை.என அவர் தெரிவித்துள்ளார்.
 
கடந்த 30 வருடங்களாக குறிப்பிட்ட அரசியல்வாதியும் யாழ் மக்களும் இந்த குடிநீரையே பயன்படுத்துகின்றனர்.ஆனால் அவர்கள் எந்த பாதிப்பையும் எதிர்கொள்ளவில்லை.
 
 
வடபகுதியை பொருத்தவரை பாரிய மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்களுக்கு அப்பால் பலர் வீடுவீடாக ஐஸ்கிறீம் விற்பனைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.அவர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
யாழ்ப்பாணத்தில் வேறு நீர்வளங்கள் இல்லாததால் ஐஸ்கிறீம் உற்பத்தியாளர்கள் கிணற்று நீரை பயன்படுத்துகின்றனர்.மலக்கழிவுகள் நீரில் கலந்திருந்ததை காரணம்காட்டியே இந்த தடை விதிக்கப்பட்டது.எனினும் பின்னர்மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போது இதனால் ஆபத்தில்லை என தெரியவந்துள்ளது.
 
குறிப்பிட்ட தொழிற்துறை பல தசாப்த காலமாக யாழ்ப்பாணத்தில் இயங்கிவருகின்றது.பொதுசுகாதரா பரிசோதகர்கள் திடீரென இந்த குற்றச்சாட்டை ஏன் முன்வைக்கின்றனர்?
 
அவ்வாறாயின் இந்த நீரை எவ்வாறு மக்கள் குடிப்பதற்கு பயன்படுத்துகின்றனர்.
 
30 வருட கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்ட ஈடு வழங்குவதாக அளித்த உறுதிமொழியை அரசாங்கம் இன்னமும் நிறைவேற்றவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

Edited by Athavan CH

நயன்தாராவும் கார்த்திகையில் தான் பிறந்தார் .சரபவணபவனுக்கு எட்டவில்லை போலிருக்கு .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.