Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நேபாளத்தில் விசித்திரமான மதச் சடங்கு [படங்கள் இணைப்பு]

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

a97e3534836d020a4aad2163896a4fc2.jpg

நேபாளத்தில் சுமார் 5 ஆயிரம் எருமைகளைக் கொன்று மத வழிபாடு  இடம்பெற்றுள்ளது.

இந்த விசித்திரமான மதச் சடங்கு  நேபாளத்தின் பரியர்பூர் பிராந்தியத்தில் இடம்பெற்றுள்ளது. இந்திய எல்லையை அண்மித்துள்ள இப்பகுதியில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை இவ்வாறான மதச் சடங்குகள் இடம்பெறுகின்றன.
 
இந்த வழிபாடுகளின்போது பல்லாயிரக்கணக்கான எருமைகள் பலியிடப்படுவது வழமையாகும். இவ்வாண்டு சுமார் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரையிலான எருமைகள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திச் சேவைகள் தெரிவிக்கின்றன.
 
கடந்த 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற வழிபாட்டின்போது சுமார் 2 இலட்சத்து 50 ஆயிரம் மிருகங்கள் பலிகொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
 
2392C4F900000578-2852739-image-43_141719
 
2392AB2F00000578-2852739-image-36_141719
 
2392A54900000578-2852739-image-21_141718
 
http://onlineuthayan.com/News_More.php?id=771323685929517136

  • கருத்துக்கள உறவுகள்

அட எருமைகளே

என்ன காரணமாக இந்த எருமைகள் இருக்கின்றது ..... அந்த எருமைகள் இறக்கின்றது.
என்பது பட்டும் படாமலும் செய்தியில் இருக்கிறது.
 
உயிர் குடிக்கும் பிசாசாக இவர்கள் கடவுள் இருப்பதாக இவர்கள் சொல்ல முயற்சி செய்கிறார்கள்.
அப்படி என்று நான் எழுதினால் .............
கிறிஸ்தவ மதம் பற்றிதான் பல இந்துக்களுக்கு சிந்தனை ஓடும்.
 
எமது கடவுளை எப்படி ஒரு புனித தெய்வமாக மாற்றுவது என்று சிந்தித்தால். அது முதலுக்கே ஆபத்து என்று எண்ணுவார்கள் பக்த அடியார்கள். 

மிருகங்களை உண்பவன் மிருகங்களை கொல்பவனை குறை சொல்லலாமோ ??
 
நீ திருந்து. உலகம் தானாய்த் திருந்தும்.
  • கருத்துக்கள உறவுகள்

சில கேள்விகள்..!

எருதுகள் ஏன் பலியிடப்பதுவதில்லை?  சிவனின் வாகனங்கள் என்றதாலா?

எருமைகளுக்கும், அரக்கர்களுக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா?

இராமாயணத்துக்கும், இந்தச் சடங்குக்கும் ஏதேனும் தொடர்புகள் உள்ளதா?

எருமைகளைக் கொல்பவர்களின் முகங்களில்... ஏன் இவ்வளவு கொலை வெறி?

எருமைகள் இ(ற)ந்து கிடக்கும் விதத்தைப் பார்க்கையில், இவை மற்றவர்களின் உணவுக்காகக் கொல்லப்படவில்லைப் போல உள்ளது!

அப்படியெனில் ஏனிந்தக் கொலைகள்?

இவற்றுக்கு யாராவது சரியான விடைகள் கூறினால்... நானும் ஈஸ்டர் தீவின் சிலைகள் எதற்காகக் கடலைப் பார்த்தபடி நிற்கின்றன என்ற கேள்விக்கு விடை கூறுவேன்! :D

Edited by புங்கையூரன்

யாழ் கள-புத்தன் கூறியது போல் இவையை யாரும் உண்ணப்போவது போல் தெரியவில்லை....

ஊர் பக்கங்களில் நடக்கும் வேள்வியிலாவது பலி கொடுக்கப்படும் ஆடுகளை பங்கு போட்டு உணவாகவாவது மாறும்....

இந்த விடயத்திலும் அப்படி நடந்தால் நல்லது.....இல்லையென்றால்...இந்த பழக்கத்தை நிறுத்த வேண்டும்...இல்லையென்றால்...கிடைக்கும் gap இல் அலுலோயா உள் நுழையும்....

பாதகர்களே. 

  • கருத்துக்கள உறவுகள்

மிருகங்களை உண்பவன் மிருகங்களை கொல்பவனை குறை சொல்லலாமோ ??
 
நீ திருந்து. உலகம் தானாய்த் திருந்தும்.

உணவுசங்கிலி ஒன்றோடு ஒன்று தொடர்புபட்டுதான் இருக்கிறது. மனிதர்கள் உணவிற்காக மிருகங்களை கொல்லாது போனாலும் மிருகங்கள் ஒன்றை ஒன்று வேட்டையாடிதானே சாப்பிடுகின்றன. 
கடவுள்தான் அதற்கு பொறுப்பாளி. கிறிஸ்துவோ  அல்லாவோ கிரிஸ்னாவோ யார் மேலே இருக்கிறார்களோ அவர்கள்தான் பொறுப்பு கூறவேண்டும்.
 
இது வெறும் கொலை வெறியுடன் அன்பை போதிப்பதற்கு பதில் ஒரு மதம் கொலைவெறியை போதிக்கலாமா?
 
ஒரு இந்து என்று ஆணவம் தலைகேறி ....அடுத்தவனை திட்டி என்ன லாபம் வரபோகிறது ?
இந்துமதம் மற்ற மதங்களை விட எவளவோ மகாத்தான விடயங்களை தன்னோடு கொண்டிருக்கிறது. அவை காணமல் போவதற்கு இப்படியான கொலைவெறி தான் காரணம்.
 
மனிதராக மாறி முதலில் இவற்றை தடுக்க வேண்டும். பின்பு பண்பான மதங்களை போதிக்கலாம்.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
அரபுக்காரங்களின்ரை பிரச்சனையை தீர்க்கப்போறம் எண்டு சொல்லிக்கொண்டு தினசரி ஆயிரக்கணக்கான சனங்களை கொன்று குவிக்கிற ஆறறிவு கூடின அமெரிக்கனும் ஐரோப்பியனும் என்ன மதம்?????
 
  • கருத்துக்கள உறவுகள்

அரபுக்காரங்களின்ரை பிரச்சனையை தீர்க்கப்போறம் எண்டு சொல்லிக்கொண்டு தினசரி ஆயிரக்கணக்கான சனங்களை கொன்று குவிக்கிற ஆறறிவு கூடின அமெரிக்கனும் ஐரோப்பியனும் என்ன மதம்?????
 
முதலாளித்துவம் = CAPITALISM 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதலாளித்துவம் = CAPITALISM 

இல்லை....மதவாதாம்!

கிறிஸ்தவம் உள்ள நாடுகளில் இப்படியான கொத்துக்கொலைகள் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை....மதவாதாம்!

கிறிஸ்தவம் உள்ள நாடுகளில் இப்படியான கொத்துக்கொலைகள் இல்லை.

பிறரிடத்தில் அன்பாய் இருங்கள் என்று ஜேசு போதித்ததன் பலனாக இருக்கலாம். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிறரிடத்தில் அன்பாய் இருங்கள் என்று ஜேசு போதித்ததன் பலனாக இருக்கலாம். 

அரபு நாடுகளில் போர்விமானங்கள் மூலம் அன்பு செலுத்துகின்றார்கள். ஆசிய நாடுகளில் குண்டுகள் கொடுத்து அன்பு செலுத்துகின்றார்கள்:D

  • கருத்துக்கள உறவுகள்

மதத்தின் பெயரால் மாட்டை கொல்வது பிழை என்று மருதர் சொல்வது சரியானதே,கிறிஸ்தவனாக இருந்தால் மற்றைய மதங்களின் மூடநம்பிக்கைகளை சொல்லக்கூடாது என்று சட்டம் ஒன்றும் இல்லைத்தானே

  • கருத்துக்கள உறவுகள்

அரபு நாடுகளில் போர்விமானங்கள் மூலம் அன்பு செலுத்துகின்றார்கள். ஆசிய நாடுகளில் குண்டுகள் கொடுத்து அன்பு செலுத்துகின்றார்கள்:D

குண்டுகளிடம் அன்பு செலுத்துபவர்களுக்கு .....
அன்புடன் கொடுக்கிறார்கள் என்று நினைக்கிறேன். 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
நானும் மதத்தின் பெயரால் நடக்கும் மிருகபலிகளுக்கு எதிரிதான். அதேபோல் மதத்தின் பெயரால் நடக்கும் மனிதப்பலிகளுக்கும் எதிரிதான்.
 
இங்கே அரபுநாடுகளில் நடப்பது மதத்தின் பெயரால் நடைபெறும் கொலைகளே என்பதைத்தான் சொல்ல வருகின்றேன்.
 
  • கருத்துக்கள உறவுகள்

"பெட்ரோலும்" ஒரு மதமா? 

அப்படி என்றால் எல்லா மதத்தவரும் பெட்ரோலில் கார் ஒடுவது கண்டிக்க பட வேண்டும் 

  • கருத்துக்கள உறவுகள்

இதையே.. உலகம் பூராவும் கிறிஸ்மஸ்ஸோட பலியாக உள்ள வான்கோழிகள்.. கோழிகள்.. பன்றிகள்.. மாடுகள்.. மந்தைகளோடு ஒப்பிட்டு பார்த்தால்.. இதெல்லாம் யுயுபி.

அதற்காக மிருக வதைகளை எவர் செய்தாலும் கண்டிக்காமல் தடுக்கக் கூடியவற்றை தடுக்காமல் இருக்க முடியாது.

உணவுசங்கிலி ஒன்றோடு ஒன்று தொடர்புபட்டுதான் இருக்கிறது. மனிதர்கள் உணவிற்காக மிருகங்களை கொல்லாது போனாலும் மிருகங்கள் ஒன்றை ஒன்று வேட்டையாடிதானே சாப்பிடுகின்றன. 
கடவுள்தான் அதற்கு பொறுப்பாளி. கிறிஸ்துவோ  அல்லாவோ கிரிஸ்னாவோ யார் மேலே இருக்கிறார்களோ அவர்கள்தான் பொறுப்பு கூறவேண்டும்.
 
இது வெறும் கொலை வெறியுடன் அன்பை போதிப்பதற்கு பதில் ஒரு மதம் கொலைவெறியை போதிக்கலாமா?
 
ஒரு இந்து என்று ஆணவம் தலைகேறி ....அடுத்தவனை திட்டி என்ன லாபம் வரபோகிறது ?
இந்துமதம் மற்ற மதங்களை விட எவளவோ மகாத்தான விடயங்களை தன்னோடு கொண்டிருக்கிறது. அவை காணமல் போவதற்கு இப்படியான கொலைவெறி தான் காரணம்.
 
மனிதராக மாறி முதலில் இவற்றை தடுக்க வேண்டும். பின்பு பண்பான மதங்களை போதிக்கலாம்.

அது தான் ஏற்கனவே சொல்லிவிட்டேன்.
 
நீ திருந்து.
 
உலகம் தானாய்த் திருந்தும்.
 
மற்றவர் செய்யும் மிருக வதையைக் குறை சொல்லும் முன், நான் மிருகங்களைக் உண்கிறேனாயின் எனக்கு என்ன தகுதி இருக்கிறது அவர்களைக் குறை சொல்ல? அவர்கள் கொல்கிறார்கள் நான் அதை விட கேவலமாக அந்த இறந்த உடல்களை ரசித்து உண்கிறேன். யாரிங்கு கேவலன் ? 
  
ஆகவே முதலில் நான் திருந்த வேண்டும்.
 
இந்துமதம் பற்றி கற்க வேண்டும் என்றால் திருக்குறலில் இருந்து ஆரம்பிக்கலாம். முதலாவது திருக்குறளே இந்துமத உள்ளார்ந்தத்தை அப்படியே தருகிறது. எருமை மாட்டின் / சீவராசிகளின் உயிராக தெரிவதும் அவனே என்கிறது அக்குறள். இந்து மதத்தின் இயற்கை வழிபாட்டின் அடிப்படையும் இது தான். இந்து மதம் உயிர்க் கொலைய கொடும் பாவங்களில் ஒன்றாக கருதுகிறது. 
 
ராமகிருஷ்ணர் ஒருகட்டத்தில் பூ மரங்களில் இருந்து பூக்களைப் பிடுங்குவதையே நிறுத்தியிருந்தார். இந்து மதத்தை பின்பற்றுபவருக்கு அடையாளமாக அவரை எடுக்கலாம். 
 
இந்து மதம் சொல்லும் உயர் தத்துவங்கள் இந்த பாமரர்களை அடையாதது தூரதிஸ்டம். இப்படி உயிர் கொலை செய்கிறார்கள் என்றால் அதன் அர்த்தம் இந்து மதம் இவர்களைச் சென்றடையவில்லை என்பது தான்.
 
இவர்களைச் சட்டங்கள் தான் திருத்த வேண்டும். இந்து மதம் அறிவைக் கொடுக்கலாம். அந்த அறிவை உள்வாங்கிக் கொள்வதும் அதை பின்பற்றி நடைமுறைப்படுத்துவதும் அவர் அவரைப் பொறுத்தது. இந்து மதம் பலவந்திப்பதில்லை. பலவந்தத்தில் இந்துமதத்திற்கு நம்பிக்கையில்லை. பிரபஞ்சமே தற்காலிகம் என்று சொல்லும் மதம் எப்படி திணிப்பில் இறங்க முடியும் ?    
  • கருத்துக்கள உறவுகள்

2392A54900000578-2852739-image-21_141718

கொடுமை... படத்தைப் பார்க்க, தலையச் சுத்துது.

நேபாளம் நல்ல சிகப்பு நிறமானவர்களைப் பெரும்பான்மையாக கொண்ட நாடு. ஆனால் இந்தக் கொலைகாரர்களையும் கீழே உள்ள யாழ்ப்பாணத்து கொலைகாரர்களையும் பாருங்கள். ஒரே நிறமாக கிட்டத் தட்ட ஒரே தோற்றத்தில் இருக்கிறார்கள்.
 
2392C4F900000578-2852739-image-43_141719
 
Chopping%20the%20head-off.jpg
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

UHG-2014-07-23-Stierkampf-San-Fermin-Fes

stierkampf3.jpg

இது மிருகவதை இல்லையோ?????

  • கருத்துக்கள உறவுகள்

மற்றவர் செய்யும் மிருக வதையைக் குறை சொல்லும் முன், நான் மிருகங்களைக் உண்கிறேனாயின் எனக்கு என்ன தகுதி இருக்கிறது அவர்களைக் குறை சொல்ல? அவர்கள் கொல்கிறார்கள் நான் அதை விட கேவலமாக அந்த இறந்த உடல்களை ரசித்து உண்கிறேன். யாரிங்கு கேவலன் ? 
  
நீங்கள் ஏழாம் அறிவிற்கு போய்விட்டீர்கள். இனி அங்கே இருந்து ஒண்டு யாரும் எழறிவு  கார்களுடன் நீங்கள் விவாதிபதுதான் நல்லது.
 
மதம் கொலையை கற்று கொடுக்கிறது. அது தவறு என்றுதான் இங்கே பலரும் சொல்கிறர்கள்.
இனி காய்கறி சாப்பிடுறவன் வந்து இது தவறு என்றால் உடனேயே நிறுத்த போகிறீர்களா?  
அல்லது உங்களிடம் அப்படி ஏதும் சக்தி இருக்கிறதா?
நீங்கள் திருந்துவதற்கு ஏன் நான் திருந்த வேண்டும் ?
உங்களுக்கு சொந்தாமாக மூளை கீழை கிடையாதா ?
 
கடவுளை ஒரு பிண பிரியார் ஆக்கி மாடுகளை வெட்டி கடவுளின் காலில் போட்டு கடுவுளை கேவலபடுத்தி வைத்திருக்கிறார்கள். இதை நிறுத்த இனி நான் மரக்கறி சாப்பிடவேண்டும். இனிதான் நான் நல்ல ஆடுமாடு (புரோட்டின்) சாப்பிட்டு உடலை உரம் பலம் ஆக்கி நான்  அவர்களுக்கு செவிட்டபோத்தி போட ..... ஒருமுறை மேலோகம் போய் வந்தால். சிவன் கிறிஸ்னா என்ன சொல்கிறார்கள் என்பது அவர்களுக்கு கேட்கும். 

UHG-2014-07-23-Stierkampf-San-Fermin-Fes

stierkampf3.jpg

இது மிருகவதை இல்லையோ?????

பார்த்தீர்களா ??  நல்லா பாருங்க ....
கிறிஸ்தவர் ஒருவர் மாட்டிற்கு குத்திவிட்டார்.
 
நாங்கள் இந்துக்கள் இனி வரிஞ்சு கட்டிக்கொண்டு வாற வருடம் ஒரு ஆயிரம் மாடு வெட்டி சிவபெருமானுக்கும் உமாதேவிக்கும் காலிலே போடலாம்.
அப்பத்தான் அவர்களின் ஆசி எம்மை வந்தடையும். 

அட நீங்கள் வேறை......ஏதோ ஒரு வழியிலை மிருகக்கொலைகள் நடந்துகொண்டுதான் இருக்குது எண்டு சொல்லவர....
நீங்கள் சிவபெருமான் உமாதேவி எண்டு ஆகலும் உயரத்துக்கு போட்டியள்!!!!!
 
இப்ப பாருங்கோ ஒரு மாட்டை அணுஅணுவாய் குத்தி சாக்காட்டுறதை  கோட்டுசூட்டு போட்டுக்கொண்டு ஆயிரக்கணக்கான சனம் கைதட்டி விசிலடிக்குதுகள்....கேட்டால் தங்கடை பாரம்பரிய விளையாட்டு எண்டுறாங்கள்....
இதை...இதையே சாரம் கட்டினவன் செய்தால் பட்டிக்காடு படிப்பறிவு இல்லாதவங்கள் எண்டு நமட்டுச்சிரிப்பு சிரிக்கினம்....
 
இதுக்கு நீங்கள்தான் ஒரு தீர்ப்பு சொல்லோணும்.

What waste of time...!!

I was responding to an insane psycho !

.

Edited by ஈசன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.