Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உறவுகளுக்கான ஒரு முன்னெச்சரிக்கை..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உறவுகளுக்கான ஒரு முன்னெச்சரிக்கை..

பிரான்சில் தொலைத்தொடர்பு வசதிகளைப்பயன்படுத்தி சில திருட்டுக்கள் தற்பொழுது அதிகரித்து வருகின்றன.

உதாரணமாக

எனக்கு வந்த கைத்தொலைபேசிஅழைப்பு (இரு தரம் அடித்துவிட்டு நின்றுவிட்டது)

நான் அந்த இலக்கத்துக்கு (கைத்தொலைபேசி இலக்கம்)  தொடர்பு கொண்டபோது

இன்னொரு இலக்கத்தை தந்து

உங்களுக்கு ஒரு பார்சல் வந்துள்ளது இந்த இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும் என பதிவுச்செய்தி  ஒன்று போகிறது..

அந்த இலக்கம் 08 99 ............  எனப்போகிறது

இது பிரான்சில் அதிக செலவாகும் ஒரு இலக்கமாகும்..

குறைந்தது 5 நிமிடங்கள் தொடர்பில் நிற்கவேண்டும்

பதிலும் வராது

தொடர்பு கொள்பவருக்கு குறைந்தது 10  ஈரோக்களாவது செலவாகும்..

கவனம் உறவுகளே..

உங்களக்கும் இப்படி எதாவது தெரிந்தால் பகிருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

10 யூரோ பரவாயில்லை.

Premium Phone Numbers, TV நிகழ்வுகளில், பணம் பண்ண, தர்ம ஸதாபணங்களுக்கு நன்கொடை பெற வந்த சிறந்த system.

இதில் 10 ஓ, 1000 ஓ, ஒரு நிமிடத்துக்கு இவ்வளவு என்று அவர்கள் set பண்ணுவது தான்.

phone company பில் மூலம், பணத்தை கஸ்டமரிடம், பறித்து வாங்கி தனது கமிசன் கழித்து மிகுதியை அந்த நம்பர் வைத்திருக்கும் கம்பனியிடம் கொடுக்கும். இந்த முறையில் தான் TV கம்பனிகள் காசு பார்கின்றன.

நம்மள கால் பண்ண வைப்பது தான் வியாபாரம். அதற்கு பயன் படுத்தும் தந்திரங்கள் பல. அவற்றுள் இதுவும் ஒன்று.

இது சட்ட ரீதியான வியாபாரம். நீங்களே அந்த எண்ணுக்கு, உங்கள் சொந்த முடிவில், அழைப்பதால், நீங்கள் பின்னர் முறைப்பாடு செய்ய முடியாது.

மோசடியாளர்களும் பயன் படுத்துகின்றனர்.

இந்த மோசடியின், லொள்ளு பாட்டிகளை இலக்கு வைக்கும் இன்னுமொரு வடிவம், மிக அழகான இளம் பெண் கதவை தட்டுவார்.

கார் பழுதாகிவிட்டது. அப்பாவை, அம்மாவை, வீட்டுக்காரரை அழைக்க தொலைபேசி எடுப்போம் என்றால் அது சார்ஜ் இல்லை. உங்கள் போனை உபயோகிக்க முடியுமா ? என்பார்.

வீட்டுக் காரர் பல் இளித்தபடியே போனைக் கொடுக்க, அந்த பெண்  premium நம்பர் ஒன்றுக்கு, குறைந்தது ஒரு நிமிடத்துக்கு 150 பவுன்படி, 10 நிமிசத்துக்கு, வீட்டுக்காரர் லொள்ளு விடும் வரை கதைத்து ஒரு 1500 பவுனுக்கு தலையில் அரைத்து விட்டு போய் விடுவார். அவர் அழைத்த Premium Phone  இலக்கம், அவருடையதாக இருக்கும்.

லொள்ளு விட்ட வீட்டுக் காரர் அனுமதியுடன் போன் பண்ணியதால், அந்த பெண் மேல் முறைப்பாடு செய்ய முடியாது.

எனினும் இந்த இலக்கம் ஒரு premium number என அழைத்தவுடன், இணைப்புக்கு முதல் சொல்லப் பட வேண்டும் என்பது. தொலை பேசி நிறுவனங்களுக்கான UK அரச நிபந்தனை.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரியாத அழைப்புகள் வந்தால் நான் எடுப்பதே இல்லை. குறுஞ்செய்தி விட்டிருந்தால் மட்டுமே மீள அழைப்பேன்.. :D

நானும் தான்... தெரியாத இலக்கம் என்றால் Voice mail வைத்தால் மட்டுமே மீள அழைப்பேன்

ஆனால் விதிவிலக்கு

---- தெரியாத நம்பர், ஆனால் பெண்ணின் பெயரை  CLI காட்டினால் உடனே எடுப்பேன்

அபப உங்களுக்கு 'லொள்ளு டெக்னிக்' தான் சரி.

ஓகே, noted ! :icon_mrgreen:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

சில தொலைக்காட்சிகளில் நடக்கும் quiz  விளையாட்டுக்களை நடத்துபவர்களும் 

இந்தத் திருட்டுவேலைகளையே செய்கின்றனர்.
சரியான பதிலைச் சொன்னால் உல்லாசப் பயணத்திற்குத் தங்குமிடமும்
பயணச்சீட்டும் தருவார்கள்:
நீங்கள் தொலைபேசியில் ஆம் என்றால்
உங்களை வருடச் சந்தாதாரராக்கிவிட்டு பல மடங்கு   
பணத்தையும் கறந்துவிடுவார்கள்:

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான தில்லுமுல்லுகளை... வாசகர்களுடன் பகிர்ந்து கொண்ட, உறவுகளுக்கு நன்றிகள்.

நானும் தான்... தெரியாத இலக்கம் என்றால் Voice mail வைத்தால் மட்டுமே மீள அழைப்பேன்

ஆனால் விதிவிலக்கு

---- தெரியாத நம்பர், ஆனால் பெண்ணின் பெயரை  CLI காட்டினால் உடனே எடுப்பேன்

அதெப்படி தெரியாத நம்பர் ஆனால் CLI பெண்ணின் பெயரை காட்டும். லாயிக் எங்கையோ இடிக்குதே.  :lol:

  • தொடங்கியவர்

பத்து  ஈரோ  தானே என்று இருக்கமுடியாது

ஒன்று - பத்து ஈரோக்கள் ஆயிரம் பேர் ஏமாந்தால்....

இரண்டு - இது போன்ற  கூட்டத்தை ஒழித்தல்

எனக்கு தெரியாத அழைப்புகள் வந்தால் நான் எடுப்பதே இல்லை. குறுஞ்செய்தி விட்டிருந்தால் மட்டுமே மீள அழைப்பேன்.. :D

எனது கைத்தொலைபேசிக்கு

இது போன்ற  அழைப்புக்கள் வருவதுண்டு

வசதியற்றவர்கள் அடித்துவிட்டு 

தொடர்புக்காக எதிர்பார்த்திருப்பார்கள்...

இது போன்ற ஒருசில அழைப்புக்கள் அவர்களைப்பாதித்துவிடக்கூடாது அல்லவா இசை...

அதெப்படி தெரியாத நம்பர் ஆனால் CLI பெண்ணின் பெயரை காட்டும். லாயிக் எங்கையோ இடிக்குதே.  :lol:

தெரியாத நம்பர் என்றால் என் contact list இல் இல்லாத நம்பர் என்று அர்த்தம். அப்படி இல்லாவிட்டாலும் CLI இருந்தால் அவர் Register ஆன பெயர் காட்டும்.  ஆனால் அப்படி Contact list இல் இல்லாவிட்டாலும், ஒரு பெண் அழைக்கும் போது அவர் மனம் இலேசாகக் கூட நோகக் கூடாது என்ற உயரிய நோக்கத்திற்காக உடனே அழைப்பை ஏற்பேன். :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நானும் தான்... தெரியாத இலக்கம் என்றால் Voice mail வைத்தால் மட்டுமே மீள அழைப்பேன்

ஆனால் விதிவிலக்கு

---- தெரியாத நம்பர், ஆனால் பெண்ணின் பெயரை  CLI காட்டினால் உடனே எடுப்பேன்

தலைப்பை படியுங்கள்

உறவுகளுக்கான எச்சரிக்கை என்று தானே உள்ளது

அது இதற்கும் பொருந்துகிறது :icon_mrgreen:

கவனம்...

சொல்புத்தி  எவர் கேட்கிறார்

வாங்கி திருந்தட்டும்... :lol:  :D

சில தொலைக்காட்சிகளில் நடக்கும் quiz  விளையாட்டுக்களை நடத்துபவர்களும் 

இந்தத் திருட்டுவேலைகளையே செய்கின்றனர்.

சரியான பதிலைச் சொன்னால் உல்லாசப் பயணத்திற்குத் தங்குமிடமும்

பயணச்சீட்டும் தருவார்கள்:

நீங்கள் தொலைபேசியில் ஆம் என்றால்

உங்களை வருடச் சந்தாதாரராக்கிவிட்டு பல மடங்கு   

பணத்தையும் கறந்துவிடுவார்கள்:

நீங்கள் சொல்வது வெளியில் பகிரங்கமாக தெரிந்தே செய்யும் திருட்டு

நன்றி  வாத்தியார்

இப்படியான தில்லுமுல்லுகளை... வாசகர்களுடன் பகிர்ந்து கொண்ட, உறவுகளுக்கு நன்றிகள்.

இன்னும் கனக்க  இருக்கு

நேரம் தான் இல்லை

பார்க்கலாம்

அதெப்படி தெரியாத நம்பர் ஆனால் CLI பெண்ணின் பெயரை காட்டும். லாயிக் எங்கையோ இடிக்குதே.  :lol:

அவர் முகர்ந்தே  பிடித்துவிடுவார் :icon_mrgreen:

நீங்க வேற..... :D

  • கருத்துக்கள உறவுகள்

அதெப்படி தெரியாத நம்பர் ஆனால் CLI பெண்ணின் பெயரை காட்டும். லாயிக் எங்கையோ இடிக்குதே.  :lol:

முதற்பெயர் இருந்தால் கண்டு பிடிக்கலாம் தானே பகலவன்? மேலும் நிழலி எப்பேர்ப்பட்ட ஆள்!  ஏதோ ஒரு படத்தில் ஒற்றைத் தலைமுடியைக் காட்டினால் அது பெண்ணா ஆணா என்று கண்டு பிடித்துப் படமும் வரையும் ஒரு ஓவியனைப் பற்றிய காட்சி வரும்! அப்படியான எட்டறிவு நிழலிக்கு இந்த சமாச்சாரத்தில்! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பத்து  ஈரோ  தானே என்று இருக்கமுடியாது

ஒன்று - பத்து ஈரோக்கள் ஆயிரம் பேர் ஏமாந்தால்....

இரண்டு - இது போன்ற  கூட்டத்தை ஒழித்தல்

விசுகர்,
 
நான் சொல்ல வந்தது: 10 ஈரோவாயின், அவர்கள் மிகவும் கருணை கொண்டவர்கள் என்பதைத்தான். இவ்வளவு கஷ்டப்பட்டு உங்களை அழைக்க வைத்து ஒரு 100  ஈரோ ஆவது பறிக்காவிடில் அவங்க ரொம்ப நல்லவைங்க..... 
 
இந்த வகையில் பெரும் பணம் பார்ப்பது 'அந்த மாதிரி கிளுகிளுப்பாக' கதைக்கக் கூடிய பெண்கள் தான். அது ஒரு பெரிய இண்டஸ்ட்ரி.
 
'Dirty Talk' என்று அழைக்கப்படும் இதில் உடலை விற்க விரும்பாத, ஆனால் அந்த மாதிரி கதைக்கக் கூடிய மாணவிகள், குடும்பப் பெண்கள், இதில நல்ல காசு பார்கிறார்கள்.
 
தண்ணியை போட்டுவிட்டு அவர்களை அழைத்து கடைசியில் பெரிய பில் வர, தம்மை நொந்து கொண்டு திரிவார்கள். நம்மவர்கள் கூட இதில மாட்டி இருகிறார்கள்.
 
ஒரு நிமிசத்துக்கு £1 அல்லது £2 என வைத்து, ஒரு மணி நேரம் அவரோட 'dirty talk' கதைத்தால், போதும். ஒரு 10 ரெகுலர் வாடிக்கையாளர்கள் இருந்தால், மாதக் கடைசியில் போன் கம்பனி லம்பாக பணத்தினை பாங்க்குக்கு அனுப்பும்.  :icon_mrgreen:

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விசுகர்,
 
நான் சொல்ல வந்தது: 10 ஈரோவாயின், அவர்கள் மிகவும் கருணை கொண்டவர்கள் என்பதைத்தான். இவ்வளவு கஷ்டப்பட்டு உங்களை அழைக்க வைத்து ஒரு 100 ஐரோ ஆவது பறிக்காவிடில் அவங்க ரொம்ப நல்லவைங்க..... 
 
இந்த வகையில் பெரும் பணம் பார்ப்பது 'அந்த மாதிரி கிளுகிளுப்பாக' கதைக்கக் கூடிய பெண்கள் தான். அது ஒரு பெரிய இண்டஸ்ட்ரி.
 
'Dirty Talk' என்று அழைக்கப்படும் இதில் உடலை விற்க விரும்பாத, ஆனால் அந்த மாதிரி கதைக்கக் கூடிய மாணவிகள், குடும்பப் பெண்கள், இதில நல்ல காசு பார்கிறார்கள்.
 
தண்ணியை போட்டுவிட்டு அவர்களை அழைத்து கடைசியில் பெரிய பில் வர, தம்மை நொந்து கொண்டு திரிவார்கள். நம்மவர்கள் கூட இதில மாட்டி இருகிறார்கள்.
 
ஒரு நிமிசத்துக்கு £1 அல்லது £2 என வைத்து, ஒரு மணி நேரம் அவரோட 'dirty talk' கதைத்தால், போதும். ஒரு 10 ரெகுலர் வாடிக்கையாளர்கள் இருந்தால், மாதக் கடைசியில் போன் கம்பனி லம்பாக பணத்தினை பாங்க்குக்கு அனுப்பும்.  :icon_mrgreen:

உண்மைதான் நாதர்

ஆனால் இவை தெரிந்து கொண்டே செய்வது...

ஆனால் நான் எழுதியது

அதிலும் அவசரம் என 

அந்த நம்பருக்கு எங்களது கைத்தொலைபேசியிலிருந்து அழைத்தால்....

அவ்வளவு தான்...

  • கருத்துக்கள உறவுகள்

அந்த நம்பருக்கு எங்களது கைத்தொலைபேசியிலிருந்து அழைத்தால்....

அவ்வளவு தான்...

புத்தி கொள்முதல் கணக்கில் போட வேண்டியது தான்... :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.