Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளால் கொல்லப்பட்டு எரியூட்டியதாக அரசாங்கத்தால் கூறப்படும் 80 பேரின் தடவியல் ஆய்வு ஆரம்பம்:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போர் நிறுத்தக் காலப்பகுதியில், முல்லைத்தீவு மாவட்டத்தில் வைத்து தமிழீழ விடுதலைப் புலிகளால் கொலை செய்யப்பட்டு எரியூட்டப்பட்டதாக அரசாங்கத்தால் கூறப்படும் பொலிஸ் பரிசோதகர் ஜயரத்னம் மற்றும் இராணுவ கெப்டன் லக்கீ ஆகியோர் உள்ளடங்கலான 80பேர் தொடர்பான தடயவியல் ஆய்வு நேற்று செவ்வாய்க்கிழமை (02.11.14) ஆரம்பிக்கப்பட்டதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்துக்குட்பட்ட ஒட்டுசுட்டான், இந்திமடு, சமளன்குளம் ஆகிய பகுதிகளில், கடந்த 2006ஆம் ஆண்டு காலப்பகுதியில் இவர்கள் படுகொலை செய்யப்பட்டு எரியூட்டப்பட்டதாக அரசாங்கத்தால் நம்பப்படுகிறது.

 

தற்போது தடுப்பிலுள்ள முன்னாள் விடுதலைப் புலி போராளிகள் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே எரியூட்டப்பட்ட இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறுகிறது..

கல்கிஸை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி ஜெயரத்தின, இராணுவ அதிகாரி லக்கீ உள்ளிட்ட 30பேர், முதற்கட்டமாக இந்திமடு பகுதிக்கு அழைத்துச் சென்று அவ்விடத்தில் வைத்து கொலை செய்யப்பட்டு எரியூட்டப்பட்டதாகவும் தொடர்ந்து, மேலும் 50பேர் பாரவூர்திகள் மற்றும் பஸ் ஆகியவற்றில் அழைத்துச் செல்லப்பட்டு, கொலை செய்யப்பட்டு எரியூட்டப்பட்டதாகவும் தடுப்பிலுள்ள போராளிகள், பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினருக்கு தகவல் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தகவலின் பிரகாரம் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, எரியூட்டப்பட்ட இடங்கள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன் முதற்கட்டமாக கடந்த நவம்பர் 19ஆம் திகதி, கிளிநொச்சி நீதவான் எம்.ஐ.வஹாப்தீன் மேற்படி இடங்களைச் சென்று பார்வையிட்டார். தொடர்ந்து, அந்த இடங்களில் தடய ஆய்வுகள் நடத்தும் நடவடிக்கைகள் செவ்வாய்க்கிழமை (02) முதல் முன்னெடுக்கப்படுகின்றன.

பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர், தடயவியல் நிபுணர்கள், தொல்லியல் ஆய்வாளர்கள், நிலஅளவையாளர், குற்றப்பதிவு திணைக்கள அதிகாரிகள், இரசாயன பகுப்பாய்வு பிரிவு அதிகாரிகள், நச்சுத்தன்மை தொடர்பான சட்ட வைத்திய அதிகாரி, ரஜரட்டை பல்கலைக்கழகத்தின் தடயவியல் தொடர்பான கற்கைநெறி கற்கும் மாணவர்கள் என 9 பிரிவுகளைச் சேர்ந்தவர்கள், இந்த தடயவியல் ஆய்வுகளை மேற்கொள்ளத் தொடங்கினர்.  

இந்த தடயவியல் ஆய்வு மற்றும் விசாரணைகள் தொடர்ந்து 5 நாட்களுக்கு முன்னெடுக்கப்படவுள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகளின் அல்ப்பா 5, அல்ப்பா 2 தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டவர்களே இவ்வாறு கொலை செய்யப்பட்டதாக அரசாங்கத்தினால் கூறப்படுகின்றது.

 

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/114129/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

விசாரணை முடிய யாருக்கு தண்டனை கொடுக்கிறது ??

  • கருத்துக்கள உறவுகள்

ஜெனிவாவில் புலிகளும் கொலை செய்துள்ளார்கள் என்பதை காட்ட இப்படியான தடயங்களை  அரசு கிளறிக்கொண்டு இருக்கிறது. . தண்டனை பற்றி அரசு கவலைப்படவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அந்த நாளை இன்னும் மறக்க முடியாது.

 

நாங்கள் இறுதியாண்டுப் பரீட்சைக்குப் படித்துக்கொண்டிருந்த காலம். நானும் இன்னும் 7 அல்லது 8 தமிழ் மாணவர்களும் பல்கலைக் கழகத்தின் மூலையில் இருந்த "சிவில்" டிப்பாட்மென்ட் ஆரங்கில் நுளம்புக் கடிக்கும் மத்தியில் படித்துக்கொண்டிருந்தோம்.  இரவு 11 மணியிருக்கும், தூரத்தில் கூட்டமாகச் சிலர் சிங்களத்தில் உரத்துக் கூவிக்கொண்டு வருவது கேட்டது. சத்தம் சிறிது சிறிதாக அதிகரிக்கவே அவர்கள் நாங்களிருந்த கட்டிடத்தை நோக்கித்தான் வருகிறார்கள் என்பது புரிந்தது. சத்தம் வந்த திசையை நோக்கி நாங்கள் அனைவரும் பார்த்துக்கொண்டிருக்க, எங்களுடன் கூடப் படிக்கும் சிங்கள மாணவர்கள், கைய்யில் கட்டில் சட்டங்கள் பொல்லுகளுடன் எங்களை நோக்கி உரத்துக் கத்திக்கொண்டே ஓட்டமும் நடையுமாக வந்துகொண்டிருந்தார்கள். அதில் அநேகமாக எல்லோரையுமே எனக்குத் தெரிந்திருந்தது. வழக்கமாக கன்ரீனிலோ அல்லது தொலைக்காட்சியறையிலோ என்னுடன் கூடவிருந்து கிரிக்கெட் பார்ப்பவர்கள், சிங்களத்தில் வயது வந்தவர்களுக்கான காமெடிகள் சொல்லி மகிழ்பவர்கள். இன்று, கைய்யில் பொல்லுகளுடன், முகத்தில் கோபம் கொப்புளிக்க எங்களை நோக்கி வந்துகொண்டிருந்தார்கள்.

 

"மொக்கத மச்சான்?" (என்ன மச்சன் ?) நானே சம்பாஷணையைத் தொடங்கினேன். "உம்ப எக்க வென கவுருஹறி மே இன்னவத?"(உன்னுடன் இங்கே வேறு யாராவது இருக்கிறார்களா) என்று முன்னால் வந்தவன் கேட்டான். "ஐ மச்சான், ப்ரஷ்னையக்த?" (ஏன் மச்சான், ஏதாச்சும் பிரச்சினையோ?) என்று கேட்டேன். அன்று பின்னேரம் ரத்மலானை சொய்சாபுற தொடர்மாடிக்கருகில் சி.வி.குணரத்ன அமைச்சர் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் பற்றிய செய்தி எனது மனதில் ஓடிக்கொண்டிருந்தது. "நா, உம்பலா மெத்தன பாட்டியக் கரனவா கியலா அப்பிட்ட ஆரங்சிவுனா" ( இல்லை, நீங்கள் எல்லோரும் இங்கே ஒரு களியாட்டம் நடத்துவதாக நாங்கள் கேள்விப்பட்டோம்)என்று கோபமாகக் கத்தினான். நான் எதுவுமே தெரியாமல் முளித்துக்கொண்டிருக்க, எங்கள் கைகளைப் பிடித்து இழுத்துக்கொண்டே அந்தக் கூட்டம் பல்கலைக் கழக வாயிலை நோக்கி நடக்க ஆரம்பித்தது.

 

இரவு என்கிறபடியினனால், நாங்கள் அனைவருமே சரத்துடன் மட்டுமே அங்கேயிருந்து படித்துக்கொண்டிருந்தோம்.

 

எங்கே கொண்டு போகிறார்கள், எதற்காக எங்களைக் கொண்டு போகிறார்கள் என்று தெரியாமல், அவர்கள் இழுத்த இழுப்பிற்கு நாங்கள் தடறித் தடறி நடந்துகொண்டிருந்தோம். வாயிலை நெருங்க நெருங்க அங்கே ஒரு பெரிய கூட்டம் நிற்பது தெரிந்தது. கூடவே ஒரு போலீஸ் டிரக் உற்பட இரு வாகனங்கள் பலகலைக்கழக வளாகத்தினுள் நின்றிருந்தன.

 

என்னை இழுத்துக்கொண்டு சென்றவன், ஒரு பொலீஸ் அதிகாரி முன்னால் என்னைத் தள்ளிவிட்டு,"மூத் தெமெழெக்" என்று கத்தினான். அதாவது இவனும் ஒரு தமிழந்தான் என்று பொருள். இப்போது எனக்கு நிலமை சற்றுப் புரிய ஆரம்பித்தது. அந்தச் சிறிய பாதுகாப்பு அலுவலகத்தினுள் பொலீஸ் அதிகாரிகள், பலகலைக் கழகத்தை சுற்றியுமுள்ள வீடுகளில் வசிக்கும் சிங்களவர்கள் என்று ஒரு பெரிய கூட்டமே கூடியிருந்தது. எல்லோர் முகத்திலும் வெறி.

Edited by ragunathan

  • கருத்துக்கள உறவுகள்

என்னை பொலீஸ் அதிகாரியின் முன்னால் தள்ளிவிட, அந்த அதிகாரியோ அறையின் நடுவில் பயத்துடன் நின்றுகொண்டிருந்த ஒரு முஸ்லீம் மாணவனைப் பார்த்து, "மூவ உம்ப அந்துரனவத?" (இவனை உனக்குத் தெரியுமா?) என்று கேட்டான். அதற்கு அந்த முஸ்லீம் மாணவன், ஆமென்று தலையாட்டவே, அந்தப் பொலீஸ் அதிகாரி என்னைப் பிடித்து இன்னும் சில தமிழ் மாணவர்கள் நின்றிருந்த மூலைக்குத் தள்ளினான். நான், "நா, மெயாவ மம கலிங் தக்கலா நா" (இவனை நான் முன்னர் பார்த்ததில்லை) என்று சொல்லவே, அவன் கோபமாக கத்திக்கொண்டே என்னை அடிக்க வர, நான் வாயை மூடிக்கொண்டு இருந்துகொண்டு நடப்பதைப் பார்க்க ஆரம்பித்தேன். என்னைப் போலவே அங்கே அன்று இரவு இருந்த அனைத்துத் தமிழ் மாணவர்களும் அந்த முஸ்லீம் தலையாட்டியின் முன்னால் நிறுத்தப்பட்டு பிரிக்கப்பட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவாறு 60 மாணவர்கள் வரை சேர்ந்தவுடன், எங்களை டிரக்கிலும், ஜீப்பிலும் அள்ளிப்போட்டுக்கொண்டு மொரட்டுவைப் பொலீஸ் நிலையம் நோக்கி நகர ஆரம்பித்தார்கள். வழிநெடுகிலும் நின்றிருந்த சிங்களவர்கள் ஏதோ புலிகளைப் பிடித்த திருப்தியில் எங்களை பார்த்துக்கொண்டே கலைந்து சென்றார்கள்.

 

பொலீஸ் நிலையத்திலிருந்த ஒரு சிறிய அறையினுள் நாங்கள் 60 பேரும் அடைக்கப்பட்டோம். இருக்கக் கூட இடமில்லாத அந்தச் சிறிய அறையினுள் நாங்கள் நின்றுகொண்டிருந்தோம். அங்கே போகிறவர் வருகிறவர் எல்லோரும் தங்கள் கோபம் தீர எங்களை நோக்கிப் பேசிக்கொண்டே சென்றார்கள். ஒரு சிலர், போதையில் இருந்தவர்கள், வந்து முன்னால் நின்றுகொண்டிருந்தவர்கள் மேல் கைகளாலும், பூட்ஸுகளினாலும் அடித்துவிட்டுச் சென்றார்கள்.

 

ஒரு பொலிஸ்காரன் கைய்யில் ஒரு புத்தகத்துடன் அறையினுள் வந்தான். யாருக்கு இங்கே சிங்களம் தெரியும் என்று கேட்க நண்பர்கள் என்னைப் பார்க்க, நான் தெரியும் என்று கையை உயர்த்தினேன். "இஸ்ஸராட்ட வரெங்" (முன்னுக்கு வாடா)என்று கத்தினான். நானும் வந்து கதவிற்கு அருகில் நின்றுகொண்டேன்.

 

என்னைப் பார்த்து அவன் கோபத்துடன் பேச ஆரம்பித்தான். " உம்பலட்ட அபி பவு கியல இகனகண்ட உதவு கரனவா, உம்பல அபிவ மரனவா" (உங்களுக்குப் பாவம் என்று நாங்கள் படிக்க வசதி கிடைத்தால், நீங்கள் எங்களைக் கொல்வீர்களோ?) . "அப்பே சல்லிவொலிங், உம்பல இகனகத்தட்ட பஸ்ஸே, உம்பல கிஹில்லா பிரபாகரன்னெக்க வட கரண்ட யனவா" (எமது பணத்தில் படித்துவிட்டு, நீங்கள் பிரபாகரனுடன் வேலை செய்யப் போவீர்களோ?). "உம்பல ஒக்கொம கொட்டி, உம்பலா எக்கெக்குடவத் அப்பி யண்ட தென்னெ நா"( நீங்கள் எல்லோரும் புலிகள், உங்கள் ஒருவரையும் நாங்கள் விடுவிக்கப்போவதில்லை). என்று கத்தியவன், என்னைப் பார்த்து, "உம்பட்ட பிரபாகரன் எக்காகே ரஜே தீல தியென்ன வட மொக்கத்த"? (உனக்குப் பிரபாகரன் தனது ராஜ்ஜியத்தில் என்ன வேலை கொடுத்திருக்கிறான்?) என்று கேட்கவும், எனக்குத் தெரியாது என்று மெதுவாகக் கூறினேன். ஆத்திரம் பொத்துக்கொண்டு வரவே மறுபடியும் வயிற்றில் உதைந்தான். அதற்குப் பிறகு, அவன் பேசிய எதற்குமே நான் பதிலளிக்க நினைக்கவில்லை.


"உம்பல ஹிட்டப்பல்லா, அத உம்பலட்ட அபி தென்னங் கேமக்"( நீங்கள் இருங்கள்:, இன்றிரவு உங்களுக்கு நாங்கள் பாடம் படிப்பிக்கிறோம்) என்று கத்திவிட்டுச் சென்றான்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டதை வைத்து அன்றிரவு நடக்கப்போவதை ஊகிக்க முடிந்தது. கல்கிஸ்ஸை பொலீஸ் நிலையத்திலிருந்து பிரபல பயங்கரவாத தடுப்புப் பிரிவின் அதிகாரி ஜெயரட்ணமும், நிலாம்டீனும் அன்றிரவு எம்மை விசாரிக்க வருகிறார்கள் என்பது தெரிந்தது.அவர்களது பெயரைக் கேட்டவுடனேயே எம்மில் பலருக்கு பயம் ஏற்பட்டது. ஏனென்றால் புலிகள் என்று பலரை அவர்கள் இருவரும் கைதுசெய்து சித்திரவதை செய்திருக்கிறார்கள். அவர்களிடம் அகப்பட்டவர்களில் புலிகளைவிட அப்பாவிகளே அதிகம். ஆகவே அவர்கள் வருகிறார்கள் என்றதும் எமக்குத் தூக்கிவாரிப் போட்டது.

 

அவர்கள் ஒரு மணியளவில் வந்து சேர்ந்ததும், எமது அறைக்கு அருகிலிருந்த இன்னொரு அறையில் ஒரு மேசையும், அதைச் சுற்றி மூன்று கதிரைகளும் போடப்பட்டன. எம்மை ஒருவர் ஒருவராக அறைக்குள் இழுத்துவந்து அந்த மேசையில் அமர வைத்தார்கள். எனக்கு முன்னால் ஜெயரட்ணம் அமர்ந்திருக்க, எனது இடதுபக்கக் கதிரையில் நிலாம்டீன் அமர்ந்துகொண்டான். "உன்ர பெயர் என்னடா?" என்று ஜெயரட்ணம் கேட்டான். நான் பெயரைச் சொல்லவும், "எந்த ஊரடா?" என்று மீண்டும் கேட்டான். நான் கோண்டாவில் என்று பதிலளித்ததும், என்முன்னால் ஒரு புகைப்பட அல்பத்தைப் போட்டு, ஒவ்வொரு படமாகக் காட்டி இவனைத் தெரியுமா? அவனைத் தெரியுமா என்று கேட்கத் தொடங்கினான். அந்த ஆல்பம் முழுவதும் புலிகளின் படங்கள். நான் முன்னர் பார்த்திராதவை. நான் எவரையுமே தெரியவில்லை என்று சொன்னவுடன், இடது பக்கத்திலிருந்து பலாரென்று அறை விழுந்தது. அறைந்தவன் நிலாம்டீன். "கோண்டாவில் எண்டு சொல்லுறாய், ஆனால் அங்கே பொறுப்பாளராக இருந்த ஒருத்தனையும் உனக்குத் தெரியவில்லையா?? ஆரைப் பேக்காட்டுறாய்? என்று கத்தினான் அவன். "நான் அங்கே கனகாலம் இருக்கவில்லை, 1988 உடன் வெளிக்கிட்டு விட்டேன், அதனால் எனக்கு இவர்களைத் தெரியாது"  என்று சொன்னேன். "88 இற்குப் பிறகு எங்கேயடா இருந்தனீ?" என்று ஜெயரட்ணம் கேட்கவும், "கொழும்பில் இருந்தேன்" என்று நான் பதிலளித்தேன். "உன்ர வீட்டில யாரும் இயக்கத்தில இருக்கினமோ?" என்று ஜெயரட்ணம் திடீரென்று கேட்கவும் எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. சிலவேளை தம்பி இருப்பதைத் தெரிந்துகொண்டு இப்படிக் கேகிறானோ, இல்லையென்று பொய் சொன்னால் கொன்றுவிடுவான், ஆமென்றாலும் கொன்றுவிடுவான் என்று யோசித்துக்கொண்டே, "அப்படி யாரும் இல்லை" என்று கூறினேன். சிறிதுநேரம் என்னைப் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு, "போடா" என்று கலைத்துவிட்டான்.

 

எனக்குப் பிறகு மானிப்பாயைச் சேர்ந்த எனது நண்பனின் முறை. அவன் மாவீரர் குடும்பம், சிலாவத்துறைத் தாக்குதலில் அவனது தம்பி கொல்லட்டிருந்தான். ஆகவே எனது நண்பனுக்கு பல்கலைக் கழக அனுமதி கிடைத்தவுடன், மாவீரர் குடும்பம் என்கிற அடிப்படையில் புலிகளின் பாஸ் அனுமதி கிடைத்திருந்தது. என்னிடம் கேட்ட அதே கேள்விகளை அவனிடமும் ஜெயரட்ணம் கேட்டான். "எப்பயடா யாழ்ப்பாணத்திலிருந்து வந்தனீ?" என்று அவன் கேட்கவும், நண்பனும், 1995 இல்" என்று பதில் சொன்னான். "உனக்கு எத்தினை வயசு அப்ப?" என்று ஜெயரட்ணம் திருப்பிக் கேட்க, " 22 வயசு" என்று நண்பன் சொல்லவும் பலாரென்று ஜெயரட்ணம் நண்பனின் முகத்தில் அறைந்தான். எங்களுக்கு நடுங்கத் தொடங்கியது. "நீ ஒன்றில் புலியாக இருக்கவேண்டும், அல்லது மாவீரர் குடும்பமாக இருக்கவேண்டும். அப்படியில்லாவிட்டால் புலிகள் உனக்குப் பாஸ் தந்திருக்க மாட்டார்கள்" என்று கத்திக்கொண்டே தனது கைத்துப்பாகியை எடுத்து மேசையில் வைத்தான். நண்பன் அழத்தொடங்கினான். கேள்விகள் தொடர்ந்தது. "நீயாகச் சொன்னால் பிரச்சினையில்லை, நாங்கள் கண்டுபிடித்தோம் என்றால் நிச்சயம் உன்னைப் போடுவேன்" என்று கத்திக்கொண்டே நண்பனின் கதிரையை எட்டி உதைந்தான். விழப்போன அவன் ஒருவாரு சுதாரித்துக்கொண்டே அமர்ந்துகொண்டான். "இன்றைக்கு இரவுக்கிடையில நீ எப்படி இங்க வந்தனீ எண்டதை எங்களுக்குச் சொல்லவேணும், அப்படி இல்லையென்றால், நாளைக்கு காலையில் உங்கள் எல்லோரையும் 4 ஆம் மாடிக்குக் கொண்டு போவோம். அங்கே போனபிறகு உங்களுக்கு என்ன நடக்கும் என்று தெரியும்தானே"? என்று மிரட்டிவிட்டு மற்றையவர்களைக் கூப்பிடத் தொடங்கினான். நண்பனும் அழுதுகொண்டே என்னருகில் வந்து அமர்ந்துகொண்டான்.ஆன்றுவரை அந்த நண்பனுக்கும் எனக்கும் பகிடிவதை தொடர்பில் சிறு மனஸ்த்தாபம் இருந்துவந்தது. அன்றிரவுடன் அதெல்லாம் கலைந்து உண்மையாகவே அவனுக்காக வருந்தினேன். "மச்சான், நீ தம்பியைப் பற்றிச் சொல்லாதே, நீ மாவீரர் குடும்பம் இல்லையெண்டே சொல்லு, காசுகுடுத்துத்தான் பாஸ் எடுத்தனான் எண்டு சொல்லு" என்று அவனுக்குத் தைரியம் கூறிக்கொண்டிருந்தேன். அவனைப் போலவே இன்னும் வேறு 4 நண்பர்களும் மற்றையவர்களிடமிருந்து பிரித்தெடுக்கப்பட்டு 4 ஆம் மாடிக்குக் கொண்டு செல்வதற்காக பிறிதொரு அறையில் அடைக்கப்பட்டார்கள்.

அன்றிரவு ஜெயரட்ணம் எங்களை அடித்தவிதம் , அவன் எவ்வளவு தூரத்திற்கு வெறியுடன் இருந்திருக்கிறான் என்பதைப் புரியவைத்தது.

 

புலிகள் மீதான வெறுப்பா , அல்லது சிங்கள அரசாங்கத்திற்கு விசுவாசமாக இருப்பதற்காக இப்படி நடந்துகொள்கிறானா? அல்லது பணத்திற்காக இப்படி நடந்துகொள்கிறானா என்று தெரியாமல் யோசித்துக்கொண்டிருந்தேன்.

 

மறுநாள்காலை, பத்திரிக்கைகளிலும், செய்திகளிலும், "மொரட்டுவைப் பல்கலைக் கழகத்தில் படித்துக்கொண்டிருந்த புலிகள் கைது செய்யப்பட்டதாக" செய்தி வந்தது. எம்முடைய படங்களும், நண்பர்களில் ஒருவன் பாவித்து வந்த மோட்டார் சைக்கிளின் படமும் போடப்பட்டு எமக்குப் புலிகளின் புலநாய்வுத்துறையினர் என்கிற பட்டமும் தந்து மகிழ்ந்திருந்தது திவயின நாளிதழ்.

 

கைதுசெய்யப்பட்ட 60 மாணவர்களின் பெற்றோர்களது அழுத்தமும், மற்றைய தமிழ் மாணவர்களது அழுத்தமும் ஒன்று சேர்ந்து, அப்போதிருந்த பல்கலைக்கழக உபவேந்தரை எமது கைது தொடர்பாக எதாவது செய்ய நிர்ப்பந்தித்திருந்தது. வேறு வழியில்லாமல், எம்மை பார்ப்பதற்காக மொரட்டுவைப் பொலீஸ் நிலையத்திற்கு அவர் வந்தார். அவரை கண்டவுடன் மொரட்டுவைப் பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி பீரிஸ், மிகவும் கடுப்படைந்து, "உன்போறவர்களால்த்தான் புலி இங்கே எங்களைக் கொல்கிறது. நேற்று கொல்லப்பட்டவர்களின் இரத்தம் இன்னும் காயவில்லை, அதற்குள் நீ ஓடி வந்துவிட்டாய் புலிகளைக் காப்பாற்றுவதற்காக. நாங்கள் கஷ்ட்டப்பட்டு புலிப்பயங்கரவாதிகளை பிடித்துக்கொண்டு வர, உன்போன்றவர்கள் திருப்பி அவர்களை விடுவித்து விடுகிறீர்கள். அவர்கள் மீண்டும் வெளியில் போய் இன்னும் பல சிங்களவர்களைக் கொல்வார்கள் " என்று பொரிந்து தள்ளினான். அதற்கு உபவேந்தரோ, "நான் இவர்களைப் புலிகள் இல்லையென்று சொல்லவில்லை.இறுதிப் பரீட்சை எழுதிக்கொண்டிருக்கிறார்கள். இனி நடக்கப் போகும் பரீட்சைகளில் இவர்கள் தோற்றாவிட்டால், எமக்குத்தான் சிரமம், பரீட்சை எழுதுவதற்கு அனுமதி கொடுங்கள், தேவையென்றால், நானே இங்கே பரீட்சைத் தாள்களைக் கொண்டுவந்து, அவர்கள் இங்கேயிருந்தே பரீட்சையை எழுத ஏற்பாடு செய்கிறேன்" என்று கேட்டார். அதற்குக் கோபமடைந்த பீரிஸ், "வேண்டாம், வேண்டாம், எனது அலுவலகத்தில் புலிகள் பரீட்சையெழுத அனுமதிக்க மாட்டேன். நீ உனது பல்கலைக் கழகத்திற்கே அவர்களைக் கூட்டிக் கொண்டு போ. ஆனால் பரீட்சை முடிந்தவுடன் அவர்களை மீண்டும் கைதுசெய்வேன். அவர்கள் யாராவது தப்பியோடினால் நீதான் பொறுப்பு" என்று கத்தினான். "நான் அதைப் பார்த்துக்கொள்கிறேன், அவர்கள் எவரும் தப்பியோடாமலிருப்பது எனது பொறுப்பு" என்று கூறிய உபவேந்தர், "நாளை காலை பொலிஸ் சம்பிரதாயங்கள் முடிந்தவுடன் உங்களை விடுவிப்பார்கள்" என்று எங்களைப் பார்த்துக் கூறிவிட்டு சென்றுவிட்டார்.

 

இதற்கிடையில் புலிகளைப் பிடித்து மொரட்டுவைப் பொலீஸில் வைத்திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டு பல சிங்கள மக்கள் அங்கே கூடிவிட்டார்கள். கூட்டத்தில் முதல் நாள் இரவு எம்மைக் காட்டிக் கொடுத்த பல்கலைக் கழக மாணவர் அமைப்பைச் சேர்ந்த சிங்கள மாணவர்களும் நின்றிருந்தார்கள். அவர்களில், மாணவர் அமைப்ப்பின் தலைவன் ஏதோ தாம் கடமையைத்தான் செய்ததாகவும், நாம் சி. வி. குணரத்ன இறந்ததைக் கொண்டாடியது தவறென்றும், நாட்டின் பாதுகாப்பு முக்கியம் என்றும் பிரசங்கம் செய்துவிட்டுச் சென்றான். அவனது முகத்தைக் கூட நாம் பார்க்காமல் வேறு எங்கோ வெறித்துக்கொண்டிருந்தோம்.

 

நாம் 3 நாட்களில் விடுதலை செய்யப்பட 2 ஆம் 3  ஆம் ஆண்டு மாணவர்கள் சிலர் 6 மாதகாலம் வரை அலைக்கழிக்கப்பட்டு பின்னர் நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்கள். அதில் ஒருவன் இன்று புத்திசுயாதீனமற்று மன்னாரில் வாழ்ந்துவருவதாகக் கேள்விப்பட்டேன்.

 

அன்று முதல்முறையாக ஜெயரட்ணம் எனும் மிருகத்தை நான் கண்டேன். அவன் கடத்தப்பட்டதாகக் கேள்விப்பட்டபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

 

அவன் கொல்லப்பட்டதில் எந்தத் தவறுமில்லை என்றுதான் நான் நினைக்கிறேன். எத்தனையோ அப்பாவிகளது மரணத்திற்கும் சித்திரவதைக்கும் காரணமாகவிருந்த ஒரு மிருகம் இன்றில்லாமலிருப்பது சந்தோஷம்தான்.

Edited by ragunathan

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை நானும் இந்த மிருகத்தைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். ஒருதடவை காெழும்பிலிருந்த தமிழா்களை செக்கிங் என்ற பெயரில் கைது செய்து வீடியாே பிடித்து மறுநாள் செய்தியில் புலியாக சித்திரித்தாா்கள். சிங்களவா்கள் தங்களுக்கு தெரிந்தவா்களிடம் இவ்வளவு புலிகள் இருந்திருக்கிறாா்கள் நல்லவேளை கைது செய்யப்பட்டுவிட்டாா்கள் அல்லது சிங்களவரை காென்றிருப்பாா்கள். இப்படித்தான் இன்றும் உண்மைக்குப் புறம்பான பலகதைகளைப் பரப்பி கீராேக்களாக தம்மை அடையாளப்படுத்தி அரசியல் செய்கிறாா்கள். இந்த ஊறிப்பாேன ஏமாற்றுத்தனத்திலும், புத்தமதம் எனும் மாயையிலுமிருந்தும் சிங்களவா் விடுபடும் காலம் வந்தாலே எமது பயணம் சுலபமாகும். மகிந்தாவை, தமிழரையும் சிங்களவரையும் காத்த இரட்சகராக கருதுகிறாா்கள் சிங்களவா். இந்த நம்பிக்கை உடைக்கப்படவேண்டும்.

ரகு,

 

நீங்கள் ஜெயரட்ணம் பற்றி எழுதியது 100 இல் ஒன்றுதான்.  

 

பஸ் ஒன்றுக்குள் வைத்து புலிகள் பற்றி கதைத்துக் கொண்டு வந்ததால் ஒரு சிங்கள புலநாய்வாளர் என்னைப் பின் தொடர்ந்து வீட்டைக் கண்டு பிடித்து அடுத்த நாள் ஜெயரட்ணமுடன் கல்கிசை பொலிஸ் 10 பேருக்கும் மேல் வீட்டை வந்து என்னை கைது செய்ய முயன்றனர். ஆனால்  அன்று நீதியமைச்சராக இருந்த ஜி.எல். பீரிசின் செயலாளர் என்னுடன் நல்ல பழக்கம் என்பதால் உடனடியாக அவருக்கு தொலைபேசி எடுத்து ஜெயரட்ணத்துடன் கதைக்க வைத்து தப்பி விட்டேன்.

 

ஜெயரட்ணம் கடத்தபட்ட அதே தினத்தில் தான் புலிகளின் தெற்கு பகுதி புலநாய்வு அல்லது முக்கிய ஒன்றுக்கு பொறுப்பாக இருந்த வெடிகுண்டு நிபுணர் 'நியூட்டன்'  கொழும்பில் இருந்து தன் உறவினர்களுடன் கண்டிக்கு போகும் போது கடத்தப்பட்டார். புலிகள் நியூட்டனை விடுவிக்க தாம் ஜெயரட்ணத்தினை விடுவிக்க தயார் என்று பின் கதவால் பேரம் பேசியதாகவும், ஆனால் முடியாமல் போனதாகவும் முன்னர் ஊடகவியலாளர் மத்தியில் பேச்சு இருந்தது. நியூட்டனின் கைதின் பின்னர் தெற்கில் புலிகளால் காத்திரமான ஒரு தாக்குதலையும் செய்ய முடியாமல் போனது.

 

 

ஜெயரட்ணம் கடத்தபட்ட அதே தினத்தில் தான் புலிகளின் தெற்கு பகுதி புலநாய்வு அல்லது முக்கிய ஒன்றுக்கு பொறுப்பாக இருந்த வெடிகுண்டு நிபுணர் 'நியூட்டன்'  கொழும்பில் இருந்து தன் உறவினர்களுடன் கண்டிக்கு போகும் போது கடத்தப்பட்டார். புலிகள் நியூட்டனை விடுவிக்க தாம் ஜெயரட்ணத்தினை விடுவிக்க தயார் என்று பின் கதவால் பேரம் பேசியதாகவும், ஆனால் முடியாமல் போனதாகவும் முன்னர் ஊடகவியலாளர் மத்தியில் பேச்சு இருந்தது. நியூட்டனின் கைதின் பின்னர் தெற்கில் புலிகளால் காத்திரமான ஒரு தாக்குதலையும் செய்ய முடியாமல் போனது.

நியூட்டனுடன் சேர்ந்து கடத்தப்பட்டவர்களில் வடமாகாண கல்வி அதிகாரி நேருவும் ஒருவர். இவர் தான் முன்னைய போர்காலங்களில் வடமாகாணத்துக்கான சாதரணதர உயர்தர தேர்வு வினாத்தாள்களை கொழும்பில் இருந்து வடக்கிற்கு விமானம் மூலம் கொண்டுவரும் அரச அதிகாரி.

இவர் இரட்டை முகவராக இருந்திருக்கலாம் என்ற ஊகமும் இப்போதும் மக்கள் மத்தியில் உண்டு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.