Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லைப் பெரியாறு அணை: கேரளாவின் மனு சீராய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வேலைப் பளுவினிடையே இந்த செய்தியை தற்பொழுது பார்த்தேன்.. தமிழர் பிரச்சனையாயிற்றே என்ற வகையில் இங்கே பதிவிடுகிறேன்.. :)

ஈழத்தில் நடந்த துயரங்களுக்கு தமிழகத்தில் யாரும் கண்டுகொள்ளவில்லையென "குய்யோ..முறையோ" என குரலெழுப்புபவர்கள், தமிழகத்தில் அண்டை, மத்திய அரசுகளால் வஞ்சிக்கபட்டுவரும் செய்திகளை யாரேனும் அறிவீர்களா? குரலெழுப்பியுள்ளீர்களா? :o :huh:
 
முல்லைப் பெரியாறு அணை: 

கேரளாவின் மனு சீராய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி!

c7eac20c-bbd9-43ef-beed-e3d0d353128aWall

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்ற தீர்ப்பை எதிர்த்து, கேரள அரசு தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என கடந்த மே மாதம் 7ஆம் தேதி, உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து, கடந்த ஜூலை மாதம் ஒன்றாம் தேதி கேரள அரசு சார்பில் மறுசீராய்வு மனு, தாக்கல் செய்யப்பட்டது. அதில், உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நீதிபதி ஆனந்த் தலைமையிலான குழுவினர், அணை தொடர்பான தொழில்நுட்பங்களை கவனத்தில் கொள்ளவில்லை எனக் கூறப்பட்டிருந்தது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, இன்று இந்த மனுவை விசாரித்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த எந்த தடையும் இல்லை என்று கூறினர். கேரளா அரசு தாக்கல் செய்த மறுசீராய்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல, எந்த முகாந்திரமும் இல்லை என்றும் குறிப்பிட்ட நீதிபதிகள், விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் மூலம் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடி தேக்க எந்தவித தடையும் இல்லை. இந்த தீர்ப்பு கேரளாவிற்கு பலத்த அடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு முல்லைப்பெரியாறு அணைப் பகுதியில் பலத்த மழை பெய்த காரணத்தால் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அணை நீர்மட்டம் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 142 அடி தண்ணீர் தேக்கப்பட்டது. 36 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது அணை நீர்மட்டம் 142 அடியை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தேற்ஸ் தமிழ்.

முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறு சீராய்வு செய்யக் கோரி கேரளா தொடர்ந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

கேரள அரசின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இந்த மனு விசாரணக்கு உகந்ததல்ல என்று கூறியும், தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கூடிய எந்த முகாந்திரமும் மனுவில் இல்லை என்றும்  கருத்துத் தெரிவித்துள்ளனர்.

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மறு சீராய்வு செய்யக் கோரி கேரள அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி

  • கருத்துக்கள உறவுகள்
அட கருமமே ! தமிழ் நாட்டிலும் பிரச்சனையா ?
இது ராஜீவ் காந்திக்கு தெரிந்திருந்ததா ?
 
அவருக்கு தெரிந்திருந்தால் இதற்கு ஒரு முடிவு கடியிருப்பர். சொனிஜாவின் சேலை தலைப்பில் கட்டி என்றாலும் தண்ணி கொண்டுவந்திருப்பார்.
எங்கோ கிடந்த ஈழத்திற்கே .......... கப்பலில் ஏற்றி தமிழ் ஈழம் கொண்டுவந்தவர்.
பிரபாகரனும் புலிகளும்தான் தமக்கு தனி ஈழம் வேண்டும் என்று சண்டை பிடிச்சு அவர் திருப்பி கொண்டுபோனவர். 
 
தமிழ் நாட்டில் ஒருவரும் சண்டை பிடிக்கவில்லைதானே? ஏன் மத்திய அரசு தமிழ் நாட்டிற்கு தண்ணி கொடுக்கவில்லை?
 
சர்வதேச அரசியல் வாதிகள் கண்ணில் இந்த திரி தட்டுபட்டால்தான்  ஒரு உண்மையான விளக்கம் கிடைக்கும்.
அதுவரைக்கும் பொறுத்திருக்க வேடியதுதான். 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அட கருமமே ! தமிழ் நாட்டிலும் பிரச்சனையா ?
இது ராஜீவ் காந்திக்கு தெரிந்திருந்ததா ?
 
அவருக்கு தெரிந்திருந்தால் இதற்கு ஒரு முடிவு கடியிருப்பர். சொனிஜாவின் சேலை தலைப்பில் கட்டி என்றாலும் தண்ணி கொண்டுவந்திருப்பார்.
 
எங்கோ கிடந்த ஈழத்திற்கே .......... கப்பலில் ஏற்றி தமிழ் ஈழம் கொண்டுவந்தவர்.
பிரபாகரனும் புலிகளும்தான் தமக்கு தனி ஈழம் வேண்டும் என்று சண்டை பிடிச்சு அவர் திருப்பி கொண்டுபோனவர்.

அவரோட தாத்தா பண்டிதர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்(?????) நேரு செய்த அயோக்கியத்தனத்தால், தமிழர்களின் பூர்வீக பூமியான இடுக்கி மாவட்டத்தை (இந்த அணை அமைந்திருக்கும் பகுதி) கேரளத்துடன் இணைத்தது பணிக்கர் தலைமையில் அமைந்த இருநபர் குழு.

இந்த பணிக்கர் (இவர்  மலையாளி) நேருவின் தனிச் செயலாளராக பணிபுரிந்தவர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Update:

இரு மாநிலப் பிரச்சினையால் முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய பாதுகாப்பு:

நதிநீர் ஆணையம் ஆலோசனை.

periyar_1961966f.jpg

முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் பாதுகாப்பை அளிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், விரைவில் மத்திய பாதுகாப்புப் படையின் தென்மண்டல வீரர்கள் பாதுகாப்புக்கு அனுப்பப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ளது. தமிழக அரசுக்கு சொந்தமான இந்த அணை, கேரள வனத்துறை மற்றும் காவல்துறையின் பாதுகாப்பில், தமிழக பொதுப்பணித் துறையின் பராமரிப்பு மற்றும் இயக்கத்தில் உள்ளது. கேரள எதிர்ப்பை மீறி இந்த அணையில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, 142 அடிக்கு நீர் தேக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து கேரள எம்.எல்.ஏ., பிஜுமோள், தமிழக பொதுப்பணித் துறையின் அனுமதியின்றி, கேரள போலீஸாரின் உதவியுடன் அணைப் பகுதியில் நுழைந்து, பத்திரிகையாளர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்தார். அவர்களை தடுக்க முயன்ற தமிழக பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் மாதவன், எல்.எல்.ஏ.,வுடன் வந்தவர்களால் தாக்கப்பட்டார். இதனால், தமிழக, கேரள எல்லையில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், கடந்த இரு தினங்களுக்கு முன்பு, பெரியாறு அணைக்கு ஆய்வு செய்யச் சென்ற, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சவுந்தரம் மற்றும் உதவி பொறியாளர் அக்பர் ஆகியோரை கேரள வனம் மற்றும் காவல் துறையினர் தடுத்து, அனுமதி மறுத்துவிட்டனர். இதைத்தொடர்ந்து அலுவலகம் திரும்பிய அதிகாரிகள், சென்னையிலுள்ள நீர் ஆதாரத்துறை அதிகாரிகள் மற்றும் பொறியாளர்களுக்கு புகார் அனுப்பியுள்ளனர். அதில், முல்லைப் பெரியாறில் தினமும் பணிக்குச் செல்வது கடினமாக உள்ளதாகவும், கேரள அதிகாரிகள் தினமும் தடுத்து பிரச்சினை செய்வதாகவும் முறையிட்டுள்ளனர்.

இது தொடர்பாக சென்னையிலுள்ள பொதுப்பணித் துறை தலைமை அலுவலக அதிகாரிகள், நேற்று முன்தினம் அவசர ஆலோசனை நடத்தியுள்ளனர். பின்னர் நடந்த சம்பவங்களைக் கூறி, மத்திய நதி நீர் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். மேலும், மத்திய நதி நீர் ஆணைய அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு, அணைக்கு விரைவில் மத்திய பாதுகாப்பு தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:

"உச்சநீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளின்படி, அணைக்கு மத்திய பாதுகாப்புப் படையின் பாதுகாப்பைக் கேட்டுள்ளோம். இதற்கு மத்திய நீர் ஆணையம் முதற்கட்ட ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய தொழிற் பாதுகாப்புப் படை மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை ஆகியவற்றில் எந்தப் படையை அணைப் பாதுகாப்புக்கு பயன்படுத்துவது என்று ஆலோசனை நடத்தப்படுகிறது. இதுகுறித்து சென்னையிலுள்ள சி.ஐ.எஸ்.எப்., மற்றும் ஐதராபாத் சி.ஆர்.பி.எப்., தென் மண்டல அதிகாரிகளுடன் மத்திய நீர் ஆணையத்தினர் ஆலோசனை நடத்தி முடிவு செய்வதாக தெரிவித்துள்ளனர். இன்னும் இரண்டு மாதங்களில் முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய பாதுகாப்பு கிடைத்துவிடும்".

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தமிழ் இந்து

  • கருத்துக்கள உறவுகள்

வேலைப் பளுவினிடையே இந்த செய்தியை தற்பொழுது பார்த்தேன்.. தமிழர் பிரச்சனையாயிற்றே என்ற வகையில் இங்கே பதிவிடுகிறேன்.. :)

ஈழத்தில் நடந்த துயரங்களுக்கு தமிழகத்தில் யாரும் கண்டுகொள்ளவில்லையென "குய்யோ..முறையோ" என குரலெழுப்புபவர்கள், தமிழகத்தில் அண்டை, மத்திய அரசுகளால் வஞ்சிக்கபட்டுவரும் செய்திகளை யாரேனும் அறிவீர்களா? குரலெழுப்பியுள்ளீர்களா? :o :huh:

தினமணி

பலருக்கு அதிக விவரங்கள் தெரியாது என்பதும், அக்கறை குறைவு என்பதும் உண்மை. இது இருவழிப் பாதை போன்றது. தமிழக தரப்பு செய்திகளை இணைத்து ஆர்வத்தை வளர்க்க வேண்டியது உங்களைப் போன்றவர்களின் பொறுப்பு.. :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பலருக்கு அதிக விவரங்கள் தெரியாது என்பதும், அக்கறை குறைவு என்பதும் உண்மை. இது இருவழிப் பாதை போன்றது. தமிழக தரப்பு செய்திகளை இணைத்து ஆர்வத்தை வளர்க்க வேண்டியது உங்களைப் போன்றவர்களின் பொறுப்பு.. :lol:

பொறியாளர் சாமியோவ்,

அதே நிலைமைதான் தமிழகத்திலும்!

ஈழத்தின் அவலங்களை/துயரங்களை தமிழகத்தின் கடைக்கோடி தமிழருக்கும் எடுத்துச் செல்வது யார்?

தானாகச் சென்றடையுமா? :o

சும்மா வருவாளா, சுகுமாரி? :huh:

  • கருத்துக்கள உறவுகள்

பொறியாளர் சாமியோவ்,

அதே நிலைமைதான் தமிழகத்திலும்!

ஈழத்தின் அவலங்களை/துயரங்களை தமிழகத்தின் கடைக்கோடி தமிழருக்கும் எடுத்துச் செல்வது யார்?

தானாகச் சென்றடையுமா? :o

சும்மா வருவாளா, சுகுமாரி? :huh:

இது எனக்கு விளங்கியதால்தான் நான் தமிழகத்தை குறை சொல்வதில்லை. மக்களை மேலும் இருட்டில் வைத்திருக்க விரும்பும் அரசியல்வாதிகளில் மட்டுமே விமர்சனங்களை வைப்பதுண்டு. அவ்வகையில் ஈழமக்களின் துயரத்தை கடைக்கோடி மக்களிடம் எடுத்துச்செல்லும் சீமான் போன்றவர்களில் நிறைய மரியாதை உண்டு.. :D

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த மே மாதம்..... 136 அடியாக உள்ள நீர் மட்டத்தை, 142 அடியாக உயர்த்தலாம் என்று,

உச்ச நீதிமன்றம் தீர்பளித்த பின்னரும், கேரளா அரசு மீண்டும் நீதிமன்றத்தை அணுகுவதும்,
அந்த அணையை, ஆய்வு செய்யச் சென்ற தேசிய பாதுகாப்பு படையினரையும், தமிழக பொறியியலாளர்களையும் அணைக்கு அருகே செல்ல விடமால் தடுத்ததையும், அடாவடித்தனம் என்பதுடன்,
 
உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காத, கேரளா அரசை... உடனே "டிஸ்மிஸ்" பண்ணினால் தான்.....

எதிர்காலத்தில் இடைஞ்சல் கொடுக்காமல் இருப்பார்கள்.
 
அந்தத் துணிவு மத்திய அரசுக்கு இருக்குமா? என்பது சந்தேகமே.....
 
இல்லாவிட்டால்.... அசினிலிருந்து, அஜித் வரை.... தமிழகத்தில் உள்ள நடிகர் எல்லோரையும், கேரளா எல்லையில் கொண்டு விட்டுவிட்டு.
தமிழகத்திலிருந்து... சபரிமலைக்கு போகும் பாதையை நிரந்தரமாக மூடி விட வேண்டும்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

கேரளாவை வழிக்குக் கொண்டுவர ஒரே வழிதான்.. இடுக்கியை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தை முன் நகர்த்த வேண்டும். இதென்னடா முதலுக்கே மோசம் என்று அணைக்கட்டுப் பிரச்சினையை கைவிடுவார்கள்..! :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

....

இல்லாவிட்டால்.... அசினிலிருந்து, அஜித் வரை.... தமிழகத்தில் உள்ள நடிகர் எல்லோரையும், கேரளா எல்லையில் கொண்டு விட்டுவிட்டு.  தமிழகத்திலிருந்து... சபரிமலைக்கு போகும் பாதையை நிரந்தரமாக மூடி விட வேண்டும்.

தமிழன் சோறு தண்ணில்லாமலும் இருப்பான், ஆனால் மல்லுகளின் வாசமும், பொய்யப்பனின் வேசமும் நித்தமும் வேண்டும் தமிழனுக்கு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கேரளாவை வழிக்குக் கொண்டுவர ஒரே வழிதான்.. இடுக்கியை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தை முன் நகர்த்த வேண்டும். இதென்னடா முதலுக்கே மோசம் என்று அணைக்கட்டுப் பிரச்சினையை கைவிடுவார்கள்..! :lol:

60 வருடங்களுக்கு முன், தொன்று தொட்டு தமிழ் நாட்டின் ஒரு பகுதியாக, பாண்டிய நாட்டிற்கு கப்பம் கட்டிவந்த தமிழ் சிற்றரசனின் பகுதிதான் இந்த இடுக்கி மாவட்டம். இதே போன்றே கச்சத் தீவும் ராமநாதபுர மன்னனுக்கு சொந்தமான பூமி.

பொந்திய சுதந்திரத்திற்குப் பின் தமிழன் இழந்தவைகள்தான் அதிகம். :(

இதையெல்லாம் நாங்கதான் வழிக்கு கொண்டுவரப் போறம்.. :D ஆனால் அதுக்கு முன்னம் தமிழகம் எங்கள் தேசத்தில் கால் வைக்க வேண்டும்.. அதுக்கொரு நேரம் வரும்.. :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதையெல்லாம் நாங்கதான் வழிக்கு கொண்டுவரப் போறம்.. :D ஆனால் அதுக்கு முன்னம் தமிழகம் எங்கள் தேசத்தில் கால் வைக்க வேண்டும்.. அதுக்கொரு நேரம் வரும்.. :rolleyes:

உங்கள் தேசமா? எது பருத்தித்துறையா? :rolleyes:  

அட போங்க சாமி...

யாழ்ப்பாண மையவாதம்,

திரிகோணமலை சென்டர் வாதம்,

மட்டக்களப்பு பக்க வாதம்,

பொத்துவில் வால் வாதம்,

சிலாபம் சில்லு வாதமுன்னு அடிச்சிகினு பிரிச்சு கிடக்குறீங்க..!

நீங்கள் எப்போ ஒன்று சேர்ந்து, நாடு பிடிச்சி, நாங்கள் கால் வைக்கிறதாம்? :(:lol:

இந்தப் பக்கவாதம் வந்தவை எல்லாரும் கொஞ்சப்பேர்தான்.. :D மருந்து கொண்டுவர அதுவும் சரியாகிவிடும்..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பக்கவாதம் வந்தவை எல்லாரும் கொஞ்சப்பேர்தான்.. :D மருந்து கொண்டுவர அதுவும் சரியாகிவிடும்..! :lol:

அந்த அண்டி பயோடிக் (anti biotic) ஊசியும் பக்கவாத நோயாளிகள் எல்லோருக்கும் போடதேவையில்லை. ஒரு சிலருக்கு போட மற்றவர்களுக்கு அதை பார்த்தே குணம் வரும். 

  • கருத்துக்கள உறவுகள்

ராஜவன்னியன் எழுதுகிறேன் என கோவிக்க வேண்டாம் மு.வாய்க்கால் அவலம் நடந்தது 2009 யில் அப்போது தமிழகத்தில் உள்ள சிலரைத் தவிர மற்றவர்கள் குரல் கொடுக்கவில்லை. அப்படி இருக்கும் போது நாங்கள் மட்டும் இப்போது ஓடி வந்து தண்ணீஈ பிரச்சனைக்காக குரல் கொடுக்க வேண்டும் என எப்படி எதிர் பார்க்கிறீர்கள்?...முதலில் தமிழகத்தில் உள்ள அனைவரும் ஒன்றுபட்டு இந்த பிரச்சனைக்காக குரல் கொடுக்கட்டும்

கோவிக்கவில்ல அம்மணி.

முல்லைப் பெரியாறு பிரச்சனை 1970 களிலிருந்தே இரு மாநிலங்களுக்கிடையே இருக்கிறது. அதே போன்று காவிரியாறு நதிநீர் பிரச்சனையும். மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது பூர்வீக தமிழர் நிலங்களை தமிழகம் இழந்து, அதை மீட்க நீதிக்கட்சி தலைவர்கள் போராடியபோதும் யாரம்மா ஈழத்திலிருந்து குரல் கொடுத்தது? இதன் வரலாற்று பின்னணியையாவது ஈழத்தமிழர்கள் அறிவார்களா?

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் மட்டுமல்ல, மலையகத் தமிழர் விவகாரத்திலும் ஈழத்தமிழர்கள் கண்டுகொள்ளவில்லையென்பதே வரலாறு.. இன்னும் சொல்லப்போனால் மலையகத் தமிழர்களுக்கு துரோகம் இழைத்து, அவர்களின் குடியுரிமையை பறிக்க துணை போனவர்கள் ஈழத்தலைகள்.

இந்திய சுதந்திரத்தின் முதல் பல வருடங்களாக தமிழகத்தின் எந்த பிரச்சனைகளிலும், ஈழத்தமிழர்கள் கண்டுகொண்டதுமில்லை, அக்கறையுமில்லை, குரல் கொடுத்ததுமில்லை!

'ஈழத்தமிழர்களும், சிங்களவர்களும், சகோதரர்கள் நாங்கள்' என்றே உங்கள் பலரின் மனநிலை முன்னர் இருந்தது. தனிச் சிங்களச் சட்டம், மற்றும் தரப்படுத்துதல் முறை வந்து தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்கும் முறுகுநிலை வந்தவுடன்தான் இனநலன் சார்ந்த அரசியலில், எங்களின் நினைப்பே உங்களுக்கு வந்தது என்பது கசப்பான உணமை.

இனப்பிரச்சனை மட்டும் இலங்கையில் இல்லையென்றால், தமிழ்நாட்டு தமிழர்களை நீங்கள் ஏறெடுத்தும் பார்க்க மாட்டீர்களென்பதையும் அறிவோம். அதற்கு மலையகத் தமிழர்கள் மற்றும் ஈழத்தமிழர்களின் சமூக/உறவு நிலையே நல்ல உதாரணம். :)

இவ்வளவிருந்தும் 1991 வரை ஈழத்தமிழர்களுக்கும், இயக்கங்களுக்கும் தமிழகத்தில் அளப்பரிய மரியாதையும், சிறு சிறு தவறுகள் இருந்தாலும் தமிழகம் அரவணைத்தே வந்துள்ளது.. அதன்பின் நடந்தவை துரதிஷ்டமானது.

டங்கு முன் பதிவில் சொன்ன மாதிரி, இருபுறமும் அவரவர் பிரச்சனைகளை முற்றிலும் அறிந்து ஒருவருக்கொருவர் ஆதரவுடன் இருந்தாலே தமிழ் இனத்தின் எதிர்காலம் சுபிட்சமாக இருக்கும்.

இதை புரிந்துகொள்ளுங்கள்.

நன்றி.

Edited by ராசவன்னியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது ஒப்பீடு மட்டுமே:

இந்த திரியில்-தமிழக பிரச்சனை செய்திக்கு அக்கறையாக எத்தனை ஈழத்தமிழர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் என்பதே சான்று..!

பின்னர் எப்படி தமிழ்நாட்டு தமிழர்கள் எங்களை கண்டுகொள்ளவில்லை என நீங்கள் கூறலாம்? :):lol:

வணக்கம் எங்கள் ரத்த உறவே....

தயவு செய்து தமிழக வாழ்வாதாரப்பிரச்சினைகளையும்

ஈழத்தமிழரது உயிர்ப்பிரச்சினையையும்  ஒப்பிடாதீர்கள்....

சீமான் மீது பல இடங்களில் இதே போன்று

எப்ப பார்த்தாலும் ஈழத்தமிழர் பிரச்சினை பற்றியே பேசுகின்றீர்களே

ஏன் தமிழக பிரச்சினை  குறித்து போராட்டங்களை நடாத்துவதில்லை என்ற கேள்வி  கேட்கப்பட்டபோதும்

மிகவும் தெளிவாக

எமது பிரச்சினை வாழ்வுப்பிரச்சினை

ஈழத்தமிழருக்கு உயிர்ப்பிரச்சினை என பதிலளித்திருந்தார்..

கானொளி  இருந்தால் போடுகின்றேன்

(யாராவது போடுங்கள்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் எங்கள் ரத்த உறவே....

தயவு செய்து தமிழக வாழ்வாதாரப்பிரச்சினைகளையும்

ஈழத்தமிழரது உயிர்ப்பிரச்சினையையும்  ஒப்பிடாதீர்கள்....

சீமான் மீது பல இடங்களில் இதே போன்று

எப்ப பார்த்தாலும் ஈழத்தமிழர் பிரச்சினை பற்றியே பேசுகின்றீர்களே

ஏன் தமிழக பிரச்சினை  குறித்து போராட்டங்களை நடாத்துவதில்லை என்ற கேள்வி  கேட்கப்பட்டபோதும்

மிகவும் தெளிவாக

எமது பிரச்சினை வாழ்வுப்பிரச்சினை

ஈழத்தமிழருக்கு உயிர்ப்பிரச்சினை என பதிலளித்திருந்தார்..

விசு,

நிச்சயம் உயிர் பிரச்சனையின் கனதியை நான் அறிந்தே இருக்கிறேன்.. ஆனால் இங்கே எழுதும் சில உறவுகளின் அனாசய கருத்துக்கள் நெருடலை தருகிறது.

நீங்கள் சொல்வீர்களே, அடுத்தவரை ஒருவிரல் குற்றம் சுட்டும்பொழுது, மற்ற நான்கு விரல்கள் தன்னையே சுட்டுகின்றன என்ற மொழியை சுட்டவே எழுதினேன்.

வணக்கம் ராசவன்னியன் எமது தமிழக உறவுகளின் பிரச்சனைகளில் ஈழமக்கள் என்றும் தமிழக உறவுகளுக்கு தார்மீக ஆதரவை வழங்க தயாராகவே உள்ளார்கள். அதற்காக அவர்கள் கடமைபட்டுள்ளார்கள் என்பதே எனது கருத்து. ஒரு சில தனிநபர்களின் கருத்துக்களை அனைத்து தமிழ் மக்களின் கருத்தாக நீங்கள் எடுத்ததால் தான் உங்களுக்கு இந்த குழப்பம் ஏற்பட்டது என நினைக்கிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Update:

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த

தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம்.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கும், கேரள அரசு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என வலியுறுத்தி சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.

தீர்மான விபரம்:

"தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள சுமார் 2.23 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற வழிவகுக்கும் முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம், மத்திய நீர்வளக் குழுமத் தலைவரின் பரிந்துரைகளின் அடிப்படையில், தற்காலிகமாக 136 அடியாக குறைக்கப்பட்டு, முல்லைப் பெரியாறு அணை வலுப்படுத்தப்பட்டது.

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனை தொடர்பாக நிலுவையில் இருந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழ்நாடு மற்றும் கேரள மாநில அரசுகள் எடுத்துரைத்த வாதங்களின் அடிப்படையிலும், வல்லுநர்கள் அளித்த அறிக்கைகளின் அடிப்படையிலும், முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தினை 136 அடியிலிருந்து 142 அடி வரை முதற்கட்டமாக உயர்த்திக் கொள்ளலாம் என்றும், அணையை வலுப்படுத்துவதற்கான எஞ்சிய பணிகளை தமிழ்நாடு மேற்கொள்ளலாம் என்றும் மத்திய நீர்வளக்குழுமம் திருப்தி அடையும் வகையில் அணையை பலப்படுத்துவதற்கான எஞ்சிய பணிகள் முடிவடைந்த பிறகு, வல்லுநர்கள் அணையினை ஆய்வு செய்த பின், அணையின் முழு நீர்மட்ட அளவான 152 அடி அளவுக்கு உயர்த்திக் கொள்ளலாம் என்றும் 27.2.2006 அன்று தீர்ப்பளித்தது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த ஆணையை முடக்கும் வகையில் "கேரள பாசன மற்றும் நீர்ப் பாதுகாப்பு (திருத்தச்) சட்டம் 2006", கேரள சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு, இந்த திருத்தச் சட்டம் 18.3.2006 முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.

இந்த சட்டத்தின் படி, முல்லைப் பெரியாறு அணையின் முழு நீர்மட்டம் 136 அடியாக நிர்ணயிக்கப்பட்டது. இந்த திருத்தச் சட்டம் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்பதால், தமிழக அரசால் சிவில் வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதியரசர் தலைமையிலான 5 நீதியரசர்கள் கொண்ட அரசமைப்பு அமர்வு, 7.5.2014 அன்று தனது தீர்ப்பினை வழங்கியது. கேரள அரசின், கேரள பாசன மற்றும் நீர்பாதுகாப்பு (திருத்தச்) சட்டம் 2006, முல்லைப் பெரியாறு அணையைப் பொறுத்தவரை, அரசமைப்பு சட்டத்திற்கு முரணானது என்றும் உத்தரவிட்டது.

மேலும், மத்திய நீர்வளக் குழுமம், தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களின் சார்பில் நியமிக்கப்படும் 3 உறுப்பினர்கள் கொண்ட குழு, அணையின் நீர்மட்டத்தை 142 அடி என்ற அளவிற்கு உயர்த்தப்படுவதை மேற்பார்வையிட வேண்டும் என்றும் இந்த தீர்ப்பில் கூறப்பட்டது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வலியுறுத்தலின் பேரில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஏற்ப, மேற்பார்வைக்குழு அமைப்பதற்கான ஆணையை 1.7.2014 அன்று மத்திய அரசு வெளியிட்டது. 17.7.2014 அன்று நடைபெற்ற இந்த மேற்பார்வைக்குழுவின் இரண்டாவது கூட்டத்தில், அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை உயர்த்துவதற்கு முடிவு செய்யப்பட்டு, அதற்கு ஏதுவாக, அடைப்பான்கள் இறக்கப்பட்டன.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை 21.11.2014 அன்று அதிகாலை 2 மணிக்கு எட்டியது. முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை நீர் தேக்கப்பட்டது, தமிழக மக்கள் அனைவருக்கும் மட்டற்ற மகிழ்ச்சியைத் தந்துள்ளது. இதற்கு காரணமான முன்னாள் முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் இந்த மாமன்றம் தனது நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்கு ஏற்ப, பேபி அணையை வலுப்படுத்தவும், எஞ்சிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கும், கேரள அரசு ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனவும், மத்திய அரசு, கேரள அரசுக்கு இது தொடர்பாக தகுந்த அறிவுரைகளை வழங்க வேண்டும் எனவும் இந்த மாமன்றம் வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது" என தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்து

முல்லைப் பெரியாறு 'பேபி டேம்' இருப்பின் படம்

mulla+scheme5.PNG

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ராசவன்னியன் எமது தமிழக உறவுகளின் பிரச்சனைகளில் ஈழமக்கள் என்றும் தமிழக உறவுகளுக்கு தார்மீக ஆதரவை வழங்க தயாராகவே உள்ளார்கள். அதற்காக அவர்கள் கடமைபட்டுள்ளார்கள் என்பதே எனது கருத்து. ஒரு சில தனிநபர்களின் கருத்துக்களை அனைத்து தமிழ் மக்களின் கருத்தாக நீங்கள் எடுத்ததால் தான் உங்களுக்கு இந்த குழப்பம் ஏற்பட்டது என நினைக்கிறேன்.

வணக்கம் துல்பன்..

அனைவரின் கருத்தாக எடுக்கவில்லை, ஆனால் பொது களத்தில் திரும்பத் திரும்ப இம்மாதிரி அவர்கள் முழுமையாக வரலாற்றை அறிந்து எழுதினாலும் இல்லை அறியாமல் எழுதினாலும், இக்களத்தை வாசிக்கும் பிற தமிழக உறவுகளுக்கு சலிப்பை/வெறுப்பை ஏற்படுத்தி, பின்னடைவையே கொடுக்கும்.

இதையா விரும்புகிறார்கள்? :(

உண்மை ராசவன்னியன். அவ்வாறு தமிழக உறவுகளை கொச்சைபடுத்தி திரும்ப திரும்ப எழுதுபவர்கள் யார் என்று பார்த்தீர் என்றால் உங்களுக்கு உண்மை புரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை ராசவன்னியன். அவ்வாறு தமிழக உறவுகளை கொச்சைபடுத்தி திரும்ப திரும்ப எழுதுபவர்கள் யார் என்று பார்த்தீர் என்றால் உங்களுக்கு உண்மை புரியும்.

நெடுமாறன் ஐயாவும்

வை. கோ அண்ணாவும்...................

.......................

....................

கருணாநிதியும்

சோவும்

சுப்பிரமணிய சுவாமியும்

தமிழகத்தில் உள்ளனர் ஐயா....

ஆனால் எங்களுக்கு 

மதுரை  என்ற வீரபூமி என்ற அடிப்படையில்தான் இன்றும் வீரம் வருகிறது..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.